Wednesday, April 11, 2007
அய்யனாருக்காக ஆறு அழகுகள்
திரு. அய்யனார் என்னையும் கூப்பிட்டுயிருக்காரு. இந்த தொடர் ஓட்டத்தை ஆரம்பித்த திரு. கொத்தனார் அவர்களுக்கு ஒரு நன்றி. எல்லாரும் அருமையாக, ரொம்ப அழகாக எழுதிக்கிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல நானும் ஏதோ என் மனசுக்கு தோன்றிய இந்த ஆறு அழகுகளைப்பற்றி எழுதியிருக்கேன் பாருங்க
பெண்கள்
அழக்குன்னு நினைச்சவுடனே மனதுக்குள் வந்தது பெண்கள் தான். எத்தனை பெண்கள் யாரை சொல்ல யாரைவிட. ஒவ்வொருத்தருக்கும் தனிதனி அழகு இருக்கு. என்னதான் பல பெண்களை பார்த்தாலும் பழகினாலும் கண்னை மூடி மனதுக்குள் நினைத்து பார்த்தால் என் நினைவுக்கு வரும் முதல் பெண் என் அம்மா தான். என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே. அதுக்கு அப்புறம் என் பள்ளிக்காலங்களிலும், கல்லூரியிலும், போகும் பாதையில் என்னை கடந்து செல்லும் பெண்கள் முதல், நெஞ்சம் மறப்பதில்லையில் வருவாங்களே தேவிகா, மற்றும் மாதுரி தீட்சித் போன்ற சில நடிகைகளும் அழகு தான்.
நிகழ்வு
சில நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சி நாம் எதிர்பாராதாக இருக்கும் அப்படி ஒரு நிகழ்சி தான் கடந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு போனபோது நிகழ்ந்தது. வீட்டில் யார்க்கிட்டையும் நான் வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல ஒரு திடிர் சர்ப்ரைசாக இருக்கட்டுமேன்னு கிளம்பிட்டேன். வீட்டு முன்னாடி வந்திறங்கும் போது விடிகாலை ரெண்டு மணி. கதவுக்கிட்ட போனதும் ஒரு சின்ன தயக்கம் "ச்ச எல்லாரும் நல்லா தூங்கிக்கிட்டு இருப்பாங்க இப்ப காலிங் பெல் அடிச்சா எவ்வளவு இடைஞ்சலா இருக்குமுன்னு". வேற வழி தெரியில அடிச்சிட்டேன். நான் மெயின் கேட்டுல இருக்கேன் அங்கயிருந்து பார்த்தா எங்க வீட்டின் கதவு நன்றாக தெரியும். அப்பன்னு பார்த்து மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை "அம்மா நீ முதல்ல எழுந்துவாம்மான்னு". கதவு திறக்குது என் மனசுக்குள்ள ஒரு படப்படப்பு, தூக்க கலக்கத்துல, விளக்கு வெளிச்சத்துல கண் கூசி என்னை பார்க்குறாள் அம்மா. அம்மான்னு ஒரே ஒரு குரல் தான் கொடுத்தேன். ஹையோ.....அந்த தூக்க கலக்குத்துலையும் ஒடிவறா பாருங்க அப்படி வறா...வந்தவ சும்மா இருந்தாலா.....டேய்ன்னு அப்படியே என்னை கட்டிபுடிச்சு என் முகம் முழுக்க முத்த மழைதான். அப்ப நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
பரிசு
பரிசுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் யாராவது ஏதவாது கொடுத்தாக்கூட கொஞ்சம் யோசிச்சிதான் வாங்குவேன். ஆனா வருடம் தவறாமல் என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒருத்தர்க்கிட்ட இருந்து கண்டிப்பா ஒரு பரிசு மட்டும் வந்துக்கிட்டே இருக்கு. அது நான் எங்க இருந்தாலும் சரி. எப்படியாவது அந்த பரிசு என் பிறந்த நாள் அன்னைக்கு கண்டிப்பா என்க்கிட்ட இருக்கும். அந்த பரிசை கொடுப்பது என் மாம்ஸ் சிவா அந்த பரிசு cadbury's Dairy Milk.
குறும்பு
நிறைய இருக்கு அதுவும் கல்லூரி படிக்கும் போது நிறைய......டக்குன்னு மனசுக்கு வந்தது என் கல்லூரியின் முதல் ஆண்டு கெனால் பஸ்டாப்பு.
எங்க திரும்பி பார்த்தலும் பெண்கள்தான் சீனியர் பெண்களும் சக வருட பெண்கள்ன்னு இந்த காதல் தேசம் படத்துல வரமாதிரி வழி எல்லாம் பெண்கள் தான். எங்களையும் அரியாமல் பக்கத்தில் இருந்த குட்டி சுவத்து மேல ஏரி உட்காந்து கண்குளிர எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். திடிரென்று தலையில பட்டுன்னு ஒரு அடி.....எவண்டான்னு பார்த்தா எங்க சீனியர்
"டேய் வீட்டுக்கு போகாம இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.....உங்க பஸ்டாப்பு அங்க எதிர்தாப்புல தானே இருக்கு"
என் நண்பன் ஒருவன் ; இவனுக்கு பஸ்டாப்பு இதான் சார் இவனை ஏத்திட்டு நாங்க அங்கே போவோம் சார்.
இன்னொரு சீனியர் ; டேய் இங்க வா......உன் பேரு என்னடா?
நான் ; கோபிநாத் சார்
சீ ; இன்னாது கோபிநாத்தா.....உனக்கு இன்ஷியலெல்லாம் இல்லையா.....இன்ஷியலோட சேர்த்து சொல்லுடா
நான் ; ஜி.கோபிநாத் சார்
சீ ; சரி....இப்ப நீ என்ன பண்ற இந்த கோழியை நான் கீழவுடுவேனாம் அதை போய் புடிச்சிக்கிட்டு வரணும் என்ன
நான் ; சரிங்க சார்
சீ ; ம்....போ
நான் ; கோழி எங்க சார்......
சீ ; ஒஹா......நிஜ கோழி இருந்தாதான் சாரு பிடிப்பிங்களா?
நான் ; பின்ன எப்படி சார் பிடிக்கிறது
சீ ; டேய் அடிச்சேன் வச்சுக்க காது கெய்ன்னும்...கோழியை விட்டாச்சி போய் புடிடான்னா......சும்மா பேசிக்கிட்டு இருக்க.....போடா.
அங்க கோழியும் இல்லை ஒன்னும் இல்லை......ஒரு கோழி இருக்குறது மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு அதை பிடிக்கணும். சரின்னு நானும் அப்படி கோழி பிடிக்கிற மாதிரியே ஆக்டு கொடுத்தேன். அத்தோட விட்டானுங்களா இல்லையே....கூடவே சவுண்டும் கொடுக்குணுமாம். கிழிஞ்சது டா இன்னிக்குன்னு நினைச்சுக்கிட்டு பொ....பொ...பொ...ன்னு சவுண்டு விட்டுக்கிட்டு கோழியை பிடிச்சேன். அந்த பஸ்டாப்பே மொத்தமா நான் கோழி பிடிக்கிறதை பார்த்து சிரிக்குது. இன்னிக்கும் அந்த பஸ் டாப்பை கடக்கும் போது அந்த அழகான கல்லூரி நினைவுகள் வரும்.
புன்னகை
என்னதான் அழகான வார்த்தைகள் இருந்தாலும் அது எல்லாம் எல்லா நேரங்களிலும் நமக்கு கை கொடுப்பதில்லை. ஆனா இந்த புன்னகை இருக்கு பாருங்க, பல வார்த்தைகளுக்கு இல்லாத வலிமையும், அழகும் அதுக்கு இருக்கு. பற்கள் இல்லாத பொக்கை வாயுடன் குழந்தைகள் எல்லாம் சிரிக்கும் பாருங்க அவ்வளவு அழகா இருக்கும். நாம அடிக்கிறதும் ஜோக்குன்னு நினைச்சுக்கிட்டு முகம் மலர சிரிப்பாங்க பாருங்க நண்பர்கள் அவ்வளவு அழகா இருக்கும். 80 வயசு கடந்தும் நான் கேட்கும் குறும்பு கேள்விகளுக்கும், கிண்டலுக்கும் எந்த விதமான முகசுலிப்பும் இன்றி தன் உடல் மொத்தமும் குலுங்கி குலுங்கி சிரிப்பாங்க பாருங்க என் பாட்டி அந்த புன்னகை இன்னும் அழகாக இருக்கும். இதே தமிழ்மணத்து நண்பர்கள் எந்த ஒரு கடினாமான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மக்கூட சாட் பண்ணும் போது ஒரு சிரிப்பான் போடுவாங்க பாருங்க அதுக்கூட அழகுதான்.
இடம்
நிறைய குடித்தனங்கள் இருந்த வீடு. அதில ஒரு பகுதியில சின்னதா ஒரு ரூம், சமையல் செய்வதற்கு கொஞ்சம் இடம், பொருட்கள் எல்லாம் வைப்பதற்கு சின்ன இடம் இவ்வளவு தான். ஓட்டு வீடு, எலி தொல்லை வேற , மழை பெய்தால் ஒழுகும். கால் நீட்டி படுப்பதற்கு கூட வசதி இல்லாத இடம். ஒண்டி குடித்தனமுன்னு சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரி. மேல இருக்குற கூறைக்கு முட்டுக் கொடுத்து ஒரு மராத்தூண் இருக்கும் அது மேல ஏறி சறிக்கி விளையாடுவேன். பல சுப நிகழ்ச்சிகள் நடந்த இடம் அது. நான் நேரில் கண்ட முதல் மரணமும் அந்த வீட்டில் தான். அந்த வீட்டில் இருக்கும் போது தான் நான் பிறந்தேனாம். இப்பவும் என் கனவுகளில் அடிக்கடி அந்த வீடு வரும். கிட்டதட்ட என் பாட்டி அந்த வீட்டில் நாற்பது வருஷம் இருந்தாங்களாம். இன்று பல வசதிகள் கூடிய வேற வீட்டில் இருக்கிறோம் ஏனோ எனக்கு அந்த பழைய வீடு தான் அழகுன்னு தோணுது.
பதிவு ரொம்ப பெரிசா ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். என்ன அய்யனார் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. இந்த ஓட்டத்தை அடுத்த மூணு பேருக்கிட்ட கொடுக்கானுமாம். இது நமக்கு ரொம்ப நல்லா வருமே.
பாடலாசிரியர் திரு. ஜி
தமிழ்மணத்தில் எப்போதும் first வரும் மை ஃபிரண்ட்
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்மணத்தை கலக்கும்
திரு. கானா பிரபா
Saturday, April 07, 2007
படம் பார்க்கலாம் வாங்க
செயற்கையின் கைவண்ணங்கள் இவை
Transparent Laptop - தெளிந்த மடிப்பு கனிணி
Thursday, March 29, 2007
தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
நம்ம அண்ணாத்த தேவோட சென்னைகச்சேரியில அடிச்சி ஆடும் அண்ணாத்த அபி அப்பா 500 பின்னூட்டம் அடிச்சதுக்கு வாழ்த்து சொல்லலாமுன்னு அவரை பார்க்க போனேன்.
அபி அப்பா ; அய்யய்யோ இந்த அநியாத்தை கேட்க யாருமே இல்லையா....
நான் ; என்ன அண்ணாத்த என்ன ஆச்சு?
அபி அப்பா ; வா தம்பி உட்காரு....தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
நான் ; தங்கச்சிய நாய் கடிச்சதுக்கு நீ எதுக்குப்பா காலுல்ல கட்டு போட்டுயிருக்க?
அபி அப்பா ; அதான் சொன்னனே தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
குடிச்சயாண்ட போனேன்...தங்கச்சி ஓ..ன்னு அழுதுன்னுயிருந்தது.....என்னாம தங்கச்சின்னு கேட்டேன்....அண்ணாத்த அண்ணாத்த கீழ்ண்டா நாய் கச்சிருச்சின்னு சொல்லிக்கினா....என்னாது இது எனக்கு ஒன்னும் அர்த்தம் புரில்லியே....அட இன்னா அண்ணாத்த கால்ல நாய் கச்சிருச்சின்னு சொல்லிக்கினாப்பா....
சரின்னு சொல்லிக்கினு நானு, வெட்டி, புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு சூளைமேடு வைத்தியாராண்ட போனோம். வைத்தியரே.....வைத்தியரே.....தங்கச்சிக்கு நாய் கச்சிச்சி தங்கச்சியை இட்டார்ட்டான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லிக்கினா நாய கூட்டிக்குனுவான்னு.....எனக்கு கோவம் வந்திருச்சி....எதுக்கு வைத்தியரே நாய்யின்னு கேட்டேன்..அதுக்கு அவன் சொல்லிக்கினா.....பித்தம்புச்ச நாயா, பித்தம்புடிக்காத நாயா....வெறிபுச்ச நாயா....வெறிபுடிக்காத நாயான்னு நான் பாக்க வேணமான்னு.... நாயந்தானேப்பா..
நான் ; நாயம் தான்
அபி அப்பா ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா....
சரின்னு சொல்லிக்கினு நானு,வெட்டி,புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு நேரா தங்கச்சிகிட்ட போனோம்.....தங்கச்சி....தங்கச்சி எந்த நாய்மா உன்னா கச்சதுன்னு கேட்டேன்.....அதுக்கு அவ கேட்டுக்குனா பாரு ஒரு கேள்வி... இன்னா அண்ணாத்த விளார்றியா....கச்ச நாய பல்லபுச்ச பார்க்கமுடியுன்னு சொல்லிக்கினாப்பா.... நாயந்தானேப்பா..
நான்; நாயம் தான்
அபி அப்பா ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
சரின்னு அது எந்த நாய்யின்னு பார்த்துடுலான்னு சொல்லிக்கினு நானு, வெட்டி,புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு நாயை தேடி போனோம்...
புலி: அங்க பஸ் ஸ்டாப்புல நிக்குறது ஜொள்ளு பாண்டி மாதிரி தெரியீது அவனையும் நாய் தேட கூப்பிடு இந்த மாதிரி தேடற மேட்டர்ல எக்ஸ்பர்டு அவன்.
அபி அப்பா: தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...எப்படியாச்சும் அந்த நாய கண்டு புடிச்சி குடு ஜொள்ளு.
ஜொள்ளு: ஏதாச்சும் பிகர் தேடணும்னா சொல்லு ஹெல்ப் பண்றேன், நாய் தேட நான் வந்தேன்னா வரலாறு நாளைக்கு என்னை தப்பா பேசும்.
பாதிவழியிலேயே வெட்டி சொல்லிக்கினா எனக்கு மூடுஅவுட்டு
ஆகிபோச்சி பக்கத்து தியேட்டர்ல என்.டி.ராமாராவு நச்சபடம் ஓடுதுன்னு கழட்டிக்கிறேன்னிக்குனான். புலி சொல்லிக்கிச்சு மண்டவலிக்குது நானும் கழட்டிக்கிறேன்னிக்குனான். தம்பி சொல்லிக்கினா எனக்கு தமிழ்மணத்துல பதிவு எழுதனும் நானும் கழட்டிக்கிறேன்னிக்குனான். சரி போங்கடான்னு அப்படியே பார்த்தேன்பா...ஊர்ல இருக்குற எல்லா நாயும் ரோட்டுல இருக்குதுப்பா...கரைட்டுதானப்பா....
நான்; ரைட்டு
அபி அப்பா; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
ஒரு நாய் என்னையே முறைச்சி பார்த்துக்குன்னு யிருந்ததுப்பா....இன்னாடா இது நமக்கே டேக்கா கொடுக்குதேன்னு பார்த்தேம்பா.....லொள்ளுன்னு கொலைச்சதுப்பா.....கட்சில இந்த நாய்தான் தங்கச்சியை கட்சியிருக்குன்னு லபக்குன்னு ஒரே அமுக்கா அமுக்குனேன்ப்பா...அந்த நாய் என் காலையும் கட்ச்சிருச்சிப்பா.....
தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
மக்களே...இது ஒரு நகைச்சுவை மட்டுமே என்பது உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்.
டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா......இப்போது எல்லாம் பதிவு போடுரோமோ இல்லையோ டிஸ்கி கண்டிப்பா போட்டுடனும். அதுவும் அந்த டிஸ்கி பதிவை குழப்புறமாதிரி இருக்கனும். அதான் இப்பத்திய பேசனே.
டிஸ்கிக்கு டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...அண்ணாத்த அபி அப்பா புண்ணியத்துல ஒரு பதிவு.
டிஸ்கிக்கு டிஸ்கி போட்டதுநாள டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...ரெண்டு டிஸ்கி போட்டா ராசியில்லையாம் அதுக்கு தான் இந்த டிஸ்கி.
Monday, March 19, 2007
மை ஃபிரண்டுக்காக ஐந்து..
கோபம்
இது எப்ப வரும் எப்படி வரும் எல்லாம் தெரியாது ஆனா வரவேண்டியா நேரத்துல கரைக்டா வரும். எங்க பாட்டி சின்ன வயசுல சொல்லும், "கோபம் உன்னையும் கொல்லும் எதிராளியையும் கொல்லும்" என்று. வளர வளர தான் இது எனக்கு அதிகம் ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். சரி இனிமே கோபமே படக்கூடாதுன்னு முடிவு செய்து என் கோபத்தை கட்டுபடித்திக் கிட்டு தேவையில்லாமா பேசாம இருப்பேன். ஆனா இது எல்லாம் சில மணி நேரம் தான் அதுக்கு மேல முடியாது. ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு. அதனால இந்த கட்டுபடித்திக்கிறது எல்லாம் சிலபேர்க்காகவும், சில மணிநேரமும் தான். ஆனா நண்பர்கள் கிட்டயும் சரி, மனசுக்கு பிடிச்சவங்க கிட்டடையும் சரி எந்த கட்டுப்பாடும் இல்லாம இருப்பேன்.
தயக்கம்
இதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கு. நான் ஏதவாது கேட்க்கப்போயி அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன். முன்னவிட இப்ப பரவாயில்ல எல்லாம் அனுபவம் தான் ;-)
திட்டம் தீட்டுவது
இதுக்கும் எனக்கும் ராசியே இல்லைங்க. எப்போதாவது அதிசியமா சில விஷயம் நான் திட்டம் போட்ட மாதிரி நடக்கும். உதராணத்திற்கு இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். டக்குன்னு எதுவும் எனக்கு அமையரது இல்லை.
என் ராசி அப்படி போல ;-(
ஈடுபாடு
எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் திறந்தாவே தூக்கம் வந்துடும். ஆனா கல்லூரிக்கு போனபிறகு அப்படி இருக்க முடியல நிறைய அவமானங்கள் பட்டேன். அப்பதான் படிப்பு மேலேயே ஒரு ஈடுபாடு வந்தது. இனி படிச்சா தான்டா பொழப்பேன்னு தோணுச்சசி. இந்த ஈடுபாடு விஷயம் வேலையிலும் நடக்கும், என்னால முடியாதுன்னு சொன்ன பிறகும் அதனை செய்யுன்னு சொன்னா என்னையும் அரியாமல் சொதப்பிடுவேன். அதனால ஈடுபாடு இல்லாத எந்த ஒரு விஷயத்தில் இருந்தும் கழண்டுக்குவேன்.
கற்றுக்கொள்ளுதல்
"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிர கற்ப்பிக்க கூடாது" ஒரு தினசரி காலெண்டரில் படித்த வாசகம் (சரியா எழுதியிருக்கனான்னு தெரியவில்லை) வாழ்க்கை முழுவதும் நீ மாணவன் தான்னு சொன்ன வாசகம் அது. இன்னிக்கு வரைக்கும் புதுசு புதுசா ஒவ்வொரு மனிதர்கள் கிட்ட இருந்து ஏதாவது புது விஷயம் கத்துகிட்டு தான் இருக்கேன். எனக்கு ஏதாவது தெரியவில்லைன்னா மற்றவங்க்க்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன் அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி.
எப்படியோ மை ஃபிரண்ட் கொடுத்த வீட்டு பாடத்தை முடிச்சுட்டேன். என்ன தோழி சரியா செய்திருக்கேனா எப்படி மார்க் எல்லாம்? தேர்ச்சி உண்டா அல்லது தேர்ச்சி இல்லையா? அப்புறம் இதே கேள்வியை இன்னும் 5 பேருக்கு கொடுக்கனுமாம். இது தான் நமக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே
1. மகரந்தம் ராகவன்
2. தங்க கம்பி தம்பி உமா.கதிரவன்
3. அடிச்சு ஆடும் அண்ணன் அபி அப்பா
4. காமெடி பெண் சூப்பர் ஸ்டார் கண்மணி
5. காலண்டர் கவிஞர் மணி பிரகாஷ்
மக்கா என்னை மாதிரி லேட்டா எல்லாம் செய்யக்கூடாது சீக்கிரம் செய்யனும்.அப்புறம் அடுத்த ஐந்து பேருக்கு அல்வா கொடுங்கனும்.
இதுல யாராவது எற்கனவே செய்திருந்தால் விட்டுடுங்க.
Wednesday, March 14, 2007
எங்க ஏரியா மார்க்கெட்...
எங்கள் துபாய் சிங்கம், தங்கம் திரு. உமா. கதிரவன். (தம்பி)
அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
வணக்கம் மக்கா எல்லாம் எப்படி இருக்கீங்க?? நல்லா தான் இருப்பீங்க. இங்க என்னை பின்னி பெடலேடுக்குறானுங்க. போதும் என்னால முடியல விடுங்கடான்னு சொன்னாலும் "முடியும் உன்னால முடியும், கோபியால முடியுமுன்னு" "சத்திரியன்" பட வசனம் எல்லாம் பேசுறானுங்க.
வர வர இந்த மேனேஜர் ரொம்ப தெளிவாய்ட்டாரு எல்லாத்துக்கும் டைம் போட்டு குமுறு குமுறுன்னு குமுறாரு. இதை எல்லாம் சமளிச்சு பதிவும், பின்னூட்டமும் போடுறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. சரி ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் கிட்ட இருந்து போன், சீக்கிரம் ரூமுக்கு வாடான்னு. சரின்னு ரும்முக்கு போனேன்.
"டேய் என்னடா ஆச்சு எதுக்கு டா போன் பண்ணி வரச்சொன்னே?"
"இதுக்குதான்னு" டி.வி யை காட்டினான்....டி.வியில ஜெயம் ரவி நடிச்ச படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.
"என்ன படம் டா இது?"
"இது தான் தீபாவளி!!!"
"ஓகே இது தான் அந்த தீபாவளியா? இதை பார்த்ததுக்கு அப்புறம் நமக்கு எதுவும் வலி வராதே??"
"அது உன் கெப்பாசிட்டிய பொருத்தது மச்சி"
ஆகா.... தம்பி வேற "போகாதே...போகாதே...தீபாவளி"ன்னு ஓரு பதிவை போட்டு எச்சரிக்கை கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. எப்படியும் எஸ்கேப் ஆகிடவேண்டியது தான்னு முடிவு பண்ணி...."சாரி மச்சி இப்ப நமக்கு அந்த அளவுக்கு கெப்பாசிட்டி இல்ல நான் தூங்க போறேன்னு சொன்னேன்."
"அட இருடா இந்த படம் உங்க ஏரியாவுல எடுத்த படமாம் அதுல உங்க ஏரியா மார்க்கெட் கூட வருதாம் அதனால நீ கண்டிப்பா பார்க்கனும்னு" பயபுள்ளைங்க முழுபடத்தையும் கதற...கதற...தூங்கி...தூங்கி பார்க்க வச்சிட்டானுங்க
"டேய் நான் உங்களுக்கு என்ன பாவம் டா பண்ணேன் ஏன்டா இப்படி?? இப்ப நீங்க நிம்மதிய தூங்குவிங்க இல்ல".....இனி எங்க இருந்து நான் தூங்குறது சரி ஒரு டீயவாது சாப்பிட்டு வரலாமன்னு டீ கடைக்கு போனேன்....போற வழியில நானும் கொஞ்சம் கொசுவத்தியை சுத்திக்கிட்டே போனேன்.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் வடக்கு பகுதியில் அமைந்ததுதான் எங்க ஏரியா "ராயபுரம்".
எங்க ஏரியா தான் தமிழகத்தின் முதல் சட்டமன்ற தொகுதி. (படித்ததில் ஞாபகம் ஏதாவது பிழை இருந்தால் சொல்லுங்க மக்கா) அப்புறம் சரக்கு போக்கு வரத்திற்காக முதமுதல்ல ரயில் நிலையம் கட்டியது எங்கள் ராயபுரத்தில் தான். எங்க ஏரியா சென்னை துறைமுகத்திற்கு கிட்ட இருக்கு. ஏரியாவை காத்த பல எல்லைச்சாமிகள் இறந்த பூமி அது
(ஒரு பயபுள்ளையும் ஒழுங்கா சாவுல) இப்படி பல பெருமையான தகவல் இருந்தாலும் சில வருத்தம் அடைக்கின்ற செய்திகளும் இருக்கு. இந்த ராயபுரத்துல ஒரு மார்க்கெட் இருக்கு. பேருந்து நிலையத்துக்கு பேரே ராயபுரம் மார்க்கெட்டுதான்னு சொல்லுவாங்க.
அந்த மார்க்கெட்டை தான் இந்த படத்துல காட்டியிருக்காங்க. நாங்க முன்னாடி இந்த மார்க்கெட்டுக்கு பக்கத்துல தான் இருந்தோம். நாங்க இருந்த வீட்டுல இருந்து ஒரு 20 வீடு தள்ளியிருந்தது மார்க்கெட்.
அந்த காலத்து கட்டிடம் மார்க்கெட்டின் ரெண்டு பக்கமும் பெரிய இரும்பு கேட் இருக்கும். உள்ள நுழைந்தவுடன் வலது பக்கத்துல ஒரு மளிகை கடையும் இடது பக்கத்துல ரெண்டு பழக்கடையும் இருக்கும். அதற்கு அடுத்தபடி ரெண்டு பக்கத்துலையும் காய்கறி கடைகள். அப்பறம் ஒரு சின்ன வளையல் கடையிருக்கும். இந்த கடையை கடந்தவுடன் ஒரு சின்ன முஸ்லிம் தூண் ஒன்று இருக்கும் அங்கு எப்போதும் ஊதுவத்தி வாசனை இருந்து கொண்டே இருக்கும். நான் கூட அங்க ஊதுவத்தி ஏத்தி வச்சிருக்கேன். அதனை வாசனையை கடந்தவுடன் இரண்டு கறிகடைகள் வரும்.
அதுக்கு அப்புறம் ஒரு சிறிய சந்து அதன் உள்ளே சென்றால் அங்கு தான் மீன் கடைகள் இருக்கும். எத்தனை வகையான மீன்கள் சுமார் 10 கடைகளவாது இருக்கும். அதற்கு பிறகு மீண்டும் இரண்டு பக்கமும் காய்கறி கடைகள் தான். இந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு வாழ இலைகடையிருக்கு அங்க எப்ப பார்தலும் தாயம், சீட்டுன்னு இல்லன்னா யாரவாது தூங்கிக்கிட்டு இருப்பாங்க. கடைசியில் ஒரு வெற்றிலை கடையும், ஒரு வேர்கடலை கடையும் இருக்கும். இதற்கு எதிர்த்தாப்புல ஒரு வளையல் கடை இருந்ததாக ஞாபகம். கடைசியில் மீண்டும் பழக்கடைகளுடன் முடிந்து விடும்.
எல்லா மதத்தை சார்ந்தவங்களும் இங்கு கடை வைத்திருந்தாங்க. நல்ல மனிதர்கள் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் ஒற்றுமையுடன் சேர்ந்து போராடுவார்கள். தீடிரென்று ஒரு நாள் இந்த மார்க்கெட் சற்று உள்ளே சென்றுவிட்டது.(உள்ளே என்றால் பூமிக்கு அடியில்)நிறைய இடத்தில் வெடிப்பும், பள்ளமும் வந்துருச்சி. சின்ன வயசுல எங்க பாட்டிகூட போகும்போது ஜாலியா இருக்கும். காய்கறிக்கு ஒரு கடை, மீன்களுக்கு ஒரு கடை, பழங்களுக்கு ஒரு கடைன்னு நல்லா தெரிஞ்சவங்க கிட்ட தான் வாங்கும் எங்க பாட்டி.
இப்ப இந்த மார்க்கெட்டையே இடிச்சு அந்த இடத்துல ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ் வந்துடுச்சு. அதுக்கு கீழே சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் இருக்கு. போன தடவை லீவுக்கு போயிருக்கும் போது பசங்ககூட சேர்ந்து அந்த இடத்துக்கு போனேன். இப்ப எல்லாம் வெளியிலேயே கடையை நடத்துறாங்க சில முகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. ஏரியாவை பத்தி நிறைய சொல்லலாம்...இப்பத்திக்கு இந்த மார்க்கெட் வரைக்கும் போதும் கொசுவத்தியை இத்தோட அனைச்சுக்குறேன் மக்கா.
இது புதுசு
Friday, March 02, 2007
செல்போன்....
வேலைக்கு வந்து கொண்டுயிருக்கும் போது FMல ஒரு நிகழ்ச்சி.
அந்த FMல ஒரு அக்கா ஒரு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த கேள்வியை பெரியவங்க குட்டி பசங்க கிட்ட கேட்பாங்க அதுக்கு அந்த குட்டி பசங்க பதில் சொல்லனும்.....
ஆஹா.......இன்னிக்கு எவன் எவனெல்லாம் மாட்ட போறானோ..
முதல்ல ஒரு சின்ன பொண்ணு பேசினா
FMம் பெண்: ஹலோ...எப்படி இருக்கிங்க....உங்க பேரு என்ன?
சின்ன பெண்: ஹலோ....ஆன்டி நான் நல்லாயிருக்கேன்....நீங்க எப்படி இருக்கீங்க???
FMம் பெண்: நான் நல்லாயிருக்கேன் செல்லம்....உங்ககிட்ட ஒரு கேள்வி சின்ன பசங்களுக்கு cell phone தேவையா??? உங்க்கிட்ட இன்னும் கேள்வி கேட்குறதுக்கு ஒரு பெரியவங்க lineல இருக்காங்க....அவுங்ககிட்ட பேசுங்க...
சி.பெண்: சரி...ஆண்டி அவுங்ககிட்ட கொடுங்க..
அந்த நபர்: ஹலோ...எப்படி இருக்கீங்க....எந்த வகுப்பு படிக்கிறிங்க...
சி.பெண்: நான் நல்லா இருக்கேன் அங்கிள்....6 வகுப்பு படிக்கிறேன்...
அந்த நபர்: அப்படியா.....சின்ன பசங்களுக்கு செல்போன் தேவையா?? எதுக்கு???
சி.பெண்: கண்டிப்பா தேவை அங்கிள்....இதுக்கு என் lifeல நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன்...நான் school முடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது எங்க வீட்டு சாவியை காணோம்....அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போயிட்டாங்க.....அக்கம் பக்கத்து எல்லா வீட்டுலையும் ஒரு call பண்ணிக்க கெஞ்சி கெஞ்சி கேட்டேன்......அங்க இருந்தவங்க நிறையபேரு அரபிகள் நான் சொல்லறது அவுங்களுக்கு புரியல...அப்புறம் ஒருத்தவங்க help பண்ணாங்க......இதுவே என்கிட்ட செல்போன் இருந்தா உடனே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தகவல் சொல்லி அவுங்களும் வந்துயிருப்பாங்க இல்ல.
அந்த நபர்: சரிம்மா....இது ஏதோ ஒரு தடவை நடந்ததுதானே....class roomல எதுக்கு செல்போனு...நீங்க படிச்சுக்கிட்டு இருக்கும் போது sms, missed callன்னு தேவையில்லாம வரும் அது உங்களுக்கு இடைஞ்சல் தானே.
சி.பெண்: அங்கிள்...நாங்க class roomல செல்போனை switch off செஞ்சிடுவோம்.
அந்த நபர்: switch off செய்றதுக்கு எதுக்கு செல்போனு.
சி.பெண்: அங்கிள்....class roomல இருக்கும் போது ஏதவாது தேவைப்பட்டால் teachersக்கிட்ட கேட்போம் அதனால அப்ப செல்போன் தேவையில்ல அதனால switch off செஞ்சிடுவோம்.
FMம் பெண்: ஆஹா...ஹி..ஹி..ஹி....சார் வேற எதாவது கேட்கனுமா???
அந்த நபர்: இல்லம்மா.....என்னை பொறுத்த வரைக்கும் சின்ன பசங்களுக்கு செல்போன் தேவையில்ல இது என் கருத்து.
FMம் பெண்: சரி நேயர்களே இப்ப அடுத்த callக்கு போலாமா......ஹலோ உங்க பேரு என்ன? எந்த வகுப்பு படிக்கிறிங்க??
சி.பையன்: என் பேரு @#$#$#$#* (பேரு தெரியலிங்க மக்கா).....3 வது படிக்குறேன்...
FMம் பெண்: சரி உங்ககிட்ட கேள்வி கேட்குறதுக்கு ஒருத்தர் lineல இருக்காங்க அவுங்ககிட்ட பேசுங்க.....
புதிய நபர்: ஹலோ...எந்த வகுப்பு படிக்கிறிங்க....
சி.பையன்: 3 வது அங்கிள்.
புதிய நபர்: சரி....சின்ன பசங்களுக்கு செல்போன் எதுக்கு??? அந்த காலத்துல எல்லாம் செல்போன் இல்லாம தானே எல்லாம் படிச்சாங்க.
சி.பையன்: அப்ப அந்த Technology இல்ல..
புதிய நபர்: ............................
FMம் பெண்: சார்...வேற கேள்வி எதுனா கேளுங்களேன்...
புதிய நபர்: வேற கேள்வி எல்லாம் இல்லைங்க...என்னை பெறுத்தவரைக்கும் சின்ன பசங்களுக்கு செல்போனு வேணுமுன்னும் சொல்ல முடியல வேண்டாமுன்னும் சொல்ல முடியல.....ஆனா சின்ன குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம்...
FMம் பெண்: என்ன சார் குழப்புரிங்க.......சரி நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி........ஹலோ @#$#$#$#* நான் இப்ப உன்னை ஒரு கேள்வி கேட்குறேன். உனக்கு எதுக்கு செல்போன்...
சி.பையன்: நீங்க எதுக்கு செல்போன் வச்சிருக்கீங்க.
FMம் பெண்: ம்ம்ம்....யாரு நானா!!!!! friendக்கு எல்லாம் sms அனுப்ப, பேசறதுக்கும்....
சி.பையன்: அதே மாதிரி தான்.....லீவு போட்டா friendகிட்ட homework discuss செய்றதுக்கு, அப்புறம் இந்தியாவுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒரு sms செய்தால் போதும் எல்லாத்துக்கும் தான்.
FMம் பெண்: அப்ப இந்தியாவுல என்ன நடக்கிறது என்பதை தெரிஞ்சிக்க,
homework discuss செய்றதுக்கும் உனக்கு செல்போன் தேவை....சரி நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி.
இந்த நிகழ்ச்சியை கேட்டவுடன் வாரநாள் இதழில் வந்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருது கதை யாரு எழுதுனது என்பதெல்லாம் நினைவில் இல்லை, (யாருக்கு தெரியும் தமிழ்மணத்துல கூட அந்த நபர் இருக்கலாம்)கதையும் ஒர் அளவுக்கு தான் நினைவில் இருக்கின்றது அதை வைத்து சுமாராக எழுதியிருக்கிறேன்.
"இன்னிக்கு இருக்குற விஞ்ஞான வளர்ச்சியில இயந்திரங்களோடு இயந்திரமா வாழ்ந்துக்கிட்டு இருக்கிற மகனுக்கு அந்த காலத்து கணக்குபிள்ளையான தன் அப்பவை கண்டாலே எரிச்சலா வரும். அப்பாவோட முதலாளி அப்பாக்கிட்ட எப்ப எந்த கணக்கு விபரம் கேட்டாலும் டக்கு, டக்குன்னு பதில் சொல்வாறாம். அப்பாவோட ஞாபகசக்தியை ரொம்ப பெருமையா சொல்லுவாங்க அவனோட அம்மா. இந்த பெறுமை எல்லாம் கேட்குறதக்கே அவனுக்கு புடிக்காது. அந்த ஞாபகசக்தியை வச்சி ஒரு மண்ணும் வாங்கிட முடியாதுன்னு பதில் சொல்வான் இவன்.
ஒரு வேலை விஷயமா ஒரு ஊருக்கு போறான் போற வழியில அவனோட செல்பேனை தொலைச்சுடுறான். என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. எல்லா நம்பர்களும் அதுலதான் இருக்கு.....பக்கத்துல இருக்குற டெலிபோன் பூத்துக்கு போறான் ரிசிவரை எடுத்து நம்பரை அழுத்துறான் ரெண்டு நம்பருக்கு மேல அவனுக்கு ஞாபகம் இல்ல. எவ்வுளவோ யோசிச்சி பார்க்குறான் முடியல...பூத்தவிட்டு வெளிய வரான். தன்னோட நண்பர்கள் நம்பரை எல்லாம் யோசிச்சி யோசிச்சி பார்க்குறான் ம்....ஹும் ஒன்னும் முடியல. உடம்பு எல்லாம் வியர்த்து கொட்டுது....கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லோரும் அவனை விட்டு தூரத்துல போயிடுற மாதிரி நினைப்பு. ஒரு எட்டு நம்பரை கூட ஞாபகத்துல வச்சிக்க முடியலன்னு அவனோட நிலையை நினைத்து வேதனைப்படுறான்.
அப்ப அவனுக்கு அவன் அப்பாவோட முகம் மட்டும் நினைவுக்கு வருது. தன் அப்பவோட ஞாபகசக்தியை நினைத்து கண்கள் கலங்கி நிக்குறான்.
தன் அப்பாவை பார்த்து அவர்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டும்ன்னு நினைக்குறான். ID கார்டில் இருந்த நம்பரை வச்சி கம்பெனிக்கு போன் பண்ணி தன் வீட்டு நம்பரை வாங்கி வீட்டுக்கு போன் பண்றான். எதிர்முனையில் அவனோட மனைவி பதட்டத்துடன் பேசுறா...
"எங்க இருக்கீங்க.........உங்க செல்பேன் என்ன ஆச்சு..........ரிங் போகுது ஆனா எடுக்க மாட்டேங்கிறிங்க...."
"அது தொலைந்து போச்சு........ஏன் பதர்ர.....விஷயத்த சொல்லு... "
"உங்க அப்பா இறந்துட்டாருங்க........ஊர்லயிருந்து போன் வந்துச்சின்னு சொல்லறா...." இடிஞ்சி போய் நிக்குறான்,
சக மனுஷனோட அருமையை புரிஞ்சுக்க முடியாம இருந்திருக்கமேன்னு நினைச்சு வேதனைப்படறான்.
மனுஷன் கண்டுபிடிச்ச இயந்திரங்கள் கிட்ட அந்த மனுஷனே தன்னோட சக்தியை இழந்துகிட்டு இருக்கான்னு தெரியமாலே இருக்கான். தெருவுல விளையாடி அடிப்பட்ட காயங்களை கூட இன்னைக்கும் நாம பெறுமையா பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா இன்னைக்கு குழந்தைகள் அடிபடமா வீட்டுகுள்ளேயே வச்சி விளையாட வீடியோ கேம்ஸ் வாங்கி கொடுக்கிறோம். நண்பனுக்கு கல்யாண வாழ்த்தோ, பிறந்த நாள் வாழ்த்தோ எதுவா இருந்தாலும் ஒரு SMSல முடிஞ்சுடுது. ஒரு மெயில் அனுப்பினா அதை அவன் பார்த்து replay பண்றதுக்கு ஒரு SMS அனுப்ப வேண்டியிருக்கு. அந்த அளவுக்கு எல்லோரும் பிசியா இருக்காங்க.
இயந்திரங்களை நம்பி வாழ ஆரம்பிச்சாச்சு இதுல சின்ன பசங்க என்ன பெரியவங்க என்ன எல்லோரும் மனுஷங்கதானேன்னு தோணுது.
என் செல்போனை கையில் எடுத்து பாக்குறேன் அது என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைய தொலைச்ச நீ தொலைஞ்சன்னு சொல்லற மாதிரி இருக்கு.
Saturday, February 24, 2007
பொறி
"ம்ம்ம்....போவுது மாமு...அப்புறம் ஏதாவது விஷேஷம் இருக்கா??"
"ஒன்னும் இல்லடா....சரி புதுப்படம் ஏதாவது பார்த்தியா எந்த படம் நல்லாயிருக்கு."
"ம்ம்ம்......நேத்து ஒரு படம் பார்த்தேன்...நம்ம ஜீவா தான் ஹீரோ.....படம் பேரு "பொறி"

"அப்படியா...சரி எப்படி இருக்கு படம்....கொஞ்சம் சொல்லேன்"
"ஆஹா.....இப்படியே கதைக் கேட்டு...கேட்டே...காலத்தை ஒட்டிடு"
"அட சொல்லு மச்சி....நமக்கும் டைம்பாஸ் ஆகனும்முல்ல..."
"நாகேஷ் ஒரு ரிட்டைடு வாத்தியாரு அவரு பையன் தான் ஜுவா. ஜுவா புத்தகக்கடை வச்சிருக்காரு. அவரோட நண்பன் நம்ம கருணாஸ். ஒரு டிவி சேனல்ல வேலை பார்க்குற பொண்ணு பூஜா. வழக்கம் போல ரெண்டு பேத்துக்கும் முதல்ல மோதல்...அப்புறம் காதல்...அப்புறம் கல்யாணம்...அவ்வளவு தான்."
"டேய்.....என்னடா ஐந்தே நிமிஷத்துல முழுபடத்தையும் முடிச்சிட்ட."
"இருடா....இப்படிதான் முதல் பாதி கொஞ்சம் கூட சுவாரஸ்சயம் இல்லாம கடுப்பா போகுதுன்னு சொல்லவந்தேன்..."
அப்ப ரெண்டாவது பாதி???
"இதுக்கு தாண்டா இந்த குறைமாசத்துல பொறந்தவனுக்கெல்லாம் கதை சொல்லுறது இல்ல...பொறுமையா இருடா டுபுக்கு..."
"சரி...சரி...சந்துல ரிக்சா ஓட்டிட்ட...சொல்லு..."
"நம்ம நாகேஷ் ரிட்டைடு பணத்துல புள்ளைக்கு சொந்தமா ஒரு கடை வாங்கி தறாரு. ஜுவாவும் சந்தோஷமா கடை திறக்குறதுக்கு எல்லாம் வேலையும் செய்றாரு....திடிரென்று நம்ம டைரக்டர் சீமான் (தம்பி படத்தை எடுத்தாறுயில்ல அவரு தான்) வந்து இது என் இடம்ன்னு சொல்லறாரு, விசாரிச்சு பார்த்ததுல நாகேசை ஏமாற்றி சீமானுக்கு சொந்தமான இடத்தை வித்துருக்காங்க. இந்த பிரச்சனையைதான் அப்பாவுக்கு தெரியாம மறுபடியும் அந்த இடத்துலேயே கடையை எப்படி திறக்குறாறு என்பது தான் மீதிபடம்."
"இடத்தோட சொந்தகாரனுக்கு தெரியாம எப்படிடா விக்கமுடியும்??."
"அதான் மாமு படமே....காசுக்கு ஆசைப்பட்டு புரோக்கர்களும்,
அரசு அதிகாரிகளும், ரியல்எஸ்டேட் முதலாளிகளும் எப்படி எல்லாம் மக்களை ஏமாத்துறானுங்க என்பதைதான் டைரக்டர் சுப்ரமணியம் சிவா படமா எடுத்துறுக்காரு."
"ஜுவாவுடைய ஒவ்வொரு படமும், கதையும் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு இல்ல? பையன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு....மத்த விஷயங்கள் எல்லாம் எப்படிடா...."
"நடிப்புல எல்லோரும் நல்லாதாம்பா செஞ்சிருக்காங்க....இசை நம்ம தினா பரவால்லன்னு சொல்லலாம்..."மன்மதராசா" பாட்டு போலவே கடைசியா ஒரு பாட்டு அதே மாதிரி டான்சுவேற தாங்கமுடியல...
அப்புறம் ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம் அருமையா செய்திருக்காரு.
வசனங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்கு அதுவும் ஜுவா நீதிமன்றத்துல பேசுறது அருமை
டைரக்டர் இன்னும் கொஞ்சம் அந்த தில்லு முல்லுக்களையும் காட்டியிருக்கலாம். நாகேஷ் அவர்களுக்கும், ஜுவாவுக்கும் உள்ள தந்தை, மகன் உறவை அருமையாவும் அழகாகவும் காட்டியிருக்கிறார். இன்னிக்கு இருக்குற ஒரு ஆழமான பிரச்சனையைதான் டைரக்டர் சொல்லியிருக்காறு. வில்லனை பழிவாங்குறது எல்லாம் நம்ம வடிவேலு சொல்லற மாதிரி "சின்னப்புள்ள தனமா" இருக்கு. வீடு வாங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்றாரு."
"ம்ம்ம்....அப்ப பார்க்லாம்ன்னு சொல்றியா??"
"அப்ப நீ பார்ப்பியா??? பார்கலாம் மாமு....சும்மா டைம்பாசுக்கு"
Friday, February 16, 2007
ஒற்றை நிலவாய் நான்
ஆந்திராவை போல் குருக்கே பல தடுப்பு அணைகள் கட்டினாலும் சரி...
கர்நாடகாவை போல் தரவேண்டியதை தரமறுத்தாலும் சரி என் பதிவுகளும் என் கும்மியும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை பயபக்த்தியுடன் தெரிவித்துக்க்கொள்கிறேன்...
(லேட்டா பதிவு போடுறதுக்கு என்னென்ன பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு)
எலேய் மேட்டர சொல்லுலே...
(இது நம்ம ரூம்மெட்டு ரொம்ப பாசக்காரபய - குறிப்பு பய கள்ளகுறிச்சி)
அது ஒன்னும் மில்ல ராசா எனக்கு ஒரு 2 நாளா உடம்பு சரியில்ல (தண்ணி ஒத்துக்கல போல இருக்கு) சரி நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல வேற யாருக்காச்சும் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நம்ப துபாய் தம்பிக்கு போன போட்டேன்
"என்னப்பா எப்படியிருக்க? அஞ்சப்பரு,பாவனா எல்லாம் எப்படி இருக்காங்கன்னு கேட்டேன்..."
"அட நீ வேற எனக்கு 2 நாளா சிக்கன் குன்னியா ஒன்னும் முடியலப்பா.."
"என்னய்யா சொல்லற.....பார்த்துய்யா வெளிய பரப்பிவிட்டுடாதே..."
"அட இது "சிக்கன் குன்னியா" இல்லப்பா "சிக்கின சூன்னியா" நேத்து ஒரு இடத்துல சிக்கிக்கிட்டேன் எல்லோரும் சேர்ந்து குனிய வைச்சி மொத்தமா சூன்னியம் வைச்சிட்டானுங்க அவுங்க கிட்ட சிக்கி வைச்சிக்கிட்ட சூன்னியத்துக்கு பேருதான் "சிக்கின சூன்னியா"
அட பாவமே...சரி பார்த்து இருந்துக்கன்னு சொல்லிட்டு நேரா இங்கதான் வாரேன்...
"சரி இப்ப இந்த தமிழ்மணத்துல கும்மியடிக்கிறதை விட்டுட்டியா???"
ச்சச நானா...நெவர்...இம்பாசிபுள்...
"அப்புறம் ஏண்டா பதிவுக்கு இவ்வளவு லேட்டு...."
அது உன்னும்மில்ல ராசா...
நான் பொட்டி தட்டாம கும்மிஅடிக்கறதை எனக்கு மேல இருக்கிறவருக்கு தெரிஞ்சி போச்சி...
"எப்படிலே...கண்டுப்புடிச்சாங்க"
"3 நாளைக்கு முன்னாடி நம்ம மக்கள் பதிவுகளை பார்த்துட்டு இருக்கும் போது பொட்டி முன்னாடி நல்லா கெக்க.....கெக்கான்னு எவனாவது சிரிச்சா எப்படியாப்பட்ட பல்பும் கண்டு புடுச்சிடும்..."
"ம்ம்ம்...."
"எலேய் கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்... "ம்" சொல்லிக்கிட்டுயிருக்க...
"சரி ஆனது ஆயிபோச்சி இனி எப்படி கும்மிஅடிக்க போற..."
யோசிச்சேன் ஒரு ஜடியா கிடைச்சது அந்த ஜடியா என்னன்னா...
முடிஞ்ச வேலை...இன்னும் முடியாத வேலை...இனிமேதான் வரபோற வேலைன்னு எல்லா பைலையும் அப்படியே டேபுலுமேல நல்லா கடைபரப்பி வைச்சிக்க வேண்டியது...கேமராவுல பார்க்க பல்புக்கு பய என்னம்மா ஒழைக்கறான்னு தோனும்.....நம்ம பாட்டுக்கு கும்மியடிக்க வேண்டியது...
எப்படி என் ஐடியா...
த்துதுது.....
"எலேய்....என்னத்துக்கு இப்ப துப்புற???"
"அது ஒன்னும் மில்ல வாயில தூசி....சூப்பருடா...கலக்கல் ஐடியா தான்.."
"டேய் இங்க சூப்பருன்னு சொல்லிட்டு அங்க போயி பல்புகூட சேர்ந்து எனக்கு எதுரா கும்மிஅடிக்க மாட்டியே."
"ச்சீச்சீ.....உனக்கு போயி கும்மிஅடிப்பனாடா.."
"இல்ல... இப்ப எல்லாம் யாரையுமே நம்ப முடியல...ரொம்ப பயமா இருக்குடா"
சரி 2 நாளா சும்மா ரூமுல இருந்ததுனால எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அந்த கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க வேணமா????....
அதான் கவிதை.....இல்ல......இல்ல கவுஜ எழுதிட்டேன்

ஒற்றை நிலவாய் நான்
"நீண்ட வழி எனக்கு முன்னே
எதனை எடுக்க எதனை தவிர்க்க
குழப்பங்களில் கரைகிறது என் காலங்கள்
ஆதரவாய் மடிசாய அன்னையும் அருகில் இல்லை
அரவணைத்து செல்ல தந்தையின் கரங்களும் இல்லை
எதிர்வரும் சமயங்களில் புன்னகைக்கும் சக மனிதனின்
புன்னகையை தவிற"
எலேய்.....எதுக்கு இப்ப கல்லை தூக்குற...
வேணாம்...
வலிக்கும்...
Friday, February 02, 2007
உதவிய கரங்கள்...
அப்புறம் முக்கியமான விஷயம். இந்த பிரச்சனை வந்தவுடனே என்ன செய்றது ஏதுசெய்றதுன்னு ஒன்னுமே தெரியல...ஒன்னுமேபுரியல...நமக்கு தெரிந்தது எல்லாம்
ctrl - C, ctrl - V தான். எத தொட்டாலும் விளங்கமாட்டேன்கிதே....எல்லாம் நம்ம ராசி அப்படின்னு கவலையில இருந்த எனக்கு, அட.... இதெல்லாம் தூசு நண்பா அதான் நாங்க இருக்கமுல்ல கவலைய விடு நண்பான்னு
துபாயில இருந்து நம்ம தம்பி வந்தாக...

அமெரிக்காவுல இருந்து நம்ம ஜி வந்தாக...

உறுகுவே இருந்து கப்பி பய வந்தாக...

போம்மா மின்னல்ன்னு.... பிரச்சனையை போகவைச்சிட்டாங்க.
இந்த மூன்று "க"வும் செஞ்ச உதவி இருக்குதே...சொல்ல முடியல....அதான் பதிவா போட்டுட்டேன். இந்த மூன்று பேருக்கும், பதிவு இட்டு உதவிகள் செய்த மற்ற பதிவாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
அப்புறம் மக்களே புதிய template எப்படி இருக்கு.....ஏதாவது பிரச்சனை பண்ணுதான்னு சொல்லுங்க.
அப்புறம் பிப்ரவரி மாசம் பிறந்து விட்டது எங்க பார்த்தாலும் காதல்..காதல்ன்னு கலக்கபோறாங்க...
அதுவும் நம்ம காதல் கவிஞ்சர் அருட்பெருங்கோ

28 நாளும் இதுகாதல் பூக்கும் மாதம்ன்னு கவிதை மழையில நம்மலை முழ்கடிக்கப் போறாரு...அப்படியே கொஞ்சம் நனைஞ்சுட்டு போங்க...
ம்ம்ம்........இந்த வருஷமாச்சும் நமக்கும்....!!!!






















