"ம்ம்ம்....போவுது மாமு...அப்புறம் ஏதாவது விஷேஷம் இருக்கா??"
"ஒன்னும் இல்லடா....சரி புதுப்படம் ஏதாவது பார்த்தியா எந்த படம் நல்லாயிருக்கு."
"ம்ம்ம்......நேத்து ஒரு படம் பார்த்தேன்...நம்ம ஜீவா தான் ஹீரோ.....படம் பேரு "பொறி"
"அப்படியா...சரி எப்படி இருக்கு படம்....கொஞ்சம் சொல்லேன்"
"ஆஹா.....இப்படியே கதைக் கேட்டு...கேட்டே...காலத்தை ஒட்டிடு"
"அட சொல்லு மச்சி....நமக்கும் டைம்பாஸ் ஆகனும்முல்ல..."
"நாகேஷ் ஒரு ரிட்டைடு வாத்தியாரு அவரு பையன் தான் ஜுவா. ஜுவா புத்தகக்கடை வச்சிருக்காரு. அவரோட நண்பன் நம்ம கருணாஸ். ஒரு டிவி சேனல்ல வேலை பார்க்குற பொண்ணு பூஜா. வழக்கம் போல ரெண்டு பேத்துக்கும் முதல்ல மோதல்...அப்புறம் காதல்...அப்புறம் கல்யாணம்...அவ்வளவு தான்."
"டேய்.....என்னடா ஐந்தே நிமிஷத்துல முழுபடத்தையும் முடிச்சிட்ட."
"இருடா....இப்படிதான் முதல் பாதி கொஞ்சம் கூட சுவாரஸ்சயம் இல்லாம கடுப்பா போகுதுன்னு சொல்லவந்தேன்..."
அப்ப ரெண்டாவது பாதி???
"இதுக்கு தாண்டா இந்த குறைமாசத்துல பொறந்தவனுக்கெல்லாம் கதை சொல்லுறது இல்ல...பொறுமையா இருடா டுபுக்கு..."
"சரி...சரி...சந்துல ரிக்சா ஓட்டிட்ட...சொல்லு..."
"நம்ம நாகேஷ் ரிட்டைடு பணத்துல புள்ளைக்கு சொந்தமா ஒரு கடை வாங்கி தறாரு. ஜுவாவும் சந்தோஷமா கடை திறக்குறதுக்கு எல்லாம் வேலையும் செய்றாரு....திடிரென்று நம்ம டைரக்டர் சீமான் (தம்பி படத்தை எடுத்தாறுயில்ல அவரு தான்) வந்து இது என் இடம்ன்னு சொல்லறாரு, விசாரிச்சு பார்த்ததுல நாகேசை ஏமாற்றி சீமானுக்கு சொந்தமான இடத்தை வித்துருக்காங்க. இந்த பிரச்சனையைதான் அப்பாவுக்கு தெரியாம மறுபடியும் அந்த இடத்துலேயே கடையை எப்படி திறக்குறாறு என்பது தான் மீதிபடம்."
"இடத்தோட சொந்தகாரனுக்கு தெரியாம எப்படிடா விக்கமுடியும்??."
"அதான் மாமு படமே....காசுக்கு ஆசைப்பட்டு புரோக்கர்களும்,
அரசு அதிகாரிகளும், ரியல்எஸ்டேட் முதலாளிகளும் எப்படி எல்லாம் மக்களை ஏமாத்துறானுங்க என்பதைதான் டைரக்டர் சுப்ரமணியம் சிவா படமா எடுத்துறுக்காரு."
"ஜுவாவுடைய ஒவ்வொரு படமும், கதையும் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு இல்ல? பையன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு....மத்த விஷயங்கள் எல்லாம் எப்படிடா...."
"நடிப்புல எல்லோரும் நல்லாதாம்பா செஞ்சிருக்காங்க....இசை நம்ம தினா பரவால்லன்னு சொல்லலாம்..."மன்மதராசா" பாட்டு போலவே கடைசியா ஒரு பாட்டு அதே மாதிரி டான்சுவேற தாங்கமுடியல...
அப்புறம் ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம் அருமையா செய்திருக்காரு.
வசனங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்கு அதுவும் ஜுவா நீதிமன்றத்துல பேசுறது அருமை
டைரக்டர் இன்னும் கொஞ்சம் அந்த தில்லு முல்லுக்களையும் காட்டியிருக்கலாம். நாகேஷ் அவர்களுக்கும், ஜுவாவுக்கும் உள்ள தந்தை, மகன் உறவை அருமையாவும் அழகாகவும் காட்டியிருக்கிறார். இன்னிக்கு இருக்குற ஒரு ஆழமான பிரச்சனையைதான் டைரக்டர் சொல்லியிருக்காறு. வில்லனை பழிவாங்குறது எல்லாம் நம்ம வடிவேலு சொல்லற மாதிரி "சின்னப்புள்ள தனமா" இருக்கு. வீடு வாங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்றாரு."
"ம்ம்ம்....அப்ப பார்க்லாம்ன்னு சொல்றியா??"
"அப்ப நீ பார்ப்பியா??? பார்கலாம் மாமு....சும்மா டைம்பாசுக்கு"
33 comments:
"எல... பொறி படத்தப் பாத்தியாலெ"
"என்னல சொல்லுத.. அப்டி ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கால"
"நம்ம கோபிதான் சொல்லுதாவ... படம் நல்லா இருக்குன்னு வேற சொல்லுதாவ.."
"அவரு சொல்லிட்டாரா? அப்ப நல்லாதாம்ல இருக்கும்"
"நீ வேற.. தகப்பன்சாமிக்கெல்லாம் விமர்சனம் எழுதுனவருல அவரு..."
"அப்ப.. நம்ப சொல்லுதியா? இல்லையா?"
"படம்தான்ல.. சும்மா போய் பாரு..."
பொறி பார்த்தீங்களா?
பொறி பறந்துச்சா??
அதான் நீங்களே கதைய சொல்லிட்டீங்களே...
அப்புறம் எதுக்கு படத்தப் பாத்துக்கிட்டு... ;-)))
கோபி..
நானும் படம் பாத்தேன்.. நிறைய இடங்கள்ல பழைய பல படங்களை படம் ஞாபகப்படுத்துது.
அட்லீஸ்ட், திரைக்கதையில கொஞ்சம் வித்தியாசம் பண்ணி இருக்கலாம் சிவா..
அப்புறம் அங்க அங்க எட்டிப் பாக்குற இரட்டை அர்த்த வசனங்களை குறச்சு இருக்கலாம்
//..."மன்மதராசா" பாட்டு போலவே கடைசியா ஒரு பாட்டு அதே மாதிரி டான்சுவேற தாங்கமுடியல...
//
கரெக்ட் கோபி.. நான் பாடலை கேட்ட போதே நினச்சேன்.. இன்னும் டைரக்டர் சிவா திருடா திருடி பாத்திப்புல இருந்தே வரலைன்னு..
படத்துல புது யேதும் இல்ல.. ஏற்கனவே வந்த மாதிரி தான் தலைவலிகூட வருது :-)
வாங்க ஜிண்ணே...
\\"அப்ப.. நம்ப சொல்லுதியா? இல்லையா?"
"படம்தான்ல.. சும்மா போய் பாரு..." \\
எலேய்...இந்த படத்தை பத்தி விமர்சனம் பண்ணுன்னு சொல்லிட்டு இப்ப நீயே சேம் சைடுல கோல் போடுறியே...
வாங்க தோழி....
\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
பொறி பார்த்தீங்களா?
பொறி பறந்துச்சா??\\\
ம்ம்ம்...என் பர்ஸ்சுலயிருந்து பொறியா பறந்துச்சு...
வாங்க அருள்...
\\ அருட்பெருங்கோ said...
அதான் நீங்களே கதைய சொல்லிட்டீங்களே...
அப்புறம் எதுக்கு படத்தப் பாத்துக்கிட்டு... ;-))) \\
இப்படி தான் எல்லாப்படத்தையும் பார்ப்பிங்களா...இப்படியே எல்லாரும் தப்பிச்சுடுங்க நான் மாட்டும் மாட்டிக்குறேன் ;(((
வாங்க் தலைவா
\\ மு.கார்த்திகேயன் said...
அட்லீஸ்ட், திரைக்கதையில கொஞ்சம் வித்தியாசம் பண்ணி இருக்கலாம் சிவா..\\
ஆமாம்...தல
ஆனா வித்தியாசம் செய்றேன்னு இன்னும் கொடுமை பண்ணியிருவானுங்க.
காரபொறி அளவுக்கு கூட படம் ருசியா இல்லியே. அதுக்கு நி இம்புட்டு பில்டப் கொடுத்து மக்கள ஏமாத்தறியா?
ஜார்ஜாவுல படமே ஓடல எங்கிட்டு போய் பாத்த?
உனக்கு தைரியம் ஜாஸ்தி கோபிதம்பி. பொறி படம் பாத்திருக்க!!!! இது நாகை சிவாவுக்கு தெறிஞ்சா உன் கூட கா வுட்டுடுவார்.
கிடேசன் பார்க் சங்க செயலர் கோபி அடுத்த மீட்டிங் பத்திய அறிவிப்பு செய்யனும்னு கேட்டுக்கறேன்.
இன்னிக்கு நா நூறு அடிச்சு நாற அடிச்சனே பாக்கலயா கோபிதம்பி!!!
வாங்க தம்பி சார்
\\ தம்பி said...
காரபொறி அளவுக்கு கூட படம் ருசியா இல்லியே. அதுக்கு நி இம்புட்டு பில்டப் கொடுத்து மக்கள ஏமாத்தறியா?
ஜார்ஜாவுல படமே ஓடல எங்கிட்டு போய் பாத்த?\\
இததெல்லாம் வேற போய் பார்க்கனுமா
ருமூ தேடி வந்துச்சி 5 dhs....
வாங்க அபி அப்பா
\\அபி அப்பா said...
உனக்கு தைரியம் ஜாஸ்தி கோபிதம்பி. பொறி படம் பாத்திருக்க!!!! இது நாகை சிவாவுக்கு தெறிஞ்சா உன் கூட கா வுட்டுடுவார். \\
எதுக்கு கா வுடுவாரு...அவரும் என்னை மாதிரியே தைரியசாலியா...
\\அபி அப்பா said...
இன்னிக்கு நா நூறு அடிச்சு நாற அடிச்சனே பாக்கலயா கோபிதம்பி!!!\\
அப்ப கிடேசன் பார்க்குல ட்ரீட்டு உண்டு...
தீ பொறி போல் படம் இருக்ம் என்று பார்த்தால் ..எலி பொறி போல இருக்குது ...ஆனால் கோபி பரவா இல்லை ஊரார் படத்தை ஊட்டி வல்ள்த்துள் லேர்கள் .. அதாவது உங்கள் ப்ளோக் .சாததார்ன்மா களிமானு வைத்து பொம்மை செய்து ஆதுற்க்கு கோல்ட் பூசுவீர்கள் கோபிகாரு ... முதல் முறை களிலே மன்னினு பொம்மை தந்து இருகீர்கள்...
நீங்களும் பொறில சிக்கிடீயலா...ஆனா அத பத்தியே சொல்லாம எங்களயும் சிக்க வைக்க பாக்கே....என்னால இந்த படத்த ஒரு 15 நிமிசம் பாக்க முடியல... :-)
//இதுக்கு தாண்டா இந்த குறைமாசத்துல பொறந்தவனுக்கெல்லாம் கதை சொல்லுறது இல்ல...பொறுமையா இருடா டுபுக்கு..."
"சரி...சரி...சந்துல ரிக்சா ஓட்டிட்ட...சொல்லு..."
//
LOL....:-)
//நீ வேற.. தகப்பன்சாமிக்கெல்லாம் விமர்சனம் எழுதுனவருல அவரு..."
"அப்ப.. நம்ப சொல்லுதியா? இல்லையா?"
"படம்தான்ல.. சும்மா போய் பாரு..." //
@Z
neenga sandhula rocket ottiteenga pola :-)
என்னங்க என்னால இந்த படத்த ஒரு 40 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல... அதும் பூஜாக்காக :-)
வாங்க தேவ்...
\\kotturpuramgangs said...
தீ பொறி போல் படம் இருக்ம் என்று பார்த்தால் ..எலி பொறி போல இருக்குது ...ஆனால் கோபி பரவா இல்லை ஊரார் படத்தை ஊட்டி வல்ள்த்துள் லேர்கள் .. அதாவது உங்கள் ப்ளோக் .சாததார்ன்மா களிமானு வைத்து பொம்மை செய்து ஆதுற்க்கு கோல்ட் பூசுவீர்கள் கோபிகாரு ... முதல் முறை களிலே மன்னினு பொம்மை தந்து இருகீர்கள்...\\
மொத்தத்துல களிமண்ணுன்னு சொல்லிட்டிங்க
வாங்க முதல்வரே...வாங்க..
\\ Syam said...
நீங்களும் பொறில சிக்கிடீயலா...ஆனா அத பத்தியே சொல்லாம எங்களயும் சிக்க வைக்க பாக்கே....என்னால இந்த படத்த ஒரு 15 நிமிசம் பாக்க முடியல... :-)\\
எனக்கு வேற வழிதெரியல..அதான் மொத்தமா சிக்கிட்டேன்.
வாங்க உள்துறை...
\\Arunkumar said...
என்னங்க என்னால இந்த படத்த ஒரு 40 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல... அதும் பூஜாக்காக :-) \\
அப்ப 40 நிமிஷமும் பூஜாவைதான் பூஜித்திர்களா..
gopi ..padam kallimannu , ungal blog goldu, endru artham....
போங்க கோபி நான் படம் பார்த்தேன்.ஆனால் தூங்கிவிட்டேன்.படம் முடிந்தவுடன் எழுப்பினார்கள்.boring movie
pori paathuttu ellarum veri pidichu alayaraangannu kaelvi pattaen..sari namakku dhaan yaekanamae pidichaachaennu paakaama vittuttaen gopi.
வாங்க துர்கா...
\\ துர்கா said...
போங்க கோபி நான் படம் பார்த்தேன்.ஆனால் தூங்கிவிட்டேன்.படம் முடிந்தவுடன் எழுப்பினார்கள்.boring movie \\
கலாச்சிட்டியே துர்கா :((((
வாங்க கிட்டு...
\\ Kittu said...
pori paathuttu ellarum veri pidichu alayaraangannu kaelvi pattaen..sari namakku dhaan yaekanamae pidichaachaennu paakaama vittuttaen gopi.\\\
என்னது உங்களுக்கு ஏற்கனவே வெறி புடுச்சுடிச்சா எந்த படம் பார்த்து??
எங்கய்யா போன்கூட இல்ல. நாளை சந்திப்பு இருக்கு தெறியும்ல!!
நீ நல்லவர்தான்,ஆனாலும் இம்புட்டு நல்லவர்னு தெரியாம போச்சே...
:)
தீபாவளி எப்ப?
வாங்க மணி....
\\நீ நல்லவர்தான்,ஆனாலும் இம்புட்டு நல்லவர்னு தெரியாம போச்சே...
:)
தீபாவளி எப்ப? \\
மணி நீங்களுமா?? இந்த பொறி போதாத தீபாவளியும் வேணுமா உங்களுக்கு CD அனுப்பிவைக்குறேன்...
Post a Comment