நம்ம தோழி (மை ஃபிரண்ட்) ஒரு வீட்டு பாடத்தை கொடுத்து எழுதி பதிவா போட சொன்னாங்க. என்னிக்கு நம்ம எல்லாம் சரியா வீட்டு பாடத்தை முடிச்சுருக்கோம். என்னைப் பற்றி 5 வியர்ட்டான (weird) விஷயங்களை எழுத வேண்டுமாம். இப்படி தீடிரென்னு கேட்டா எப்படி? இருந்தாலும் பரவாயில்லை எழுதலாம்னு உட்கார்ந்தா ஒரே குழப்பம் எதை சொல்லறது எதை விடுவதுன்னு ஒரே குழப்பம் ;-) எப்படியோ ஐந்தை எழுதிவிட்டேன். அப்புறம் எனக்கும் வீட்டு பாடம் கொடுத்த தோழிக்கு என் நன்றிகள்.
கோபம்
இது எப்ப வரும் எப்படி வரும் எல்லாம் தெரியாது ஆனா வரவேண்டியா நேரத்துல கரைக்டா வரும். எங்க பாட்டி சின்ன வயசுல சொல்லும், "கோபம் உன்னையும் கொல்லும் எதிராளியையும் கொல்லும்" என்று. வளர வளர தான் இது எனக்கு அதிகம் ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். சரி இனிமே கோபமே படக்கூடாதுன்னு முடிவு செய்து என் கோபத்தை கட்டுபடித்திக் கிட்டு தேவையில்லாமா பேசாம இருப்பேன். ஆனா இது எல்லாம் சில மணி நேரம் தான் அதுக்கு மேல முடியாது. ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு. அதனால இந்த கட்டுபடித்திக்கிறது எல்லாம் சிலபேர்க்காகவும், சில மணிநேரமும் தான். ஆனா நண்பர்கள் கிட்டயும் சரி, மனசுக்கு பிடிச்சவங்க கிட்டடையும் சரி எந்த கட்டுப்பாடும் இல்லாம இருப்பேன்.
தயக்கம்
இதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கு. நான் ஏதவாது கேட்க்கப்போயி அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன். முன்னவிட இப்ப பரவாயில்ல எல்லாம் அனுபவம் தான் ;-)
திட்டம் தீட்டுவது
இதுக்கும் எனக்கும் ராசியே இல்லைங்க. எப்போதாவது அதிசியமா சில விஷயம் நான் திட்டம் போட்ட மாதிரி நடக்கும். உதராணத்திற்கு இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். டக்குன்னு எதுவும் எனக்கு அமையரது இல்லை.
என் ராசி அப்படி போல ;-(
ஈடுபாடு
எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் திறந்தாவே தூக்கம் வந்துடும். ஆனா கல்லூரிக்கு போனபிறகு அப்படி இருக்க முடியல நிறைய அவமானங்கள் பட்டேன். அப்பதான் படிப்பு மேலேயே ஒரு ஈடுபாடு வந்தது. இனி படிச்சா தான்டா பொழப்பேன்னு தோணுச்சசி. இந்த ஈடுபாடு விஷயம் வேலையிலும் நடக்கும், என்னால முடியாதுன்னு சொன்ன பிறகும் அதனை செய்யுன்னு சொன்னா என்னையும் அரியாமல் சொதப்பிடுவேன். அதனால ஈடுபாடு இல்லாத எந்த ஒரு விஷயத்தில் இருந்தும் கழண்டுக்குவேன்.
கற்றுக்கொள்ளுதல்
"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிர கற்ப்பிக்க கூடாது" ஒரு தினசரி காலெண்டரில் படித்த வாசகம் (சரியா எழுதியிருக்கனான்னு தெரியவில்லை) வாழ்க்கை முழுவதும் நீ மாணவன் தான்னு சொன்ன வாசகம் அது. இன்னிக்கு வரைக்கும் புதுசு புதுசா ஒவ்வொரு மனிதர்கள் கிட்ட இருந்து ஏதாவது புது விஷயம் கத்துகிட்டு தான் இருக்கேன். எனக்கு ஏதாவது தெரியவில்லைன்னா மற்றவங்க்க்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன் அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி.
எப்படியோ மை ஃபிரண்ட் கொடுத்த வீட்டு பாடத்தை முடிச்சுட்டேன். என்ன தோழி சரியா செய்திருக்கேனா எப்படி மார்க் எல்லாம்? தேர்ச்சி உண்டா அல்லது தேர்ச்சி இல்லையா? அப்புறம் இதே கேள்வியை இன்னும் 5 பேருக்கு கொடுக்கனுமாம். இது தான் நமக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே
1. மகரந்தம் ராகவன்
2. தங்க கம்பி தம்பி உமா.கதிரவன்
3. அடிச்சு ஆடும் அண்ணன் அபி அப்பா
4. காமெடி பெண் சூப்பர் ஸ்டார் கண்மணி
5. காலண்டர் கவிஞர் மணி பிரகாஷ்
மக்கா என்னை மாதிரி லேட்டா எல்லாம் செய்யக்கூடாது சீக்கிரம் செய்யனும்.அப்புறம் அடுத்த ஐந்து பேருக்கு அல்வா கொடுங்கனும்.
இதுல யாராவது எற்கனவே செய்திருந்தால் விட்டுடுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
68 comments:
என்னலே இந்த சின்ன விளாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்.
ஒரு 500 ன்னா ஓகே, அஞ்சுக்கெல்லாம் பத்தாது.
இது வருகைப் பதிவு பின்னூட்டம் கோபி..
அப்பால வந்து படிக்கிறேன் உங்க ஐந்தை..
என்ன?கோபிக்கு கோபம் வருமா?நம்ப முடியவில்லையே!
அந்த 5 வது குணத்தைப் பார்த்தால் எனக்கு ஒர்கூட் ஞாபகம் வருகின்றது.யாரோ பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுத்து ஏதோ சொல்லி தருகின்றாரே...அதையும் கற்றுக் கொள்கின்றீர்களா? ;)
Nadairaja Gopi avarkale,
innum unge veeddupaadaththai padikkavillai. markkum podavillai. velai palu athikam. ellaam mudichchiddu vanthu aara amara padiccu mark poduren sariyaa?
ithu verum attendance maddume! (teacherum attendance poda vendumaa enna?) :-P
யோவ் கோபி.. இது உமக்கே ஞாயமா இருக்குதா?? நான் யோசிச்சு வச்ச அஞ்சு பேருல நாலு பேர நீங்களே போட்டுட்டீரே.. அப்ப நான் என்ன பண்றது???
இதுல வேற அதே கமெண்டு ஒருத்தருக்கு. அதையும் காப்பியடிச்சிட்டீரே... :((((
ரெண்டாவதும், மூனாவதும் ஓகே... மத்ததெல்லாம் வியர்டான மேட்டரே இல்ல.. அதுனால 20% தான்.. பெயில்தான். மறுபடியும் எழுதவும்...
-- மை ஃப்ரண்ட்....
அட.. டைட்டலிலேயே என் பெயரை போட்டு கலக்கிட்டீங்க கோபி.. அதுக்கு இந்தாங்க 5 point.. ;-)
அந்த கார்தூன் படமும்.. கரெக்ட்டா ஒரு 5 பழத்தை தேடி வச்சிருக்கிற அழகான படம்.. அதுக்கு ஒரு 2 point..
//இது எப்ப வரும் எப்படி வரும் எல்லாம் தெரியாது ஆனா வரவேண்டியா நேரத்துல கரைக்டா வரும்.//
உங்க கோபம் சூப்பர் ஸ்டாரை போலன்னு சொல்லுங்க.. ;-)
//இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். //
அப்போ ஏதாவது வாங்கனும்ன்னா ரெண்டு மாதத்துக்கு முன்னாடியே யோசிச்சு வச்சுப்பீங்கன்னு சொல்லுங்க..
//"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிற கற்ப்பிக்க கூடாது" //
சூப்பர் வாசகம்.. :-)
//என்ன தோழி சரியா செய்திருக்கேனா எப்படி மார்க் எல்லாம்? தேர்ச்சி உண்டா அல்லது தேர்ச்சி இல்லையா? //
இதோ அடுத்த பின்னூட்டதுல மார்க் போட்டுடறேன்.. ;-)
இப்போது மார்க்:
1- ஓ அதனால்தான் அன்னைக்கு என் கோபத்தை குறைக்க சொல்லி அப்படி அட்வைஸ் பண்ணுணீங்களா என்னை..
2- உங்களுடைய இந்த point ஜி காப்பி அடிச்சிருக்காரு! சோ, உங்களுக்கு இதுல ஃபுல் மார்க்
3- கால தாமதம் ஏற்ப்பட்டாலும், செய்வதை செய்து முடிச்சிருவீங்க..
4- அந்த வெறி.. அது ரொம்ப முக்கியம்.. ;-)
5- வாழ்க்கையில் எப்போதும் மாணவனாய் இருந்து விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த எண்ணம் எனக்கு இகவும் பிடித்திருக்கிறது.
நீங்க இரண்டாவதாய் டேக் எழுதுனதுனால், 7 மர்க் போனஸ்..
மொத்தம் (முதல்ல கொடுத்த போனஸ் மார்க்கையும் சேர்த்து):
87%
[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்டு வரணும்.. சரியா?]
பத்த வச்சுட்டியே பரட்டை:-))
எனக்கு 2 டேஸ் டைம் வேணும், கொஞ்சம் ஆணி!:))
ஒரே ஒரு கேள்வி. என்னையப் பத்தி பதிவு போட்டிருக்கீங்களா? ஒங்களப் பத்திப் பதிவு போட்டிருக்கீங்களா? அந்த அளவுக்கு ஒற்றுமையோ ஒற்றுமை. :-)
இனிமே நான் வந்து என்னத்த எழுதன்னு தெரியலை. :-))
// உதராணத்திற்கு இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். டக்குன்னு எதுவும் எனக்கு அமையரது இல்லை. //
இதுவும் நல்லதுதான்னு வெச்சிக்கோங்களே. திட்டம் போட்டு..நல்லதா வாங்கலாம்ல.
ஏனப்பா இது எல்லாம் weird விசயமா... என்ன போ... நீ சொல்லுற, நான் கேட்டுக்குறேன்
//ஒரு 500 ன்னா ஓகே, அஞ்சுக்கெல்லாம் பத்தாது. //
மனுசா இருந்தா 5, இருக்கும் இல்ல 10 இருக்கும். 500 எல்லாம் ஜந்துக்களுக்கு தான் இருக்கும்....
//"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிற கற்ப்பிக்க கூடாது" //
நீங்க மட்டும் அடுத்தவங்க கிட்ட இருந்து கத்துப்பீங்க, அடுத்தவனுக்கு ஏதும் சொல்லி தர மாட்டீங்க... எந்த ஊர் நியாயம்ய்யா இது.... சுத்த அயோக்கியத்தனமால இருக்கு. சுயநலம் இது....
//சூப்பர் வாசகம்.. :-)//
நானே சூடு ஆகி இருக்கேன், கோபி சொன்னதை கேட்டு, நீங்க பாராட்டு பத்திரம் வாசிக்குறீங்க....
ஆகா!!!
இத பாக்காம நான் பாட்டுக்கு உங்க பேரை போட்டுட்டனே!! :-(
http://cvrintamil.blogspot.com/2007/03/blog-post_4653.html
சூப்பர் வீட்டுபாடம்.. எனக்குகூட துர்கா குடுத்தாங்க..என்னோட அணில் என்னை செய்ய விடமா..அது..பூந்து விளையாடிடுத்து..
உங்க வீட்டு பாடங்கள் நல்லாத்தான் இருக்கு..சரியா முடிச்சிட்டீங்க..
வாங்க தம்பி...
\\தம்பி said...
என்னலே இந்த சின்ன விளாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்.\
ராசா நீங்க வல்லவரு, நல்லவரு.....உங்க குணங்களுக்கு இந்த 5 கொஞ்சம் கம்மிதான்
(எல....முதல்ல இந்த 5க்கு பதிவை போடு)
\\ஒரு 500 ன்னா ஓகே, அஞ்சுக்கெல்லாம் பத்தாது.\\\
என்னாது 500ரா???....குணங்களை சொல்றியா.....இல்ல வேற 500ரை சொல்றியா????
வாங்க தலைவா...
\\மு.கார்த்திகேயன் said...
இது வருகைப் பதிவு பின்னூட்டம் கோபி..
அப்பால வந்து படிக்கிறேன் உங்க ஐந்தை..\\
கண்டிப்பா வாங்க ;-(((
வாங்க துர்கா....
\\துர்கா said...
என்ன?கோபிக்கு கோபம் வருமா?நம்ப முடியவில்லையே!\\
நம்பனும், நம்பிதான் ஆகணும் ;-)))
\\ாரோ பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுத்து ஏதோ சொல்லி தருகின்றாரே...அதையும் கற்றுக் கொள்கின்றீர்களா? ;)\\
ஒர்கூட் நினைவுக்கு வந்துவிட்டதா ;-)))
ஆமா.... யாரு பாட்டு சொல்லிதரா??
வாங்க தோழி....வாங்க...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
ithu verum attendance maddume! (teacherum attendance poda vendumaa enna?) :-P\\\
கண்டிப்பாக மார்க் போட மறந்துடாதிங்க
வாங்க ஜி...
\\ஜி - Z said...
யோவ் கோபி.. இது உமக்கே ஞாயமா இருக்குதா?? நான் யோசிச்சு வச்ச அஞ்சு பேருல நாலு பேர நீங்களே போட்டுட்டீரே.. அப்ப நான் என்ன பண்றது???\\
அப்படியா?? என்ன பொருத்தம் ஆகா....ஆகா....
சரி...சரி....அந்த நாலு பேரு யாரு??
\\இதுல வேற அதே கமெண்டு ஒருத்தருக்கு. அதையும் காப்பியடிச்சிட்டீரே... :((((\\\
அந்த ஒருத்தரு யாரு??
\\ரெண்டாவதும், மூனாவதும் ஓகே... மத்ததெல்லாம் வியர்டான மேட்டரே இல்ல.. அதுனால 20% தான்.. பெயில்தான். மறுபடியும் எழுதவும்...
-- மை ஃப்ரண்ட்....\\
நாங்க பெயிலா....உனக்கு வயித்தொரிச்சல் ;-)))
வாங்க டீச்சர் தோழி ...
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
அட.. டைட்டலிலேயே என் பெயரை போட்டு கலக்கிட்டீங்க கோபி.. அதுக்கு இந்தாங்க 5 point.. ;-)\\
ரொம்ப நன்றிங்க ;-))
\\அந்த கார்தூன் படமும்.. கரெக்ட்டா ஒரு 5 பழத்தை தேடி வச்சிருக்கிற அழகான படம்.. அதுக்கு ஒரு 2 point..\\
ரொம்ப ரொம்ப நன்றிங்க ;-))))
\\:: மை ஃபிரண்ட் ::. said...
//இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன்.
//அப்போ ஏதாவது வாங்கனும்ன்னா ரெண்டு மாதத்துக்கு முன்னாடியே யோசிச்சு வச்சுப்பீங்கன்னு சொல்லுங்க..\\
ஆமாங்க...சில சமயம் அந்த பொருளை வாங்க போயி அது இல்லாம வேற பொருள் வாங்கின கதை எல்லாம் உண்டு ;-))
//"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிற கற்ப்பிக்க கூடாது" // சூப்பர் வாசகம்.. :-)\\
நன்றிங்க ;-)))
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
இப்போது மார்க்: \\1- ஓ அதனால்தான் அன்னைக்கு என் கோபத்தை குறைக்க சொல்லி அப்படி அட்வைஸ் பண்ணுணீங்களா என்னை.. \\
அட்வைஸ்சா....ச்சேச அப்படி எல்லாம் தப்பா எடுத்துக்காதிங்க ;-)) சும்மா சொன்னேன் அவ்வளவுதான் \\2- உங்களுடைய இந்த point ஜி காப்பி அடிச்சிருக்காரு! சோ, உங்களுக்கு இதுல ஃபுல் மார்க்\\
அப்படியா......பரவாயில்லைங்க நம்ம பய,
ரொம்ப நல்லவன் ;-)) \\3- கால தாமதம் ஏற்ப்பட்டாலும், செய்வதை செய்து முடிச்சிருவீங்க..\\
கண்டிப்பாங்க.....செய்து முடிச்சுட்டு தான் அடுத்த வேலையே. (இல்லைன்னா குனிய வச்சு கும்மியிருவானுங்க) \\4- அந்த வெறி.. அது ரொம்ப முக்கியம்.. ;-)\\
அந்த வெறி தாங்க இவ்வளவு தூரம் வந்ததற்கு அதுவும் ஒரு காரணம் ;-))
\\5- வாழ்க்கையில் எப்போதும் மாணவனாய் இருந்து விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த எண்ணம் எனக்கு இகவும் பிடித்திருக்கிறது.\\
ரொம்ப நன்றிங்க ;-))) \\நீங்க இரண்டாவதாய் டேக் எழுதுனதுனால், 7 மர்க் போனஸ்..\\
அப்படியா....நன்றி...நன்றி. \\மொத்தம் (முதல்ல கொடுத்த போனஸ் மார்க்கையும் சேர்த்து): 87%\\
யாரு நானா??? நீங்க நல்லா இருக்கனும் தாயீ ;-))) \\[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்டு வரணும்.. சரியா?]\\
இது என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு.......இந்த மாதிரி சின்ன விஷயத்திற்கு எல்லாம் அப்பாவை தொந்தரவு செய்யக்கூடாது ;-))))
வாங்க அபி அப்பா
\\அபி அப்பா said...
பத்த வச்சுட்டியே பரட்டை:-)) எனக்கு 2 டேஸ் டைம் வேணும், கொஞ்சம் ஆணி!:))\\
நேரம் கிடைக்கும் போது போடுங்க.
வாங்க ராகவன் சார்..
\\g.ragavan said...
ஒரே ஒரு கேள்வி. என்னையப் பத்தி பதிவு போட்டிருக்கீங்களா? ஒங்களப் பத்திப் பதிவு போட்டிருக்கீங்களா? அந்த அளவுக்கு ஒற்றுமையோ ஒற்றுமை. :-) இனிமே நான் வந்து என்னத்த எழுதன்னு தெரியலை. :-))\\\
அப்படியா....ரொம்ப நன்றிங்க ;-))
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு // உதராணத்திற்கு இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். டக்குன்னு எதுவும் எனக்கு அமையரது இல்லை. // இதுவும் நல்லதுதான்னு வெச்சிக்கோங்களே. திட்டம் போட்டு..நல்லதா வாங்கலாம்ல.\\
அப்படி தான் மனசை தேத்திக்கிட்டு இருக்கேன்
ராகவன் சார் ;-((
வாங்க சிவா...
\\நாகை சிவா said...
ஏனப்பா இது எல்லாம் weird விசயமா... என்ன போ... நீ சொல்லுற, நான் கேட்டுக்குறேன்\\
என்னப்பா இப்படி சொல்லிட்ட ;-((
\\நாகை சிவா said...
//ஒரு 500 ன்னா ஓகே, அஞ்சுக்கெல்லாம் பத்தாது. // மனுசா இருந்தா 5, இருக்கும் இல்ல 10 இருக்கும். 500 எல்லாம் ஜந்துக்களுக்கு தான் இருக்கும்....\\
கொஞ்சம் கஷ்டம தான் இருக்கு.......என்னமோ போ...
நீ சொல்லுற நானும் நம்பிட்டேன் ;-)))
\\நாகை சிவா said...
நீங்க மட்டும் அடுத்தவங்க கிட்ட இருந்து கத்துப்பீங்க, அடுத்தவனுக்கு ஏதும் சொல்லி தர மாட்டீங்க... எந்த ஊர் நியாயம்ய்யா இது.... சுத்த அயோக்கியத்தனமால இருக்கு. சுயநலம் இது....\\
நாங்க சொல்லி தர மாட்டேன்னு சொன்னமா //சூப்பர் வாசகம்.. :-)// நானே சூடு ஆகி இருக்கேன், கோபி சொன்னதை கேட்டு, நீங்க பாராட்டு பத்திரம் வாசிக்குறீங்க....\\
சிவா உனக்கும் வயித்தொரிச்சல......
நீயும் பாராட்ட மாட்ட அவுங்களையும்
பாராட்ட விட மாட்ட ;-(((
வாங்க CVR...
\\cvr said...
ஆகா!!! இத பாக்காம நான் பாட்டுக்கு உங்க பேரை போட்டுட்டனே!! :-( http://cvrintamil.blogspot.com/2007/03/blog-post_4653.html\\
உங்க பதிவு பதில் சொல்லிட்டு வரேன் நீங்க இங்க பின்னூட்டம் போட்டுயிருக்கீங்க.
அட பரவாயில்ல விடுங்க...... அப்புறம் என் பேரை போட்டதற்கு நன்றி ;-))
வாங்க கவிதா அக்கா......வாங்க
\\கவிதா said...
சூப்பர் வீட்டுபாடம்.. எனக்குகூட துர்கா குடுத்தாங்க..என்னோட அணில் என்னை செய்ய விடமா..அது..பூந்து விளையாடிடுத்து..\\
அணில் ரொம்ப நல்லா தான் வீட்டுபாடம் செய்திருந்துச்சு.....அணிலை கேட்டதாக சொல்லவும் \\உங்க வீட்டு பாடங்கள் நல்லாத்தான் இருக்கு..சரியா முடிச்சிட்டீங்க..\\
ரொம்ப நன்றிக்கா ;-)))
//இது எப்ப வரும் எப்படி வரும் எல்லாம் தெரியாது ஆனா வரவேண்டியா நேரத்துல கரைக்டா வரும்.//
நம்ம தலைவர் மாதிரின்னு சொல்லுப்பா ஒரே வரில..
//இதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கு. நான் ஏதவாது கேட்க்கப்போயி அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்.//
கையை கொடுப்பா கோபிநாத்.. நானும் இதே மாதிரி தான்..
//வாழ்க்கை முழுவதும் நீ மாணவன் தான்னு சொன்ன வாசகம் அது. இன்னிக்கு வரைக்கும் புதுசு புதுசா ஒவ்வொரு மனிதர்கள் கிட்ட இருந்து ஏதாவது புது விஷயம் கத்துகிட்டு தான் இருக்கேன்.//
உண்மை தான் பா கோபிநாத்.. ஒவ்வொரு நாளும், புதுசான வெள்ளை காகிதம் மாதிரி.. நிறைய விஷயங்கள் மனிதர்கள் னு எழுத நிறைய இருக்கு
வந்துட்டேன். படிச்சிட்டு வர்றேன்...
என்ன மக்க இம்புட்டுடுடு பாசகார பயல இருக்கிறீங்க,.
நாம ஹோம் ஒர்க் செஞ்சு பல வருசமாச்சு...
செய்யனுமா... சரி செய்றேன்..ஆனா நமக்கு டைம் வேணும் மக்கா...
weird அப்படினா என்ன? அது நம்ம கிட்ட எல்லாம் இருக்கானு முதல நான் கண்டு பிடிக்கிறேன்..
ஆனா ஒன்னுமட்டும் உண்மையப்பா நீ, போட்டு இருக்கிறதுல 4 நம்ம பாயிண்டு ஆயிடுச்சு..இனி நான் என்னத்த எழுதறது...
அதே மாதிரி இதுக்கு பதில் எழுதுனாலும்(உங்க பதிவுக்கு)அப்புறம் நம்ப பக்கத்துல எழுதுறதுக்கு ஒன்னும் இல்லாம போயிடும்ம்ம்ம்ம்ம்ம்.. சோ நான் ஹோம் ஒர்க் செஞ்சுட்டு இங்க வரேன்..அதுகுள்ள நம்ப பாச கார பயலுக இங்க வந்து கும்மி அடிக்கட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
gopi !! good thoughts ....balance 95 yengappa?
இந்த ஜி பையன் இருக்கானே. எல்லாரையும் பெயிலாக்கறதுலயே இருக்கான்...
நான் உனக்கு தரேன் மார்க் - ஏழாயிறத்தி நானுத்தி அறுபத்தி அஞ்சி - நூத்துக்கு...
இது யார், எந்த படத்துல எடுத்த மார்க்னு கரெக்டா சொன்னா நீ சினிமா பைத்தியம் (என்னை மாதிரி)னு ஒத்துக்கறேன் ;)
//நீங்க மட்டும் அடுத்தவங்க கிட்ட இருந்து கத்துப்பீங்க, அடுத்தவனுக்கு ஏதும் சொல்லி தர மாட்டீங்க... எந்த ஊர் நியாயம்ய்யா இது.... சுத்த அயோக்கியத்தனமால இருக்கு. சுயநலம் இது....//
விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்துக்காட்டாத்தான் நாம இருக்கோம், நம்ம தல இருக்காரு... அப்பறம் என்ன???
//CVR said...
ஆகா!!!
இத பாக்காம நான் பாட்டுக்கு உங்க பேரை போட்டுட்டனே!! :-(//
என்ன CVR இப்படி ஃபீல் பண்ணிட்டீங்க... நம்ம பையன் கோபி எவ்வளவு டேக் பண்ணாலும் எழுதுவான்.. அவ்வளவு நல்லவன்.
என்ன கோபி பாசமா கூப்பிடறவங்களுக்காக நீ இதுக்கூட செய்ய மாட்ட?
//தம்பி said...
என்னலே இந்த சின்ன விளாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்.
ஒரு 500 ன்னா ஓகே, அஞ்சுக்கெல்லாம் பத்தாது. //
இத பாக்காம விட்டுட்டனே...
எலேய் தம்பி,
என்ன பதிவுனே படிக்காம இப்படி மொக்கைத்தனமா கமெண்ட் போட கூடாது. இங்க என்ன நடக்குதுனு நீ 500, 1000ம்னு பேசிட்டு இருக்க???
மக்களே இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா???
அதான பார்த்தேன்,
எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்கு போறாடிருக்கார்...
Gopi " kadavul paathi " mattum thaan inge irrukuthaaa?
Athai ariyamal vidamatein !!!
//எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் துறந்தாவே தூக்கம் வந்துடும்.//
கோபி,
எனக்கும் அதேமாதிரி தாங்க... இன்னும் ஆணிபிடுங்கிற இடத்திலே கூட அப்பிடிதான், ஏதோ கார்ப்ரேட் டிரெய்னிங் அது இதுன்னு சொல்லி அறுவையை போட்டுட்டு ஐநூறு பக்கத்துக்கு பொஸ்தகம் ஒன்னே குடுப்பாய்ங்கே...
என்னிக்காவது சரியா தூக்கம் வரலைன்னா அதை திறந்திட்டு நாலு பக்கம் பொரட்டிட்டு நல்லா தூங்கிருவேன் :))
//ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு//
ஓ நீங்க அன்னியனா...சொல்லவே இல்ல :-)
//அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்//
அதுனால எத்தன பிகரு மிஸ் ஆகிருக்குனு சொல்லாம விட்டுட்டீங்க
:-)
//அதான பார்த்தேன்,
எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்கு போறாடிருக்கார்... //
பின்ன... நாம் எல்லாம் அநியாயத்தை கண்டா பொங்குறவங்கள.... இதை விடுவோமா.... மறுக்கா வந்தா பாரு அவன்....
//விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்துக்காட்டாத்தான் நாம இருக்கோம், நம்ம தல இருக்காரு... அப்பறம் என்ன??? //
வாழும் வழிகாட்டிகள் ஆன நம்மளை பார்த்தும், பழகியும் திருந்த மாட்டேங்குறாங்கப்பா இவங்க....
//சிவா உனக்கு வயித்தொரிச்சல.....//
ஆமாம்ப்பா, ஏதோ ரொம்ப காரமா சாப்பிட்டேன் போல்... வயிற்று எரிச்சல் இன்னும் இருக்கு.
அது போகட்டும் இது எப்படி உனக்கு தெரியும்???
\\ மு.கார்த்திகேயன் said...
//இதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கு. நான் ஏதவாது கேட்க்கப்போயி அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்.//
கையை கொடுப்பா கோபிநாத்.. நானும் இதே மாதிரி தான்.. \\
அப்படியா ;-)))) ரொம்ப நன்றி தல
வாங்க மணி...
\\மணி ப்ரகாஷ் said...
என்ன மக்க இம்புட்டுடுடு பாசகார பயல இருக்கிறீங்க,.\\
ஏன் இருக்க கூடாதா???
\\நாம ஹோம் ஒர்க் செஞ்சு பல வருசமாச்சு...\\
எனக்கும் அப்படி தான் ;-)
\\செய்யனுமா... சரி செய்றேன்..ஆனா நமக்கு டைம் வேணும் மக்கா... \\
வேற வழி இல்லை செஞ்சுடுங்க....ரொம்ப எல்லாம் டைம் எடுத்துக்ககூடாது ஓகே வா...
\\weird அப்படினா என்ன? அது நம்ம கிட்ட எல்லாம் இருக்கானு முதல நான் கண்டு பிடிக்கிறேன்..\\\
இப்படி கண்டு பிடிக்கனுமுன்னு நினைச்சிங்கள்ள அதுவே ஒரு weird தான்
\\ஆனா ஒன்னுமட்டும் உண்மையப்பா நீ, போட்டு இருக்கிறதுல 4 நம்ம பாயிண்டு ஆயிடுச்சு..இனி நான் என்னத்த எழுதறது...\\
இதையும்...... தாண்டி....விசித்திரமா கண்டிப்பா இருக்கும் அதை எழுதுங்க
\\சோ நான் ஹோம் ஒர்க் செஞ்சுட்டு இங்க வரேன்..அதுகுள்ள நம்ப பாச கார பயலுக இங்க வந்து கும்மி அடிக்கட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் \\\
அதெல்லாம் சரியா தான் போயிக்கிட்டு இருக்கு ;-))
வாங்க பாலாஜி (வெட்டி)...
\\வெட்டிப்பயல் said...
இந்த ஜி பையன் இருக்கானே. எல்லாரையும் பெயிலாக்கறதுலயே இருக்கான்...\\\
அட விடுங்க வெட்டி ஊருக்கு போறாருல்ல அதான் எல்லாத்துக்கும் பெயிலாக்கிட்டு போறாரு....
\\நான் உனக்கு தரேன் மார்க் - ஏழாயிறத்தி நானுத்தி அறுபத்தி அஞ்சி - நூத்துக்கு...
இது யார், எந்த படத்துல எடுத்த மார்க்னு கரெக்டா சொன்னா நீ சினிமா பைத்தியம் (என்னை மாதிரி)னு ஒத்துக்கறேன் ;) \\\
சரியான்னு தெரியல..
தில்லு முல்லு....எதுக்கும் நீயே சரியான பதில சொல்லிடு ;-))))
\\விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்துக்காட்டாத்தான் நாம இருக்கோம், நம்ம தல இருக்காரு... அப்பறம் என்ன??? \\
அப்படிங்களா எசமா....இனி உங்களை பின்பற்றுவதே என் கடமை எசமா
\\dave...dev said...
Gopi " kadavul paathi " mattum thaan inge irrukuthaaa?
Athai ariyamal vidamatein !!! \\
தேவ் இது உங்களுக்கே நாயமா??மீதிதான் உங்களுக்கு தெரியுமே ;-)))
வாங்க ராம்ண்ணே வாங்க...
\\ இராம் said...
//எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் துறந்தாவே தூக்கம் வந்துடும்.//
கோபி,
எனக்கும் அதேமாதிரி தாங்க... இன்னும் ஆணிபிடுங்கிற இடத்திலே கூட அப்பிடிதான், ஏதோ கார்ப்ரேட் டிரெய்னிங் அது இதுன்னு சொல்லி அறுவையை போட்டுட்டு ஐநூறு பக்கத்துக்கு பொஸ்தகம் ஒன்னே குடுப்பாய்ங்கே...
என்னிக்காவது சரியா தூக்கம் வரலைன்னா அதை திறந்திட்டு நாலு பக்கம் பொரட்டிட்டு நல்லா தூங்கிருவேன் :)) \\
ரொம்ப நன்றிண்ணே....
பல ரகசியம் எல்லாம் வெளிய வருது போல ;-)))
வாங்க முதல்வரே....
\\Syam said...
//அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்//
அதுனால எத்தன பிகரு மிஸ் ஆகிருக்குனு சொல்லாம விட்டுட்டீங்க \\
உங்கக்கிட்ட இருந்து இப்படி ஒரு கமெண்டை நான் எதிர்பார்த்தேன்....கணக்குல கொஞ்சம் வீக்கு (கணக்கு பண்றதலையும் தான்)
\\ நாகை சிவா said...
//அதான பார்த்தேன்,
எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்கு போறாடிருக்கார்... //
பின்ன... நாம் எல்லாம் அநியாயத்தை கண்டா பொங்குறவங்கள.... இதை விடுவோமா.... மறுக்கா வந்தா பாரு அவன்.... \\
ம்ஹும்....இனி அவன் வரமாட்டான் புலி....அதான் பதிவே போட்டுட்டனே..
\\ நாகை சிவா said...
//சிவா உனக்கு வயித்தொரிச்சல.....//
ஆமாம்ப்பா, ஏதோ ரொம்ப காரமா சாப்பிட்டேன் போல்... வயிற்று எரிச்சல் இன்னும் இருக்கு.
அது போகட்டும் இது எப்படி உனக்கு தெரியும்??? \\
என் நண்பன் ஒருத்தன் சொன்னான்....அவன் உனக்கும் நண்பன் தான் ;-)))
//[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்டு வரணும்.. சரியா?]//
இதெல்லாம் ரொம்பவே ஓவர், மை பிரண்ட்..
ஏற்கனவே அவர் இம்போசிசஷன் தான் எழுதி முடிச்சிருக்கார், அதுக்குள்ள இது வேறயா :-)
கோபி ஏதோ என்னைய மாட்டிவுட்டுட்டேப்பா.நானும் பதிவு போட்டு சமாளிச்சிட்டேன்.
அப்றம் ஜி நீயி பெயிலுன்னு சொன்னதுக்காக வருத்தம் வேண்டாம் அடுத்த வீட்டுப் பாடத்துக்குள்ள 'பிட்டு'ரெடி பண்ணீடுவம்.40 தாண்டி 62 ஆச்சி நீயி 1 கிளாஸ் அப்பூ.
மு.கார்த்திகேயன் said...
//[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்டு வரணும்.. சரியா?]//
இதெல்லாம் ரொம்பவே ஓவர், மை பிரண்ட்..
ஏற்கனவே அவர் இம்போசிசஷன் தான் எழுதி முடிச்சிருக்கார், அதுக்குள்ள இது வேறயா :-)\\
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......அப்புறம் நான் அழுதுடுவேன்
வாங்க கண்மணி அக்கா......வாங்க
\\கண்மணி said...
கோபி ஏதோ என்னைய மாட்டிவுட்டுட்டேப்பா.நானும் பதிவு போட்டு சமாளிச்சிட்டேன்.\\
ரொம்ப நன்றி !!!!
\\அப்றம் ஜி நீயி பெயிலுன்னு சொன்னதுக்காக வருத்தம் வேண்டாம் அடுத்த வீட்டுப் பாடத்துக்குள்ள 'பிட்டு'ரெடி பண்ணீடுவம்.40 தாண்டி 62 ஆச்சி நீயி 1 கிளாஸ் அப்பூ\\
அக்கா சொன்னா சரிதான்
ஜொள்ளுப்பாண்டி பாடி ஜொள்ளைக் கத்து தந்தரே...அதுதான்!!!
கோபி அண்ணே , பல நாள் ஆச்சு இந்தப்பக்கம் வந்து. மன்னிச்சிடுங்கனே :(
//
ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு.
//
அப்பப்ப அந்நியனா மாறிடுவீகளா?
என்னாதிது சின்ன புள்ளத்தனமா தயங்கிட்டு.. சும்மா தைரியமா
என்ன வேனுமோ கேளுங்க. பிரச்சனைனா நாட்ஸ கூப்டுக்கலாம் :)
//
"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிர கற்ப்பிக்க கூடாது"
//
நீவிர் படித்த வாசகம் எனக்கு பிடித்த வாசகம் !!!
இன்னொரு பதிவு வேர போட்ருக்கீங்க என்னானு பாத்துட்டு வரேன்
Post a Comment