Wednesday, December 19, 2007

குட்டி இந்தியன்...


நேத்து நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பியிருந்தாரு. அந்த மெயிலில் வந்த வீடியோவை பார்த்துட்டு அசந்துட்டேன். அசந்தவுடனே சும்மா இருக்க முடியாம உடனே ஊர் உலகத்துக்கு எல்லாம் சொல்லிட்டேன். அதை பதிவாக போட்டு இந்த மாசத்து கணக்கை முடிச்சுடுலாமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம அண்ணாத்த சந்தோஷ் அதையும் போட்டுடாரு. இருந்தாலும் நம்ம மனசுல கேட்கல..! அதான் நானும் போட்டுட்டேன்

சில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது. பாருங்கள் வீடியோவை.....






இந்த பதிவு போடுறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த வீடியோ வச்சி நம்ம தமிழ்மணத்தின் கவிஞர்களை கவிதை எழுத சொல்ல‌லாமுன்னு ஒரு ஐடியா. உடனே கவிதை எழுதுனா என்ன பரிசு தருவிங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது. பரிசு எல்லாம் கொடுத்து நம்ம கவிஞர்களை ஒரு சிறு ச‌ட்டத்துக்குள்ள (எத்தனை நாளைக்குத்தான் வட்ட்ம் போடுறது) அடைக்க விரும்பவில்லை.

இந்த ஜடியாவை சொன்னவுடன் நம்ம பதிவர் கவிஞர் சென்ஷி உடனே ஒரு கவிதை எழுதி அனுப்பிட்டாரு. படிங்க.. இல்லேன்னா பாருங்கள்!


மாப்பி... கவிதைய எழுதி அனுப்பியிருக்கேன்.. உனக்கு புடிச்ச வரியை மாத்திரம் எடுத்துக்க. புல்லா போடணும்னாலும் போட்டுக்க.. அப்பால அது என்னது கவிஞர் சென்ஷியா.. ஏன் கூட நல்லவரு வல்லவரு பெரியவரு அதயும் சேத்துக்க வேண்டியதுதானே! :))

கவிதை :

சூரிய வட்டம் மிஞ்சும் மின்மினி கூட்டங்களே..
உங்கள் சட்டங்கள் இனி உலகை ஆளட்டும்..!

இந்த விதைகள் இப்போது முளைத்து நிற்கின்றன‌
என்றும் அறுவடைக்கு ஆளனுப்பாதீர்கள்.

உன் ஒரு கையோசையின் சப்தம்
உலகத்தின் எதிரொலி!
பலமாய் ஒலிக்கிறது செவிடன் காதில் சங்கொலி!!

நாளைய பாரதம் நீயென கூறுவார்..
ஜாதிப்போர் உலகத்தில் உன்போல்
சாதிப்போர் இருப்பதனால்
நான் என் பாரதத்தை இன்றே கொடுக்கிறேன்!

கால‌ வரலாற்றில் கசப்புச்சுவ‌டுக‌ள்
காற்றின் துணை கொண்டு ப‌ற்றியெறிய‌ட்டும்.
க‌ட‌ல் வான‌ம் ம‌ண் தூற‌ல்
அதை புதைத்து வைக்க‌ட்டும்.

வல்லரசு கூட்டம் முன்னே
உன் சிரிப்பை காட்டினாய்.
நான் நல்லரசு காண்பேனென்று
நல்லுறுதி ஊட்டினாய்!!

ஊர் ஊராய் கோயில் கட்டி
ஜனம் சாமி தேடுது.
என் கண்முன்னே நல்லதொரு
கடவுள் நிக்குது..!!


சீக்கிரம் கவிஞர்களே கவிதை எழுதி உங்க பதிவில் போடுங்கள்!

எப்படியே இந்த மாசத்துக்கு தேத்தியாச்சி....!!

Saturday, November 17, 2007

இசையின் ராஜா...இளையராஜா


பண்ணைபுரத்து இசை, வெள்ளிக்கிழமை மாலையில் இசை கச்சேரி நடத்த ஷார்ஜா வந்திருந்தது., 87 இசை கலைஞர்கள், SPB, சித்ரா, மனோ, ஸ்ரேயா கோஷல், சாதனாசர்கம், மஞ்சரி, மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, பவதாரணின்னு அருமையான பின்னனி பாடகர்களுடன் அழகான பாடல்களை கூடவே கொண்டு வந்திருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குஷ்பு, ஜெயராமும் வந்திருந்தார்கள் (கொஞ்சம் ஓவராகவே தொகுத்து அருத்துட்டாங்க)

ஜனனி ஜனனி என்று தன் வழக்கமான பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார் இசைஞானி. "எனக்கு நீங்க தரும் பரிசு அமைதியாக இருந்து இந்த நிகழ்ச்சியை ரசிக்க போறிங்க அது தான் நீங்கள் எனக்கு தரும் பரிசுன்னு" எடுத்தவுடனே அன்பு கட்டளை போட்டுட்டார். சொர்கமே என்றாலும் என்ற பாடலில் உள்ள வரிகளை மாற்றி அதற்க்கு பதிலாக கோகினூறு வைரம், அம்மா கையால சாப்பாடு, சாப்டுவேர் இன்ஜீனியர்கள், கோவில் மணி யோசை, பூக்கள்ன்னு இந்தியாவின் பெருமைகளை எல்லாம் சேர்த்து பாடி அந்த அரங்கத்தையே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த பாடலை பாடி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறதுக்கு ஏன்க்கிட்ட என்ன இருக்கு இந்த பாட்டை தவிரன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க கைத்தட்டலில் அரங்கமே குலுங்குச்சி.

சீனியர்ஸ் ஜீனியஸ் தான்னு பாலு சாரும், சித்ரா, மனோ அவர்களும் எந்த சேதாரமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். ராஜபார்வை படத்துக்கு முதல் டியூன் அந்தி மழை பொழிகிறதுன்னு போட்டாராம் ராஜா. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் கமலும், இயக்குனரும் இன்னும் வேற மாதிரி டியூன் வேண்டும் என்று சொல்ல மொத்தம் 30 டியூன் போட்டாராம். கடைசியில எல்லா டியூனையும் கேட்டுட்டு முதலில் போட்ட டியூனே ஓகேன்னு சொல்ல அது தான் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலாக வந்தது என்று பாலு சொன்னார். ஆனால் அந்த 30 டியூனில் ராஜாவுக்கு பிடித்த டியூன் வேறான்று அந்த டியூன் வேறொரு படத்தில் உபயோகப்படுத்தி அதற்க்கு பாலு சாருக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது.

சில பாடல்கள் டியூன் போடும் போது அதில் மற்றொரு பாடலின் ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி திரு. பர்மன் அவர்கள் இசை அமைத்த பாடலின் ஈர்ப்பினால் வந்த பாடல் தான் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் அந்த இந்தி பாடலையும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாலு அவர்கள் அழகாக பாடி காண்பித்தார். மவுனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் இந்தியில் ஸ்ரேயா கோஷலும் தமிழில் பாலு அவர்களும் பாடினார்கள். இந்த பாடல் பாடும் போது இடையில் ஒலியில் பிரச்சனை வர டக் என்று நிறுத்தி விட்டு அந்த பிரச்சனையை சரி செய்த பிறகே அந்த பாடல் மொத்தமாக பாடினார்கள். இது போல் மற்றொரு பாடலிலும் இசை குழுவினர் சரியாக இசை அமைக்காத தால் அந்த இடத்திலேயே அதை சரி செய்து மீண்டும் பாடினார்கள்.





திடிரென்னு மேடையில் தோன்றிய கார்த்திக் ராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் ராஜாவை கலாய்சி (கொஞ்சம் ஒவராகவே) எடுத்துட்டாங்க. யுவன் "என் பாட்டை பாடுங்கன்னு" சொல்ல ராஜாவும் உடனே அறியாத வயசு புரியாத மனசுன்னு பாடி முடிக்க. "இது இல்ல என் பாட்டுன்னு சொல்ல..நம்ம பாட்டு பாடுங்கன்னு சொல்ல டேய் இப்ப எதுக்கு இங்க வந்து நீ கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு" ராஜா கிண்டலுக்கு சொல்ல "இல்ல நீங்க பாடினால் தான் நாங்க போவோம்ன்னு" யுவனும், கார்த்திக்கும் அடம் பிடிக்க அப்படி என்ன பாட்டுய்யா பாட சொல்றான்னு நமக்கும் ஆர்வத்தை கிண்டி விட கடைசியாக மூன்று ராஜாக்களும் சேர்ந்து ராஜா ராஜாதி ராஜனிந்த இந்த ராஜான்னு பாட ரசிகர்களின் மனதில் மூன்று ராஜாக்களும் ராஜியம் செய்தார்கள். அதில் வரிகள் மாற்றி இந்த காலத்துக்கு பாப், ராக், ஜாஸ் தான் பிடிக்கும்ன்னு யுவன் சொல்ல வேண்டா சாமி அதெல்லாம் எனக்கு வராதுன்னு ராஜா ஒரே கும்புடு போட மொத்தத்தில் மூன்று ராஜாக்களும் கலக்கிட்டாங்க.

வந்திருந்த சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும் ரெண்டு மலையாள பாடல்கள் பாடினார்கள்.

பாலு சாரிடம் குஷ்பு ஒரு பாடல் கேட்க நான் அந்த பாட்டு பாடினால் "நீ ஆடவேண்டும் என்று சொல்ல அய்யோ இங்கையா ராஜா சார் அடி பின்னிடுவாருன்னு சொல்ல உடனே பாலு சார் ராஜாவை பார்த்து நீ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்திடுன்னு சொல்ல". அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா.



வழக்கமாக பாலு சார் ராஜாவை புகழ்ந்து சொல்லிட்டு போக வழக்கமாக ராஜா சார் அதெல்லாம் இல்லன்னு சொல்ல "இல்ல அதெல்லாம் உண்மை தான்னு மேடைக்கு பின்னாடி இருந்து பாலு சார் குரல் கொடுக்க". நீ இங்க வா முதல்லன்னு தன் அருகில் நிற்க வைத்து 24 மணிநேரமும் இசையாகவே வாழ்ந்த உலகத்தில் இசை மேதைகளில் பெயர்களை எல்லாம் சொல்லி இவர்களின் முன்னால் நான் எல்லாம் தூசுன்னு ராஜா சொல்ல. "அந்த மேதைகளின் வரிசையில் இந்த தூசுக்கு தான் உட்காரும் தகுதியிருக்கிறதுன்னு ஒரே போடக போட்டார் பாலு சார்."

ஜெயராம் அவர்கள் கமல், ரஜினி, ஜோசுதாஸ் போல மிமிக்கிரி செய்து காண்பித்து மக்களை கலகலப்பாக்கி கொண்டுயிருந்தார்.

மனோவும், சித்ரா அவர்களும் மதுரை மரிக்கொழுந்து வாசம்ன்னு பாடல் பாட அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர வைத்தனர். ஓ பிரியா பிரியா என்ற பாடலை கேட்கும் போது இன்றைய இசை அமைப்பாளர்கள் மனோவின் குரலை தவரவிட்டுவிட்டார்கள் என்ற ஒரு ஏக்கம் வர வழைத்தது.

எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் இந்த மேடையிலும் ரசிகர்ளின் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார்.

சங்கீத ஜாதி முல்லை பாடல் பாடும் போது எப்படிப்பா இந்த ஆளு இவ்வளவு வருஷம் கழிச்சும் அதே மாதிரி, ஏற்ற இறக்கத்துடன் பாடுறாருன்னு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார் பாலு சார்.

பவதாரணி, ஸ்ரேயா கோஷல், திப்பு, மஞ்சரி இவர்கள் எல்லாம் இன்னும் பயிற்சி தேவை என்று சொல்ல வைத்தார்கள். நடுவில் நடுவில் இசையோடு பாடாமல் பாடல் வரிகளை மறந்து மறந்து முழித்தார்கள். அதிலும் திப்பு செய்த தப்பை ராஜா மீண்டும் திருத்தி எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதே இடத்தில் இருந்து மீண்டும் அவரை பாட வைத்தார்.

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ என்ற பாடலை பாடும் போது தந்தைக்கு மகன் தப்பாம பிறந்திருக்கான்யான்னு சொல்ல வைத்தார் விஜய் ஜேசுதாஸ்.

ராசாத்தி உன்னை காணதா நெஞ்சுன்னு பாடலை ஜெயசந்திரன் இல்லாத குறையை மது பாலகிருஷ்ணன் அழகாக நிறைவேற்றினார்.

அம்மாக்கள் பாட நிறைய தாலாட்டு போட்டு வச்சுட்டாரு ராஜா, அப்பாக்கள் பாட ஒரு சில தாலாட்டு தான் போட்டுயிருக்காரு அதுல ஒன்னு தான் தெண்பாண்டி சீமையிலே அந்த பாடலை ராஜா எந்த வித வாத்திய ஒலியும் இல்லமால் மிக அற்புதமாக பாடினார். அவரே விரும்பி பாடினாரா இல்ல குளிரில் நடுங்கும் தன் ரசிகர்களை தாலாட்ட நினைத்து பாடினாரோ என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

இசைக்குழவினர் அனைவரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். ஒரு சில இடங்களில் தவறு நடந்தது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் மேடையில் இசை அமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதிலும் தவறு நடந்த இடத்தில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து வாசிக்க சொல்லும் போது எந்தவித பிசக்கும் இல்லாமல் மிக சரியாக வாசித்தார்கள். புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)



இவரு தான் அருள்மொழி



நிகழ்ச்சி முடியும் நிலையில் பெரும் பாலான மக்கள் அரங்கத்தில் இருந்தனர். ஜெயராம் ஒன்னு சொன்னாரு நானும் இதே ஷார்ஜா அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கேன் 10 மணி மேல அந்த கடைசியில யாரும் இருக்க மாட்டாங்க சார். இப்போ மணி 11 ஆகுது இன்னும் இவ்வளவு பேரு இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் நீங்க தான் சார். உண்மையிலும் உண்மை அது இளையராஜா என்ற ஒரு பெயருக்கு உள்ள சக்தியை நிறுப்பித்து கண்பித்தது கூட்டம்.

நிகழ்ச்சியல் இடம் பெற்ற பாடல்கள்

இது சங்கீதா திரு நாளே - பவதாரணி - இதில் பாடல் வரிகள் மாற்றி பாடினார்கள்

இளைய நிலா பொழிகிறதே - பாலு சார்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா

மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி

காற்றில் எந்தன் கீதம் - ஸ்ரேயா கோஷல் (ஜானகி அம்மா குரலில் கேட்ட பாடல் இந்த அம்மணி எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார்)

பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனாசர்கம்

சென்பகமே சென்பகமே - மனோ

நான் தேடும் செவந்தி பூவிது - ராஜா, மஞ்சரி

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாலு சார் - சித்ரா

மாசி மாசம் ஆளான பொண்ணு - விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், மஞ்சரி

இளங் காத்து வீசுதே - திப்பு, ஸ்ரேயா கோஷ்ல்

நின்னு கோரி வரனும் - சித்ரா

சொர்கமே என்றாலும் - ராஜா, சதனாசர்கம் - இதில் வரிகள் மாற்றி பாடினார்கள் அட்டகாசமாக இருந்துச்சி

அந்தி மழை பொழிகிறது - பாலு சார், சித்ரா

என்ன சொல்லி பாடுவதோ - சதனாசர்கம் - செந்தில் (இசை குழுவில் ஒருவர்)

மதுர மரிக்கொழுந்து வாசம் - மனோ - சித்ரா

மன்றம் வந்த தென்றலுக்கு - பாலு சார் - ஸ்ரேயா கோஷ்ல்

அடி ஆத்தாடி - ராஜா - சித்ரா

சுந்தரி கண்ணால் ஒரு சோதி - பாலு சார், சித்ரா (இசை குழுவினார் அட்டகாசமாக வாசித்த பாடல் இது)

மாங்குயிலே பூங்குயிலே - பாலு சார், சித்ரா

ஆகாய வெண்ணிலாவே - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி

ஒ பிரியா பிரியா - மனோ, சித்ரா

அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பாலு சார்

தென்றல் வந்து தீண்டும் போது - ராஜா, சித்ரா

சங்கீத ஜாதி முல்லை - பாலு சார்

அறியாத வயசு - ராஜா

ஒ இந்த காதல் நெஞ்சசை சுடுக்கிறதே - யுவன்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - ராஜா, கார்த்திக், யுவன் - வரிகள் மாற்றி பாடிய பாடல்

தெண்பாண்டி சீமையிலே - ராஜா

எந்து பரஞ்சாலும் நீ எந்தன் - சித்ரா - மலையாளம்

ஒரு சிரிகண்டால் மொழிகண்டால் அது மதி - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி - மலையாளம்

ராக்கம்மா கையை தட்டு - பாலு சார் - இந்த பாடல் ஏன்தான் மேடையில் பாடினார்களோன்னு இருந்துச்சி ஒரே அருதல் பாலு சார் குரல்

சில பாடல்கள் மறந்து போயிடுச்சிங்க மக்களே

எல்லாம் முடிஞ்சி ஒரு பெரிய நன்றியை சொல்லிட்டு கிளம்பும் போது நேரம் 12.30. நல்ல குளிர், மனசு நிறைஞ்சி இருந்தது, ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறி விட்ட ஒரு திருப்தி.



மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவுகள்

பினாத்தல்கள் - எப்பவும் நீ ராஜா

குசும்பன் - அமீரகத்தில் இளையராஜா

Tuesday, November 13, 2007

அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு....










இனி யாரைப்பற்றி எப்படி என்ன எழுதுவது என்ற யோசனையில் அபி அப்பா தன் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.


"அபி பாப்பாவுல ஆரம்பிச்சு தமிழ்மணத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்க அத்தனை பேர பத்தியும் மொக்க போட்டாச்சு.. அதுவுமில்லாம தங்கியிருக்கற இடத்துல இருந்த பூங்காவுலேந்து தமிழ்மணம் பாக்காத அனானி வழியா ஆல் இன் ஆல் அழகுராஜா வரைக்கும் புராணம் கொடுத்தாச்சு. இன்னிக்கு பேசாம ரூம்ல தங்கியிருக்கற மூட்டப்பூச்சிய பத்தி எழுதிட வேண்டியதுதான்."


என்று தனக்குத்தானே பேசியபடியே மெத்தையின் மேல் ஓட முயன்ற மூட்டைப்பூச்சியை நசுக்கி கொன்றுவிட்டு இதுக்கும் சேர்த்து பதிவுல மன்னிப்பு கேட்டுக்கலாம் என்று சுய சமாதானம் சொல்லிக்கொண்டார்.இந்த சமயத்தில் முகமூடி அணிந்த இரு உருவங்கள் அபி அப்பாவை தூக்கிச்செல்ல, "கொலை... கொலை என்று கதற ஆரம்பித்தார்.

முகமூடி அணிந்த ஒரு உருவம், "இந்த சமயத்துல தமிழ்ல இப்படி கத்தறது தப்பு. இதுக்கு நீங்க 'அய்யோ கடத்துறாங்க' அப்படின்னு கத்தலாம். இல்ல தூக்கிட்டு போறானுங்களேன்னு கத்தலாம். அதுவுமில்லேன்னா யாருக்கும் தெரியாம உங்களை தூக்கிட்டு போறதால இதை திருட்டுன்னு கூட சொல்லலாம். மனித திருட்டைப்பத்தி போஸ்னோலோவேக்கியா டைரக்டர் எடுத்த அந்த இருட்டு படத்துல இப்படி கூட நடந்தது. அப்ப அவன் என்ன சொல்லியிருப்பான்னு நான் இப்ப உணர்றேன். அன்னைக்கு எனக்கு அது உளறலா தெரிஞ்சதுக்கு காரணம் கண்டிப்பா மது மட்டும் இல்லைன்னு நான் சொல்றத கேட்டு எத்தன பேரு என்னை கெட்டவன்னு நினைப்பாங்கன்னு தெரியல... இருந்தாலும்...."

அபி அப்பா - "பேசறது சுத்தமா புரியல... அப்போ இது அய்யனார்தான்."

மற்றொரு உருவம், "ஹைய்யா...! அபி அப்பா உன்னை கண்டுபிடிச்சுட்டாரு... நீ அவுட்டு"

அபி அப்பா அதிர்ச்சியாகி, "அட ஆண்டவா! இது குசும்பனாச்சே... என்ன கொடும சரவணன் இது" அதற்குள் இடம் வந்துவிட, அபி அப்பாவை இறக்குகின்றனர் அய்யனாரும், குசும்பனும்.
அபி அப்பா அந்த இடத்தை ஏறிட்டு பார்க்க தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. இவருக்காக ஏற்கனவே அங்கு தருமி சார், தம்பி, கோபி, சென்ஷி, மின்னல், குட்டி பிசாசு, கண்மணி டீச்சர், டாக்டர் டெல்பின், மங்கை, மை பிரண்டு, காயத்ரி மற்றும் இம்சை அரசி...

அபி அப்பா - "அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே.."

குசும்பன் - "இல்லியே... உங்க கண்ண தொறந்து வச்சுதானே கொண்டு வந்தோம். இன்ஃபாக்ட் நாங்க முகமூடி போட்டுக்கிட்டு வந்ததால எனக்குத்தான் இப்ப லைட்டப் பாத்தா லைட்டா கண்ணு வலிக்குது"

கண்மணி டீச்சர் பெருமிதமாக, "சபாஷ் அய்யனார் & குசும்பா.... சொன்னா மாதிரியே கரெக்டா கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க"

அபி அப்பா, "கூட்டிக்கிட்டு வரல டீச்சர். தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க" மனதிற்குள், 'எல்லோரும் தனித்தனியா வந்தாலே நம்மளை போட்டு வாங்குவாங்க. இத்தன பேரும் இங்க ஒண்ணா சேர்ந்திருக்காங்க. அதுலயும் நம்மள தூக்கிட்டு வந்து... ம்ஹூம்.... இது கண்டிப்பா நம்ம நல்லதுக்கா தெரியல". அதற்குள் கண்மணி அக்கா வாழ்க என்று மைபிரண்டு கோஷம் எழுப்ப துவங்க, இந்த சமயத்தில் இதற்கு சேர்ந்து கோஷம் போடுவதா வேண்டாமா என்று இம்சை அரசியும், காயத்ரியும் குழம்பினர்.

இந்த கோஷம் கேட்டு சென்ஷி, கோபியிடமும் மின்னலிடமும் மங்கை அக்கா வாழ்க என்று கோஷம் போட சொல்லி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தான்.

இந்த வம்பளப்பை கண்ட டெல்பின் மேடம், "நாம இங்க வந்திருக்கறது வாழ்க கோஷம் போட இல்ல. நமக்கு இப்ப அத விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. தம்பி நான் உன்கிட்ட சொன்ன விஷயம் என்னாச்சு?"

தம்பி - "பாவனா படம் போட்ட டிசர்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தேன். அது இது வரைக்கும் என் கையில் வந்து சேரல. ரோட்டுல ஒட்டி வச்சிருந்த ஷ்ரேயா போஸ்டர 18 பேரு நின்னு உத்துப்பாத்துட்டு போனாங்க."

டெல்பின் - "தம்பி..!"

தம்பி - "இதனாலதான்... இதனாலதான்.. பாவனா என் முன்னாடி வந்து என்னை தம்பின்னு கூப்பிட்டா என் நிலைமை என்ன ஆகுறது... அதனால நான் இன்னிலேந்து மச்சான்னு பேர மாத்திக்கப்போறேன். நீங்க சொன்ன வேலையையும் செஞ்சுட்டேன்."

டெல்பின் - "அத மட்டும் தனியா சொல்ல மாட்டியா...!? கூட பாவனாவ வேற இழுத்துக்கறே"

குட்டி பிசாசு - "ஆஹா! மச்சான் கதிர்... மச்சான் கதிர்... சும்மா பேர சொன்னாலே கிக்கு ஏறுதுல்ல.."

மங்கை - "என்னோட அடுத்த படத்துல பாவனா ஹீரோயினா நடிச்சா கதிர்தான் ஹீரோன்னு நான் முடிவு பண்ணிட்டேன்"

அபி அப்பா இந்த மேட்டரை அவசரமாக நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே புகுந்த கண்மணி அக்கா, "என்ன இப்படி எல்லோரும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க. அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க.. ம்.. கோபி என்னப்பா நீயும் இப்படியே நிக்குற!?"

கோபி சற்று விழித்துவிட்டு, "ஸாரி டீச்சர்" என்று சொல்லி சடாரென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கண்மணி - "ஏம்ப்பா என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க.. உங்க அலும்பு தாங்க முடியலையே"

கலங்கிய கண்களுடன் அருகில் வரும் இம்சை அரசியைப்பார்த்து, "எனக்கு உன்னைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கும்மா. என் மனசு கஷ்டப்படுதுன்னு நீ கண்கலங்குறே பார்த்தியா.. அதான் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம்"

இம்சை அரசி - "இல்ல டீச்சர், காயத்ரி விரலால என் கண்ண குத்திட்டா..!"

பேச்சினிடையே புகுந்த மின்னல், "நடுவிரல், கட்ட விரல், சுண்டு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல் தெரியும்.. அது என்ன புதுசா காயத்ரி விரல்?"
டெல்பின், மங்கை, கண்மணி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி,

டெல்பின் - "இவங்களை அடக்கணும்னா அது ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும்"

மங்கை - "இந்த சீன் நிறைய படத்துல வந்திருக்கே... இத மறுபடி வச்சா நல்லாருக்காது.. இப்பவெல்லாம் இந்த மாதிரி சீனுக்கு வடிவேலுவும், விவேக்கும்தான் எண்ட்ரி ஆகுறாங்க. வேற ஏதாவது சீன் இருந்தா சொல்லுங்க"

கண்மணி - "எனக்கு புரிஞ்சிடுச்சு.. அதாவது நான் புரிந்து கொண்டேன்" என்றபடி சற்றுத்தள்ளி நடக்கும் களேபரங்களில் ஈடுபடாமல் தன் செல்போனில் விடாமல் பேசியபடி இருந்த முத்துலட்சுமியின் கையில் போனை பிடுங்கி விட்டு மைக்கை கொடுத்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்றிவிட்டார். போனில் பேசிக்கொண்டிருந்த ஞாபகத்தில் முத்துலட்சுமி மைக் முன், "சரி... நான் அப்புறமா பேசறேன்.. பை" என்று சொல்ல கூட்டத்தில் பயங்கர கைதட்டல் தொடங்கியது.

சென்ஷி சத்தமாக - "இரண்டு விநாடிகளில் மேடைப்பேச்சை முடித்து புதிய சாதனை படைத்தார் - எங்கள் அக்கா முத்துலட்சுமி"

கண்மணி மனதிற்குள், "இதுக்கு நானே தேவல போல..."

கண்மணி அக்கா மேடை ஏறி முத்துலட்சுமியின் காதில் ரகசியமாய் கூற, சட்டென பிரகாசமானது முத்துலட்சுமியின் முகம், "எனவே இங்கு சேர்ந்திருக்கும் பாசக்கார குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நமது பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், தன் பாச மகளின் பெயரால் பதிவெழுதுபவரும், அடுத்த மகனின் பெயரில் புதுப்பதிவு ஆரம்பிக்க நினைப்பவரும், நகைச்சுவையை அளவில்லாமல் கொடுத்துவிட்டு இப்போது மொக்கை போடுபவரும், யார் மேலும் கோபம் கொள்ளாதவரும், யாராவது திட்டினாலும் ரமண மொழியை மனதில் கொண்டு அதை பணிவோடு ஏற்றுக் கொள்பவரும், தீபா வெங்கட் பெயரை அடிக்கடி ஜொள்ளுபவரும், சிறந்த மனிதரும், இந்தியக் குடிமகனும், தமிழனும், மாயவரத்துக்காரருமாகிய நமது அபி அப்பா சுமார் 40 வருடங்களுக்கு முன் இதே தினத்தில்தான் பிறந்தார் என்பது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி.. அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது செல்ல மகள், அன்பு மகன் மற்றும் அவரது தங்கம்மாவோடு பாசக்கார குடும்பத்து உறுப்பினர்களாகிய நாமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் மீது யாரும் கோபம் இருந்தாலும், கோபத்தை இன்று மட்டும் யாரும் அவரிடம் காட்ட வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன். அவர் உயரத்திற்கு கேக்கை வாங்கினால் அதை வெட்ட அவர் மிகவும் சிரமப்படுவார் என்று தோன்றியதால் அவர் கத்தியால் வெட்ட முடிந்த கேக்கை மட்டும் வாங்கி வைத்துள்ளோம். சிரமப்படாது கேக்கை வெட்டி அனைவருக்கும் பங்கு போட்டு கொடுக்க வருமாறு அபி அப்பாவை அன்போடு வரவேற்கிறோம்"

கோபி - " இந்தாங்க்கா சோடா"

அபி அப்பா கண்கலங்கி மேடையேறி கண்மணி டீச்சர் அருகில் வர, "உங்களுக்கு என்னாச்சுங்க.. உங்க கண்ணையும் யாராச்சும் குத்திட்டாங்களா?"

டெல்பின் - "சேச்சே... இதுக்கு பேரு ஆனந்த கண்ணீரும்மா"

மங்கை - "ஓ அப்படியா..! அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல கேக்க கட் பண்ணுங்க"

அபி அப்பா - "என்னங்க இதுல இவ்வளவு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கீங்க... எனக்கு அத்தனை வயசாகலை"

மங்கை - "உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. யாரு மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்படியே எல்லாத்தையும் வச்சிட்டோம். நீங்க எல்லாத்தையும் பத்த வச்சு, ஊதி அணைச்சுட்டு கேக்க வெட்டுங்க போதும்"

இது ஆகற விஷயமில்லை என்ற முடிவுக்கு வரும் அபி அப்பா, "மங்கை அக்கா.... செண்ட்டிமெண்ட்டா பார்த்தா எரியற விளக்க அணைச்சிட்டு பர்த்டே கொண்டாடனா அது அவ்ளோ நல்லதா படல. அதனால நம்ம குடும்பத்துல எல்லோரும் எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தத நான் பத்திரமா எரிக்காம வச்சுக்கறேன்"

அய்யனார் - "என்ன வேணாலும் செய்ங்க.. முதல்ல கேக்க வெட்டுங்க"
அபி அப்பா கேக்கை வெட்ட துவங்க, கோரஸாய் குடும்பத்தினரின் குரல்.......



"அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

நவம்பர் 13ந்தேதி இன்னைக்கு..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்...."




சிறப்பு துளிகள்:

விழாவில் அபி அப்பாவை வாழ்த்தி மற்றவர் உதித்த வார்த்தை முத்துக்கள்

டாக்டர் டெல்பின்:- என்னைக்கும் நல்லாயிருக்கணும்

இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்

காயத்ரி:- அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் அழுகாச்சி கவிதை எழுதப் போவதில்லை

மை ஃபிரண்ட் ; மீ த பர்ஸ்ட்டு பல்லாண்டு வாழ்க ....வாழ்த்துக்கள்

தம்பி:- எங்கள் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு விருந்தினராக பாவனாவை வரவழைக்காதது யார் சதின்னு எனக்கு தெரியல

அய்யனார்:- எவ்வளவோ சொல்லணும்னு தோணுது. இப்ப நான் என்ன சொல்றதுன்னு எனக்கே புரியாததால நான் வாழ்த்த மட்டும் சொல்லிக்கறேன் (பயங்கர கைதட்டல்)

மின்னல் ; இங்க ஒர்ஜினலா சொல்லனுமா அனானி எல்லாம் கிடையாதா சரி ஓகே பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா

குட்டி பிசாசு ; அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நான் பதிவு எழுத போகிறேன். வாழ்த்துக்கள் அண்ணே

குசும்பன் ; ன்றேகக்லில்சொ ம்டுட்ம தத்ழ்வா லதாதயாரிபு.....

அபி அப்பா ; யோவ் என்னையா சொல்லற திட்டுறது கூட புரியுர மாதிரி திட்டுய்யா...

குசும்பன் ; அய்யனார் சொன்னதை அப்படியே திருப்பி படியுங்கள்

மை ஃபிரண்ட் ; யப்பா சாமி ......பதிவுக்கு தான் எதிர் பதிவுன்னா வாழ்த்துலையுமா ! ! !

கண்மணி:- அவரது பிறந்தநாள் பரிசாக ஒரு புது டெம்ப்ளேட்டை அவருக்கு பரிசாக அளிக்கின்றேன்

கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)

சென்ஷி:- //கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)// டபுள் ரிப்பீட்டே :))))

முத்துலட்சுமி: நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பேச ஆரம்பிச்சு அண்ணனோட அடுத்த பிறந்தநாள் வந்துடுச்சுன்னு யாரும் சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயத்துல நான் இப்ப பேச்ச நிறுத்திக்கறேன்

மங்கை:- சென்ஷி, கோபி ரிப்பிட்டே போடுறத இன்னியோட நிறுத்திக்குங்க... அவ்வளவுதான் சொல்வேன்

கோபி & சென்ஷி ; அதுக்கும் ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

எழுதி ஆடியது ; கோபி & சென்ஷி

Thursday, November 01, 2007

குளிரும் குழந்தைகளும்...



என்ன மக்களே எல்லாம் எப்படி இருக்கிங்க நல்லா தான் இருப்பிங்க இதுல என்ன சந்தேகம் கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! எல்லாம் தீபாவளிக்கு ரெடியாகிட்டு இருப்பிங்க. இங்க வெயில் கொஞ்ச கொஞ்சமாக குறைஞ்சி குளிர் பின்னி பெடலேடுக்க ஆரம்பிச்சிடுச்சி போன வாரத்துல நைட்டு வேலை முடிச்சிட்டு இது ஒரு பொன் காலை பொழுதுன்னு பாட்டு பாடிக்கிட்டே வெளிய வந்தா சும்மா நரம்புல ஊசி போடுற மாதிரி
குளிரு, கூட இருந்த மச்சி "டேய் இங்க தானே ஒரு பாலம் இருந்திச்சி எங்கடா அது அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா. டேய் நல்லா பாரு டா அது அங்க தான் இருக்கு" பாலம் மறைக்கும் அளவுக்கு பனி. குளிருக்கு விரல்கள் இல்லாமலே பல் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. சரி இந்த இதமான குளிருக்கு டீ குடிச்சிட்டு கிளம்பலாமுன்னு டீயை நானே போட்டு அதை நானே குடிச்சிட்டு (நானே போட்ட டீங்க நல்லாயிருந்திச்சி....வேற வழி)
அந்த குளிர்ந்த சுத்தமான காற்றை மூச்சை நல்லா இழுத்துவிட்டு புல் எனர்ஜீயை ஏத்திக்கிட்டு ரூமுக்கு போவதற்க்கு வண்டியில ஏறி ஜன்னல் சீட்டை பிடிச்சி உட்கார்ந்துட்டு எல்லோரும் வந்ததற்க்கு பிறகு ஸ்டார்ட் த மீயூஸிக்குன்னு வண்டி கிளம்புச்சி.

வண்டி பாலத்து மேல ஏறி யூடன் எடுத்து திரும்பும் போது பக்கத்துல ஒரு வண்டி.
அந்த வண்டிய முழுக்க சந்தோசமும் சிரிப்பும், பெருசா எந்த ஒரு கவலைகள் எதுவும் இல்லாத டாக்டர்ஸ், இன்ஜீனியர்ஸ், வியாபாரிகள் காந்தங்கள், ஒன்னு ரெண்டு நடிகர் நடிகைகள் கூட இருந்தாங்க. என்ன இவுங்க எல்லாம் இந்த நிலைக்கு வருவதற்க்கு இன்னும் 15, 18 வருஷம் ஆகும். அந்த வண்டி முழூக்க குழந்தைகள் ஒன்னு ஒன்னும் என்னமா இருக்குதுங்க அழகு அழகுன்னா அழகு அம்புட்டு அழகு. ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு அழகு அவுங்களை பார்த்தவுடன் அவுங்க சிரிப்பும் மகிழ்ச்சியும் நமக்கும் தொத்திக்கிச்சி. வண்டியில சேட்டை பண்ணிக்கிட்டே வருறாங்க அவுங்களை பார்த்து ஹாய்ன்னு கை காட்டினால் பதிலுக்கு அவுங்களும் ஹாய்ன்னு கையை காட்றாங்க. இதை எல்லாம் நம்ம மச்சிகளையும் பார்க்க சொல்லமுன்னு நினைச்சி திரும்பி பார்த்த அவனவன் ஜன்னல் முன்னாடி நின்னுக்கிட்டு வித்தை காட்டிக்கிட்டு இருக்கானுங்க அடப்பாவிகளா ஆரம்பிச்சிட்டிங்களா நான் தான் லேட்டான்னு நானும் ஜோதியில ஐக்கியமாகிட்டேன்.

அதுல ஒன்னு காலங்காத்தால எழுப்பி ஏண்டா என்னை இம்சை பண்ணி இந்த மூட்டையும் கொடுத்திங்கன்னு தூங்கிக்கிட்டு வருது அந்நேரம் பார்த்து இன்னொன்னு தொப்புன்னு வந்து அது மேல விழுது அது முடியை இது பிடிக்க இது சட்டையை அது பிடிக்க அட அட என்னமா சண்டை போடுதுங்க! சண்டையிலும் ஒரு அழகு இருக்குன்னா அது இந்த சண்டை தான். இதை பார்த்த மச்சி ஒருத்தன் அந்த முடியை பிடிக்குற பெண்ணு தான் ஜெயிக்குது என்ன பெட்டுன்னு கேட்குறான். ஜன்னல் முன்னாடி நாலு நின்னுக்கிட்டு சிரிச்சிக்கிட்டே வருதுங்க எதுக்கு சிரிக்குதுங்கன்னு எங்க யாருக்கும் தெரியுல. அதுல ஒன்னு வெட்கப்பட்டு சிரிக்கும் போது அப்படியே ஒடிபோயி தூக்கிக்கலாம் போல இருக்கு. இதுல ரெண்டு எங்களை பார்த்து ஏதோ கமெண்டு அடிச்சி வேற சிரிக்குதுங்க என்னாத்த பெருசா சொல்லியிருக்க போவுதுங்க என்ன இவுங்க எல்லாம் லூசா இப்படி நம்மளை பார்த்து சிரிச்சிக்கிட்டே வரானுங்கன்னு சொல்லியிருக்கும். கடைசி சீட்டுல ஒருத்தன் அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான் அவன் பேசுறதை எதிரில் உள்ளவன் கேட்குறானா இல்லையான்னு கூட தெரியமா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான்.

அந்த வண்டி தான் அவுங்க உலகம் அங்க யாரும் எதுவும் சொல்ல முடியாது கேட்கவும் முடியாது வாழ்க்கையின் அந்த நிமிஷத்தை அவுங்க இஷ்டம் போல அனுப்பவிச்சிக்கிட்டு வராங்க. அந்த வண்டியை விட்டு இறங்கியதும் இதே போல சந்தோசம் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இதை எல்லாம் பார்த்து பொறாமை படுவதா இல்ல இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி அவுங்களும் இந்த இயந்திர உலகத்துல இயந்திரமாக போறதை நினைச்சி வருத்தப்படுவதான்னு தெரியல. குழந்தைகள் தெய்வங்கள்ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க நாள் முழுக்க இயந்திரங்களோடு இயந்திரமாக இருந்திட்டு சில நிமிஷங்கள் எங்களுக்குள் இருத்த கவலைகளை மறக்க செய்து சிரிக்க வச்ச அந்த குழந்தைகள் எல்லாம் உண்மையிலே தெய்வங்கள் தான்.

ஒரு சிக்கனலில் எங்க ஊழியரை இறக்கி விடுவதற்க்காக எங்க வண்டி நின்னுடுச்சி அந்த நேரத்துல குழந்தைகள் வந்த வண்டி எங்களை கடந்து போயிடுச்சி குழந்தைகள் எல்லாம் சிரிச்சிக்கிட்டு டாட்டா காட்டிக்கிட்டு போயிட்டாங்க. "விரும்பாண்டி" படத்துல கமல் ஒரு வசனம் சொல்லுவாரு "சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு" அப்படி தான் இருந்திச்சி அந்த குழந்தைகள் எங்களுக்கு கொடுத்த சந்தோசம்.






கண்டிப்பா நீங்களும் சிரிப்பிங்க


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



டிஸ்கி: அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல

Monday, October 22, 2007

வேற வழியில்ல அதனால இப்படி....




அவளும் அப்படி !



இவளும் இப்படி !


என்ற பதில்களில்


மூழ்கி "நீயும் இப்படி"


என திகைத்தேன்





அவர்கள் இப்படி தான் !

இவர்கள் அப்படி தான் !

என்ற பதிலில்கரை

இறங்கினால்

நானும் இப்படியே


இருக்கலாமோ

என குழப்பினேன்


நன்றி : ஏன் அப்படித்துவம்


டிஸ்கி : இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா சூடானில் இருக்கும் பதிவரை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல..

Tuesday, September 18, 2007

நாங்களும் ஓட்டுவோம்ல....




இது கொசுவத்தி பதிவு மக்கா...

நம்ம சின்ன அம்மிணி அக்கா சமீபத்தில் சைக்கிள் ஓட்டியதை பத்தி பதிவா போட்டுயிருந்தாங்க, அதை படிச்சதும் நான் சைக்கிள் ஒட்டியது ஞாபகத்துல வந்துடுச்சி.
(சந்தோஷமான விஷயங்களை எல்லாம் இப்படி யாராவது ஞாபகப்படுத்தனாதான் உண்டு)

கொசுவத்தியை அப்படியே சுத்திக்கிட்டு போனா ஒரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டிவருதுன்னு நம்ம கார்த்திக் டவுசர் போட்டுக்கிட்டு பாட்டு பாடுவரே அதே மாதிரி நானும் டவுசர் போட்ட காலத்துல போயி நிறுத்துறேன்.

"புள்ளையா இது..."

"சனியனே..."

"கிரவுண்டுல போயி ஓட்ட வேண்டியது தானே..."

"இதுங்களுக்கு லீவு விட்டதும் விட்டாங்க நம்ம காலை ஒடிக்குதுங்க..."

ச்ச நிறுத்துன இடம் சரியில்லைங்க சைக்கிள் ஓட்ட பழக்கும் போது வாங்கிய திட்டுக்கள் தான் முதல்ல ஞாபகத்துக்கு வருது (இதெல்லாம் என்ன பெருமையா கடமை டவுசர் போட்ட காலத்துல ஓட்ட கத்துக்கிட்ட ஒவ்வொருத்தரோட கடமை) கிட்ட தட்ட எல்லோரும் இந்த மாதிரி திட்டு வாங்கியிருப்பிங்க.

எனக்கு முதல் போணி அப்பா தான். மனுசன் வேலையை முடிச்சிட்டு எப்படா படுப்போம்ன்னு வருவாறு அவரு வந்தவுடனே சைக்கிளை உள்ளே கொண்டுவரதுக்கு முன்னாடி போய்

"அப்பா....அப்பா வண்டியோட்ட கத்துக் கொடுப்பா"

"ம்க்கும் துரைக்கு இது மட்டும் தான் கொரைச்சல் புக்கை எடுத்து படிடான்னா படிக்காதே இதுக்கு மட்டும் தூங்காம முழிச்சிருந்து வந்துடுவியே"....இப்படி எல்லாம் வாயை துறந்து ஒரு நாளும் சொன்னது இல்ல.


"சரி வா ஆரம்பிப்போம்"ன்னு சைக்கிள் மேல ஏத்திவிடுவாரு.

"ப்பா நல்லா பிடிச்சிக்கப்பா.."

"சரிடா....முதல்ல மிதி"

வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு

"முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்"

"சரி அப்ப காசு கொடு"

"இதுக்கு தாண்டா நான் வாயே தொறக்குறதுல்ல"....இந்தா புடின்னு காசை கொடுப்பாரு

காசை வாங்கியவுடன் கால் நேராக தெரு முனையில இருக்குற சைக்கிள் கடையை நோக்கி ஒடி 1 மணிநேரத்துக்கு சைக்கிளை எடுப்பேன். அதுவும் சிகப்பு கலருல ஒரு சைக்கிள் இருக்கும். அது என்ன மாயமோ தெரியல அப்ப எல்லாம் அந்த வண்டியை தவிர வேற எந்த வண்டியும் பிடிக்காது (வேற எந்த வண்டியும் எட்டாதுன்னுங்கிறது வேற விஷயம்)

அந்த சின்ன வண்டிக்கு ஏற்றார் போல சின்னதாக கேரியர் கூட இருக்கும். அந்த வண்டி எந்த கம்பெனி வண்டின்னு அந்த கடைக்காரனுக்கே தெரியாது அந்த அளவுக்கு ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு ஷேப்புல இருக்கும்.

"அண்ணா சைக்கிள்ள காத்து கொஞ்சம் கம்மியாருக்கு"...

"விழுந்துவார்ரத்துக்கு இதுபோதும் போடான்னு" சைக்கிள்கடைக்காரனின் வாழ்த்து செய்தியோட வண்டி மேல ஏறி வுட்கார்ந்து, பக்கத்துல இருக்குற கல்லுமேல ஒரு காலை வச்சி இன்னொரு காலால சைக்கிள் வலது பெடலை ஒரு மிதி. மிதிக்கிறதுக்கு முன்னாடி பெல் எல்லாம் அடிச்சி ஊருல இருக்குற எல்லா சாமிக்கும், மக்களுக்கும் நான் சைக்கிள் ஓட்டுறதை சொல்லிடுவேன்.

அப்புறம் தான் இருக்கு விஷயமே கை ரெண்டும் மைக்கல் ஜாக்சான் டான்சு ஆடும் பாருங்க அப்படி ஆடும். என் ஆட்டத்தை பாக்குறதுக்குன்னே எங்கிருந்து தான் வருவாங்களோ எல்லா வேலையும் வுட்டுட்டு வறவுங்க மேல எல்லாம் ஒரு இடி..."சனியனே புள்ளையா இது..."கிரவுண்டுல போயி ஒட்ட வேண்டியது தானே"..(திட்டாம ராசா பார்த்து ஓட்டுப்பான்னு கொஞ்சுவாங்களா..) ச்ச எப்படியும் நாமாகவே ஓட்ட கத்துக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்குற சமயத்துல தான். ஊரில் இருந்து எங்க பெரியம்மா பையன் வந்தான்.
அண்ணா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுன்னு ஒரு அப்லிக்கேசனை போட்டாச்சி.
சரி சித்தி பையன்னு பாசத்துல சொல்லிக் கொடுத்தான். "டேய் குனியாதடா, நேரா பாரு,
கைய எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுற, எப்ப செஞ்ச பாவமே என்க்கிட்ட மாட்டிக்கிட்டு தலை கீழா நின்னு தண்ணி குடிச்சான் நானும் கீழ எல்லாம் விழுந்து பல சில்லரைகள் எல்லாம் அள்ளி எப்படியோ ஓட்ட கத்துக்கிட்டேன்.

இப்ப கத்துக்கிட்டாச்சி அப்புறம் என்ன ஏதற்க்கெடுத்தாலும் சைக்கிள் தான். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சைக்கிளை வாடகைக்கு எடுத்து சுத்த வேண்டியது தான். எத்தனை நாள் தான் வாடகையில சுத்தறது?. சொந்த வண்டி வேணுமுன்னு அம்மா முலமாக என் அப்லிகேசனை தட்டி விட்டேன். ஒரு செக்கனண்டு BSA SLR வண்டியை சர்வீஸ் செய்து சாவியை கொடுத்தாரு அப்பா.

"முதல்ல பூஜை பண்ணிட்டு வண்டியை எடு..."

"எது இந்த வண்டியையா...அவன்வன் புசுது புதுசா வண்டியை வச்சி சீன் போட்டுக்கிட்டு இருக்கானுங்க செக்கனண்டு வண்டி எல்லாம் எவன் ஓட்டுவான்"

எனக்கு புதுசு தான் வேணும்முன்னு அந்த வண்டியை ரெண்டு நாளா தொடாமல் இருந்தேன். அப்புறம் வேற வழியில்லன்னு அந்த வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த வண்டி இல்லாமா எங்கையும் போறதுல்ல. 5வருஷம் அதே வண்டி தான் வருஷம் வருஷம் சர்வீஸ்க்கு விடும் போதெல்லாம் கடக்காரன் இதுல என்னத்த இருக்குன்னு சர்வீஸ்க்கு விடுறன்னு ஒரு பார்வை பார்பான். அந்ந அளவுக்கு வண்டியை கண்டம் பண்ணிவிச்சிருப்பேன். என் கோவத்தை எல்லாம் அது மேல தான் காட்டியிருக்கேன்.

ஸ்கூல் முடிஞ்ச பிறகு நானும் என் நண்பர்களும் வண்டியை மாத்திப்போம். பிகருங்க முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். எதிர் காத்துல ஏறி நின்னுக்கிட்டு மிதிச்சிக்கிட்டே அந்த காத்தை அனுபவிக்கும் போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அட அட அப்படி ஒரு ஆனந்தம் அதுல. எனக்கு தெரிஞ்சி அந்த வண்டியை ஆயுதபூஜைக்கு மட்டும் தான் சுத்தமா தொடைப்பேன். அதுவும் வீட்டுல கத்து கத்துன்னு கத்திய பிறகு தான்.

என்னை படிக்க வைக்குறதே பெரிய விஷயம்ன்னு நினைச்சிக்ட்டு இருக்குற நிலைமையிலும் என் ஆசையை நிறா ஆசையாக்கக் கூடாதுன்னு எனக்குன்னு சொந்தமா ஒரு செக்கனண்டு வண்டியை தான் வாங்கி கொடுத்தாரு எங்க அப்பா. இது தான் என்னால முடிஞ்சதுன்னு வாய்விட்டு கூட சொல்லியிருக்காரு. அப்படி இருந்தும் கூட எப்போதாவது அப்பாவை ரயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு போயி விடுன்னு அம்மா சொன்னா.."சைக்கிளை ஸ்டாண்டுல போட்டுட்டு போக சொல்லும்மா...எனக்கு வேற வேலையிருக்குன்னு" போயிடுவேன். இன்னிக்கும் யாருமே ஓட்டலனாலும் கூட அந்த வண்டி தூக்கி போடமா என் வீட்டுல ஒரு ஒரமா வச்சியிருக்காரு.

சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.

Friday, August 31, 2007

துணை





பனி பொழியும் அந்த காலை வேலையில் கையில் ஆவிபரக்கும் தேனீருடன் இளையராஜாவின் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை தன்னை மறந்து கேட்டு கொண்டுயிருந்த புஸ்பா ரயில் வரும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தாள்.
தன் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்ட ரயிலை பார்த்ததும் "வந்துட்டியா...கொஞ்சம் நேரம் பாட்டு கேட்கவிடாதேன்னு" செல்லமாக கோவித்துக் கொண்டால்.

எத்தனை தடவை இந்த பாடலை கேட்டிருப்பாள்...எங்க பாடினாலும் அப்படியே நின்னு கேட்டுக் கொண்டுயிருப்பாள். சொன்னால் புரியாத மகிழ்ச்சி அது. அவனுக்காக எத்தனை இரவுகளில் பாடியிருப்பாள். இதோ இப்போது கூட இரண்டு நாள் முன்பு அவன் பிறந்த நாளுக்கு போனில் பாடினாள். புஸ்பாவுக்கு 51 வயதுன்னு பார்ப்பவர்கள் யாரும் சொன்னது இல்லை. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை அந்த புன்னகை தான் அவளுக்கு பலமும் பலவீனமும் கூட.

கோடம்பாக்கத்தில் இருந்து சென்ட்ரலுக்கு தினம் தோறும் பயணம். கிட்ட தட்ட 22 வருஷம் இதே ரயில் பயணம் கொஞ்சம் கூட சலிக்கவில்லை அவளுக்கு. தினமும் புதிது புதுதாக பிறப்பவளுக்கு எப்படி சலிக்கும் இந்த பயணம். ஒரு ரயில் விபத்தில் காதல் கணவனை பலிகொடுத்துவிட்டு கையில் 5 வயது குழந்ததையுடன் தனியாக நின்று வாழ்க்கையை ஜெய்த்தவள். மகன் விஜயனுக்கு இவள்தான் முதல் தோழி. விஜயன் அம்மா என்று சொன்னதை விட புஸ்பா என்று பெயர் சொல்லி அழைத்தது தான் அதிகம். அந்த அளவுக்கு அவன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தானோ அப்படி வாழ வழிவிட்டவள்.

அவன் காதலித்த பெண்கூடவே திருமணம் நடத்திவைத்தால். ரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளி இரவில் "அம்மா எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கு போகிறேன்னு" சொன்னான். ஏர்போர்ட்டில் கூட தன் கண்ணீர் அவன் மனதுக்கு சங்கடத்தை கொடுத்துவிட கூடாது என்பதற்காக கண்ணீருக்கு கூட கட்டளை இட்டு காக்க வைத்தவள். அதற்கு அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில்தான் செழியனை பார்த்தாள். ஏக்கமும் சோகம் கொண்ட முகத்துடன் இவளை பார்த்த படி உட்காந்துயிருந்தான்.

--------------------------------------------------------------------------------------------

கையில் இருந்த தேனீரை குடித்த படியே செல்போனில் FMஜ அழுத்தினான் செழியன்.
"பிள்ளை நிலா" பாடல் முடியும் தருணம் "ச்ச பாட்டு முடிய போகுது மிஸ் பண்டிட்டமே"ன்னு ஒரு சின்ன எரிச்சலுடன் ரயிலுக்காக காத்துயிருந்தான்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பீச்டேஸ்சனுக்கு தினம்தோறும் அவனது பயணம். சரியாக பெண்கள் கம்பார்ட்மென்ட்டுக்கு அடுத்த கம்பார்ட்மென்ட்லில் வலதுபுற ஜன்னலுக்கு அடுத்த இருக்கை தான் அவனுக்கு பிடித்த இருக்கை, அதுவும் இந்த ரெண்டு வருடங்களாகத்தான்.
இரண்டு நாளைக்கு முன்பு தான் தன்னோட 27வது பிறந்ந நாளை கொண்டாடினான் இதே பாடலுடன். அவன் முகத்தில் எப்போதும் ஒரு டென்சன் இருக்கும். "கொஞ்சமாச்சும் சிரியேண்டான்னு" அவன் அம்மா அடிக்கடி சொல்லுவாள் "அட போம்மா"ன்னு பதில் வரும் சிரிக்காமலே.

தந்தையை இழந்து பின் அம்மாவுக்கு அதிகம் தொல்லை கொடுக்காமல் அம்மாவின் ஆசைகள்தான் தன்னோட ஆசைகள் என்ற முடிவுடன் வாழ்ந்து கொண்டுயிருந்தான். அம்மா என்ன படிக்க சொன்னாலோ அதையே படித்தான். ATM கார்ட்டு நிறைய சம்பளம். அம்மா ஆசை பட்டது போல முன்புறம் தோட்டம் வைத்த ஒரு வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு கட்டிலில் இருந்த அம்மாவின் கை தன்னை தொட்டவுடன் பதற்றத்துடன் எழுந்து

"என்னம்மா என்னம்மா பண்ணுது...

"ஒன்னும் இல்லைடா உனக்கு அதிகம் கஷ்டம் கொடுத்துட்டேண்டா உன்னை உன் இஷ்டம் போல வாழவிடல நான் எல்லாம் ஒரு அம்மாவாடா என்னை மன்னிச்சிடுடா"

"என்னமா லூசு மாதிரி பேசுற அப்படி எல்லாம் இல்லம்மா நான் நல்லா இருக்குறதுக்கு காரணமே நீ தானம்மா"

"இல்லடா நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா நீ எனக்கு அம்மா நான் உனக்கு பிள்ளை" என சொல்லிவிட்டு கடவுளிடம் மனுக் கொடுக்க சென்றுவிட்டால். அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில் தான் புஸ்பாவை பார்த்தான். தன் ஏக்கத்தை அரவணைக்கும் புன்னகையை அவள் முகத்தில் பார்த்தான்.

ஸ்டேசணுக்குள் வண்டி வந்தததும் முகத்தில் புன்னகையுடன் ஏறினான்.

புஸ்பா: ஏன்டா ஒரே சிரிப்பு

செழியன்: ஒன்னும் இல்லம்மா

புஸ்பா: டேய் திருட்டு பையலே நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் அந்த பெண்ணும் ஒரு வாரமா இதே கம்பார்ட்மென்ட்டுல வருது என்ன விஷயம்

செழியன்: ம்....அதுக்கு ஒரு சமையல்காரன் வேணுமாம்

புஸ்பா: ஒ...சார் தான் புல் குவாலிபைடு ஆச்சே அப்லை பண்றது

செழியன்: அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா....இன்னிக்கு மெடிக்கல் செக்கப்புக்கு போகனும் நான் பர்மிஷன் சொல்லிட்டேன் ரெடியா இருங்க

புஸ்பா: உன்னால் தானே உயிர் சுமந்தேனே..................

Wednesday, August 08, 2007

கூட்டாஞ் சோறு நினைவுகள்


சனிக்கிழமை - 09.08.2006

விடியல் காலையில் 8 மணிக்கு விஜயனின் செல்போன் அடித்தது

விஜயன்: ஹலோ.....

தீபா: ஹலோ.....டேய் எல்லாம் ரெடியா டா நாங்க எல்லாம் இன்னும் 1 மணி நேரத்துல அங்க இருப்போம்

விஜயன்: என்ன எல்லாம் ரெடியா? ....யாரு நீங்க? எதுக்கு இங்க வரபோறிங்க?

தீபா: யாரு நீங்களா????? டேய் லூசு....நான் தீபா பேசுறேன் டா

விஜயன்: ஓ....அப்படியா.....சரி பேசுங்க

தீபா: டேய் வெறுப்பேத்தாத, இன்னும் ஒரு மணிநேரத்துல நானு, அனிதா, மாலதி அங்கஇருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்

விஜயன்: ஏய்....என்ன ரெடியா இருக்கனும்? காலங்காத்தால நீ தான் வெறுப்பேத்துற...கொஞ்சம் நிம்மதியா தூங்க விடுவியா

தீபா: அடப்பாவிங்களா...இன்னுமாடா தூங்குறிங்கன்னு அதிர்ச்சியில் மாலதியிடம் போனை கொடுத்தால்

விஜயன்: ம்....ஆமா.....சரி என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லி தொலை

மாலதி: டேய் கும்பகர்ணங்களா இன்னிக்கு உங்க வீட்டில் தான் கூட்டாஞ் சோறு

விஜயன்: யாரு சொன்னா உனக்கு?

மாலதி: நீயும் புகழும் தானே சொன்னிங்க....இந்த வாரம் எங்க வீட்டில் கூட்டாஞ் சோறு அதுவும் பிரியாணின்னு

விஜயன்: நாங்க எல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க சொன்னதை எல்லாம் நம்பிட்டியா!!!! இரு புகழ்க்கிட்ட பேசு........மச்சி....இந்தா வீட்டில் இருந்து அம்மா பேசுறாங்க

புகழ்: அம்மா எப்படிம்மா இருக்கிங்க.......சொல்லும்மா என்ன விஷயம்

மாலதி: மகனே தூங்குமூஞ்சி.....சீக்கிரம் சமையலுக்கு எல்லாத்தையும் ரெடிப்பண்ணு ராசா

புகழ்: என்னம்மா ஆச்சு உனக்கு? மாலதியிடம் போனை வாங்கிய அனிதா

அனிதா: புகழ்....நான் அனிதா பேசுறேன் பிரியாணி என்னாடா ஆச்சு?

புகழ்: ச்ச...நீயா?

அனிதா: ஏய், நாங்க எல்லாம் ரெடியாகிட்டோம். இன்னும் 1 மணிநேரத்துல அங்க இருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்......போனை துண்டித்துவிட்டு அனைவரும் கிளம்ப ரெடியானார்கள்

புகழும், விஜயனும் தூக்கம் கலைந்து இப்ப என்ன செய்வதுன்னு முழித்துக் கொண்டுயிருந்தனர்.

விஜயன்: மச்சி பிரியாணிக்கு என்னன்ன வேணும்கிறதை எல்லாம் வாங்கிட்டு வா....நான் ரூமை சுத்தம் பண்றேன்

புகழ்: பிரியாணிக்கு என்னென்ன வேணுமுன்னு எனக்கு என்ன டா தெரியும்....

விஜயன்: வீட்டில் இருந்து அம்மா சமையல் குறிப்புகள் எழுதி அனுப்பியிருக்காங்கல்ல..அந்த நோட்டை பாரு அதுல தேவையான பொருட்கள்ன்னு எழுதியிருக்குல்ல அதை மொத்தத்தையும் வாங்கிட்டு வா

புகழ்: சரி மச்சி என்று கூறிவிட்டு புத்தகத்தை தேடி கொண்டே "ஏண்டா நமக்கு இதெல்லாம் தேவையா....போனமா போட்டாதை தின்னமான்னு இருந்திருக்கனும். வாயவச்சிக்கிட்டு சும்மா இல்லாம வாங்கன்னு வேற கூப்பிட்டாச்சு....எப்படி சமாளிக்க போறோமோ"

விஜயன்: மச்சி...இதுக்கே சளிச்சிக்கிட்டா எப்படிடா...போயி வாங்க்கிட்டு வா சீக்கிரம்....இன்னும் 15 நிமிஷத்துல வந்துடுவாளுங்க என்று சொல்லிக் கொண்டுயிருக்கும் போதே....கதவருகில் தீபா, அனிதா, மாலதி மூவரும் "அய்யா....அம்மா....பிரியாணி இருந்த போடுங்க....அய்யா....அம்மா...ராத்திரியில்ருந்து ஒன்னுமே சாப்பிடலை அய்யா"

புகழ்: நாம பிரியாணி செய்ய போறது இந்த ஏரியா பிச்சைக்காரிகளுக்கு கூட தெரிஞ்சி போச்சு போல டா, என்று இருவரும் ஜன்னலின் வழியே எட்டி பார்த்தனர்.

புகழும், விஜயும் கோரசாக "அய்யோ.....வந்துட்டாளுங்கடா ராப்பிச்சை காரிங்க...அலரிஅடித்துக் கொண்டு உடைகளை சரி செய்து....வீட்டை சுத்தம் செய்கிறோம் என்ற நினைப்பில் ஏதோ செய்து கொண்டுயிருந்தார்கள். வெளியில் இருந்து மூவரும் "பிரியாணி போடுற மகராசனுங்களா இன்னுமாடா தூங்கிக்கிட்டு இருக்கிங்க"ன்னு கத்த ஆரம்பித்தனர்.

புகழ் ஓடிபோயி கதவை திறந்தான்.....பின்னாலயே வந்த விஜயனும் கூட சேர்ந்து "வாங்க வாங்க ராப்பிச்சை...ச்சே...பகல் பிச்சை தாய்குலமே...வாங்க"...பணிவுடன் அழைத்தனார்.

தீபா: அய்யாங்க ரெண்டு பேரும் போன வாரம் எங்க வீட்டில் இப்படி தானேடா வந்து பிச்சை எடுத்திங்க

விஜயன்: ம்க்கும் இதெல்லாம் மட்டும் நல்லா ஞாபகத்துல இருக்குமே உனக்கு.....

அனிதா: சரி....சரி என்னென்ன வாங்கிட்டிங்க சீக்கிரம் ஆரம்பிக்கனும்....அப்ப தான் சாயந்திரம் பீச்சிக்கு போகலாம்

புகழ்: வாங்குறதுக்கு தேவையான காசும், பையும் தவிர வேற ஒன்னும் வாங்கல....என்று புகழ் பம்ம

தீபா: அப்பவே போன் பண்ணி சீக்கிரம் வாங்கி வையுங்கடான்னு சொன்னோம்ல

விஜயன்: ஆமா, சொன்னிங்க இப்ப யாரு இல்லன்னா

மாலதி: டேய்......காலையில இருந்து பச்சை தண்ணிக்கூட கூடிக்கல டா....

புகழ்: மாலதி அப்ப ரஸ்னா குடிக்கிறியா ஆனா பச்சையாக இருக்காது பரவாயில்லையா

மாலதி: என்ன நக்கலா....உங்ககூட பேசி பேசி இருக்குற கொஞ்ச எனர்ஜியும் போயிடும் போல இருக்கே எதுவும் தெரியலைன்னா சொல்ல வேண்டியது தானே நாங்களே எல்லாம் வாங்கிவந்துயிருப்போம்ல

விஜயன்: இதெல்லாம் நாங்க சொல்லனுமாக்கும்......இத்தனை நாளா எங்ககூட இருக்கிங்க இதுகூட தெரியாத உங்களுக்கு

அனிதா: சரி....சரி....விடு......புகழ் சீக்கிரம் போயி....எல்லா அயிட்டத்தையும் வாங்கிட்டு வா...அப்புறம் மறக்காம பிரியாணி அரிசி, பச்சடிக்கு தயிரு, கொஞ்சம் தக்காளி, வெல்லரிக்கா, ஜஸ்கிரிம், இப்ப எங்களுக்கு எல்லாத்துக்கும் சூப்பர் டீ...ஓகே

புகழ்: அப்ப இந்த கோழி கறி !!!!

மாலதி: டேய்.......இருக்குற பசிக்கு உன்னை அப்படியே தின்னுடுவேன்.....

தீபா: என்னடா இப்படி கொல்றிங்க கறி இல்லாமையா....சீக்கிரம் வாங்கிட்டு வாங்கப்பா....பீலிஸ்

புகழ்: ஓகே....ஓகே....கூல்....கூல்....நோ டென்சன்....இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு புகழ் கடைக்கு கிளம்ப

விஜயன்: எக்ஸ்குசுமி நாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள வீட்டை இதே போல அழகா வச்சிருங்க அலங்கோலமா எதுவும் பண்ணிடாதிங்க என்று விஜயனும் தன் பங்குக்கு ஒரு பிட்டை போட்டு விட்டு ஒடினான் வந்த மூவரும் வீட்டை சுத்தி பார்த்துக் கொண்டுயிருந்தனர்.

தீபா: ஏய் இங்க பாருங்க டி.....புக்கை எல்லாம் எப்படி போட்டு வச்சிருக்கானுங்கன்னு

மாலதி: புக்கை மட்டுமா.....அங்க பாரு துணியை கூட ஒழுங்க போட்டு வைக்காம இப்படிஅலங்கோலமா இருக்கு இதுல வேற இதுதான் இவுனுங்களுக்கு அழகாம்

அனிதா: ஏய் சும்மா எதுக்கு அவுனுங்களை குத்தம் சொல்லிக்கிட்டு நாம மட்டும் என்ன ஒழுங்கா. பேச்சுலர் வாழ்க்கையின்னா இப்படி தான் இருக்கனும். பாவம்டி அவுனுங்க பார்ட்டைம் வேலைக்கு போயிக்கிட்டு காலேஜிக்கும் வந்துக்கிட்டு.....பாவம்ப்பா

தீபா: சரி....சரி ......ஓவர் பீலிங்கஸ் எல்லாம் வேண்டாம் நாம இன்னிக்கு ஜாலியாக இருக்கனுமூன்னு வந்திருக்கோம்....

அனிதா: ஆமா...அவுனுங்க சுத்தம் செய்யலன்ன என்ன நாம சொய்வோம்......நம்ம புள்ளைங்களுக்கு நாம செய்யாம வேற யாரு செய்ய போறா....என்று ஆளுக்கு ஒரு வேலையாக எடுத்து கொண்டு ரூமை சுத்தம் செய்தனர்....பொருட்கள் வாங்க போன இருவரும் வந்துவிட்டனர்.

தீபா: புகழ் இங்க வா....என்னாது இது என்று கையில் இருந்த சிகரெட் பக்கெட்டை காட்டினால்.

புகழ்: ஒன்னும் தெரியாது போல...ஹைய்யா.....பெட்டி கோல்டு கலருல நல்லாயிருக்கே....இன்னாதுப்பா இது !!!

தீபா: டேய் கிண்டலா....நான் அன்னிக்கே இதை பிடிக்காதிங்கன்னு சொன்னேன்ல

விஜயன்: ஆமா சொன்னே அதான் வில்ஸ்ஸை விட்டுட்டு இப்ப கிங்சுக்கு மாறிட்டோம்...நீ சொல்லி நாங்க கேட்காம இருப்போமா

தீபா: உதை வாங்க போறிங்க ரெண்டு பேரும் இனி இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுடுங்க புரியுதா

புகழ்: ம்ம்...சரி சரி இன்னிக்கு மட்டும் எதுவும் சொல்லாதே.....ப்லிஸ் ஜாலி தான் முக்கியம்...ஓகே

அனிதா: சரி எண்ணெய் எங்கடா இருக்கு.....

புகழ்: இதோ.....விவிடி கோல்டு உங்க கேசத்திற்கு உகந்த எண்ணெய்...விவிடி கோல்டு

விஜயன், தீபா, அனிதா, மாலதி: ஹிஹிஹிஹிஹிஹி.....

அனிதா: அடபாவி சமையல் எண்ணெய் டா.....நாளைக்கு வாக்க பட போற இடத்துல எப்படி தான் பொண்டாட்டிக்கு சமைச்சி போட போறியோ ;-)))

விஜயன்: போதும்.....போதும்....பேச்சை குறைச்சிட்டு சமையலை ஆரம்பிங்க....நாங்க குளிச்சிட்டு வரோம்

மாலதி: ஹைய்....இது நல்ல கதையா இருக்கே....ராசா இது கூட்டாஞ் சோறு எல்லோரும் ஒன்னா ஆளுக்கு ஒரு வேலை செய்யனும்....

புகழ்: சரிப்பா..ஆரம்பிங்க ஒரு 15 நிமிஷத்துல வந்துடுகிறோம்.

சரி போங்கடான்னு சொல்லிவிட்டு எண்ணெயை பாத்திரத்தில் விட்டு....சூடானதும் கடுகு...பச்சை மிளகாய் இன்னும் இத்தியாதி இத்தியாதி எல்லாம் போட்டு....கூடவே கறியையும் போட்டு ஒரு வழியாக கறியை ரெடி செய்து விட்டனர். மற்றொரு புறத்தில் ஒரு குக்கரில் சாதம் ரெடியாகி கொண்டுயிருந்தது. மாலதியும் புகழும் பச்சடிக்கு ரெடி செய்து கொண்டுயிருந்தனர். தீபா பாத்திரங்களை கழுவி இடத்தை சுத்தம் செய்துக் கொண்டுயிருத்தால். அனிதாவும் விஜயனும் பிலாஸ்க்கில் இருந்த டீ யை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து கொண்டுயிருந்தனர்.

புகழ்: வாசனை அப்படியே ஆளை தூக்குதுப்பா...கலக்குற அனிதா

அனிதா: உண்மையாவாடா.....ரொம்ப தேங்கஸ் டா...உனக்கு நாளைக்கு நான் ஜஸ்கீரிம் வாங்கி தறேன்னா

விஜயன்: அடப்பாவி நாம எல்லாம் தானே சேர்ந்து செய்தோம். அது என்ன அனிதா மட்டும் கலக்குறா நாங்களும் தான் கலக்குறோம் என்று விஜயன் தீபாவை பார்த்து ஒரு பிட்டை கொளுத்தி போட்டான். விஜயன் கொளுத்தி போட்டது வினாகலை தீபா புகழை வீட்டை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டுயிருந்தால்.

மாலதி: விடாத தீபா போடு நல்லா போடு அவன...ஒரு குச்சி ஜஸ்க்காக எப்படி எல்லாம் பொய் சொல்லறான் பாரு....விடாத அவனை அடி...நல்லா அடி.

புகழ்: மச்சி வாடா இவ என்னை கொல்லாமா விட மாட்டா போல இருக்கு....நீ என் உயிர் நண்பன் இல்லையா....வா டா மச்சி

விஜயன்: சாரி மச்சி என்ன இருந்தாலும் நீ தீபாவை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்க கூடாதுன்னு எரியும் நெரிப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊத்தினான்

புகழ்: அனிதா நீ யாவது வா.....அய்யோ இதுக்கு மேல நான் எங்க ஓடுவேன்

அனிதா: போதும் போதும் எல்லாரும் வாங்க உப்பு காரம் எல்லாம் சரிய இருக்கான்னு பாருங்க.....சீக்கிரமா வாங்க

புகழ்: ஆஹா....ஆஹா....ஒட்டல் பொன்னுசாமி எல்லாம் இனி நம்மக்கிட்ட தான் பிரியாணி செய்ய கத்துக்கனும்....சூப்பர் அனிதா

தீபா: ம்....நல்லாயிருக்கு

மாலதி: கொஞ்சம் காரம் அதிகம் தான் ஓகே....

விஜயன்: சூப்பர் பிரியாணிப்பா

அனிதா: ஏய் லூசுங்களா.....இன்னும் சாதத்தை இந்த கறியோட சேர்க்கமாலே பிரியாணி சூப்பர்ன்னு சொல்றிங்களா....அய்யோ...கொடுமை

புகழ்: ஒ....அப்ப இது பிரியாணி இல்லையா......

அனிதா: ஆமா....இது வெறும் மசாலா போட்ட கறி மட்டும் தான்....இனிமேல் தான் சாதத்தோட சேர்க்கனுமுன்னு அனிதா புகழ்க்கு விளக்கி கொண்டுயிருக்க அதை எதையும் காதில் வாங்காமல் தீபா, மாலதி, விஜயன் மூவரும் பாத்திரத்தை காலி செய்து கொண்டுயிருத்தனர்.

அய்யோ....இதுக்கு மேல நாம பேசிக்கிட்டு இருந்தோம்.....நம்மக்கு அந்த வெறும் சோறு தான் கொடுப்பாங்க போலன்னு மற்ற இருவரும் தள்ளிக் கொண்டு பாத்திரத்தில் தலையைவிட்டு கறியை கடிக்க தொடங்கினர். ஒரு வழியாக கறியை தனியாக சாப்பிட்டு விட்டு சாதத்திற்கு பச்சடியை போட்டு கூட ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டு முடித்து ஏவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஏப்பமும் விட்டாச்சி.
---------------------------------------------------------------------------------------

வியாழக்கிழமை 09.08.07
----------------------------------------
விஜயன் செல்போன் அழைப்பு மணிகேட்டு பழைய நினைவுகளில் இருந்து எழுந்தான். தீபாக்கிட்ட இருந்து தான் கால்

விஜயன்: சொல்லு தீபா.....

தீபா: டேய் எங்கடா இருக்கே சென்னை வந்திட்டியா.....சரி இரு எல்லோரும் கான்பரன்ஸ் கால்ல இருக்கோம்

விஜயன்: அடங்க மாட்டிங்களா நீங்க........இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்....அதுக்குள்ள எதுக்கு கான்பரன்ஸ்.

தீபா: ஒன்னும் பேசாதே இருடா.... என்று அவனையும் இணைப்பில் இணைத்தாள்

மாலதி, புகழ், அனிதா: ஹலோ...

விஜயன்: ஏய் மக்கா நான் விஜிடா..எல்லாரும் எப்படி இருக்கிங்க

புகழ்: ம்....எங்களுக்கு என்ன நல்லா தான் இருக்கோம் மச்சி....நான் பஸ் டாண்டுக்கு கிளம்பிட்டேன் இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துடவல்ல....

அனிதா: ஏய்..அதெல்லாம் அவன் வந்துடுவான்...அவனுக்கு என்ன உன் ரூம் தெரியாதா என்ன?

மாலதி: ஏய்..அனி அவனுக்கா ரூம் தெரியாது.....பாவம் பசங்க 1 வருஷம் கழிச்சி நேருல பாக்குதுங்கல்ல அதுங்களுக்குல்ல ஆயிரம் மேட்டர் இருக்கும் அப்படியே ஒரு தம் அடிச்சிக்கிட்டு கிசு கிசு எல்லாம் பேசிட்டு ஒன்னா ரூமுக்கு வருவானுங்க....என்னடா புகழ் நான் சொல்லறது சரிதானே

புகழ்: எப்படி மாலதி உன்னால மட்டும் தான் எங்க மனசை புரிஞ்சிக்க முடியுது!!!!

தீபா: நீ இன்னிக்கும் என்க்கிட்ட வாங்க போற.....விஜி ஏதவாது பேசுடா....லைன்ல இருக்கியா இல்லையா

விஜயன்: ம்....இருக்கேன்....ஏய் மக்கா இன்னிக்கு ஆகஸ்டு 9 போன வருஷம் இதே நாள்ல தான் கூட்டாஞ் சோறு செய்தோமே ஞாபகம் இருக்கா....

புகழ்: அதை எப்படிடா மறக்க முடியும்....கடைசிவரைக்கும் முழு பிரியாணியே சாப்பிடல

விஜயன்: இன்னிக்கு முழு பிரியாணி செய்து கலக்கிடுவோமா......

அனிதா, மாலதி, புகழ், தீபா: கலக்கிடுவோம் மச்சிசிசிசிசி ;-)))

Saturday, July 28, 2007

புலி கொடுத்த சிங்கபொம்மை- வலைபதிவர் சந்திப்பு



மாலை 4.30 மணிக்கு சந்திப்பு என்று அபி அப்பா பதிவு எல்லாம் போட்டு அறிவித்திருந்தார். அறிவிப்பு வந்தவுடன் சித்த"ஆப்பு" குசும்பன் இடம் இருந்து போன் "கோபி நீ கண்டிப்பா வரனும்"...."என்ன சீத்த"ஆப்பு" இப்படி கேட்டுபுட்டிங்க நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பனோ"...ன்னு ஒரு பிட்டை போட்டு வச்சேன். தனியாக சென்று கூட்டத்தில் மாட்டி கொள்லாமல் இருக்க பல கூட்டங்களை கண்ட எங்கள் கவிமட தலைவர் பெனாத்தலாரோடு இணைத்து கொண்டு சந்திப்புக்கு கிளம்பினோம்.பார்க்கை அடைந்தவுடன் எனக்கு அதிர்ச்சி

"சார்... "

"என்னப்பா.."

"நாம சரியா 4.30 மணிக்கு வந்துட்டேம் சார்"

"பெனாத்தலார்னா பஞ்சுவலிட்டின்னு உனக்கு தெரியாதா!!!" ன்னு அவரும் ஒரு பிட்டை போட்டு பார்க்கையே அதிரவைத்தார்

பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.
(நோட் பண்ணுங்கடா டேய் இதெல்லாம் நோட் பண்ணுங்க)

அவருடன் நட்சத்திரம் அய்யனார், சித்த"ஆப்பு" குசும்பன், சென்ஷி, சிறுகதை புயல் தம்பி, லொடுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பெனாத்தலாரிடம் வழக்கம் போல ஆள்மாறாட்ட வேலைகள் நடந்தன. பின்பு 2 நிமிடம் கழித்து உண்மை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. வலைபதிவர் சந்திப்புன்னு வந்துட்ட பிறகு இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு மறுபடியும் ஒரு பிட்டை போட்டார்.

சிறிது நேரத்திரத்திற்கு பிறகு சந்திப்பின் ஸ்பன்சர் சூடான் புலி சூடாக வராமல் கூல்லாக வந்து சேர்ந்தார். அமீரகத்தின் பெண்பதிவர் சகோதரி ஜெசிலா அவர்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட லியோ சுரேஷ், மகேந்திரன் பெ மற்றும் மின்னது மின்னல் மிஸ்சிங். அமீரகத்தின் மற்றொரு பதிவர் சுல்தானும் அனானி தியாகுவும் வந்து சேர்ந்தனர்.

பின்பு வழக்கம் போல் கும்மி தேவையா?....யார் அந்த அனானி? கவிதையின் அடுத்த கட்டம் என்ன? அபி அப்பா ஏன் பதிவுகளை படிப்பதில்லை? அபி அப்பா சீரியசாக எப்போ எழுதுவார் (சிரிக்காதிங்க...உண்மையிலே கேட்டோம்) இப்ப யாருக்கும் யாருக்கும் சண்டை? நீ யார் பக்கம்? பக்கத்துல எங்க நல்ல சட்னி வடை கிடைக்கும்? புலி கொண்டு வந்த பைக்குள்ள என்ன இருக்கு? இப்படி பல விஷயங்கள் விவாதிக்க பட்டு கலைத்து போயி டீ சாப்பிட முடிவு செய்தோம்.

சுட சுட டீ சாப்பிட்டு விட்டு அய்யனாரும் பெனாத்தலாரும் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் பற்றி பேசி கொண்டுயிருந்தார். பெனாத்தலார் பல வருடங்களுக்கு முன்பு படித்த அசோகமித்திரனின் கதையை வரிகளை கூட மறக்கமால் சொல்லிக் கொண்டுயிருந்தார்.

அய்யனாரும் சிறுகதை, நாவல், கவிதை என்று ஒரு எரியாவையும் விட்டு வைக்காமல் போட்டு தாக்கி கொண்டுயிருந்தார்.

சென்ஷி பதிவையும் அதற்கு போட்ட பின்னூட்டத்தையும் ஞாபகத்தில் வைத்து கொண்டு பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நியூசிலாந்திலிருந்து வல்லியம்மா கூறிய வாழ்த்தை அபி அப்பா மறக்காமல் பதிவு செய்தார். (பதிவர்கள் சார்பாக வல்லியம்மாவுக்கு நன்றிகள்) சந்திப்பின் போது மின்னலும், டெல்லியில் இருந்து முத்துலட்சுமி அக்காவும் போன் மூலமும் அனைவரிடமும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனார்.

பெனாத்தலார் கூடிய விரைவில் FLASH (Macromedia Flash) பற்றியை செய்திகளை வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன் அதற்கான வேலைகள் நடந்து கொண்டுயிருக்கிறது என்று கூறினார் (கூடிய விரைவில் FLASH போட்டி ஒன்னு வரும்).

தம்பி சமிபத்தில் எழுதிய சிறுகதைகள் நன்றாக இருப்பதாக அனைத்து பதிவர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தினர்.

Web Page Design பற்றி சொல்லிக் கொடுக்க போவதாக குசும்பன் தெரிவித்தார்.

அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை முன்னிட்டு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைக்கு (ஆசிப் அண்ணாச்சியில்ல) ஒட்டல் சரவண பவனுக்கு சென்று வயிற்று பசியையும் முடித்து கொண்டோம்.


பின்பு சூடான் புலி அனைவருக்கும் நினைவு பரிசாக ஒரு சிங்கபொம்மையை பரிசாக வழங்கினார். பின்பு அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும் அபி அப்பாவுடன் புலி போகாதது மர்மமாகவே உள்ளது.







புலி கொடுத்த சிங்கபொம்மை

இந்த சந்திப்பின் மூலம் வருங்காலத்தின் ரெண்டு பெண் பதிவர்கள் கிடைத்தினர்....லொடுக்கு அவர்களின் குட்டி தேவதையும், சகோதரி ஜெசிலா அவர்களின் குட்டி தேவதையும் தான் வருங்கால பெண்பதிவர்கள். ஜெசிலாவின் மகள் கண்மணி டீச்சரையே கலாய்த்தவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. எங்கள் சந்திப்பை விட அந்த ரெண்டு குழந்தைகளின் நட்பு மிகவும் அழகான ஒன்று, அதனை பற்றியே ஒரு பதிவு போடலாம். கடைசி வரையில் அந்த குழந்தைகளிடமும் குசும்பனின் குசும்புகள் பலிக்கவில்லை என்பதை இங்கே கூறி கொள்ள விரும்புகிறேன்.


வாரத்தின் விடுமுறை நாளை பல புதிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

சந்திப்பில் பங்கு பெற்றோர்

அபி அப்பா

பினாத்தால் சுரேஷ்

லொடுக்கு

ஜெசிலா

சுல்தான்

குசும்பன்

அய்யனார்

சென்ஷி

நாகை சிவா

கதிர்

அனானி நண்பர் தியாகு

இவர்களுடன் நான்.

Tuesday, July 03, 2007

கிடேசன் பார்க்கில் விருந்து....வாங்க வாங்க

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு மக்கா ;))))


பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
பதிவில் மூலமும், மெயிலிலும், போன் செய்தும் வாழ்த்து கூறிய அனைத்து பாசக்கார மக்களுக்கு என் மீண்டும்...மீண்டும் நன்றிகள்.

தனி பதிவு போட்ட கவிதாயினி காயத்ரி அவர்களுக்கும், சங்கத்துக்கும் என் நன்றிகள்.

சரி நன்றி சொன்ன மட்டும் போதுமா?...அதான் ஒரு சின்ன விருந்து எல்லோரும் வாங்க நல்லா சாப்பிட்டு போங்க.


Vegetarian எல்லாம் இங்க வாங்க ;))





Non-Vegetarian எல்லாம் இங்க வாங்க :))


அந்த கோழி மட்டும் காயத்ரிக்கு (என்ன போதுமா?)


சாப்பாடு மட்டும் இல்லைங்க மக்கா...ice cream எல்லாம் இருக்கு வயிறு நிறைய சாப்பிடுங்க.





இது யாருகுன்னு சொல்லுங்க பார்ப்போம் ;))))))



மீண்டும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ;)

Monday, May 21, 2007

கிளம்பு காத்து வரட்டும்

நான் ஆணி புடுங்குறதை பார்த்து எங்க மேனேஜர்

"ராசா...என் தங்கம்....போதும் நீ புடிங்கினது....இனியும் புடிங்கி சுவத்தை ஓட்டை ஆக்காதே....நீ ஆணி புடிங்கின திறமையை பார்த்து கம்பெனியே உனக்கு லீவு கொடுத்திருக்கு....கிளம்பு காத்து வரட்டும்ன்னு சொல்லிட்டாரு". (ஆணி புடிங்கின மாதிரி ஆக்ட் வுட்டதுக்கே லீவா....அப்ப உண்மையில் ஆணி புடிங்கியிருந்தா....நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு)

"கொஞ்சம் நல்ல சாப்பாடு....அம்மா கையால"

"ஒரு ரெண்டு மூணு கல்யாண சாப்பாடு....... நட்பு வட்டாரத்தின் கல்யாணங்கள்" ( அது என்னமோ தெரில மக்கா இந்த வருஷம் ஆரம்பிச்சதுல இருந்தே ஒரே கல்யாணம் தான். இந்த வருஷம் கல்யாண வருஷம் போல)

"வீட்டுல புதுசா வந்திருக்க ரெண்டு குட்டிகள்"......(அக்கா பொண்ணு அண்ணன் பையன்)

"இன்னும் ஒரு மாதத்தில் வர போற இன்னொரு அண்ணன் வாரிசு"

"அப்புறம் வெயிலோடு கொஞ்சம் விளையாட்டு"

"ஊர்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் ஒரு ரவுண்டு"

"அப்படியே பாசகார பசங்களோட ஒரு சின்ன ட்ரீப்.....பாண்டிசேரிக்கு"







இப்படி எல்லாம் கணக்கு போட்டு கிளம்புரேன் மக்கா.....ஒரு மாதம் இந்த தமிழ்மணத்தையும் உங்களையும் எப்படி தான் பிரிஞ்சியிருக்க போறேன்னு நினைக்கும் போது அழுகையா வருது...நான் அழுது என் சோகம் உங்களை தாக்கிடும்ன்னு நினைக்கும் போது வர அழுகை கூட நின்னுடுது.


எங்க பாசகார குடும்பத்தை பத்துரமா பார்த்துக்குங்க.....இந்த கிடேசன் பார்க்கை வேற அபி அப்பாவை நம்பி ஒப்படைச்சிட்டு போறேன். என்னமோ எதையோ விட்டுட்டு போற மாதிரியே ஒரே பீல்....சரி ஓகே.....மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் கிளம்புறேன்.

Sunday, May 13, 2007

அம்மா......அம்மா.....அம்மா.....


உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் இந்த செல்ல மகனின்
அன்னையர் தின வாழ்த்துக்கள்





அன்புள்ள அம்மாவுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?


நானும் ஏதாவது எழுதி பதிவு போடலாமுன்னு உட்காந்தா "அம்மா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற ஒன்னும் வரமாட்டேன்கிதும்மா

வாழ்த்துக்கள்ம்மா ;-)

Thursday, May 03, 2007

அபி பாப்பாவின் நன்றி அறிவிப்பு கூட்டம் - கிடேசன் பார்க்

எல்லா ஆணியையும் முடிச்சிட்டு இழுத்து ஒரு பெரு மூச்சு விட்டுட்டு.....ஒரு டீ சாப்பிடலாமுன்னு வெளிய வந்தா கிடேசன் பார்க்கில் இருந்து போன் யாருடா இதுன்னு யோசிச்சிக்கிட்டே போனை எடுத்து

நான் ; ஹலோ.....

அருமையான குரலில் ஒரு குழந்தை பேசிச்சி

ஹலோ.....சித்தா எப்படி இருக்கீங்க

நான் ; இன்னாது சித்தாவா.....நான் சித்தன் எல்லாம் இல்லைமா....அவரு அண்ணாமலை சீரியலோட போயிட்டாரே.....என் பேரு கோபிநாத்

குழந்தை ; அய்யோ......இதுக்கு தான் அப்பா கூட அதிகமா சேராதிங்கன்னு சொன்னேன்.

நான் ; அப்படியா....சரி.... யாரு கண்ணு நீ கிடேசன் பார்க்குல நீ என்ன பண்ற?

குழந்தை ; ம்ம்ம்......அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்

நான் ; நாங்க தானே வழக்கமா அல்வா கொடுப்போம்......நீ யாருக்கு கொடுத்துக்கிட்டு இருக்க

குழந்தை ; காலையில எனக்கு வாழ்த்து சொல்லி பதிவு போட்டாரு இல்ல நம்ம காதலன் சித்தப்பூ அவருக்கு தான் அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்





நான் ; இப்ப தான் நம்ம மரமண்டைக்கு புரிஞ்சது......பேசுறது அபி பாப்பா.....செல்லம்.....கண்ணு....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))))

அபி பாப்பா ; ம்ஹும்...இப்ப வாச்சும் கண்டு பிடிச்சிங்களே.......ரொம்ப கஷ்டம் சித்தா உங்களோட.....

நான் ; சரிடா......கண்ணு கொஞ்சம் ஓவரு ஆணி அதானலதான் சட்டுன்னு கண்டு பிடிக்க முடியல

அபி பாப்பா ; சரி சீக்கிரம் வாங்க.....வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அல்வா கொடுக்க வேண்டும்

நான் ; இதே வந்துட்டேன் கண்ணு......போனை துண்டித்து விட்டு கிடேசன் பாரக்குக்கு ஓடினேன்.

கிடேசன் பார்க்குக்கு போனா அபி பாப்பா பட்டு பாவாடை சட்டையில கலக்கலா இருந்திச்சி.....அல்வா வாங்குறதுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாரு சென்ஷி....அவருக்கும் அய்யனாருக்கும் இதுல போட்டி வேற

நான் போயி மைக்கை எல்லாம் சரி பண்ணிட்டு பாப்பாவை பவ்வியாமாக மேடைக்கு அழைத்து பேச சொன்னேன்

அபி பாப்பா ; அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்,

கை தட்டல் காதை கிழிச்சது......தம்பி அடிச்ச விசில் வானை பிளந்தது....பாப்பா தன் இரண்டு கைகளையும் தூக்கி அமைதி .....அமைதின்னு சொல்லுச்சி

என் பாசமிகு சித்தப்பூ.....சென்ஷி அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....மற்றும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ப.பா.சங்கத்தின் டீச்சர் கண்மணி அவர்களும் அவரின் மாணவ மணிகளும் சேர்ந்து செய்த அல்வா வழங்கப்படும் வாயார....(முடியுமா) சாப்பிட்டு விட்டு போங்க...

எல்லாரும் தட்டை தூக்கிட்டு கேட்டை நோக்கி கண்ணு மண்ணு தெரியாம ஓடுறாங்க.

Tuesday, April 17, 2007

கிடேசன் பார்க்கில் ராயல் ராமுவுக்கு அல்வா

கிடேசன் பார்க்கே நிரம்பி வழிகிறது அந்த அளவுக்கு கூட்டம். ஏண்டா....அல்வா தானே கொடுக்குறோமுன்னு சொன்னோம் சாப்பாடா போடுறோமுன்னு சொன்னோம்.....சாப்பிடுற தட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திருக்கானுங்க. இவனுங்களை எல்லாம் என்ன செய்யுறது. சரி விடுன்னு சொல்லிட்டு மைக்குல

"எல்லாம் கீவுல ஒழுங்கா வரணும். எல்லாருக்கும் அல்வா நிச்சையம் உண்டு என்று மைக்குல நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்."...........நேரம் வேற ஆயிக்கிட்டே இருக்கு இன்னும் கிடேசன் பார்க்கின் தலைவரை காணோம். இந்த பொருளாளர் வேற இன்னும் வரவில்லை.....இருக்குற கூட்டத்தை பார்த்தா இந்த அல்வா பத்தாது போல இருக்கு....என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே பொருளாளர் அபி அப்பா வந்துவிட்டார்.

நான்; ஏன் இவ்வளவு லேட்டு?

அபி அப்பா; கிளம்பும் போது ஒரு பஞ்சாயத்து அதை முடிச்சுவச்சுட்டு வரேன்."

நான்; இன்னைக்குமா......சரி அதை விடுங்க.....தலைவர் எங்க? "

அபி அப்பா; அவரு பாவனா நடித்த தீபாவளி (லி) படத்தை 50வது தடவையாக வலியுடன் பார்த்துக்கிட்டு இருந்தாறு (இதில் இருந்தே உங்களுக்கு தெரியும் தலைவர் யாருன்னு....வேற யாரு தம்பி தான்) அதான் கொஞ்சம் லேட்டா வரேன்னு சொன்னாரு.....இன்நேரத்துக்கு வந்துருக்கணுமே...சரி இரு ஒரு போனை போட்டு பார்க்குறேன்.

அபி அப்பா; ஹலோ....தல எங்க இருக்கு

த.தம்பி; ம்ம்ம்....கழுத்துக்கு மேல தான் இருக்கு.

அபி அப்பா; ம்ம்ம்....தெளிவாதான் இருக்கீங்க போல....சரி எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

த.தம்பி; எதிர்பாலின ஈர்ப்புனால ஈர்க்கப்பட்டு திசை தெரியாமல் நடு ரோட்டுல நிக்குறேன்.

அபி அப்பா; அட பதிவை பற்றி எல்லாம் அப்பறம் பேசிக்கிலாம் சீக்கிரம் வாப்பா...

நான்; சரி....இந்த துணை தலைவர் எங்க?

அபி அப்பா; இதோ வந்துக்கிட்டே இருக்காரே.....ஆமா எதுக்கு பின்னாடியே நடந்து வராரு?

நான்; இதுதான் பின்நவீனத்துவ நடை

து.த.அய்யனார்; என்னப்பா....ஆரம்பிச்சுடுலாமா? என்று உள்குத்தாக கேட்க

அபி அப்பா; ஓ....ஆரம்பிச்சுடலாமே....என்று உள்குத்தாய் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போதே த.தம்பி வந்துவிட்டார்.

த.தம்பி; எப்படி ஷார்ப்பா வந்தேன் பார்த்தியா......சரி ஆரம்பிச்சுடலாமா?

நான்; நீயுமா என்று மனதில் நினைத்துக் கொண்டு ....சரி சங்கத்துக்கு தகவல் கொடுத்தாச்சா?

அபி அப்பா; நான் நேத்தே சங்கத்து சிங்கங்கள் எல்லாத்துக்கிட்டையும் பேசிட்டேன். தேவ் வேற பதிவு போட்டு நேத்து எல்லாம் அங்கதான் கும்மி.

அய்யனார்; கோபி யாரோ சிக்சர் சிக்சர்ன்னு கத்துறாங்க.....யாருப்பா அது

அபி அப்பா; அட நம்ம பாஸ்டு பவுலர்......

பாஸ்டு பவுலர்; அபி அப்பா......குரங்கு ராதா எங்க?

அபி அப்பா; நானே அவன்க்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் இதுல நீங்க வேற...

நான்; சரி...தல இதுக்கு மேல வெயிட் பண்ணா நம்மளையும் அல்வாவா கின்டிடுவானுங்க சீக்கிரம் மேட்டரை சொல்லிட்டு அல்வாவை கொடுத்துட வேண்டியது தான்.


தலைவர் தம்பி ; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே... இன்று ஒரு அருமையான பொன் நாள்....என் அன்பு அண்ணன்.....பெங்களூர் நாயகன்..அபி அப்பா நானுன்னு கேட்க, தம்பி மைக்கை அபி அப்பாக்கிட்ட கொடுக்கறாரு...

அபி அப்பா; சங்கத்து சிங்கம்.......தங்கம்......கவிதை காதலன்.....எங்கள் அன்பு ன்னு ஆரம்பிக்க......அய்யனாரு நடுவுல கையை நீட்ட....இப்ப மைக் அய்யனார்க்கிட்ட போகுது

அய்யனார் ; என் பாசத்திற்குரிய தம்பி.....விடிய விடிய பல வளைபதிவுகளுக்கு சென்று கும்மி அடிக்கும் கும்மி கிங்.....கடலை மன்னன்......தம்பி அட போதும் சீக்கிரம் பேரை சொல்லுப்பான்னு மைக்கை வாங்கி....

த.தம்பி; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே.....குறுக்கே அபி அப்பா விழுந்து வேண்டாம் தல நான் அழுதுடுவேன்னு ஒரு சிக்னல் கொடுக்கிறாரு


எங்கள் சிங்கம்

என் அண்ணன்

மூத்தவளைப்பதிவாளர்

சங்கத்து சிங்கம்

கவிதை காதலன்

கடலை மன்னன்

தமிழ்மணத்தின் ராயலாக இருக்கும் திரு. ராம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் துபாய் கிடேசன் பார்க் மன்றத்தின் சார்பாக அல்வா கொடுக்கப்படும்.






வாயார அல்வாவை சாப்பிட்டு மனதார வாழ்த்து சொல்லி விட்டு போங்கள் என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் தலைவர். நான் நடுவுல "ஜயா நானும் இங்க தான் இருக்கேன்"னு சிக்கனல் கொடுக்க கடைசியா மைக் என்க்கிட்ட வந்தது.

என் அன்புக்கும், நட்புக்கும் உரிய அன்பு மாப்பி ராயல் ராமுவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மக்கா.....ஒரு முக்கியமான விஷயம் அல்வாவை சாப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் போதாது.

அபி அப்பா; ஆமாம்..... கை கழுவனும்.

நான்; இரு அண்ணாத்த........வருஷா வருஷம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா......சீக்கிரம் அவருக்கு ரங்கமணி சங்கத்துல சேரணுமுன்னு வாழ்த்திட்டு போங்க......புரியுதா.

Wednesday, April 11, 2007

அய்யனாருக்காக ஆறு அழகுகள்

முதல்ல எல்லாருக்கும் வணக்கம்..... அப்புறம் ஒரு பெரிய மாப்பு கேட்டுக்குறேன். ஆணிகளுக்கு நடுவில் அழகைப்பற்றி எழுதுன்னு நம்ம தமிழ்மண குலச்சாமி, கவிதை தென்றல்
திரு. அய்யனார் என்னையும் கூப்பிட்டுயிருக்காரு. இந்த தொடர் ஓட்டத்தை ஆரம்பித்த திரு. கொத்தனார் அவர்களுக்கு ஒரு நன்றி. எல்லாரும் அருமையாக, ரொம்ப அழகாக எழுதிக்கிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல நானும் ஏதோ என் மனசுக்கு தோன்றிய இந்த ஆறு அழகுகளைப்பற்றி எழுதியிருக்கேன் பாருங்க





பெண்கள்

அழக்குன்னு நினைச்சவுடனே மனதுக்குள் வந்தது பெண்கள் தான். எத்தனை பெண்கள் யாரை சொல்ல யாரைவிட. ஒவ்வொருத்தருக்கும் தனிதனி அழகு இருக்கு. என்னதான் பல பெண்களை பார்த்தாலும் பழகினாலும் கண்னை மூடி மனதுக்குள் நினைத்து பார்த்தால் என் நினைவுக்கு வரும் முதல் பெண் என் அம்மா தான். என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே. அதுக்கு அப்புறம் என் பள்ளிக்காலங்களிலும், கல்லூரியிலும், போகும் பாதையில் என்னை கடந்து செல்லும் பெண்கள் முதல், நெஞ்சம் மறப்பதில்லையில் வருவாங்களே தேவிகா, மற்றும் மாதுரி தீட்சித் போன்ற சில நடிகைகளும் அழகு தான்.

நிகழ்வு

சில நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சி நாம் எதிர்பாராதாக இருக்கும் அப்படி ஒரு நிகழ்சி தான் கடந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு போனபோது நிகழ்ந்தது. வீட்டில் யார்க்கிட்டையும் நான் வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல ஒரு திடிர் சர்ப்ரைசாக இருக்கட்டுமேன்னு கிளம்பிட்டேன். வீட்டு முன்னாடி வந்திறங்கும் போது விடிகாலை ரெண்டு மணி. கதவுக்கிட்ட போனதும் ஒரு சின்ன தயக்கம் "ச்ச எல்லாரும் நல்லா தூங்கிக்கிட்டு இருப்பாங்க இப்ப காலிங் பெல் அடிச்சா எவ்வளவு இடைஞ்சலா இருக்குமுன்னு". வேற வழி தெரியில அடிச்சிட்டேன். நான் மெயின் கேட்டுல இருக்கேன் அங்கயிருந்து பார்த்தா எங்க வீட்டின் கதவு நன்றாக தெரியும். அப்பன்னு பார்த்து மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை "அம்மா நீ முதல்ல எழுந்துவாம்மான்னு". கதவு திறக்குது என் மனசுக்குள்ள ஒரு படப்படப்பு, தூக்க கலக்கத்துல, விளக்கு வெளிச்சத்துல கண் கூசி என்னை பார்க்குறாள் அம்மா. அம்மான்னு ஒரே ஒரு குரல் தான் கொடுத்தேன். ஹையோ.....அந்த தூக்க கலக்குத்துலையும் ஒடிவறா பாருங்க அப்படி வறா...வந்தவ சும்மா இருந்தாலா.....டேய்ன்னு அப்படியே என்னை கட்டிபுடிச்சு என் முகம் முழுக்க முத்த மழைதான். அப்ப நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பரிசு

பரிசுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் யாராவது ஏதவாது கொடுத்தாக்கூட கொஞ்சம் யோசிச்சிதான் வாங்குவேன். ஆனா வருடம் தவறாமல் என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒருத்தர்க்கிட்ட இருந்து கண்டிப்பா ஒரு பரிசு மட்டும் வந்துக்கிட்டே இருக்கு. அது நான் எங்க இருந்தாலும் சரி. எப்படியாவது அந்த பரிசு என் பிறந்த நாள் அன்னைக்கு கண்டிப்பா என்க்கிட்ட இருக்கும். அந்த பரிசை கொடுப்பது என் மாம்ஸ் சிவா அந்த பரிசு cadbury's Dairy Milk.

குறும்பு

நிறைய இருக்கு அதுவும் கல்லூரி படிக்கும் போது நிறைய......டக்குன்னு மனசுக்கு வந்தது என் கல்லூரியின் முதல் ஆண்டு கெனால் பஸ்டாப்பு.
எங்க திரும்பி பார்த்தலும் பெண்கள்தான் சீனியர் பெண்களும் சக வருட பெண்கள்ன்னு இந்த காதல் தேசம் படத்துல வரமாதிரி வழி எல்லாம் பெண்கள் தான். எங்களையும் அரியாமல் பக்கத்தில் இருந்த குட்டி சுவத்து மேல ஏரி உட்காந்து கண்குளிர எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். திடிரென்று தலையில பட்டுன்னு ஒரு அடி.....எவண்டான்னு பார்த்தா எங்க சீனியர்

"டேய் வீட்டுக்கு போகாம இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.....உங்க பஸ்டாப்பு அங்க எதிர்தாப்புல தானே இருக்கு"

என் நண்பன் ஒருவன் ; இவனுக்கு பஸ்டாப்பு இதான் சார் இவனை ஏத்திட்டு நாங்க அங்கே போவோம் சார்.

இன்னொரு சீனியர் ; டேய் இங்க வா......உன் பேரு என்னடா?

நான் ; கோபிநாத் சார்

சீ ; இன்னாது கோபிநாத்தா.....உனக்கு இன்ஷியலெல்லாம் இல்லையா.....இன்ஷியலோட சேர்த்து சொல்லுடா

நான் ; ஜி.கோபிநாத் சார்

சீ ; சரி....இப்ப நீ என்ன பண்ற இந்த கோழியை நான் கீழவுடுவேனாம் அதை போய் புடிச்சிக்கிட்டு வரணும் என்ன

நான் ; சரிங்க சார்

சீ ; ம்....போ

நான் ; கோழி எங்க சார்......

சீ ; ஒஹா......நிஜ கோழி இருந்தாதான் சாரு பிடிப்பிங்களா?

நான் ; பின்ன எப்படி சார் பிடிக்கிறது

சீ ; டேய் அடிச்சேன் வச்சுக்க காது கெய்ன்னும்...கோழியை விட்டாச்சி போய் புடிடான்னா......சும்மா பேசிக்கிட்டு இருக்க.....போடா.

அங்க கோழியும் இல்லை ஒன்னும் இல்லை......ஒரு கோழி இருக்குறது மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு அதை பிடிக்கணும். சரின்னு நானும் அப்படி கோழி பிடிக்கிற மாதிரியே ஆக்டு கொடுத்தேன். அத்தோட விட்டானுங்களா இல்லையே....கூடவே சவுண்டும் கொடுக்குணுமாம். கிழிஞ்சது டா இன்னிக்குன்னு நினைச்சுக்கிட்டு பொ....பொ...பொ...ன்னு சவுண்டு விட்டுக்கிட்டு கோழியை பிடிச்சேன். அந்த பஸ்டாப்பே மொத்தமா நான் கோழி பிடிக்கிறதை பார்த்து சிரிக்குது. இன்னிக்கும் அந்த பஸ் டாப்பை கடக்கும் போது அந்த அழகான கல்லூரி நினைவுகள் வரும்.

புன்னகை

என்னதான் அழகான வார்த்தைகள் இருந்தாலும் அது எல்லாம் எல்லா நேரங்களிலும் நமக்கு கை கொடுப்பதில்லை. ஆனா இந்த புன்னகை இருக்கு பாருங்க, பல வார்த்தைகளுக்கு இல்லாத வலிமையும், அழகும் அதுக்கு இருக்கு. பற்கள் இல்லாத பொக்கை வாயுடன் குழந்தைகள் எல்லாம் சிரிக்கும் பாருங்க அவ்வளவு அழகா இருக்கும். நாம அடிக்கிறதும் ஜோக்குன்னு நினைச்சுக்கிட்டு முகம் மலர சிரிப்பாங்க பாருங்க நண்பர்கள் அவ்வளவு அழகா இருக்கும். 80 வயசு கடந்தும் நான் கேட்கும் குறும்பு கேள்விகளுக்கும், கிண்டலுக்கும் எந்த விதமான முகசுலிப்பும் இன்றி தன் உடல் மொத்தமும் குலுங்கி குலுங்கி சிரிப்பாங்க பாருங்க என் பாட்டி அந்த புன்னகை இன்னும் அழகாக இருக்கும். இதே தமிழ்மணத்து நண்பர்கள் எந்த ஒரு கடினாமான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மக்கூட சாட் பண்ணும் போது ஒரு சிரிப்பான் போடுவாங்க பாருங்க அதுக்கூட அழகுதான்.

இடம்

நிறைய குடித்தனங்கள் இருந்த வீடு. அதில ஒரு பகுதியில சின்னதா ஒரு ரூம், சமையல் செய்வதற்கு கொஞ்சம் இடம், பொருட்கள் எல்லாம் வைப்பதற்கு சின்ன இடம் இவ்வளவு தான். ஓட்டு வீடு, எலி தொல்லை வேற , மழை பெய்தால் ஒழுகும். கால் நீட்டி படுப்பதற்கு கூட வசதி இல்லாத இடம். ஒண்டி குடித்தனமுன்னு சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரி. மேல இருக்குற கூறைக்கு முட்டுக் கொடுத்து ஒரு மராத்தூண் இருக்கும் அது மேல ஏறி சறிக்கி விளையாடுவேன். பல சுப நிகழ்ச்சிகள் நடந்த இடம் அது. நான் நேரில் கண்ட முதல் மரணமும் அந்த வீட்டில் தான். அந்த வீட்டில் இருக்கும் போது தான் நான் பிறந்தேனாம். இப்பவும் என் கனவுகளில் அடிக்கடி அந்த வீடு வரும். கிட்டதட்ட என் பாட்டி அந்த வீட்டில் நாற்பது வருஷம் இருந்தாங்களாம். இன்று பல வசதிகள் கூடிய வேற வீட்டில் இருக்கிறோம் ஏனோ எனக்கு அந்த பழைய வீடு தான் அழகுன்னு தோணுது.

பதிவு ரொம்ப பெரிசா ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். என்ன அய்யனார் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. இந்த ஓட்டத்தை அடுத்த மூணு பேருக்கிட்ட கொடுக்கானுமாம். இது நமக்கு ரொம்ப நல்லா வருமே.

பாடலாசிரியர் திரு. ஜி

தமிழ்மணத்தில் எப்போதும் first வரும் மை ஃபிரண்ட்

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்மணத்தை கலக்கும்
திரு. கானா பிரபா

Saturday, April 07, 2007

படம் பார்க்கலாம் வாங்க

இயற்கையின் கைவண்ணங்கள் இவை

Transparent butterfly - தெளிந்த பட்டாம்பூச்சிகள்








செயற்கையின் கைவண்ணங்கள் இவை

Transparent Laptop - தெளிந்த மடிப்பு கனிணி




















கைநிறைய ஆணிதான் இருக்கு....அதான் இப்படி படம் கட்டுறேன்.
(இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியுனுமா என்ன)