Thursday, March 29, 2007

தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...

மக்களே......நேத்து "படிக்காதவன்" படத்துல ஜனகராஜ் நடிச்ச காமெடி ( தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...) ஒன்னு பார்த்தேன். அதை அப்படியே நம்ம வளையுலகத்து ஜனகராஜ், அடிச்சி ஆடும் அண்ணாத்த அபி அப்பாவை வச்சி இங்க போட்டுருக்கேன். கூடவே தமிழ்மணத்து சிங்கங்கள் எல்லாம் வருவாங்க. இப்ப மேட்டருக்கு போங்க ;-))


நம்ம அண்ணாத்த தேவோட சென்னைகச்சேரியில அடிச்சி ஆடும் அண்ணாத்த அபி அப்பா 500 பின்னூட்டம் அடிச்சதுக்கு வாழ்த்து சொல்லலாமுன்னு அவரை பார்க்க போனேன்.

அபி அப்பா ; அய்யய்யோ இந்த அநியாத்தை கேட்க யாருமே இல்லையா....

நான் ; என்ன அண்ணாத்த என்ன ஆச்சு?

அபி அப்பா ; வா தம்பி உட்காரு....தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...

நான் ; தங்கச்சிய நாய் கடிச்சதுக்கு நீ எதுக்குப்பா காலுல்ல கட்டு போட்டுயிருக்க?

அபி அப்பா ; அதான் சொன்னனே தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
குடிச்சயாண்ட போனேன்...தங்கச்சி ஓ..ன்னு அழுதுன்னுயிருந்தது.....என்னாம தங்கச்சின்னு கேட்டேன்....அண்ணாத்த அண்ணாத்த கீழ்ண்டா நாய் கச்சிருச்சின்னு சொல்லிக்கினா....என்னாது இது எனக்கு ஒன்னும் அர்த்தம் புரில்லியே....அட இன்னா அண்ணாத்த கால்ல நாய் கச்சிருச்சின்னு சொல்லிக்கினாப்பா....

சரின்னு சொல்லிக்கினு நானு, வெட்டி, புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு சூளைமேடு வைத்தியாராண்ட போனோம். வைத்தியரே.....வைத்தியரே.....தங்கச்சிக்கு நாய் கச்சிச்சி தங்கச்சியை இட்டார்ட்டான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லிக்கினா நாய கூட்டிக்குனுவான்னு.....எனக்கு கோவம் வந்திருச்சி....எதுக்கு வைத்தியரே நாய்யின்னு கேட்டேன்..அதுக்கு அவன் சொல்லிக்கினா.....பித்தம்புச்ச நாயா, பித்தம்புடிக்காத நாயா....வெறிபுச்ச நாயா....வெறிபுடிக்காத நாயான்னு நான் பாக்க வேணமான்னு.... நாயந்தானேப்பா..

நான் ; நாயம் தான்

அபி அப்பா ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா....
சரின்னு சொல்லிக்கினு நானு,வெட்டி,புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு நேரா தங்கச்சிகிட்ட போனோம்.....தங்கச்சி....தங்கச்சி எந்த நாய்மா உன்னா கச்சதுன்னு கேட்டேன்.....அதுக்கு அவ கேட்டுக்குனா பாரு ஒரு கேள்வி... இன்னா அண்ணாத்த விளார்றியா....கச்ச நாய பல்லபுச்ச பார்க்கமுடியுன்னு சொல்லிக்கினாப்பா.... நாயந்தானேப்பா..

நான்; நாயம் தான்

அபி அப்பா ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
சரின்னு அது எந்த நாய்யின்னு பார்த்துடுலான்னு சொல்லிக்கினு நானு, வெட்டி,புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு நாயை தேடி போனோம்...


புலி: அங்க பஸ் ஸ்டாப்புல நிக்குறது ஜொள்ளு பாண்டி மாதிரி தெரியீது அவனையும் நாய் தேட கூப்பிடு இந்த மாதிரி தேடற மேட்டர்ல எக்ஸ்பர்டு அவன்.

அபி அப்பா: தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...எப்படியாச்சும் அந்த நாய கண்டு புடிச்சி குடு ஜொள்ளு.


ஜொள்ளு: ஏதாச்சும் பிகர் தேடணும்னா சொல்லு ஹெல்ப் பண்றேன், நாய் தேட நான் வந்தேன்னா வரலாறு நாளைக்கு என்னை தப்பா பேசும்.

பாதிவழியிலேயே வெட்டி சொல்லிக்கினா எனக்கு மூடுஅவுட்டு
ஆகிபோச்சி பக்கத்து தியேட்டர்ல என்.டி.ராமாராவு நச்சபடம் ஓடுதுன்னு கழட்டிக்கிறேன்னிக்குனான். புலி சொல்லிக்கிச்சு மண்டவலிக்குது நானும் கழட்டிக்கிறேன்னிக்குனான். தம்பி சொல்லிக்கினா எனக்கு தமிழ்மணத்துல பதிவு எழுதனும் நானும் கழட்டிக்கிறேன்னிக்குனான். சரி போங்கடான்னு அப்படியே பார்த்தேன்பா...ஊர்ல இருக்குற எல்லா நாயும் ரோட்டுல இருக்குதுப்பா...கரைட்டுதானப்பா....

நான்; ரைட்டு

அபி அப்பா; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
ஒரு நாய் என்னையே முறைச்சி பார்த்துக்குன்னு யிருந்ததுப்பா....இன்னாடா இது நமக்கே டேக்கா கொடுக்குதேன்னு பார்த்தேம்பா.....லொள்ளுன்னு கொலைச்சதுப்பா.....கட்சில இந்த நாய்தான் தங்கச்சியை கட்சியிருக்குன்னு லபக்குன்னு ஒரே அமுக்கா அமுக்குனேன்ப்பா...அந்த நாய் என் காலையும் கட்ச்சிருச்சிப்பா.....

தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...

மக்களே...இது ஒரு நகைச்சுவை மட்டுமே என்பது உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்.


டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா......இப்போது எல்லாம் பதிவு போடுரோமோ இல்லையோ டிஸ்கி கண்டிப்பா போட்டுடனும். அதுவும் அந்த டிஸ்கி பதிவை குழப்புறமாதிரி இருக்கனும். அதான் இப்பத்திய பேசனே.

டிஸ்கிக்கு டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...அண்ணாத்த அபி அப்பா புண்ணியத்துல ஒரு பதிவு.

டிஸ்கிக்கு டிஸ்கி போட்டதுநாள டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...ரெண்டு டிஸ்கி போட்டா ராசியில்லையாம் அதுக்கு தான் இந்த டிஸ்கி.

Monday, March 19, 2007

மை ஃபிரண்டுக்காக ஐந்து..

நம்ம தோழி (மை ஃபிரண்ட்) ஒரு வீட்டு பாடத்தை கொடுத்து எழுதி பதிவா போட சொன்னாங்க. என்னிக்கு நம்ம எல்லாம் சரியா வீட்டு பாடத்தை முடிச்சுருக்கோம். என்னைப் பற்றி 5 வியர்ட்டான (weird) விஷயங்களை எழுத வேண்டுமாம். இப்படி தீடிரென்னு கேட்டா எப்படி? இருந்தாலும் பரவாயில்லை எழுதலாம்னு உட்கார்ந்தா ஒரே குழப்பம் எதை சொல்லறது எதை விடுவதுன்னு ஒரே குழப்பம் ;-) எப்படியோ ஐந்தை எழுதிவிட்டேன். அப்புறம் எனக்கும் வீட்டு பாடம் கொடுத்த தோழிக்கு என் நன்றிகள்.





கோபம்
இது எப்ப வரும் எப்படி வரும் எல்லாம் தெரியாது ஆனா வரவேண்டியா நேரத்துல கரைக்டா வரும். எங்க பாட்டி சின்ன வயசுல சொல்லும், "கோபம் உன்னையும் கொல்லும் எதிராளியையும் கொல்லும்" என்று. வளர வளர தான் இது எனக்கு அதிகம் ஆகிடிச்சுன்னு நினைக்குறேன். சரி இனிமே கோபமே படக்கூடாதுன்னு முடிவு செய்து என் கோபத்தை கட்டுபடித்திக் கிட்டு தேவையில்லாமா பேசாம இருப்பேன். ஆனா இது எல்லாம் சில மணி நேரம் தான் அதுக்கு மேல முடியாது. ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு. அதனால இந்த கட்டுபடித்திக்கிறது எல்லாம் சிலபேர்க்காகவும், சில மணிநேரமும் தான். ஆனா நண்பர்கள் கிட்டயும் சரி, மனசுக்கு பிடிச்சவங்க கிட்டடையும் சரி எந்த கட்டுப்பாடும் இல்லாம இருப்பேன்.

தயக்கம்
இதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கு. நான் ஏதவாது கேட்க்கப்போயி அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன். முன்னவிட இப்ப பரவாயில்ல எல்லாம் அனுபவம் தான் ;-)

திட்டம் தீட்டுவது
இதுக்கும் எனக்கும் ராசியே இல்லைங்க. எப்போதாவது அதிசியமா சில விஷயம் நான் திட்டம் போட்ட மாதிரி நடக்கும். உதராணத்திற்கு இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். டக்குன்னு எதுவும் எனக்கு அமையரது இல்லை.
என் ராசி அப்படி போல ;-(

ஈடுபாடு

எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் திறந்தாவே தூக்கம் வந்துடும். ஆனா கல்லூரிக்கு போனபிறகு அப்படி இருக்க முடியல நிறைய அவமானங்கள் பட்டேன். அப்பதான் படிப்பு மேலேயே ஒரு ஈடுபாடு வந்தது. இனி படிச்சா தான்டா பொழப்பேன்னு தோணுச்சசி. இந்த ஈடுபாடு விஷயம் வேலையிலும் நடக்கும், என்னால முடியாதுன்னு சொன்ன பிறகும் அதனை செய்யுன்னு சொன்னா என்னையும் அரியாமல் சொதப்பிடுவேன். அதனால ஈடுபாடு இல்லாத எந்த ஒரு விஷயத்தில் இருந்தும் கழண்டுக்குவேன்.

கற்றுக்கொள்ளுதல்
"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிர கற்ப்பிக்க கூடாது"
ஒரு தினசரி காலெண்டரில் படித்த வாசகம் (சரியா எழுதியிருக்கனான்னு தெரியவில்லை) வாழ்க்கை முழுவதும் நீ மாணவன் தான்னு சொன்ன வாசகம் அது. இன்னிக்கு வரைக்கும் புதுசு புதுசா ஒவ்வொரு மனிதர்கள் கிட்ட இருந்து ஏதாவது புது விஷயம் கத்துகிட்டு தான் இருக்கேன். எனக்கு ஏதாவது தெரியவில்லைன்னா மற்றவங்க்க்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன் அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி.


எப்படியோ மை ஃபிரண்ட் கொடுத்த வீட்டு பாடத்தை முடிச்சுட்டேன். என்ன தோழி சரியா செய்திருக்கேனா எப்படி மார்க் எல்லாம்? தேர்ச்சி உண்டா அல்லது தேர்ச்சி இல்லையா? அப்புறம் இதே கேள்வியை இன்னும் 5 பேருக்கு கொடுக்கனுமாம். இது தான் நமக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே

1. மகரந்தம் ராகவன்
2. தங்க கம்பி தம்பி உமா.கதிரவன்
3. அடிச்சு ஆடும் அண்ணன் அபி அப்பா
4. காமெடி பெண் சூப்பர் ஸ்டார் கண்மணி
5. காலண்டர் கவிஞர் மணி பிரகாஷ்

மக்கா என்னை மாதிரி லேட்டா எல்லாம் செய்யக்கூடாது சீக்கிரம் செய்யனும்.அப்புறம் அடுத்த ஐந்து பேருக்கு அல்வா கொடுங்கனும்.
இதுல யாராவது எற்கனவே செய்திருந்தால் விட்டுடுங்க.

Wednesday, March 14, 2007

எங்க ஏரியா மார்க்கெட்...

முதலில் நட்சத்திரமாக மின்னிக் கொண்டுயிருக்கும்
எங்கள் துபாய் சிங்கம், தங்கம் திரு. உமா. கதிரவன். (தம்பி)
அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

வணக்கம் மக்கா எல்லாம் எப்படி இருக்கீங்க?? நல்லா தான் இருப்பீங்க. இங்க என்னை பின்னி பெடலேடுக்குறானுங்க. போதும் என்னால முடியல விடுங்கடான்னு சொன்னாலும் "முடியும் உன்னால முடியும், கோபியால முடியுமுன்னு" "சத்திரியன்" பட வசனம் எல்லாம் பேசுறானுங்க.

வர வர இந்த மேனேஜர் ரொம்ப தெளிவாய்ட்டாரு எல்லாத்துக்கும் டைம் போட்டு குமுறு குமுறுன்னு குமுறாரு. இதை எல்லாம் சமளிச்சு பதிவும், பின்னூட்டமும் போடுறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. சரி ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் கிட்ட இருந்து போன், சீக்கிரம் ரூமுக்கு வாடான்னு. சரின்னு ரும்முக்கு போனேன்.

"டேய் என்னடா ஆச்சு எதுக்கு டா போன் பண்ணி வரச்சொன்னே?"

"இதுக்குதான்னு" டி.வி யை காட்டினான்....டி.வியில ஜெயம் ரவி நடிச்ச படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

"என்ன படம் டா இது?"

"இது தான் தீபாவளி!!!"


"ஓகே இது தான் அந்த தீபாவளியா? இதை பார்த்ததுக்கு அப்புறம் நமக்கு எதுவும் வலி வராதே??"

"அது உன் கெப்பாசிட்டிய பொருத்தது மச்சி"

ஆகா.... தம்பி வேற "போகாதே...போகாதே...தீபாவளி"ன்னு ஓரு பதிவை போட்டு எச்சரிக்கை கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. எப்படியும் எஸ்கேப் ஆகிடவேண்டியது தான்னு முடிவு பண்ணி...."சாரி மச்சி இப்ப நமக்கு அந்த அளவுக்கு கெப்பாசிட்டி இல்ல நான் தூங்க போறேன்னு சொன்னேன்."

"அட இருடா இந்த படம் உங்க ஏரியாவுல எடுத்த படமாம் அதுல உங்க ஏரியா மார்க்கெட் கூட வருதாம் அதனால நீ கண்டிப்பா பார்க்கனும்னு" பயபுள்ளைங்க முழுபடத்தையும் கதற...கதற...தூங்கி...தூங்கி பார்க்க வச்சிட்டானுங்க

"டேய் நான் உங்களுக்கு என்ன பாவம் டா பண்ணேன் ஏன்டா இப்படி?? இப்ப நீங்க நிம்மதிய தூங்குவிங்க இல்ல".....இனி எங்க இருந்து நான் தூங்குறது சரி ஒரு டீயவாது சாப்பிட்டு வரலாமன்னு டீ கடைக்கு போனேன்....போற வழியில நானும் கொஞ்சம் கொசுவத்தியை சுத்திக்கிட்டே போனேன்.


தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் வடக்கு பகுதியில் அமைந்ததுதான் எங்க ஏரியா "ராயபுரம்".




எங்க ஏரியா தான் தமிழகத்தின் முதல் சட்டமன்ற தொகுதி. (படித்ததில் ஞாபகம் ஏதாவது பிழை இருந்தால் சொல்லுங்க மக்கா) அப்புறம் சரக்கு போக்கு வரத்திற்காக முதமுதல்ல ரயில் நிலையம் கட்டியது எங்கள் ராயபுரத்தில் தான். எங்க ஏரியா சென்னை துறைமுகத்திற்கு கிட்ட இருக்கு. ஏரியாவை காத்த பல எல்லைச்சாமிகள் இறந்த பூமி அது
(ஒரு பயபுள்ளையும் ஒழுங்கா சாவுல) இப்படி பல பெருமையான தகவல் இருந்தாலும் சில வருத்தம் அடைக்கின்ற செய்திகளும் இருக்கு. இந்த ராயபுரத்துல ஒரு மார்க்கெட் இருக்கு. பேருந்து நிலையத்துக்கு பேரே ராயபுரம் மார்க்கெட்டுதான்னு சொல்லுவாங்க.
அந்த மார்க்கெட்டை தான் இந்த படத்துல காட்டியிருக்காங்க. நாங்க முன்னாடி இந்த மார்க்கெட்டுக்கு பக்கத்துல தான் இருந்தோம். நாங்க இருந்த வீட்டுல இருந்து ஒரு 20 வீடு தள்ளியிருந்தது மார்க்கெட்.


அந்த காலத்து கட்டிடம் மார்க்கெட்டின் ரெண்டு பக்கமும் பெரிய இரும்பு கேட் இருக்கும். உள்ள நுழைந்தவுடன் வலது பக்கத்துல ஒரு மளிகை கடையும் இடது பக்கத்துல ரெண்டு பழக்கடையும் இருக்கும். அதற்கு அடுத்தபடி ரெண்டு பக்கத்துலையும் காய்கறி கடைகள். அப்பறம் ஒரு சின்ன வளையல் கடையிருக்கும். இந்த கடையை கடந்தவுடன் ஒரு சின்ன முஸ்லிம் தூண் ஒன்று இருக்கும் அங்கு எப்போதும் ஊதுவத்தி வாசனை இருந்து கொண்டே இருக்கும். நான் கூட அங்க ஊதுவத்தி ஏத்தி வச்சிருக்கேன். அதனை வாசனையை கடந்தவுடன் இரண்டு கறிகடைகள் வரும்.

அதுக்கு அப்புறம் ஒரு சிறிய சந்து அதன் உள்ளே சென்றால் அங்கு தான் மீன் கடைகள் இருக்கும். எத்தனை வகையான மீன்கள் சுமார் 10 கடைகளவாது இருக்கும். அதற்கு பிறகு மீண்டும் இரண்டு பக்கமும் காய்கறி கடைகள் தான். இந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு வாழ இலைகடையிருக்கு அங்க எப்ப பார்தலும் தாயம், சீட்டுன்னு இல்லன்னா யாரவாது தூங்கிக்கிட்டு இருப்பாங்க. கடைசியில் ஒரு வெற்றிலை கடையும், ஒரு வேர்கடலை கடையும் இருக்கும். இதற்கு எதிர்த்தாப்புல ஒரு வளையல் கடை இருந்ததாக ஞாபகம். கடைசியில் மீண்டும் பழக்கடைகளுடன் முடிந்து விடும்.

எல்லா மதத்தை சார்ந்தவங்களும் இங்கு கடை வைத்திருந்தாங்க. நல்ல மனிதர்கள் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் ஒற்றுமையுடன் சேர்ந்து போராடுவார்கள். தீடிரென்று ஒரு நாள் இந்த மார்க்கெட் சற்று உள்ளே சென்றுவிட்டது.(உள்ளே என்றால் பூமிக்கு அடியில்)நிறைய இடத்தில் வெடிப்பும், பள்ளமும் வந்துருச்சி. சின்ன வயசுல எங்க பாட்டிகூட போகும்போது ஜாலியா இருக்கும். காய்கறிக்கு ஒரு கடை, மீன்களுக்கு ஒரு கடை, பழங்களுக்கு ஒரு கடைன்னு நல்லா தெரிஞ்சவங்க கிட்ட தான் வாங்கும் எங்க பாட்டி.


இப்ப இந்த மார்க்கெட்டையே இடிச்சு அந்த இடத்துல ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ் வந்துடுச்சு. அதுக்கு கீழே சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் இருக்கு. போன தடவை லீவுக்கு போயிருக்கும் போது பசங்ககூட சேர்ந்து அந்த இடத்துக்கு போனேன். இப்ப எல்லாம் வெளியிலேயே கடையை நடத்துறாங்க சில முகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. ஏரியாவை பத்தி நிறைய சொல்லலாம்...இப்பத்திக்கு இந்த மார்க்கெட் வரைக்கும் போதும் கொசுவத்தியை இத்தோட அனைச்சுக்குறேன் மக்கா.






இது தான் ராயபுரம் ரயில்வே நிலையம் பழசு....




இது புதுசு

Friday, March 02, 2007

செல்போன்....



வேலைக்கு வந்து கொண்டுயிருக்கும் போது FMல ஒரு நிகழ்ச்சி.
அந்த FMல ஒரு அக்கா ஒரு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த கேள்வியை பெரியவங்க குட்டி பசங்க கிட்ட கேட்பாங்க அதுக்கு அந்த குட்டி பசங்க பதில் சொல்லனும்.....

ஆஹா.......இன்னிக்கு எவன் எவனெல்லாம் மாட்ட போறானோ..

முதல்ல ஒரு சின்ன பொண்ணு பேசினா

FMம் பெண்: ஹலோ...எப்படி இருக்கிங்க....உங்க பேரு என்ன?

சின்ன பெண்: ஹலோ....ஆன்டி நான் நல்லாயிருக்கேன்....நீங்க எப்படி இருக்கீங்க???

FMம் பெண்: நான் நல்லாயிருக்கேன் செல்லம்....உங்ககிட்ட ஒரு கேள்வி சின்ன பசங்களுக்கு cell phone தேவையா??? உங்க்கிட்ட இன்னும் கேள்வி கேட்குறதுக்கு ஒரு பெரியவங்க lineல இருக்காங்க....அவுங்ககிட்ட பேசுங்க...

சி.பெண்: சரி...ஆண்டி அவுங்ககிட்ட கொடுங்க..

அந்த நபர்: ஹலோ...எப்படி இருக்கீங்க....எந்த வகுப்பு படிக்கிறிங்க...

சி.பெண்: நான் நல்லா இருக்கேன் அங்கிள்....6 வகுப்பு படிக்கிறேன்...

அந்த நபர்: அப்படியா.....சின்ன பசங்களுக்கு செல்போன் தேவையா?? எதுக்கு???

சி.பெண்:
கண்டிப்பா தேவை அங்கிள்....இதுக்கு என் lifeல நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன்...நான் school முடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது எங்க வீட்டு சாவியை காணோம்....அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போயிட்டாங்க.....அக்கம் பக்கத்து எல்லா வீட்டுலையும் ஒரு call பண்ணிக்க கெஞ்சி கெஞ்சி கேட்டேன்......அங்க இருந்தவங்க நிறையபேரு அரபிகள் நான் சொல்லறது அவுங்களுக்கு புரியல...அப்புறம் ஒருத்தவங்க help பண்ணாங்க......இதுவே என்கிட்ட செல்போன் இருந்தா உடனே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தகவல் சொல்லி அவுங்களும் வந்துயிருப்பாங்க இல்ல.

அந்த நபர்: சரிம்மா....இது ஏதோ ஒரு தடவை நடந்ததுதானே....class roomல எதுக்கு செல்போனு...நீங்க படிச்சுக்கிட்டு இருக்கும் போது sms, missed callன்னு தேவையில்லாம வரும் அது உங்களுக்கு இடைஞ்சல் தானே.

சி.பெண்: அங்கிள்...நாங்க class roomல செல்போனை switch off செஞ்சிடுவோம்.

அந்த நபர்: switch off செய்றதுக்கு எதுக்கு செல்போனு.

சி.பெண்: அங்கிள்....class roomல இருக்கும் போது ஏதவாது தேவைப்பட்டால் teachersக்கிட்ட கேட்போம் அதனால அப்ப செல்போன் தேவையில்ல அதனால switch off செஞ்சிடுவோம்.

FMம் பெண்: ஆஹா...ஹி..ஹி..ஹி....சார் வேற எதாவது கேட்கனுமா???

அந்த நபர்: இல்லம்மா.....என்னை பொறுத்த வரைக்கும் சின்ன பசங்களுக்கு செல்போன் தேவையில்ல இது என் கருத்து.

FMம் பெண்: சரி நேயர்களே இப்ப அடுத்த callக்கு போலாமா......ஹலோ உங்க பேரு என்ன? எந்த வகுப்பு படிக்கிறிங்க??

சி.பையன்: என் பேரு @#$#$#$#* (பேரு தெரியலிங்க மக்கா).....3 வது படிக்குறேன்...

FMம் பெண்: சரி உங்ககிட்ட கேள்வி கேட்குறதுக்கு ஒருத்தர் lineல இருக்காங்க அவுங்ககிட்ட பேசுங்க.....

புதிய நபர்: ஹலோ...எந்த வகுப்பு படிக்கிறிங்க....

சி.பையன்: 3 வது அங்கிள்.

புதிய நபர்: சரி....சின்ன பசங்களுக்கு செல்போன் எதுக்கு??? அந்த காலத்துல எல்லாம் செல்போன் இல்லாம தானே எல்லாம் படிச்சாங்க.

சி.பையன்: அப்ப அந்த Technology இல்ல..

புதிய நபர்: ............................

FMம் பெண்: சார்...வேற கேள்வி எதுனா கேளுங்களேன்...

புதிய நபர்: வேற கேள்வி எல்லாம் இல்லைங்க...என்னை பெறுத்தவரைக்கும் சின்ன பசங்களுக்கு செல்போனு வேணுமுன்னும் சொல்ல முடியல வேண்டாமுன்னும் சொல்ல முடியல.....ஆனா சின்ன குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம்...

FMம் பெண்: என்ன சார் குழப்புரிங்க.......சரி நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி........ஹலோ @#$#$#$#* நான் இப்ப உன்னை ஒரு கேள்வி கேட்குறேன். உனக்கு எதுக்கு செல்போன்...

சி.பையன்: நீங்க எதுக்கு செல்போன் வச்சிருக்கீங்க.

FMம் பெண்: ம்ம்ம்....யாரு நானா!!!!! friendக்கு எல்லாம் sms அனுப்ப, பேசறதுக்கும்....

சி.பையன்: அதே மாதிரி தான்.....லீவு போட்டா friendகிட்ட homework discuss செய்றதுக்கு, அப்புறம் இந்தியாவுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒரு sms செய்தால் போதும் எல்லாத்துக்கும் தான்.

FMம் பெண்: அப்ப இந்தியாவுல என்ன நடக்கிறது என்பதை தெரிஞ்சிக்க,
homework discuss செய்றதுக்கும் உனக்கு செல்போன் தேவை....சரி நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி.



இந்த நிகழ்ச்சியை கேட்டவுடன் வாரநாள் இதழில் வந்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருது கதை யாரு எழுதுனது என்பதெல்லாம் நினைவில் இல்லை, (யாருக்கு தெரியும் தமிழ்மணத்துல கூட அந்த நபர் இருக்கலாம்)கதையும் ஒர் அளவுக்கு தான் நினைவில் இருக்கின்றது அதை வைத்து சுமாராக எழுதியிருக்கிறேன்.

"இன்னிக்கு இருக்குற விஞ்ஞான வளர்ச்சியில இயந்திரங்களோடு இயந்திரமா வாழ்ந்துக்கிட்டு இருக்கிற மகனுக்கு அந்த காலத்து கணக்குபிள்ளையான தன் அப்பவை கண்டாலே எரிச்சலா வரும். அப்பாவோட முதலாளி அப்பாக்கிட்ட எப்ப எந்த கணக்கு விபரம் கேட்டாலும் டக்கு, டக்குன்னு பதில் சொல்வாறாம். அப்பாவோட ஞாபகசக்தியை ரொம்ப பெருமையா சொல்லுவாங்க அவனோட அம்மா. இந்த பெறுமை எல்லாம் கேட்குறதக்கே அவனுக்கு புடிக்காது. அந்த ஞாபகசக்தியை வச்சி ஒரு மண்ணும் வாங்கிட முடியாதுன்னு பதில் சொல்வான் இவன்.

ஒரு வேலை விஷயமா ஒரு ஊருக்கு போறான் போற வழியில அவனோட செல்பேனை தொலைச்சுடுறான். என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. எல்லா நம்பர்களும் அதுலதான் இருக்கு.....பக்கத்துல இருக்குற டெலிபோன் பூத்துக்கு போறான் ரிசிவரை எடுத்து நம்பரை அழுத்துறான் ரெண்டு நம்பருக்கு மேல அவனுக்கு ஞாபகம் இல்ல. எவ்வுளவோ யோசிச்சி பார்க்குறான் முடியல...பூத்தவிட்டு வெளிய வரான். தன்னோட நண்பர்கள் நம்பரை எல்லாம் யோசிச்சி யோசிச்சி பார்க்குறான் ம்....ஹும் ஒன்னும் முடியல. உடம்பு எல்லாம் வியர்த்து கொட்டுது....கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லோரும் அவனை விட்டு தூரத்துல போயிடுற மாதிரி நினைப்பு. ஒரு எட்டு நம்பரை கூட ஞாபகத்துல வச்சிக்க முடியலன்னு அவனோட நிலையை நினைத்து வேதனைப்படுறான்.

அப்ப அவனுக்கு அவன் அப்பாவோட முகம் மட்டும் நினைவுக்கு வருது. தன் அப்பவோட ஞாபகசக்தியை நினைத்து கண்கள் கலங்கி நிக்குறான்.
தன் அப்பாவை பார்த்து அவர்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டும்ன்னு நினைக்குறான். ID கார்டில் இருந்த நம்பரை வச்சி கம்பெனிக்கு போன் பண்ணி தன் வீட்டு நம்பரை வாங்கி வீட்டுக்கு போன் பண்றான். எதிர்முனையில் அவனோட மனைவி பதட்டத்துடன் பேசுறா...

"எங்க இருக்கீங்க.........உங்க செல்பேன் என்ன ஆச்சு..........ரிங் போகுது ஆனா எடுக்க மாட்டேங்கிறிங்க...."

"அது தொலைந்து போச்சு........ஏன் பதர்ர.....விஷயத்த சொல்லு... "

"உங்க அப்பா இறந்துட்டாருங்க........ஊர்லயிருந்து போன் வந்துச்சின்னு சொல்லறா...." இடிஞ்சி போய் நிக்குறான்,

சக மனுஷனோட அருமையை புரிஞ்சுக்க முடியாம இருந்திருக்கமேன்னு நினைச்சு வேதனைப்படறான்.

மனுஷன் கண்டுபிடிச்ச இயந்திரங்கள் கிட்ட அந்த மனுஷனே தன்னோட சக்தியை இழந்துகிட்டு இருக்கான்னு தெரியமாலே இருக்கான். தெருவுல விளையாடி அடிப்பட்ட காயங்களை கூட இன்னைக்கும் நாம பெறுமையா பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா இன்னைக்கு குழந்தைகள் அடிபடமா வீட்டுகுள்ளேயே வச்சி விளையாட வீடியோ கேம்ஸ் வாங்கி கொடுக்கிறோம். நண்பனுக்கு கல்யாண வாழ்த்தோ, பிறந்த நாள் வாழ்த்தோ எதுவா இருந்தாலும் ஒரு SMSல முடிஞ்சுடுது. ஒரு மெயில் அனுப்பினா அதை அவன் பார்த்து replay பண்றதுக்கு ஒரு SMS அனுப்ப வேண்டியிருக்கு. அந்த அளவுக்கு எல்லோரும் பிசியா இருக்காங்க.

இயந்திரங்களை நம்பி வாழ ஆரம்பிச்சாச்சு இதுல சின்ன பசங்க என்ன பெரியவங்க என்ன எல்லோரும் மனுஷங்கதானேன்னு தோணுது.

என் செல்போனை கையில் எடுத்து பாக்குறேன் அது என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைய தொலைச்ச நீ தொலைஞ்சன்னு சொல்லற மாதிரி இருக்கு.