Wednesday, March 14, 2007

எங்க ஏரியா மார்க்கெட்...

முதலில் நட்சத்திரமாக மின்னிக் கொண்டுயிருக்கும்
எங்கள் துபாய் சிங்கம், தங்கம் திரு. உமா. கதிரவன். (தம்பி)
அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

வணக்கம் மக்கா எல்லாம் எப்படி இருக்கீங்க?? நல்லா தான் இருப்பீங்க. இங்க என்னை பின்னி பெடலேடுக்குறானுங்க. போதும் என்னால முடியல விடுங்கடான்னு சொன்னாலும் "முடியும் உன்னால முடியும், கோபியால முடியுமுன்னு" "சத்திரியன்" பட வசனம் எல்லாம் பேசுறானுங்க.

வர வர இந்த மேனேஜர் ரொம்ப தெளிவாய்ட்டாரு எல்லாத்துக்கும் டைம் போட்டு குமுறு குமுறுன்னு குமுறாரு. இதை எல்லாம் சமளிச்சு பதிவும், பின்னூட்டமும் போடுறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. சரி ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் கிட்ட இருந்து போன், சீக்கிரம் ரூமுக்கு வாடான்னு. சரின்னு ரும்முக்கு போனேன்.

"டேய் என்னடா ஆச்சு எதுக்கு டா போன் பண்ணி வரச்சொன்னே?"

"இதுக்குதான்னு" டி.வி யை காட்டினான்....டி.வியில ஜெயம் ரவி நடிச்ச படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

"என்ன படம் டா இது?"

"இது தான் தீபாவளி!!!"


"ஓகே இது தான் அந்த தீபாவளியா? இதை பார்த்ததுக்கு அப்புறம் நமக்கு எதுவும் வலி வராதே??"

"அது உன் கெப்பாசிட்டிய பொருத்தது மச்சி"

ஆகா.... தம்பி வேற "போகாதே...போகாதே...தீபாவளி"ன்னு ஓரு பதிவை போட்டு எச்சரிக்கை கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. எப்படியும் எஸ்கேப் ஆகிடவேண்டியது தான்னு முடிவு பண்ணி...."சாரி மச்சி இப்ப நமக்கு அந்த அளவுக்கு கெப்பாசிட்டி இல்ல நான் தூங்க போறேன்னு சொன்னேன்."

"அட இருடா இந்த படம் உங்க ஏரியாவுல எடுத்த படமாம் அதுல உங்க ஏரியா மார்க்கெட் கூட வருதாம் அதனால நீ கண்டிப்பா பார்க்கனும்னு" பயபுள்ளைங்க முழுபடத்தையும் கதற...கதற...தூங்கி...தூங்கி பார்க்க வச்சிட்டானுங்க

"டேய் நான் உங்களுக்கு என்ன பாவம் டா பண்ணேன் ஏன்டா இப்படி?? இப்ப நீங்க நிம்மதிய தூங்குவிங்க இல்ல".....இனி எங்க இருந்து நான் தூங்குறது சரி ஒரு டீயவாது சாப்பிட்டு வரலாமன்னு டீ கடைக்கு போனேன்....போற வழியில நானும் கொஞ்சம் கொசுவத்தியை சுத்திக்கிட்டே போனேன்.


தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் வடக்கு பகுதியில் அமைந்ததுதான் எங்க ஏரியா "ராயபுரம்".




எங்க ஏரியா தான் தமிழகத்தின் முதல் சட்டமன்ற தொகுதி. (படித்ததில் ஞாபகம் ஏதாவது பிழை இருந்தால் சொல்லுங்க மக்கா) அப்புறம் சரக்கு போக்கு வரத்திற்காக முதமுதல்ல ரயில் நிலையம் கட்டியது எங்கள் ராயபுரத்தில் தான். எங்க ஏரியா சென்னை துறைமுகத்திற்கு கிட்ட இருக்கு. ஏரியாவை காத்த பல எல்லைச்சாமிகள் இறந்த பூமி அது
(ஒரு பயபுள்ளையும் ஒழுங்கா சாவுல) இப்படி பல பெருமையான தகவல் இருந்தாலும் சில வருத்தம் அடைக்கின்ற செய்திகளும் இருக்கு. இந்த ராயபுரத்துல ஒரு மார்க்கெட் இருக்கு. பேருந்து நிலையத்துக்கு பேரே ராயபுரம் மார்க்கெட்டுதான்னு சொல்லுவாங்க.
அந்த மார்க்கெட்டை தான் இந்த படத்துல காட்டியிருக்காங்க. நாங்க முன்னாடி இந்த மார்க்கெட்டுக்கு பக்கத்துல தான் இருந்தோம். நாங்க இருந்த வீட்டுல இருந்து ஒரு 20 வீடு தள்ளியிருந்தது மார்க்கெட்.


அந்த காலத்து கட்டிடம் மார்க்கெட்டின் ரெண்டு பக்கமும் பெரிய இரும்பு கேட் இருக்கும். உள்ள நுழைந்தவுடன் வலது பக்கத்துல ஒரு மளிகை கடையும் இடது பக்கத்துல ரெண்டு பழக்கடையும் இருக்கும். அதற்கு அடுத்தபடி ரெண்டு பக்கத்துலையும் காய்கறி கடைகள். அப்பறம் ஒரு சின்ன வளையல் கடையிருக்கும். இந்த கடையை கடந்தவுடன் ஒரு சின்ன முஸ்லிம் தூண் ஒன்று இருக்கும் அங்கு எப்போதும் ஊதுவத்தி வாசனை இருந்து கொண்டே இருக்கும். நான் கூட அங்க ஊதுவத்தி ஏத்தி வச்சிருக்கேன். அதனை வாசனையை கடந்தவுடன் இரண்டு கறிகடைகள் வரும்.

அதுக்கு அப்புறம் ஒரு சிறிய சந்து அதன் உள்ளே சென்றால் அங்கு தான் மீன் கடைகள் இருக்கும். எத்தனை வகையான மீன்கள் சுமார் 10 கடைகளவாது இருக்கும். அதற்கு பிறகு மீண்டும் இரண்டு பக்கமும் காய்கறி கடைகள் தான். இந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு வாழ இலைகடையிருக்கு அங்க எப்ப பார்தலும் தாயம், சீட்டுன்னு இல்லன்னா யாரவாது தூங்கிக்கிட்டு இருப்பாங்க. கடைசியில் ஒரு வெற்றிலை கடையும், ஒரு வேர்கடலை கடையும் இருக்கும். இதற்கு எதிர்த்தாப்புல ஒரு வளையல் கடை இருந்ததாக ஞாபகம். கடைசியில் மீண்டும் பழக்கடைகளுடன் முடிந்து விடும்.

எல்லா மதத்தை சார்ந்தவங்களும் இங்கு கடை வைத்திருந்தாங்க. நல்ல மனிதர்கள் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் ஒற்றுமையுடன் சேர்ந்து போராடுவார்கள். தீடிரென்று ஒரு நாள் இந்த மார்க்கெட் சற்று உள்ளே சென்றுவிட்டது.(உள்ளே என்றால் பூமிக்கு அடியில்)நிறைய இடத்தில் வெடிப்பும், பள்ளமும் வந்துருச்சி. சின்ன வயசுல எங்க பாட்டிகூட போகும்போது ஜாலியா இருக்கும். காய்கறிக்கு ஒரு கடை, மீன்களுக்கு ஒரு கடை, பழங்களுக்கு ஒரு கடைன்னு நல்லா தெரிஞ்சவங்க கிட்ட தான் வாங்கும் எங்க பாட்டி.


இப்ப இந்த மார்க்கெட்டையே இடிச்சு அந்த இடத்துல ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ் வந்துடுச்சு. அதுக்கு கீழே சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் இருக்கு. போன தடவை லீவுக்கு போயிருக்கும் போது பசங்ககூட சேர்ந்து அந்த இடத்துக்கு போனேன். இப்ப எல்லாம் வெளியிலேயே கடையை நடத்துறாங்க சில முகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. ஏரியாவை பத்தி நிறைய சொல்லலாம்...இப்பத்திக்கு இந்த மார்க்கெட் வரைக்கும் போதும் கொசுவத்தியை இத்தோட அனைச்சுக்குறேன் மக்கா.






இது தான் ராயபுரம் ரயில்வே நிலையம் பழசு....




இது புதுசு

35 comments:

மு.கார்த்திகேயன் said...

First

மு.கார்த்திகேயன் said...

Attendance mark pannikoppaa Gopi. appala varren Gopi

நாகை சிவா said...

ஏலேய், நீ ராயபுரமா?

உசார்டி மக்கா உசார்டி....

நாகை சிவா said...

//அப்புறம் "சரக்கு" போக்கு வரத்திற்காக முதமுதல்ல ரயில் நிலையம் கட்டியது எங்கள் ராயபுரத்தில் தான். //

அப்படியா... இப்படிபட்ட ஒர் இடத்தில் இருந்து நீ வரதுக்கு ரொம்பவே குடுத்து வச்சு இருக்கனும் மக்கா!!!

MyFriend said...

போகாதே போகாதேன்னு சொல்லியும் பார்த்திருகீங்களே!!!!

உங்க கெபாசிட்டி பரவாயில்லையே!

MyFriend said...

ராயபுரம் - ஒரு அறிமுகம்..

நல்லா இருக்கு.. :-)

அபி அப்பா said...

கோபிதம்பி! நல்ல சுத்தீட்ட கொசுவத்தி! ராயபுரம் ஆளா நீ, கொஞ்சம் ஜாக்கிரதியா இருக்கனும்பா உன் கிட்ட:-)))

அபி அப்பா said...

இப்பல்லாம் என்ன ரேட் தம்பி ஒரு தலைக்கு உங்க ஊர்ல

கோபிநாத் said...

வாங்க தலைவா...

\\ மு.கார்த்திகேயன் said...
Attendance mark pannikoppaa Gopi. appala varren Gopi\\\

கண்டிப்பா வாங்க...

கோபிநாத் said...

வாங்க சிவா..

\\ நாகை சிவா said...
ஏலேய், நீ ராயபுரமா?

உசார்டி மக்கா உசார்டி....\\

யாரு உசார்ரு??

கோபிநாத் said...

வாங்க தோழி...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
போகாதே போகாதேன்னு சொல்லியும் பார்த்திருகீங்களே!!!!

உங்க கெபாசிட்டி பரவாயில்லையே! \\

நான் எங்க போனேன் என்னை குந்தவச்சி குமுறிட்டாங்க ;((

\\ராயபுரம் - ஒரு அறிமுகம்..

நல்லா இருக்கு.. :-)\\

நன்றி...நன்றி..

கோபிநாத் said...

வாங்க அபி அப்பா..

\\அபி அப்பா said...
இப்பல்லாம் என்ன ரேட் தம்பி ஒரு தலைக்கு உங்க ஊர்ல \\

அது ஆளை பொறுத்து அபி அப்பா...இப்ப நீங்க நம்ம தல (தலை இல்ல) அதுனால கொஞ்சம் தள்ளுபடி கொடுக்கப்படும்...சரி யாரு தலையை எடுக்கனும்..

Dev Payakkal said...

enga yeriya ulla varathey !!! appdi nu sollureengala?

Syam said...

தகப்பன் சாமியே தெகிரியமா பாத்து இருக்கீங்க தீவாளி எல்லாம் எம் மாத்திரம் :-)

Syam said...

ராயபுரம்னு சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வரது அங்க ஒரு ஹோட்டல் இருக்கு எல்லா ஸ்பேர்பாட்ஸும் கிடைக்கும்...அடிக்கடி போவோம் பேர் மறந்து போச்சு :-)

Arunkumar said...

"ஓகே இது தான் அந்த தீபாவளியா? இதை பார்த்ததுக்கு அப்புறம் நமக்கு எதுவும் வலி வராதே??"

"அது உன் கெப்பாசிட்டிய பொருத்தது மச்சி"
//

LOL... unga friend correcta thaan sollirkaaru :)


apparam nalla kosu varthi suthirkinga.. market ulla pona feeling vandurchi...

Arunkumar said...

கோவலன் மதுரைக்கு வரும்போது கொடி அசஞ்சி
'மதுரைக்கு உள்ள போகாதே போகாதே-னு" சொல்லாம
சொல்லிச்சாம்.. அந்த மாதிரி தம்பி பதிவுக்கு அப்பறமும்
நீங்க படம் பாத்து வாங்கி கட்டிக்கிட்டீங்க..

டீ குடிச்சிட்டு தூக்கம் வந்துச்சா? எனக்கு வரல :(

Swamy Srinivasan aka Kittu Mama said...

andha rayaburam gopiya udanae madakkanum. hai dialogue nalla irukkae...adutha ramgopal varma padathula use pannikka solraen :)

inimae gopi kitta carefulaa deal pannunga baaaaaa :)

கோபிநாத் said...

வாங்க தேவ்....

\\dave...dev said...
enga yeriya ulla varathey !!! appdi nu sollureengala?\\\

அப்படி எல்லாம் இல்ல தேவ் தாரளமா உள்ள வரலாம்.

கோபிநாத் said...

வாங்க முதல்வரே...

\Syam said...
தகப்பன் சாமியே தெகிரியமா பாத்து இருக்கீங்க தீவாளி எல்லாம் எம் மாத்திரம் :-) \\

நம்ம தெகிரியாத்தை பாராட்டிய உங்களுக்கு ஒரு ஓஓஓஓஓ

கோபிநாத் said...

\\Syam said...
ராயபுரம்னு சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வரது அங்க ஒரு ஹோட்டல் இருக்கு எல்லா ஸ்பேர்பாட்ஸும் கிடைக்கும்...அடிக்கடி போவோம் பேர் மறந்து போச்சு :-) \\

நாட்டமை ஹோட்டல்ல எப்படிங்க ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்கும் !!!! புரியலியே

கோபிநாத் said...

வாங்க அருண்...

\\apparam nalla kosu varthi suthirkinga.. market ulla pona feeling vandurchi... \\

எல்லாம் நம்ம மக்கள் கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்...

கோபிநாத் said...

\\Arunkumar said...
கோவலன் மதுரைக்கு வரும்போது கொடி அசஞ்சி
'மதுரைக்கு உள்ள போகாதே போகாதே-னு" சொல்லாம
சொல்லிச்சாம்.. அந்த மாதிரி தம்பி பதிவுக்கு அப்பறமும்
நீங்க படம் பாத்து வாங்கி கட்டிக்கிட்டீங்க..\\\

அருண் உவமை எல்லாம் போட்டு கலக்குறிங்க...

கோபிநாத் said...

வாங்க கிட்டு மாம்ஸ்...

\\ Kittu said...
andha rayaburam gopiya udanae madakkanum. hai dialogue nalla irukkae...adutha ramgopal varma padathula use pannikka solraen :)\\

ஆகா...தாராளமா யூஸ் பண்ணிக்க சொல்லுங்க...

\\inimae gopi kitta carefulaa deal pannunga baaaaaa :)\\

ஓரு முடிவோட தான் கிளம்பிரிக்கிங்க போல ;))

Syam said...

//நாட்டமை ஹோட்டல்ல எப்படிங்க ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்கும் !!!! புரியலியே//

அய்யோ அய்யோ...இன்னும் பெருசுங்க மாதிரியே பேசரீங்களே...ஹார்ட்,கிட்னி,காது,தலை இது எல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் தான...இருங்க அந்த ஹோட்டல் பேரு கேட்டு சொல்றேன் :-)

கோபிநாத் said...

\\Syam said...
//நாட்டமை ஹோட்டல்ல எப்படிங்க ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்கும் !!!! புரியலியே//

அய்யோ அய்யோ...இன்னும் பெருசுங்க மாதிரியே பேசரீங்களே...ஹார்ட்,கிட்னி,காது,தலை இது எல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் தான...இருங்க அந்த ஹோட்டல் பேரு கேட்டு சொல்றேன் :-)\\

அய்யயோ....இதுக்கு போயி எதுக்கு பெருசுன்னு சொல்லிக்கிட்டு.....அந்த ஹோட்டல் பேரு "பாண்டியன்"னா??

அபி அப்பா said...

//அது ஆளை பொறுத்து அபி அப்பா...இப்ப நீங்க நம்ம தல (தலை இல்ல) அதுனால கொஞ்சம் தள்ளுபடி கொடுக்கப்படும்...சரி யாரு தலையை எடுக்கனும்.. //

பாவி மக்கா! ஆட்டுதல கறி சாப்புட்டு நாளாச்சே...அங்க மார்கெட்டுல ஒரு ஆட்டு தல வாங்கி குழ்ம்பு வைக்கலாம்ன்னு கேட்டா, நீ மனுச தலைய பத்தி பேசுற!!

கதிர் said...

லேய் அந்த தீபாவளி படத்துக்கு என்ன கொறச்சல்னு இந்த கதறு கதறிட்ட நீ?

படம் முழுக்க பாவனா வர்றால்ல, அதை பாத்திட்டு இருந்தாவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துடும். அப்பப்ப அந்த பய வந்து இம்சை பண்ணாலும் ஓவரா இம்ச பண்ணல.

எங்க தானைதலைவிய எதிர்த்து இந்த பதிவ போட்டுருக்க.

வேணாம், மன்னிப்பு கேட்டுட்டு ஓடிப்போயிடு

Anonymous said...

one question
ராயபுரம் ன்னு board இருக்கு.அதற்கு கிழே என்ன மொழில கிறுக்கி வைச்சு இருக்காங்க?

Anonymous said...

அப்படியே ஒரு பழைய ராயபுரத்தையே சுத்தி பார்த்த மாதிரி இருந்தது கோபி.

நாகை சிவா said...

//உசார்டி மக்கா உசார்டி....\\

யாரு உசார்ரு?? //

நாங்க தாண்டி உசாரா இருக்கனும்,... உம்மக்கிட்ட

நாகை சிவா said...

////அப்புறம் "சரக்கு" போக்கு வரத்திற்காக முதமுதல்ல ரயில் நிலையம் கட்டியது எங்கள் ராயபுரத்தில் தான். //

அப்படியா... இப்படிபட்ட ஒர் இடத்தில் இருந்து நீ வரதுக்கு ரொம்பவே குடுத்து வச்சு இருக்கனும் மக்கா!!! //

இந்த "சரக்கு" போக்குவரத்த பத்தி நீ ஒன்னுமே சொல்லையே...

கோபிநாத் said...

வாங்க தம்பி .....

\எங்க தானைதலைவிய எதிர்த்து இந்த பதிவ போட்டுருக்க.\

எல....பாவனாப் பத்தி பதிவு போடுறேன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு அலையும் போதே நெனைச்சேன். நீ இப்படி தான் சொல்லுவேன்னு...

கோபிநாத் said...

வாங்க துர்கா..

\\துர்கா said...
one question
ராயபுரம் ன்னு board இருக்கு.அதற்கு கிழே என்ன மொழில கிறுக்கி வைச்சு இருக்காங்க?\\

அதுவா இந்தி ;-)

\\அப்படியே ஒரு பழைய ராயபுரத்தையே சுத்தி பார்த்த மாதிரி இருந்தது கோபி.\\

நன்றி துர்கா ;-)

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
////அப்புறம் "சரக்கு" போக்கு வரத்திற்காக முதமுதல்ல ரயில் நிலையம் கட்டியது எங்கள் ராயபுரத்தில் தான். //

அப்படியா... இப்படிபட்ட ஒர் இடத்தில் இருந்து நீ வரதுக்கு ரொம்பவே குடுத்து வச்சு இருக்கனும் மக்கா!!! //

இந்த "சரக்கு" போக்குவரத்த பத்தி நீ ஒன்னுமே சொல்லையே...\\

சிவா நீ எந்த சரக்கை பற்றி கேட்குறிங்க??? எனக்கு சரியா புரியல