Friday, March 02, 2007

செல்போன்....



வேலைக்கு வந்து கொண்டுயிருக்கும் போது FMல ஒரு நிகழ்ச்சி.
அந்த FMல ஒரு அக்கா ஒரு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த கேள்வியை பெரியவங்க குட்டி பசங்க கிட்ட கேட்பாங்க அதுக்கு அந்த குட்டி பசங்க பதில் சொல்லனும்.....

ஆஹா.......இன்னிக்கு எவன் எவனெல்லாம் மாட்ட போறானோ..

முதல்ல ஒரு சின்ன பொண்ணு பேசினா

FMம் பெண்: ஹலோ...எப்படி இருக்கிங்க....உங்க பேரு என்ன?

சின்ன பெண்: ஹலோ....ஆன்டி நான் நல்லாயிருக்கேன்....நீங்க எப்படி இருக்கீங்க???

FMம் பெண்: நான் நல்லாயிருக்கேன் செல்லம்....உங்ககிட்ட ஒரு கேள்வி சின்ன பசங்களுக்கு cell phone தேவையா??? உங்க்கிட்ட இன்னும் கேள்வி கேட்குறதுக்கு ஒரு பெரியவங்க lineல இருக்காங்க....அவுங்ககிட்ட பேசுங்க...

சி.பெண்: சரி...ஆண்டி அவுங்ககிட்ட கொடுங்க..

அந்த நபர்: ஹலோ...எப்படி இருக்கீங்க....எந்த வகுப்பு படிக்கிறிங்க...

சி.பெண்: நான் நல்லா இருக்கேன் அங்கிள்....6 வகுப்பு படிக்கிறேன்...

அந்த நபர்: அப்படியா.....சின்ன பசங்களுக்கு செல்போன் தேவையா?? எதுக்கு???

சி.பெண்:
கண்டிப்பா தேவை அங்கிள்....இதுக்கு என் lifeல நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன்...நான் school முடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது எங்க வீட்டு சாவியை காணோம்....அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போயிட்டாங்க.....அக்கம் பக்கத்து எல்லா வீட்டுலையும் ஒரு call பண்ணிக்க கெஞ்சி கெஞ்சி கேட்டேன்......அங்க இருந்தவங்க நிறையபேரு அரபிகள் நான் சொல்லறது அவுங்களுக்கு புரியல...அப்புறம் ஒருத்தவங்க help பண்ணாங்க......இதுவே என்கிட்ட செல்போன் இருந்தா உடனே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தகவல் சொல்லி அவுங்களும் வந்துயிருப்பாங்க இல்ல.

அந்த நபர்: சரிம்மா....இது ஏதோ ஒரு தடவை நடந்ததுதானே....class roomல எதுக்கு செல்போனு...நீங்க படிச்சுக்கிட்டு இருக்கும் போது sms, missed callன்னு தேவையில்லாம வரும் அது உங்களுக்கு இடைஞ்சல் தானே.

சி.பெண்: அங்கிள்...நாங்க class roomல செல்போனை switch off செஞ்சிடுவோம்.

அந்த நபர்: switch off செய்றதுக்கு எதுக்கு செல்போனு.

சி.பெண்: அங்கிள்....class roomல இருக்கும் போது ஏதவாது தேவைப்பட்டால் teachersக்கிட்ட கேட்போம் அதனால அப்ப செல்போன் தேவையில்ல அதனால switch off செஞ்சிடுவோம்.

FMம் பெண்: ஆஹா...ஹி..ஹி..ஹி....சார் வேற எதாவது கேட்கனுமா???

அந்த நபர்: இல்லம்மா.....என்னை பொறுத்த வரைக்கும் சின்ன பசங்களுக்கு செல்போன் தேவையில்ல இது என் கருத்து.

FMம் பெண்: சரி நேயர்களே இப்ப அடுத்த callக்கு போலாமா......ஹலோ உங்க பேரு என்ன? எந்த வகுப்பு படிக்கிறிங்க??

சி.பையன்: என் பேரு @#$#$#$#* (பேரு தெரியலிங்க மக்கா).....3 வது படிக்குறேன்...

FMம் பெண்: சரி உங்ககிட்ட கேள்வி கேட்குறதுக்கு ஒருத்தர் lineல இருக்காங்க அவுங்ககிட்ட பேசுங்க.....

புதிய நபர்: ஹலோ...எந்த வகுப்பு படிக்கிறிங்க....

சி.பையன்: 3 வது அங்கிள்.

புதிய நபர்: சரி....சின்ன பசங்களுக்கு செல்போன் எதுக்கு??? அந்த காலத்துல எல்லாம் செல்போன் இல்லாம தானே எல்லாம் படிச்சாங்க.

சி.பையன்: அப்ப அந்த Technology இல்ல..

புதிய நபர்: ............................

FMம் பெண்: சார்...வேற கேள்வி எதுனா கேளுங்களேன்...

புதிய நபர்: வேற கேள்வி எல்லாம் இல்லைங்க...என்னை பெறுத்தவரைக்கும் சின்ன பசங்களுக்கு செல்போனு வேணுமுன்னும் சொல்ல முடியல வேண்டாமுன்னும் சொல்ல முடியல.....ஆனா சின்ன குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம்...

FMம் பெண்: என்ன சார் குழப்புரிங்க.......சரி நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி........ஹலோ @#$#$#$#* நான் இப்ப உன்னை ஒரு கேள்வி கேட்குறேன். உனக்கு எதுக்கு செல்போன்...

சி.பையன்: நீங்க எதுக்கு செல்போன் வச்சிருக்கீங்க.

FMம் பெண்: ம்ம்ம்....யாரு நானா!!!!! friendக்கு எல்லாம் sms அனுப்ப, பேசறதுக்கும்....

சி.பையன்: அதே மாதிரி தான்.....லீவு போட்டா friendகிட்ட homework discuss செய்றதுக்கு, அப்புறம் இந்தியாவுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒரு sms செய்தால் போதும் எல்லாத்துக்கும் தான்.

FMம் பெண்: அப்ப இந்தியாவுல என்ன நடக்கிறது என்பதை தெரிஞ்சிக்க,
homework discuss செய்றதுக்கும் உனக்கு செல்போன் தேவை....சரி நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி.



இந்த நிகழ்ச்சியை கேட்டவுடன் வாரநாள் இதழில் வந்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருது கதை யாரு எழுதுனது என்பதெல்லாம் நினைவில் இல்லை, (யாருக்கு தெரியும் தமிழ்மணத்துல கூட அந்த நபர் இருக்கலாம்)கதையும் ஒர் அளவுக்கு தான் நினைவில் இருக்கின்றது அதை வைத்து சுமாராக எழுதியிருக்கிறேன்.

"இன்னிக்கு இருக்குற விஞ்ஞான வளர்ச்சியில இயந்திரங்களோடு இயந்திரமா வாழ்ந்துக்கிட்டு இருக்கிற மகனுக்கு அந்த காலத்து கணக்குபிள்ளையான தன் அப்பவை கண்டாலே எரிச்சலா வரும். அப்பாவோட முதலாளி அப்பாக்கிட்ட எப்ப எந்த கணக்கு விபரம் கேட்டாலும் டக்கு, டக்குன்னு பதில் சொல்வாறாம். அப்பாவோட ஞாபகசக்தியை ரொம்ப பெருமையா சொல்லுவாங்க அவனோட அம்மா. இந்த பெறுமை எல்லாம் கேட்குறதக்கே அவனுக்கு புடிக்காது. அந்த ஞாபகசக்தியை வச்சி ஒரு மண்ணும் வாங்கிட முடியாதுன்னு பதில் சொல்வான் இவன்.

ஒரு வேலை விஷயமா ஒரு ஊருக்கு போறான் போற வழியில அவனோட செல்பேனை தொலைச்சுடுறான். என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. எல்லா நம்பர்களும் அதுலதான் இருக்கு.....பக்கத்துல இருக்குற டெலிபோன் பூத்துக்கு போறான் ரிசிவரை எடுத்து நம்பரை அழுத்துறான் ரெண்டு நம்பருக்கு மேல அவனுக்கு ஞாபகம் இல்ல. எவ்வுளவோ யோசிச்சி பார்க்குறான் முடியல...பூத்தவிட்டு வெளிய வரான். தன்னோட நண்பர்கள் நம்பரை எல்லாம் யோசிச்சி யோசிச்சி பார்க்குறான் ம்....ஹும் ஒன்னும் முடியல. உடம்பு எல்லாம் வியர்த்து கொட்டுது....கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லோரும் அவனை விட்டு தூரத்துல போயிடுற மாதிரி நினைப்பு. ஒரு எட்டு நம்பரை கூட ஞாபகத்துல வச்சிக்க முடியலன்னு அவனோட நிலையை நினைத்து வேதனைப்படுறான்.

அப்ப அவனுக்கு அவன் அப்பாவோட முகம் மட்டும் நினைவுக்கு வருது. தன் அப்பவோட ஞாபகசக்தியை நினைத்து கண்கள் கலங்கி நிக்குறான்.
தன் அப்பாவை பார்த்து அவர்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டும்ன்னு நினைக்குறான். ID கார்டில் இருந்த நம்பரை வச்சி கம்பெனிக்கு போன் பண்ணி தன் வீட்டு நம்பரை வாங்கி வீட்டுக்கு போன் பண்றான். எதிர்முனையில் அவனோட மனைவி பதட்டத்துடன் பேசுறா...

"எங்க இருக்கீங்க.........உங்க செல்பேன் என்ன ஆச்சு..........ரிங் போகுது ஆனா எடுக்க மாட்டேங்கிறிங்க...."

"அது தொலைந்து போச்சு........ஏன் பதர்ர.....விஷயத்த சொல்லு... "

"உங்க அப்பா இறந்துட்டாருங்க........ஊர்லயிருந்து போன் வந்துச்சின்னு சொல்லறா...." இடிஞ்சி போய் நிக்குறான்,

சக மனுஷனோட அருமையை புரிஞ்சுக்க முடியாம இருந்திருக்கமேன்னு நினைச்சு வேதனைப்படறான்.

மனுஷன் கண்டுபிடிச்ச இயந்திரங்கள் கிட்ட அந்த மனுஷனே தன்னோட சக்தியை இழந்துகிட்டு இருக்கான்னு தெரியமாலே இருக்கான். தெருவுல விளையாடி அடிப்பட்ட காயங்களை கூட இன்னைக்கும் நாம பெறுமையா பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா இன்னைக்கு குழந்தைகள் அடிபடமா வீட்டுகுள்ளேயே வச்சி விளையாட வீடியோ கேம்ஸ் வாங்கி கொடுக்கிறோம். நண்பனுக்கு கல்யாண வாழ்த்தோ, பிறந்த நாள் வாழ்த்தோ எதுவா இருந்தாலும் ஒரு SMSல முடிஞ்சுடுது. ஒரு மெயில் அனுப்பினா அதை அவன் பார்த்து replay பண்றதுக்கு ஒரு SMS அனுப்ப வேண்டியிருக்கு. அந்த அளவுக்கு எல்லோரும் பிசியா இருக்காங்க.

இயந்திரங்களை நம்பி வாழ ஆரம்பிச்சாச்சு இதுல சின்ன பசங்க என்ன பெரியவங்க என்ன எல்லோரும் மனுஷங்கதானேன்னு தோணுது.

என் செல்போனை கையில் எடுத்து பாக்குறேன் அது என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைய தொலைச்ச நீ தொலைஞ்சன்னு சொல்லற மாதிரி இருக்கு.

40 comments:

ஜி said...

கோபிண்ணே...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க....

இயந்திரங்களுக்குத்
தலைவனென்னும் மாயையில்
இயந்திரங்களுக்கு அடிமையாய்
இயந்திர வாழ்க்கை...

Anonymous said...

First a?????

Anonymous said...

//தோணுது. என் செல்போனை கையில் எடுத்து பாக்குறேன் அது என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு//

mmmm என்ன சொல்றது. செல்போன் இல்லாத வாழ்க்கை கஷ்டம்தான். ஆனா நீங்க சொன்ன மாதிரி நம் இழக்கிறது ரொம்ப.

இயந்திரங்களலால் நம்ப வாழ்க்கைய இழக்கிறது உண்மைதான் கோபி.

Anonymous said...

நல்ல thoughtful post..

ஆனா எல்லாமே நம்ப கையில தான் இருக்கு...


எப்படி யூஸ் பன்றோம்னு.

ஆனா எனக்கும் சில நேரங்களில் எரிச்சல் வரும்..

எனது தனிமை யினை கெடுக்கும் சில நேரங்களில்

கிரடிட் கார்டு வேண்டு 11 வது முறையாக வரும் போன்...

என சில விசயங்களில்...

Anonymous said...

அப்புறம் கேள்விக்கு வரேன்.,

என்னய கேட்ட குழந்தைக்கு செல்போன் அவசியம் தான்..

ஆனா அந்த செல்போன் நாம யூஸ் பன்றது மாதிரி இல்லாம

சில முக்கியமான அம்சங்களை மட்டுமே கொண்டு இருக்க வேண்டும்..

1.ஒன்லி 3/4 நம்பர்ஸ் மட்டும் கால் பன்ற மாதிரி

அப்பா/அம்மா/ஆசிரியர்/எமர்ஜென்சி நம்பர்ஸ்..

2. ஒன்லி காலிங் .

no others futres..

its for kids-Chellphone.

MyFriend said...

arumaiyaana interview arumaiyaana kathai.. enna oru mathcing..

ippe ulla chinna pasanggalellaam rombave vivaramaa irukkaange.. ;-)

மு.கார்த்திகேயன் said...

வருகை பதிவு கோபி.. அப்பால படிச்சுட்டு கமண்டுறேன்

Arunkumar said...

நிறைய depend பண்ண ஆரம்பிச்சிட்டோம்.. நான் college படிக்கும் போது ஒரு 20 friends நம்பர் ஞாபகமிருக்கும். ஆனா இப்போ எல்லாம் எங்க வீட்டு நம்பர் ஞாபகம் வர்ரதே பெரிய விஷயமாயிடுச்சு... Necessary Evil ஆகிடுச்சுனு நினைக்கிறேன்... வேர என்ன சொல்ல?

நல்ல பதிவுங்க கோபி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க தலைவர் ஒரு பாட்டு மாதிரி டாக்டரோட போன் நம்பரை குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க. அப்பாயின்மெண்ட் வாங்கறதுக்கு எப்ப கேட்டாலும் பிள்ளைங்களும் நானும் அந்த் ராகத்துல தன்னால அந்த நம்பரை நினைவுக்கு கொண்டுவந்துடுவோம்.
மிஷின நம்பி வாழ பழக்கப்படுறது தப்பு தான் .ஆனா பழகிட்டோமே என்ன செய்ய.

அபி அப்பா said...

என்ன கோபிதம்பி! மந்திரி ஆகீட்டிங்க போலயிருக்கு...நடத்துங்க நடத்துங்க..

அபி அப்பா said...

செல் போன் தேவையா இல்லியான்னு சர்வேசன் பதிவு போட மேட்டர் குடுத்தாச்சு!

Swamy Srinivasan aka Kittu Mama said...

haha kostin and answers ellaam nallaa irundhadhu. cell phone paduthara paadu aniyaayathtukku dhaan irukku ippo..

i heard that oru oorla panni viratti pidikaravanga kooda dei anga varudhu daannu cell phonela paesinadhaa kaelvi :-)

கதிர் said...

நான் உன்னை பாக்க வரும்போது உன்னோட செல்போனை குடுத்துடு.

இவ்ளோ பேசற உனக்கு எதுக்கு செல்போனு??

கோபிநாத் said...

வாங்க ஜி ண்ணே...

\\ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.... \\

நன்றி ஜி

\\இயந்திரங்களுக்குத்
தலைவனென்னும் மாயையில்
இயந்திரங்களுக்கு அடிமையாய்
இயந்திர வாழ்க்கை... \\

நாலு வரியில நச்சுன்ன்னு சொன்னிங்க…

கோபிநாத் said...

வாங்க மணி...

\\நல்ல thoughtful post..\\

நன்றி மணி...

\\எனது தனிமை யினை கெடுக்கும் சில நேரங்களில்

கிரடிட் கார்டு வேண்டு 11 வது முறையாக வரும் போன்...\\

எனக்கும் night shift முடிச்சுட்டு தூங்கும் போது போன் வரும் அந்த நேரங்களில் எரிச்சலா இருக்கும்..

கோபிநாத் said...

\\1.ஒன்லி 3/4 நம்பர்ஸ் மட்டும் கால் பன்ற மாதிரி

அப்பா/அம்மா/ஆசிரியர்/எமர்ஜென்சி நம்பர்ஸ்..

2. ஒன்லி காலிங் .\\

நல்ல ஐடியா மணி...

கோபிநாத் said...

வாங்க தோழி...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
arumaiyaana interview arumaiyaana kathai.. enna oru mathcing..

ippe ulla chinna pasanggalellaam rombave vivaramaa irukkaange.. ;-)\\

உண்மை தான் எனக்கு தெரிஞ்ச பையன் இப்ப இருக்குற செல்போன் எல்லாத்தோட முழுவிபரமும் தெரிஞ்சு வச்சிருக்கான்...

கோபிநாத் said...

வாங்க தலைவா...

\\வருகை பதிவு கோபி.. அப்பால படிச்சுட்டு கமண்டுறேன்\\

கண்டிப்பா இடுங்க...

கோபிநாத் said...

வாங்க அருண்..

\\நிறைய depend பண்ண ஆரம்பிச்சிட்டோம்.. நான் college படிக்கும் போது ஒரு 20 friends நம்பர் ஞாபகமிருக்கும். ஆனா இப்போ எல்லாம் எங்க வீட்டு நம்பர் ஞாபகம் வர்ரதே பெரிய விஷயமாயிடுச்சு... Necessary Evil ஆகிடுச்சுனு நினைக்கிறேன்... வேர என்ன சொல்ல?\\

சரியா சொன்னிங்க அருண்.. டக்குன்னு யாராச்சும் நம்பர் கேட்டா செல்போனை பார்த்து தான் சொல்ல வேண்டியிருக்கு...செல்போன் நம்பரை கூட

\\நல்ல பதிவுங்க கோபி. \\

நன்றி அருண்...

கோபிநாத் said...

வாங்க அபி அப்பா...

\\என்ன கோபிதம்பி! மந்திரி ஆகீட்டிங்க போலயிருக்கு...நடத்துங்க நடத்துங்க.. \\

யாரு நானா!!!!
எங்க என் சீட்டு....எங்க என் சீட்டு..

\\செல் போன் தேவையா இல்லியான்னு சர்வேசன் பதிவு போட மேட்டர் குடுத்தாச்சு! \\

அவர்கிட்யா மேட்டர் இல்ல!!!

கோபிநாத் said...

வாங்க முத்துலெட்சுமி அக்கா..

முதமுதல்ல வந்திருக்கீங்க...வருக.

\\எங்க தலைவர் ஒரு பாட்டு மாதிரி டாக்டரோட போன் நம்பரை குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க.\\\

யாரு உங்க தலைவரு?? நல்ல ஐடியா தான்..

\\மிஷின நம்பி வாழ பழக்கப்படுறது தப்பு தான் .ஆனா பழகிட்டோமே என்ன செய்ய.\\

ஒன்னும் செய்ய முடியாது தான் இருந்தாலும் குழந்தைகளுக்கு இப்பவே இதெல்லாம் அதிகமா பயன்படுத்தாத மாதிரி பார்த்துக்கலாம் இல்லையா..

கோபிநாத் said...

வாங்க தம்பி...

\\ தம்பி said...
நான் உன்னை பாக்க வரும்போது உன்னோட செல்போனை குடுத்துடு.

இவ்ளோ பேசற உனக்கு எதுக்கு செல்போனு?? \\

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...இப்படியே பேசி பேசிதான் பாவம் அவர்க்கிட்ட இருந்த செல்போன்னுக்கு ஆப்புவச்ச இப்ப எனக்கா???

எல அது இல்லைன்னா நான் அவ்வ்வ்வ்வ்வ்....

மு.கார்த்திகேயன் said...

நல்ல பதிவு கோபி..

நிறைய விஷயங்களை சொல்லி, படிக்கத் தவறிய ஒரு அருமையான கதையயும் சொன்னதற்கு நன்றி..

மு.கார்த்திகேயன் said...

கோபி, செல்போன் தேவையா நிகழ்சியும் அதி கலந்துகொண்ட வாண்டுகளின் பேச்சும் பெரியவர்கள் பேச்சும் என்னை ஆச்சரியப்படுத்தியது.. இளைய தலைமுறை எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க.. அவங்க கிட்ட ஒரு நாலு கேள்வி கேக்க பெரியவங்க எப்படி திணறுறாங்க பாருங்க.. அட கடவுளே..

மு.கார்த்திகேயன் said...

Gopi, I agree maniprakash suggestions.. thats really great :-)

Syam said...

பாருங்க ஒரு சின்ன குழந்தை கிட்ட உனக்கு செல் போன் வேண்டாம்னு சொல்லி தப்பிக்க முடியல...போட்டு தாக்கிடுதுங்க... :-)

Syam said...

சில நேரம் நினைச்சு பார்த்தா...சின்ன புள்ள என்ன பெரிசு என்ன வசதி இருந்தா செல் போன் இருக்கும்...இல்லனா இருக்காது...

Syam said...

//என் செல்போனை கையில் எடுத்து பாக்குறேன் அது என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு//

நானும் என்னை அறியாமல் எடுத்து பார்த்தேன்....என்னமோ போங்க...

கதிர் said...

//ஆரம்பிச்சிட்டாங்கய்யா...இப்படியே பேசி பேசிதான் பாவம் அவர்க்கிட்ட இருந்த செல்போன்னுக்கு ஆப்புவச்ச//

நண்பா கோபி!

என்ன சொல்ல வருகிறீர்கள் ஒன்றும் விளங்கவில்லையே. யாருக்கு நான் ஆப்பு வைத்தேன் கொஞ்சம் விளக்க முடியுமா! என்ன விபரீதமான குற்றச்சாட்டை வீசுகிறீர் அதுவும் என்மேல் இது அபாண்டம் தாங்காது அமீரகம்.

Dev Payakkal said...

எங்கோ ஒரு கொட்டங்குச்சி எங்கோ ஒரு கம்பி ..இரண்டும் சேர்த்து ஒரு இசை கருவி செய்வது போல ..இருக்குப்பா உமது இந்த ப்ளோக் ....100 கு 80 மதிப்பெண் ...புது யோசனை ...புது பார்வை .....கலக்குற கோபி

நாகை சிவா said...

இது சில சமயம் உண்மை தான். முன்பு லண்ட் லைன் யூஸ் பண்ணும் போது 50 நம்பருக்கும் மேல் மெமரியில் இருக்கும். செல்போன்ல சுத்தம். பழைய நம்பர்களை லண்ட் லைன்ல டைல் பண்ணி கண்டுபிடிச்சிடுவேன். புது நம்பர் எல்லாம் நோ வே! :-(

ஸ்டோர் பண்ணாத சில நம்பர்கள் நல்லாவே நினைவில் இருக்கும். அது மனசுல ஸ்டோர் ஆகி இருக்கும். அது போல பல நம்பர்கள் உங்களுக்கும் இருக்குமே ;-)

கோபிநாத் said...

வாங்க தல...
\\நல்ல பதிவு கோபி..\\

ரொம்ப நன்றி தல ;))

கோபிநாத் said...

வாங்க நாட்டாமை...

\\Syam said...
பாருங்க ஒரு சின்ன குழந்தை கிட்ட உனக்கு செல் போன் வேண்டாம்னு சொல்லி தப்பிக்க முடியல...போட்டு தாக்கிடுதுங்க... :-)\\

உண்மை தான் நாட்டாமை அந்த பையன் கொஞ்சம் கூட யோசிக்காம சொன்ன பதிலுக்கு அந்த ஆளு ஆடி போயிட்டாரு...

கோபிநாத் said...

அன்பு தம்பி...

\\அதுவும் என்மேல் இது அபாண்டம் தாங்காது அமீரகம்.\\

ம்ஹும் அமீரகம் தாங்காது....இந்த பில்டப்புதானே வேணாங்கிறது...

கோபிநாத் said...

வாங்க தேவ்...

\\எங்கோ ஒரு கொட்டங்குச்சி எங்கோ ஒரு கம்பி ..இரண்டும் சேர்த்து ஒரு இசை கருவி செய்வது போல ..இருக்குப்பா உமது இந்த ப்ளோக் ....100 கு 80 மதிப்பெண் ...புது யோசனை ...புது பார்வை .....கலக்குற கோபி\\

எல்லாம் வலையுல நண்பர்களின் உற்சாகம் தான் தேவ்...

அப்புறம் கலக்குறன்னா யாரு நானா??... போங்க தேவ் காமெடி பண்ணிக்கிட்டு....;))))

கோபிநாத் said...

வாங்க புலி...வாங்க...ரொம்ப மகிழ்ச்சி நம்ம பக்கம் வந்ததற்கு..

\\ஸ்டோர் பண்ணாத சில நம்பர்கள் நல்லாவே நினைவில் இருக்கும். அது மனசுல ஸ்டோர் ஆகி இருக்கும். அது போல பல நம்பர்கள் உங்களுக்கும் இருக்குமே ;-)\\

ஆஹா...இது ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு....கண்டிப்பா இருக்கு என் வீட்டு நம்பர் ;))))

நாகை சிவா said...

//ஆஹா...இது ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு....கண்டிப்பா இருக்கு என் வீட்டு நம்பர் ;))))//

உங்க வீட்டு நம்பரை விடும்மய்யா. மத்த வீட்டு நம்பர் லைக் எதிர் வீட்டு ஜன்னல், பக்கத்து வீட்டு மொட்டை மாடி அது போல....

கோபிநாத் said...

\\உங்க வீட்டு நம்பரை விடும்மய்யா. மத்த வீட்டு நம்பர் லைக் எதிர் வீட்டு ஜன்னல், பக்கத்து வீட்டு மொட்டை மாடி அது போல.... \\

எதிர் வீட்டில் ஜன்னல் இல்லை ;(((

பக்கத்து வீட்டில் மொட்டை மாடியும் இல்லை ;(((

இடையில் கவலையுடன் நான் ;((

Anonymous said...

கோபி நானே இந்த வயதில் எனக்கு கைத்தொலைப்பேசி எல்லாம் வாங்கி தரவில்லை என்ற எரிச்சலில் இருக்கின்றேன்.5 வயது பொடியன்கள் எல்லாம் கையில் கைத் தொலைப்பேசியுடன் அலையும் பொழுது நான் படும் கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.கையில் செல்,வாயில் பல்,மாத கடைசியில் பில்.எப்படி இருக்கு?
நம்ப வாழ்க்கை எப்பொழுதும் இயந்திரம் கூட தான்.என்ன பண்ணுவது...வாழ்க்கை சூழ்நிலை எப்படி.கையில் என் கணினி இல்லைவிட்டால் எனக்கு பைத்தியம் பிடிக்கும்.அந்த அளவிற்கு இயந்திரத்தோடு ஒன்றி போய் விட்டேன் :(

சோமி said...

ம்....செல்போனைத் தொலைத்து நான் தவித்த தவிப்புக்கு அதனை மட்டும் நம்பியிருந்ததுதான் காரணம். எந்த முன்னெச்ஸ்ரீஇக்கையும் இல்லானல் எல்லா தகவகளையும் தொ.பே இலக்கங்களையும் செல்போன்ல வைத்திருந்ததால் என் அம்மவோட செல்போன் நம்பரக் கூட அடுத்தவரிட்ட வாங்க வெண்டியதாகிவிட்டது.

என்றல்லும் உங்கள் கதைக்கும் சொல்ல வந்த கருத்துக்கும் இடையில் ஒரு முரண் தெரிவதாக படுகிறது.