Thursday, January 24, 2008

எனக்குப்பிடித்த என்னோட பதிவு...

கடந்த வருடத்தில் நான் எழுதியதில் எனக்குப்பிடித்த பதிவு ஒன்றை சொல்ல வேண்டும் என்று வல்லிம்மாவும், சகோதரி முத்துலெட்சுமியும் அழைத்திருக்கிறார்கள். 100, 200 பதிவு போட்ட பெரியப்பெரிய‌ பதிவர்களே தனக்கு பிடித்த பதிவை சுலபமாக கொடுத்து விட்டார்கள். ஆனால் மொத்தமே 37 பதிவுகள் மட்டுமே போட்ட என்னால் அவ்வளவு சுலபமாக போடமுடியவில்லை... டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராக தெரியலன்னு நீங்க சொல்லறது காதுல விழுது.. என்ன செய்யுறது! எல்லாம் ஒரு விளம்பரம் தான்.


போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 27.

அதில் எனக்கு பிடித்த பதிவு அழகுகள் ஆறு தொடருக்காக அய்யனார் அழைத்து எழுதியதுதான் எனக்கு பிடித்த பதிவு அய்யனாருக்காக ஆறு அழகுகள்

ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.







அந்த பதிவில் என் அம்மா எனக்கு கொடுத்த முத்தத்தைப்பற்றி சொல்லியிருப்பேன். இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது. எனக்கும் என் அம்மாவுக்கும் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிக்கிட்டே போகலாம்.(எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும்) அம்மாவைப்பற்றி அதிகம் யோசித்தால் அழுகைதான் வருது. என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!

அந்த ப‌திவ அடிச்சு முடிச்ச‌துமே என்னோட‌ பிலிப்பைனி நண்ப‌ன் கேட்டான். என்ன‌ செய்ய‌றேன்னு.. நான் இந்த பதிவுல எழுதியிருந்த அம்மா விஷயத்த பத்தி அவன்கிட்ட சொன்னதுமே அவ‌ன் க‌ண்ணு க‌ல‌ங்கிடுச்சு.." you are very lucky man". இதுக்கு போயி ஏன்டா அழ‌றேன்னு நான் கேட்ட‌துக்கு "I am also miss my mother"ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.


என் பதிவுகளை என்னை மீண்டும் படிக்க வைத்த வல்லிம்மாவுக்கும், முத்துலெட்சுமி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வந்து பார்த்து மார்க் போடுங்கள்.

அடுத்த நான் அழைக்கும் மூவர் - கவிஞர்கள்

அழகுகள் ஆறுக்கு அழைத்த அய்யனார்

கவிதாயினி காயத்ரி

கவிஞர் வேதா

எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)

31 comments:

குசும்பன் said...

//அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.//

நிச்சயமாக அப்படிதான்.

Divya said...

\\இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது.\\

அம்மாவின் முத்ததிற்காக ஏங்கும் உங்கள் உணர்வு மெய்சிலிரிக்க வைத்தது.

\\இதுக்கு போயி ஏன்டா அழ‌றேன்னு நான் கேட்ட‌துக்கு "I am also miss my mother"ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.\\

என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க!

Anonymous said...

//ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.//

இப்போ என்னதான் சொல்ல நினைக்கின்றீர்கள் ? :D


//இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை///

நானும் இப்போ அம்மாவை மிஸ் பண்ணுறேன் :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்... இப்போதும்...எப்போதும்...!//

அப்போதும்...இப்போதும்...எப்போதும்!!!

//எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)//

இதுக்கு அம்மா கிட்ட இருந்து முத்தம் கிடைக்குமா? இல்லை மொக்கை ஜாஸ்தி போட்டா "மொத்த"ம் கிடைக்குமா? :-)

வாழ்த்துக்கள் கோபி!

Geetha Sambasivam said...

//டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராக தெரியலன்னு நீங்க சொல்லறது காதுல விழுது.. என்ன செய்யுறது! எல்லாம் ஒரு விளம்பரம் தான்.//

ஹிஹிஹி, பாடம் நல்லாவே வேலை செய்யுது போலிருக்கு! அழகு பதிவு நிஜமாவே அழகுதான். நல்லாத் தான் இருந்துச்சு. 37 பதிவுகள் தான் போட்டிருக்கீங்கனு சொல்றதே ஒரு சாதனைதானே. அதுக்குள்ளே வலைச்சரம் ஆசிரியர் ஆயாச்சு, அடுத்து நட்சத்திரம் தான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Unknown said...

நெகிழ்ச்சியான பதிவு கோபி

கானா பிரபா said...

தல

உண்மையிலேயே உங்களுக்கு பிடிச்ச பதிவு அழகோ அழகு.

அம்மாவை மிஸ் பண்ணுவோர் பட்டியலில் நானும் சேர்த்தி.

வல்லிசிம்ஹன் said...

சீக்கிரம் அம்மாவை வந்து பார்த்துட்டு
சொல்லிட்டுப் போங்க.
அருமையான பதிவு கோபிநாத்.

சொன்னதையும் காதில போட்டு கிட்டு, கடமையா செய்து முடிச்சதுக்கு ரொம்ப நன்றி.

Dreamzz said...

//ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை.//
வாவ் :) அப்படினா கண்டிப்பா அது தான்!

Dreamzz said...

//நானும் இப்போ அம்மாவை மிஸ் பண்ணுறேன் :(//
ரிப்பீட்டு :(

ஷைலஜா said...

உங்களுக்கு பிடடிச்ச அதே பதிவு எங்களுக்கும் பிடிச்சிருக்கு...வாழ்த்துகள் கோபி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மாவைப்பற்றின்னா அப்பறம் மறுவார்த்தை என்ன சொல்றது. ... அப்பறம் 100 க்கு 100 தான் குடுக்கனும் மார்க்.. :)

CVR said...

////நானும் இப்போ அம்மாவை மிஸ் பண்ணுறேன் :(//
ரிப்பீட்டு :(////

கூடவே அப்பாவையும் சேர்த்துக்கோங்க!! :-)

எனக்கு பிடித்தமான பதிவு என்று பார்த்தால்,நட்பு பற்றி அமைந்த "கூட்டாங்சோறு" பதிவு தான்!!
எனக்கு மிகவும் பிடித்திருந்தது!! :-)

மங்கை said...

நல்லா இருக்கு கோபி....
அம்மா...ஹ்ம்ம்ம் உண்மை..உண்மை

கப்பி | Kappi said...

:)

Anonymous said...

//அம்மாவைப்பற்றின்னா அப்பறம் மறுவார்த்தை என்ன சொல்றது. ... அப்பறம் 100 க்கு 100 தான் குடுக்கனும் மார்க்//

ரிப்பீட்டு :(

கோபிநாத் said...

@ குசும்பன்
//அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.//

நிச்சயமாக அப்படிதான்.\\

வருகைக்கு நன்றி அண்ணே ;)

@ திவ்யா

\\இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது.\\

\\அம்மாவின் முத்ததிற்காக ஏங்கும் உங்கள் உணர்வு மெய்சிலிரிக்க வைத்தது.\\

அம்மாவை நினைக்கும் போது எனக்கும் இப்படி தான் திவ்யா ;)

\\இதுக்கு போயி ஏன்டா அழ‌றேன்னு நான் கேட்ட‌துக்கு "I am also miss my mother"ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.\\

என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க!\\

ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல எல்லாம் காலத்தின் கட்டாயம்.

கோபிநாத் said...

@ துர்கா
//ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.//

இப்போ என்னதான் சொல்ல நினைக்கின்றீர்கள் ? :D\\

அதான் எனக்கே தெரியல...உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க...;)

//இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை///

\\நானும் இப்போ அம்மாவை மிஸ் பண்ணுறேன் :(\\

சேம் பிளட் ;(

@ வாங்க KRS

//என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்... இப்போதும்...எப்போதும்...!//

\\அப்போதும்...இப்போதும்...எப்போதும்!!!\\

சேர்த்துட்டேன் தல...நன்றி ;)

//எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)//

\\இதுக்கு அம்மா கிட்ட இருந்து முத்தம் கிடைக்குமா? இல்லை மொக்கை ஜாஸ்தி போட்டா "மொத்த"ம் கிடைக்குமா? :-)\\

தல அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது. அதனால இப்போதைக்கு முத்தம் தான்...தெரிந்த பிறகு என்ன கிடைக்கும் யாருக்கு தெரியும்..நீங்க சொன்னாது கிடைத்தாலும் கிடைக்கும்.

\\வாழ்த்துக்கள் கோபி!\\

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தல ;)

கோபிநாத் said...

@ கீதா சாம்பசிவம்

//டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராக தெரியலன்னு நீங்க சொல்லறது காதுல விழுது.. என்ன செய்யுறது! எல்லாம் ஒரு விளம்பரம் தான்.//

\\ஹிஹிஹி, பாடம் நல்லாவே வேலை செய்யுது போலிருக்கு! \\

எல்லாம் தலைவியின் பயிற்சி தான்..;)

\\அழகு பதிவு நிஜமாவே அழகுதான். நல்லாத் தான் இருந்துச்சு. 37 பதிவுகள் தான் போட்டிருக்கீங்கனு சொல்றதே ஒரு சாதனைதானே. அதுக்குள்ளே வலைச்சரம் ஆசிரியர் ஆயாச்சு, அடுத்து நட்சத்திரம் தான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\\

ஆஹா...தலைவி வாழ்க...நன்றி ;)

@ தேவ்
\\நெகிழ்ச்சியான பதிவு கோபி\\

நன்றி அண்ணே ;)

@ கானா பிரபா

\\தல

உண்மையிலேயே உங்களுக்கு பிடிச்ச பதிவு அழகோ அழகு.\\

நன்றி தல ;)

\அம்மாவை மிஸ் பண்ணுவோர் பட்டியலில் நானும் சேர்த்தி.\\

விரைவில் அம்மாவை போயி பாருங்கள் தல ;)

கோபிநாத் said...

@ வேதா

\\எல்லாம் சரி தான் ஆனா கவிஞர்கள் சொல்லி என் பேரை இதுல இழுத்து இப்டி ஆப்பு வச்சுட்டீங்களே :D\\

;))) உண்மையை தானே சொன்னோன்...! விரைவில் பதிவு போடுங்கள் ;)

@ வல்லிசிம்ஹன்

\\சீக்கிரம் அம்மாவை வந்து பார்த்துட்டு
சொல்லிட்டுப் போங்க.\\

கண்டிப்பாக செய்கிறேன் அம்மா ;)

\\அருமையான பதிவு கோபிநாத்.

சொன்னதையும் காதில போட்டு கிட்டு, கடமையா செய்து முடிச்சதுக்கு ரொம்ப நன்றி.\\

என் பதிவுகளை மீண்டும் ரசிக்க வைத்தமைக்கு உங்களுக்கு என்னோட ஸ்பெசல் நன்றிகள் ;)

@ டிரீம்ஸ்

//ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை.//

வாவ் :) அப்படினா கண்டிப்பா அது தான்!\\

ஆஹா..தல புரிஞ்சிக்கிட்டிங்க போல...சந்தோஷம் ;)

கோபிநாத் said...

@ ஷைலஜா

\\உங்களுக்கு பிடடிச்ச அதே பதிவு எங்களுக்கும் பிடிச்சிருக்கு...வாழ்த்துகள் கோபி.\\

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா ;)

@ முத்துலெட்சுமி

\\அம்மாவைப்பற்றின்னா அப்பறம் மறுவார்த்தை என்ன சொல்றது. ... அப்பறம் 100 க்கு 100 தான் குடுக்கனும் மார்க்.. :)\\

யப்பா...எப்படியே அக்காக்கிட்ட இருந்து 100 மார்க் வாங்கிட்டேன் ;))

@ CVR

////நானும் இப்போ அம்மாவை மிஸ் பண்ணுறேன் :(//
ரிப்பீட்டு :(////

\\கூடவே அப்பாவையும் சேர்த்துக்கோங்க!! :-)\\

அப்பா இல்லைமையா!

\\எனக்கு பிடித்தமான பதிவு என்று பார்த்தால்,நட்பு பற்றி அமைந்த "கூட்டாங்சோறு" பதிவு தான்!!
எனக்கு மிகவும் பிடித்திருந்தது!! :-)\\

சிவிஆர் எனக்கும் பிடித்த பதிவு அது..நன்றி ;)

கோபிநாத் said...

@ மங்கை
\\நல்லா இருக்கு கோபி....
அம்மா...ஹ்ம்ம்ம் உண்மை..உண்மை\\

அக்கா நீங்க அப்பாவின் பதிவை போட்டிங்க..நான் அம்மாவின் பதிவை போட்டேன். ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருக்கோம். நன்றி அக்கா ;)

@ கப்பி பய

\\:)\\

வருகைக்கு நன்றி செல்லம் ;)

@ சின்ன அம்மிணி

//அம்மாவைப்பற்றின்னா அப்பறம் மறுவார்த்தை என்ன சொல்றது. ... அப்பறம் 100 க்கு 100 தான் குடுக்கனும் மார்க்//

\\ரிப்பீட்டு :(\\

யக்கோவ்..தம்பி 100 மார்க் வாங்கியது பார்த்து ஆனந்த கண்ணீர் வருதா...!? ;)))

பினாத்தல் சுரேஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க கோபி.

எனக்குப் பிடிச்ச பதிவு இளையராஜா வருகையப்ப எழுதியிருந்த விரிவான கவரேஜ்.

காட்டாறு said...

கோபி, இது உங்களுக்கே நல்லாயிருக்கா? சைக்கிள் பதிவு போட்டு கொசுவர்த்தி சுத்த வச்சிட்டு, இப்போ அம்மா பதிவை காமிச்சி, எத்தனை பேரை ஏங்க வச்சிட்டீங்க பாருங்க. :-)

எனக்கு உங்களோட 'நாங்களும் ஓட்டுவோமில்ல' சைக்கிள் பதிவு (http://gopinath-walker.blogspot.com/2007/09/blog-post.html) ரொம்ப பிடிக்கும்.

தங்ஸ் said...

அம்மாவ மிஸ் பண்ற லிஸ்ட்-ல என்னையும் சேர்த்துக்கோங்க...சுரேஷ் குறிப்பிட்ட மாதிரி, எனக்கும் இளையராஜா பதிவு ரொம்ப புடிச்சுது..

கோபிநாத் said...

@ பினாத்தல் சுரேஷ்
\\நல்லா எழுதியிருக்கீங்க கோபி.

எனக்குப் பிடிச்ச பதிவு இளையராஜா வருகையப்ப எழுதியிருந்த விரிவான கவரேஜ்.\\

நன்றி தலைவா ;) உங்களின் வருகைக்கு என்னோட சிறப்பு நன்றிகள் ;)

@ காட்டாறு

\\கோபி, இது உங்களுக்கே நல்லாயிருக்கா? சைக்கிள் பதிவு போட்டு கொசுவர்த்தி சுத்த வச்சிட்டு, இப்போ அம்மா பதிவை காமிச்சி, எத்தனை பேரை ஏங்க வச்சிட்டீங்க பாருங்க. :-)\\

;)))

\\எனக்கு உங்களோட 'நாங்களும் ஓட்டுவோமில்ல' சைக்கிள் பதிவு (http://gopinath-walker.blogspot.com/2007/09/blog-post.html) ரொம்ப பிடிக்கும்.\\

எனக்கும் பிடித்த பதிவு...உங்களுக்கும் அந்த பதிவு பிடித்ததில் சந்தோசமே ;) நன்றி அக்கா ;)

@ வாங்க தங்ஸ்

\\அம்மாவ மிஸ் பண்ற லிஸ்ட்-ல என்னையும் சேர்த்துக்கோங்க...சுரேஷ் குறிப்பிட்ட மாதிரி, எனக்கும் இளையராஜா பதிவு ரொம்ப புடிச்சுது..\\

நன்றி தங்ஸ்...ராஜாவை பற்றி எழுதி பதிவு உங்களுக்கும் பிடித்ததில் எனக்கு சந்தோசமே ;)

வருகைக்கு நன்றி தங்ஸ் ;)

பாச மலர் / Paasa Malar said...

அம்மாவை மிஸ் பண்ணாதவர்கள் இருக்க்வே முடியாது..உங்கள் ஆறு அழகுகளும், சொன்ன விதமும் அழகு..

ச.பிரேம்குமார் said...

மாப்பி, எனக்கு ரொம்ப பிடிச்சது 'கூட்டாஞ்சோறு நினைவுகள்' :))))))))))

அரை பிளேடு said...

//எனக்குப் பிடிச்ச பதிவு இளையராஜா வருகையப்ப எழுதியிருந்த விரிவான கவரேஜ்.
//

எனக்கு பிடித்த பதிவும் அஃதே.

:)

தென்றல் said...

//என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!//

அழகு, கோபி!!

கோபிநாத் said...

@ பாச மலர்
\\அம்மாவை மிஸ் பண்ணாதவர்கள் இருக்க்வே முடியாது..உங்கள் ஆறு அழகுகளும், சொன்ன விதமும் அழகு..\\

நன்றி பாச மலர்...வருகைக்கு ஒரு சிறப்பு நன்றி ;)

@ வேதா
\\ஒரு வழியா நீங்க சொன்ன பதிவை போட்டாச்சு :)\\

நன்றி வேதா...;)

@ பிரேம்குமார்

\\மாப்பி, எனக்கு ரொம்ப பிடிச்சது 'கூட்டாஞ்சோறு நினைவுகள்' :))))))))))\\

எனக்கும் அந்த பதிவு ரொம்ப பிடிக்கும் மாப்பி...நன்றி ;)

@ அரை பிளேடு
//எனக்குப் பிடிச்ச பதிவு இளையராஜா வருகையப்ப எழுதியிருந்த விரிவான கவரேஜ்.
//

எனக்கு பிடித்த பதிவும் அஃதே.

:)
\\

நன்றி தல.....உங்கள் வருகை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு..;)

@ தென்றல்
//என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!//

அழகு, கோபி!!\\

நன்றி தென்றல்....உங்கள் வருகைக்கு ஒரு சிறப்பு நன்றி ;)