Monday, January 14, 2008

மொக்கை போட்டோம்ல

"நான் என்ன சொன்னேன்! நீ என்ன செய்துக்கிட்டு இருக்க..? "

"ஏன்! எப்பவும் நீ சொல்லறதைத்தான் செய்யணுமா..! "

"அதுக்குத்தானேகூட இருக்கே...!"

"நான் சொன்னது என்ன ஆச்சு..? "

"எல்லாம் நீ சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன். "

"அதை செய்யுறதுக்கு இவ்வளவு நாளா?"

"நீ ஒழுங்கா சொல்லியிருக்கணும். "

"போன முறையும் இப்படித்தான் சொன்னே! இந்த முறை தெள்ளத்தெளிவாக சொன்னேன். அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ற..?"

"என் மேலயே குத்தம் சொல்லு... ஏன் இப்படி எல்லாம் ஆச்சுன்னு யோசிக்காதே..! "

"ஆமா.. ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் காரணம் இருக்கும். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது என்னால... எனக்கு தேவை ரிசல்ட்.. "

"ஆமா... அந்த விஷயம் என்ன ஆச்சு...? "

"எந்த விஷயம்....? "

'அதாண்டா அந்த விஷயம்...! நேத்துக்கூட சொல்லிக்கிட்டு இருந்தியே.. "

"நேத்து நான் பல்லு விளக்குறதுக்கு முன்னாடிலேந்து படுத்து தூங்கற வரைக்கும் நிறைய‌ விஷயத்தை பேசினோம்... அதுல எந்த அந்த விஷயம்..? "

"டேய் எனக்கு கொலைவெறி உண்டாக்காதே..."

"டேய் உனக்கு இனிமேதான் கொலைவெறி வரும்.. இப்போ எனக்கு இருக்குற வெறிக்கு கொலையே பண்ணிடுவேன். தெளிவா சொல்லுடா. "

"எப்பாரு தெளிவு.. தெளிவு ஏன்டா கொஞ்சம் சூசகமாக சொன்னா புரியாதா!"

"யாரு நீ! சூசகமா........! கிழிஞ்சது. அன்னிக்கு சொன்னியே சூசகமா ஒரு விஷயத்தை எல்லார் முன்னாடியும்..!! அதுல இருந்தே தெரியல உன் சூசக திறமையை பத்தி..!!! "

"என்னிக்கு? எப்போ..!? "

"அதாண்டா அன்னிக்கு.... எல்லார் முன்னாடியும். "

"டேய் என்கிட்டயே போட்டு வாங்குறியா....அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்லுடா.. இல்லைன்னா மண்டையே வெடிச்சிடும். "

"முதல்ல நீ தெளிவா எந்த அந்த விஷயமுன்னு சொல்லு. அப்புறம் நான் அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்றேன். "

"டேய் என்னால முடியலடா! எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலைடா. "

"நான் வேணுமுன்னா உன் காலுல விழுந்து கேட்டுக்கிறேன். எந்த அந்த விஷயமுன்னு தெளிவாக சொல்லி தொலைடா வெண்ணெய். "

"ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "

"நீ எங்க இருந்து ஒழுங்கா செய்யப்போற...எல்லாம் என் HEAD LETTER "

"தோடா..! இவரோட HEAD LETTERலாமுல்ல.... எல்லாம் என்னோட HEAD LETடேற் மாமு. உன்னோட மல்லுக்கட்ட வேண்டியிருக்கு... "

ஏன்டாப்பா சொல்லமாட்டே.... இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ..

"ஆமா சொன்னா மட்டும் உட்காந்து கேட்டுட்டுதான் சார் மறுவேலை பார்ப்பாரு.. "

"ஏன் நீ சொன்னதை எல்லாம் நான் கேக்க‌லியா.... அப்படி நான் கேட்காம வேற யாருடா கேட்டுட்டாங்க? "

"ஏன் எங்களுக்கு எல்லாம் வேற ஆளுங்க இல்லையா? "

"காமெடி கீமெடி பண்ணலியே.....! "

"உனக்கு வயித்தெரிச்சல்டா..! யாருக்கு எனக்கு.....!? டேய் வெளியில சொல்லிடாதே சிரிப்பாங்க.!"

"நாலு பேரு சிரிச்சா நல்லது தானே...! "

"ஆமா இவரு அப்படி நாலு பேருக்கு நல்லது செய்ய‌றதுக்குகாக தான் பிறவி எடுத்திருக்காரு."

"உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா என் வேலையை மறந்துடுவேன். ஆளை விடுடா சாமி டேய்!"

"சீக்கிரம் முடிப்பியா மாட்டியா? "

"எல்லாம் முடிஞ்சிடுச்சிடா.. "

"சீக்கிரம் கொடுடா.. அதை வேற பதிவுல ஏத்தி தமிழ்மணத்துல இணைக்கனும்."

"இந்தா! வந்துடுச்சான்னு பாரு மெயில்..? "

வலையுலக தலைவி கீதா, பாசக்கார அக்கா கண்மணி மற்றும் வலையுலக அறிவுஜிவி கப்பி பய அவர்களின் அழைப்பு ஏற்று மொக்கை பதிவு போட்டாச்சி. என்ன தலைவி மொக்கையை மொக்கையாக போட்டுயிருக்கேனா!? அப்புறம் இன்னும் மூணு பேரை கூப்பிட வேண்டுமாம்

1. என்னை போலவே மாதம் ஒரு பதிவு எழுதும் சின்ன அம்மிணி அக்கா

2. ஜி3 புகழ் ஜி3 காயத்ரி

3. நட்பு கவிஞர் பிரேம் குமார்

யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)

29 comments:

குசும்பன் said...

சூப்பர் மொக்கை, ஆக இந்த மாதம் கோட்டோ ஓவர்!!!:)))

முத்துலெட்சுமி said...

யாரு விட்டா உங்க ஊருல இப்படி அடைமழ பெய்யுதே காரணம் என்ன தெரியுமா.. இப்படி பதிவா கோபிநாத் போட்டுத்தள்ளுவதால் தானாம்..
யாராவது மழையை பிடிக்காதவங்க வந்து அடிக்கப்போறாங்க.. குடைக்குள்ள மறைஞ்ச்சுக்கோங்க..
இது நல்லா இருக்கே.. யாருக்கூட இந்த களேபரம்.. அந்த ஆள் எழுதி இன்னோர் ஆள் போஸ்டா போட்டிருக்காங்களா.. இல்ல இந்த ஆள் எழுதி அந்த ஆளுக்காக போஸ்டா.. அய்யோ சாமி..

Anonymous said...

ஸ்சப்பா முடியலப்பா!!!

G3 said...

நல்லாவே மொக்க போடுறீங்க மக்கா :) உங்க மொக்கைல மாட்டின அந்த புண்ணியவான் ரொம்ப பாவம் :D

பாச மலர் said...

சுத்திச் சுத்தி அடிக்குது ...அக்மார்க்
மொக்கைதான்..

Divya said...

இப்படியும் ஒரு மொக்கையா......ஹப்பா தாங்கல!

மின்னுது மின்னல் said...

யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)

//


ரீப்பீட்டேய்ய்ய்


:)

கீதா சாம்பசிவம் said...

//ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "//

ஹிஹிஹி, நான் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டாப்பல இருக்கு? அது சரி, மொக்கைக்கு உங்களை இத்தனை பேர் கூப்பிட்டிருக்காங்களா? ஆஹா, தெரியாமல் போச்சே, ம்ம்ம்ம்ம்? இதோ வரேன்!

கீதா சாம்பசிவம் said...

@கண்மணி,
@கப்பி, இந்த மொக்கை பத்தாது, தனித்தனியா எங்க பேரிலே போடணும்னு சொல்லிடுங்க! அதான் வலை உலகுக்குச் செய்யும் மரியாதை! :P

கண்மணி said...

அய் என்னால என் முதுக பாத்துக்க முடியுதே
கோபி போட்ட மொக்கையில தலை 360 டிகிரி சுத்தி பின்னாடி திரும்பிடுச்சி அவ்வ்வ்வ்வ்வ்

காட்டாறு said...

ஹா ஹா ஹா... இது.. இது.. இது மொக்கை. :-)

மொக்கையண்ணன் கோபி வாழ்க வாழ்க!

Dreamzz said...

அடப்பாவிகளா... இரத்தமே வருதேப்பா...

Dreamzz said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கீதா சாம்பசிவம் said...

ம்ஹும், இதெல்லாம் ஒரு மொக்கையா? :P யாராவது வந்து கூட ஒத்து ஊதுங்கப்பா!

கப்பி பய said...

:))))

இனி ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வர மாட்டீரு :))//இந்த மொக்கை பத்தாது, தனித்தனியா எங்க பேரிலே போடணும்னு சொல்லிடுங்க! அதான் வலை உலகுக்குச் செய்யும் மரியாதை! :P
//

தானைத்தலைவியின் ஆணையை ஏற்று கோபியண்ணனுக்கு எதிராக கிளைக் கழகங்கள் சார்பில் டீ குடிக்கும் போராட்டம், சாலை மறியல் மற்றும் அடையாள உண்ணும் விரதம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!

இவண்
கப்பி
டல்லாஸ் கிளை
டெக்ஸாஸ் மாகாணம்
ஐக்கிய அமெரிக்க கிளையுடன் இணைந்தது

Anonymous said...

நெசமாலுமே பயங்கர பிஸி. வீட்டில கம்ப்யூட்டர் வேற ரிப்பேர். சீக்கிரமே பதிவு போட முயற்சி பண்ணறேன்.
//உங்க மொக்கைல மாட்டின அந்த புண்ணியவான் ரொம்ப பாவம் ://
ரிப்பீட்டேய்

தென்றல் said...

ஹா....ஹா... ஹா..!

நான் 'படித்த' (மொக்கை) பதிவிலேயே இதுதான் டாப், கோபி!

'கல்லூரி' திரைப்படத்தின் நகைச்சுவையை நினைவுபடுத்துகிறது. ;)

கோபிநாத் said...

@ குசும்பன்

\\சூப்பர் மொக்கை, ஆக இந்த மாதம் கோட்டோ ஓவர்!!!:)))\

இதுக்கு தான் அண்ணன் வேணும்கிறது...;)

@ முத்துலெட்சுமி

\\யாரு விட்டா உங்க ஊருல இப்படி அடைமழ பெய்யுதே காரணம் என்ன தெரியுமா.. இப்படி பதிவா கோபிநாத் போட்டுத்தள்ளுவதால் தானாம்..\\

ஆகா...ஆகா...;)

\\யாராவது மழையை பிடிக்காதவங்க வந்து அடிக்கப்போறாங்க.. குடைக்குள்ள மறைஞ்ச்சுக்கோங்க..\\

இங்க அப்படி நிறைய பேரு இருக்காங்க...;)

\\இது நல்லா இருக்கே.. யாருக்கூட இந்த களேபரம்.. அந்த ஆள் எழுதி இன்னோர் ஆள் போஸ்டா போட்டிருக்காங்களா.. இல்ல இந்த ஆள் எழுதி அந்த ஆளுக்காக போஸ்டா.. அய்யோ சாமி..\\

எல்லாம் தனக்கு தானே திட்டம் தான்...;)

கோபிநாத் said...

@ அனானி
\\ஸ்சப்பா முடியலப்பா!!!\\

அப்போ நான் பாஸ் ஆகிட்டேன்..;)

@ ஜி3

\\நல்லாவே மொக்க போடுறீங்க மக்கா :)\\

நன்றிங்கோவ்..

\\ உங்க மொக்கைல மாட்டின அந்த புண்ணியவான் ரொம்ப பாவம் :D\\

வேற யாரும் இல்ல...அவனே தான் இவன் ;)

@ பாச மலர்

\\சுத்திச் சுத்தி அடிக்குது ...அக்மார்க்
மொக்கைதான்..\\

பாச மலரே சொல்லிட்டாங்க...வேற என்ன வேணும்...சந்தோஷம் ;)

கோபிநாத் said...

@ திவ்யா

\\இப்படியும் ஒரு மொக்கையா......ஹப்பா தாங்கல!\\

இன்னும் பலவகை இருக்கு...ஒன்னு ஒன்னா வரும்..;)

@ மின்னுது மின்னல்

\\யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)

//


ரீப்பீட்டேய்ய்ய்


:)\\

தல இதெல்லாம் மொக்கை பின்னூட்டம் கிடையாது ;)

@ கீதா சாம்பசிவம்

//ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "//

ஹிஹிஹி, நான் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டாப்பல இருக்கு? அது சரி, மொக்கைக்கு உங்களை இத்தனை பேர் கூப்பிட்டிருக்காங்களா? ஆஹா, தெரியாமல் போச்சே, ம்ம்ம்ம்ம்? இதோ வரேன்!\\

வாங்க...தலைவி வாங்க ;)

கோபிநாத் said...

@ கீதா சாம்பசிவம்

\\@கண்மணி,
@கப்பி, இந்த மொக்கை பத்தாது, தனித்தனியா எங்க பேரிலே போடணும்னு சொல்லிடுங்க! அதான் வலை உலகுக்குச் செய்யும் மரியாதை! :P\\

தலைவி நான் உங்கள் பெஸ்ட்டு தொண்டன். எதுக்கு இப்படி ஒரு கொலைவெறி....அவ்வ்வ்வ்வ்வ்

@ கண்மணி

\\அய் என்னால என் முதுக பாத்துக்க முடியுதே
கோபி போட்ட மொக்கையில தலை 360 டிகிரி சுத்தி பின்னாடி திரும்பிடுச்சி அவ்வ்வ்வ்வ்வ்\\

ம்ம்ம்...அது...இப்பவாவது புரியுதா மொக்கைன்னா எப்படின்னு ;)

@ காட்டாறு

\\ஹா ஹா ஹா... இது.. இது.. இது மொக்கை. :-)

மொக்கையண்ணன் கோபி வாழ்க வாழ்க!\\

ஆகா...அக்கா உங்க பின்னூட்டத்தை பார்த்து என்ன சொல்லறதுன்னே தெரியல...அவ்வ்வ்வ்வ்வ் ;)

சென்ஷி said...

ஓ.... இதுக்குப்பேருதான் மொக்க‌யா....
அப்ப‌ ச‌ரி... :)))

கானா பிரபா said...

தல

இந்த மாசக்கணக்கை மொக்கை போட்டே கவர் பண்ணீட்டீங்களா?

சும்மா சுத்தி சுத்தி அடிச்சிருக்கீங்

cheena (சீனா) said...

ம்ம் இது தான் உலக மகா மொக்க - ஆதியும் அந்தமும் இல்லா மொக்கயா நிக்குற மொக்க. கோபிக்கு மொக்கையன்னு(2008) பேரு வைச்சிடலாமா - நல் வாழ்த்துகள்

கோபிநாத் said...

@ டீரிம்ஸ்

\\அடப்பாவிகளா... இரத்தமே வருதேப்பா...\\

இதுக்கே வருதா!!!!

@ கீதா சாம்பசிவம்

\\ம்ஹும், இதெல்லாம் ஒரு மொக்கையா? :P யாராவது வந்து கூட ஒத்து ஊதுங்கப்பா!\\

தலைவி...இது நியாமா? இதுல ஏதே எதிர் கட்சி சதி இருக்கு..;)

@ கப்பி பய

\\:))))

இனி ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வர மாட்டீரு :))\\

முடிவுவே பண்ணிட்டிங்களா....அடப்பாவிகளா..அவ்வ்வ்வ்

//இந்த மொக்கை பத்தாது, தனித்தனியா எங்க பேரிலே போடணும்னு சொல்லிடுங்க! அதான் வலை உலகுக்குச் செய்யும் மரியாதை! :P
//

தானைத்தலைவியின் ஆணையை ஏற்று கோபியண்ணனுக்கு எதிராக கிளைக் கழகங்கள் சார்பில் டீ குடிக்கும் போராட்டம், சாலை மறியல் மற்றும் அடையாள உண்ணும் விரதம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!!

இவண்
கப்பி
டல்லாஸ் கிளை
டெக்ஸாஸ் மாகாணம்
ஐக்கிய அமெரிக்க கிளையுடன் இணைந்தது\\

செல்லம் நீயுமா!!!? முடியல டா

கோபிநாத் said...

@ சின்ன அம்மிணி

\\நெசமாலுமே பயங்கர பிஸி. வீட்டில கம்ப்யூட்டர் வேற ரிப்பேர். சீக்கிரமே பதிவு போட முயற்சி பண்ணறேன்.\\

நானும் பிஸின்னு சொன்ன யாரும் நம்ப மாட்டேன்கிறாங்க..ஆனா நான் உங்களை நம்புரேன் சீக்கிரம் போடுங்க.

//உங்க மொக்கைல மாட்டின அந்த புண்ணியவான் ரொம்ப பாவம் ://
ரிப்பீட்டேய்

ரீப்பீட்டேய்க்கு ஒரு நன்றி ;)

@ தென்றல்

\\ஹா....ஹா... ஹா..!

நான் 'படித்த' (மொக்கை) பதிவிலேயே இதுதான் டாப், கோபி!\\

நன்றி குருவே ;)

\\'கல்லூரி' திரைப்படத்தின் நகைச்சுவையை நினைவுபடுத்துகிறது. ;)\\

எல்லாம் அது ஒரு காரணம் தான்...;)

கோபிநாத் said...

@ சென்ஷி

\\ஓ.... இதுக்குப்பேருதான் மொக்க‌யா....
அப்ப‌ ச‌ரி... :)))\\

மாப்பி லந்தா!? நீ சீக்கிரம் போடு ராசா மொக்கைய ;)

@ கானா பிரபா

\\தல

இந்த மாசக்கணக்கை மொக்கை போட்டே கவர் பண்ணீட்டீங்களா?

சும்மா சுத்தி சுத்தி அடிச்சிருக்கீங்\\

எல்லாம் தலயின் பயிற்சி தான்...;)

@ சீனா சார்

\\ம்ம் இது தான் உலக மகா மொக்க - ஆதியும் அந்தமும் இல்லா மொக்கயா நிக்குற மொக்க. கோபிக்கு மொக்கையன்னு(2008) பேரு வைச்சிடலாமா - நல் வாழ்த்துகள்\\

ஆகா சீனா சார் ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கிங்க...இனி நான் சொன்னா மட்டும் கேட்வா போறிங்க..நடத்துங்க மக்கா ;))

தருமி said...

//கண்மணி,
கோபி போட்ட மொக்கையில தலை 360 டிகிரி சுத்தி பின்னாடி திரும்பிடுச்சி அவ்வ்வ்வ்வ்வ்//

இல்லைங்க அப்ப அது 180 டிகிரியாக இருக்கும். இன்னும் 180 மீதி இருக்கு

Anonymous said...

:) பயங்கர மொக்கை தான் போங்க