Wednesday, January 24, 2007

சினிமா எல்லாம் ஜுஜிபி....

மக்களே இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டுல நடந்த வெளிமாநிலத்து நிஜகதை. இது ஏதோ சினிமா கதையில்ல நம்ம சென்னை விமான நிலையத்தில் நேற்று காலையில் நடந்த சம்பவம் தான் இது. காலையில நாட்டுல என்ன செய்தின்னு தமிழ்முரசுக்கு போனேன் அதுல பார்த்தது தான் இந்த செய்தி....

சினிமா எல்லாம் ஜுஜிபி......பசங்க பின்றாங்க...

ஹீரோ பேரு அனில்குமார் (26) ஆந்திர மாநிலம்...

ஹீரோயின் பேரு ராஜ்லிண்டர்கவுர் (23) பஞ்சாப்...


கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஹீரோ வேலையை ராஜினாமா செய்து விட்டு பங்குகள் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் ஹீரோயின் தனது மாமாவுடன் வசித்து வந்தார். பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஹுரோயின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வாரங்க. ஹுரோயினிக்கு தந்தை இல்லை தாய் பஞ்சாபில் வசித்து வந்தார்.

ஹீரோவுக்கும், ஹுரோயினுக்கும் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த ஹுரோயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலை கைவிட இருவரும் மறுத்து விட்டனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஹுரோயினை அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அங்கு சென்றபிறகும் இருவரும் இன்டர்நெட் மூலம் காதலை தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஹுரோயினுக்கு வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ஹுரோயின் தான் இன்னமும் ஹுரோவை காதலிப்பது தெரிந்தால் இந்தியாவுக்கு வரமுடியாது என அறிந்தார். இதனால் ஹுரோவை மறந்து விட்டதாகவும், யாரையும் திருமணம் செய்ய முடியும் எனவும் உறவினர்களிடம் கூறினார்.

இதை நம்பிய அவர்கள் ஹுரோயினை இந்தியா வர அனுமதித்தனர். நேற்று நள்ளிரவு வரும் விமானத்தில் சென்னை வந்தார். அவரை வரவேற்க அவரது மாமா, அம்மா இருவரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் ஹுரோயின் தான் வரும் தகவலை ஏற்கனவே ஹுரோவுக்கு தெரிவித்திருந்தார். விமான நிலையத்தில் முதலில் ஹுரோவை பார்த்த ஹுரோயின் அவருடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

வெளியே ஆட்டோவில் இருவரும் ஏறுவதை கண்ட ஹுரோயினியின் மாமா தன் பெண்ணை கடத்துவதாக கூறி கூச்சலிட்டார். இதனால் அங்கிருந்த ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் ஹுரோவின் ஆட்டோவை விரட்டிப் பிடித்து ஹுரோவை அடித்து உதைத்தனர். அவர்களை தடுத்த ஹுரோயின், ஹுரோ தன்னுடைய கணவர் எனவும், அவரை பிடிக்காத தன் குடும்பத்தினர் கடத்தியதாக பொய் கூறுவதாகவும் கூறினார். ஹுரோயினியின் தாய் தன்னுடைய மகளுக்கு மனநிலை சரியில்லை எனவும் ஹுரோ, ஹுரோயினியை கடத்த முயற்சி செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருதரப்பிடமும் இன்று காலைவரை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஹுரோயினி தனது குடும்பத்தினருடன் செல்ல மறுத்துவிட்டார். இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் ஹுரோயினியின் அம்மாவிற்கு அறிவுரை வழங்கினர்.

அதை மறுத்த அவர் திருமணத்தில் விருப்பம் இல்லையெனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் ஹுரோயினியை ஹுரோவுடன் அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவு விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்களே காலையில பார்த்த இந்த காதல் செய்தியை படமாக எடுத்தால் யாரை ஹுரோ, ஹுரோயினாக போடலாம்????


நன்றி ; தமிழ்முரசு

Tuesday, January 16, 2007

தகப்பன்சாமி...படம்


பாறைப்பட்டியில் இருந்து தொடங்கி ராஜஸ்தான் சென்று மறுபடியும் பாறைப்பட்டியிலேயே முடியுது படம். மழைன்னா கருப்பா சிவப்பான்னு கேட்குற வானம் பார்த்த ஊர் பாறைப்பட்டி. கூத்துக்கட்டி பிழைப்பவர் பிரஷாந்த் (கதிர்) அதில் வரும் பணத்தை வைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் உதவுகிறார். குடிக்க கூட நீர் இல்லாத அந்த கிராமத்தை விட்டு பல குடும்பங்கள் பக்கத்து கிராமங்களுக்கு செல்கின்றனார். இந்த நிலையில் ஊர் மக்கள் அனைவரையும் சேர்த்து கிணறு வெட்ட முயற்சி செய்கிறார். கிணறு வெட்டுபவரின் மகள் பூஜா (மறிக்கொழுந்து). கிணறு வெட்ட வெட்ட வெறும் கள்ளும், மண்னும்தான் வருகிறது. திடீரென்று ஏற்படும் விபத்தில் மறிக்கொழுந்துவின் தந்தை (கிணறு வெட்டுபவர்) இறந்து விடுகிறார் அதனால் கிணறு வெட்டும் முயற்ச்சியும் நின்றுபோகிறது.

ஊர் மக்கள் அனைவரும் பிழைப்புகாக ராஜஸ்தான் போகிறார்கள். அங்கு அவர்கள் அனைவரும் கொத்தடிமையாக்கப்படுகிறார்கள். மொழி புரியாத ஊர், பலத்த பாதுகப்புகள் நிறைந்த பகுதி, குழந்தைக்கு கூட பால் தர மறுக்கின்ற காவலர்கள் என்று அடுக்கடுக்கான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட இடத்தை விட்டு ஊர் மக்கள் அனைவரையும் மீண்டும் தன் சொந்த ஊருக்கே கூட்டி செல்கிறார் என்பதுதான் தகப்பன் சாமியின் கதை.


பிரஷாந்த் ஒரு பொறுப்புள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். முழுநேரமும் காதலியின் காதலில் விழுந்து விடமால் கிராமத்து முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார், அந்தவகையில் இந்த படம் அவருக்கு வித்தியாசமான படம் தான். நடிப்பு, சண்டை மற்றும் பாடல்கள் காட்சிகளில் வழக்கம் போல் நன்றாகவே செய்த்திருக்கிறார்.

வறண்டகிராமத்தையும், வறண்டு போன பாலைவனத்தையும் அப்படியே நம் கண்களுக்கு முன் கொண்டுவந்து நிருத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். நம் முகத்திலும் வியர்வை துளிகள் எட்டிபார்க்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் பாடல் காட்சி கிராமத்து மக்களுக்கு உண்மையிலேயே விருந்து.ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துயிருக்கிறது. சில பாடல்கள் படத்தின் காட்சிகளை விளக்குகின்றது. பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடலின் வரிகளை சிதைக்காத இசை கருவிகளும், குரல்களும் தந்தற்கு ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பாரட்டுக்கள்.

கதை, திரைகதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்தையுத் செய்திருக்கிறார்
ஷிவ ஷண்முகன். பல இடங்களில் வசனங்களும், பாடல் வரிகளும் படத்தின் சூழ்நிலையை விளக்குமாறு செய்திருக்கிறார். சொந்த நாட்டிலேயே கொத்தடிமை வாழ்க்கையின் கொடுமைகளை காட்சிகளை காணும் போது இதயம் கனக்கிறது.


பாலைவனத்தில் ஒட்டக பந்தயத்தில் ஒட்டகத்தை வேகமாக ஒடவைக்க குழந்தையின் அழுகையை பயன்படுத்துவது. அதற்காக அந்த குழந்தையை சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். வறண்ட கிராமத்தில் காட்டிய கதையின் வேகம் பாலைவனத்தில் இல்லை என்று தோன்றவைக்கிறது. பணத்தைவிட மனிதனும், மண்ணும் தான் முக்கியம் என்று கூறியிருக்கிற ஷிவ ஷண்முகத்தை உண்மையிலேயே பாரட்ட வேண்டும்.

வறண்ட பூமியும், கொடுமைகளும் நிறைந்த மக்களைப் பற்றிய சினிமா என்பாதால் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து இது ஒரு மாறுபட்ட படம் தான். மசால கலவைகள் அற்ற படம் என்பதால் வசூல் பட்டியலில் இடம் பிடிக்க முடியாதப் படம்.இந்த படத்தில் நமீதாவும் (காட்டமல்) நடித்திருக்கிறார் இதனால் கூட இந்த படம் ஒரு மறுபட்ட படம் என்று கூறலாம்.

Sunday, January 07, 2007

3D-படம்


புது வருஷம் பொறந்து இன்னை யோட எட்டு நாளாச்சே
பதிவு ஏதும் போடலன்னா மக்கள் நம்மல மறந்துட போறாங்கன்னு ஒரு நல்ல கருத்துள்ள பதிவா போடலாமுன்னு யோசிச்சா வெறும் காத்து......தாங்க......வருது.

சரியின்னு மனச தேத்திக்கிட்டு நம்ம பாசக்கார பைய அனுப்பினத
உங்களுக்கு பதிவா போட்டுருக்கேன்.

இந்த 2டி படம், 3டி படம் எல்லாம் திரையில் பார்த்திருப்பிங்க.

அதை கொஞ்சம் தரையிலும் பருங்க.


இவரு தான் படம் வரைய பேறவரு......ஏரியா நல்லயிருக்கான்னு பார்க்குறரு..


ஆராம்பிச்சிட்டாரு....பொறுமையா இருங்க மக்களே படம் காட்டுவாறு..


ஆஹா ....பூனை...


என்னத்தையோ கலக்குறாரு.... (இந்த மாதிரி சரக்கை பார்த்ததில்லியே)


கலர் அடிக்குறாரு....


பூனைக்கு பேரு வைக்குறாருப்பா....


இறுதிக்கட்ட பணி...


பாரு... பாரு... நல்ல பாரு.... 3டி படம் பாரு


இவரோட மற்ற தரை வண்ணங்கள்....coca cola வையே கவுத்திட்டாரு...வீரன்டா......


இது என்னதுன்னு தெரியல மக்க...


ஒன்னு அவரு......இன்னென்னு அவரு மாதிரி...


கலக்கிட்டாறு...


ஆஹா....தலையே சுத்துதடா....சாமி


சின்ன "டைடானிக்"...

அடேய் வெள்ளகார துரை...
இந்த மாதிரி தான் ஏங்க ஊருலயும் சாமி படமெல்லாம் போடு வாங்க. என்ன...நீ....போட்டோ எல்லாம் எடுத்து கலக்குற
எங்காளுங்க வயித்து பசிக்கு படம் போட்டு கலங்குறங்க.