Thursday, January 24, 2008

எனக்குப்பிடித்த என்னோட பதிவு...

கடந்த வருடத்தில் நான் எழுதியதில் எனக்குப்பிடித்த பதிவு ஒன்றை சொல்ல வேண்டும் என்று வல்லிம்மாவும், சகோதரி முத்துலெட்சுமியும் அழைத்திருக்கிறார்கள். 100, 200 பதிவு போட்ட பெரியப்பெரிய‌ பதிவர்களே தனக்கு பிடித்த பதிவை சுலபமாக கொடுத்து விட்டார்கள். ஆனால் மொத்தமே 37 பதிவுகள் மட்டுமே போட்ட என்னால் அவ்வளவு சுலபமாக போடமுடியவில்லை... டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராக தெரியலன்னு நீங்க சொல்லறது காதுல விழுது.. என்ன செய்யுறது! எல்லாம் ஒரு விளம்பரம் தான்.


போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 27.

அதில் எனக்கு பிடித்த பதிவு அழகுகள் ஆறு தொடருக்காக அய்யனார் அழைத்து எழுதியதுதான் எனக்கு பிடித்த பதிவு அய்யனாருக்காக ஆறு அழகுகள்

ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.அந்த பதிவில் என் அம்மா எனக்கு கொடுத்த முத்தத்தைப்பற்றி சொல்லியிருப்பேன். இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது. எனக்கும் என் அம்மாவுக்கும் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிக்கிட்டே போகலாம்.(எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும்) அம்மாவைப்பற்றி அதிகம் யோசித்தால் அழுகைதான் வருது. என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!

அந்த ப‌திவ அடிச்சு முடிச்ச‌துமே என்னோட‌ பிலிப்பைனி நண்ப‌ன் கேட்டான். என்ன‌ செய்ய‌றேன்னு.. நான் இந்த பதிவுல எழுதியிருந்த அம்மா விஷயத்த பத்தி அவன்கிட்ட சொன்னதுமே அவ‌ன் க‌ண்ணு க‌ல‌ங்கிடுச்சு.." you are very lucky man". இதுக்கு போயி ஏன்டா அழ‌றேன்னு நான் கேட்ட‌துக்கு "I am also miss my mother"ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.


என் பதிவுகளை என்னை மீண்டும் படிக்க வைத்த வல்லிம்மாவுக்கும், முத்துலெட்சுமி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வந்து பார்த்து மார்க் போடுங்கள்.

அடுத்த நான் அழைக்கும் மூவர் - கவிஞர்கள்

அழகுகள் ஆறுக்கு அழைத்த அய்யனார்

கவிதாயினி காயத்ரி

கவிஞர் வேதா

எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)

Monday, January 14, 2008

மொக்கை போட்டோம்ல

"நான் என்ன சொன்னேன்! நீ என்ன செய்துக்கிட்டு இருக்க..? "

"ஏன்! எப்பவும் நீ சொல்லறதைத்தான் செய்யணுமா..! "

"அதுக்குத்தானேகூட இருக்கே...!"

"நான் சொன்னது என்ன ஆச்சு..? "

"எல்லாம் நீ சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன். "

"அதை செய்யுறதுக்கு இவ்வளவு நாளா?"

"நீ ஒழுங்கா சொல்லியிருக்கணும். "

"போன முறையும் இப்படித்தான் சொன்னே! இந்த முறை தெள்ளத்தெளிவாக சொன்னேன். அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ற..?"

"என் மேலயே குத்தம் சொல்லு... ஏன் இப்படி எல்லாம் ஆச்சுன்னு யோசிக்காதே..! "

"ஆமா.. ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் காரணம் இருக்கும். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது என்னால... எனக்கு தேவை ரிசல்ட்.. "

"ஆமா... அந்த விஷயம் என்ன ஆச்சு...? "

"எந்த விஷயம்....? "

'அதாண்டா அந்த விஷயம்...! நேத்துக்கூட சொல்லிக்கிட்டு இருந்தியே.. "

"நேத்து நான் பல்லு விளக்குறதுக்கு முன்னாடிலேந்து படுத்து தூங்கற வரைக்கும் நிறைய‌ விஷயத்தை பேசினோம்... அதுல எந்த அந்த விஷயம்..? "

"டேய் எனக்கு கொலைவெறி உண்டாக்காதே..."

"டேய் உனக்கு இனிமேதான் கொலைவெறி வரும்.. இப்போ எனக்கு இருக்குற வெறிக்கு கொலையே பண்ணிடுவேன். தெளிவா சொல்லுடா. "

"எப்பாரு தெளிவு.. தெளிவு ஏன்டா கொஞ்சம் சூசகமாக சொன்னா புரியாதா!"

"யாரு நீ! சூசகமா........! கிழிஞ்சது. அன்னிக்கு சொன்னியே சூசகமா ஒரு விஷயத்தை எல்லார் முன்னாடியும்..!! அதுல இருந்தே தெரியல உன் சூசக திறமையை பத்தி..!!! "

"என்னிக்கு? எப்போ..!? "

"அதாண்டா அன்னிக்கு.... எல்லார் முன்னாடியும். "

"டேய் என்கிட்டயே போட்டு வாங்குறியா....அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்லுடா.. இல்லைன்னா மண்டையே வெடிச்சிடும். "

"முதல்ல நீ தெளிவா எந்த அந்த விஷயமுன்னு சொல்லு. அப்புறம் நான் அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்றேன். "

"டேய் என்னால முடியலடா! எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலைடா. "

"நான் வேணுமுன்னா உன் காலுல விழுந்து கேட்டுக்கிறேன். எந்த அந்த விஷயமுன்னு தெளிவாக சொல்லி தொலைடா வெண்ணெய். "

"ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "

"நீ எங்க இருந்து ஒழுங்கா செய்யப்போற...எல்லாம் என் HEAD LETTER "

"தோடா..! இவரோட HEAD LETTERலாமுல்ல.... எல்லாம் என்னோட HEAD LETடேற் மாமு. உன்னோட மல்லுக்கட்ட வேண்டியிருக்கு... "

ஏன்டாப்பா சொல்லமாட்டே.... இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ..

"ஆமா சொன்னா மட்டும் உட்காந்து கேட்டுட்டுதான் சார் மறுவேலை பார்ப்பாரு.. "

"ஏன் நீ சொன்னதை எல்லாம் நான் கேக்க‌லியா.... அப்படி நான் கேட்காம வேற யாருடா கேட்டுட்டாங்க? "

"ஏன் எங்களுக்கு எல்லாம் வேற ஆளுங்க இல்லையா? "

"காமெடி கீமெடி பண்ணலியே.....! "

"உனக்கு வயித்தெரிச்சல்டா..! யாருக்கு எனக்கு.....!? டேய் வெளியில சொல்லிடாதே சிரிப்பாங்க.!"

"நாலு பேரு சிரிச்சா நல்லது தானே...! "

"ஆமா இவரு அப்படி நாலு பேருக்கு நல்லது செய்ய‌றதுக்குகாக தான் பிறவி எடுத்திருக்காரு."

"உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா என் வேலையை மறந்துடுவேன். ஆளை விடுடா சாமி டேய்!"

"சீக்கிரம் முடிப்பியா மாட்டியா? "

"எல்லாம் முடிஞ்சிடுச்சிடா.. "

"சீக்கிரம் கொடுடா.. அதை வேற பதிவுல ஏத்தி தமிழ்மணத்துல இணைக்கனும்."

"இந்தா! வந்துடுச்சான்னு பாரு மெயில்..? "

வலையுலக தலைவி கீதா, பாசக்கார அக்கா கண்மணி மற்றும் வலையுலக அறிவுஜிவி கப்பி பய அவர்களின் அழைப்பு ஏற்று மொக்கை பதிவு போட்டாச்சி. என்ன தலைவி மொக்கையை மொக்கையாக போட்டுயிருக்கேனா!? அப்புறம் இன்னும் மூணு பேரை கூப்பிட வேண்டுமாம்

1. என்னை போலவே மாதம் ஒரு பதிவு எழுதும் சின்ன அம்மிணி அக்கா

2. ஜி3 புகழ் ஜி3 காயத்ரி

3. நட்பு கவிஞர் பிரேம் குமார்

யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)

Tuesday, January 01, 2008

வாழ்த்துக்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)