Monday, May 21, 2007

கிளம்பு காத்து வரட்டும்

நான் ஆணி புடுங்குறதை பார்த்து எங்க மேனேஜர்

"ராசா...என் தங்கம்....போதும் நீ புடிங்கினது....இனியும் புடிங்கி சுவத்தை ஓட்டை ஆக்காதே....நீ ஆணி புடிங்கின திறமையை பார்த்து கம்பெனியே உனக்கு லீவு கொடுத்திருக்கு....கிளம்பு காத்து வரட்டும்ன்னு சொல்லிட்டாரு". (ஆணி புடிங்கின மாதிரி ஆக்ட் வுட்டதுக்கே லீவா....அப்ப உண்மையில் ஆணி புடிங்கியிருந்தா....நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு)

"கொஞ்சம் நல்ல சாப்பாடு....அம்மா கையால"

"ஒரு ரெண்டு மூணு கல்யாண சாப்பாடு....... நட்பு வட்டாரத்தின் கல்யாணங்கள்" ( அது என்னமோ தெரில மக்கா இந்த வருஷம் ஆரம்பிச்சதுல இருந்தே ஒரே கல்யாணம் தான். இந்த வருஷம் கல்யாண வருஷம் போல)

"வீட்டுல புதுசா வந்திருக்க ரெண்டு குட்டிகள்"......(அக்கா பொண்ணு அண்ணன் பையன்)

"இன்னும் ஒரு மாதத்தில் வர போற இன்னொரு அண்ணன் வாரிசு"

"அப்புறம் வெயிலோடு கொஞ்சம் விளையாட்டு"

"ஊர்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் ஒரு ரவுண்டு"

"அப்படியே பாசகார பசங்களோட ஒரு சின்ன ட்ரீப்.....பாண்டிசேரிக்கு"இப்படி எல்லாம் கணக்கு போட்டு கிளம்புரேன் மக்கா.....ஒரு மாதம் இந்த தமிழ்மணத்தையும் உங்களையும் எப்படி தான் பிரிஞ்சியிருக்க போறேன்னு நினைக்கும் போது அழுகையா வருது...நான் அழுது என் சோகம் உங்களை தாக்கிடும்ன்னு நினைக்கும் போது வர அழுகை கூட நின்னுடுது.


எங்க பாசகார குடும்பத்தை பத்துரமா பார்த்துக்குங்க.....இந்த கிடேசன் பார்க்கை வேற அபி அப்பாவை நம்பி ஒப்படைச்சிட்டு போறேன். என்னமோ எதையோ விட்டுட்டு போற மாதிரியே ஒரே பீல்....சரி ஓகே.....மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் கிளம்புறேன்.

21 comments:

இராம் said...

welcome to india maappu ... :)

அய்யனார் said...

போய் வா ராசா ..நம்ம மேட்டர் மறந்துடாத :)

அபி அப்பா said...

கோபி! கிளம்புப்பா, காத்து வரட்டும், நானும் பின்னால வர்ரேன். கிடேசன் பார்கை அய்ஸ் கிட்ட விட்டுட்டு வாரேன். நாம் வர்ர வரை அய்ஸ் சுத்தி சுத்தி விளையாடட்டும்.

அபி அப்பா said...

அய்ஸ் அது என்னா மேட்ட்ர்...நமக்கு ஜொல்லகூடாதா?

delphine said...

Gopi! Enjoy your holidays! have a great time ..

ஜி said...

வருக... வருக... எங்கள் தாயகம் உங்களை அன்போடு வரவேற்கிறது...

கோபிநாத் said...

\\\இராம் said...
welcome to india maappu ... :) \\\

சரி மாப்பி ;))))

கோபிநாத் said...

\\அய்யனார் said...
போய் வா ராசா ..நம்ம மேட்டர் மறந்துடாத :) \\

நன்றி தல...சொல்லிட்டிங்கல்ல அப்ப கண்டிப்பா...........வேண்டியாது தான் ;)))

கோபிநாத் said...

\அபி அப்பா said...
கோபி! கிளம்புப்பா, காத்து வரட்டும், நானும் பின்னால வர்ரேன். \\

அங்கையும் கிளம்பா சொல்லிட்டாங்களா ;))

\\கிடேசன் பார்கை அய்ஸ் கிட்ட விட்டுட்டு வாரேன். நாம் வர்ர வரை அய்ஸ் சுத்தி சுத்தி விளையாடட்டும். \\

புலியோடு விளையாடின்னு பாட்டு பாடிக்கிட்டே விளையாடுவாரு ;))

கோபிநாத் said...

வாங்க Delphine

\\delphine said...
Gopi! Enjoy your holidays! have a great time .. \\

நன்றி ;))) பார்க்கலாம் ;))

கோபிநாத் said...

\\ஜி said...
வருக... வருக... எங்கள் தாயகம் உங்களை அன்போடு வரவேற்கிறது... \\

எல....அது என்ன உங்கள் தாயகம்? நம்ம தாயகம்ன்னு சொல்லு ;))

elavarasi said...

hello romba build up a... ponga ponga parthu neenga aluthathil ora vellama irruku sharjah,,, tamil nattla tan thanni illa anga poi nalla alupa.....

HAVE A NICE & SAFETY TRIP

கோபிநாத் said...

வாங்க அரசி ;)))

\elavarasi said...
hello romba build up a... ponga ponga parthu neenga aluthathil ora vellama irruku sharjah,,, tamil nattla tan thanni illa anga poi nalla alupa.....\\

எப்படி தாயீ இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிற...அவ்வ்வ்வ்வ்வ்வ் ;((

\\HAVE A NICE & SAFETY TRIP \\

முதல்ல சொன்னதுக்கு நன்றிங்க...ஆனா இந்த ரெண்டாவது என் கையில இல்லிங்க ;))

CVR said...

ஓவரா பீல் பண்ணாதீங்க தல!!
விடுமுறையை ஜாலியா கழிச்சிட்டு வாங்க!! நானும் இப்போ விடுமுறையிலதான் இருக்கேன் :-D,ஆனா இந்த வாரக்கடைசியிலே கிளம்பிடிவேன்!! :-(

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள்

(கிளம்பு காத்திருக்கலாம் பொண்னு)


(சும்மா கொளுத்தி போடுவோம்::)))

மு.கார்த்திகேயன் said...

நல்லா என்ஜாய் பண்ணுப்பா கோபி.. உண்மயிலே என்னென்ன என்ஜாய் பண்ணப்போறேன்னு நீ ஒரு லிஸ்ட் போட்டபிறகு எனக்கும் இந்தியா போகணும்னு ஆசை வந்திடுச்சுப்பா..

மணி ப்ரகாஷ் said...

இந்தியாவா... ம்ம்ம்ம் நல்லா என்சாய் பண்ணு கோபி...


சினிமா வேற பார்க்க போற..ஆமா

பாண்டிச் சேரியா? அங்க என்ன விசேசம்..
அய்யனார் வேற மேட்டர் மறந்துடதா னு சொல்ரார்... :))

ம்ம்ம்ம் நடத்து ராசா..நடத்து ராசா..நடத்து...

delphine said...

எங்கே கோபி... ஆளையே காணோம்? enjoying your hols?//

Arunkumar said...

அட கொஞ்ச நாள் இந்த பக்கம் வரல... அதுக்குள்ள கிளம்பியாச்சா?

இந்நேரம் கண்டிப்பா தாயகத்துல இருப்பீங்க... நல்ல என்சாய் பண்ணுங்க கோபி :-)

Arunkumar said...

உங்க லிஸ்ட பாத்தா எனக்கு இப்பவே கெளம்பனும்னு இருக்கு.. எப்ப கிடைக்குமோ அந்த பாக்கியம் !!

Arunkumar said...

//
பிரிஞ்சியிருக்க போறேன்னு நினைக்கும் போது அழுகையா வருது...நான் அழுது என் சோகம் உங்களை தாக்கிடும்ன்னு நினைக்கும் போது வர அழுகை கூட நின்னுடுது.
//
ROTFL :) செம டைமிங் கோபி !!