Thursday, May 03, 2007

அபி பாப்பாவின் நன்றி அறிவிப்பு கூட்டம் - கிடேசன் பார்க்

எல்லா ஆணியையும் முடிச்சிட்டு இழுத்து ஒரு பெரு மூச்சு விட்டுட்டு.....ஒரு டீ சாப்பிடலாமுன்னு வெளிய வந்தா கிடேசன் பார்க்கில் இருந்து போன் யாருடா இதுன்னு யோசிச்சிக்கிட்டே போனை எடுத்து

நான் ; ஹலோ.....

அருமையான குரலில் ஒரு குழந்தை பேசிச்சி

ஹலோ.....சித்தா எப்படி இருக்கீங்க

நான் ; இன்னாது சித்தாவா.....நான் சித்தன் எல்லாம் இல்லைமா....அவரு அண்ணாமலை சீரியலோட போயிட்டாரே.....என் பேரு கோபிநாத்

குழந்தை ; அய்யோ......இதுக்கு தான் அப்பா கூட அதிகமா சேராதிங்கன்னு சொன்னேன்.

நான் ; அப்படியா....சரி.... யாரு கண்ணு நீ கிடேசன் பார்க்குல நீ என்ன பண்ற?

குழந்தை ; ம்ம்ம்......அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்

நான் ; நாங்க தானே வழக்கமா அல்வா கொடுப்போம்......நீ யாருக்கு கொடுத்துக்கிட்டு இருக்க

குழந்தை ; காலையில எனக்கு வாழ்த்து சொல்லி பதிவு போட்டாரு இல்ல நம்ம காதலன் சித்தப்பூ அவருக்கு தான் அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்

நான் ; இப்ப தான் நம்ம மரமண்டைக்கு புரிஞ்சது......பேசுறது அபி பாப்பா.....செல்லம்.....கண்ணு....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))))

அபி பாப்பா ; ம்ஹும்...இப்ப வாச்சும் கண்டு பிடிச்சிங்களே.......ரொம்ப கஷ்டம் சித்தா உங்களோட.....

நான் ; சரிடா......கண்ணு கொஞ்சம் ஓவரு ஆணி அதானலதான் சட்டுன்னு கண்டு பிடிக்க முடியல

அபி பாப்பா ; சரி சீக்கிரம் வாங்க.....வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அல்வா கொடுக்க வேண்டும்

நான் ; இதே வந்துட்டேன் கண்ணு......போனை துண்டித்து விட்டு கிடேசன் பாரக்குக்கு ஓடினேன்.

கிடேசன் பார்க்குக்கு போனா அபி பாப்பா பட்டு பாவாடை சட்டையில கலக்கலா இருந்திச்சி.....அல்வா வாங்குறதுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாரு சென்ஷி....அவருக்கும் அய்யனாருக்கும் இதுல போட்டி வேற

நான் போயி மைக்கை எல்லாம் சரி பண்ணிட்டு பாப்பாவை பவ்வியாமாக மேடைக்கு அழைத்து பேச சொன்னேன்

அபி பாப்பா ; அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்,

கை தட்டல் காதை கிழிச்சது......தம்பி அடிச்ச விசில் வானை பிளந்தது....பாப்பா தன் இரண்டு கைகளையும் தூக்கி அமைதி .....அமைதின்னு சொல்லுச்சி

என் பாசமிகு சித்தப்பூ.....சென்ஷி அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....மற்றும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ப.பா.சங்கத்தின் டீச்சர் கண்மணி அவர்களும் அவரின் மாணவ மணிகளும் சேர்ந்து செய்த அல்வா வழங்கப்படும் வாயார....(முடியுமா) சாப்பிட்டு விட்டு போங்க...

எல்லாரும் தட்டை தூக்கிட்டு கேட்டை நோக்கி கண்ணு மண்ணு தெரியாம ஓடுறாங்க.

25 comments:

மை பிரண்ட் said...

Mee the first

சென்ஷி said...

//எல்லாரும் தட்டை தூக்கிட்டு கேட்டை நோக்கி கண்ணு மண்ணு தெரியாம ஓடுறாங்க.//

நல்லா பாத்தீங்களா.. தட்ட தூக்கிகிட்டா ஓடுனோம். ஓடுனதுல ஏதும் புரியல. :))

இங்கயும் சொல்லிக்கறேன்.
அபி பாப்பாவுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்

சித்தப்பூ சென்ஷி

கானா பிரபா said...

;-)))

தேவ் | Dev said...

பாப்பா எனக்கு திருநெல்வேலி அல்வா தான் வேணும் ஓ,கேவா?

கோபி சித்தாவுக்கு கோதுமை அல்வா கொடுக்கணும் புரிஞ்சுதா?

இராம் said...

அடபாவிகளா, போனத்தடவை எனக்கு...இப்போ அபி பாப்பா'க்கா???

கண்மணி said...

எலே கோபி உனக்கு இருக்கு ஆப்பு ப.பா.ச கிட்டயே மோதறியா?
அபி செல்லம் இதுங்களுக்குப் போயி அல்வா குடுக்கிறியே ஆளுக்கு ஒரு டம்ளர் மாரியாத்தாக் கோயில் கூழு குடு போதும்.
இங்கனயும் அத்தையின் வாழ்த்துக்கள் செல்லம்.

அய்யனார் said...

அபி

மறுபடியும் இந்த அங்கிளின் வாழ்த்துக்கள்

யோவ் கோபி என்னயா சத்தமே காணோம்

கோபிநாத் said...

\\அய்யனார் said...
அபி

மறுபடியும் இந்த அங்கிளின் வாழ்த்துக்கள்

யோவ் கோபி என்னயா சத்தமே காணோம்\\

அய்யோ...தல அதான் எல்லாரும் தட்டை தூக்கிட்டு ஓடிட்டாங்கல்லா அதான் சத்தமே இல்லை

கோபிநாத் said...

\\இராம் said...
அடபாவிகளா, போனத்தடவை எனக்கு...இப்போ அபி பாப்பா'க்கா???\\

மாப்பி அல்வா கொடுத்தது யாருன்னு பாரு ;-))

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் பாப்பா..

ஜி said...

//மை பிரண்ட் said...
Mee the first //

My friend perulaiyum poliyaa??

ஜி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி கண்ணு....

யய்யா கோபி... நீரு என்ன அல்வா கடை வச்சிருக்கீரா? எல்லா பேருக்கும் அல்வாவா கொடுத்துத் தள்ளுறிய....

Syam said...

அபி பாப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்..நீ போயி உன் பிரண்ட்ஸ் கூட கொண்டாடுறத விட்டுட்டு இந்த பெரிசுங்க கூட எல்லாம் என்ன சகவாசம் :-)

வருத்தப்படாத வாலிபன். said...

இந்த பதிவிலயும் அபி பாப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

என்னாது ப.பா.ச மகளிரும்,கண்மணி அக்காவும் கிண்டின அல்வாவா?.நான் வரல சாமி இந்த வெளையாட்டுக்கு.

CVR said...

குழந்தைக்கு வாழ்த்துக்கள்!
இவ்வளவு பாசக்கார சித்தப்பாக்களும்,அத்தைகளும் இருக்கற வரைக்கும் அபி பாப்பாவுக்கு என்னைக்குமே வருத்தம் இல்லை!! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கும்மின்னு சொன்னீங்க. அப்படி ஒன்னும் நடந்த மாதிரி தெரியலையே???

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ஜி said...
////மை பிரண்ட் said...
Mee the first //

My friend perulaiyum poliyaa?? //

போலியில்லை. நானேதான்!

பாசக்கார அண்ணன்களின் பாசம் இது! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

கும்மி இடம் மாறியாச்சு.. நேத்து விட்ட வேலையை இன்னைக்கு முடிச்சிடலாம். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

இருக்கிறவங்க முதல்ல வந்து அட்டெண்டண்ஸ் போடுங்கோ.. அப்புரம்தான் கும்மிக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.. :-D

கோபிநாத் said...

\\மை பிரண்ட் said...
Mee the first\\

உண்மையில் இது பிரண்டு தானா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கோபிநாத் said...
//\\மை பிரண்ட் said...
Mee the first\\

உண்மையில் இது பிரண்டு தானா? //

உங்களுக்கும் சந்தேகமா கோபி? இது நானேதான்.. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

கண்ணும் கண்ணும் நோக்கியா..

:-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

@சென்ஷி said...
//எல்லாரும் தட்டை தூக்கிட்டு
//கேட்டை நோக்கி கண்ணு மண்ணு தெரியாம ஓடுறாங்க.//

நல்லா பாத்தீங்களா.. தட்ட தூக்கிகிட்டா ஓடுனோம். ஓடுனதுல ஏதும் புரியல. :))//

ஆமாங்க.. போட்டோ எல்லாம் கோபிண்ணே வெளியிட்டுட்டார்ப்பா!!! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

@இராம் said...
//அடபாவிகளா, போனத்தடவை எனக்கு...இப்போ அபி பாப்பா'க்கா??? //

இது என்ன சின்ன புள்ளதனமா இருக்கு?

அடுத்து யாருக்கு பிறந்த நாள் வருதோ.. அவங்களுக்கும் பார்ட்டி வச்சிடலாம். :-D

மணி ப்ரகாஷ் said...

அபி பாப்பாவிற்கு வாழ்த்துகள்..

ஆமா நாட்டாமை சொல்ர மாதிரி இங்க என்ன பாப்பா பண்ற.இப்பவே அரசியல ஆரம்பிச்சுட்டியா??அப்புறம், எனக்கு சாக்லேட்தான் வேணும்

God bless u :)