Wednesday, January 24, 2007

சினிமா எல்லாம் ஜுஜிபி....

மக்களே இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டுல நடந்த வெளிமாநிலத்து நிஜகதை. இது ஏதோ சினிமா கதையில்ல நம்ம சென்னை விமான நிலையத்தில் நேற்று காலையில் நடந்த சம்பவம் தான் இது. காலையில நாட்டுல என்ன செய்தின்னு தமிழ்முரசுக்கு போனேன் அதுல பார்த்தது தான் இந்த செய்தி....

சினிமா எல்லாம் ஜுஜிபி......பசங்க பின்றாங்க...

ஹீரோ பேரு அனில்குமார் (26) ஆந்திர மாநிலம்...

ஹீரோயின் பேரு ராஜ்லிண்டர்கவுர் (23) பஞ்சாப்...


கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஹீரோ வேலையை ராஜினாமா செய்து விட்டு பங்குகள் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் ஹீரோயின் தனது மாமாவுடன் வசித்து வந்தார். பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஹுரோயின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வாரங்க. ஹுரோயினிக்கு தந்தை இல்லை தாய் பஞ்சாபில் வசித்து வந்தார்.

ஹீரோவுக்கும், ஹுரோயினுக்கும் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த ஹுரோயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலை கைவிட இருவரும் மறுத்து விட்டனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஹுரோயினை அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அங்கு சென்றபிறகும் இருவரும் இன்டர்நெட் மூலம் காதலை தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஹுரோயினுக்கு வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ஹுரோயின் தான் இன்னமும் ஹுரோவை காதலிப்பது தெரிந்தால் இந்தியாவுக்கு வரமுடியாது என அறிந்தார். இதனால் ஹுரோவை மறந்து விட்டதாகவும், யாரையும் திருமணம் செய்ய முடியும் எனவும் உறவினர்களிடம் கூறினார்.

இதை நம்பிய அவர்கள் ஹுரோயினை இந்தியா வர அனுமதித்தனர். நேற்று நள்ளிரவு வரும் விமானத்தில் சென்னை வந்தார். அவரை வரவேற்க அவரது மாமா, அம்மா இருவரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் ஹுரோயின் தான் வரும் தகவலை ஏற்கனவே ஹுரோவுக்கு தெரிவித்திருந்தார். விமான நிலையத்தில் முதலில் ஹுரோவை பார்த்த ஹுரோயின் அவருடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

வெளியே ஆட்டோவில் இருவரும் ஏறுவதை கண்ட ஹுரோயினியின் மாமா தன் பெண்ணை கடத்துவதாக கூறி கூச்சலிட்டார். இதனால் அங்கிருந்த ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் ஹுரோவின் ஆட்டோவை விரட்டிப் பிடித்து ஹுரோவை அடித்து உதைத்தனர். அவர்களை தடுத்த ஹுரோயின், ஹுரோ தன்னுடைய கணவர் எனவும், அவரை பிடிக்காத தன் குடும்பத்தினர் கடத்தியதாக பொய் கூறுவதாகவும் கூறினார். ஹுரோயினியின் தாய் தன்னுடைய மகளுக்கு மனநிலை சரியில்லை எனவும் ஹுரோ, ஹுரோயினியை கடத்த முயற்சி செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருதரப்பிடமும் இன்று காலைவரை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஹுரோயினி தனது குடும்பத்தினருடன் செல்ல மறுத்துவிட்டார். இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு போலீசார் ஹுரோயினியின் அம்மாவிற்கு அறிவுரை வழங்கினர்.

அதை மறுத்த அவர் திருமணத்தில் விருப்பம் இல்லையெனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் ஹுரோயினியை ஹுரோவுடன் அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவு விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்களே காலையில பார்த்த இந்த காதல் செய்தியை படமாக எடுத்தால் யாரை ஹுரோ, ஹுரோயினாக போடலாம்????


நன்றி ; தமிழ்முரசு

40 comments:

இலவசக்கொத்தனார் said...

அனில்குமார், ராஜ்லிண்டர்கவுர் படத்தைப் போடுங்க. நல்லா இருந்தா அவங்களையே போடலாம்!!

Anonymous said...

intha maathiri story kku, srikkanth & any new heroine podalaam....becoz, srikkanth film ellamae ippdi thaan mokkai ya irukkum

Anonymous said...

உம்மையும் உமது லவ்வரையும்

Syam said...

சூப்பர் மேட்டர் போங்க...இலியான ஹீரோயினியா நடிக்கறதா இருந்தா ஹீரோவா நடிக்க நான் ரெடி...காசு போட்டு படம் எடுத்து அப்புறம் ரோட்டுல துண்டு விரிக்க நீங்க ரெடியா :-)

Anonymous said...

ஹீரோ கோபிநாத் ரெடி....

ஆனா ஹீரோயின். ம்ம்ம்ம்.. நீதாம்பா சொல்லணும்.

ஏதோ சுக்ரன்ல வர்ற விஜய் மாதிரி நான் வேணும்னா, உன்ன ஆட்டோல தொரத்தும்போது துணை நடிகரா வந்து காப்பாத்துறேன். :))

கோபிநாத் said...

வாங்க கொத்தனார்...
எப்படி இருக்கு புதுவருஷம்...
புதுவீடு எல்லாம்...

\\அனில்குமார், ராஜ்லிண்டர்கவுர் படத்தைப் போடுங்க. நல்லா இருந்தா அவங்களையே போடலாம்!!\\

இல்லையே.:(

கோபிநாத் said...

வாங்க அனானி...

\\intha maathiri story kku, srikkanth & any new heroine podalaam....becoz, srikkanth film ellamae ippdi thaan mokkai ya irukkum\\

மெக்கைன்னு சொல்லிட்டு அவரை ஹுரோவ போடலன்னு சொல்றிங்க...

\\உம்மையும் உமது லவ்வரையும் \\

அனானி உனக்கு ரொம்ப தைரியம்...
என்னது லவ்வர...அதெல்லாம் இல்லப்ப..:(((

கோபிநாத் said...

வாங்க தல..

\\சூப்பர் மேட்டர் போங்க...இலியான ஹீரோயினியா நடிக்கறதா இருந்தா ஹீரோவா நடிக்க நான் ரெடி\\

ரொம்ப டாங்க்ஸ் தல...இருந்தாலும் தங்கமணி மேடத்துக்கிட்ட ஒரு வாட்டி கேட்டுக்கிறேன்...

\\...காசு போட்டு படம் எடுத்து அப்புறம் ரோட்டுல துண்டு விரிக்க நீங்க ரெடியா :-)\\

இந்த துண்டு விரிக்குற மேட்டரை விடமாட்டிங்க போல...

G.Ragavan said...

ஈரோயினா சரளாக்காவையும் ஈரோவா வடிவேலையும் போட்டு...கதையில மனோகரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, காகா ராதாகிஷ்ணன், கருணாஸ், இவங்களையெல்லாம் போட்டு...காமெடி வில்லனா அவரு பேரு என்னங்க...தெரியலையே...ராசாதி ராச ராச மார்த்தாண்டன்னு படமெல்லாம் எடுத்தாரே. அவரப் போட்டு...சோடியா பிந்துகோஷையும் போட்டா நல்லாயிருக்கும். நாலு பாட்டு. ரெண்டு சண்டை. இருக்கனும். ஏர்ப்போர்ட்டுல கிளைமாக்ஸ் காட்சியில ஈரோயின வெளிய கொண்டு போறதுக்கு ஈரோ செய்ற காமெடி முயற்சிகள் பார்க்கிறவர்கள் வயிற்றில் வலியைக் கொண்டு வரும். ஈரோயின்னு நெனைச்சு ஒரு வெள்ளைக்காரப் பாட்டியைக் கையப் பிடிச்சி இழுக்குற காட்சி வைக்கனும். அது வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வெச்சு....அவரு அடி வாங்குனதும் ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்னு குதிரை மாதிரி சத்தம் விடனும். அப்ப மனோகரமா வந்து அவர அங்க இருக்குற எதையாவது எடுத்து அடிக்கனும். படா டமாசு. படா டமாசு.

தம்பி said...

இந்த மாதிரி நியூஸ் இப்பதான் படிக்கற போலருக்கு!

நான் டவுசர் போட்டுருந்த காலத்துலயே கேட்டுருக்கேன். தினத்தந்தி நியூச படிச்சதே இல்லையா.
காதல் கிளிகள் பறந்தன.....
தங்கப்பன் வயது 24, தங்கம்மா வயது 42,.... காதலித்து வந்தனர் நேற்றிரவு பறந்தனர்....
வழக்கு பதிவு செய்து போலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மூணு பக்கத்துக்கு ரெண்டு நியூஸ் இந்த மாதிரி இருக்கும்.

ஓடினாங்களா இல்லையா அது எல்லாம் பிரச்சினையே இல்ல.
இவனுங்க என்னவோ பின்னாடியே போய் பாத்த மாதிரி பறந்தனர், சேர்ந்தனர்னு பீலா விடுவாங்க!

அப்பால இன்னோன்னு,
பொண்ணே தப்பு செஞ்சிருந்தாலும் கும்பல்ல மாட்டினா ஆம்பளைக்குதான்யா தர்ம அடி மொத்தமும் விழும். அடிக்கறவனும் ஆம்பளையாதான் இருப்பான். ஏற்கனவே எவனாவது இந்த மாதிரி வெளுத்துருப்பானுங்க அந்த வெறிய இந்த மாதிரி ஆளுங்க கிட்ட காமிச்சிருவானுங்க.

என்னத்த செய்யிறது ஆம்பளையா பொறந்தாவே இப்படிதான்.

இத சினிமாவா வேற எடுக்கணுமா?

கோபிநாத் said...

வாங்க ஜி...

\\ஹீரோ கோபிநாத் ரெடி...\\

உசுப்பேத்த ஆரம்பிச்சிட்டயா...

\\ஆனா ஹீரோயின். ம்ம்ம்ம்.. நீதாம்பா சொல்லணும்.\\

அதான் syam சொல்லிட்டாரே..


\\ஏதோ சுக்ரன்ல வர்ற விஜய் மாதிரி நான் வேணும்னா, உன்ன ஆட்டோல தொரத்தும்போது துணை நடிகரா வந்து காப்பாத்துறேன். :))\\

நீ விஜயா வரதுன்னா...உன்ன நம்பி ஏதுவேணுமுன்னாலும் செய்வேன்...

sruthi said...

nalla pathivu.
sruthi

kotturpuramgangs said...

T RAJENDARAI HEROVAA PODUNGA..

FIRST SCENE "VARAMPAARU VARAMPAARU
VEERASWAMY "
DAI DANDANAKKA DANDANNAKKA
PALAMURAI VARARTHU THERTHAL
ORU MURAI VARARTHU KADAL

EN KADALI VARUVAA FLIGHTLE
EN KOODA VANGA FIGHTLE

DAN DANAKKA DAN DANANKA

EN SON PERU SIMBHU
PANNATHE ENGETTAI VAMBHU

கானா பிரபா said...

யூ.எஸ் ரிட்டன் மாப்பிள்ளை (அப்பாவி கோயிந்து) ஆக பாரதிராஜா புகழ் ராஜாவைப் போடலாம். போலிஸாக கே.டி.குஞ்சுமோன்

Anonymous said...

//கோபிநாத் said...
அதான் syam சொல்லிட்டாரே..

நீ விஜயா வரதுன்னா...உன்ன நம்பி ஏதுவேணுமுன்னாலும் செய்வேன்... //

ஹீரோயின் இலியானாவா இருந்தா, நான் உன்ன காப்பாத்த வர மாட்டேன்... வில்லனா மாறிடுவேன்.. :) ஓகேவா?

Anonymous said...

interesting story!! :-)

கோபிநாத் said...

வாங்க ராகவன் சார்
நம்ம பக்கம் வந்ததற்கு ரொம்ப நன்றி..

\\ஈரோயினா சரளாக்காவையும் ஈரோவா வடிவேலையும் போட்டு...கதையில மனோகரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, காகா ராதாகிஷ்ணன், கருணாஸ், இவங்களையெல்லாம் போட்டு...\\

அட..நவீன நாயகன் 24லம் புலிகேசின்னு பெயர் வைச்சிடலாம் போல...

\\காமெடி வில்லனா அவரு பேரு என்னங்க...தெரியலையே...ராசாதி ராச ராச மார்த்தாண்டன்னு படமெல்லாம் எடுத்தாரே. \\

மன்சூர்அலிகான்...

கோபிநாத் said...

வாங்க தம்பி...

\\நான் டவுசர் போட்டுருந்த காலத்துலயே கேட்டுருக்கேன். \\

ரொம்ப விரும்பி படிப்ப போல...
\\வழக்கு பதிவு செய்து போலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.\\

எப்பவும் இவங்களுக்கு இதே வேலை தானா...

\\இவனுங்க என்னவோ பின்னாடியே போய் பாத்த மாதிரி பறந்தனர், சேர்ந்தனர்னு பீலா விடுவாங்க!\\

அப்பதான்ப்பு ஒரு கிக்வரும்...


\\என்னத்த செய்யிறது ஆம்பளையா பொறந்தாவே இப்படிதான்.\\

என்ன இது அனுபவமா???

கோபிநாத் said...

வாங்க sruthi

\\nalla pathivu.\\

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி..

கோபிநாத் said...

வாங்க தேவ்..

\\T RAJENDARAI HEROVAA PODUNGA..\\
FIRST SCENE "VARAMPAARU VARAMPAARU
VEERASWAMY "
DAI DANDANAKKA DANDANNAKKA
PALAMURAI VARARTHU THERTHAL
ORU MURAI VARARTHU KADAL

EN KADALI VARUVAA FLIGHTLE
EN KOODA VANGA FIGHTLE

DAN DANAKKA DAN DANANKA

EN SON PERU SIMBHU
PANNATHE ENGETTAI VAMBHU\\

அய்யயோ..வீராசாமி போஸ்டரை பார்த்ததே இன்னும் பயமாயிருக்கு...

கோபிநாத் said...

வாங்க கானா பிரபா..

\\யூ.எஸ் ரிட்டன் மாப்பிள்ளை (அப்பாவி கோயிந்து) ஆக பாரதிராஜா புகழ் ராஜாவைப் போடலாம். போலிஸாக கே.டி.குஞ்சுமோன் \\

இப்படி படம் எடுத்தால் பாரதிராஜா மட்டும்தான் பார்ப்பார் :))

கோபிநாத் said...

\\ஹீரோயின் இலியானாவா இருந்தா, நான் உன்ன காப்பாத்த வர மாட்டேன்... வில்லனா மாறிடுவேன்.. :) ஓகேவா? \\

மக்களே...இங்கதான் "ஜி"ன்னு ஒரு நல்லவன் இருந்தான் திடீர்னு காணாம போயிட்டான்...யாராவது பார்த்தால் சொல்லுங்கள்..

கோபிநாத் said...

வாங்க CVR..

\\interesting story!! :-) \\

ஏது ராகவன் சார் சொன்னாது தானே...
வருகைக்கு நன்றி..

மு.கார்த்திகேயன் said...

சூப்பரான காதல் செய்தி தான் கோபி.. ஆனால் இன்னும் நிறைய மசாலா ஐயிட்டங்கள் தேவைப்படுது.. கூடவே காதிலிக்கும் போது ஒரு கொலை நடந்துவிடுகிறது.. இந்த கொலையை ஒரு போலீஸ் குரூப் தேடி வருகிறது.. அந்த காதலுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்.. இப்படி சில மசாலாவையும் சேர்த்து விடுங்கள்..

கூடவே ஹிரோவாய் விஷாலை பொடுங்கள் ஹிரோவாக.. எப்ப பாத்தாலும் கையில் அருவாளை தூக்கிகொண்டு திரிகிறார். ஒரு ரொமான்ஸ் படம் பண்ணட்டும் கோபி

மணி ப்ரகாஷ் said...

சுப்பர் ஸ்டோரி.. ம்ம் கதநாயகன விட இங்க கதநாயகிக்குதான் முக்கியத்துவம் அதிகமா இருக்கறதுனால நம்ப அசின ஹிரோயின போட்ரலாம்..

ஹீரோவா எந்த புதுமுகமும் ஒகே..

(நானும் நடிக்க ரெடி)

கோபிநாத் said...

வாங்க கார்த்தி

\\சூப்பரான காதல் செய்தி தான் கோபி.. ஆனால் இன்னும் நிறைய மசாலா ஐயிட்டங்கள் தேவைப்படுது.. கூடவே காதிலிக்கும் போது ஒரு கொலை நடந்துவிடுகிறது.. இந்த கொலையை ஒரு போலீஸ் குரூப் தேடி வருகிறது.. அந்த காதலுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்.. இப்படி சில மசாலாவையும் சேர்த்து விடுங்கள்..\\

ஆஹா...ஆஹா..கலக்குறிங்க..கார்த்திக்.

கோபிநாத் said...

வாங்க மணி..

\\நம்ப அசின ஹிரோயின போட்ரலாம்..

ஹீரோவா எந்த புதுமுகமும் ஒகே..

(நானும் நடிக்க ரெடி)\\

இருங்க மணி அசின் ரசிகர் மன்றத்தின் தலைவர் கார்த்திக்கை கேட்டு ஹீரோவா போட்ரலாம்..ஒகே..வா..

kotturpuramgangs said...

கோபி எப்படி இருக்கீங்க? நான் இனிமேல் தமிழில் எழுத முயற்சி செய்வேன் ,இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசிப்பீங்கள் ? நான் ஒரு வெப் சைட் க்கு சென்று ஆங்கிலத்தில் டைப் அடித்தேன் .அது அப்படியே தமிழில் மாற்றியது. நமது நண்பர்கள் அல்லது ப்ளோக் தோழர்கள் யாருக்காவது வேண்டுமெனில் இதை உபயோகித்து பார்க்கலாம் .அதன் முகவரி இதோ .
http://www.quillpad.com/tamil/

தேவராஜ் சிகாகோ

Arunkumar said...

naan comment pota nyabagam Gopi. illaya?

sari vidunga, ennayum deepavayum vachi edukkalaam. producer thedittu irukken. neenga readya?
apdinu ketrunden :)

@karthik,
enna oru nalla ennam, vishal maathiri valarndu vara artistukku thalaivar solra maathiri help pannungappa :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

cinima kathaiyai polathaan irukku Gopi. ethaavathu iyakkunaridam kathai cholla muyarchikkalaamE?

அருட்பெருங்கோ said...

ஓரு காதல் கதை காமெடி கதையாகிறது...
படத்துக்கு பேர் ஓக்கேவா?

கோபிநாத் said...

வாங்க அருண்..
\\naan comment pota nyabagam Gopi. illaya?\\

ஆகா..அருண் கடைசியா "கஜினி" பார்த்திங்களா..

\\ennayum deepavayum vachi edukkalaam. producer thedittu irukken. neenga readya?
apdinu ketrunden :)\\

உங்கள பார்த்தா ஹீரோ மாதிரிதான் இருக்கு..சரி அது யாரு தீபா????

கோபிநாத் said...

வாங்க தோழி..

\\cinima kathaiyai polathaan irukku Gopi. ethaavathu iyakkunaridam kathai cholla muyarchikkalaamE?\\

யாரு நானா!!!!

கோபிநாத் said...

வாங்க கவிஞரே...

\\ஓரு காதல் கதை காமெடி கதையாகிறது...
படத்துக்கு பேர் ஓக்கேவா?\\

அய்யோ...பின்னிட்டிங்க...இப்ப அந்த "அது" எப்படி இருக்கு..

மணி ப்ரகாஷ் said...

கோபி

தலைவர் என்ன சொன்னார்.. ?

Arunkumar said...

என்ன கோபி, தீபா யாருன்னு சின்னப்புள்ளத்தனமா கேட்டுட்டீங்க...

இங்க பாருங்க
http://godshavespoken.blogspot.com/2006/11/deepa.html

அப்பறம் ஒரு மொக்கைப்பதிவு போட்ருக்கேன் :)

கோபிநாத் said...

\\கோபி

தலைவர் என்ன சொன்னார்.. ?\\

மணி...தலைவர் பழைய லவ் மேட்டருல பிசி..பிறகு கேட்டு சொல்லுகிறேன் :)))

கோபிநாத் said...

\\என்ன கோபி, தீபா யாருன்னு சின்னப்புள்ளத்தனமா கேட்டுட்டீங்க...

இங்க பாருங்க
http://godshavespoken.blogspot.com/2006/11/deepa.html\\

அருண் ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் ...அப்புறம் ஹீரோவா நானே நடிக்கலமான்னு யோசிக்கிறேன்..

\\அப்பறம் ஒரு மொக்கைப்பதிவு போட்ருக்கேன் :)\\

மொக்கைப்பதிவு அதுவும் நீங்க!!!!!

கப்பி பய said...

சூப்பரு!

கோபிநாத் said...

வாங்க கப்பி..

\\சூப்பரு!\\

நன்றி...