Friday, February 02, 2007

உதவிய கரங்கள்...

மக்களே இந்த புது பிளாகர் பிரச்சனை எல்லாம் ஒருவழிய முடிஞ்சிருச்சி (அப்படின்னு நினைக்கிறேன்). அப்பா.... இப்பதான்... கண்னே தெரியுது. அதான் உங்க கண்ணுக்கு எல்லாம் நான் சரியா தெரியரனான்னு ஒரு சோதனை செஞ்சி பார்க்கத்தான் இந்த பதிவு.

அப்புறம் முக்கியமான விஷயம். இந்த பிரச்சனை வந்தவுடனே என்ன செய்றது ஏதுசெய்றதுன்னு ஒன்னுமே தெரியல...ஒன்னுமேபுரியல...நமக்கு தெரிந்தது எல்லாம்
ctrl - C, ctrl - V தான். எத தொட்டாலும் விளங்கமாட்டேன்கிதே....எல்லாம் நம்ம ராசி அப்படின்னு கவலையில இருந்த எனக்கு, அட.... இதெல்லாம் தூசு நண்பா அதான் நாங்க இருக்கமுல்ல கவலைய விடு நண்பான்னு

துபாயில இருந்து நம்ம தம்பி வந்தாக...


அமெரிக்காவுல இருந்து நம்ம ஜி வந்தாக...

உறுகுவே இருந்து கப்பி பய வந்தாக...


போம்மா மின்னல்ன்னு.... பிரச்சனையை போகவைச்சிட்டாங்க.

இந்த மூன்று "க"வும் செஞ்ச உதவி இருக்குதே...சொல்ல முடியல....அதான் பதிவா போட்டுட்டேன். இந்த மூன்று பேருக்கும், பதிவு இட்டு உதவிகள் செய்த மற்ற பதிவாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

அப்புறம் மக்களே புதிய template எப்படி இருக்கு.....ஏதாவது பிரச்சனை பண்ணுதான்னு சொல்லுங்க.


அப்புறம் பிப்ரவரி மாசம் பிறந்து விட்டது எங்க பார்த்தாலும் காதல்..காதல்ன்னு கலக்கபோறாங்க...
அதுவும் நம்ம காதல் கவிஞ்சர் அருட்பெருங்கோ
28 நாளும் இதுகாதல் பூக்கும் மாதம்ன்னு கவிதை மழையில நம்மலை முழ்கடிக்கப் போறாரு...அப்படியே கொஞ்சம் நனைஞ்சுட்டு போங்க...

ம்ம்ம்........இந்த வருஷமாச்சும் நமக்கும்....!!!!

25 comments:

ஜி said...

என்னது இது.. ஒரு சுட்டிய அனுப்புனதுக்கேவா.... இப்படி பதிவா போட்டு தாக்குவீங்க...

இந்த வருசமாச்சும்.... ஹி ஹி..

ஒருத்தர் பதிவுல போட்ட கவிதைய இங்கேயும் சொல்றேன்...

எங்கள் காலண்டரில் மட்டும்
பதிமூன்றுக்குப் பிறகு
பதினைந்து
பிப்ரவரி மாதம்....

Arunkumar said...

பிரச்சனைகள தீர்த்துட்டீங்களா? சூப்பர்.

//
இந்த வருஷமாச்சும் நமக்கும்....!!!!
//
உங்க ஏக்கம் எனக்கு புரியுது :)
ALL THE BESTU !!!

மு.கார்த்திகேயன் said...

//ம்ம்ம்........இந்த வருஷமாச்சும் நமக்கும்....!!!! //

இந்த அங்கலாய்ப்புல என்னையும் சேர்த்துக்கோங்க கோபி.. இந்த வருஷமாவது ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம்

மு.கார்த்திகேயன் said...

பிளாக் உலகுல இந்த புதிய பிளாக்கர் பிரச்சனை சிக்கன் குனியாவா எல்லோரையும் நோகடிக்குதே.. நல்ல வேளை கோபி, நமக்கு அந்த மாதிரி எந்த பிரச்சினையும் வரல.. ஆனால் சில இடங்களில் ஆப்பிரிக்கா மொழி மாதிரி தமிழ் எழுத்துக்கள் வருகிறதே..ஏதேனும் வழியுண்டா.. அது தீர்வதற்கு, கோபி

கோபிநாத் said...

வாங்க ஜி...

\\என்னது இது.. ஒரு சுட்டிய அனுப்புனதுக்கேவா.... இப்படி பதிவா போட்டு தாக்குவீங்க...\\

என்னது...தாக்குறேனா.
உண்மைப்பா..உண்மை...

\\எங்கள் காலண்டரில் மட்டும்
பதிமூன்றுக்குப் பிறகு
பதினைந்து
பிப்ரவரி மாதம்....\\

:))
:((

கோபிநாத் said...

வாங்க அருண்..

\\பிரச்சனைகள தீர்த்துட்டீங்களா? சூப்பர்.\\

பிரச்சனை முழுசாக முடியவில்லை...இன்னும் கொஞ்சம் உள்ளது....அதையும் நாம் நண்பர்கள் உதவியுடன் முடிஞ்சிரும்..


\\உங்க ஏக்கம் எனக்கு புரியுது :)
ALL THE BESTU !!! \\

அப்ப உங்களுக்கு அந்த ஏக்கம் இல்லையா...வாழ்த்துக்கள் நண்பாஆ..

கோபிநாத் said...

வாங்க தலைவா..

\\இந்த அங்கலாய்ப்புல என்னையும் சேர்த்துக்கோங்க கோபி.. இந்த வருஷமாவது ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம் \\

தலைவா...
உங்களுக்குமா :(((
அப்ப அசின்...

தம்பி said...

எலேய் மோசமான பாசக்கார பயலா இருக்கியே! இதுக்கு தனிப்பதிவு போட்டு தாக்குறயே உனக்கே இது நியாயமா?

பாக்குறவுக என்ன நினைப்பாங்க?

தம்பி said...

//எங்கள் காலண்டரில் மட்டும்
பதிமூன்றுக்குப் பிறகு
பதினைந்து
பிப்ரவரி மாதம்.... //

அட அட என்னா கவுஜ! அப்படியே நம்மள மாதிரி ஆளுகள நினைச்சி வடிச்சி வச்சிருக்கான்யா! இந்த கவுஜையை ஜொள்ளுப்பாண்டிக்கு காணிக்கையாக்குகிறேன். (காசா பணமா) :)

கப்பி பய said...

//எலேய் மோசமான பாசக்கார பயலா இருக்கியே! இதுக்கு தனிப்பதிவு போட்டு தாக்குறயே உனக்கே இது நியாயமா?

பாக்குறவுக என்ன நினைப்பாங்க?

//

அதானே!

சரி ஆனது ஆச்சு..
பழிக்குப் பழி!
ரத்தத்துக்கு ரத்தம்!
நன்றிக்கு நன்றி! :))

கோபிநாத் said...

வாங்க தம்பி..

\\எலேய் மோசமான பாசக்கார பயலா இருக்கியே! இதுக்கு தனிப்பதிவு போட்டு தாக்குறயே உனக்கே இது நியாயமா?\\

அப்ப மத்தரெண்டு பேரையும் போட்டது ஆனியாயம்ன்னு சொல்றா அப்படிதானே :))

\\பாக்குறவுக என்ன நினைப்பாங்க?\\

ரொம்ப.....
நல்லவன்னு நினைப்பாங்க...

கோபிநாத் said...

\\அட அட என்னா கவுஜ! அப்படியே நம்மள மாதிரி ஆளுகள நினைச்சி வடிச்சி வச்சிருக்கான்யா! இந்த கவுஜையை ஜொள்ளுப்பாண்டிக்கு காணிக்கையாக்குகிறேன். (காசா பணமா) :) \\

ஜொள்ளுப்பாண்டியார் எங்கிருந்தாலும் வந்து காணிக்கையை பெற்றுக் கொள்ளும்மாறு பனிவன்புடன் கேட்டு கொள்கிறோம்..

இப்படிக்கு
அகில உலக தம்பிகள் சங்கம்.

கோபிநாத் said...

வாங்க கப்பி..

\\அதானே!

சரி ஆனது ஆச்சு..
பழிக்குப் பழி!
ரத்தத்துக்கு ரத்தம்!
நன்றிக்கு நன்றி! :)) \\

ரொம்ப நன்றி!!!

ஜி said...

// தம்பி said...
அட அட என்னா கவுஜ! அப்படியே நம்மள மாதிரி ஆளுகள நினைச்சி வடிச்சி வச்சிருக்கான்யா! இந்த கவுஜையை ஜொள்ளுப்பாண்டிக்கு காணிக்கையாக்குகிறேன். (காசா பணமா) :) //

எனது கவுஜையை என்னிடம் கேக்காமல் ஜொள்ளுப் பாண்டிக்கு காணிக்கையாக்கிய தம்பியை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))

தம்பி said...

//எனது கவுஜையை என்னிடம் கேக்காமல் ஜொள்ளுப் பாண்டிக்கு காணிக்கையாக்கிய தம்பியை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)) //

ஜி அதை ஸ்மைலி போட்டு சொல்லக்கூடாது. :((

:((( கண்ணடிக்கிறேன்

இப்படி சொல்லணும்.

நம்ம பயதான ஜொள்ளு

வெட்டிப்பயல் said...

டெக் ஸ்பெஷலிஸ்ட் மூணு பேரு சேர்ந்து உதவியிருக்காங்கனா உங்களுக்கு ப்ளாக் உலகில் வளமானதொரு எதிர்காலம் இருக்குனு சொல்லுங்க...

வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

//ஜி said...

என்னது இது.. ஒரு சுட்டிய அனுப்புனதுக்கேவா.... இப்படி பதிவா போட்டு தாக்குவீங்க...//

சுட்டிய அனுப்பினாலும் சரி..
கூடவே இருந்து உதவி செஞ்சாலும் சரி... நன்றி சொல்வது தமிழர் மரபு.. அதை தடுக்கக்கூடாது...

மணி ப்ரகாஷ் said...

பிளாக் பிரச்சினை தீந்துடுச்சா? நமக்கு இன்னும் இருக்கு.நானும் விட்டுடேன் அதுபாட்டுக்கு கிடக்கட்டும்னு..

பார்க்க பளிச்சினு இருக்கு...

அப்புறம் 14 முடிஞ்சுடுச்சு என்ன விசயம்?


நமக்குதான் நடக்கல..சார்ஜாவிலயாவது எதாவது விசேசமா?

அருட்பெருங்கோ said...

கோபி,

இலவச விளம்பரத்துக்கு தாமதமான நன்றீ... :)))

/எங்கள் காலண்டரில் மட்டும்
பதிமூன்றுக்குப் பிறகு
பதினைந்து
பிப்ரவரி மாதம்.... /

ஜி... கலக்கல்!!!

கோபிநாத் said...

வாங்க வெட்டி
\\ நன்றி சொல்வது தமிழர் மரபு.. \\\

ரொம்ப நன்றி yaar

கோபிநாத் said...

வாங்க மணி, அருள்,

ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி...

Anonymous said...

கோபி,

நீங்கள் எதுவும் கேட்காமலே நாங்கள் உங்களுக்குத் தப்புத் தப்பாக ஆலோசனைகள் எதுவும் அனுப்பாமலிருந்ததற்கு எங்களுக்கு எந்த நன்றிகளும் கிடையாதா ?

:-)

இரா.மோகன் காந்தி said...

ஹாய்!

கோபிநாத் said...

வாங்க அனானி...

\\கோபி,

நீங்கள் எதுவும் கேட்காமலே நாங்கள் உங்களுக்குத் தப்புத் தப்பாக ஆலோசனைகள் எதுவும் அனுப்பாமலிருந்ததற்கு எங்களுக்கு எந்த நன்றிகளும் கிடையாதா ?

:-) \\

அய்யோ என்ன வார்த்தை சொல்லிட்டிங்க
ரொம்ப நன்றி..நன்றி..நன்றி..

பேரு சொன்னா நல்லயிருக்கும்

கோபிநாத் said...

வாங்க இரா.மோகன் காந்தி


\\ஹாய்! \\

ஹாய்...அப்புறம்