Tuesday, January 16, 2007

தகப்பன்சாமி...படம்


பாறைப்பட்டியில் இருந்து தொடங்கி ராஜஸ்தான் சென்று மறுபடியும் பாறைப்பட்டியிலேயே முடியுது படம். மழைன்னா கருப்பா சிவப்பான்னு கேட்குற வானம் பார்த்த ஊர் பாறைப்பட்டி. கூத்துக்கட்டி பிழைப்பவர் பிரஷாந்த் (கதிர்) அதில் வரும் பணத்தை வைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் உதவுகிறார். குடிக்க கூட நீர் இல்லாத அந்த கிராமத்தை விட்டு பல குடும்பங்கள் பக்கத்து கிராமங்களுக்கு செல்கின்றனார். இந்த நிலையில் ஊர் மக்கள் அனைவரையும் சேர்த்து கிணறு வெட்ட முயற்சி செய்கிறார். கிணறு வெட்டுபவரின் மகள் பூஜா (மறிக்கொழுந்து). கிணறு வெட்ட வெட்ட வெறும் கள்ளும், மண்னும்தான் வருகிறது. திடீரென்று ஏற்படும் விபத்தில் மறிக்கொழுந்துவின் தந்தை (கிணறு வெட்டுபவர்) இறந்து விடுகிறார் அதனால் கிணறு வெட்டும் முயற்ச்சியும் நின்றுபோகிறது.

ஊர் மக்கள் அனைவரும் பிழைப்புகாக ராஜஸ்தான் போகிறார்கள். அங்கு அவர்கள் அனைவரும் கொத்தடிமையாக்கப்படுகிறார்கள். மொழி புரியாத ஊர், பலத்த பாதுகப்புகள் நிறைந்த பகுதி, குழந்தைக்கு கூட பால் தர மறுக்கின்ற காவலர்கள் என்று அடுக்கடுக்கான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட இடத்தை விட்டு ஊர் மக்கள் அனைவரையும் மீண்டும் தன் சொந்த ஊருக்கே கூட்டி செல்கிறார் என்பதுதான் தகப்பன் சாமியின் கதை.


பிரஷாந்த் ஒரு பொறுப்புள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். முழுநேரமும் காதலியின் காதலில் விழுந்து விடமால் கிராமத்து முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார், அந்தவகையில் இந்த படம் அவருக்கு வித்தியாசமான படம் தான். நடிப்பு, சண்டை மற்றும் பாடல்கள் காட்சிகளில் வழக்கம் போல் நன்றாகவே செய்த்திருக்கிறார்.

வறண்டகிராமத்தையும், வறண்டு போன பாலைவனத்தையும் அப்படியே நம் கண்களுக்கு முன் கொண்டுவந்து நிருத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். நம் முகத்திலும் வியர்வை துளிகள் எட்டிபார்க்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் பாடல் காட்சி கிராமத்து மக்களுக்கு உண்மையிலேயே விருந்து.ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துயிருக்கிறது. சில பாடல்கள் படத்தின் காட்சிகளை விளக்குகின்றது. பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடலின் வரிகளை சிதைக்காத இசை கருவிகளும், குரல்களும் தந்தற்கு ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பாரட்டுக்கள்.

கதை, திரைகதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்தையுத் செய்திருக்கிறார்
ஷிவ ஷண்முகன். பல இடங்களில் வசனங்களும், பாடல் வரிகளும் படத்தின் சூழ்நிலையை விளக்குமாறு செய்திருக்கிறார். சொந்த நாட்டிலேயே கொத்தடிமை வாழ்க்கையின் கொடுமைகளை காட்சிகளை காணும் போது இதயம் கனக்கிறது.


பாலைவனத்தில் ஒட்டக பந்தயத்தில் ஒட்டகத்தை வேகமாக ஒடவைக்க குழந்தையின் அழுகையை பயன்படுத்துவது. அதற்காக அந்த குழந்தையை சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். வறண்ட கிராமத்தில் காட்டிய கதையின் வேகம் பாலைவனத்தில் இல்லை என்று தோன்றவைக்கிறது. பணத்தைவிட மனிதனும், மண்ணும் தான் முக்கியம் என்று கூறியிருக்கிற ஷிவ ஷண்முகத்தை உண்மையிலேயே பாரட்ட வேண்டும்.

வறண்ட பூமியும், கொடுமைகளும் நிறைந்த மக்களைப் பற்றிய சினிமா என்பாதால் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து இது ஒரு மாறுபட்ட படம் தான். மசால கலவைகள் அற்ற படம் என்பதால் வசூல் பட்டியலில் இடம் பிடிக்க முடியாதப் படம்.இந்த படத்தில் நமீதாவும் (காட்டமல்) நடித்திருக்கிறார் இதனால் கூட இந்த படம் ஒரு மறுபட்ட படம் என்று கூறலாம்.

26 comments:

Arunkumar said...

Gopi, unga neraya post miss pannirken.. bloglines ungaloda new posts kaamikkave ille.. inime olunga aajar aayidren.

idhu konjam perusa irukku , adanaale approma padichittu commentaren :)

Anonymous said...

விமர்சனம் சீன போடுறீங்க. படம் பாக்கலாமா, வேண்டாமான்னு ஒன்னுமே சொல்லல....

[அட.. பிரசாந்த் படத்துக்கும் விமர்சனம் செய்ய ஆள் இருக்குதே?]

Anonymous said...

படமே பார்த்ததுபோன்ற உணர்வு!
நமீதா காட்டவில்லை என்றால் என்ன
நீங்கள்தான் படத்தையே காட்டிவிட்டீர்களே!
வருமையின் கொடுமைகளை
சொல்லும்போதோ அல்லது
கேட்கும்போதோ கொடுமையாக
இருக்கே! அதை அனுபவிக்கும்
அப்பாவிகள் இன்னும் இவ்வுலகில்
இருக்கிறார்கள் என்று தெரியும்போது
இதயமே நின்றுவிடுகிறது!
அவர்கள் அருகில் நான் இருந்திருந்தால்
குறைந்த பட்சம் இருவருக்காவது ஒருவேலை உணவு தந்திருப்பேன்...
வளமான நாடுகளிலில் இருந்துகொண்டு நம் நாட்டில் நடக்கும் கொடுமைகளை இதுபோன்ற படங்களில் பார்த்து துயரப்படவேண்டியதுதானோ? என்றூ தனியும் இந்த வருமையின் கொடுமை...சுதந்திர நாடென்று சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம்... சுதந்திரம் கூட சுதந்திரமாக இருக்கமுடியாது போல...

செந்தழல் ரவி said...

அட, படங்களுடன் அருமையான விமர்சனம்...

கலக்கல்....அடுத்த விமர்சனம் எப்போ ?

Syam said...

சரி பூஜாவ தவிர படத்துல பாக்க ஒன்னும் இல்லனு சொல்லுங்க :-)

belated பொங்கல் வாழ்த்துக்கள்...

Anonymous said...

//இந்த படத்தில் நமீதாவும் (காட்டமல்) நடித்திருக்கிறார்//

இது வருத்தமா? இல்லை சந்தோஷமா?. இன்னு தெரியலையே?

சினிமா விமர்சனம் நல்லாவே பண்றீங்க கோபி. வாழ்த்துக்கள்.

பிரியமுடன் பிரேமின் ஆதங்கம் மறுக்க முடியாதது.

கோபிநாத் said...

வாங்க அருண்,
\\Gopi, unga neraya post miss pannirken.. bloglines ungaloda new posts kaamikkave ille.. inime olunga aajar aayidren.

idhu konjam perusa irukku , adanaale approma padichittu commentaren :)\\

நான் கொஞ்சம் லேட்டுங்க..:(

கண்டிப்பா பின்னூட்டம் போடுங்க அருண்...விமர்சனத்துல நீங்கலெல்லாம் குருங்க....

கோபிநாத் said...

வாங்க ஜி..
எப்படி இருந்தது பொங்கல் எல்லாம்..

\\ஜி said...
விமர்சனம் சீன போடுறீங்க. படம் பாக்கலாமா, வேண்டாமான்னு ஒன்னுமே சொல்லல....\\

உங்க அளவுக்கு நம்ம கிட்ட கதையில்லிங்க...பாக்கலாம் ஜி...

கோபிநாத் said...

வாங்க பிரேம்..

\\வருமையின் கொடுமைகளை
சொல்லும்போதோ அல்லது
கேட்கும்போதோ கொடுமையாக
இருக்கே! அதை அனுபவிக்கும்
அப்பாவிகள் இன்னும் இவ்வுலகில்
இருக்கிறார்கள் என்று தெரியும்போது
இதயமே நின்றுவிடுகிறது!
அவர்கள் அருகில் நான் இருந்திருந்தால்
குறைந்த பட்சம் இருவருக்காவது ஒருவேலை உணவு தந்திருப்பேன்...
வளமான நாடுகளிலில் இருந்துகொண்டு நம் நாட்டில் நடக்கும் கொடுமைகளை இதுபோன்ற படங்களில் பார்த்து துயரப்படவேண்டியதுதானோ? என்றூ தனியும் இந்த வருமையின் கொடுமை...சுதந்திர நாடென்று சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம்... சுதந்திரம் கூட சுதந்திரமாக இருக்கமுடியாது போல...\\

உண்மையான கருத்துகள் பிரேம்...வருகைக்கு நன்றிகள்

கோபிநாத் said...

வாங்க ரவி...
என் பதிவில் பின்னூட்டம் இட்டது மிகவும் சந்தோஷம்..

\\செந்தழல் ரவி said...
அட, படங்களுடன் அருமையான விமர்சனம்...

கலக்கல்....அடுத்த விமர்சனம் எப்போ ?\\

விரைவில்...வருகைக்கும்..உற்சாகத்திற்கும் நன்றிகள்

கோபிநாத் said...

வாங்க தல...

\\சரி பூஜாவ தவிர படத்துல பாக்க ஒன்னும் இல்லனு சொல்லுங்க :-)

belated பொங்கல் வாழ்த்துக்கள்... \\

தல படத்துல கடைசியில பூஜா ஆடுற ஆட்டத்தை பாத்திங்க...உங்களுக்கே சாமி வரும்...

கோபிநாத் said...

வாங்க ஸயீத்

\\இது வருத்தமா? இல்லை சந்தோஷமா?. இன்னு தெரியலையே? \\

சந்தோஷம் தான்...

\\சினிமா விமர்சனம் நல்லாவே பண்றீங்க கோபி. வாழ்த்துக்கள்.\\

நன்றி..

\\பிரியமுடன் பிரேமின் ஆதங்கம் மறுக்க முடியாதது. \\

எப்படி முடியும்...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...

kotturpuramgangs said...

gopi
nice review

dev
chicago

கோபிநாத் said...

வாங்க தேவ்..
\\gopi
nice review\\

நன்றி..

மு.கார்த்திகேயன் said...

அருமையான விமர்சனம் கோபி.. எல்லோர் பெரிய ஸ்டார் படங்களையே பிரித்து மேய, நீங்க வெளிச்சத்துக்கு வராத ஒரு படத்தை விமர்சித்திருக்கிறீர்கள்.

நன்றாக இருந்தது..

பலமுறை என் பதிவுக்கு வந்திருந்தாலும், என்னால் உங்கள் பதிவுக்கு வர முடியவில்லை.. இனி நம்ம ஆட்டம் தொடர்ந்து இருக்கும்.

kotturpuramgangs said...

விமர்சனம் கலக்கல், ஆனாலும் கண்டிப்பா நான் படம் paarkamattein..tamil words naan copy and paste panni ingey potturekean ..because ennal tamil type pannamudiyathu.adanaal thaan sattru neram kaathirundhu comment adikirean...aangilam ellam POI..tamil thaan unmayana UNARCHIGAL kalantha Mozhi..dayavu seithu en thalaivar padathukkum eppadi vimarsanam pannungal !!

Arunkumar said...

nalla review Gopi. scene by scene pogaama nalla analyze pannirkinga.

//
பாடலின் வரிகளை சிதைக்காத இசை கருவிகளும், குரல்களும் தந்தற்கு ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பாரட்டுக்கள்.
//
correct. ippolaam english paatukku kooda lyrics purinjikkalaam, andha nelamaila irukku tamil songs.. so ivara paaraatanum.

hmm, poojava pattiyal padathula paathadhu :(
adukkagavadu padam paakalaamnu irukken.

Arunkumar said...

padathula villan illaya?

Arunkumar said...

//
விமர்சனத்துல நீங்கலெல்லாம் குருங்க....
//
இப்போதான் இத பாத்தேன். நல்லா உள்குத்து,வெளிக்குத்து !!!

பை த பை குரு பட ரிவ்யூ போட்ருக்கேன்.

தம்பி said...

தியேட்டர்ல போய் பார்த்த மாதிரியே விமர்சனம் எழுதியி இருக்கியேப்பு!

படமெல்லாம் போட்டு படம் காட்டுற!
ஒரு காலத்துல பிரசாந்த் படம் மாசத்துக்கு மூணு ரிலீசாகும், சத்யராஜுக்கு போட்டியே அவருதான்.

இப்ப என்னடான்னா காத்து வாங்குது..

ஒரு காலத்துல இவனெல்லாம் நடிக்கறத விட்டுட்டு தொழில பாத்து போகலாம்னு சொல்லுவேன். இப்ப போனா போகுதுன்னு விட்டுட்டேன்.

அடைக்கலம் பாத்திங்களா? அதுல கூட பரவால்ல, ஓரளவுக்கு நடிச்சிருக்கார்.
சோக சீன்ல கூட நம்மள சிரிக்க வைக்கிற ஒரே நடிகர் டாப்ஸ்டார்தான்.

என்ன ஒரே குறை?
படத்துல தானைத்தலைவி பூஜாவ நல்லாவே காமிக்கல! :(((

மத்தபடி ஒரு முறை பாத்துக்கலாம்!

விமர்சனம் நல்லாவே இருக்கு. ஆனா கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டா மாதிரி இருக்கு.

மக்களுக்கு எச்சரிக்கை!
ஆழ்வார் படம் பாத்தவங்க ஆழ்ந்த சோகத்துல இருக்காங்களா!

நாங்கூட!!

கோபிநாத் said...

வாங்க தலைவா....வாங்க..

\\அருமையான விமர்சனம் கோபி.. எல்லோர் பெரிய ஸ்டார் படங்களையே பிரித்து மேய, நீங்க வெளிச்சத்துக்கு வராத ஒரு படத்தை விமர்சித்திருக்கிறீர்கள்\\\

காமெடி எதுவும் பன்னலியே...

\\பலமுறை என் பதிவுக்கு வந்திருந்தாலும், என்னால் உங்கள் பதிவுக்கு வர முடியவில்லை.. இனி நம்ம ஆட்டம் தொடர்ந்து இருக்கும்\\

நன்றி தலைவா....நன்றி...

கோபிநாத் said...

\\aangilam ellam POI..tamil thaan unmayana UNARCHIGAL kalantha Mozhi..dayavu seithu en thalaivar padathukkum eppadi vimarsanam pannungal !! \\

உண்மை தான் தேவ்...உங்க தலைவர் படம் இந்த வருஷமாவது வருமா...

கோபிநாத் said...

\\nalla review Gopi. scene by scene pogaama nalla analyze pannirkinga.\\

நன்றி அருண்...

கோபிநாத் said...

\\இப்போதான் இத பாத்தேன். நல்லா உள்குத்து,வெளிக்குத்து !!!\\

உண்மை தான் அருண் இதுல ஒரு குத்தும் இல்லிங்க

\\பை த பை குரு பட ரிவ்யூ போட்ருக்கேன். \\

வந்துக்கிட்டேயிருக்கேன்..

கோபிநாத் said...

வாங்க தம்பி..வாங்க..

\\தியேட்டர்ல போய் பார்த்த மாதிரியே விமர்சனம் எழுதியி இருக்கியேப்பு!\\

நன்றி தம்பி..

\\அடைக்கலம் பாத்திங்களா? அதுல கூட பரவால்ல, ஓரளவுக்கு நடிச்சிருக்கார்.
சோக சீன்ல கூட நம்மள சிரிக்க வைக்கிற ஒரே நடிகர் டாப்ஸ்டார்தான்.\\

அப்ப காமெடி ஸ்டார்ன்னு சொல்றிங்க..

\\என்ன ஒரே குறை?
படத்துல தானைத்தலைவி பூஜாவ நல்லாவே காமிக்கல! :(((\\

அதான பார்த்தேன் ஏன்டா இன்னும் மேட்டருக்கு வரலியேன்னு...

\\விமர்சனம் நல்லாவே இருக்கு. ஆனா கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டா மாதிரி இருக்கு.\\

பின்னூட்டத்துல உள்குத்து, வெளிகுத்து இல்லியேன்னு பார்த்தேன்...வந்துருச்சி

\\மக்களுக்கு எச்சரிக்கை!
ஆழ்வார் படம் பாத்தவங்க ஆழ்ந்த சோகத்துல இருக்காங்களா!

நாங்கூட!!\\

:)))) அப்ப பதிவு உண்டு..

Anonymous said...

//இந்த படத்தில் நமீதாவும் (காட்டமல்) நடித்திருக்கிறார் இதனால் கூட இந்த படம் ஒரு மறுபட்ட படம் என்று கூறலாம்.//
உண்மையாகவா?நம்பவே முடியலை!