
இரவு நேரம்..
மிதமான குளிர்காற்று..
கையில் சூட சூட தேனீர்..
இளையராஜவின் இசை..
யாரும் இல்லா தனிமை...
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு நானும் இந்த புதுவருடத்தை வரவேற்க போகிறேன். பிறக்க போகும் அந்த புதுக் குழந்தையை வரவேற்பதா இல்லை என் கடமைகள் முடிந்த்து என்று போகும் இந்த முதிர்ந்த தாய்யை பிரிவதா..குழப்பங்களில் கரைகிறது என் நேரங்கள்.
2006ல்
எத்தனை விதமான அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு நிறம்.
சந்தோஷகளையும், பிரச்சனைகளையும் நினைத்து காலங்கள் கடக்கின்றது.
பிரச்சனைகள் எனக்கு பல அனுபவங்களை கற்றுதந்தது. சந்தோஷங்கள் பலவற்றை எனக்கு அறிமுகம் செய்து. அப்படி கிடைத்த அறிமுகம் தான் தமிழ் வலைபதிவு நண்பர்கள்.
எத்தனை அருமையான நண்பர்கள்!
முகம் தெரியாமல் உற்சாகம் கொடுக்கும் நண்பர்கள்!!
எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணியவுடன் நான் அனுகியது
எண்ணங்களை எழுதிகிறேன் திரு. மா. சிவகுமார் அவர்களை தான். எனக்கு மிகுந்த அக்கரையுடனும், கனிவுடனும் வழிகாட்டினர். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகரிகமாகவும், நகைச்சுவையுடனும் எனக்கு உற்சாகத்தை அளித்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் நன்றிகள். இது போல வருகிற வருடமும் எனக்கு உற்சாகம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மனம் புண்பாடும் மாதிரி எங்கவாது எழுதியிருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
2007ம் ஆண்டு உங்கள் கனவுகளும், முயற்ச்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
12 comments:
\\2007ம் ஆண்டு உங்கள் கனவுகளும், முயற்ச்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.\\
உங்களுக்கும் அமைய என் வாழ்த்துக்கள்.
நன்றி ஸயீத்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே... 2007 உங்களுக்கு இனியதொரு ஆண்டாக அமைய என் வாழ்த்துக்கள் !!!
என் இனிய தமிழ் மக்களேனு போஸ்ட் போட்டுட்டு உங்களூக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம்னு வந்தா நீங்களும் அதே மாதிரி ஒரு தலைப்பு வெச்சு இருக்கீங்க...great men think alike... Happy New Year!!! :-)
\\Syam said...
என் இனிய தமிழ் மக்களேனு போஸ்ட் போட்டுட்டு உங்களூக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம்னு வந்தா நீங்களும் அதே மாதிரி ஒரு தலைப்பு வெச்சு இருக்கீங்க...great men think alike... Happy New Year!!! :-)\\
வாங்க Syam ,
அப்படியா...விடுமுறை எல்லாம் எப்படி இருந்தது...அப்புறம் இதற்கு பெரு தான் "ஆன்லைன் அலைவரிசைங்கிறது"...
என் இனிய பதிவுலக நண்பனே!
இமயமாய் வளர்ந்து நிற்கும் இணையத்தில்,
இலவசமாய் கிடைத்த நட்புகள்...
இதரமாய் சென்றுவிட்ட பிரச்சனைகள்...
இதயத்தில் சுவைக்கின்ற நினைவலைகள்...
இவையெல்லாம்
இந்த வருடமும் பெற்று வாழ
வாழ்த்துக்கள்
\\ஜி said...
என் இனிய பதிவுலக நண்பனே!
இமயமாய் வளர்ந்து நிற்கும் இணையத்தில்,
இலவசமாய் கிடைத்த நட்புகள்...
இதரமாய் சென்றுவிட்ட பிரச்சனைகள்...
இதயத்தில் சுவைக்கின்ற நினைவலைகள்...
இவையெல்லாம்
இந்த வருடமும் பெற்று வாழ
வாழ்த்துக்கள்\\
நன்றி நண்பனே..நன்றி..
கவிதை வாழ்த்து மிக்க அருமை...
நம்ம "குணா கமல்" ;
கவிதையவே வாழ்த்து சொல்லிட்டியா!!!
நினைச்சி பார்க்கும் போது கவிதையா கொட்டுது
ஆனா எழுத நினைக்கும் போது keyboard முட்டுது...ஜி..ஜி...
//இரவு நேரம்..
மிதமான குளிர்காற்று..
கையில் சூட சூட தேனீர்..
இளையராஜவின் இசை..
யாரும் இல்லா தனிமை...// kannadaasam rangela irukku doi :)
wish you a very happy new year 2007
\\யாழ்_அகத்தியன் said...
\\2007ம் ஆண்டு உங்கள் கனவுகளும், முயற்ச்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.\\
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்\\
நன்றி யாழ்...
\\Kittu said...
//இரவு நேரம்..
மிதமான குளிர்காற்று..
கையில் சூட சூட தேனீர்..
இளையராஜவின் இசை..
யாரும் இல்லா தனிமை...// kannadaasam rangela irukku doi :)\\
ஆஹா...அவரு மலை நான் மண்
wish you a very happy new year 2007 \\
வாழ்த்துக்களுக்கு நன்றி
கிட்டு வாழ்த்துக்களுக்கு நன்றி...
மிக மிக தாமதமானப் புத்தாண்டு + பொங்கல் வாழ்த்துக்கள்!!!
வாங்க கவிதை..
\\அருட்பெருங்கோ said...
மிக மிக தாமதமானப் புத்தாண்டு + பொங்கல் வாழ்த்துக்கள்!!! \\
வாழ்த்துக்களுக்கு நன்றி..அடிக்கடி வாங்க..
Post a Comment