நேத்து நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பியிருந்தாரு. அந்த மெயிலில் வந்த வீடியோவை பார்த்துட்டு அசந்துட்டேன். அசந்தவுடனே சும்மா இருக்க முடியாம உடனே ஊர் உலகத்துக்கு எல்லாம் சொல்லிட்டேன். அதை பதிவாக போட்டு இந்த மாசத்து கணக்கை முடிச்சுடுலாமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம அண்ணாத்த சந்தோஷ் அதையும் போட்டுடாரு. இருந்தாலும் நம்ம மனசுல கேட்கல..! அதான் நானும் போட்டுட்டேன்
சில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது. பாருங்கள் வீடியோவை.....
இந்த பதிவு போடுறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த வீடியோ வச்சி நம்ம தமிழ்மணத்தின் கவிஞர்களை கவிதை எழுத சொல்லலாமுன்னு ஒரு ஐடியா. உடனே கவிதை எழுதுனா என்ன பரிசு தருவிங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது. பரிசு எல்லாம் கொடுத்து நம்ம கவிஞர்களை ஒரு சிறு சட்டத்துக்குள்ள (எத்தனை நாளைக்குத்தான் வட்ட்ம் போடுறது) அடைக்க விரும்பவில்லை.
இந்த ஜடியாவை சொன்னவுடன் நம்ம பதிவர் கவிஞர் சென்ஷி உடனே ஒரு கவிதை எழுதி அனுப்பிட்டாரு. படிங்க.. இல்லேன்னா பாருங்கள்!
மாப்பி... கவிதைய எழுதி அனுப்பியிருக்கேன்.. உனக்கு புடிச்ச வரியை மாத்திரம் எடுத்துக்க. புல்லா போடணும்னாலும் போட்டுக்க.. அப்பால அது என்னது கவிஞர் சென்ஷியா.. ஏன் கூட நல்லவரு வல்லவரு பெரியவரு அதயும் சேத்துக்க வேண்டியதுதானே! :))
கவிதை :
சூரிய வட்டம் மிஞ்சும் மின்மினி கூட்டங்களே..
உங்கள் சட்டங்கள் இனி உலகை ஆளட்டும்..!
இந்த விதைகள் இப்போது முளைத்து நிற்கின்றன
என்றும் அறுவடைக்கு ஆளனுப்பாதீர்கள்.
உன் ஒரு கையோசையின் சப்தம்
உலகத்தின் எதிரொலி!
பலமாய் ஒலிக்கிறது செவிடன் காதில் சங்கொலி!!
நாளைய பாரதம் நீயென கூறுவார்..
ஜாதிப்போர் உலகத்தில் உன்போல்
சாதிப்போர் இருப்பதனால்
நான் என் பாரதத்தை இன்றே கொடுக்கிறேன்!
கால வரலாற்றில் கசப்புச்சுவடுகள்
காற்றின் துணை கொண்டு பற்றியெறியட்டும்.
கடல் வானம் மண் தூறல்
அதை புதைத்து வைக்கட்டும்.
வல்லரசு கூட்டம் முன்னே
உன் சிரிப்பை காட்டினாய்.
நான் நல்லரசு காண்பேனென்று
நல்லுறுதி ஊட்டினாய்!!
ஊர் ஊராய் கோயில் கட்டி
ஜனம் சாமி தேடுது.
என் கண்முன்னே நல்லதொரு
கடவுள் நிக்குது..!!
சீக்கிரம் கவிஞர்களே கவிதை எழுதி உங்க பதிவில் போடுங்கள்!
எப்படியே இந்த மாசத்துக்கு தேத்தியாச்சி....!!
52 comments:
மாப்பி கவிதை சூப்பர் ;))
anniku sonna maadiriyae video kalakkal :)) paapom makkal ennenna kavidhai ezhudharaagannu :D
:)))
ரொம்ப மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ... ஆனா என்ன?? இதையும் பாத்துட்டு சூப்பர் வீடியோன்னு கைத்தட்டிட்டு போயிட்டேத்தான் இருப்போம் நாமெல்லாம் :(((
ரொம்ப நல்ல காட்சி கவித தானே எழுதிடலாம் ஆனா கவிஞர்களின் புரவலன் பொற்கிழி மறுத்தது வருத்தமே!!
கவிதை & வீடியோ பகிர்வுக்கு நன்றி கோபி!!
தம்பி அருமையான வீடியோ.
அப்புறம் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்:))))))))))
நல்லாருக்கு.கள்ளம் அறியாப் பிஞ்சுகளின் மனசுலதான் இப்படி செய்யனும்னு தோனும்.
பெரியவங்களாயிட்டா 'சபாஷ்' 'குட்' ன்னு சொல்லக்கூடிய பெரிய தோரணை மட்டுமே மிஞ்சும் னு இந்த பிஞ்சு காட்டி விட்டது.
ஆஹா ஷென்ஷி க்கு அப்படியே பொங்கிடுச்சே கவிதை குட் குட்....[இதான் பெரிய மனுச தோரணை;)]
சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படி இருப்பவங்க பெரிசானதும் ஏனோ மாறிடறாங்க. பெரிசானதும் பாராட்டு முக்கியமாயிடுதோ
கவுஜ எல்லாம் வராது, வீடியோ பார்த்துட்டுத் திரும்பி வந்து பின்னூட்டறேன், நல்ல காரியம் செஞ்சீங்க, இந்த மாதிரிப் பதிவு போட்டிருக்கேன்னு தகவல் கொடுத்தா, வர செளகரியமா இருக்கும், எவ்வளவு தொலைவில் இருந்து வர வேண்டி இருக்கு? :))))))
நாளைய பாரதம் நிச்சயமா ஒளிரும், சந்தேகமே வேணாம், மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள், உண்மையாகவே, நடந்த ஒன்றா? என்றால் சிறுவன் மிகவும் பாராட்டுக்குரியவன். வாழ்த்துக்கள், அற்புதமான பகிர்வைக் கொடுத்ததுக்கு.
ஆங்கில கவித எழுதுனா ஒக்கேவா அங்கிள்...
என்னடா இரண்டு நாள் முன்பே போஸ்ட் போட்டு தூக்கிட்டே என்று யோசிச்சேன்.
நல்ல வீடியோ...
நல்ல உள்ளங்கள் பல ஆக்கங்களை செய்யும் நிலையில் தான் உள்ளார்கள். ஆனால் யாரு முதலில் ஆரம்பிப்பது என்ற கேள்வியாலே அப்படியே தேங்கி விடுகின்றார்கள்.
யோசிக்க வைக்கும் சலனப்படம்.
ஆனா இதுல தேவையில்லாம சினிமா வை இழுத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....
//
குசும்பன் said...
தம்பி அருமையான வீடியோ.
அப்புறம் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்:))))))))))
//
//
ஜி said...
:)))
ரொம்ப மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ... ஆனா என்ன?? இதையும் பாத்துட்டு சூப்பர் வீடியோன்னு கைத்தட்டிட்டு போயிட்டேத்தான் இருப்போம் நாமெல்லாம் :(((
//
ரிப்பீட்டேய்
எனக்கு கூட ஃபார்வார்ட் மெயில்ல வந்துச்சு.
// சில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது.
//
அவங்க எல்லாம் எப்போமே திருந்த மாட்டாங்க. திருந்திட்டா நாடு உருப்புட்டுடும் இல்ல.
கவிதை சூப்பர் :)))
arumayaana video.. thx for sharing..
senshi's kavidhai super !!
//
இதையும் பாத்துட்டு சூப்பர் வீடியோன்னு கைத்தட்டிட்டு போயிட்டேத்தான் இருப்போம் நாமெல்லாம் :(((
//
Ji,
correctu thaan aana indha maathiri video edukkavaadhu makkal irukkangale-nu nenachi peruma pattukka vendiyadhu thaan !!
தல
நமக்கும் கவிதைக்கும் வெகுதூரம், எதுக்கு விஷப்பரீட்சை.
எங்க வேலை கவிதையைப் போல இருக்கும் பிகருகளை அளப்பதும், கவிதையை அழகா பாட்டா செதுக்குபவங்க புகழ் பாடுவதும் தான்.
@ ஜி3
\\anniku sonna maadiriyae video kalakkal :)) paapom makkal ennenna kavidhai ezhudharaagannu :D\\
நானும் அதுக்கு தான் வெயிட்டிங்...;)
@ ஜி
\\:)))
ரொம்ப மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ... ஆனா என்ன?? இதையும் பாத்துட்டு சூப்பர் வீடியோன்னு கைத்தட்டிட்டு போயிட்டேத்தான் இருப்போம் நாமெல்லாம் :(((\\
நீ சொல்லறது உண்மை தான்.... நானும் அதை தான் செய்துக்கிட்டு இருக்கேன்...ஆனா வேற என்ன செய்யுறது ;(
@ முத்துலெட்சுமி
\\ரொம்ப நல்ல காட்சி கவித தானே எழுதிடலாம் ஆனா கவிஞர்களின் புரவலன் பொற்கிழி மறுத்தது வருத்தமே!!\\
அந்த காட்சியே ஒரு பொற்கிழி மாதிரி தானே..! ;)
@ கப்பி
\\கவிதை & வீடியோ பகிர்வுக்கு நன்றி கோபி!!\\
வருகைக்கு நன்றி கப்பி ;)
@ குசும்பன்
\\தம்பி அருமையான வீடியோ.
அப்புறம் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்:))))))))))\\
நீ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...உங்க பலம் உங்களுக்கு தெரியாதுண்ணே ;)
@ கண்மணி
\\ஆஹா ஷென்ஷி க்கு அப்படியே பொங்கிடுச்சே கவிதை குட் குட்....[இதான் பெரிய மனுச தோரணை;)]\\
ஒ...இது எனக்கு தெரியாம போச்சே..! ! ;)
@ சின்ன அம்மணி
\\சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படி இருப்பவங்க பெரிசானதும் ஏனோ மாறிடறாங்க. பெரிசானதும் பாராட்டு முக்கியமாயிடுதோ\\
பாராட்டு மட்டும் இல்ல...தயக்கமும் அதிகமாகிடுது.
@ கீதா சாம்பசிவம்
வாங்க தலைவி..;)
\\நாளைய பாரதம் நிச்சயமா ஒளிரும், சந்தேகமே வேணாம், மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள், உண்மையாகவே, நடந்த ஒன்றா? \\
அப்படி இல்லைன்னு நினைக்குறேன்...
\\என்றால் சிறுவன் மிகவும் பாராட்டுக்குரியவன். வாழ்த்துக்கள், அற்புதமான பகிர்வைக் கொடுத்ததுக்கு\\
உங்கள் வருகைக்கும் நன்றி தலைவி ;)
@ பவன்
\\ஆங்கில கவித எழுதுனா ஒக்கேவா அங்கிள்...\\
நீ எப்படி எழுதினாலும் ஓகே தான் செல்லம்...;)
@ நாகை சிவா
\\என்னடா இரண்டு நாள் முன்பே போஸ்ட் போட்டு தூக்கிட்டே என்று யோசிச்சேன்.\\
அப்போ சரியாக இணைக்க தெரியல சகா...இப்பதான் மக்கள் உதவி செய்தாங்க ;)
\\நல்ல உள்ளங்கள் பல ஆக்கங்களை செய்யும் நிலையில் தான் உள்ளார்கள். ஆனால் யாரு முதலில் ஆரம்பிப்பது என்ற கேள்வியாலே அப்படியே தேங்கி விடுகின்றார்கள்.\\
ஆமாம்..யாரு முதலில் தொடங்குவது தான் பிரச்சனை..
\\ஆனா இதுல தேவையில்லாம சினிமா வை இழுத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....\\
;-))) கண்டிக்கிற அளவுக்கு ஒன்னும் சினிமாவை இழுக்க வில்லைன்னு நினைக்குறேன்..;)
@ மங்களூர் சிவா
\\ரிப்பீட்டேய்\\
ரீப்பிட்டேய்க்கு ஒரு நன்றி ;)
@ இம்சை அரசி
\\அவங்க எல்லாம் எப்போமே திருந்த மாட்டாங்க. திருந்திட்டா நாடு உருப்புட்டுடும் இல்ல.\\
உங்க ஆதாங்கம் எனக்கும் உண்டு..;)
\\கவிதை சூப்பர் :)))\\
கவிஞரே சொல்லிட்டிங்க அப்போ சூப்பர் கவிதை தான்...நன்றி ;)
@ அருண்
\\arumayaana video.. thx for sharing..
senshi's kavidhai super !!\\
நன்றி அருண் ;)
@ கானா பிரபா
\\தல
நமக்கும் கவிதைக்கும் வெகுதூரம், எதுக்கு விஷப்பரீட்சை.\\
இப்படி சொல்லி சொல்லியே எஸ்கேப்பு ஆயிடுங்க...;)
\\எங்க வேலை கவிதையைப் போல இருக்கும் பிகருகளை அளப்பதும், கவிதையை அழகா பாட்டா செதுக்குபவங்க புகழ் பாடுவதும் தான்.\\
தல "எங்க வேலை"ன்னு சொல்லாதிங்க "நம்ம வேலை"ன்னு சொல்லுங்க..;))
விடீயோ க்ளிப் அருமை... இப்போதான் முதன் முறை பார்க்கிறேன். :-)
சென்ஷிதான் ஆசைப்படுறார்ல.. நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு நாலு வரி ச்சேர்த்துக்கோங்க அண்ணா. :-))
மாப்பி,
சந்தோசமா உன் வலைப்பதிவு பக்கம் வந்தா இந்தப் விழியத்தைப் பாத்து கண்ணுல தாரை தாரையா கண்ணீர் வந்துருச்சுப்பா (வீட்டில எல்லோரும் ஒரு மாதிரி பாக்குறாங்கய்யா).....
நல்லது செய்யுறதுக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்குறதுக்கும் யாரு ஆரம்பிக்குறதுன்னு தயக்கத்திலேயே தான் காலம் ஓடிக்கிட்டு இருக்கு.....
@ மை ஃபிரண்ட்
\\சென்ஷிதான் ஆசைப்படுறார்ல.. நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு நாலு வரி ச்சேர்த்துக்கோங்க அண்ணா. :-))\\
அடுத்த முறை எல்லாத்தையும் சேர்த்து கலக்கிடுவோம்...;))
@ வேதா
\\கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்த வீடியோவை பார்த்தேன். நீங்க அதுக்குள்ள இங்க போட்டுட்டீங்க :) நல்ல கருத்துள்ள வீடியோ பதிவு.\\
நன்றி ;)
\\இளைத்திருந்த சமூகபிரஞ்சை!
தட்டி எழுப்பியது
ஒரு இளைய(யா) பாரதம்!/
ஏதோ எனக்கு தோணியது :)\\
ஏதோ தோணியதில் இம்புட்டு அழகாக சொல்லிறிங்க...இன்னும் கொஞ்சம் யோசிச்சி ஒரு பதிவாக போட்ட இன்னும் நன்றாக இருக்கும்...;))
@ பிரேம்குமார்
\\மாப்பி,
சந்தோசமா உன் வலைப்பதிவு பக்கம் வந்தா இந்தப் விழியத்தைப் பாத்து கண்ணுல தாரை தாரையா கண்ணீர் வந்துருச்சுப்பா (வீட்டில எல்லோரும் ஒரு மாதிரி பாக்குறாங்கய்யா)..... \\
:(
\\\நல்லது செய்யுறதுக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்குறதுக்கும் யாரு ஆரம்பிக்குறதுன்னு தயக்கத்திலேயே தான் காலம் ஓடிக்கிட்டு இருக்கு.....\\
சரியாக சொன்ன மாப்பி...;)
எல்லாரும் நல்ல படம்னு சொல்றாங்க எனக்கு தான் ஒன்றுமே தெரியமாட்டீங்குது கோபி. :-(
நான் கவிதை எழுதி, இந்த காட்சிகளை கெடுக்க விரும்பவில்லை! நல்லசமூக பாடம்!!
தடைகளைத் தடுக்க
பலங்கொண்ட கைகள்
ஆட்களைத் தேடி
அலைபாய்கிறது
தன் கையே தனக்குதவி
எனும் பலமான மனமே
உன் சிறு கைகளால்
தடை தாண்டியதே
உழைப்போம் உயர்வோம்
என்று மரமகற்றி
மனதிலேற்றினாய்
வாழி நீ வழி நடத்த.
//கோபிநாத் said...
மாப்பி கவிதை சூப்பர் ;))//
தேங்க்ஸ்டா மச்சி :))
எல்லா புகழும் உன்னையே சாரும்... :))..
ஆனாலும் நான் எழுதிக்கொடுத்தத அப்படியே போட்டிருக்கியே...! அவ்ளோ நல்லவனாடா நீயி...!! :)))
//G3 said...
anniku sonna maadiriyae video kalakkal :)) paapom makkal ennenna kavidhai ezhudharaagannu :D
ஆமாங்க... ரொம்ப நல்ல வீடியோ.. நாங்க உங்க கவிதையையும் எதிர்பார்க்குறோம் :))
@ஜி said..
உண்மைதான் ஜி... :((
@முத்துலட்சுமி...
கோபிக்கு சூப்பர் பட்டம் :))
@ கண்மணி..
ஆஹா... பெரிய மனுசங்களே வந்து வாழ்த்திட்டு சும்மா போறாங்களேப்பா :)) கவிதை எழுதாம :((
@ பேபி பவன்...
கூடவே தமிழுக்கு அர்த்தத்தையும் சேர்த்து அனுப்பிடு கண்ணு...! :))
@ இம்சை அரசி...
பாராட்டுக்கு நன்றிகள் :))
@ அருண்குமார்...
பாராட்டுக்கு நன்றிகள் :))
//.:: மை ஃபிரண்ட் ::. said...
சென்ஷிதான் ஆசைப்படுறார்ல.. நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு நாலு வரி ச்சேர்த்துக்கோங்க அண்ணா. :-))//
ஓ... இது கூட்டு சதிங்கப்போ...! :))
//@ வேதா
\\கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்த வீடியோவை பார்த்தேன். நீங்க அதுக்குள்ள இங்க போட்டுட்டீங்க :) நல்ல கருத்துள்ள வீடியோ பதிவு.\\
நன்றி ;)
\\இளைத்திருந்த சமூகபிரஞ்சை!
தட்டி எழுப்பியது
ஒரு இளைய(யா) பாரதம்!/
ஏதோ எனக்கு தோணியது :)\\
சூப்பர்.. :))
//குட்டிபிசாசு said...
நான் கவிதை எழுதி, இந்த காட்சிகளை கெடுக்க விரும்பவில்லை! நல்லசமூக பாடம்!!//
:)))
ஹைய்யோ சுல்தான் சார்...
கலக்கிட்டீங்க போங்க.. உண்மையிலேயே சிந்திக்க தூண்டும் வரிகள் :))
கவிதை அருமை..
எல்லாம் முடிந்தவவுடன் போலீஸ் உறக்கம் கலைவது சூப்பரோ சூப்பர்!. வீடியோ அருமை கோபி அவர்களே.
@ ஜெஸிலா
\\எல்லாரும் நல்ல படம்னு சொல்றாங்க எனக்கு தான் ஒன்றுமே தெரியமாட்டீங்குது கோபி. :-(\\
;-(
@ குட்டிபிசாசு
\\நான் கவிதை எழுதி, இந்த காட்சிகளை கெடுக்க விரும்பவில்லை! நல்லசமூக பாடம்!!\\
என்ன கவிஞரே இப்படி சொல்லிட்டிங்க...வருகைக்கு நன்றி குட்டி ;)
@ சுல்தான்
சுல்தான் சார்...சூப்பர்...கலக்கிட்டிங்க...கவிதைக்கு மிக்க நன்றி...வரிகள் அனைத்தும் அருமை ;)
@சென்ஷி
மாப்பி உனக்கும் என்னோட நன்றி ;)
@ ஸயீத்
ஸயீத் எப்படி இருக்கிங்க? ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிங்க...மிக்க நன்றி ஸயீத் ;)
நல்ல காட்சிப்பதிவு...கவிதை என் வலையில்..கோபிநாத்துக்கு நன்றி..நல்ல கவிதையுடன் புத்தாண்டுப் பதிவைத் துவக்க உதவியதற்காக.
@ பாச மலர்
\\நல்ல காட்சிப்பதிவு...கவிதை என் வலையில்..\\
மிக்க மகிழ்ச்சி..கண்டிப்பாக வருகிறேன் ;)
\\கோபிநாத்துக்கு நன்றி..நல்ல கவிதையுடன் புத்தாண்டுப் பதிவைத் துவக்க உதவியதற்காக.\\
உண்மையில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ;)
...ம்.
வயதால் பெரியவர்கள்
வாழ்க்கையை கடக்கிறார்கள்
இடையூறு அகற்ற
எவரையேனும்
எதிர்பார்த்தபடி!
மனதால் பெரியவர்கள்
குழந்தைகளாக இருக்கிறார்கள்
உலகை இயக்கிட
உவந்தொருகை
உண்மையாய் கொடுத்தபடி!
@ இப்னு ஹம்துன்
\\...ம்.
வயதால் பெரியவர்கள்
வாழ்க்கையை கடக்கிறார்கள்
இடையூறு அகற்ற
எவரையேனும்
எதிர்பார்த்தபடி!
மனதால் பெரியவர்கள்
குழந்தைகளாக இருக்கிறார்கள்
உலகை இயக்கிட
உவந்தொருகை
உண்மையாய் கொடுத்தபடி!\\
நெத்தி அடி...சூப்பராக சொல்லியிருக்கிங் இப்னு ;))
வருகைக்கும் கவிதைக்கும் மிக்க நன்றி :)
சிந்திக்க வைக்கும் வீடியோ!
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி கோபி!
சென்ஷியின் கவிதை மிகவும் அருமை!!
ஏற்கனவெ பார்த்த வீடியோ! ஆனாலும் திரும்ப பார்க்க வைத்தது.
தேவை, இப்படி சில இந்தியர்கள்..
@ திவ்யா
\\சிந்திக்க வைக்கும் வீடியோ!
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி கோபி!
சென்ஷியின் கவிதை மிகவும் அருமை!!\\
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி திவ்யா ;)
@ Dreamzz
\\\ஏற்கனவெ பார்த்த வீடியோ! ஆனாலும் திரும்ப பார்க்க வைத்தது.
தேவை, இப்படி சில இந்தியர்கள்..\\
கண்டிப்பாக..வருகைக்கு நன்றி டீரீம்ஸ்
வழி காட்டுதல் இல்லாமல் தடுமாறித் தயங்கி நிற்கும் நாம் உரிய வழி காட்டுதலும் சீரிய தலைமையும் இருந்தால் சாதித்துக் காட்டுவோம். வழி காட்டுபவர் சிறுவராயினும் சரி பெரியவரானாலும் சரி.
//////// உண்மையாகவே, நடந்த ஒன்றா? என்றால் சிறுவன் மிகவும் பாராட்டுக்குரியவன்.//////////
இந்த ஒளிப்படக்காட்சி டைம்ஸ் இந்தியா இதழின் தலைமைத்துவத்தை-Leadership-மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரை/போட்டிக்கு,அதை எளிமையாக விளக்க எடுக்கப் பட்ட ஒரு விவரணப்படம்..
இப்போ மின்மடல்கள் வழியா சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு !!!!
@ சீனா
\\வழி காட்டுதல் இல்லாமல் தடுமாறித் தயங்கி நிற்கும் நாம் உரிய வழி காட்டுதலும் சீரிய தலைமையும் இருந்தால் சாதித்துக் காட்டுவோம். வழி காட்டுபவர் சிறுவராயினும் சரி பெரியவரானாலும் சரி.\\
அதே..அதே..வருகைக்கு நன்றி ;)
@ அறிவன்
//////// உண்மையாகவே, நடந்த ஒன்றா? என்றால் சிறுவன் மிகவும் பாராட்டுக்குரியவன்.//////////
இந்த ஒளிப்படக்காட்சி டைம்ஸ் இந்தியா இதழின் தலைமைத்துவத்தை-Leadership-மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரை/போட்டிக்கு,அதை எளிமையாக விளக்க எடுக்கப் பட்ட ஒரு விவரணப்படம்..
இப்போ மின்மடல்கள் வழியா சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு !!!!\\
ஆஹா...இதுக்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா!?...தகவலுக்கு மிக்க நன்றி அறிவன் ;))
துவங்கும் கை என்னுடையதாக இருக்க
ஒவ்வொருவரும் நினைத்தாலே போதும்......
இந்த மரம் மாதிரி ஆயிரம் தடங்கல்களை
தூசு மாதிரி தட்டி விட்டுக் கொண்டு
துணிந்து சிரிக்கலாம்....
அருணா
அருமையான வீடியோ. நமக்கெல்லாம் பாடம்.
மெட்டுக்கு வர்ர மாதிரியே யோசிச்சேன். ரொம்ப யோசிக்க முடியலை. ஆகையால சுருக்கமா நாலு வரி.
தடுக்கி விழுந்தது யார்
தடத்தை மறந்தது யார்
நீ எழு
இந்திய நாடு எழும்
ஏ பகலே நிலவே நீயே பார்
நாங்கள் எழுகின்றோம்
நீ எழு
நம் இந்திய நாடு எழும்
@ அருணா
\\துவங்கும் கை என்னுடையதாக இருக்க
ஒவ்வொருவரும் நினைத்தாலே போதும்......
இந்த மரம் மாதிரி ஆயிரம் தடங்கல்களை
தூசு மாதிரி தட்டி விட்டுக் கொண்டு
துணிந்து சிரிக்கலாம்....
அருணா\\
வாங்க அருணா...முதல் இரண்டு வரிகளில் ழுழு வீடியோவை பத்தி சொல்லிட்டிங்க...அருமை..நன்றி ;)
@ ராகவன்
\\அருமையான வீடியோ. நமக்கெல்லாம் பாடம்.\\
ஆமாம் ஜிரா சரியாக சொன்னிங்க..;)
மெட்டுக்கு வர்ர மாதிரியே யோசிச்சேன். ரொம்ப யோசிக்க முடியலை. ஆகையால சுருக்கமா நாலு வரி.
தடுக்கி விழுந்தது யார்
தடத்தை மறந்தது யார்
நீ எழு
இந்திய நாடு எழும்
ஏ பகலே நிலவே நீயே பார்
நாங்கள் எழுகின்றோம்
நீ எழு
நம் இந்திய நாடு எழும்\\
தல இம்புட்டு திறமை எங்க வச்சிருந்திங்க....சூப்பர் தல ;)
really it is a wonderful video. Hats off to the one who conceptualised and Shankar mahadevan for the song and to you for posting it. Well done.
Post a Comment