Tuesday, September 18, 2007

நாங்களும் ஓட்டுவோம்ல....




இது கொசுவத்தி பதிவு மக்கா...

நம்ம சின்ன அம்மிணி அக்கா சமீபத்தில் சைக்கிள் ஓட்டியதை பத்தி பதிவா போட்டுயிருந்தாங்க, அதை படிச்சதும் நான் சைக்கிள் ஒட்டியது ஞாபகத்துல வந்துடுச்சி.
(சந்தோஷமான விஷயங்களை எல்லாம் இப்படி யாராவது ஞாபகப்படுத்தனாதான் உண்டு)

கொசுவத்தியை அப்படியே சுத்திக்கிட்டு போனா ஒரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டிவருதுன்னு நம்ம கார்த்திக் டவுசர் போட்டுக்கிட்டு பாட்டு பாடுவரே அதே மாதிரி நானும் டவுசர் போட்ட காலத்துல போயி நிறுத்துறேன்.

"புள்ளையா இது..."

"சனியனே..."

"கிரவுண்டுல போயி ஓட்ட வேண்டியது தானே..."

"இதுங்களுக்கு லீவு விட்டதும் விட்டாங்க நம்ம காலை ஒடிக்குதுங்க..."

ச்ச நிறுத்துன இடம் சரியில்லைங்க சைக்கிள் ஓட்ட பழக்கும் போது வாங்கிய திட்டுக்கள் தான் முதல்ல ஞாபகத்துக்கு வருது (இதெல்லாம் என்ன பெருமையா கடமை டவுசர் போட்ட காலத்துல ஓட்ட கத்துக்கிட்ட ஒவ்வொருத்தரோட கடமை) கிட்ட தட்ட எல்லோரும் இந்த மாதிரி திட்டு வாங்கியிருப்பிங்க.

எனக்கு முதல் போணி அப்பா தான். மனுசன் வேலையை முடிச்சிட்டு எப்படா படுப்போம்ன்னு வருவாறு அவரு வந்தவுடனே சைக்கிளை உள்ளே கொண்டுவரதுக்கு முன்னாடி போய்

"அப்பா....அப்பா வண்டியோட்ட கத்துக் கொடுப்பா"

"ம்க்கும் துரைக்கு இது மட்டும் தான் கொரைச்சல் புக்கை எடுத்து படிடான்னா படிக்காதே இதுக்கு மட்டும் தூங்காம முழிச்சிருந்து வந்துடுவியே"....இப்படி எல்லாம் வாயை துறந்து ஒரு நாளும் சொன்னது இல்ல.


"சரி வா ஆரம்பிப்போம்"ன்னு சைக்கிள் மேல ஏத்திவிடுவாரு.

"ப்பா நல்லா பிடிச்சிக்கப்பா.."

"சரிடா....முதல்ல மிதி"

வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு

"முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்"

"சரி அப்ப காசு கொடு"

"இதுக்கு தாண்டா நான் வாயே தொறக்குறதுல்ல"....இந்தா புடின்னு காசை கொடுப்பாரு

காசை வாங்கியவுடன் கால் நேராக தெரு முனையில இருக்குற சைக்கிள் கடையை நோக்கி ஒடி 1 மணிநேரத்துக்கு சைக்கிளை எடுப்பேன். அதுவும் சிகப்பு கலருல ஒரு சைக்கிள் இருக்கும். அது என்ன மாயமோ தெரியல அப்ப எல்லாம் அந்த வண்டியை தவிர வேற எந்த வண்டியும் பிடிக்காது (வேற எந்த வண்டியும் எட்டாதுன்னுங்கிறது வேற விஷயம்)

அந்த சின்ன வண்டிக்கு ஏற்றார் போல சின்னதாக கேரியர் கூட இருக்கும். அந்த வண்டி எந்த கம்பெனி வண்டின்னு அந்த கடைக்காரனுக்கே தெரியாது அந்த அளவுக்கு ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு ஷேப்புல இருக்கும்.

"அண்ணா சைக்கிள்ள காத்து கொஞ்சம் கம்மியாருக்கு"...

"விழுந்துவார்ரத்துக்கு இதுபோதும் போடான்னு" சைக்கிள்கடைக்காரனின் வாழ்த்து செய்தியோட வண்டி மேல ஏறி வுட்கார்ந்து, பக்கத்துல இருக்குற கல்லுமேல ஒரு காலை வச்சி இன்னொரு காலால சைக்கிள் வலது பெடலை ஒரு மிதி. மிதிக்கிறதுக்கு முன்னாடி பெல் எல்லாம் அடிச்சி ஊருல இருக்குற எல்லா சாமிக்கும், மக்களுக்கும் நான் சைக்கிள் ஓட்டுறதை சொல்லிடுவேன்.

அப்புறம் தான் இருக்கு விஷயமே கை ரெண்டும் மைக்கல் ஜாக்சான் டான்சு ஆடும் பாருங்க அப்படி ஆடும். என் ஆட்டத்தை பாக்குறதுக்குன்னே எங்கிருந்து தான் வருவாங்களோ எல்லா வேலையும் வுட்டுட்டு வறவுங்க மேல எல்லாம் ஒரு இடி..."சனியனே புள்ளையா இது..."கிரவுண்டுல போயி ஒட்ட வேண்டியது தானே"..(திட்டாம ராசா பார்த்து ஓட்டுப்பான்னு கொஞ்சுவாங்களா..) ச்ச எப்படியும் நாமாகவே ஓட்ட கத்துக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்குற சமயத்துல தான். ஊரில் இருந்து எங்க பெரியம்மா பையன் வந்தான்.
அண்ணா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுன்னு ஒரு அப்லிக்கேசனை போட்டாச்சி.
சரி சித்தி பையன்னு பாசத்துல சொல்லிக் கொடுத்தான். "டேய் குனியாதடா, நேரா பாரு,
கைய எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுற, எப்ப செஞ்ச பாவமே என்க்கிட்ட மாட்டிக்கிட்டு தலை கீழா நின்னு தண்ணி குடிச்சான் நானும் கீழ எல்லாம் விழுந்து பல சில்லரைகள் எல்லாம் அள்ளி எப்படியோ ஓட்ட கத்துக்கிட்டேன்.

இப்ப கத்துக்கிட்டாச்சி அப்புறம் என்ன ஏதற்க்கெடுத்தாலும் சைக்கிள் தான். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சைக்கிளை வாடகைக்கு எடுத்து சுத்த வேண்டியது தான். எத்தனை நாள் தான் வாடகையில சுத்தறது?. சொந்த வண்டி வேணுமுன்னு அம்மா முலமாக என் அப்லிகேசனை தட்டி விட்டேன். ஒரு செக்கனண்டு BSA SLR வண்டியை சர்வீஸ் செய்து சாவியை கொடுத்தாரு அப்பா.

"முதல்ல பூஜை பண்ணிட்டு வண்டியை எடு..."

"எது இந்த வண்டியையா...அவன்வன் புசுது புதுசா வண்டியை வச்சி சீன் போட்டுக்கிட்டு இருக்கானுங்க செக்கனண்டு வண்டி எல்லாம் எவன் ஓட்டுவான்"

எனக்கு புதுசு தான் வேணும்முன்னு அந்த வண்டியை ரெண்டு நாளா தொடாமல் இருந்தேன். அப்புறம் வேற வழியில்லன்னு அந்த வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த வண்டி இல்லாமா எங்கையும் போறதுல்ல. 5வருஷம் அதே வண்டி தான் வருஷம் வருஷம் சர்வீஸ்க்கு விடும் போதெல்லாம் கடக்காரன் இதுல என்னத்த இருக்குன்னு சர்வீஸ்க்கு விடுறன்னு ஒரு பார்வை பார்பான். அந்ந அளவுக்கு வண்டியை கண்டம் பண்ணிவிச்சிருப்பேன். என் கோவத்தை எல்லாம் அது மேல தான் காட்டியிருக்கேன்.

ஸ்கூல் முடிஞ்ச பிறகு நானும் என் நண்பர்களும் வண்டியை மாத்திப்போம். பிகருங்க முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். எதிர் காத்துல ஏறி நின்னுக்கிட்டு மிதிச்சிக்கிட்டே அந்த காத்தை அனுபவிக்கும் போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அட அட அப்படி ஒரு ஆனந்தம் அதுல. எனக்கு தெரிஞ்சி அந்த வண்டியை ஆயுதபூஜைக்கு மட்டும் தான் சுத்தமா தொடைப்பேன். அதுவும் வீட்டுல கத்து கத்துன்னு கத்திய பிறகு தான்.

என்னை படிக்க வைக்குறதே பெரிய விஷயம்ன்னு நினைச்சிக்ட்டு இருக்குற நிலைமையிலும் என் ஆசையை நிறா ஆசையாக்கக் கூடாதுன்னு எனக்குன்னு சொந்தமா ஒரு செக்கனண்டு வண்டியை தான் வாங்கி கொடுத்தாரு எங்க அப்பா. இது தான் என்னால முடிஞ்சதுன்னு வாய்விட்டு கூட சொல்லியிருக்காரு. அப்படி இருந்தும் கூட எப்போதாவது அப்பாவை ரயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு போயி விடுன்னு அம்மா சொன்னா.."சைக்கிளை ஸ்டாண்டுல போட்டுட்டு போக சொல்லும்மா...எனக்கு வேற வேலையிருக்குன்னு" போயிடுவேன். இன்னிக்கும் யாருமே ஓட்டலனாலும் கூட அந்த வண்டி தூக்கி போடமா என் வீட்டுல ஒரு ஒரமா வச்சியிருக்காரு.

சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.

53 comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ

CVR said...

அடடா!!

என் ஸ்கூல் காலேஜ் நாட்கள் ஞாபகம் வந்துருச்சு தலைவா!!
நானும் ஸ்கூல் காலேஜுக்கு எல்லாமே சைக்கிள்ல போனவன் தான்!!
அதுவும் எதுவும் பக்கத்துல இல்ல.ரொம்ப தூரம் போகனும்!!
எதிர்காத்துல கஷ்டப்பட்டு பேலன்ஸ் பண்ணி போனதெல்லாம் என்ன சொல்ல???
அம்மாவை டபுள்ஸ் அடிச்சிக்கிட்டு கடைத்தெருவுக்கு கூட்டிட்டு போனது எல்லாம் கண்ணு முன்னாடி வருது!!
என் சைக்கிள் நினைவுகள் எல்லாம் கொஞ்சமா நஞ்சமா.......!!!

இப்போ
நடக்கறதே இல்ல,ஜிம் போய் ட்ரெட்மில்ல அரை மணி நேரம் நடக்கலாமா அப்படின்னு யோசிக்கற நெலமை!!!

வாழ்க்கை எவ்வளவு மாறி போயிருச்சைய்யா!!!

Arunkumar said...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

நல்ல பதிவு மக்கா !!

G3 said...

//ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

நல்ல பதிவு மக்கா !!//

ரிப்பீட்டே :))

G3 said...

நாங்க எல்லாம் காலைல ஸ்கூலுக்கு போகும் போது மட்டும் தான் சைக்கிள ஓட்டிட்டு போறது.. திரும்பி வரும்போது அதை தள்ளிட்டே கதை அடிச்சிக்கிட்டு கும்பளா ஒரு வாக்கிங் தான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அநியாயத்துக்கு கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்களே :))

Anonymous said...

சைக்கிள் ஓட்டுனவங்க எல்லாத்துக்கும் இப்படி ஒரு பீலிங்ஸ் ஆப் இண்டியா இருந்தே தீரும். எல்லாரையும் கொசுவத்தி சுத்தவைச்சுட்டீங்கல்ல‌

கானா பிரபா said...

//முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். //

தல

நம்மள மாதிரியே இருந்தீங்களா ;))
கலக்கல் பதிவு

MyFriend said...

அண்ணே, மலரும் நினைவுகள் சூப்பர். :-)

MyFriend said...

//சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.//

ரொம்ப ஃபீல் பண்ணிட்டீங்களோ? :-)

Unknown said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே :)))

கலக்கல் பதிவுண்ணே!!

Unknown said...

அண்ணாமலைல்ல் தலைவர் சைக்கிள் ஓட்டுவாரு அவர் சைக்கிள்ல்ல அண்ணாமலைன்னு ஸ்டைலா எழுதியிருக்கும் அது போல நம்ம சைக்கிளிலும் நம்ம பேரை பெயிண்ட் வச்சு எழுதிகிட்டு சுத்துன அந்த காலமெல்லாம் நினைப்பு வருதுப்பா.. :)))

கதிர் said...

சைக்கிள் ஓட்ட கத்துக்கறதே பிகர் முன்னாடி படம் காட்டத்தானடா செல்லம். அதுக்காக எத்தனை இன்னல் வந்தாலும் தாங்கிக்கணும்.

Ayyanar Viswanath said...

கோபி சூப்பரப்பு

நான் 3 வது படிக்கும்போது சைக்கிள் கத்து தரேன்னு என் பக்கத்து வீட்டு பொண்ணு சைக்கிள்ள உட்கார வச்சி தள்ளி விட்டுட்டாய்யா!!! கீழ விழுந்து இடது கை மூட்டு நழுவிடுச்சி கிட்டதட்ட 2 மாசம் கைக்கட்டோட திரிஞ்சேன் :)

9 வது படிக்கும்போதுதான் அப்பா சைக்கிள் வாங்கி தந்தார்..ஆனாலும் நான் ஓட்ட மாட்டேன் பசங்க யாரையாச்சிம் ஓட்டவிட்டுட்டு முன்னால் உட்கார்ந்திட்டு போவேன்..ஷீலான்னு ஒரு பொண்ணு அவளும் டெய்லி எங்ககூட சைக்கிள் ல பேசிட்டே வருவா..

கக்கக்க போ

கலர்புல் டேஸ் யா

காட்டாறு said...

கோபி.... அண்ணாச்சி... இது உங்களுக்கு மட்டுமில்ல... பொண்ணுகளை கேட்டுப்பாருங்க... அவங்களும் நெறையா கதை சொல்லுவாங்க. ;-)

பத்த வச்சிட்டியேப்பா...

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
மீ தி ஃபர்ஸ்ட்டூ\\

ஆமாம்....ஆமாம்....

வாங்க CVR..

\\அம்மாவை டபுள்ஸ் அடிச்சிக்கிட்டு கடைத்தெருவுக்கு கூட்டிட்டு போனது எல்லாம் கண்ணு முன்னாடி வருது!!
என் சைக்கிள் நினைவுகள் எல்லாம் கொஞ்சமா நஞ்சமா.......!!//

ஆஹா...என்னைவிட உங்கள் அனுபவங்கள் சூப்பர இருக்கும் போல இருக்ககே....நீங்களும் எழுதுங்க தலைவா ;)))

கோபிநாத் said...

வாங்க அருண்...
\\Arunkumar said...
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

நல்ல பதிவு மக்கா !!\\

ரொம்ப நன்றி மக்கா... உங்க ஞாபகத்தையும் சொல்லறது.. ;))

வாங்க G3...

\\G3 said...
நாங்க எல்லாம் காலைல ஸ்கூலுக்கு போகும் போது மட்டும் தான் சைக்கிள ஓட்டிட்டு போறது.. திரும்பி வரும்போது அதை தள்ளிட்டே கதை அடிச்சிக்கிட்டு கும்பளா ஒரு வாக்கிங் தான்..\\

இப்படி எல்லாம் கும்பால வந்த எவன்தான் சில்லரை அள்ள மாட்டான்... ;)))

\\ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அநியாயத்துக்கு கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்களே :))\\

ஏதே என்னால முடிஞ்சது.....

கோபிநாத் said...

வாங்க சின்ன அம்மிணி அக்கா...
\\சின்ன அம்மிணி said...
சைக்கிள் ஓட்டுனவங்க எல்லாத்துக்கும் இப்படி ஒரு பீலிங்ஸ் ஆப் இண்டியா இருந்தே தீரும். எல்லாரையும் கொசுவத்தி சுத்தவைச்சுட்டீங்கல்ல‌\\

எல்லாம் உங்களால தானே... ;)

வாங்க தல..
கானா பிரபா said...
//முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். //

தல

நம்மள மாதிரியே இருந்தீங்களா ;))
கலக்கல் பதிவு\\

எல்லாம் ஒரே இனம் தானா!!!.. ;)))

கோபிநாத் said...

வாங்க தங்கச்சி...
\.:: மை ஃபிரண்ட் ::. said...
//சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.//

ரொம்ப ஃபீல் பண்ணிட்டீங்களோ? :-)\\

ரொம்ப இல்ல....கொஞ்சம் தான்..

வாங்க கப்பி....
\\kappi guy said...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே :)))

கலக்கல் பதிவுண்ணே!!\\

நன்றி செல்லம் ;))

கோபிநாத் said...

வாங்க தேவ் அண்ணே...
\\தேவ் | Dev said...
அண்ணாமலைல்ல் தலைவர் சைக்கிள் ஓட்டுவாரு அவர் சைக்கிள்ல்ல அண்ணாமலைன்னு ஸ்டைலா எழுதியிருக்கும் அது போல நம்ம சைக்கிளிலும் நம்ம பேரை பெயிண்ட் வச்சு எழுதிகிட்டு சுத்துன அந்த காலமெல்லாம் நினைப்பு வருதுப்பா.. :)))\\

ஆஹா...நினைப்பை எல்லாம் பதிவுல போடுங்க... ;)

வாங்க கதிர் ...
\\தம்பி said...
சைக்கிள் ஓட்ட கத்துக்கறதே பிகர் முன்னாடி படம் காட்டத்தானடா செல்லம். அதுக்காக எத்தனை இன்னல் வந்தாலும் தாங்கிக்கணும்.\\

சூப்பர சொன்ன செல்லம்... ;)

கோபிநாத் said...

வாங்க அய்ஸ்...
\\அய்யனார் said...
கோபி சூப்பரப்பு

நான் 3 வது படிக்கும்போது சைக்கிள் கத்து தரேன்னு என் பக்கத்து வீட்டு பொண்ணு சைக்கிள்ள உட்கார வச்சி தள்ளி விட்டுட்டாய்யா!!! கீழ விழுந்து இடது கை மூட்டு நழுவிடுச்சி கிட்டதட்ட 2 மாசம் கைக்கட்டோட திரிஞ்சேன் :)\\


9 வது படிக்கும்போதுதான் அப்பா சைக்கிள் வாங்கி தந்தார்..ஆனாலும் நான் ஓட்ட மாட்டேன் பசங்க யாரையாச்சிம் ஓட்டவிட்டுட்டு முன்னால் உட்கார்ந்திட்டு போவேன்..ஷீலான்னு ஒரு பொண்ணு அவளும் டெய்லி எங்ககூட சைக்கிள் ல பேசிட்டே வருவா..

கக்கக்க போ

கலர்புல் டேஸ் யா\\

அய்ஸ்...கோக்குலத்து கண்ணனை போல கலர்புல்லா இருந்திருக்கிங்க போல....இதை எல்லாம் பதிவாக போடுங்களோன்...

கோபிநாத் said...

வாங்க அக்கா...
\காட்டாறு said...
கோபி.... அண்ணாச்சி... இது உங்களுக்கு மட்டுமில்ல... பொண்ணுகளை கேட்டுப்பாருங்க... அவங்களும் நெறையா கதை சொல்லுவாங்க. ;-)\\

அதை தானே நாங்களும் எதிர் பார்க்கிறோம்....;)))

\\பத்த வச்சிட்டியேப்பா...\\

எரிஞ்சா சரி தான்..... ;)))

ALIF AHAMED said...

நாங்க ஆளுங்களையே ஓட்டுவோம்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நல்லா ஓட்டியிருக்கீங்களே!!!

நேத்துதான் புது சைக்கிள் மகளுக்குவாங்கி குடுத்துட்டு நானும் அவ அப்பாவும் ஆளுக்கோர் முறை ஓட்டி பழயகாலத்தை எல்லாம் உள்ள ஓட்டீ ஓட்டி பாத்துக்கிட்டோம்.:)

ம் ..அது அந்த் காலம் இப்ப இந்த சைக்கிள் என் சைக்கிள் போல இல்லை ... என்னோட பிஎஸ் ஏ தான் பெஸ்ட்டுன்னு கமெண்ட் வேற.

நாகை சிவா said...

ஆயிரம் கதைகள் இருக்கய்யா இந்த சைக்கிள்ல... நான் எல்லாம் மாதம் மாதம் சீட்டு கட்டி சைக்கிள் வாங்கினேன்.. ஸ்கூல் படிக்கும் போது.. இன்னும் அந்த சைக்கிள் இருக்கு...

MTB வந்த புதுசல அதை வச்சு எங்க எங்க எல்லாம் போய் இருக்கோம்.. அது ஒரு ஆனந்தம்... கல்லூரிக்கு செல்லும் வரை சைக்கிள் தான்.. கல்லூரி வந்த பிறகு பைக் வந்து சைக்கிள் ஒட்டுவது விட்டு போச்சு... இப்ப எல்லாம் சத்தியமா முடியல...

நாகை சிவா said...

//ஒரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டிவருதுன்னு நம்ம கார்த்திக் டவுசர் போட்டுக்கிட்டு பாட்டுபாடுவரே அதே மாதிரி நானும் டவுசர் போட்ட காலத்துல போயி நிறுத்துறேன்.//

யோவ் இந்த பாட்டுல கார்த்திக் எங்கய்யா வருவார்.... நம்ம சுதாகர் ல வருவார்... கிழக்கே போகும் ரயில் சுதாகரே தான்...

நாகை சிவா said...

சரி இந்த குரங்கு பெடல பத்தி நீ ஏதுமே சொல்லையே... ஏன்....

நாகை சிவா said...

//திரும்பி வரும்போது அதை தள்ளிட்டே கதை அடிச்சிக்கிட்டு கும்பளா ஒரு வாக்கிங் தான்.. //

தெரியுங்க தெரியுங்க... இந்த கருமத்துக்கு தானே கட் எல்லாம் அடிச்சோம்...

கோபிநாத் said...

வாங்க மின்னல்...
\\மின்னுது மின்னல் said...
நாங்க ஆளுங்களையே ஓட்டுவோம்..:)\\

அதான் நேருல பார்த்தோமே.... ;))

வாங்க அக்கா...
\\முத்துலெட்சுமி said...
கோபி நல்லா ஓட்டியிருக்கீங்களே!!!

நேத்துதான் புது சைக்கிள் மகளுக்குவாங்கி குடுத்துட்டு நானும் அவ அப்பாவும் ஆளுக்கோர் முறை ஓட்டி பழயகாலத்தை எல்லாம் உள்ள ஓட்டீ ஓட்டி பாத்துக்கிட்டோம்.:)\\

கீழ எல்லாம் விழவில்லையே...

\\ம் ..அது அந்த் காலம் இப்ப இந்த சைக்கிள் என் சைக்கிள் போல இல்லை ... என்னோட பிஎஸ் ஏ தான் பெஸ்ட்டுன்னு கமெண்ட் வேற.\\

அட நீங்களும் நம்ம வண்டி தானா....சூப்பரு..;)))

கோபிநாத் said...

வாங்க சிவா...
\நாகை சிவா said...
ஆயிரம் கதைகள் இருக்கய்யா இந்த சைக்கிள்ல... நான் எல்லாம் மாதம் மாதம் சீட்டு கட்டி சைக்கிள் வாங்கினேன்.. ஸ்கூல் படிக்கும் போது..இன்னும் அந்த சைக்கிள் இருக்கு..\

ஆயிரம் கதையில ஒரு கதையை ஆச்சும் சொல்லக்கூடாதா..

\\MTB வந்த புதுசல அதை வச்சு எங்க எங்க எல்லாம் போய் இருக்கோம்.. அது ஒரு ஆனந்தம்... கல்லூரிக்கு செல்லும் வரை சைக்கிள் தான்.. கல்லூரி வந்த பிறகு பைக் வந்து சைக்கிள் ஒட்டுவது விட்டு போச்சு... இப்ப எல்லாம் சத்தியமா முடியல...\\

ஆமாம்ப்பா....நானும் ஊருக்கு போன போது ஒரே முறை தான் சைக்கிளை ஓட்டி பார்த்தேன்...ம்

\\நாகை சிவா said...
சரி இந்த குரங்கு பெடல பத்தி நீ ஏதுமே சொல்லையே... ஏன்....\\

அதை எல்லாம் சுருக்கமாக சொல்லியிருக்கேனோ....(சில்லரை அள்ளிட்டேன்னு) ;)

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
//திரும்பி வரும்போது அதை தள்ளிட்டே கதை அடிச்சிக்கிட்டு கும்பளா ஒரு வாக்கிங் தான்.. //

தெரியுங்க தெரியுங்க... இந்த கருமத்துக்கு தானே கட் எல்லாம் அடிச்சோம்...\\

சூப்பர் கட்டுப்பா...;)))))))

நாகை சிவா said...

//ஆயிரம் கதையில ஒரு கதையை ஆச்சும் சொல்லக்கூடாதா..//

இதை எல்லாம் இப்படி நீ சபையில கேட்க கூடாது சொல்லிட்டேன்..

Anonymous said...

இது மற்றோரு ஆட்டோகிராப் பார்த்த ஞாபகம் வருது கோபி..இதைப் படிச்ச எங்களுக்கும் பழைய ஞாபகம் வந்துருச்சி.

குசும்பன் said...

தம்பி சூப்பர் கொசுவத்தி செமயா இருக்கு...

மங்களூர் சிவா said...

very nice posting. remembering those old days.

ஜி said...

tortoise nalla kozuthuneenga..

aana..

climaxla ippadi sentiyaa aayittiye thala :((

துளசி கோபால் said...

கொசுவத்தி வாங்கியே கோபாலோட சம்பளம் தீர்ந்துருதுன்னு இப்ப நானே ஹோல்சேல் யாவாரம் ஆரம்பிச்சுருக்கேன். இனி இங்கேதான் வாங்கிக்கணும் நீங்கெல்லாம்:-)))))

அருமையா ஓட்டி/எழுதி இருக்கீங்க

கோபிநாத் said...

வாங்க துர்கா...
\\துர்கா|thurgah said...
இது மற்றோரு ஆட்டோகிராப் பார்த்த ஞாபகம் வருது கோபி..இதைப் படிச்ச எங்களுக்கும் பழைய ஞாபகம் வந்துருச்சி.\\

நன்றி...துர்கா ;)

வாங்க சித்த"ஆப்பு"
\\குசும்பன் said...
தம்பி சூப்பர் கொசுவத்தி செமயா இருக்கு...\\

நன்றிண்ணே... ;))

கோபிநாத் said...

வாங்க சிவா...
\\மங்களூர் சிவா said...
very nice posting. remembering those old days.\\

நன்றி சிவா..


வாங்க ஜி..
\\ஜி said...
tortoise nalla kozuthuneenga..

aana..

climaxla ippadi sentiyaa aayittiye thala :((\\
climax இன்னாலே அப்படி தான் ஜி...சென்டியா இருக்கும்..

கோபிநாத் said...

வாங்க துளசிம்மா...
\\துளசி கோபால் said...
கொசுவத்தி வாங்கியே கோபாலோட சம்பளம் தீர்ந்துருதுன்னு இப்ப நானே ஹோல்சேல் யாவாரம் ஆரம்பிச்சுருக்கேன். இனி இங்கேதான் வாங்கிக்கணும் நீங்கெல்லாம்:-)))))\\

கண்டிப்பா வாங்கிக்கிறேன்.. ;))

அருமையா ஓட்டி/எழுதி இருக்கீங்க\\

நன்றிம்மா ;))

சென்ஷி said...

எப்டி மாமு கலக்கியெடுத்துட்ட போ...

உண்மையிலேயே கடசி வரி கலாசலா இருந்ததுப்பா...

நிறைய எழுதுய்யா.. அப்பத்தானே நான் படிக்க முடியும்

அன்பு மச்சி

சென்ஷி

சென்ஷி said...

நான் உன் பதிவுக்கு வந்து படிச்சுட்டு ரெண்டாவது பின்ன்னூட்டம் போடலைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாரு.. அதுக்க்காக இது ஓகேவா....

Anonymous said...

nice post Gopi...


neriya enakkum rewind aagutheeeeeeeee...


Bell, Rose vaicha antha convent school ponnu , arunthu pona cycel chain, 2bls,3bls...............................

-maniprakash

Anonymous said...

ippa ellam alagana padama therntheduthu podirie gopi..

nice picture.. :)

mani

Santhosh said...

Super post Gopi kalakalll..

cheena (சீனா) said...

//ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே!
மலரும் நினைவுகள் ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!
ஆட்டோகிராப் //

இது அத்தனையும் பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட சொற்கள் / வரிகள்

எல்லோருக்கும் இனிய பழைய நினைவுகளை அசை போடுவது என்பது ஒரு இனிய அனுபவம் தான்

நானும் ஒரு வலைப்பூ தொடங்கி இருக்கிறேன். தொடர வேண்டும் இனி.

http://cheenakay.blogspot.com
htpp://pathivu.madurainagar.com/2007/10/blog-post.htm

வலைப்பதிவர்கள் வருகை புரிந்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.

Divya said...

\சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.\

சத்தியமான உண்மை.....

உங்கள் 'மலரும் நினைவுகள்' அருமை.

Raji said...

Ahaha sentiya irukkae..nalla pathivunga Gopi:)

Naan cycle kathukitadhelam gybagam varudhu:)

கோபிநாத் said...

@சென்ஷி
\\சென்ஷி said...
எப்டி மாமு கலக்கியெடுத்துட்ட போ...

உண்மையிலேயே கடசி வரி கலாசலா இருந்ததுப்பா...\\

நன்றி மச்சி ;))

@மணிபிரகாஷ்
\\Anonymous said...
nice post Gopi...
neriya enakkum rewind aagutheeeeeeeee...
Bell, Rose vaicha antha convent school ponnu , arunthu pona cycel chain, 2bls 3bls...............................\\

ஆஹா...சீக்கிரம் வந்து பதிவு போடுங்க...;))

\\ippa ellam alagana padama therntheduthu podirie gopi..

nice picture.. :)\\

எல்லாம் நம்ம மக்களை பார்த்து தான்....நன்றி ;)

கோபிநாத் said...

வாங்க அண்ணே..
\\சந்தோஷ் said...
Super post Gopi kalakalll..\\

நன்றி அண்ணே ;)

வாங்க சீனா
cheena (சீனா) said...
//ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே!
மலரும் நினைவுகள் ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!
ஆட்டோகிராப் //

இது அத்தனையும் பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட சொற்கள் / வரிகள்

எல்லோருக்கும் இனிய பழைய நினைவுகளை அசை போடுவது என்பது ஒரு இனிய அனுபவம் தான்

நானும் ஒரு வலைப்பூ தொடங்கி இருக்கிறேன். தொடர வேண்டும் இனி.

http://cheenakay.blogspot.com
htpp://pathivu.madurainagar.com/2007/10/blog-post.htm

வலைப்பதிவர்கள் வருகை புரிந்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.\\

கண்டிப்பாக வருகிறேன்...;)) நன்றி ;)

கோபிநாத் said...

வாங்க திவ்யா..
\\Divya said...
\சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.\

சத்தியமான உண்மை.....

உங்கள் 'மலரும் நினைவுகள்' அருமை.\\

நன்றி திவ்யா...நிங்களும் உங்கள் மலரும் நினைவுகளை எழுதலாமே..;)))

வாங்க ராஜி ;)
முதல் வருகைக்கு நன்றி...
Raji said...
Ahaha sentiya irukkae..nalla pathivunga Gopi:)

Naan cycle kathukitadhelam gybagam varudhu:)\\

வரட்டும்..வரட்டும்..அப்படியே பதிவாகவும் போடுங்களோன்...நன்றி ;)

கண்மணி/kanmani said...

//சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.//

ரொம்ப பாவம்பா நீயி உன்னைப் பிரிஞ்சவங்கெல்லாம் புள்ளகுட்டியோட நல்லாருக்கங்களா?;(

Raji said...

//முதல் வருகைக்கு நன்றி...//
:):)

pathivu poada neram laedhu pa...illaina naan kooda poduvaen
:)

sri said...

//சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.//

Very very true and well said, It makes me realise so many things.
Thnks for writing such good