பண்ணைபுரத்து இசை, வெள்ளிக்கிழமை மாலையில் இசை கச்சேரி நடத்த ஷார்ஜா வந்திருந்தது., 87 இசை கலைஞர்கள், SPB, சித்ரா, மனோ, ஸ்ரேயா கோஷல், சாதனாசர்கம், மஞ்சரி, மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, பவதாரணின்னு அருமையான பின்னனி பாடகர்களுடன் அழகான பாடல்களை கூடவே கொண்டு வந்திருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குஷ்பு, ஜெயராமும் வந்திருந்தார்கள் (கொஞ்சம் ஓவராகவே தொகுத்து அருத்துட்டாங்க)
ஜனனி ஜனனி என்று தன் வழக்கமான பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார் இசைஞானி. "எனக்கு நீங்க தரும் பரிசு அமைதியாக இருந்து இந்த நிகழ்ச்சியை ரசிக்க போறிங்க அது தான் நீங்கள் எனக்கு தரும் பரிசுன்னு" எடுத்தவுடனே அன்பு கட்டளை போட்டுட்டார். சொர்கமே என்றாலும் என்ற பாடலில் உள்ள வரிகளை மாற்றி அதற்க்கு பதிலாக கோகினூறு வைரம், அம்மா கையால சாப்பாடு, சாப்டுவேர் இன்ஜீனியர்கள், கோவில் மணி யோசை, பூக்கள்ன்னு இந்தியாவின் பெருமைகளை எல்லாம் சேர்த்து பாடி அந்த அரங்கத்தையே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த பாடலை பாடி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறதுக்கு ஏன்க்கிட்ட என்ன இருக்கு இந்த பாட்டை தவிரன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க கைத்தட்டலில் அரங்கமே குலுங்குச்சி.
சீனியர்ஸ் ஜீனியஸ் தான்னு பாலு சாரும், சித்ரா, மனோ அவர்களும் எந்த சேதாரமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். ராஜபார்வை படத்துக்கு முதல் டியூன் அந்தி மழை பொழிகிறதுன்னு போட்டாராம் ராஜா. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் கமலும், இயக்குனரும் இன்னும் வேற மாதிரி டியூன் வேண்டும் என்று சொல்ல மொத்தம் 30 டியூன் போட்டாராம். கடைசியில எல்லா டியூனையும் கேட்டுட்டு முதலில் போட்ட டியூனே ஓகேன்னு சொல்ல அது தான் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலாக வந்தது என்று பாலு சொன்னார். ஆனால் அந்த 30 டியூனில் ராஜாவுக்கு பிடித்த டியூன் வேறான்று அந்த டியூன் வேறொரு படத்தில் உபயோகப்படுத்தி அதற்க்கு பாலு சாருக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது.
சில பாடல்கள் டியூன் போடும் போது அதில் மற்றொரு பாடலின் ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி திரு. பர்மன் அவர்கள் இசை அமைத்த பாடலின் ஈர்ப்பினால் வந்த பாடல் தான் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் அந்த இந்தி பாடலையும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாலு அவர்கள் அழகாக பாடி காண்பித்தார். மவுனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் இந்தியில் ஸ்ரேயா கோஷலும் தமிழில் பாலு அவர்களும் பாடினார்கள். இந்த பாடல் பாடும் போது இடையில் ஒலியில் பிரச்சனை வர டக் என்று நிறுத்தி விட்டு அந்த பிரச்சனையை சரி செய்த பிறகே அந்த பாடல் மொத்தமாக பாடினார்கள். இது போல் மற்றொரு பாடலிலும் இசை குழுவினர் சரியாக இசை அமைக்காத தால் அந்த இடத்திலேயே அதை சரி செய்து மீண்டும் பாடினார்கள்.
திடிரென்னு மேடையில் தோன்றிய கார்த்திக் ராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் ராஜாவை கலாய்சி (கொஞ்சம் ஒவராகவே) எடுத்துட்டாங்க. யுவன் "என் பாட்டை பாடுங்கன்னு" சொல்ல ராஜாவும் உடனே அறியாத வயசு புரியாத மனசுன்னு பாடி முடிக்க. "இது இல்ல என் பாட்டுன்னு சொல்ல..நம்ம பாட்டு பாடுங்கன்னு சொல்ல டேய் இப்ப எதுக்கு இங்க வந்து நீ கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு" ராஜா கிண்டலுக்கு சொல்ல "இல்ல நீங்க பாடினால் தான் நாங்க போவோம்ன்னு" யுவனும், கார்த்திக்கும் அடம் பிடிக்க அப்படி என்ன பாட்டுய்யா பாட சொல்றான்னு நமக்கும் ஆர்வத்தை கிண்டி விட கடைசியாக மூன்று ராஜாக்களும் சேர்ந்து ராஜா ராஜாதி ராஜனிந்த இந்த ராஜான்னு பாட ரசிகர்களின் மனதில் மூன்று ராஜாக்களும் ராஜியம் செய்தார்கள். அதில் வரிகள் மாற்றி இந்த காலத்துக்கு பாப், ராக், ஜாஸ் தான் பிடிக்கும்ன்னு யுவன் சொல்ல வேண்டா சாமி அதெல்லாம் எனக்கு வராதுன்னு ராஜா ஒரே கும்புடு போட மொத்தத்தில் மூன்று ராஜாக்களும் கலக்கிட்டாங்க.
வந்திருந்த சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும் ரெண்டு மலையாள பாடல்கள் பாடினார்கள்.
பாலு சாரிடம் குஷ்பு ஒரு பாடல் கேட்க நான் அந்த பாட்டு பாடினால் "நீ ஆடவேண்டும் என்று சொல்ல அய்யோ இங்கையா ராஜா சார் அடி பின்னிடுவாருன்னு சொல்ல உடனே பாலு சார் ராஜாவை பார்த்து நீ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்திடுன்னு சொல்ல". அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா.
வழக்கமாக பாலு சார் ராஜாவை புகழ்ந்து சொல்லிட்டு போக வழக்கமாக ராஜா சார் அதெல்லாம் இல்லன்னு சொல்ல "இல்ல அதெல்லாம் உண்மை தான்னு மேடைக்கு பின்னாடி இருந்து பாலு சார் குரல் கொடுக்க". நீ இங்க வா முதல்லன்னு தன் அருகில் நிற்க வைத்து 24 மணிநேரமும் இசையாகவே வாழ்ந்த உலகத்தில் இசை மேதைகளில் பெயர்களை எல்லாம் சொல்லி இவர்களின் முன்னால் நான் எல்லாம் தூசுன்னு ராஜா சொல்ல. "அந்த மேதைகளின் வரிசையில் இந்த தூசுக்கு தான் உட்காரும் தகுதியிருக்கிறதுன்னு ஒரே போடக போட்டார் பாலு சார்."
ஜெயராம் அவர்கள் கமல், ரஜினி, ஜோசுதாஸ் போல மிமிக்கிரி செய்து காண்பித்து மக்களை கலகலப்பாக்கி கொண்டுயிருந்தார்.
மனோவும், சித்ரா அவர்களும் மதுரை மரிக்கொழுந்து வாசம்ன்னு பாடல் பாட அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர வைத்தனர். ஓ பிரியா பிரியா என்ற பாடலை கேட்கும் போது இன்றைய இசை அமைப்பாளர்கள் மனோவின் குரலை தவரவிட்டுவிட்டார்கள் என்ற ஒரு ஏக்கம் வர வழைத்தது.
எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் இந்த மேடையிலும் ரசிகர்ளின் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார்.
சங்கீத ஜாதி முல்லை பாடல் பாடும் போது எப்படிப்பா இந்த ஆளு இவ்வளவு வருஷம் கழிச்சும் அதே மாதிரி, ஏற்ற இறக்கத்துடன் பாடுறாருன்னு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார் பாலு சார்.
பவதாரணி, ஸ்ரேயா கோஷல், திப்பு, மஞ்சரி இவர்கள் எல்லாம் இன்னும் பயிற்சி தேவை என்று சொல்ல வைத்தார்கள். நடுவில் நடுவில் இசையோடு பாடாமல் பாடல் வரிகளை மறந்து மறந்து முழித்தார்கள். அதிலும் திப்பு செய்த தப்பை ராஜா மீண்டும் திருத்தி எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதே இடத்தில் இருந்து மீண்டும் அவரை பாட வைத்தார்.
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ என்ற பாடலை பாடும் போது தந்தைக்கு மகன் தப்பாம பிறந்திருக்கான்யான்னு சொல்ல வைத்தார் விஜய் ஜேசுதாஸ்.
ராசாத்தி உன்னை காணதா நெஞ்சுன்னு பாடலை ஜெயசந்திரன் இல்லாத குறையை மது பாலகிருஷ்ணன் அழகாக நிறைவேற்றினார்.
அம்மாக்கள் பாட நிறைய தாலாட்டு போட்டு வச்சுட்டாரு ராஜா, அப்பாக்கள் பாட ஒரு சில தாலாட்டு தான் போட்டுயிருக்காரு அதுல ஒன்னு தான் தெண்பாண்டி சீமையிலே அந்த பாடலை ராஜா எந்த வித வாத்திய ஒலியும் இல்லமால் மிக அற்புதமாக பாடினார். அவரே விரும்பி பாடினாரா இல்ல குளிரில் நடுங்கும் தன் ரசிகர்களை தாலாட்ட நினைத்து பாடினாரோ என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
இசைக்குழவினர் அனைவரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். ஒரு சில இடங்களில் தவறு நடந்தது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் மேடையில் இசை அமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதிலும் தவறு நடந்த இடத்தில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து வாசிக்க சொல்லும் போது எந்தவித பிசக்கும் இல்லாமல் மிக சரியாக வாசித்தார்கள். புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)
இவரு தான் அருள்மொழி
நிகழ்ச்சி முடியும் நிலையில் பெரும் பாலான மக்கள் அரங்கத்தில் இருந்தனர். ஜெயராம் ஒன்னு சொன்னாரு நானும் இதே ஷார்ஜா அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கேன் 10 மணி மேல அந்த கடைசியில யாரும் இருக்க மாட்டாங்க சார். இப்போ மணி 11 ஆகுது இன்னும் இவ்வளவு பேரு இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் நீங்க தான் சார். உண்மையிலும் உண்மை அது இளையராஜா என்ற ஒரு பெயருக்கு உள்ள சக்தியை நிறுப்பித்து கண்பித்தது கூட்டம்.
நிகழ்ச்சியல் இடம் பெற்ற பாடல்கள்
இது சங்கீதா திரு நாளே - பவதாரணி - இதில் பாடல் வரிகள் மாற்றி பாடினார்கள்
இளைய நிலா பொழிகிறதே - பாலு சார்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா
மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி
காற்றில் எந்தன் கீதம் - ஸ்ரேயா கோஷல் (ஜானகி அம்மா குரலில் கேட்ட பாடல் இந்த அம்மணி எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார்)
பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனாசர்கம்
சென்பகமே சென்பகமே - மனோ
நான் தேடும் செவந்தி பூவிது - ராஜா, மஞ்சரி
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாலு சார் - சித்ரா
மாசி மாசம் ஆளான பொண்ணு - விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், மஞ்சரி
இளங் காத்து வீசுதே - திப்பு, ஸ்ரேயா கோஷ்ல்
நின்னு கோரி வரனும் - சித்ரா
சொர்கமே என்றாலும் - ராஜா, சதனாசர்கம் - இதில் வரிகள் மாற்றி பாடினார்கள் அட்டகாசமாக இருந்துச்சி
அந்தி மழை பொழிகிறது - பாலு சார், சித்ரா
என்ன சொல்லி பாடுவதோ - சதனாசர்கம் - செந்தில் (இசை குழுவில் ஒருவர்)
மதுர மரிக்கொழுந்து வாசம் - மனோ - சித்ரா
மன்றம் வந்த தென்றலுக்கு - பாலு சார் - ஸ்ரேயா கோஷ்ல்
அடி ஆத்தாடி - ராஜா - சித்ரா
சுந்தரி கண்ணால் ஒரு சோதி - பாலு சார், சித்ரா (இசை குழுவினார் அட்டகாசமாக வாசித்த பாடல் இது)
மாங்குயிலே பூங்குயிலே - பாலு சார், சித்ரா
ஆகாய வெண்ணிலாவே - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி
ஒ பிரியா பிரியா - மனோ, சித்ரா
அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பாலு சார்
தென்றல் வந்து தீண்டும் போது - ராஜா, சித்ரா
சங்கீத ஜாதி முல்லை - பாலு சார்
அறியாத வயசு - ராஜா
ஒ இந்த காதல் நெஞ்சசை சுடுக்கிறதே - யுவன்
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - ராஜா, கார்த்திக், யுவன் - வரிகள் மாற்றி பாடிய பாடல்
தெண்பாண்டி சீமையிலே - ராஜா
எந்து பரஞ்சாலும் நீ எந்தன் - சித்ரா - மலையாளம்
ஒரு சிரிகண்டால் மொழிகண்டால் அது மதி - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி - மலையாளம்
ராக்கம்மா கையை தட்டு - பாலு சார் - இந்த பாடல் ஏன்தான் மேடையில் பாடினார்களோன்னு இருந்துச்சி ஒரே அருதல் பாலு சார் குரல்
சில பாடல்கள் மறந்து போயிடுச்சிங்க மக்களே
எல்லாம் முடிஞ்சி ஒரு பெரிய நன்றியை சொல்லிட்டு கிளம்பும் போது நேரம் 12.30. நல்ல குளிர், மனசு நிறைஞ்சி இருந்தது, ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறி விட்ட ஒரு திருப்தி.
மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவுகள்
பினாத்தல்கள் - எப்பவும் நீ ராஜா
குசும்பன் - அமீரகத்தில் இளையராஜா
47 comments:
விலாவாரியா அலசி நிகழ்ச்சியை பார்த்த மாதிரியே இருக்கு கோபி....
:)
பாதி தான் படிக்க முடிஞ்சது! தாவு தீந்துடும் போல! அப்பால வாரேன்!!
ennakum prog nera paartha effect gopi :)
ரொம்ப நல்லா எழுதி இருக்க தம்பி!!!
நல்லா பதிவு போட்டிருக்கீங்க. மேடைல உக்காந்திருக்கோமா...பதிவு படிக்கிறோமான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. :)
பாலுவுக்குத் தேசிய விருது வாங்கிக் குடுத்த அந்த பாட்டு எது? அதச் சொல்லலையே?
nalla enjoy pannirukeenga pola.. poramaya irukke enakku...
ஷார்ஜாவுக்கு உன்னோட வந்து உக்காந்து ராஜாக் கச்சேரிக் கேட்ட எபெக்ட்டைப் பதிவுல்ல கொடுத்துட்டய்யா சூப்பர்
கோபி,
அட்டகாசமான வர்ணனை நிகழ்ச்சியை. நேரில் பார்த்த முழு உணர்வு .. நன்றி :)
P.S: ஏற்கனவே சென்னையில் நடந்த நிகழ்ச்சி குறித்து நான் எழுதிய பதிவு .. நிறைய விஷயங்கள் ஒத்துப்போவதால் :)
இளையராஜாவின் மெலோடி ஸாங்க்ஸ்
80ஸ் 90ஸ் பாடல்களப் பாடிக் கலக்கியிருக்காங்க.
இன்னைக்குக் கூட ஜானி படத்தில் வரும்
"காற்றில் எந்தன் கீதம்....
பாட்டைக் கேட்டா எவ்வளவு
இனிமை....
You had a Golden evening.
கோபி! ரொம்ப அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. கிட்டத்தட்ட நேர்முக வர்ணனை மாதிரி இருந்தது.
நன்றி
அடடா! மிஸ் பண்ணிட்டேன். உங்களை சந்திக்க மிஸ் பண்ணிட்டேன்!!:(
Nice Coverage!! :-)
மனிதர்கள் பார்க்கும் பார்வை தான் எப்படி ஒரு விசயத்தை வித்தியாசப்படுகிறது.
குசும்பன் பதிவு..பசுபதி விருமாணடி படத்தில் பேசுவது போலவும்..
உங்க பதிவு...கமல் பேசுவது போலவும்..இருந்தது..
இளையராஜா ஒரு தலைமுறை தாண்டியும்...கவருகிறார்..இன்னும் கவருவார்..இன்னும் 25 வருடங்கள் கழித்தும்..நான்.." அந்தி மழை" பாடல்கள் கேட்டுக்கொண்டுத் தான் இருக்கப்போகிறோம்...
இசைராசா...ராசா தான்...
தல
நீண்ட நாளைக்குப் பின்னர் ரொம்பவே அனுபவிச்சு வாசிச்ச பதிவு, ஒவ்வொரு வாக்கியத்தை வாசிக்கும் போது மனக்கண்ணில் இளையராஜாவின் இசைமேடை தான் கண்ணுக்குள். நீங்கள் எவ்வளவு தூரம் ராஜாவின் கச்சேரியை அனுபவிச்சிருக்கீங்க என்பதை அழகாகத் தந்திருக்கீங்க. மிக்க நன்றி
இரண்டு முறை ஸ்டார் குத்தியிருக்கேன்
;-)
ராகவன் கேட்ட கேள்வியை இப்போ நானும் கேட்கிறேன்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கோபிநாத். விரிவா எல்லாத்தைப் பத்தியும்!
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க தல..கொடுத்து வச்சவரு நீங்க :)
Pramaadham!! Udanae eludhi engalaiyum unga anubathula kalandhamaikku romba nandri! Tamilla blog eludhuradhukku advice panna mudinha pannunga.
நிகழ்ச்சிய பாத்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு கோபி உங்க பதிவ படிக்கம்போது.. எங்க மனசயும் நிறப்பிட்டீங்க....
எனக்கு எப்பொ இந்த அதிர்ஷ்ட்டம் கிடைக்குமோ?
ராஜா சென்னை-ல பண்ண கச்சேரிய டிவி-ல பாத்துர்க்கேன்... பார்த்திபன் அண்ட் மஹதி தொகுத்து வழங்கினாங்க.. சூப்பரா பண்ணாங்க...
குஷ்பு, ஜெயராமும் அந்த அளவுக்கு நல்ல செஞ்சிருப்பாங்களானு தெரியல...
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டான பாடல்கள்..நேர்ல கேக்க/பாக்க குடுத்து வச்சிர்க்கனும்... நல்ல enjoy பண்ணியிருப்பீங்கனு பதிவுலயே தெரியுது.. ரொம்ப சந்தோஷம் கோபி.. அடிக்கடி ஷார்ஜா-ல இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்க வாழ்த்துக்கள் !!
ரொம்ப நல்ல அனுபவிச்சி எழுதியிருக்கீங்க கோபி... ரொம்ப நாள் கழிச்சி ஒரு பெரிய நல்ல பதிவு :)
ஷ்ரேயா கோஷல் எவளோ அழகு.. அத சொல்லலியே தல ?
விலாவரியா, ரொம்ப நல்லா படம் பிடித்து பதிவில் பதிச்சிருக்கீங்க.
வாழ்த்துக்கள்!
aaga naan engu raasavai paarkala...gopi ennum rasigan thaan en kannil padukiraan..yen nu puriyala......ariyathu manasu....
ஜெயா டீவியில் இசைஞானியின் அன்றும் இன்றும் என்றும் நிகழ்ச்சி பார்த்தபோது ஏற்பட்ட அனுபவம் உங்கள் பதிவை படிக்கும் பொழுது ஏற்பட்டது. இசைஞானி என்றைக்கும் இசைஞானிதான். சில மணி நேரத்திற்க்கு முன்னர் அதே ஜெயாடீவியில் கமல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் இசைஞானியின் குணா படத்தின் "பார்த்தவிழி " பாடல் பாடினார்கள். என்ன ஒரு இசைக்கோர்வை.
இசைஞானி தமிழர்களுக்கு கிடைத்த வைரம்.
எந்த நிகழ்ச்சி எந்த டீவியில் எப்போ வரும்?
குடுத்து வைச்சவங்க நீங்கெல்லாம். பாலு, சித்ரா, ஸ்ரயா பாடறத நேர்ல கேட்டிருக்கீங்க. பாட்டு லிஸ்ட் எல்லாம் பாத்தேன்.நல்ல பாட்டுக்கள்
//மேடைல உக்காந்திருக்கோமா...பதிவு படிக்கிறோமான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. :)
//
Repeatuuuu :)))
@ நாகை சிவா
\\விலாவாரியா அலசி நிகழ்ச்சியை பார்த்த மாதிரியே இருக்கு கோபி....\\ - நன்றி சிவா
@ குட்டிபிசாசு
\\அப்பால வாரேன்!!\\ - கண்டிப்பா வா ;)
@ துர்கா
\\ennakum prog nera paartha effect gopi :) - நன்றி துர்கா ;)
@ குசும்பன்
\\ரொம்ப நல்லா எழுதி இருக்க தம்பி!!!\\ - நன்றிண்ணே ;)
@ டெல்பின்
\\beautiful review Gopi.\\ நன்றிம்மா ;)
@ முத்துலெட்சுமி
\\nalla enjoy pannirukeenga pola.. poramaya irukke enakku...\\
;-)) செம ஜாலி...அதான் கலைஞர் டிவியில் போட போறாங்க அப்ப பாருங்க ;-)
@ தேவ்
\\ஷார்ஜாவுக்கு உன்னோட வந்து உக்காந்து ராஜாக் கச்சேரிக் கேட்ட எபெக்ட்டைப் பதிவுல்ல கொடுத்துட்டய்யா சூப்பர்\\ - நன்றிண்ணே ;-)
@ விக்கி
\\P.S: ஏற்கனவே சென்னையில் நடந்த நிகழ்ச்சி குறித்து நான் எழுதிய பதிவு .. நிறைய விஷயங்கள் ஒத்துப்போவதால் :)\\
வருகைக்கு நன்றி விக்கி...கண்டிப்பாக பார்க்கிறேன்.
@ ராஜ்
\\இன்னைக்குக் கூட ஜானி படத்தில் வரும்
"காற்றில் எந்தன் கீதம்....
பாட்டைக் கேட்டா எவ்வளவு
இனிமை....
You had a Golden evening.\\
சூப்பர் பாட்டு ராஜ் அது...நன்றி ;)
@ வித்யா கலைவாணி
\கோபி! ரொம்ப அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. கிட்டத்தட்ட நேர்முக வர்ணனை மாதிரி இருந்தது.
நன்றி\\
உங்களுக்கும் என் நன்றிகள் ;-)
@ லொடுக்கு
\அடடா! மிஸ் பண்ணிட்டேன். உங்களை சந்திக்க மிஸ் பண்ணிட்டேன்!!:(\\ - சேம் பிளட் தல ;-(
@ சி.வி.ஆர்
\\ Nice Coverage!! :-)\\ - நன்றி சி.வி.ஆர் ;)
@ TBCD
\\மனிதர்கள் பார்க்கும் பார்வை தான் எப்படி ஒரு விசயத்தை வித்தியாசப்படுகிறது.
குசும்பன் பதிவு..பசுபதி விருமாணடி படத்தில் பேசுவது போலவும்..
உங்க பதிவு...கமல் பேசுவது போலவும்..இருந்தது..\\
ஆகா....ஆகா..நன்றி ;-)
\\இளையராஜா ஒரு தலைமுறை தாண்டியும்...கவருகிறார்..இன்னும் கவருவார்..இன்னும் 25 வருடங்கள் கழித்தும்..நான்.." அந்தி மழை" பாடல்கள் கேட்டுக்கொண்டுத் தான் இருக்கப்போகிறோம்...
இசைராசா...ராசா தான்...\\
ஒன்னு சொன்னாலும் நருக்குனு சொன்னிங்க....நம்ம ராசா எப்போதும் ராசா தான் ;-)))
@ பினாத்தல் சுரேஷ்
\\ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கோபிநாத். விரிவா எல்லாத்தைப் பத்தியும்!\\ - நன்றி தல ;)
@ கப்பி பய
\\ ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க தல..கொடுத்து வச்சவரு நீங்க :)\\ - நன்றி கப்பி...அடுத்த வருஷம் அமெரிக்க தான் கவலை வேண்டாம் ;-)
@ அரவிந்
\\Pramaadham!! Udanae eludhi engalaiyum unga anubathula kalandhamaikku romba nandri!\\
உங்களுக்கும் என்னோட நன்றிகள் ;-)
\\Tamilla blog eludhuradhukku advice panna mudinha pannunga.\\ - கண்டிப்பாக ;-)
@ அருண்
\\நிகழ்ச்சிய பாத்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு கோபி உங்க பதிவ படிக்கம்போது.. எங்க மனசயும் நிறப்பிட்டீங்க..\\
மிக்க நன்றி அருண் ;-)
\\குஷ்பு, ஜெயராமும் அந்த அளவுக்கு நல்ல செஞ்சிருப்பாங்களானு தெரியல...\\
பார்த்திபனை கம்பேர் பண்ணும் போது இவுங்க சொதப்பிட்டாங்கன்னு தான் சொல்வேன்.
\\ஷ்ரேயா கோஷல் எவளோ அழகு.. அத சொல்லலியே தல ?\\
ரொம்ப தூரத்துல இருந்தாங்க தல அதான் மறந்துட்டேன் ;-)))
@ ஜூவா
\\விலாவரியா, ரொம்ப நல்லா படம் பிடித்து பதிவில் பதிச்சிருக்கீங்க.
வாழ்த்துக்கள்!\\ - நன்றி ஜீவா ;-)
@ தேவ்
\\aaga naan engu raasavai paarkala...gopi ennum rasigan thaan en kannil padukiraan..yen nu puriyala......ariyathu manasu....\\ -
தெய்வமே உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி வருகைக்கும் நன்றி ;-))
@ வந்தியத்தேவன்
\\ஜெயா டீவியில் இசைஞானியின் அன்றும் இன்றும் என்றும் நிகழ்ச்சி பார்த்தபோது ஏற்பட்ட அனுபவம் உங்கள் பதிவை படிக்கும் பொழுது ஏற்பட்டது. இசைஞானி என்றைக்கும் இசைஞானிதான். சில மணி நேரத்திற்க்கு முன்னர் அதே ஜெயாடீவியில் கமல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் இசைஞானியின் குணா படத்தின் "பார்த்தவிழி " பாடல் பாடினார்கள். என்ன ஒரு இசைக்கோர்வை. \\
அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்....நன்றி ;-)
\\இசைஞானி தமிழர்களுக்கு கிடைத்த வைரம்.\\
உண்மை உண்மையிலும் உண்மை ;-))
\\எந்த நிகழ்ச்சி எந்த டீவியில் எப்போ வரும்?\\
இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில வரும். தேதி எல்லாம் எப்போன்னு தெரியல ;-)
@ சின்ன அம்மணி
\\குடுத்து வைச்சவங்க நீங்கெல்லாம். பாலு, சித்ரா, ஸ்ரயா பாடறத நேர்ல கேட்டிருக்கீங்க. பாட்டு லிஸ்ட் எல்லாம் பாத்தேன்.நல்ல பாட்டுக்கள்\\
நன்றி அக்கா ;-) சில பாடல்களின் வரிகளை மாற்றி இந்த சூழ்நிலைக்கு ஏற்றால் போல் பாடி அசத்திட்டாங்க ;-)
@ அரை பிளேடு
\\//மேடைல உக்காந்திருக்கோமா...பதிவு படிக்கிறோமான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. :)
//
Repeatuuuu :)))\\
ரீப்பிட்டேய்க்கு நன்றி தல ;-)
@ ராகவன்
\\நல்லா பதிவு போட்டிருக்கீங்க. மேடைல உக்காந்திருக்கோமா...பதிவு படிக்கிறோமான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. :)\\ - மிக்க நன்றி ராகவன் ;-)
\\பாலுவுக்குத் தேசிய விருது வாங்கிக் குடுத்த அந்த பாட்டு எது? அதச் சொல்லலையே?\\
அந்த படம் தமிழில் சலங்கை ஒலி...ஆனால் பாலு சாருக்கு தேசிய விருது கிடைத்து தெலுங்கில் (sagara sangamam) - வேதம் அனுதினமும் நாதம்ன்னு தொடங்கும் பாடல் (அப்படிதான் பாலு சார் சொன்னாறு)
பாடல் தான் சந்தோகமாக உள்ளது...
@ கானா பிரபா
\\ தல
நீண்ட நாளைக்குப் பின்னர் ரொம்பவே அனுபவிச்சு வாசிச்ச பதிவு, ஒவ்வொரு வாக்கியத்தை வாசிக்கும் போது மனக்கண்ணில் இளையராஜாவின் இசைமேடை தான் கண்ணுக்குள். நீங்கள் எவ்வளவு தூரம் ராஜாவின் கச்சேரியை அனுபவிச்சிருக்கீங்க என்பதை அழகாகத் தந்திருக்கீங்க. மிக்க நன்றி\\
உங்களுக்கும் என்னோட நன்றிகள் தல ;-))
\\இரண்டு முறை ஸ்டார் குத்தியிருக்கேன் ;-)\\
ஓ..இதெல்லாம் வேற நடக்குதா! ! - நன்றி ;)
\\ராகவன் கேட்ட கேள்வியை இப்போ நானும் கேட்கிறேன்.\\
பதில் போட்டுட்டேன் தல ;)
கோபி சார்,
அருமையான வர்ணிப்பு. நேரில் பார்த்த திருப்தி.
///புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)//
உங்களூக்கு தெரீயுமா? அருன்மொழி இயர்பெயர் நெப்போலியன். கோவையில் மேடை நிகழ்ச்சியில் கலக்கிட்டு இருந்தவர். அப்போது தாசண்ணா குரலிலூம் பாடூவதில் வல்லவர்.
அருன் குமார் சார்,
//ஷ்ரேயா கோஷல் எவளோ அழகு.. அத சொல்லலியே தல ?//
ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க. குரலும் ரொம்ப அழகுதான் ஹி ஹி ஹி..
கானா பிரபா சார்,
உங்கள் பதிவு போட்டச்சுங்களா? அதான் மெல்போர்ன், சிட்னி நிகழ்ச்சி பதிவுகள் போட்டாச்சுன்ன சுட்டி அனுபுங்க சார்.
வாவ்.. அசத்தல் பதிவு கோபி, எனக்கு ரொம்பவே பிடிச்ச தென்பாண்டி சீமையிலே பாட்டை இளையராஜா பாடினதே நேரிலே பார்க்கனுமின்னு ஆசை, அது எப்போ நிறைவேறுமின்னு தான் தெரியலை...?
கோபி, கேட்டு ரசிச்ச நிகழ்ச்சிய ரசிச்சு வாசிக்கிற மாதிரி இவ்வளவு விரிவா, அழகா சொல்லியிருக்க மாப்பு!!!
பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் நம்ம பிளே லிஸ்ட்ல இருக்கிறதுதான்…
நல்ல பதிவு. நிகழ்ச்சியை ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காண்பிப்பார்கள் என்று நம்புகிறேன்...
@ கோவை ரவி
\\கோபி சார்,
அருமையான வர்ணிப்பு. நேரில் பார்த்த திருப்தி.\\
நன்றி ரவி ;)
///புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)//
உங்களூக்கு தெரீயுமா? அருன்மொழி இயர்பெயர் நெப்போலியன். கோவையில் மேடை நிகழ்ச்சியில் கலக்கிட்டு இருந்தவர். அப்போது தாசண்ணா குரலிலூம் பாடூவதில் வல்லவர்.\\
ஆகா..பல விஷயங்கள் தெரிஞ்சி வச்சிருக்கிங்க..அவர் பார்த்திபன் படங்களில் பாடியிருக்கிறார்..;) நன்றி ;)
@ ராம்
\\வாவ்.. அசத்தல் பதிவு கோபி, எனக்கு ரொம்பவே பிடிச்ச தென்பாண்டி சீமையிலே பாட்டை இளையராஜா பாடினதே நேரிலே பார்க்கனுமின்னு ஆசை, அது எப்போ நிறைவேறுமின்னு தான் தெரியலை...?\\
எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்....உன் ஆசை சீக்கிரம் நிறைவேறு மாப்பி ;))
@ அருட்பெருங்கோ
\\கோபி, கேட்டு ரசிச்ச நிகழ்ச்சிய ரசிச்சு வாசிக்கிற மாதிரி இவ்வளவு விரிவா, அழகா சொல்லியிருக்க மாப்பு!!!\\
நன்றி மாப்பி ;))
\\பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் நம்ம பிளே லிஸ்ட்ல இருக்கிறதுதான்…\\
ஆமாம்..நானும் கேட்டுயிருக்கிறேன்...வருகைக்கு நன்றி அருள் ;)
@ சீனு
\\நல்ல பதிவு. நிகழ்ச்சியை ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காண்பிப்பார்கள் என்று நம்புகிறேன்...\\
கலைஞர் டிவியில போடுறாங்க...ஜனவரி 1 போடுறாங்கன்னு நினைக்குறேன் ;) வருகைக்கு நன்றி சீனு ;)
@ வேதா
\\நிகழ்ச்சியை நேரில பார்த்த மாதிரி ஒரு உணர்வு அவ்ளோ அழகா தொகுத்திருக்கீங்க :) \\
நன்றி வேதா ;)
\\இளையராஜா, எஸ்.பி.பி ரெண்டு பேரையும் நேர்ல பார்த்துட்டீங்க , எப்டியாவது ஒரு முறையாவது அவங்க ரெண்டு பேரையும் நேர்ல பார்க்கணும்னு என்னுடைய நீண்ட நாள் ஆசை:)\\
உங்களுக்குமா!!!...சீக்கிரம் உங்கள் ஆசை நிறைவேறும் ;)
dear mr.gopi,
thanks a lot for vivid description of ilaiyaraja sir's concert. it gives a vicarious feeling. i feel as if i am in raja sir's concert.
thanks again
thanks a lot gopi. it is a vivid description of raja sir's concert. very nice write up which compensates for my absence in the concert. it gives a live feeling. thanks again
got a feeling as though I was physically present in the prog..an elaborate narration!!!
காற்றில் எந்தன் கீதம் பாடலை பாடியது ஜானகி அம்மாவா இல்ல ஜென்சியா?
ஜானி -
இயக்குனர்: மகேந்திரன்
தயாரிப்பாளர் :வி. கோபிநாத்
கே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ்
நடிப்பு :ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி
இசையமைப்பு: இளையராஜா
வெளியீடு: ஆகஸ்ட் 15, 1980
நீளம்: 3986 மீட்டர்
நாடு: இந்தியா
மொழி: தமிழ்
மற்றும், "காற்றில் எந்தன் கீதம்" பாடலை பாடியது திருமதி எஸ்.ஜானகி அவர்கள் :)
இந்த விவரம் போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா!! :))
:) "நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சு கோபி"-ன்னு சொல்லலாம்-ன்னு கமெண்ட்ஸ்-ஸ கிளிக்கினேன். பாத்தா, எல்லோருமே அதையேதான் சொல்லியிருக்காங்க. :) அபாரமான வர்ணனை!!
சரவணன்.
neengal rasitha 10 padangal komjam blog podungalean ..netru oru kanavu athil neengal rasitha 10 padam ovandrum en kanavil vanthathu ....paarpom
அருமை.. அருமை. ராஜாவின் காலத்தில், அவரது இசையைச் சுவாசித்து வாழ்கிறோம் என்பதில் எவ்வளவு பெருமை தெரியுமா... வாழ்க நீ எம்மான்!
நல்ல வர்ணனைகள்...
இந்த நிகழ்ச்சி விரைவில் கலைஞர் டீ.வியில் வரப்போவதாக விளம்பரம் வருகிறது. ஓரிரு நாளில் விபரம் வரலாம்...
நேர்த்தியான வர்ணனை கோபி..ராஜாவின் இசை என்றால் எனக்கு உயிர்!!உங்க பதிவை படித்ததும்..அவரின் இசையை உடனே கேட்க தோணுது...வாழ்த்துக்கள்!!
"அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா"
குஷ்பூ ஆடி அரங்கம் ஒண்ணும் ஆகலையே! :-))
//எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் //
சரியா சொன்னீங்க! எப்போதும் சிரித்த முகம்.
ஆமா! எனக்கு ஒரு சந்தேகம். இப்படி பாட்டை எல்லாம் நோட் பண்ணி இருக்கீங்களே.. இதனால பாடலை ரசிக்க தடையாக இல்லையா.. கவனம் சிதறுமே. நம்ம ஆளுங்க படம் பார்க்கும் போது விமர்சனம் எழுத யோசித்துட்டு இருக்கிற மாதிரி ;-)
அப்புறம் அப்புறம் என்று ரொம்ப தாமதமா வந்துட்டேன் :-)
Post a Comment