Friday, August 31, 2007
துணை
பனி பொழியும் அந்த காலை வேலையில் கையில் ஆவிபரக்கும் தேனீருடன் இளையராஜாவின் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை தன்னை மறந்து கேட்டு கொண்டுயிருந்த புஸ்பா ரயில் வரும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தாள்.
தன் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்ட ரயிலை பார்த்ததும் "வந்துட்டியா...கொஞ்சம் நேரம் பாட்டு கேட்கவிடாதேன்னு" செல்லமாக கோவித்துக் கொண்டால்.
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டிருப்பாள்...எங்க பாடினாலும் அப்படியே நின்னு கேட்டுக் கொண்டுயிருப்பாள். சொன்னால் புரியாத மகிழ்ச்சி அது. அவனுக்காக எத்தனை இரவுகளில் பாடியிருப்பாள். இதோ இப்போது கூட இரண்டு நாள் முன்பு அவன் பிறந்த நாளுக்கு போனில் பாடினாள். புஸ்பாவுக்கு 51 வயதுன்னு பார்ப்பவர்கள் யாரும் சொன்னது இல்லை. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை அந்த புன்னகை தான் அவளுக்கு பலமும் பலவீனமும் கூட.
கோடம்பாக்கத்தில் இருந்து சென்ட்ரலுக்கு தினம் தோறும் பயணம். கிட்ட தட்ட 22 வருஷம் இதே ரயில் பயணம் கொஞ்சம் கூட சலிக்கவில்லை அவளுக்கு. தினமும் புதிது புதுதாக பிறப்பவளுக்கு எப்படி சலிக்கும் இந்த பயணம். ஒரு ரயில் விபத்தில் காதல் கணவனை பலிகொடுத்துவிட்டு கையில் 5 வயது குழந்ததையுடன் தனியாக நின்று வாழ்க்கையை ஜெய்த்தவள். மகன் விஜயனுக்கு இவள்தான் முதல் தோழி. விஜயன் அம்மா என்று சொன்னதை விட புஸ்பா என்று பெயர் சொல்லி அழைத்தது தான் அதிகம். அந்த அளவுக்கு அவன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தானோ அப்படி வாழ வழிவிட்டவள்.
அவன் காதலித்த பெண்கூடவே திருமணம் நடத்திவைத்தால். ரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளி இரவில் "அம்மா எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கு போகிறேன்னு" சொன்னான். ஏர்போர்ட்டில் கூட தன் கண்ணீர் அவன் மனதுக்கு சங்கடத்தை கொடுத்துவிட கூடாது என்பதற்காக கண்ணீருக்கு கூட கட்டளை இட்டு காக்க வைத்தவள். அதற்கு அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில்தான் செழியனை பார்த்தாள். ஏக்கமும் சோகம் கொண்ட முகத்துடன் இவளை பார்த்த படி உட்காந்துயிருந்தான்.
--------------------------------------------------------------------------------------------
கையில் இருந்த தேனீரை குடித்த படியே செல்போனில் FMஜ அழுத்தினான் செழியன்.
"பிள்ளை நிலா" பாடல் முடியும் தருணம் "ச்ச பாட்டு முடிய போகுது மிஸ் பண்டிட்டமே"ன்னு ஒரு சின்ன எரிச்சலுடன் ரயிலுக்காக காத்துயிருந்தான்.
நுங்கம்பாக்கத்தில் இருந்து பீச்டேஸ்சனுக்கு தினம்தோறும் அவனது பயணம். சரியாக பெண்கள் கம்பார்ட்மென்ட்டுக்கு அடுத்த கம்பார்ட்மென்ட்லில் வலதுபுற ஜன்னலுக்கு அடுத்த இருக்கை தான் அவனுக்கு பிடித்த இருக்கை, அதுவும் இந்த ரெண்டு வருடங்களாகத்தான்.
இரண்டு நாளைக்கு முன்பு தான் தன்னோட 27வது பிறந்ந நாளை கொண்டாடினான் இதே பாடலுடன். அவன் முகத்தில் எப்போதும் ஒரு டென்சன் இருக்கும். "கொஞ்சமாச்சும் சிரியேண்டான்னு" அவன் அம்மா அடிக்கடி சொல்லுவாள் "அட போம்மா"ன்னு பதில் வரும் சிரிக்காமலே.
தந்தையை இழந்து பின் அம்மாவுக்கு அதிகம் தொல்லை கொடுக்காமல் அம்மாவின் ஆசைகள்தான் தன்னோட ஆசைகள் என்ற முடிவுடன் வாழ்ந்து கொண்டுயிருந்தான். அம்மா என்ன படிக்க சொன்னாலோ அதையே படித்தான். ATM கார்ட்டு நிறைய சம்பளம். அம்மா ஆசை பட்டது போல முன்புறம் தோட்டம் வைத்த ஒரு வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு கட்டிலில் இருந்த அம்மாவின் கை தன்னை தொட்டவுடன் பதற்றத்துடன் எழுந்து
"என்னம்மா என்னம்மா பண்ணுது...
"ஒன்னும் இல்லைடா உனக்கு அதிகம் கஷ்டம் கொடுத்துட்டேண்டா உன்னை உன் இஷ்டம் போல வாழவிடல நான் எல்லாம் ஒரு அம்மாவாடா என்னை மன்னிச்சிடுடா"
"என்னமா லூசு மாதிரி பேசுற அப்படி எல்லாம் இல்லம்மா நான் நல்லா இருக்குறதுக்கு காரணமே நீ தானம்மா"
"இல்லடா நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா நீ எனக்கு அம்மா நான் உனக்கு பிள்ளை" என சொல்லிவிட்டு கடவுளிடம் மனுக் கொடுக்க சென்றுவிட்டால். அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில் தான் புஸ்பாவை பார்த்தான். தன் ஏக்கத்தை அரவணைக்கும் புன்னகையை அவள் முகத்தில் பார்த்தான்.
ஸ்டேசணுக்குள் வண்டி வந்தததும் முகத்தில் புன்னகையுடன் ஏறினான்.
புஸ்பா: ஏன்டா ஒரே சிரிப்பு
செழியன்: ஒன்னும் இல்லம்மா
புஸ்பா: டேய் திருட்டு பையலே நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் அந்த பெண்ணும் ஒரு வாரமா இதே கம்பார்ட்மென்ட்டுல வருது என்ன விஷயம்
செழியன்: ம்....அதுக்கு ஒரு சமையல்காரன் வேணுமாம்
புஸ்பா: ஒ...சார் தான் புல் குவாலிபைடு ஆச்சே அப்லை பண்றது
செழியன்: அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா....இன்னிக்கு மெடிக்கல் செக்கப்புக்கு போகனும் நான் பர்மிஷன் சொல்லிட்டேன் ரெடியா இருங்க
புஸ்பா: உன்னால் தானே உயிர் சுமந்தேனே..................
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அழகான கதை!!!
கதையை படிச்சிட்டு அப்படியே இந்த பாட்டையும் கேட்டுட்டு போங்க!!!
ரொம்ப அழகான பாட்டு!!
கதையை படிச்ச அப்புறம் எனக்கு இந்த பாட்டு தான் சட்டுனு தோனிச்சு!! :-)
http://www.youtube.com/watch?v=8IIpsbqdHb4
sorry link thara marandhutten!! :-)
நல்லக்கதை கோபி..
ஆனா எழுத்துப்பிழைகள் தான் கொஞ்சம் படிக்க கஷ்டமாஇருந்த்து.
வாங்க CVR
\\CVR said...
அழகான கதை!!!
கதையை படிச்சிட்டு அப்படியே இந்த பாட்டையும் கேட்டுட்டு போங்க!!!
ரொம்ப அழகான பாட்டு!!
கதையை படிச்ச அப்புறம் எனக்கு இந்த பாட்டு தான் சட்டுனு தோனிச்சு!! :-)\\
நன்றி சி.வி.ஆர் ;)))
வாங்க முத்துக்கா ;)
\\முத்துலெட்சுமி said...
நல்லக்கதை கோபி..\\
மிக்க நன்றிக்கா ;)
\\ஆனா எழுத்துப்பிழைகள் தான் கொஞ்சம் படிக்க கஷ்டமாஇருந்த்து.\\
;-(..... இனி கவனத்துடன் இருக்கிறேன்
வாங்க அம்மா ;)
\delphine said...
Gopi.
Nice story. Felt very happy to read it.\\
மிக்க மகிழ்ச்சி....நன்றி ;)
\\but where is the songgggggggggg?\\
இப்போ லிங்க் இருக்கு கேளுங்க ;)
அய்யோ நிறை எழுத்துப் பிழை ஒவ்வொன்னையும் 100 முறை இம்போசிஷன் எழுது
கதை அருமை.நெகிழ்வாக இருந்தது.
முத்துசொன்னது போல எழுத்துப் பிழையில் கதையின் தாக்கம் குறைகீறது சரி செய்யவும்[வல்லின/மெல்லின பிழைகள்]
கோபி தம்பி இரண்டு முறை படித்தேன் புரியவில்லை , நீ கரு சொன்ன பிறகு தான் புரிகிறது. நன்றாக இருக்கிறது.:)))
நல்லா யிருக்குய்யா வழக்கம் போல..:)
நல்லா இருக்குங்க கோபி!!
வாங்க கண்மணி அக்கா ;)
\\கண்மணி said...
அய்யோ நிறை எழுத்துப் பிழை ஒவ்வொன்னையும் 100 முறை இம்போசிஷன் எழுது
கதை அருமை.நெகிழ்வாக இருந்தது.
முத்துசொன்னது போல எழுத்துப் பிழையில் கதையின் தாக்கம் குறைகீறது சரி செய்யவும்[வல்லின/மெல்லின பிழைகள்]\\
எழுத்து பிழைக்கு வருந்துகிறேன்....உங்கள் கருத்து நன்றிக்கா ;)
வாங்க குசும்பண்ணே ;)
\\குசும்பன் said...
கோபி தம்பி இரண்டு முறை படித்தேன் புரியவில்லை , நீ கரு சொன்ன பிறகு தான் புரிகிறது. நன்றாக இருக்கிறது.:)))\\
ரொம்ப நன்றி அண்ணே ;)
மின்னல், காயத்ரி நன்றி ;)
ஏண்ணன் இப்படி!
போன மாசம் நான் ஒன்ன பாத்த வரைக்கும் நல்லா தானே இருந்த....
ஏதும் காத்து, கருப்பு அடிச்சிருச்சா?
எல்லாரும் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க.. நானும் அதையே வழிமொழிந்து விடுகிறேன்.
கதை சூப்பர்...
அருமை, பாராட்டுக்கள்!
திவ்யா.
கோபி,
கதை நல்லாயிருக்குப்பா....
Veku Arumai Gopinath.
Ippadiyellaam kooda nadakkumaa enRu santhoshamaaka irukkiRathu.
paattum ketkiREn.
romba romba Thanks pa.
வாங்க சிவா ;)
\\நாகை சிவா said...
ஏண்ணன் இப்படி!
போன மாசம் நான் ஒன்ன பாத்த வரைக்கும் நல்லா தானே இருந்த....
ஏதும் காத்து, கருப்பு அடிச்சிருச்சா?\\
அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.....
\\எல்லாரும் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க.. நானும் அதையே வழிமொழிந்து விடுகிறேன்.
கதை சூப்பர்...\\
நன்றி சிவா ;)
வாங்க திவ்யா....எவ்வளவு நாள் ஆச்சு??? எப்படி இருக்கிங்க?
\\Divya said...
அருமை, பாராட்டுக்கள்!
திவ்யா.\\
நன்றி திவ்யா ;)
வா மாப்பி ;)
\\இராம் said...
கோபி,
கதை நல்லாயிருக்குப்பா....\\
நன்றி மாப்பி ;)
வாங்க வல்லிம்மா ;)
\வல்லிசிம்ஹன் said...
Veku Arumai Gopinath.
Ippadiyellaam kooda nadakkumaa enRu santhoshamaaka irukkiRathu.\\
எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கு.....
\\paattum ketkiREn.
romba romba Thanks pa.\\
உங்களுக்கும் என் நன்றிகள் ;)
தம்பி கோபி கதை அருமை ஆனா இன்னும் படிக்கலை!! படிச்சுட்டு சொறேன் உண்மை நிலவரம், ஆனா எழுத்துபிழை என் கண்ணுக்கு தெரியவே தெரியாது!!!உம் மேல அம்புட்டு பாசம்!!!
என்னய்யா கதையெல்லாம் எழுதியிருக்க.. ஒரு வார்த்த சொல்லக்கூடாதா என்கிட்ட
நல்லாருக்கு கத
பாசத்துக்கு ஏங்குற ஜீவன்கள் எங்கே இருந்தாலும் அவங்களுக்கு துணைய ஆண்டவன் ஆன்லைன்ல கூட அனுப்பி வைப்பான்.. தேடிப்பாரு
சென்ஷி
கதை நல்லாயிருக்கு கோபி
Post a Comment