Wednesday, October 07, 2009

சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...


இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்னா அதைத்தான் gtalk வச்சிருக்கான் இந்தப் பாவிப்பய. இவனுக்கு பதிலா நான் பதிவு எழுத வந்திருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். இப்படி ஆணி ஆணின்னு ஆணிகளுக்கு நடுவில் வாழ்க்கையை அப்பப்போ கொஞ்சம் வாழ்ந்துக்கிட்டு இருக்குறவனை ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்காங்க தோழி சினேகிதி அவர்கள். (அது ஆரம்பிச்சி பதிவுலகலத்துல பாதிக்கு மேல போட்டுட்டாங்க) ஏற்கனவே தொடர் பதிவுகள், விருது பதிவுகள் வரிசையாக இருக்கு. இவனுக்கு விருது கொடுத்த அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி ! ;)

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டில், இவன் பதிவுலகத்தில் பதிவு எழுத வந்த கதையை சொல்லிப் பதிவு போட வேண்டும் - இதுதான் சினேகிதியின் விளையாட்டு. இவனோட சொந்தக்கதை சோகக்கதையாக இருந்தாலும் பதிவுலகத்தில் பதிவெழுத வந்த கதை கேட்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எண்ணியதால் என்னை இந்த பதிவு போட சொன்னான். (ம்ம் குட் குட் கொடுத்த காசுக்கு நல்லா கூவுற ராசா! வெளங்கிடுவ நீ ;)

இவன் தமிழில் எழுதப் பயன்படுத்தும் கலப்பை Tamil99. தமிழில் டைப் செய்யனும் என்றால் அதுக்கு தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன். இந்த ஈ கலப்பையை பிடிக்கத் தெரிஞ்சவுடன்தான் அட இதுக்கு டைப்பிங் எல்லாம் தெரிய வேண்டிய ஆவசியம் இல்லைன்னு தெரிஞ்சுச்சு இவனுக்கு. கலப்பையை ஓட்டக் கத்துக்கிட்ட உடன் தமிழில் ஒரு அறிமுகப்பதிவு போட்டுட்டான். அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை. இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு. இந்த கலப்பையை பிடிக்க கத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொல்றேன் அதுக்கு தானே என்னை அனுப்பியிருக்கான். ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

2005ம் வருஷம் ஒரு நாள் ராத்திரி வழக்கம் போல இவன் ஆணி பிடிங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இந்தப் பதிவை தொடங்கினான். எதுக்குத் தொடங்கினான்? ஏன் தொடங்கினான் என்ற கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் தனிமை. உள்ளூர்ல ஆணிகள் பிடுங்கி சலித்ததால் வெளிநாட்டு ஆணிகளை பிடுங்கலாமுன்னு மூட்டை கட்டிக்கொண்டு ஷார்ஜா வந்த சமயம். ஒரு மாதம் பகல், ஒரு மாதம் ராத்திரின்னு ஆணி பிடுங்கும் நேரம் கொடுத்தாங்க இவுங்க நிறுவனம். (இப்போது 2 வாரமாக மாத்திட்டாங்க!) பகல் பொழுதுகளில் ஆணி பிடுங்குவதில் நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு மக்கள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அதே ஆணியை ராத்திரியில பிடுங்க மிகவும் கஷ்டமாக இருக்கும். தனிமை அதிகமாக இருக்கும். தனிமையில் என்ன செய்வான்! பாவம்!! எம்புட்டு நேரம் தான் ஆணிகள் கூடவே பேச முடியும். அதனால இணையத்தில் சுத்தத் தொடங்கினான். அப்படி சுத்த இவன் எடுத்த டிக்கெட்டின் பெயர் இளையராஜா. அந்த டிக்கெட் மூலமாக இன்று வரை இவன் பயணம் போய்க் கொண்டே இருக்கிறது. அது வேற கதை. அந்த டிக்கெட்டுல இவனைக் கொண்டு போயி விட்ட இடம் CSR அவர்கள் எழுதிய As we Feel Raaja ஆங்கில வலைப்பக்கம். அந்த பக்கத்தை படித்த முடித்த பிறகு இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே! இது சூப்பர் டைம் பாஸ் போல இருக்கேன்னு நினைச்சிட்டான்.

நினைச்சிட்டான்ல! அப்புறம் என்ன நமக்கு சனி தான். உடனே இவனுக்கும் ஒரு இடம் வேணுமுங்கன்னு Bloggerல சொல்லி ஒரு இடத்தை பிடித்து வச்சிக்கிட்டான். சரி இடம் ரெடி என்ன எழுதுறது? கேள்விக்கு பதிலாக கேள்வியே எழுதி வச்சவன் இவன். என்னாத்த எழுதறதுன்னு யோசிச்சே கொஞ்ச நாள் காத்துவாங்கவிட்டுட்டான். சரி முதல்ல ஒரு முன்னுரை எழுதுவோமுன்னு எழுதி போட்டாச்சி. அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல. சிங்கத்தோட வாழ்க்கையில இப்படி சில அசிங்கங்கள் நடக்கத்தான் செய்யுமுன்னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்தப் பதிவும் போட்டான். ம்ஹூம்! ஒருத்தனும் வரலியே. இது உனக்குத்தேவையா!? ன்னு நான் அப்பவே கேட்டேன். கேட்டுக்கிட்டு வழக்கம் போல இணைத்தில் கிடைக்கும் பத்திரிக்கைகளை படிக்கப்போயிட்டான். அப்படி வழக்கமாக படிக்கிற பத்திரிக்கைதான் ஆனந்த விகடன்.

அதுல வர ஜீனியர் விகடனில் ஒரு பேட்டி! வேட்டையாடு விளையாடு படத்தை பத்தி பேட்டி கொடுத்திருந்தவர் நம்ம தோழி லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்! அந்தப் பேட்டியின் முடிவில் அவுங்க பதிவின் விபரம் இருந்துச்சு. அதுல blogspot.com அப்படின்னு இருந்துச்சி ஆகா! இதுலதானே நாமும் இடம் பிடிச்சிருக்கோம்ன்னு டக்குன்னு அவுங்க வலைப்பக்கம் போனான். ஒரே சந்தோஷம் மகிழ்ச்சி ஆச்சரியம்....!!!ஏன்னு கேட்டிங்கதானே..சொல்றேன் எங்கப் பார்த்தாலும் தமிழ்...தமிழ்....தமிழ்...அதான். இதுல என்னடாப் பெருசா இருக்குன்னு தோணும் உங்களுக்கு. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.

சந்தோஷத்துல ஒவ்வொரு பதிவாப் பார்த்து பார்த்து அப்படியே சென்னை வலைப்பக்கம் வந்துட்டான். தன்னோட பொறந்த ஏரியாப் பெயரை பார்த்தவுடன் ’ஆ’ன்னு வாயப்பொளந்து அங்க இருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பதிவுகளைப் பார்த்துட்டு ஆகா! தமிழில கூட எழுதலாம் போலன்னு நினைச்சவுடன் மனசுல சந்தோஷம் தாங்க முடியல பயலுக்கு. சரி யாருக்கிட்ட போயி கேட்குறது சுத்தி சுத்திப் பார்த்தான் இருந்தாரு நம்ம வலையுலகத்தின் அமைதிப்புயல் திரு. மா. சிவக்குமார்! அவருக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டான். அவருதான் இவனுக்கு கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த குரு. கீபோர்டுல தமிழ் எழுத்து எல்லாம் அடிக்க அல்லும் பகலுமாக உழைச்சி கத்துக்கிட்டான். அப்படி கத்துக்கிட்டப்பிறகு இவன் போட்ட முதல் பின்னூட்டம் வலையுலக வாரியார் திரு. ராகவன் என்கிற ஜிரா அவர்களுக்கு. அதுக்கு அப்புறம் தேன்கூடுல போயி நானும் ஒரு தேனீயாக சேர என்ன செய்யனும்ன்னு பார்த்து அதுக்கு அப்புறம் மீண்டும் தமிழ் ஒரு அறிமுகம் போட்டு சேர்த்தாச்சு. அப்புறம் கடைக்கு யாரும் பெருசா வரல. என்ன செய்யலாமுன்னு யோசிச்சா கடைக்கு வர முதல்ல ஆளை பிடிக்கனுமுன்னு வலையுலகில் ஜோசியத்தில் சொல்லியிருந்தாங்க. சரின்னு பின்னூட்டம் போட்டு ஆளை பிடிக்க ஆரம்பிச்சான். அப்படி கடைக்கு முதல் வியாபாரம் செய்தவங்க கதாசிரியர் தோழி திவ்யா அவர்கள்.

அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. மத்தபடி எல்லா பதிவர்களுக்கும் வரும் அதே அனுபவங்கள் தான் இவனுக்கும். இவனும் சைடுல பதிவுகள் போட்டுக்கிட்டே வந்தான். பதிவுலக கும்மியில பல திட்டுக்கள் கிடைச்சாலும் இவனுக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை ஏன் தெரியுமா?அந்தக் கும்மியில் ஒரு பெரிய குடும்பமே உருவாச்சு. யாரு பதிவு போட்டாலும் ஈவு ஈரக்கம் எல்லாம் பார்க்காமப் போயி கும்மி அடிச்சி "புள்ளைங்களா இதுங்கன்னு" பெயரும் எடுத்துச்சு அந்த குடும்பம். இப்போ எல்லாம் பெரிய பதிவர்கள் ஆகிட்டாங்க எல்லோரும் - (சைடுல இவனும் ஆகிட்டேன்னு எப்படி பீத்திக்கிறான் பாருங்க ! ) முதல் சந்திப்பு கிடேசன் பார்க்ல நடந்துச்சி (ம்ம்ம்... அது ஒரு பெரிய கதை) .அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போன் செஞ்சு நல்லாயிருக்கிங்களான்னு கூட கேட்க மறந்தாச்சு. ஆனா இந்தப் பதிவர்களுக்கு தினமும் போன் இல்லைன்னா இருக்கவே இருக்கு ஜிடாக்கு, மெயிலு இப்படி போயிக்கிட்டு இருந்த பதிவுல மொக்கை வாழ்க்கை, இப்போ நினைச்சா நேரில் மொக்கையோ மொக்கை போடும் அளவுக்கு வந்துடுச்சி.

பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது. அப்பபடி ஒரு அருமையான அன்பான சகபயணிகள் இவனோட பதிவர்கள். அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.

அம்புட்டுத்தான்பா....சினேகிதி வந்து மார்க் போடுங்க.நான் அழைக்கும் சக பயணிகள்


பார்வைகள் "கவிதா அக்கா"

கவிதை மழை பொழியும் "கவிநயா அக்கா"

யாவரும் நலம் விசாரிக்கும் "சுசி அக்கா"

மயில் "அக்கா விஜி"

வலையுலக "அண்ணன் ஆயில்யன்"

எங்க ஏரியா+என்னோட "செல்ல ஜீனியர் - ஆதவன்"

வலையுல "FORWARD MAIL" "அண்ணன் கார்த்திக்கேயன்"

ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)

62 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய் ?! :) (இருக்காதுன்னு நினைக்கிறேன் பயபுள்ள எப்ப போஸ்ட் போடும்ன்னு எல்லாரும் காத்துக்கிட்டில்ல இருக்கோம்) :)

ஆயில்யன் said...

ம்... ம்....ம்... ம்....ம்... ம்....

ஆயில்யன் said...

//இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.///


கருத்துக்களோடு 100% சம்மதித்துப்போகின்றேன் :))

ஆயில்யன் said...

//பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது.//


கோபி ஸ்பெஷல் அருமை பாஸ்! :)

சினேகிதி said...

kathai super :) ungada alter chumma anthamaathiri kathai eduthu vidirukaru :) ollunga pay panidunga avaruku paavam thane pilachupogadum.

kummyla iruken machi endu koopidu koopidu kummi adipegelo??indaikuthane therinju:)

கோபிநாத் said...

@ ஆயில்யன்

அண்ணாச்சி ரொம்ப நன்றி...பதிவு போடுங்க மறந்துடாதிங்க ;)

@ சினேகிதி

இன்னும் பல கதைகள் இருக்கு...கும்மி கதையே ஒரு தனி பதிவு வரும்.

\\ollunga pay panidunga avaruku paavam thane pilachupogadum.\\

அவரு பெரிய ஆளுங்க அவருக்கு காசு எல்லாம் கொடுக்க முடியாது. ;)

துளசி கோபால் said...

சரித்திர டீச்சருக்கேச் சரித்திரம் சொன்ன ஆளாய்யா நீர்???? !!!! :-))))))

சென்ஷி said...

என்ன தம்பி! சம்பளம் வாங்கிட்டியா.. பதிவு போட்டிருக்கே :)

சென்ஷி said...

//இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான்.//

பிடிச்ச ஹீரோயின் யாருன்னு கேட்டா புவனேஸ்வரின்னு சொல்லுவான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ இதுக்கெல்லாம் இளையராஜா தான் காரணமா.. ? :)

☀நான் ஆதவன்☀ said...

இளையராஜா மட்டும் என் கையில கிடைச்சாரு........

☀நான் ஆதவன்☀ said...

கதை சொல்றது யாரு தல?

//
நான் அழைக்கும் சக பயணிகள்//

இவண் அழைக்கும்... அப்படின்ல வரனும் :) எப்பூடி?

வருசத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் குற்றம் குற்றமேன்னு கிடக்கும் சங்கம்

Anonymous said...

//சென்ஷி said...

என்ன தம்பி! சம்பளம் வாங்கிட்டியா.. பதிவு போட்டிருக்கே :)
//

ரிப்பீட்டு.

கோபியையும் பதிவு போட வைத்த சினேகிதி வாழ்க :)

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு நீங்களே கூப்பிட்டுடீங்க. கூடிய சீக்கிரம் போட்டுறேன்

Anonymous said...

நிச்சயம் இது சரித்திரத்தில் இடம் பெறும் :)

தமிழ்ப்பறவை said...

இன்னைக்கு மழை வந்துடும் போல இருக்கே....?!
//பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம்//
சரியாச் சொன்னீங்க தலை...
இசை(ராஜா) தரும் இனிய உறவுகள் தொடர வாழ்த்துக்கள்....

சுசி said...

வொய் கோபி வொய்? பதிவு போடுங்கன்னு கொஞ்சம் ஓவராதான் தொல்லை குடுத்திட்டேனோ???? ஆனா விருதெல்லாம் கொடுத்தேனேப்பா... அப்டியுமா கொலைவெறி??? கோத்து விட்டுட்டியே கோபிநாத்...

சுசி said...

இப்போதான் ஒரு நண்பனுக்கு சொன்னேன் இப்டி திடீர்னுல்லாம் பேசாத. இந்த ஊர்காரங்க பாவம் பேய் மழை கொட்டுதுன்னு. மழைக்கு காரணம் ஒண்ணில்ல போல இருக்கே....

சுசி said...

ரெண்டு மூணு மாசமா பாத்து பாத்து எழுதினதாலயோ என்னமோ சூப்பரா எழுதி இருக்கீங்க கோபி... :)))) ரொம்ப வித்யாசமாவும் இருக்கு.

சுசி said...

//நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். //

கடைசி வரை சொல்லவே இல்லை....

சுசி said...

//அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை.//
அவ்வ்வ்வ்வ்....


//இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு.//
கரெக்டுப்பா...

சுசி said...

//ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.//
ஆனா கதையா? சரித்திர கதைன்னு சொன்னீங்க...

சுசி said...

//இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே!//

கருத்து சொல்லிட்டு... ம்க்கும்...

சுசி said...

//ஏன்னு கேட்டிங்கதானே..//

இல்லை... நீங்கதான் கேள்வியே கேக்க கூடாதுன்னுட்டீங்களே...

சுசி said...

//இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க.//

ஆஹா... அருமை அருமை...
இது வெளிநாடுகளில் வாழும் அத்தனை தமிழரினதும் சவுண்டாச்சே....

சுசி said...

//அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. //

grrrrrrrrrrrrr.......... நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நினைச்சேனே...

சுசி said...

//ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)//

அதேதான்... அதனால்தான் நானும் நிறைய்ய கருத்துக்கள சொல்லி இருக்கேன்... :))))

சுசி said...

//அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! //

அய்யய்யோ... சுசி எஸ் ஆய்டு...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

என்ன தலை இது?
உனக்காக உன் மனசாட்சி பேசுதோ?
நல்லாத்தான் காமெடியா பேசுது.

இப்புடி அடிக்கடி பதிவு போட்டாத்தான் என்ன?கொள்ளை?

ஆமாம் எனக்கு அந்த பட்டம் ரொம்ப முக்கியமோ?
நல்லா கிளம்புராய்ஙய்யா?
அப்ப நான் எழுதுறத எல்லாம் எடைக்கா போடுறது?
ஓவர் குசும்பு.
நேர்ல பாப்போம்ல?

நீயி ராஜா சார் பாத்து உள்ள வந்தாமாதி தான் நானும்
நான் கடவுள் பாட்டு தேடி ப்ளாக்கருக்குள்ளே
வந்தேன் ,ஆமாம் எங்க ? தமிலிஷ் பட்டை?
தமிழ்மணத்தில ஓட்டு போட்டேன் உனக்காக முதல்முரை

சுசி said...

ஒண்ணு விட்டுப் போச்சு... படம் சூப்பர்...

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
//இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான்.//

பிடிச்ச ஹீரோயின் யாருன்னு கேட்டா புவனேஸ்வரின்னு சொல்லுவான்.
\\


எனக்கொரு டவுட்டு.. ;)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
என்ன தம்பி! சம்பளம் வாங்கிட்டியா.. பதிவு போட்டிருக்கே :)
\\

ரிப்பீட்டு.. :))

குசும்பன் said...

பல இடங்களில் எங்கள் தானே தலைவர் கோபி அவர்களை அவன் இவன் என்று ஒருமையில் விளிப்பதாக இருக்கிறது...ஆகையால் இந்த பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்!

குசும்பன் said...

//இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், //


ஆ ஆ ஆ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் மொழி அல்ல அதையும் தாண்டி புனிதமானது.. ஆஆஆஆஆஆ

கோபி உன் தமிழ்பாசம் கண்டு கண்ணுல தண்ணி வந்துட்டு அதுக்கு மேல பதிவை படிக்க முடியல ராசா!

குசும்பன் said...

பேசாம இத ரெண்டு மாசத்துக்கு பிரிச்சு பிரிச்சு போட்டு இருக்கலாம்...அம்மாம் பெரிய பதிவு.

குசும்பன் said...

//பிடிச்ச ஹீரோயின் யாருன்னு கேட்டா புவனேஸ்வரின்னு சொல்லுவான்.//

மச்சி புவனேஸ்வரியையே ஹீரோயின்னு சொன்னா அசினை என்ன சொல்வான்?:))))

பிரேம்குமார் said...

மாப்பி, சுயசரிதை எழுத ஆரம்பிச்சுட்டீயா.. கலக்குற போ :)

முரளிகண்ணன் said...

சுவையா சொல்லியிருக்கீங்க. ஏன் தொடர்ந்து எழுதுறதில்ல?

கவிதா | Kavitha said...

தம்பி தங்கம், இந்த மாத கோட்டா ஓவரா.. சரி.. அதுல என்னை வேற கூப்பிட்டு எழுதுன்னு சொல்லி இருக்கீங்க.. உங்களை எல்லாம் சரித்திரத்தில் எழுதலாம்.. என்னை ????

ம்ம்ம் சரி எழுதறேன். .அப்புறம் யாரும் வருத்தப்படக்கூடாது சொல்லிட்டேன்..

கவிதா | Kavitha said...

//சுவையா சொல்லியிருக்கீங்க. ஏன் தொடர்ந்து எழுதுறதில்ல?//

ம்கூம்.. இப்படி எல்லாம் கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி.. ஆனா பதில் கோபிக்கு தெரியுமா ங்கறது தான் சந்தேகம்.. :)

கலையரசன் said...

சரித்திரத்துல எழுதுவாங்களா..
சத்தரத்துல கூட எழுதமாட்டாங்க!
உயிரோட இருக்கேன்னு காமிக்க எழுதுனியா?

எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணி நல்லாயிருக்குன்னு சொல்லலாமுன்னு பார்த்தா... குசும்பனும், சுசியும் அந்த வேலைய பாத்துட்டாங்க!

எனக்கு பிடிச்சது கார்த்திக்கு குடுத்த பட்டம்

r.selvakkumar said...

ஜாலியா எழுதறீங்க....

சந்தோஷ் = Santhosh said...

தம்பி பதிவு சூப்பரு..

//அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல.//
கோபி ஒய் பிளட் சேம் பிளட்.. விடு விடு.. எவ்வுளவோ பாத்துட்டோம் இதை பாக்க மாட்டோமா?

ஏன் தொடர்ந்து எழுத மாட்டேங்கிற.. தொடர்பதிவு தான் எழுதுவியாக்கும் :)

கானா பிரபா said...

தல

இந்த மாச கோட்டாவை சங்கிலிப்பதிவுக்கே அர்ப்பணிச்சிட்டீங்களே ;)

நல்லா இருக்கு

புதுகைத் தென்றல் said...

ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! //

டைமிங்கா பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு. தீவலிக்கு தீவலி என்ன தேச்சு நீ குளி மாதிரி அடுத்த தீவலிக்கு பதிவு வரும்போல...
:))

கோபிநாத் said...

எத்தனை மாசம் கழிச்சி பதிவு போட்டாலும் வந்து பின்னூட்டம் போடும் அனைத்து பதிவர்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)

அனைவருக்கும் என்னோட மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் said...

@ துளசி கோபால்

\\சரித்திர டீச்சருக்கேச் சரித்திரம் சொன்ன ஆளாய்யா நீர்???? !!!! :-))))))\\

வருகைக்கு நன்றி டீச்சர் ;)

@ சென்ஷி

\\பிடிச்ச ஹீரோயின் யாருன்னு கேட்டா புவனேஸ்வரின்னு சொல்லுவான்.\\

சொல்லிட்டா போச்சு...வருகைக்கு நன்றி மாப்பி ;)

@ முத்துலெட்சுமி/muthuletchumi

\\ஓ இதுக்கெல்லாம் இளையராஜா தான் காரணமா.. ? :)\\

அவரும் ஒரு காரணம் - வருகைக்கு நன்றி அக்கா ;)


@ நான் ஆதவன்

\\கதை சொல்றது யாரு தல? \\

அதான் நீயே சொல்லிட்டியே! ;) சீக்கிரம் எழுது ராசா ;)

@ சின்ன அம்மிணி

\\நிச்சயம் இது சரித்திரத்தில் இடம் பெறும் :)\\

ஆகா! ! வருகைக்கு நன்றி அக்கா ;)

@ தமிழ்ப்பறவை

வருகைக்கு நன்றி தல ;)

@ சுசி
அக்கா அடி பின்னியிருக்கிங்க பின்னூட்டத்தில். சீக்கிரம் எழுதுங்கள்.
வருகைக்கும் உங்க பின்னூட்டத்திற்க்கும் நன்றியோ நன்றி ;)

\\1ரெண்டு மூணு மாசமா பாத்து பாத்து எழுதினதாலயோ என்னமோ சூப்பரா எழுதி இருக்கீங்க கோபி... :)))) ரொம்ப வித்யாசமாவும் இருக்கு.\\

இதெல்லாம் ஓவரு...ரொம்ப வித்யாசமாக அப்படின்னா ஒன்னுமே புரியலியா! ;))

\\grrrrrrrrrrrrr.......... நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நினைச்சேனே...\\

நல்லவனுக்கு நல்லவன் ;))

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

\\இப்புடி அடிக்கடி பதிவு போட்டாத்தான் என்ன?கொள்ளை?\\

கொள்ளையும் இல்ல கொலையும் இல்ல தல...ஆணி அதான் ;))
வருகைக்கு நன்றி தல ;)

கோபிநாத் said...

@ தமிழன்-கறுப்பி

டவுட்டுக்கும் ரீப்பிட்டுக்கும் நன்றி கண்ணு ;)

@ குசும்பன்

\\பேசாம இத ரெண்டு மாசத்துக்கு பிரிச்சு பிரிச்சு போட்டு இருக்கலாம்...அம்மாம் பெரிய பதிவு.\\

ம்க்கும்...குறை சொல்றதுலியே இருங்க...வருகைக்கு நன்றி ;)

@ பிரேம்குமார்

\\மாப்பி, சுயசரிதை எழுத ஆரம்பிச்சுட்டீயா.. கலக்குற போ :)\\

அப்படி எழுதினா உன்னோட கதையும் வரும் மாப்பி ;)) வருகைக்கு நன்றி ;)

@ முரளிகண்ணன்

\\சுவையா சொல்லியிருக்கீங்க. ஏன் தொடர்ந்து எழுதுறதில்ல?\\

வருகைக்கு நன்றி அண்ணே...கேள்விக்கு பதில் மெயில் அனுப்பியிருந்தேன். உங்கிட்ட இருந்து பதிலே இல்ல ;)

@ கவிதா | Kavitha

\\ம்ம்ம் சரி எழுதறேன். .அப்புறம் யாரும் வருத்தப்படக்கூடாது சொல்லிட்டேன்..\\

என்னை மாதிரி இருக்க கூடாது டக்குன்னு எழுதிடானும் ;;)

\\ம்கூம்.. இப்படி எல்லாம் கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி.. ஆனா பதில் கோபிக்கு தெரியுமா ங்கறது தான் சந்தேகம்.. :)\\

இதான் அக்காங்கறது ;)) குட் ;)

@ கலையரசன்

\\உயிரோட இருக்கேன்னு காமிக்க எழுதுனியா?\\

அடப்பாவி மக்கா..சங்கு ஊதிட்டிங்களா!!சொல்லவேல்ல ;)))

\\எனக்கு பிடிச்சது கார்த்திக்கு குடுத்த பட்டம்\\

அது அன்பால கொடுத்த பட்டம் ;)

@ r.selvakkumar

\\ஜாலியா எழுதறீங்க....\\

வருகைக்கு நன்றி செல்வகுமார் ;)

@ சந்தோஷ் = Santhosh said...

\\தம்பி பதிவு சூப்பரு..\\

நன்றி அண்ணே ;))

\\ஏன் தொடர்ந்து எழுத மாட்டேங்கிற.. தொடர்பதிவு தான் எழுதுவியாக்கும் :)\\

அப்படி வந்துடுது ;)

@கானா பிரபா said...
\\தல

இந்த மாச கோட்டாவை சங்கிலிப்பதிவுக்கே அர்ப்பணிச்சிட்டீங்களே ;)

நல்லா இருக்கு\\

நன்றி தல ;)

@ புதுகைத் தென்றல்

\\டைமிங்கா பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு. தீவலிக்கு தீவலி என்ன தேச்சு நீ குளி மாதிரி அடுத்த தீவலிக்கு பதிவு வரும்போல...
:))\\

ஆகா சூப்பரு பாட்டு அது...யூடுபில தேடி பார்க்கனும் ;) வருகைக்கு நன்றி அக்கா ;)

me said...

//மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல//

ஆரம்பத்துல யாருக்கும் உன் அருமை தெரியல மாப்ளே....ஹி ஹி ஹி...

//பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம்//

அஹா! நெஞ்ச தொட்டுட்டியே!!

வினோத்கெளதம் said...

யோவ் இது எல்லாம் எப்ப போட்ட சொல்லவே இல்லை..
பதிவு சூப்பர் மச்சி..
நான் தான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..

கோமதி அரசு said...

//பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல கொஞ்சமாச்ச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம்.அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது.அப்படி ஒரு அருமையான அன்பான சக பயணிகள் இவனோட பதிவர்கள்.அவர்களுக்கு பதிலுக்கு இவன அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.//

கோபிநாத், நிச்சியம் சரித்திரத்தில பொன் எழுத்துக்களால் எழுதுவாங்க.

வெறுப்புணர்வை இணக்கமாக மாற்றுங்கள் என்கிறார் அன்னை.

திருமூலரும் யாவருக்கும் இன்னுரை தான் முக்கியம் என்கிறார் .
அன்பே சிவம் என்றும் திருமூலர் சொல்கிறார்.வெறுப்பை கொடுக்காமல்
இருக்க முயற்சி செய்கிறேன் என்று சொல்வதே பெரிய விஷயம்.
வாழ்த்துக்கள் கோபிநாத்.
வாழ்க வளமுடன்.

அபி அப்பா said...

எலே கோபிதம்பி! நம்ம கிடேசன் பார்க் மீட்டிங்தான் முதல் சந்திப்பா?? கொஞ்சம் விலாவாரியா சொல்லியிருக்கலாமே!

இப்படி அடிக்கடி பதிவு போடாதே! பாரு எத்தனை பேரு கண்ணு வச்சிட்டு போயிருக்காங்கன்னு!!

மொத்தத்துல சூப்பரு!

கண்மணி said...

மாச பதிவு வருட பதிவாக இருந்தா சரிதான்.

கண்மணி said...

மாசம் வருடமாகக் கூடாதுன்னேன்

நாஞ்சில் பிரதாப் said...

தல அப்ப உனக்கும் கலப்பை புடிக்க கத்துக்கொடுத்தது சிவகுமார் சார் தானா? எனக்கும்தான் தல...

கவிநயா said...

ரொம்ப லேட்டுதான்.மன்னிச்சுக்கோங்க தம்பீ! அருமையா எழுதிட்டு, கொடுமையா என்னைய மாட்டி விட்டுட்டீங்களே :)

Annam said...

//பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம்//
ithu sooper

கோபிநாத் said...

மாப்பி அமுதன்

மச்சி வினோத்

அம்மா கோமதி அரசு

தல அபி அப்பா

கண்மணி அக்கா

கவிநயா அக்கா

நண்பா பிரதாப்

தோழி அன்னம்

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி ;))

தென்றல் said...

நல்லா இருக்கு, கோபி!

அடுத்த வருசமாவது மாசத்திற்கு ரெண்டு பதிவுனு கொஞ்சம் கொள்கைய மாத்திக்கிறது..'உங்க வாசகர்களுக்காக...'

/கிடேசன் பார்க்/ அதபத்தி கொஞ்சம் விவரமா சொல்றது ......

"பழசிராஜா"வை பத்தி (ஒரு சரித்திர தொடர்) எழுதிவீங்கனு எதிர்பார்த்தேன்...;(

கண்மணி said...

Happy new year gopi
May all ur dreams come true

Jaleela said...

அப்ப தீபாவளி தீபாவளிக்கு தான் பதிவு போடுவீங்களா?

Yogendraprasath said...

ஆஹா ஆஹா கோபிநாத்.... உங்கள மாதிரியே நானும் "எவ்வளவோ பண்ணுறோம் இத பண்ணமாட்டமான்னு" ஒரு Blogக ஆரம்பிச்சுட்டு.... கல்லா கட்டுறதுக்கு ஆளில்லாம.... என்ன பண்ணலாம்னு யோசிச்கிட்டு இருந்தப்போ தான் உங்களோட "ஆணி புடுங்குற கதைய" படிக்க வந்தேன்.... நீங்களும் நம்மள மாதிரியே இங்கிலிபிசுல Blogக ஆரம்பிச்சுட்டு கஷ்டப்பட்ட கதைய வாசிச்சதும் குஷியாயிட்டேன் (மத்தவங்க கஷ்டத்துல தான் சந்தோஷப் பட வேண்டி இருக்கு - ஒன்னும் பண்ண முடியாது நெலமை அப்படி). இப்போ நானும் "லிட்டில் சூப்பர் பதிவர்" ன்னு போர்டு மாட்டிகிட்டு தைரியமா எழுதப்போறேன் (அப்படி இருந்த நீங்களே இப்படி ஆயிட்டீங்க - நாமளும் கரையேறுவோம்ன்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான்)....