Monday, June 29, 2009

3 + 32 = அட்டகாசங்கள்....


இந்த தொடரை தொடங்கி வச்சவுங்க யாருன்னு தெரியல அவுங்களும் என்னோட பதிவுகளுக்கு வருவாங்கன்னு தெரியல (ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சும்மா சொல்லக்கூடாது இந்த 32 கேள்வி பதில் பதிவு போடாத ஆளுங்க தான் பதிவுலகத்தில் ரொம்ப கம்மியாக இருக்காங்க. மீதி அம்புட்டு பேரும் போட்டாச்சு - பிடிக்குதோ இல்லையோ, கேள்வியில குத்தம் குறை இருந்தாலும் அதையும் சொல்லிக்கிட்டே பதிலும் பதிவும் போட வச்சாங்கல்ல/ அதுக்கு தான் அவர்களுக்கு வாழ்த்து :)

கேள்விக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சீன் போட்டுக்கிறேன் :)

நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். அப்படிப்பட்ட எனக்கு 3 பேரு ரவுண்டுகட்டி 32 கேள்வி கேட்டுருக்காங்க. யாரு அந்த மூணு பேரு சகோதரி மயில், சகோதரி கவிதா, சகோதரன் தென்றல். இன்னும் சொல்லப்போனா இவுங்க பதிவுகளில் நான் அதிகமாக கேள்வி எல்லாம் கூட கேட்டதில்ல/ அந்த அளவுக்கு பச்சப்புள்ளைய போயி இப்படி கேட்டுப்புட்டாங்க....என்னதான் சூனா பானா வேஷம் போட்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. அப்படியே சேர் மேல உக்கார்ந்து கால் மேல காலை போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கற நினைப்புல இருக்கேன் இப்போ....வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? (இந்த கேள்வியை அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க) எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன். ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சூழ்நிலையில் ஏண்டா இந்தப் பெயரை வச்சாங்கன்னும் நொந்து போயிருக்கேன். அப்புறம் பாட்ஷா படத்துல வர ரஜினி மாதிரி எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அது ஜாதக பெயராம்! அதை கூப்பிட மாட்டாங்க. அப்புறம் அம்மா என்னை அழைப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை தவிர வேற யாராச்சும் அப்படி அழைத்தால் பிடிக்காது அது அம்மா ஸ்பெசல் :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

உண்மையை சொல்லனுமுன்னா தெரியல....படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும்
கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும். ஆனா அப்படியே அடக்கிடுவேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்....பெருசாக எல்லாம் இருக்காது. என்னோட கையெழுத்து சின்னதாகத்தான் எழுதுவேன். அழகாவும் இருக்குன்னு பலபேர்சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப எல்லாம் கோழி கிறுக்கல் தான். அதிகம் எழுத முடியுறதுல்ல

4. பிடித்த மதிய உணவு என்ன?


அந்த அளவுக்கு அதிகம் சாப்பாட்டு மேல எல்லாம் ஈடுபாடு இல்ல.....அம்மா வைக்கும் முள்ளங்கி சாம்பாரும்+முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இந்த கேள்வி இப்படி இல்லைன்னு சில பதிவுகளில் படிச்சிருக்கேன். உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?


கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அந்த அளவுக்கு கவனிச்சிப் பேசுவேனான்னு எனக்கே தெரியல. இருந்தாலும் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


என்கிட்ட இருக்குற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடிச்சது அதிகம் சதவீதம் இருக்குறதுனால, பிடிக்காதது பார்டர் மார்க் கூட இல்ல அதனால பிடிக்காத விஷயம் எதுவும் இல்ல.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னோட அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?


நீலம்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?


பார்த்துக் கொண்டு இருப்பாது ஆணிகளை.....கேட்டுக் கொண்டுயிருப்பது "ஏன்டா பாண்டி இன்னாத்த நீ பண்ண..." வால்மீகி - இளையராஜா

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?


புது புத்தகத்தி்ல் இருந்து வரும் மணம் ரொம்ப பிடிக்கும்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பிடித்த விஷயங்கள்ன்னு ஒண்ணை மட்டும் சொல்லமுடியாதுங்க இவுங்க 5 பேருக்கிட்டையும்

சகோதரி முத்துலட்சுமி

சகோதரி மை ஃபிரண்ட்

சந்தோஷ் அண்ணே

தல கானா பிரபா

தல அய்யனார் (ஏற்கனவே போட்டுட்டாரு)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சகோதரி மயில் - அவர் எழுதிய குழந்தைகள் கவிதை தான் நான் என் நினைவில் இருக்கும் முதல் பதிவு - அப்புறம் துறை சார்ந்த சில பதிவுகள் எழுதியிருக்கிறார் அதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னோட பணிவான வேண்டுகோள்.

சகோதரி கவிதா - "கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.

சகோதரன் தென்றல் - அதான் சகோதரன்னு சொல்லிட்டோம்ல்ல எப்படி இருப்பாரு. என்னோட அண்ணன் என்னை போலதான்.....எப்பவச்சும் ஒரு பதிவு அதுவும் டிக்கெட்டு பின்னாடி எழுதிற மாதிரி குட்டியாக இருக்கும். ஆனா சரக்கு அதிகம் உள்ள மனுஷன். திரைப்படங்ளை பற்றி இவர் எழுதவேண்டும் என்பது என்னோட ஆசை

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அப்படி வரைமுறை எல்லாம் இல்ல

20. கடைசியாகப் பார்த்த படம்?

புதுபடம் என்றால் பசங்க

பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா & விருமாண்டி

21. பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஜெயமோகனின் திசைகளின் நடுவே....சிறுகதை தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?


படங்கள் வச்சுக்கிறது இல்ல

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது ;
எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல

பிடிக்காதது :
அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?


துபாய்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கு.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுவதை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே...

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?


தெரியாது

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

பயணம்

இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!

50 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்! :)

ஆயில்யன் said...

//(ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) ///

இதெல்லலம் நாங்கதான் சொல்லணும் நீங்க ஏன் தம்பி சொல்றீங்க!!!!!

ஆயில்யன் said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.//

சூப்பரூங்க தம்பி !

நானும் முழுசாத்தான் இருக்கேன்! இது ஜஸ்ட் பார் இன்போ :)

ஆயில்யன் said...

// சகோதரி முத்துலட்சுமி//

பயணகளைப்புல இருப்பாங்க மெதுவா 32 பதில் சொல்லுவாங்க !

ஆயில்யன் said...

//சகோதரி மை ஃபிரண்ட்//

தங்கச்சி பிசியோஓஓஓஓ பிசி !

ஆயில்யன் said...

//சந்தோஷ் அண்ணே//

அண்ணாச்சி பத்தி ஞான் அறியல

ஆயில்யன் said...

//தல கானா பிரபா//

போடட்டும் அப்புறம் இருக்குடி கச்சேரி !

ஆயில்யன் said...

/இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!///

ம்ம் டபுள் ஒ.கே

கவிதா | Kavitha said...

ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....தமிழ்மணம் சொல்லனும்னு அப்படி எழுதவா????

முயற்சி செய்றேன்.. தமிழ்மணத்துக்காக இல்லை.. உங்களுக்காக.. :)

கவிதா | Kavitha said...

/பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா & விருமாண்டி//

ம்ம் எனக்கும் இந்த விருமாண்டியில வருகிற டூயல் ஸ்டோரி லைன் & ஸ்கீரின் ப்ளே ரொம்ப பிடிச்சி இருந்தது...

/26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கு. //

:) பதிவு போடாமல் பின்னூட்டம் மட்டுமே ஒருத்தருக்கு விடாமல் போடறீங்களே அது தானே?

துளசி கோபால் said...

//2. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

பயணம்//

அது.....

பிடிச்சிருக்கு.

கவிதா | Kavitha said...

//"கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். //

:))) வரும்.. ஆனா வராது... :))

சென்ஷி said...

//இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி //

நாளைக்கு இந்த மாசமே முடிஞ்சுடுமேடா.. ஒரு நாள் பொறுத்திருந்தா புதுக்கணக்கா ஆரம்பிச்சுருக்கலாமுல்ல.. :)

Anonymous said...

சோம்பேறி கோபி, இப்பத்தான் எழுதறதா??

முரளிகண்ணன் said...

அண்ணாச்சி,

இப்படி வலுக்கட்டாயமா கேட்டாத்தான்
எழுதுவீங்களா?

ராமலக்ஷ்மி said...

//பிடித்த சுற்றுலா தலம்?

குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.//

நல்ல பதிலாய் இருக்கிறதே:)))!

Geetha Sambasivam said...

//நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.//

ரொம்ப உண்மையாகச் சொல்லி இருக்கீங்க. வருஷத்துக்கு ஒரு பதிவுதான் போடுவேன்னும் சொல்லி இருக்கலாமோ???
என்னது??? கவிதாவை இன்னும் யாரும் கூப்பிடலையா????????????

Anonymous said...

//2. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?//

இளையராஜான்னு எல்லாருக்குமே தெரியுமே

கானா பிரபா said...

தல

மாசச்சம்பளம் வந்திடுச்சு போல :0

நீங்க சொன்ன பதில்கள் எனக்கும் ஒத்துப் போவதால் (ஒரே செட்டு தானே தல) நான் வேற எதுக்கு போஸ்ட் போடணும், கலக்கலா வேற சொல்லீட்டீங்க


//ஆயில்யன் said...

//தல கானா பிரபா//

போடட்டும் அப்புறம் இருக்குடி கச்சேரி !//

கொலைமிரட்டல், தகாதவார்த்தைப் பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்காக இ.பி.கோ 420 படி சின்னப்பாண்டியை சவுண்ட் இல்லாத ஆண்பாவம் பார்க்க வலியுறுத்துகிறேன்.

Kavinaya said...

ரொம்ப சமர்த்து பிள்ளையாய் தெரியுதே :) வாழ்க... வாழ்க!

☀நான் ஆதவன்☀ said...

போட்டாச்சா!!! இனி அடுத்த தொடர்பதிவு வந்தா தான் அடுத்த பதிவா??

//முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.//

நினைச்சேன்..

அபி அப்பா said...

கோபிம்மா சம்பளம் வாங்கியாச்சா? குட், ந்ல்லா இருக்கு நச்சுன்னு இருக்கு எல்லா பதிலும்!

ஆயில்யன் said...

///ஆயில்யன் said...

//தல கானா பிரபா//

போடட்டும் அப்புறம் இருக்குடி கச்சேரி !//

கொலைமிரட்டல், தகாதவார்த்தைப் பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்காக இ.பி.கோ 420 படி சின்னப்பாண்டியை சவுண்ட் இல்லாத ஆண்பாவம் பார்க்க வலியுறுத்துகிறேன்.///


வசனம் இல்லாத ஆண்பாவமும்,
ரிப்பிட்டேய்ய் போடாத நல்லவனும்,
தாடியில்லாத தமிழ்பிரியனும்
சோகம் பாடாத சென்ஷியும்
ராசா பாட்டு கேக்காத கோபியும்
ம்ம் போடாத கானாவும்
மொக்கை இல்லாத ஆயில்யனும்

அப்டேட் ஆகாத தமிழ்மணம் மாதிரி பாஸ் அம்புட்டு நல்லாவே இருக்காது !

கோபிநாத் said...

@ ஆயில்யன்

அண்ணே உங்க கடமையை நினைச்சி ஆனந்த கண்ணீர் வருதுண்ணே ;))

\\நானும் முழுசாத்தான் இருக்கேன்! இது ஜஸ்ட் பார் இன்போ :)\\

நீங்க ஏன் இன்னும் இன்போ கொடுத்துக்கிட்டு இருக்கீங்கன்னு இப்பதான் புரியுது...எங்க மாதிரி பசங்க பதிவுக்கு இன்போ கொடுக்கமால் நல்ல பிகருங்க பதிவுக்கு போயி கொடுங்கண்ணே...சீக்கிரம் அண்ணி வருவாங்க ;)))

@ கவிதா

\\முயற்சி செய்றேன்.. தமிழ்மணத்துக்காக இல்லை.. உங்களுக்காக.. :)\\

கண்டிப்பாக செய்யுங்கள்...நன்றியும் கூட ;)

\\ம்ம் எனக்கும் இந்த விருமாண்டியில வருகிற டூயல் ஸ்டோரி லைன் & ஸ்கீரின் ப்ளே ரொம்ப பிடிச்சி இருந்தது...\\

எனக்கும் இது பிடிக்கும்...இன்னும் நிறைய விஷயம் இருக்கு அந்த படத்தில்.

\\:) பதிவு போடாமல் பின்னூட்டம் மட்டுமே ஒருத்தருக்கு விடாமல் போடறீங்களே அது தானே?\\

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...;) வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி அக்கா ;)

@ துளசி கோபால்

\\அது.....

பிடிச்சிருக்கு\\

எல்லாம் உங்க பாடம் தான் டீச்சர் ;)
டீச்சரின் வருகைக்கு ஒரு ஸ்பெசல் நன்றி ;)

@ சென்ஷி

\\நாளைக்கு இந்த மாசமே முடிஞ்சுடுமேடா.. ஒரு நாள் பொறுத்திருந்தா புதுக்கணக்கா ஆரம்பிச்சுருக்கலாமுல்ல.. :)\\

அடுத்த மாசத்துக்கு சரக்கு ரெடி மாப்பி அதான் ;)


@ முரளிகண்ணன்

\\அண்ணாச்சி,

இப்படி வலுக்கட்டாயமா கேட்டாத்தான்
எழுதுவீங்களா?\\

இன்னாது அண்ணாச்சியா!! இது என்ன புது ஸ்டைலா!! நான் உங்க டம்பி...அவ்வ்வ்வ்வ்...;)

@ ராமலக்ஷ்மி

//பிடித்த சுற்றுலா தலம்?

குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.//

நல்ல பதிலாய் இருக்கிறதே:)))!\\

ஆகா!!..இதை ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் விட மாட்டிங்க...வருகைக்கு நன்றி அக்கா ;)

@ கீதா சாம்பசிவம்

\\ரொம்ப உண்மையாகச் சொல்லி இருக்கீங்க.\\

நன்றி தலைவி...;)

\\வருஷத்துக்கு ஒரு பதிவுதான் போடுவேன்னும் சொல்லி இருக்கலாமோ???\\

கிர்ர்ர்ர்ர்ர்ர்...இந்த மாசம் மட்டும் 2 பதிவு தலைவி ;))

\\என்னது??? கவிதாவை இன்னும் யாரும் கூப்பிடலையா????????????\\\

தலைவி அவுங்க என்னை கூப்பிட்டவுங்க ;))

வருகைக்கு நன்றி தலைவி ;)

கோபிநாத் said...

@ மயில்

\\சோம்பேறி கோபி, இப்பத்தான் எழுதறதா??\\

அக்வோவ்...நான் இன்னா பண்ணுறது..ஆணிகள் தொல்லை..ஆனால் வாக்கு கொடுத்தது போல இந்த மாசத்துக்குள்ள போட்டுபுட்டேனல்ல ;)) அதான் டம்பியோ திறமை...எப்படீஈஈஈஈஈஈஈஈஈஈ ;))


@ சின்ன அம்மிணி

\\இளையராஜான்னு எல்லாருக்குமே தெரியுமே\\

நன்றி...புரிதாலுக்கு மிக்க நன்றி அக்கா ;)

@ கானா பிரபா

\\தல

மாசச்சம்பளம் வந்திடுச்சு போல :0

நீங்க சொன்ன பதில்கள் எனக்கும் ஒத்துப் போவதால் (ஒரே செட்டு தானே தல) நான் வேற எதுக்கு போஸ்ட் போடணும், கலக்கலா வேற சொல்லீட்டீங்க\\

ஆகா...இது என்ன எஸ்கேப்பிங்...தல இந்த கதையே வேணாம் டைம் கிடைக்கும் போது கண்டிப்பாக போடுங்கள் ;)

@ கவிநயா

\\ரொம்ப சமர்த்து பிள்ளையாய் தெரியுதே :) வாழ்க... வாழ்க!\\

நன்றி..நன்றி...அக்கா உங்க கணக்கு தான் அடுத்த மாசம் ;))

@ நான் ஆதவன்

\\போட்டாச்சா!!! இனி அடுத்த தொடர்பதிவு வந்தா தான் அடுத்த பதிவா??\\

தெரியலையோப்பா!! ;)

//முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.//

நினைச்சேன்..\\

வருகைக்கு நன்றி செல்லம் ;)

@ அபி அப்பா

\\கோபிம்மா சம்பளம் வாங்கியாச்சா? குட், ந்ல்லா இருக்கு நச்சுன்னு இருக்கு எல்லா பதிலும்!\\

வருகைக்கு நன்றி தல ;)

காட்டாறு said...

3+32 போடுறதும் உங்க ஸ்பெஷல்டின்னு சொல்லி இருக்கலாமோ? ;-)

தென்றல் said...

நன்றி, கோபிநாத்!

/அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க../
ஹா...ஹா..ஹா... :) !!

வழக்கம்போல் நக்கலும், யதார்த்தமும், நேர்மையான இன்னொரு பதிவு...

/சகோதரி மயில்/
அறிமுகத்திற்கு நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\

பிடிக்காதது : அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது//
:))

நல்லா இருக்கு ...
32... இது ரொம்ப பெரிய பரிட்சை போலவே...

G3 said...

//சென்ஷி said...

//இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி //

நாளைக்கு இந்த மாசமே முடிஞ்சுடுமேடா.. ஒரு நாள் பொறுத்திருந்தா புதுக்கணக்கா ஆரம்பிச்சுருக்கலாமுல்ல.. :)//

Toooo muchchu idhellam nalladhukkillai sollitten..

G3 said...

//எங்க மாதிரி பசங்க பதிவுக்கு இன்போ கொடுக்கமால் நல்ல பிகருங்க பதிவுக்கு போயி கொடுங்கண்ணே...சீக்கிரம் அண்ணி வருவாங்க ;)))//

ROTFL :)))))))))))))))

ஆயில்யன் said...

/கோபிநாத் said...

@ ஆயில்யன்

அண்ணே உங்க கடமையை நினைச்சி ஆனந்த கண்ணீர் வருதுண்ணே ;))

\\நானும் முழுசாத்தான் இருக்கேன்! இது ஜஸ்ட் பார் இன்போ :)\\

நீங்க ஏன் இன்னும் இன்போ கொடுத்துக்கிட்டு இருக்கீங்கன்னு இப்பதான் புரியுது...எங்க மாதிரி பசங்க பதிவுக்கு இன்போ கொடுக்கமால் நல்ல பிகருங்க பதிவுக்கு போயி கொடுங்கண்ணே...சீக்கிரம் அண்ணி வருவாங்க ;)))//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எது சொன்னாலும் மன்னிச்சு வுட்டுடலாம் ஆன உங்களை பசங்கன்னு சொன்னீங்க பாருங்க அதை மட்டும் என்னால நோஓஓஓஓஓஓஓஓஒ

ஆயில்யன் said...

// G3 said...

//எங்க மாதிரி பசங்க பதிவுக்கு இன்போ கொடுக்கமால் நல்ல பிகருங்க பதிவுக்கு போயி கொடுங்கண்ணே...சீக்கிரம் அண்ணி வருவாங்க ;)))//

ROTFL :)))))))))))))))///

தங்ககோச்சி அண்ணனை ஒரு பார்ட்டீ அசிங்கப்படுத்துது அது உமக்கு rotfl ஆஆஆஆஆஆ

சந்தனமுல்லை said...

ரசித்தேன்! //
நீங்க ஏன் இன்னும் இன்போ கொடுத்துக்கிட்டு இருக்கீங்கன்னு இப்பதான் புரியுது...எங்க மாதிரி பசங்க பதிவுக்கு இன்போ கொடுக்கமால் நல்ல பிகருங்க பதிவுக்கு போயி கொடுங்கண்ணே...சீக்கிரம் அண்ணி வருவாங்க ;)))
//

:-)))))

pudugaithendral said...

அட்டகாசம் நல்லா இருக்கு.

//(ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) ///

இதெல்லலம் நாங்கதான் சொல்லணும் நீங்க ஏன் தம்பி சொல்றீங்க!!!!!//

இதையும் ரசிச்சேன்

pudugaithendral said...

நானும் முழுசாத்தான் இருக்கேன்! இது ஜஸ்ட் பார் இன்போ //

பாஸ் ஆன்லைன்ல கவனிச்சிக்கறோம்.

முல்லை, கவிதா எல்லோரும் வாங்கப்பா ஒரு ரவுண்ட் கட்டி பாஸை கொஞ்சம் டெர்ரறா விசாரிப்போம்.

Anonymous said...

பிறந்த நாளாமா?? சொல்லவே இல்ல? சரி இந்த வருடம் நீ நினைத்து எல்லாம் நடக்க என் வாழ்த்துகள்.

happy birthday gobi

கோபிநாத் said...

@ காட்டாறு

\\3+32 போடுறதும் உங்க ஸ்பெஷல்டின்னு சொல்லி இருக்கலாமோ? ;-)\\

ஆகா..வாங்க அக்கா....நீங்க சொல்லிட்டிங்கல்ல ரைட்டு தான் ;)

@ தென்றல்

\\வழக்கம்போல் நக்கலும், யதார்த்தமும், நேர்மையான இன்னொரு பதிவு...\\

நன்றி அண்ணே ;)

@ முத்துலெட்சுமி

\\நல்லா இருக்கு ...
32... இது ரொம்ப பெரிய பரிட்சை போலவே...\\

ஆமாக்கா...கெஸ்டின் பேப்பர் ஆவுட் ஆகியும் ஒரு பரிட்சை கஷ்டம்ன்னா அது இதுதான் ;)

@ G3

\\Toooo muchchu idhellam nalladhukkillai sollitten..\\

;-))))) வருகைக்கு நன்றி ஜி3 ;)

@ சந்தனமுல்லை

வருகைக்கு நன்றி அக்கா ;)

@ புதுகைத் தென்றல்

\\அட்டகாசம் நல்லா இருக்கு.\\

வருகைக்கு நன்றி அக்கா ;)


\\பாஸ் ஆன்லைன்ல கவனிச்சிக்கறோம்.

முல்லை, கவிதா எல்லோரும் வாங்கப்பா ஒரு ரவுண்ட் கட்டி பாஸை கொஞ்சம் டெர்ரறா விசாரிப்போம்.\\

விசாரிச்சி அறிக்கை கொடுங்க ;))

@ மயில்
\\பிறந்த நாளாமா?? சொல்லவே இல்ல? சரி இந்த வருடம் நீ நினைத்து எல்லாம் நடக்க என் வாழ்த்துகள்.

happy birthday gobi\\

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அக்கா ;)

தென்றல் said...

\\பிறந்த நாளாமா?? \\

பிறந்தநாள் வாழ்த்துக்கள், கோபி! வாழ்க வளமுடன்!!

வருசம் வேண்டாம்..தேதிய மட்டும் சொல்லுங்க..;)

thamizhparavai said...

தலை படிச்சிட்டேன்...சுவையான பதில்கள்...
இன்னும் நிறைய பதில்கள் நமக்குள்ள அதிக ஒற்றுமையைக் காட்டுது. ஆனா நான் அவைகளை வெளியே சொல்லாம பாலிஷா சொல்லிருக்கேன்.
8வது, 28வது கேள்விக்கான பதில்கள் சிறப்பு...

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கை..பயணம்..நச் நச் பதிலகள் கோபி..

(தாமதமாக) பிறந்த நாள் வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

அட்டகாசமா பதில்கள். கோபி .
அப்படியே கோபியே எதிரில நின்னு பேசுகிற மாதிரி இருக்கு.

geethappriyan said...

வணக்கம் கோபிநாத் நலம் தானே?
இந்த சிறியேன் உங்களுக்கு
பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.

உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
என்பதை தெரிவிக்கவும்.

கீழை ராஸா said...

//(ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்)//

எதார்த்தம்....ஆரம்பம் முதல் இறுதி வரை

சுசி said...

வித்யாசமான பதில்கள் கோபி.
//நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். //
அதனால்தான் பதிவுப் பக்கம் மாசம் ஒரு தபா விசிட்டிங்கா?

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

தல

மாசச்சம்பளம் வந்திடுச்சு போல :0

நீங்க சொன்ன பதில்கள் எனக்கும் ஒத்துப் போவதால் (ஒரே செட்டு தானே தல) நான் வேற எதுக்கு போஸ்ட் போடணும், கலக்கலா வேற சொல்லீட்டீங்க/


என்னது ஒரே செட்டா....சின்னபாண்டி நாளைக்கு வந்திடுவாரு....அப்ப இருக்கு தல உங்களுக்கு:)))

Nathanjagk said...

செம ஹாட் மச்சி!

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

சினேகிதி said...

\\இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!\\

3 maasam mudinju...

Unknown said...

49

Unknown said...

50...hey hey aam the 50..half century adichachu..

paypula enamo evaruku 50comment viluthathupola santhosathi paru..

superae ruku annaey..

marupadium varukiren.