Monday, June 01, 2009

இசைக்குப் பிறந்த நாள்

ஒரு புதிய படத்தின் நாயகன் முதல்முதலில் தன் நாயகியை பார்க்கிறான். பார்த்தவுடனே அவனுக்கு காதல் மலர்கிறது. பின்னணியில் ஒரு வயலின் இசை தொடங்குகிறது, உள்ளத்தைத் துள்ளி எழச்செய்யும் இசை அது. ஓ.. வென கத்திக் கூச்சலிட்டு ஆடவேண்டிய இசை. ஆனால் உள்ளுக்குள்ளேயே, நாயகன் ஆடவில்லை பாடவில்லை அப்படியே நாயகியை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறான். ஆனால் அங்கே அவன் உள்ளத்தில் இருக்கும் காதல் ஆடியிருக்கும் பாடியிருக்கும் என்பதை அந்த பின்னனி இசையில் நமக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த வயலின் இசை பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. திரு. மணிரத்தினத்தின் முதல் படமான "பல்லவி அனுபல்லவி" என்கிற படத்தில் வந்த இசை இன்றைக்கு வெளிவந்திருக்கும் "சர்வம்" படத்திறக்கும் மிக பொருந்தமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு புதிது அல்ல. அவரை ரசிக்கும் நமக்கும் புதிதல்ல.

தன்னுடைய இசையால் மனிதனின் உள்ளத்தை ஆட்டிப்படைப்பவர். தன்னோட அன்பு கொண்ட இசையால் உலகத்தின் உள்ள இசை நெஞ்சங்களை கவர்ந்தவர்

"திரு. இசைஞானி இளையராஜா அவர்களின் 66வது பிறந்த நாள் இன்று.இசைஞானியின் பிறந்த நாளான இன்று அவர் இசைஅமைத்த மூன்று பாடல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மூன்று பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நம்ம இசைஞானி இந்த மூன்று பாடல்களிலும் தோன்றியிருப்பார்.

குட்(டி) நியூஸ் ;- இப்போ வரவிருக்கும் அழகர்மலை படத்தில் ஒரு முழுபாடலுக்கு இசைஞானி நடித்திருக்கிறார்.

மடைதிறந்து பாடும் நாதியலை நான்

இன்றும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழகாக ஹார்மோனிய இசையுடன் தொடங்கி பின்பு வயலின்கள் ஒலிக்க துள்ளவைக்கும் பாடல். திரு. எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கு இசைஞானி வாய் அசைத்திருப்பார். இந்த பாடலில் இசைஞானி தோன்றும் போது பாடல்கள் வரிகள் இப்படி வரும் "புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே"அந்த வரிகள் அவருக்கு என்றும் பொருந்தத்தக்கது. ஆமாம் இசை தெய்வம்ய்யா நீ ;). இப்போது அவரிடம் இந்த வரிகளை பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்!!?

நான் தேடும் செவ்வந்திப்பூ இது...

"சந்தோஷம் உச்சமாக போகும் போது ஒரு பீலிங் இருக்கும் அப்படியே செத்துட்டா நல்லாயிருக்கும் போல இருக்குமேன்னு, அது வந்து இந்த பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாபனை பாடுவாரு உண்மையிலே சொல்றேன் அப்படியே உயிரோட செத்துடலாம் போல இருக்கும் அப்படி ஒரு ஜீவன் அதுல இருக்கும்" சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இசைஞானி கச்சேரி செய்தபோது இந்த பாடலை அறிமுகப்படுத்த திரு. பார்த்திபன் சொன்னவை. உண்மையில் அந்த ஆலாபனையின் மூலமாக நம்ம மனசுக்குள் நுழைந்து பாடலில் நிறைஞ்சியிருப்பாரு ராஜா.

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...!

இந்தப் பாடல் தொடங்குவதற்க்கு முன்னால் நடிகர் ரகுமான் இசைஞானியிடம் அந்த பல்லவியை ஒருமுறை பாடுங்கள் ராஜா என்பர் இசைஞானியும் கல்யாண மாலை....என்று பாடி முடிப்பார். அதை ஆழ்ந்து ரசித்துவிட்டு நடிகர் ரகுமான் ُ’பியுட்டிஃபுல் ராஜா’ என்பர். அந்த ’பியுட்டிஃபுல்’ என்ற வார்த்தை ராஜா இசைமைத்த அந்த இசைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை இப்போதும் ஏதாவது ஒரு திருமணத்தின் இசைக்கச்சேரியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதே சாட்சி. பேசும் போது அவரோட குரல் இல்லமால் இருப்பது கொஞ்சம் வருத்தம்.
ஸ்பெஷல்

How to name it இசைத்தொகுப்பில் எனக்கு ரொம்பப் (இதுக்கு அப்புறம் எத்தனை ரொம்ப போட முடியுமே அத்தனையும் போட்டுக்கோங்க) பிடித்த Do anything இப்போது உங்களுக்காக.தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையை அன்பு கொண்டு ஆர அரவணைக்கும் அன்னையே போல என்றென்றும் இருக்கும் உன் இசை. மீண்டும் இசை தெய்வத்தை வாழ்த்த எதுவுமே இல்லை அதனால வணங்குகிறேன்.

37 comments:

சென்ஷி said...

இசையின் ராஜாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

-சென்ஷி

கோபிநாத் said...

மறுமொழி சோதனை!

தமிழ் பிரியன் said...

இந்த மாசத்துப் பதிவா? இசையின் அரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கானா பிரபா வேலையை சுலபமாக்கிய ரசிகருக்கு வாழ்த்துக்கள்!

கவிதா | Kavitha said...

!! இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - மறந்துட்டீங்களா???? என்னப்பாட்டுப்பா அது... !!!


(Choco, இந்த மாத பதிவு கோட்டா ஆச்சா?)

கவிதா | Kavitha said...

ஜனனி லிங்க் -
http://www.youtube.com/watch?v=6eFjBl_r4jE

கானா பிரபா said...

இளையராஜா என்னும் இசை மந்திரமே
வாழிய நீ பல்லாண்டு

தல நம்ம தல க்கு சிறப்பானதொரு தொகுப்பு போட்டதுக்கு நன்றி, பின்னீட்டிங் :0

//தமிழ் பிரியன் said...
கானா பிரபா வேலையை சுலபமாக்கிய ரசிகருக்கு வாழ்த்துக்கள்!//
குசும்பு ;) நாமல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆம்மா

ஆயில்யன் said...

அட!


சூப்பரேய்ய்ய்ய்!


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எம் இசை அரசனுக்கு :))))

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் சொல்லுறதுக்கு வயதில்லை... வணக்கம் வைச்சிக்கிறேன்... :)

ஸ்ரீ.... said...

அருமையான பதிவு. நானும் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் வாசியுங்கள்.

ஸ்ரீ....

G3 said...

//ஆயில்யன் said...

அட!


சூப்பரேய்ய்ய்ய்!//


//இராம்/Raam said...

வாழ்த்துக்கள் சொல்லுறதுக்கு வயதில்லை... வணக்கம் வைச்சிக்கிறேன்... :)
//

ரெண்டு கமெண்ட்டுக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்டே :)))

முரளிகண்ணன் said...

அருமையான பதிவு கோபிநாத்.

மடை திறந்தும், கல்யாண மாலையும்
மறக்க முடியாதவை.

அழகர்மலையும் அதில் இணையட்டும்

Anonymous said...

பாடல் தேர்வு நல்லா இருக்கு.

பாச மலர் said...

வாழ்த்துகள்...

மங்கை said...

வாழ்த்துக்கள்

"மடை திறந்து" பாட்டு...எனக்கும் பிடித்த பாட்டு

கோபிநாத் said...

@ சென்ஷி - நன்றி மாப்பி ;)

@ தமிழ் பிரியன் - நன்றி அண்ணாச்சி ;)

@ கவிதா

அந்த பாடலை பற்றி என்னாத்த சொல்ல அந்த பாடலை இசைஞானி பாடும் போது அதை கேட்டு எத்தனை கண்கள் கலங்கியிருக்கும்!!!

ஆனால் இது இசைஞானி பாடலில் தோன்றிய தொகுப்பு அதனால தான் போடலாக்கா ;)

வருகைக்கு நன்றி அக்கா ;)

@ "தல" கானா

\\தல நம்ம தல க்கு சிறப்பானதொரு தொகுப்பு போட்டதுக்கு நன்றி, பின்னீட்டிங் :0\\

;-)) கடமை தல ;))

@ ஆயில்யன் - நன்றி அண்ணே ;)

@ ராம் - நன்றி மாப்பி ;)

@ ஸ்ரீ - நன்றி ஸ்ரீ - வந்துக்கிட்டே இருக்கேன் ;)

@ ஜி3 - நன்றி ஜி3 ;)

@ முரளிகண்ணன் - நன்றி அண்ணே ;)

@ சின்ன அம்மணி - நன்றி அக்கா ;)

@ பாசமலர் - நன்றி அக்கா ;)

@ மங்கை - வருகைக்கு நன்றி அக்கா ;)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்.. அருமையான தேர்வு. (ஆனா இதுக்கு உனக்கு பாராட்டு கிடையாது - தல மூஜிக்லே அருமை இல்லாத தேர்வுதான் கஷ்டம்)

நன்றி ராத்திரி தூங்கப்போகும்போது நிறைவான இசையைக் கேட்டுவிட்டு போவதற்காக.

நாகை சிவா said...

ராஜா என்றுமே ராஜா தான்!

நல்ல தொகுப்பு கோபி!

கரகாட்டகாரன் முதல் பாடலில் கூட ராசா வருவாரே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. :))

கதிர் said...

யானை மாதிரி ஒரு குட்டிதான் போடற... :)
நல்லாருக்கு

தமிழ்ப்பறவை said...

அருமையான தொகுப்பு கோபி... இசைக்கு வாழ்த்துக்கள்...

G.Ragavan said...

இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல இசைத் தொகுப்புகளைத் தந்து மக்களை மகிழ்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களுக்கு என்னுடைய இசைக்கோப்புகளில் தனியானதொரு இடமுண்டு. இப்பொழுது கூட.... பார்வை ஜாடை சொல்ல என்று (எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ) மண்டைக்குள்ளே ஏசுதாசும் ஜானகியும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இசை ஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருவாசகம் போல் அடுத்த பெரும் திட்டம் திருவாய்மொழியாம்! அது விரைவினில் ஈடேற ராஜாவுக்கு வாழ்த்தும் வணக்கமும்!

மாநிலம், நாடு, உலகம்-ன்னு அந்தந்த அளவில் விருது பெறுவது தமிழுக்குப் ஒரு வகையில் பெருமை-ன்னா, என்றும் அழியாத இலக்கியங்களுக்கு இசை என்பது இன்னொரு வகையில் பெருமை!

இந்த இலக்கியத்தோடு இசை என்னும் இளையராஜா என்றும் இருக்கும்(இருப்பார்)!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது
ஓ மைனா மைனா - அதான் இப்போ கேட்டுக்கிட்டு இருக்கேன்! :)

எனக்கு ரொம்ப பிடிச்ச ராஜா டாப் ஃபைவ்...
1. ஓ வசந்த ராஜா
2. நான் தேடும் செவ்வந்திப்பூ இது...
3. சின்னக் கண்ணன் அழைக்கிறான்
4. பூவில் வண்டு கூடும்
5. ஆசையைக் காத்துல தூது...
இந்த அஞ்சும் எப்பவும் என் கூட இருக்கும்! :)

யாழினி அத்தன் said...

கோபிநாத்,

ஒரே விசுவல் போட்டு கலக்கிருகீங்க. எங்கிட்ட அவரோட சுமார் 2000 பாட்டு இருக்கு. அவரோட pattern of mixing ஒரு தனித் தன்மை வாய்ந்தது. அதுல இருந்து தான் உயிர் கிடைக்குது. அவருக்கு இது தெரியுதோ இல்லையோ, அவரோட பாட்டுக்கள ஆராய்ஞ்சு ஒரு 100 பி.எச்டி குடுக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்குது,

இன்னும் புதுசா வந்த 2 பாட்டு போட்டிருந்தா கலக்கலோ கலக்கலா இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

இசை ஞானி பிறந்தநாளா ஜூன் 1?

நன்றி கோபிநாத். ரொம்பநாளைக்கப்புறம் பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. பழையது என்றால் இனியதுன்னு பொருள் கொள்ளவும். மிக இனிமையான நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்த பாடல்கள் இவை. மிக மிக மிக உருக வைத்த பாடல்கள்.
நன்றி.

கோபிநாத் said...

@ பினாத்தல் சுரேஷ்
தல எங்க வரமால் போயிடுவிங்களோன்னு நினைச்சேன். மிக்க மகிழ்ச்சி - நன்றி தல ;)

@ நாகை சிவா
\\கரகாட்டகாரன் முதல் பாடலில் கூட ராசா வருவாரே!\\

நான் தேடி பார்த்தேன் சகா கிடைக்கல அதான் போடல..வருகைக்கு நன்றி சகா ;)

@ முத்துலெட்சுமி

நன்றி அக்கா ;)

@ கதிர்
வருகைக்கு நன்றி கதிர் ;)

@ தமிழ்ப்பறவை
எதிர்பார்த்த பதிவர்களில் நீங்களும் ஒருவர் தமிழ்ப்பறவை - வருகைக்கு மிக்க நன்றி ;)

@ G.Ragavan

வருகைக்கு மிக்க நன்றி ஜிரா ;)

@ kannabiran, RAVI SHANKAR (KRS)

\\திருவாசகம் போல் அடுத்த பெரும் திட்டம் திருவாய்மொழியாம்! அது விரைவினில் ஈடேற ராஜாவுக்கு வாழ்த்தும் வணக்கமும்!\\

வேலை நடந்துக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். கண்டிப்பாக வரும் ;)

\\அழியாத இலக்கியங்களுக்கு இசை என்பது இன்னொரு வகையில் பெருமை!\\

ஆமாம்ல!! ரைட்டு ;)

உங்களுக்கு பிடித்த 5 பாடல்களும் நமக்கும் பிடிக்கும். வருகைக்கு நன்றி தல ;)

@ யாழினி அத்தன்

\\எங்கிட்ட அவரோட சுமார் 2000 பாட்டு இருக்கு. அவரோட pattern of mixing ஒரு தனித் தன்மை வாய்ந்தது. அதுல இருந்து தான் உயிர் கிடைக்குது. அவருக்கு இது தெரியுதோ இல்லையோ, அவரோட பாட்டுக்கள ஆராய்ஞ்சு ஒரு 100 பி.எச்டி குடுக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்குது,\\

ஆகா!!! தல அதை பத்தி எல்லாம் அடிக்கடி பதிவு போடுங்கள். நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் ஆசை. அவரை பத்தி PHD யாரு எல்லாம் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்ச அதையும் போடுங்கள் ;)

\\இன்னும் புதுசா வந்த 2 பாட்டு போட்டிருந்தா கலக்கலோ கலக்கலா இருந்திருக்கும்.\\

தேடினோன் தல கிடைக்கல..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல ;)

@ வல்லிசிம்ஹன்
\\இசை ஞானி பிறந்தநாளா ஜூன் 1?\\

வல்லிம்மா..குட் - அவரோட பிறந்தநாள் ஜூன் 2 பதிவு 1ம் தேதியே ரெடி அதான் ;)

வருகைக்கு மிக்க நன்றி வல்லிம்மா ;)

சென்ஷி said...

யாழினி அத்தன்.

உங்களுக்கு பிடிச்ச ராஜா பாட்டு தேர்வு செஞ்சு வலையேத்துங்க..

பேசாம இதை ஒரு தொடர்பதிவா ஆரம்பிக்கலாம் போலருக்குதே..

ராஜாவுக்கு ஜே!ன்னு போட்டு :))

யாழினி அத்தன் said...

சென்ஷி,

ஒரு தனி பதிவா ராசா பாட்டுகள போட்டு கலக்க ஆசையாதானிருக்கு. அதுக்கு தனி ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்த ஒதுக்கனும். நிச்சயமா முயற்சி செய்யறேன்.

யாழினி அத்தன்

விக்னேஷ்வரி said...

இசை ஞானிக்கு எனது வணக்கங்களும். நல்ல பதிவு கோபிநாத்.

அபி அப்பா said...

அது சரி! பதிவெல்லாம் போட்டா சொல்றது இல்லியா கோபி!

எல்லா பாட்டும் அருமை. எங்க இருந்து கிடைக்குது இதல்லாம் உனக்கு!

வாழ்த்துக்கள் இசை ராஜாவுக்கு!

ராமலக்ஷ்மி said...

பிறந்த நாள் வாழ்த்தாக அருமையான பாடல்களுடனான தொகுப்பு!

இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!

அவர் இசையை ரசிக்கையில் ஒவ்வொரு உள்ளமும் அடையும் ஆனந்தம் யாவும் அவருக்கு வாழ்த்துக்களாகப் போய்ச் சேர்ந்த வண்ணமாய்தான் இருக்கும் எப்போதும்!

கோபிநாத் said...

@ யாழினி அத்தன்

\\அதுக்கு தனி ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்த ஒதுக்கனும். நிச்சயமா முயற்சி செய்யறேன்.\\

நானும் அதுக்கு தான் முயற்சிக்கிறேன் முடியல தல..நீங்க ஆரம்பிங்க கலக்கிடுவோம் ;)

@ விக்னேஷ்வரி

\\இசை ஞானிக்கு எனது வணக்கங்களும். நல்ல பதிவு கோபிநாத்.\\

முதல் வருகைக்கும் நன்றி விக்னேஷ்வரி ;)

@ அபி அப்பா

\\அது சரி! பதிவெல்லாம் போட்டா சொல்றது இல்லியா கோபி!\\

ம்க்கும்...அதெல்லாம் சொல்லாமலே வராணும் ;)

\\எல்லா பாட்டும் அருமை. எங்க இருந்து கிடைக்குது இதல்லாம் உனக்கு!\\

யூடுபில இருந்து ;)

@ ராமலக்ஷ்மி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா ;)

புதுகைத் தென்றல் said...

மடை திறந்து என் ஆல்டைம் ஃப்வேரீட்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா சார்

கவிநயா said...

ரொம்ப தாமதமா வந்துட்டேன் போல. ரசனையுடன் கூடிய அழகான பதிவு. இசைஞானிக்கு வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

ரொம்ப லேட்...ஆனாலும் ரொம்ப ரசிச்சிருக்கீங்க!

எம்.ரிஷான் ஷெரீப் said...

எனக்கும் மிகப்பிடித்த இசை இளையராஜாவினுடையது. அவரது இடைக்காலப் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Rithu`s Dad said...

வரிசைப்படுத்திய மூன்று பாடல்களும் அருமை கோபி.. அதும் அந்த “
நான் தேடும் செவ்வந்திப்பூ இது... ” சொல்லவே தேவை இல்லை .. என்ன ஒரு இசை ஆரம்பம் இந்த பாடலில்..

" நான் தேடும் செவ்வந்திப்பூ இது..." என்ற பாடல் என்றாலே எனக்கு ஞாபகம் வருவது எனது துபாய் அறை நண்பர்கள்.. குறிப்பாக சுதாகர்.. அடிக்கடி இந்த பாட்டை நான் கேட்டதால ஒரு நாள் அவர் சொன்னது “ டேய் நீ இதே பாட்டை.. (குறிப்ப அந்த ஆரம்ப இசையை) திரும்பி திரும்பி கேட்டு.. எனக்கு ரெம்ப பிடிச்ச இந்த பாட்டை “பிடிக்காமல்” ஆக்கிட போறேடா..ன்னார்.....

எப்படி இருக்கே சுதா.!!?

நன்றி கோபி .. வாழ்த்துக்கள்