Saturday, June 14, 2008

சிவாஜி வாயில ஜிலேபி - தசாவதாரம் அல்வா

சிவாஜி வாயில ஜிலேபி தொடரை எழுத அண்ணன் நிஜமா நல்லவன் அழைத்திருக்கிறார். சிவாஜி வாயில நான் எப்படி ஜிலேபி வைப்பது.. அதுவும் இல்லமால் எந்த சிவாஜி வாயில ஜிலேபி வைப்பது. அப்படியே அவர்களுக்கு ஜிலேபி பிடிக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் ஜிலேபிதான் வைக்க வேண்டுமா.. இந்த லட்டு பால்கோவா எல்லாம் வைத்தால் என்ன போன்ற கேள்விகள் கேட்க தோன்றுகிறது. இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நடிகர் கமலின் தசாவதாரம் திரைக்கு வரும் தேதி தெரிவிக்கப்பட்டது. கூடவே கமல் அல்வா கொடுத்திடுவாரோ என்ற சந்தேகமும் சேர்ந்து கொண்டது. இந்த ஊரில் எந்த திரைஅரங்கில் படம் வருகிறது என்று எல்லாம் தெரிந்து கொண்டு டிக்கெட் புக் செய்யலாம் என்று இணையத்தை அழைத்தால் சாரி எங்ககிட்ட அந்த வசதி எல்லாம் இல்லை என்று வந்தது. சரி போங்கடா நானே வருகிறேன் என்று திரைஅரங்கிற்க்கு சொன்றேன். எப்படியாவது 48 மணிநேரத்திற்குள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஏன் இந்த அளவுக்கு கொலைவெறி என்பது எல்லாம் வேறு விஷயம். திரைஅரங்கத்திற்கு சென்று அங்கே இருந்த சேட்டனிடம் நேரம் நாள் எல்லாம் சொல்லி கார்ட்டை எடுத்து நீட்டினேன். அவரு சாரி நைனா இங்கே துட்டுதான் இந்த கார்டு எல்லாம் லேதுன்னு என்னை தொர‌த்திட்டாரு. அட இது என்னடா கடைசி நேரத்தில் சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டே வெளியில் வந்து அந்த பரந்துவிரிந்த கடைவீதியில் தேடி ஒருவழியாக காசு எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து காசையும் எடுத்து ஆண்டவா 48 மணிநேரத்திற்குள் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்னு புலம்பிக்கொண்டே வந்தேன். நல்லவேளை டிக்கெட் கிட்டியது. ஆகா...ஆகா...ஒரே மகிழ்ச்சி தான். அதற்க்குள் தமிழ்மணத்தில் பதிவு வரும். அதை எல்லாம் படிக்கக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தல பினாத்தலார் பதிவை மட்டும் படித்து வைத்தேன்.



படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது இனியும் வரும்.
சிறிய வயதில் தீபாவளிக்கு 1 மாதம் முன்னே எந்த பட்டாசு வாங்குவது, கடைசி நேரத்தில் வெடிக்காமல் போனால் எதிரிக்கூட்டத்தில் முன் மானம் போகுமே என்று ஒன்றுக்கு பலமுறை வெயிலில் காயவைத்தும் தீபாவளிநாள் அன்று ஒரு 5000 வாலா வெடிச்சரத்தை நடுத்தெருவில் வைத்து மொத்தக்கூட்டமும் காதை பொத்திக்கொண்டு அய்யோ சரம் வெடிக்கறாங்க என்று 10அடி தூரத்தில் அவர்களை நிற்கவைத்துவிட்டு, தீயை கொளுத்தியவுடன் அந்த சரம் வெடிக்காமல் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று போகாமல் சும்மா சர சரன்னு வெடித்து ஊரையே ஒரு நிமிடம் நம்மைபார்க்க வைக்கும் போது மனிதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுபோலத்தான் கலைஞானியின் இந்த தசாவதாரம் படம்.
இத்தனை வருடங்களில் நமக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் தொடங்கியதும் வெடிக்க ஆரம்பிக்கிறது. முடியும்வரையில் வெடி வெடி தான். இத்தனை வருட உழைப்பு ஒன்றும் ஃபிலிம் காட்டுவதற்கு இல்லை என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.


12ம் நூற்றாண்டில் தொடங்கி அமெரிக்க விஞ்ஞானி வழியாக ஒவ்வொரு கமலாக உள்ளே வருகிறார்கள். ரெட்டியாக வரும் கமல் அவரை பார்த்தவுடனே திரைஅரங்கில் சிரிப்பு சத்தம் கேட்க தொடங்கிவிடுகிறது. 10 கமலுக்கும் ஒவ்வொரு இடத்தில் அவர்களின் திறமை காட்ட வைத்திருக்கிறார்கள். எந்த கமலும் வேஸ்டாகவில்லை என்றே எனக்கு தோன்கிறது. ஆனால் பலபேருக்கு தோன்றும் ஒரே சந்தேகம். எதற்காக அந்த 12ம் நூற்றாண்டு காட்சிகள் என்பது தான். படத்திற்கு எங்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் அந்த பாடலும், அந்த சண்டை காட்சிகளும் அற்புதமாக இருக்கிறது. தல கே.ஆர்.எஸ் இந்த படத்தை வைத்து பதிவு போட மேட்டர் இல்லாம‌ல் காட்சிகள் கற்பனை கலந்தது என்று முன்னே சொல்லிவிடுகிறார்கள்.



குறைகள் இல்லாம‌ல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்.

ஒளிபதிவர் ரவிவர்மனின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் விதம் மிக அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. பின்னணி இசைய‌மைத்திருக்கும் தேவி ஸ்ரீபிராத் அவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்.



கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கே.எஸ்.ரவிகுமார் இல்லை என்றால் படம் எப்படி இருந்திருக்குமோ என்ற பயம் வருகிறது. கமல் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவர் போகும் பாதை சரியா தப்பா என்பதை சுட்டிக்காட்ட ஒருவர் தேவை. அந்த தேவையை கே.எஸ்.ரவிக்குமார் மிகச்சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.

திரைக்கதை அமைத்த‌தில் ஒட்டைகள் இருந்தாலும் அதை எல்லாம் அந்த 10 கமல்களை காண்பித்து வாயடைத்துவிடுகிறார்கள். தனது முந்தைய படங்களின் தோல்வியும், சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும். மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம். நம்மவர் எடுத்திருக்கும் படம். அதில் நம்மவரின் உழைப்பை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய படம்.

ஆமா அதுக்கு எதுக்கு தசாவதாரம் அல்வான்னு தலைப்பு வச்சிருக்கான்னு கேட்குறிங்களா...அல்வாவும் ஒரு இனிப்பு தானே....எப்படி நம்ம அல்வா.

34 comments:

MyFriend said...

me the firstuu.. :-)

MyFriend said...

போஸ்ட் படிச்சுட்டு வாரேன். :-)

நிஜமா நல்லவன் said...

Naan first'ah?

MyFriend said...

ஹய்யோ ஹய்யோ.. தெரிஞ்சிருந்தா என்னோட டசவதாரம் பதிவையும் ஜிலேபி வாயில சிவாஜின்னு போட்டிருப்பேனே..

G.Ragavan said...

படம் பார்த்தேன். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கலாம். கண்டிப்பாகப் பார்க்கலாம்.

படம் தொய்வில்லாம ஓடிக்கிட்டேயிருக்கும். கருணாநிதி ஜெயலலிதா புஷ்ஷுகளைத் தவிர்த்திருக்கலாம்.

பூவராகனும் பலராம் நாயுடுவும் நல்ல பாத்திரங்கள்.

நிஜமா நல்லவன் said...

அட எந்த பதிவுக்கு போனாலும் பர்ஸ்ட் கமெண்ட் மை பிரண்ட் போட்டுடுறாங்களே:)

நிஜமா நல்லவன் said...

///மை ஃபிரண்ட் ::. said...
ஹய்யோ ஹய்யோ.. தெரிஞ்சிருந்தா என்னோட டசவதாரம் பதிவையும் ஜிலேபி வாயில சிவாஜின்னு போட்டிருப்பேனே..///


அதானே? என்ன இருந்தாலும் கோபி திறமை யாருக்கு வரும் சொல்லுங்க.

கதிர் said...

அருமையான விமர்சனம் நண்பரே :)

MyFriend said...

//ப்படியாவது 48 மணிநேரத்திற்குள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். /

நீங்க டாக்டர் படிப்பு ஏதாவது படிக்கிறீங்களோ? எதுவும் 48 மணி நேரத்துல சொல்றதுக்கு. :-)))

அபி அப்பா said...

நல்லாயிருக்கு!!

MyFriend said...

சூப்பரண்ணே. நல்லா இருக்கு. :-)

Geetha Sambasivam said...

அட, எனக்குத் தெரிஞ்சு நீங்க தான் இந்தப் படம் நல்லா இருக்குனு சொன்ன முதல் ஆள், நீங்க நிஜமாவே ரொம்பவே நல்லவருங்கோ!!!!!
ம்ம்ம்ம்ம்??? எதை நம்பி இந்தப் படத்தைப் பார்க்கிறதுனு புரியலை!!! :)))))))

சின்னப் பையன் said...

//சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும்//

சூப்பர் ஸ்டார் தவறு செஞ்சிட்டாரா!!! எடுரா ஆட்டோவை... கூப்பிடுறா ஆட்களை!!!

கானா பிரபா said...

கலக்கல் தல, தலைப்பை பார்த்திட்டு தலைவரை சீண்டுறீங்களோன்னு நினைச்சேன், ஆட்டோ கூட ரெடியா இருந்தது, ஜஸ்டு மிஸ்ஸு ;-))

கானா பிரபா said...

சிறப்பாக, நுணுக்கமாக இருக்கிறது உங்கள் பார்வை தல

ஸயீத் said...

கோபி!

அல்வா கொடுத்துட்டீங்கப்பு, நல்ல வேளை தசவாதார நாமம்(கமல் போட்டிருக்காரே)னு தலைப்புக் கொடுக்காம போனீங்க, ரெம்பவும் ஏமாந்திருப்போம்ல!.

Dreamzz said...

innum 2 hoursla parka poren :)

Anonymous said...

\\மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம்.\\ கண்டிப்பா பாத்துருவோம். என்ன இங்க வரும்போது படம் ஆறி அவலா போயிருக்கும். கண்டிப்பா திரையரங்கத்துல போடுவாங்க இன்னும் ஒரு மாதத்துல.

Anonymous said...

மாமு, இன்னைக்கு தான் படம் பார்த்தேன். அட்டகாசமா இருந்துச்சு! ஆனா அந்த குலோத்துங்க சோழன் வர்ற இடம் தான் படத்தோட கதை போக்குல சேரல. இத்தனை விதம் விதமான ரோல் செஞ்ச கமலை பாராட்டியே ஆகணும்!

அகரம் அமுதா said...

நல்லதோர் அருமையான் விமர்சனத்தைத் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வழக்கம்போல ரெண்டு பதிவில் போடவேண்டிய விசயத்தை ஒரே பதிவில் போட்டு மிச்சம் பிடிப்பதை கண்டிக்கிறேன்.. வரவர அந்த பெரிய நடிகர்கள் வருசத்துக்கு ஒரு படம். இரண்டரை வருச தயாரிப்பு மாதிரி கோபி செய்வது தன்னை பெரியாளா காமிக்கறதுக்கா.. ன்னு ஒரேகுழப்பமா இருக்கு..

Anonymous said...

குறைகள் இல்லாம‌ல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்//correct!!!ovvoru kelviyum weettukku pogum pothu unga koodave kilambi irukkumey?........

Anonymous said...

//சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும்////சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும்//

தசாவதாரத்தை ஏற்றிச் சொல்வதற்காக இது தேவையா?

அப்படியென்றால், இப்படத்தில் தவறுகளே இல்லையா?

கோபிநாத் said...

@ மை ஃபிரண்ட்
நன்றி ;)

@ நிஜமா நல்லவன்

நன்றி ;)

@ ராகவன்

\\படம் பார்த்தேன். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கலாம். கண்டிப்பாகப் பார்க்கலாம்.\\

இதை தான் நானும் சொல்லுகிறேன். ;)

\\பூவராகனும் பலராம் நாயுடுவும் நல்ல பாத்திரங்கள்.\\

உண்மை...வருகைக்கு நன்றி ஜிரா ;)

@ தம்பி

நன்றி

@ அபி அப்பா

நன்றி

@ கீதா சாம்பசிவம்'

\\ எதை நம்பி இந்தப் படத்தைப் பார்க்கிறதுனு புரியலை!!! :)))))))\\

உங்க உண்மையான தொண்டனை நம்பி பாருங்கள் தலைவி ;))

@ ச்சின்னப் பையன்

\\\சூப்பர் ஸ்டார் தவறு செஞ்சிட்டாரா!!! எடுரா ஆட்டோவை... கூப்பிடுறா ஆட்களை!\\

;))

சீக்கிரம் வாங்க ;))

கோபிநாத் said...

@ கானா பிரபா
\\கலக்கல் தல, தலைப்பை பார்த்திட்டு தலைவரை சீண்டுறீங்களோன்னு நினைச்சேன், ஆட்டோ கூட ரெடியா இருந்தது, ஜஸ்டு மிஸ்ஸு ;-))\\

தல

ஆகா...அதான் ஊரே சீண்டுதே..இதுல நான் வேறயா!! ;)

\\சிறப்பாக, நுணுக்கமாக இருக்கிறது உங்கள் பார்வை தல\\

நன்றி தல ;)

@ ஸயீத்

\\கோபி!
அல்வா கொடுத்துட்டீங்கப்பு, நல்ல வேளை தசவாதார நாமம்(கமல் போட்டிருக்காரே)னு தலைப்புக் கொடுக்காம போனீங்க, ரெம்பவும் ஏமாந்திருப்போம்ல!.\\

வாங்க ஸயீத் எல்லாம் ஒரு விளம்பரம் தான்...படத்தை பார்த்துட்டிங்களா!? ;)

@ Dreamzz
\\innum 2 hoursla parka poren :)\\

சூப்பரு ;)

@ சின்ன அம்மிணி
\\மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம்.\\ கண்டிப்பா பாத்துருவோம். என்ன இங்க வரும்போது படம் ஆறி அவலா போயிருக்கும். கண்டிப்பா திரையரங்கத்துல போடுவாங்க இன்னும் ஒரு மாதத்துல.\\

எப்படி வந்தாலும் பார்த்துடுங்க....அம்புட்டு தான் ;)

@ அமுதன்
\\மாமு, இன்னைக்கு தான் படம் பார்த்தேன். அட்டகாசமா இருந்துச்சு! ஆனா அந்த குலோத்துங்க சோழன் வர்ற இடம் தான் படத்தோட கதை போக்குல சேரல. இத்தனை விதம் விதமான ரோல் செஞ்ச கமலை பாராட்டியே ஆகணும்!\\

வா..மாப்பி வா..;)

சரியாக சொன்ன மாப்பி ;)

@ அகரம்.அமுதா

\\நல்லதோர் அருமையான் விமர்சனத்தைத் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\\

முதல் வருகைக்கு நன்றி அகரம்.அமுதா ;)

@ கயல்விழி முத்துலெட்சுமி
\\\வழக்கம்போல ரெண்டு பதிவில் போடவேண்டிய விசயத்தை ஒரே பதிவில் போட்டு மிச்சம் பிடிப்பதை கண்டிக்கிறேன்..வரவர அந்த பெரிய நடிகர்கள் வருசத்துக்கு ஒரு படம். இரண்டரை வருச தயாரிப்பு மாதிரி கோபி செய்வது தன்னை பெரியாளா காமிக்கறதுக்கா.. ன்னு ஒரேகுழப்பமா இருக்கு..\\


ஆகா..இப்படி எல்லாம் கொளுத்தி போடலாமா அதுவும் தம்பி பதிவுல!!!

தம்பி பாவம் இல்லையா...அவ்வ்வ்வ் ;)

@ jaseela

\\குறைகள் இல்லாம‌ல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்//correct!!!ovvoru kelviyum weettukku pogum pothu unga koodave kilambi irukkumey?........\\

வாங்க ஜெசிலா (எங்க ஏரியா ஜெசிலா தானே!?))

ஆமாம்..சில கேள்விகள் இன்னும் இருக்கு...அதெல்லாம் பார்த்த வேலைக்காது ;))

@ Mohan

//சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும்////சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும்//

வாங்க மோகன் ;)

\\தசாவதாரத்தை ஏற்றிச் சொல்வதற்காக இது தேவையா?\\

யோசித்து பார்க்கும் போது தேவை இல்லைதான்..ஆனா எனக்கு அப்போ தோணுச்சி போட்டுட்டேன் ;))

\\அப்படியென்றால், இப்படத்தில் தவறுகளே இல்லையா?
\\\

நான் எங்கே அப்படி சொன்னேன்..தயவு செய்து மீண்டும் பதிவை பாருங்கள் ;)

உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தல கே.ஆர்.எஸ் இந்த படத்தை வைத்து பதிவு போட மேட்டர் இல்லாம‌ல் காட்சிகள் கற்பனை கலந்தது என்று முன்னே சொல்லிவிடுகிறார்கள்//

அடிங்க!
கமல், என் பேச்சைக் கேட்டு நல்ல புள்ளையா நடந்துக்கிட்டாரு! நான் சொன்னா மாதிரியே டிஸ்கி எல்லாம் போட்டிருக்காரு!
கமல் எவ்ளோ நல்லவரு! நீஉம் இருக்கியே மாப்பி! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதையெல்லாம் சிவாஜி வாயில ஜிலேபியா ஒத்துக்க முடியாது!

கோபி, நீனே சொல்லிட்ட அல்வா தான் கொடுத்தேன்-னு!
ஸோ, வேர் இஸ் த ஜிலேபி?
வி வான்ட் ஜிலேபி!

Anonymous said...

தலைப்பை பாத்து ஆண்டவர்கிட்ட மோதுறீங்களோன்னு லுங்கிய மடிச்சு கட்டி வந்தேன். அப்படி எதுவும் இல்லாததால தப்பிச்சுட்டீங்க தல :D

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி.. வாழ்க வளமுடன்.. :)

Geetha Sambasivam said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி! ரொம்பவே தாமதமாப் போயிடுச்சு!!! தமிழ்மணம் மட்டுமில்லாமல் வலை உலகே கொண்டாடிய ஒரு பிறந்த நாள் எனக்கு மட்டும் தெரியாமல் போயிருக்கே?? :(

ஷைலஜா said...

சிறப்பான பார்வை கோபிநாத்! கடைசிவரி அல்வாதான் நிஜம்மா!!
(ஆமா எங்க என் பதிவுக்கு இப்போல்லாம் வர்ரதே இல்ல? எப்போதும்நீங்கதான் முதல்ல வருவீங்க? பின்னூட்டப்புயலே நீங்க தானே? கோபிக்கு ஏதும் கோபமா என் மேல?)

ஷைலஜா said...

Happy Birthday Gopi! (குழுல சொல்லிட்டேன்ன்னு இங்க வரவேஇல்ல..).நூறாண்டு வாழ்க!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் கூறிய சஞ்சய், தலைவி, ஷைலஜா அக்கா அனைவருக்கும் நன்றி ;))

@ ஷைலஜா
\\சிறப்பான பார்வை கோபிநாத்! கடைசிவரி அல்வாதான் நிஜம்மா!!
(ஆமா எங்க என் பதிவுக்கு இப்போல்லாம் வர்ரதே இல்ல? எப்போதும்நீங்கதான் முதல்ல வருவீங்க? பின்னூட்டப்புயலே நீங்க தானே? கோபிக்கு ஏதும் கோபமா என் மேல?)\\

அக்கா என்ன இது இப்படி சொல்லிட்டிங்க...அவ்வ்வ்...கொஞ்சம் ஆணி அதிகம்...இதோ வந்துட்டேன் ;))

Unknown said...

பதிவு நல்லா இருக்கு அண்ணா படமும் தான்....!! :-)