Saturday, July 12, 2008

காத்திருந்த காதலி: பாகம் 9

இதுவரை

காத்திருந்த காதலி: வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7
மை ஃபிரண்ட் - பாகம் 8

முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது. எப்படியும் நீ எழுதியிருக்கிறது புரியப்போறதுல்லன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இருந்தாலும் ஒரு முன் எச்சரிக்கை அதான்.

கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...அப்புறம் இந்த கெளரியை கார்த்திக்கோட டைரியை திறந்து பார்க்குற மாதிரி வச்சிட்டாங்க....மீதி நான் எழுதியிருக்கேன். இப்போ கதைக்கு உள்ளே போவோம். ரொம்ப உள்ள போயிட்டு என்னை காணோமேன்னு தவிக்கக்கூடாது. பத்திரமா ஒவ்வொருத்தரா கையைப்பிடிச்சுட்டு என் பின்னாடியே அப்படியே பொறுமையா வாங்க.
----------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் நால்வருக்கும் ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தனர். சங்கர் அரைமயக்கத்தில் இருந்து முழுமயக்கத்திற்க்கு சென்றுவிட்டான். கார்த்திக் மனதில் சங்கர் என்ன சொல்லியிருப்பான். என்ன சொல்லியிருந்தால் கௌரி அப்பா வெளியே சென்றிருப்பார். ஒரு வேளை வெளியே போங்கன்னு சொல்லியிருப்பானோ! அதான் அவர் போயிட்டாரா....ச்ச எதுக்கு அடிக்குறானுங்கன்னு தெரியாமல் அடிவாங்குறேன். இது என்ன நம்ம நிலைமை வடிவேலு காமெடி மாதிரி ஆகிடுச்சி....

அப்பா : "டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு நல்லா தானே இருந்திங்க"

அம்மா : "உங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாமத்தானேடா வளர்த்தோம். இப்ப என்னடா நடக்குது...ஒண்ணுமே புரியலியே கடவுளே!"

"இவுங்களுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்குறது. எனக்கே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது."

கார்த்திக் : "சார்.... கதை எழுதற கோபி சார்....! உங்களைத்தான்.... கொஞ்சம் கதையை வேற எங்கயாச்சும் சுத்திட்டு அப்புறம் வாங்களேன். இங்க புலம்பல் ஓவராக இருக்கு....எனக்கு ஒண்ணும் புரியல ப்ளீஸ் ... டோண்ட் ரைட் ஃபீலிங்க்ஸ் :( !"

கதை எழுதற கோபி (அதாவது நான்): "கார்த்திக் இப்படி ரொம்ப பீல் பண்ணி கேட்டுகிட்டதானால நாம இப்போ கேளரி....ச்ச..கெளரி இருக்கும் இடத்திற்க்கு போக போறோம். எல்லாம் லைன்ல வாங்க....."===========================================================

சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம். கிசுகிசு படிக்குற கிராதகனுங்க.. நாம படிச்சவுங்கதானே (ஆமாம். பத்தாவது பார்டர்ல பாஸ் பண்ணிட்டு இப்படி அடிக்கற அலம்பலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல). இப்படி யாரும் இல்லாத வீட்டுல அதுவும் அதிகம் சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அறையில் அவரோட டைரியை எடுத்து படிக்கிறோமே என்பதில் வெட்கமோ குற்ற உணர்வுகளே அப்போது அவளுக்கு தோன்றவில்லை. ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. அதனை அடைவதற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தான் அப்போது அவளுக்கு இருந்தது.

அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. டைரியின் வேலைப்பாடுகளை ரசித்துக்கொண்டிருந்தவள் "இது அவன் காசு கொடுத்து வாங்கியிருப்பானா... இல்ல ஓசியில ஏதாவது கம்பெனியில இருந்து வாங்கியிருப்பானா.. ச்ச! இது என்ன அவனோட காதலியை பத்தி தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தா இப்படி டைரியை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க.. மனுஷன் மனசு குரங்குன்னு ஒரு இடத்துல ஒரு நிமிஷம் இருக்கா....தவிக்கிட்டே இருக்கு என்று எண்ணி தனக்கு தானே சிரித்துக் கொண்டாள். ச்சே! இது என்ன சிரிச்சிக்கிட்டு இருக்கேன். என்னோட காதலன் அங்கே விபத்துல இருக்காரு இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். இதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க. (டேய்! இதுக்கெல்லாம் ஒரே பேரு தாண்டா மெண்டல்). என்ன இது.. இப்படி லூசு மாதிரி (கன்ஃபர்ம் ஆயிடுச்சு பார்த்தியா) எண்ணங்களை ஓட விட்டுட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி மொத்தமாக படிக்கிற உங்களையும் லூசு மாதிரி யோசிக்க வைத்துக் கொண்டே டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்.

(பேக் கிரவுண்டில் சுட்டும் விழிச்சுடரே.. கஜினி பட பாடல் ஒலிக்கத்தொடங்கினால் அது என் தவறில்லை. அசினை மட்டும் மனதில் கொள்ளுதல் நலம்)

அடங்கொய்யால.... எடுத்தவுடனே இவனும் டைரியில கவிதையில வாந்தி எடுத்து வச்சிருக்கானே.. :(

************************* ********
**************
*********************
*************
!
!!

(அடுத்தவங்க கவிதைய என் பதிவுல போட்டு திருட்டுப்பையன்னு சொல்லிட்டா என்ன செய்யறது.. அதான் ஒரு எச்சரிக்கை)

கௌரிக்கு அதை படித்தபோது ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் ஒன்றும் புரியாமல் தவித்தாள். கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. பின்னால் விழுவது போல இருந்து மீண்டு சுதாரித்தாள். டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள். கருமம் பிடிச்சவன். லவ் பண்றாங்கறத நெனைப்புல வச்சுக்க வேற ஏதுமே கிடைக்கலையா. காஞ்சு போன மல்லிப்பூவ வச்சிக்கிட்டு இவன் என்னத்த செய்யறான். இந்த மல்லிப்பூவின் நார் கிடைத்தாலாவது ஏதாவது துப்பு கிடைக்கலாம். டைரியின் பக்கங்களை மெல்ல பயத்துடன் திருப்பினாள். அடுத்தடுத்த பக்கங்களில் அவன் காதலி கண்டு பயந்த கரப்பான் பூச்சியை பாடம் செய்து வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை வாய் வழியாக எடுக்கும் நினைவில் வந்தது.

இன்று.... 2002 - பிப்ரவரி - 10 ந்தேதி - லேண்ட் மார்க்கில் அவளுக்காக வேலண்டைன் கார்டு வாங்க நின்று கடனுக்கு அட்டை கிடைக்காமல் திரும்பி வந்தேன். (அடடா.. என்ன கொடும சார் இது..!)

2002- பிப்ரவரி - 12 ந்தேதி- பர்மா பஜாரில் உள்ள பெரிய ஒலிம்பிக் கார்டு கடையில் கஷ்டப்பட்டு ஒரு கார்டை லவட்டி வந்து அர்ஜண்டாய் அவள் பெயரை எழுதி பத்திரப்படுத்தியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் அவள் கையில் தந்து பரிசாய் ஒரு சாக்லேட்டாவது அவள் காசில் சாப்பிட வேண்டும். (லவ்வுக்காக லவட்டுறதுங்கறது இதுதான் போல)

2002- பிப்ரவரி- 14 ந்தேதி - காலை 10 மணி - இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை சந்திக்கப் போகிறேன். அவள் என்ன சொல்வாளோ என்ற பயம் நெஞ்சை அரிக்கிறது. காலையில் சாப்பிட்ட எண்ணெய் அதிகமான பூரியின் வேலையாய் கூட இது இருக்கலாம்.

2002- பிப்ரவரி- 14 ந்தேதி - மாலை 7 மணி - கௌரி எனக்கு துரோகம் செய்வாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவனும் துரோகியாகிவிட்டானே என்ற எண்ணத்தில் நான் இரவு சாப்பிட பிடிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் படுத்து விட்டேன். (காசில்லைடா.. வேற என்ன செய்வ)

கௌரிக்கு அதை படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. காரணம் சங்கர், அவளிடம் பகிரங்கமாய் காதலை சொன்னதும் அதே எழவெடுத்த தேதியில்தான்.... ஒருவேளை.. ஒருவேளை.. கார்த்திக் லவ் பண்ண பொண்ணு பேரும் கௌரியா இருக்குமோ.. (இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா...) ஆனால் அடுத்த பக்கத்தில் அவன் எழுதியிருந்த வரிகளை படிக்க படிக்க அவளுக்கு பதற்றமும் பயமும் உண்டாயிற்று.. "கௌரி இந்த உயிர் உன்னுடன் வாழ்வதற்கு வைத்திருக்கிறேன். உன்னுடன் வாழ்வதற்கு எவனும் குறுக்கே வந்தால் அவன் உயிரை எடுப்பதற்கும் துணிந்திருக்கிறேன்" இப்படிக்கு உன் அன்பு கதலன்... கார்த்திக் (நாசமா போனவன் காதலன்னு தப்பில்லாம உருப்படியா எழுத துப்பில்ல.. அத விட்டுட்டு இந்த நாதாறிக்கு லவ்வு ஒரு கேடு). டைரியை தோளில் மாட்டியிருந்த டம்பப்பையில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேற அவள் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது.

காரணம் வெளியே.... (சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது). அரையடி ஸ்கேல் நீளத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூன்றடி உயரத்தில் வீட்டு வாசலில் படுத்திருந்த அந்த தெரு நாய் அவளை கண்டு எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தது. பயத்துடன் மீண்டும் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு ஜன்னலின் வழியே நாயைப்பார்த்து பழிப்பு காட்டியதும்தான் அவளுக்கு நிம்மதியானது.

அந்த சமயம்..

வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அவளது அப்பா இறங்கினார். வீட்டிற்குள் இருந்த கௌரியை கண்டு முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு நாயை தாண்டி உள்ளே நுழைந்தார்.

ஜன்னலின் அருகே சென்று கௌரியை பார்த்து, "என்னமா இது. இப்படி நாய்க்கு போய் பயந்து உள்ள ஒளிஞ்சுட்டு இருக்கே. குலைக்கிற நாய் கடிக்காதுங்கறத பழமொழிய நீ கேள்விப்பட்டது இல்லையா"

ப‌ய‌ உண‌ர்வுட‌ன் கௌரி, "அந்த‌ ப‌ழ‌மொழி என‌க்கு தெரியும்ப்பா. ஆனா அது இந்த‌ நாய்க்கு தெரியுமான்னு தெரியலையே.. அவ‌ச‌ர‌த்துல‌ எங்க‌யாச்சும் க‌டிச்சு வ‌ச்சுட்டா நான் என்ன‌ செய்ய"

அப்பா: "தப்பும்மா. வாயில்லா ஜீவனை இப்படில்லாம் பேசக்கூடாது"

கௌரி: "அது வாயில‌ நீங்க‌ கைய‌ வ‌ச்சு இந்த‌ ட‌ய‌லாக்க‌ சொன்னாக்கூட‌ நான் ந‌ம்ப‌ மாட்டேன்."

"ட்டம்மார்.." வெளியே பெருத்த‌ ச‌ப்த‌த்துட‌ன் காரின் ட‌ய‌ர் வெயில் தாங்காம‌ல் வெடித்த‌து.

(இதுக்குப் பேரு சஸ்பென்சான்னு யாரும் கேக்கப்படாது. என்னை மாதிரி அடுத்து வர்றவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நானே ஒரு பிட்டை எடுத்துப்போட்டிருக்கேன். அம்புட்டுதான்)
=======================================================================
சரி இத்தோட என்னோட கடமை முடிந்தது (இந்த மாசத்து கடமைன்னு எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது) அடுத்து நான் அழைக்கும் நபர்..... தற்போது அமெரிக்காவில் இந்த பக்கம் ஒரு வெள்ளை இந்த பக்கம் ஒரு கருப்பின்னு நடுவுல நம்ம ஆளு அதாங்க நம்ம கதாசிரியார் கப்பி பய ;)

48 comments:

Anonymous said...

மீ த ஃபர்ஸ்ட்டு :))

(ஹப்பாடி.. மாப்பி பதிவுல இது வரைக்கும் மொதோ கமெண்டு போட்டதில்லங்கற குறை இன்னிக்கு தீர்ந்து போச்சு)

SENSHE

Aruna said...

ஏன் இந்தக் கொலை வெறி???
அன்புடன் அருணா

கயல்விழி முத்துலெட்சுமி said...

அருமை அருமை.. அட்டகாசம்..கோபி கடமை கண்ணியம் கட்டுப்பாடு ன்னு உன் பேரை க க க க்கு முன்னால சேத்துக்கலாம்..

TBCD said...

அய்யோ...அய்யோ...

இனிமே யாரச்சும் கதை எழுது என்று வந்தால்..இருக்கு சேதி...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணன்னா அண்ணந்தான். கடமையை கரேக்ட்டா செஞ்சிட்டீங்க..

நடு நடுவுல காமெடி அசத்தல். அட.. நீங்களும் அதுல ஒரு கேரக்டர். எழுத்தாளரா? அந்த மருத்துஅவ்மனைல நடந்த சம்பவம் என்னன்னு கெஸ் பண்ண முடியலையா?

பரவால்ல.. கரேக்ட்டான ஆளைத்தான் பிடிச்சிருக்கீங்க. அறிவுஜீவி கதை எழுதுவதில் மன்னன். ஷெர்லோக் ஹோல்ம்ஸ் மாதிரி. பிரிச்சு மேய்ஞ்டிவார்.. ;-)

இந்த மாத கோட்டா ஓவர். அடுத்து அடுத்த மாதம் புது பதிவா? ;-)))))

Anonymous said...

\\முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது// ஒகே படிச்சிட்டு வர்றேன்

கானா பிரபா said...

//சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம்.//

ஆஹா ஆஹா, கதையின் நடுவிலே சிந்தனையை அப்படியே அள்ளி எறச்சிட்டீங்களே தல ;-)

பின்னீட்டீங்க க.க.க தல கோபி

ஆயில்யன் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
அருமை அருமை.. அட்டகாசம்..கோபி கடமை கண்ணியம் கட்டுப்பாடு ன்னு உன் பேரை க க க க்கு முன்னால சேத்துக்கலாம்..//


ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)

மங்களூர் சிவா said...

/
Aruna said...
ஏன் இந்தக் கொலை வெறி???
அன்புடன் அருணா
/

/
TBCD said...
அய்யோ...அய்யோ...

இனிமே யாரச்சும் கதை எழுது என்று வந்தால்..இருக்கு சேதி...
/

ரிப்பீட்டு
ரிப்பீட்டு.........

ஜி said...

//\\முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது// ஒகே படிச்சிட்டு வர்றேன்//

நானும் மெதுவா எல்லாத்தையும் படிச்சிட்டு அப்புறமா வர்றேன்.. :)

கப்பி பய said...

//************************* ********
**************
*********************
*************
!//

இது என்ன தமிழ்மணத்துல தடைசெய்யப்பட்ட கவுஜயா? :))அடுத்த பாகம் போட்டாச்சு அண்ணாச்சி - http://kappiguys.blogspot.com/2008/07/10.html

கீதா சாம்பசிவம் said...

மொத்தமும் படிச்சுட்டே வரேன்! :P

Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ...கோபி மலேசியா மாரியாத்தாக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்... :-)

Syam said...

கப்பி,

நீங்களும் இந்த கமெண்ட்ட இப்பவே காபி பேஸ்ட் பண்ணிக்கலாம் :-)

Syam said...

ஒரு அஞ்சு கமெண்ட் போடலாம்னு நினைச்சேன்...இன்னைக்கு தான் எனக்கு இந்த ரகசியம் தெரியும் நிறையா கமெண்ட் போட்டா தமிழ்மணம் ம திரட்டில நம்ம பேரு வரும்னு... :-)

Syam said...

எத்தனைன்னு தெரியல... சோ இது எல்லாம் போனசு... இது எனக்கு நானே சொல்லிகிட்டது... :-)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ம்முடியல!!!!!!!!!!!!
:00)

கோபிநாத் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி ;-))

கிருபா said...

கோபிநாத் சார்,


//சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம்.//


இதுக்கு முன்னாடி நிறைய
டைரி படிச்சிருப்பீங்க போல

Sri said...

//முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது.//

படிக்கல ஆனா இந்த பாகம் நல்லா இருக்கு..!! :-)

Sri said...

//கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...//
அச்சச்சோ அப்படியா?? ஆனா மை ஃப்ரெண்ட் ரொம்ப நல்லவங்கனு கேள்விப்பட்டேனே..!! ;-)

Sri said...

//இப்போ கதைக்கு உள்ளே போவோம். ரொம்ப உள்ள போயிட்டு என்னை காணோமேன்னு தவிக்கக்கூடாது. பத்திரமா ஒவ்வொருத்தரா கையைப்பிடிச்சுட்டு என் பின்னாடியே அப்படியே பொறுமையா வாங்க.//

ம்ம்ம் சரி அண்ணா..!! :-)

Sri said...

//கார்த்திக் மனதில் சங்கர் என்ன சொல்லியிருப்பான். என்ன சொல்லியிருந்தால் கௌரி அப்பா வெளியே சென்றிருப்பார். ஒரு வேளை வெளியே போங்கன்னு சொல்லியிருப்பானோ! அதான் அவர் போயிட்டாரா....///

வாரேவா எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு..!! ;-)

Sri said...

// எல்லாம் லைன்ல வாங்க....."===========================================================//
ம்ம்ம் வந்துட்டேன்..!!

Sri said...

//அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. //
இதென்ன ஈகிள் டைரிக்கு விளம்பரமா?? ;-)

Sri said...

//************************* ********
**************
*********************
*************//

வாவ் சூப்பரா இருக்கு அண்ணா கவிதை..!! ;-)

Sri said...

//டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள்.//
அவன் பயாலஜி படிச்சவனா?? ஹெர்பேரியத்துக்காக இருக்கும்..!!
;-)

Sri said...

//அடுத்தடுத்த பக்கங்களில் அவன் காதலி கண்டு பயந்த கரப்பான் பூச்சியை பாடம் செய்து வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை வாய் வழியாக எடுக்கும் நினைவில் வந்தது.//

:-))))))))))))))))))))))))))))

Sri said...

//இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா//

அவளா கிரியேட் செய்யறா?? ;-)

Sri said...

//சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது//

கரெக்ட் அண்ணா கதைக்கரு கெட்டுப் போயிடக்கூடாதில்ல‌..!!

Sri said...

//"அந்த‌ ப‌ழ‌மொழி என‌க்கு தெரியும்ப்பா//

ச்சே அவ்ளோ அப்பாவியா அண்ணா உங்க கதாநாயகி??

Sri said...

//மீ த ஃபர்ஸ்ட்டு :))

(ஹப்பாடி.. மாப்பி பதிவுல இது வரைக்கும் மொதோ கமெண்டு போட்டதில்லங்கற குறை இன்னிக்கு தீர்ந்து போச்சு)

SENSHE

3:31 PM, July 12, 2008 //

Anna oru doubt..!!
Post pOttathe 3:32 kku, apparam yeppadi first comment 3:31 kke??
;-)

சென்ஷி said...

@ ஸ்ரீ....

:))) உங்க கமெண்டையெல்லாம் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். பதிவே மொக்கைன்னா அதை இந்தளவு கொடுமைப்படுத்த சத்தியமா வேற யாரலயும் முடியாது தாயே...!

எல்லோரும் மாப்பிக்கு பயந்துட்டு சூப்பருன்னு சொல்லிட்டு எஸ் ஆகறப்ப நீ மட்டும் எப்படி தாயி இப்படி பிச்சு உதறியிருக்க...

//Anna oru doubt..!!
Post pOttathe 3:32 kku, apparam yeppadi first comment 3:31 kke??
;-)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

தங்கச்சி.. உன்னை பாராட்டி ரெண்டு செகண்டு முடிக்கறதுக்குள்ள இப்படி ஒரு குற்றச்சாட்டா. நல்லா கண்ண இல்லன்னா கண்ணாடிய துடைச்சுட்டு பாரு. மாப்பி போஸ்ட் போட்டது....

//posted by கோபிநாத் at 3:22 PM on 12 Jul, 2008//

நான் கமெண்ட் போட்டது...

//3:31 PM, July 12, 2008//

ஓக்கேவா.. அப்புறம் நாலு பேரு நடுவுல புகுந்து பாகப்பிரிவினை ஆரம்பிச்சுடக்கூடாது. அதுக்காகத்தான் இந்த விளக்கம் :))

சென்ஷி said...

//Sri said...
//கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...//

அச்சச்சோ அப்படியா?? ஆனா மை ஃப்ரெண்ட் ரொம்ப நல்லவங்கனு கேள்விப்பட்டேனே..!! ;-)
//

இது கலக்கல் :)))

சென்ஷி said...

//Sri said...
//முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது.//

படிக்கல ஆனா இந்த பாகம் நல்லா இருக்கு..!! :-)
//

இது செம்ம கலக்கல்... இரட்டுற மொழிதல்ங்கறத சூப்பரா யூஸ் செஞ்சுருக்கீங்க :)

சென்ஷி said...

//Sri said...
//அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. //

இதென்ன ஈகிள் டைரிக்கு விளம்பரமா?? ;-)
//

இருக்கும். இருக்கும்.. மாப்பி சைடுல விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருந்தாலும் வாங்கியிருப்பான்.

சென்ஷி said...

//Sri said...
//************************* ********
**************
*********************
*************//

வாவ் சூப்பரா இருக்கு அண்ணா கவிதை..!! ;-)
//

***************************************************

எனக்கு என்ன சொல்றதுண்ணே தெரியல.. :))

சென்ஷி said...

//Sri said...
//டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள்.//

அவன் பயாலஜி படிச்சவனா?? ஹெர்பேரியத்துக்காக இருக்கும்..!!
;-)
//

அட ஆண்டவா... பயாலஜியில தவளை, பூரான், பல்லி, கரப்பான் இதயத்தைத்தான்மா பாடம் செய்வாங்க..

இது பாட்டனி குரூப்பா இருக்கும் :))

சென்ஷி said...

//Sri said...
//இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா//

அவளா கிரியேட் செய்யறா?? ;-)
//

இப்ப நீங்க இந்த கேள்வி கேட்டப்புறம்தான் எனக்கு லைட்டா மாப்பி மேல டவுட் வருது... டேய் என்னாங்கடா நடக்குது அங்க... கவுரிய பைத்தியமாக்காம நகர மாட்ட போலருக்கே நீ :))

சென்ஷி said...

//Sri said...
//சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது//

கரெக்ட் அண்ணா கதைக்கரு கெட்டுப் போயிடக்கூடாதில்ல‌..!!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

சென்ஷி said...

////************************* ********
**************
*********************
*************//

வாவ் சூப்பரா இருக்கு அண்ணா கவிதை..!! ;-)//

தங்கச்சி அந்த கடைசி ரெண்டு ஆச்சரியக்குறிய விட்டுட்டியேம்மா :)

Sri said...

@ சென்ஷி அண்ணா
அண்ணா ஒரு சின்ன திருத்தம் நான் ஸ்ரீ இல்ல Sri..!!;-)
அவரே பாவம் ஏதோ தான் உண்டு தன் ஒற்றை அன்றில் உண்டுன்னு ஏதோ கிராமத்துக் கதையா எழுதறார்..!! ;-)

Sri said...

@ சென்ஷி அண்ணா
//உங்க கமெண்டையெல்லாம் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்//
அச்சச்சோ அடியேதும் படலியே.??
(ஸ்மைலி போடல நான் சீரியஸாதான் கேட்கறேன்.)
//பதிவே மொக்கைன்னா அதை இந்தளவு கொடுமைப்படுத்த சத்தியமா வேற யாரலயும் முடியாது தாயே//
என்ன அண்ணா உங்களால முடியாததா?? ;-)

Sri said...

@ சென்ஷி அண்ணா
//எல்லோரும் மாப்பிக்கு பயந்துட்டு சூப்பருன்னு சொல்லிட்டு எஸ் ஆகறப்ப நீ மட்டும் எப்படி தாயி இப்படி பிச்சு உதறியிருக்க...//
எல்லாம் நீங்க குடுத்த தைரியம் தான்..!! ;-)

Sri said...

@ சென்ஷி அண்ணா
////Anna oru doubt..!!
Post pOttathe 3:32 kku, apparam yeppadi first comment 3:31 kke??
;-)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

தங்கச்சி.. உன்னை பாராட்டி ரெண்டு செகண்டு முடிக்கறதுக்குள்ள இப்படி ஒரு குற்றச்சாட்டா. நல்லா கண்ண இல்லன்னா கண்ணாடிய துடைச்சுட்டு பாரு. மாப்பி போஸ்ட் போட்டது....

//posted by கோபிநாத் at 3:22 PM on 12 Jul, 2008//

நான் கமெண்ட் போட்டது...

//3:31 PM, July 12, 2008//

ஓக்கேவா.. அப்புறம் நாலு பேரு நடுவுல புகுந்து பாகப்பிரிவினை ஆரம்பிச்சுடக்கூடாது. அதுக்காகத்தான் இந்த விளக்கம் :))//
அச்சச்சோ சாரி அண்ணா இப்ப தான் கவனிக்கறேன். இனிமே தான் கண்ணாடி போடனும் போல இருக்கே..!! அவ்வ்வ்வ்வ் :-(

Sri said...

@ சென்ஷி அண்ணா
//இது கலக்கல் :)))//
நன்றி அண்ணா..!! :-)
//இது செம்ம கலக்கல்... இரட்டுற மொழிதல்ங்கறத சூப்பரா யூஸ் செஞ்சுருக்கீங்க //
இரட்டுற மொழிதல்லா அப்படினா?? :(
//இருக்கும். இருக்கும்.. மாப்பி சைடுல விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருந்தாலும் வாங்கியிருப்பான்//
ஹா ஹா ஹா ஹா ஹா..!! :-D
(விட்டு விட்டு சிரிக்கல‌:-P)
//எனக்கு என்ன சொல்றதுண்ணே தெரியல//
பரவாயில்ல அட்லீஸ்ட் பின் நவீனத்துவம் பத்தியாவது சொல்லுங்க அண்ணா..!! ;-)
//அட ஆண்டவா... பயாலஜியில தவளை, பூரான், பல்லி, கரப்பான் இதயத்தைத்தான்மா பாடம் செய்வாங்க..

இது பாட்டனி குரூப்பா இருக்கும்//

அண்ணா பயாலஜி-னா Botony+Zoology...!! :-(
(ஆண்டவா..!!)
//இப்ப நீங்க இந்த கேள்வி கேட்டப்புறம்தான் எனக்கு லைட்டா மாப்பி மேல டவுட் வருது... டேய் என்னாங்கடா நடக்குது அங்க... கவுரிய பைத்தியமாக்காம நகர மாட்ட போலருக்கே நீ//
ம்ம்ம் நல்லா கேளுங்க அண்ணா..!! ;-)
//தங்கச்சி அந்த கடைசி ரெண்டு ஆச்சரியக்குறிய விட்டுட்டியேம்மா //
அச்சச்சோ தப்பு நடந்துப் போச்சே கோபி அண்ணா மன்னிப்பாரா இல்ல நெற்றிக்கண்ணைத் திறப்பாரா?? :-(

Sri said...
This comment has been removed by the author.
Sri said...

@ கோபி அண்ணா
நான் போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் சீஈஈஈஈக்கரம் பப்ளிஷ் பண்ணதுக்கு தேங்க்ஸ்...!! :-)