Monday, April 28, 2008

பெளர்ணமி நினைவுகள்...
எப்பவும்போல வழக்கமான இடத்தில உட்காந்தே யோசிச்சேனுங்க. அப்படி இருந்தும் வழக்கமாக வர்ற ஐடியா கூட இந்த முறை வரமாட்டேங்குது. இது என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு ஒரே யோசனையில இருக்கும்போதுதான் நம்ம மாப்பி "சென்ஷி" ஞாபகம் வந்துச்சு. சரி..அவனுக்கு ஒரு போனை போட்டு ஐடியா கேட்போம். அவன் இப்ப எல்லாம் நிறைய பதிவுகளில் விவாதம் பண்றான். தமிழ்மணத்தில் அரசியல் எல்லாம் அத்துபடியாச்சேன்னு நினைச்சி அவனுக்கு ஒரு போனை போட்டேன். (மக்களே இப்ப வழக்கமான சென்ஷியே இல்ல அவன்....ம்ம்ம் நம்புங்க)

நானும் போனை போட்டு வழக்கமாக கேட்குறமாதிரியே ஆரம்பிச்சேன்,
"என்ன மாப்பி எப்படி இருக்கே"

அவனும் வழக்கமாக கொடுக்குற அல்வாவையே கொடுத்தான்,"ஹாய்டா செல்லம் நீ எப்படி இருக்கே"

நான்: ம்ம்ம்....ஏதோ போகுதுப்பா.....

சென்ஷி; ஆமா ஏன்டா ரெண்டு நாளா போனே போடுல

நான்: ஆணி அதிகம் மச்சி அதான்.. சரி நான்தான் போடல நீயாவது மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல

சென்ஷி: ம்...உன் ஆபிசுக்கு போனை போட்டு உனக்கு கனெக்ட் பண்ணுறதுக்குள்ள தாவு தீர்ந்து etisalat பில்லு கிழியுது.

நான்: சரி ஆபிசுக்குதான் வேண்டாம். என்னோட செல்லுக்காச்சும் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல

சென்ஷி: மிஸ்டுகால் எதுக்குடா

நான்: ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..

சென்ஷி: அடப்பாவி இதுல இப்படி எல்லாம் வேற இருக்கா!!

நான்: பதிவு போட ஏதாவது ஐடியா கொடேன். உனக்கு இந்த பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், விவாதம், அரசியல் இதெல்லம் அத்துப்படியாச்சே....இப்போ தமிழ்மணத்துல எந்த பதிவுல மவுசு அதிகம் க்ளிக் ஆகுதுன்னு கொஞ்சம் சொல்லேன்.

சென்ஷி: மச்சி இதுக்கு எல்லாம் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.. பரவாயில்லையா!

நான்: செலவுதானே! அதுபாட்டுக்கு எவ்வளவு ஆனா என்ன?! நீ சொல்லு மச்சி.. உனக்கு நான் தனியா ஸ்பெசலா கவனிக்கிறேன்.

சென்ஷி: நீ வழக்கமா உள்குத்துவச்சி பேசற மாதிரியே பேசுற....சரி போன வருஷம் ஒரு பதிவுல எந்த பதிவுன்னு சரியாக ஞாபகம் இல்ல, ஆனா சூப்பர் பதிவு. அதுல வழக்கம்போல செந்தழல் ரவி தான் முதல் பின்னூட்டம். அடுத்த பின்னூட்டம் லக்கின்னு நினைக்கிறேன். நான் தான் மூணாவது பின்னூட்டம். இதுல மேட்டர் என்னன்னா.. செந்தழல் ரவிக்கு போட்ட பின்னூட்டத்துக்கு லக்கி ரீப்பிட்டே போட, நான் டக்குன்னு லக்கி போட்ட ரீப்பிட்டே பின்னூட்டத்துக்கு ரீப்பிட்டே இப்படிக்கு டில்லியில் இருந்து சென்ஷின்னு போட்டேன்....எப்படி மச்சி சூப்பர் இல்ல

நான்: டேய்....டேய்...ஆரம்பிச்சிட்டியா. நான் உன்னை என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே.....நானே ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குதேன்னு உன்கிட்ட கேட்டா நீ என்னடான்னா உன் பின்னூட்ட சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருக்கே...அதுவும் ரீப்பிட்டு. உன் கூட சேர்ந்ததுக்கு தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....

சென்ஷி: சரி சரி கூல் மச்சி....இன்னிக்கு நேத்தா நாம இப்படி எல்லாம் ரீப்பிட்டே போடுறோம்.

"வெளங்கிடுவோம்டா"ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டு நண்பன் ஒருவன் எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டுயிருந்தேன். ஒவ்வொரு புகைப்படங்களிலும் ஒவ்வொரு அழகு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பழைவு நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டுயிருந்தது. நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்.

அவன் அனுப்பியிருந்த புகைப்படங்களில் முழுநிலா கொண்ட புகைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மின்சாரம் இல்லாத இரவுகளில் நிலாவின் ஒளி எங்கள் வாசல் முழுவதும் பரவியிருக்கும். வாசலில் விழும் ஒலியில் கைகளை எல்லாம் அகட்டி திரட்டி விதவிதமாக உருவங்கள் வரவழைத்து நிழலில் விளையாடிக் கொண்யிருப்போம். மிகப்பெரிய வாசல் கொண்ட அந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். எல்லோரும் அந்த வாசலில்தான் துணி துவைப்பது, மிளகாய் எல்லாம் காயவைப்பது... எங்களுக்கு நெட்டி ஆடுவது போன்றவை எல்லாம். என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் கொடுத்தார். கடைசி வரை சுக்கு கரைந்தது தான் மிச்சம். எனக்கு தெரிஞ்சது எல்லாம்...

"ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி" தான். (முத்துக்கா வீட்டு பாடம் செய்துட்டேன்)

பல சுபகாரியங்களை பார்த்திருக்கிறது அந்த வாசல். சில இறுதி பயங்களும் அந்த வாசலில் வைத்து தான் தொடங்கியிருக்கிறது. அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு என்று அம்மாவுக்கு இம்சை கொடுத்து ஓட ஓட அடிவாங்கியதும் அந்த வாசலில் வைத்து தான். ரத்த சொந்தங்களாக இல்லாமல் பழகியபழக்கத்தில் வந்த சொந்தங்களும் கிடைத்ததும் அந்த வாசலில்தான். வெறும் பக்கத்து வீட்டு ஆளுங்க தானே என்று இல்லாமல் அவங்க வீட்டில் ஒருவன்போல என்னையும் அன்பாக பார்த்த சொந்தங்கள். நான் பள்ளி முடிந்து வீடு வரும் எனக்கு வீட்டில் அம்மா இல்லை என்றால் எப்படியும் இவர்களின் ஒருவர் வீட்டில் இருந்தாவது எனக்கு தேவையான சிற்றுண்டிகள் வந்துவிடும்.

எனக்கும் சாப்பாட்டுக்கும் ரொம்ப தூரம் (எவ்வளவு கிலோமீட்டர்ன்னு எல்லாம் கேட்ககூடாது.. உத்தேசமா கையிலேந்து வாய் வரைக்கும்ன்னு வச்சுக்குங்க). ஆனா இந்த சிற்றுண்டிகள் எல்லாம் தின்னுக்கிட்டே இருப்பேன். சரியாக சாப்பிடாமல் அடம்பிடிக்கும் நேரத்தில் அம்மாவின் கடைசி ஆயுதமாக அம்மாவின் கையால் பால் சோறு கிடைக்கும். நன்றாக காய்ச்சிய பாலை அம்மா மெதுவாக ஊதி ஊதி அந்த ஏடுகளை எல்லாம் தள்ளித்தெளிந்த பாலை ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்றாக பிசைந்து எலுமிச்சை ஊறுகாய் தொட்டு ஊட்டுவாங்க. அந்த வாசல் முழுக்க ஓடி ஓடி ஒவ்வொரு வாயாக வாங்கி வழிச்சி தின்பேன். நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு. இரவுகளில் பயணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. யாருக்குத்தான் பிடிக்காது!அந்த இருள் கலந்த அமைதியை ரசிப்பதில் யாருக்கு வெறுப்பு வந்துவிடும். அந்த இரவின் அமைதியிடம் முழுமனதையும் பறிகொடுத்து ஆழ்ந்து அந்த அமைதியை ரசிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும். கிரிவலம் செல்லும் போதும் இரவு பயணங்கள் தான். அதுவும் அந்த இரவுகளில் மலையை சுற்றி நண்பர்களுடன் நடைப்பயணம் செய்வது ஒரு சுற்றுலா போல இருக்கும். வெளியில் இருந்து கொண்டே அண்ணாமலையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தோம். சிறுவர்கள், பெரியவர்கள், பக்திமான்கள் என்று மக்கள் கூட்டம். உணர்ந்து பலபேர்.. உணராமல் விளையாட்டுக்கு சிலபேர் என்று அவரவர் கையில் ஆயிரம் ஆயிரம் சுமைகளுடன் அந்த அண்ணாமலையாரிடம் இறக்கி வைக்க நேரம் பார்த்து நடையில் வேகத்தை கூட்டியும் குறைத்தும் கொண்டு நடந்துக் கொண்டுயிருப்பார்கள்.

அண்ணாமலையாரை சுற்றி இருக்கும் மற்ற லிங்கங்களை பார்க்கும்போது மனதில் ஒரு சோகம் வந்து அமர்ந்துக்கொள்ளும். யாரும் சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டது போல களையிழந்து இருக்கும். சிவன் கோவில்கள் எல்லாம் இப்படி கலை இல்லாமல் வர்ணங்கள் இல்லாமல் ஒருவித பாழடைந்தது போல இருக்கிறது என்று தோன்றும். பயணம் தொடங்கும்போது பழைய நினைவுகளுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்துக்கொண்டே வருவோம். சிறிது நேரம் கடந்தவுடன் அந்த பேச்சு அப்படியே எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வர வேண்டும். யார் யார் எல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று கற்பனைகளுடன் பேசி கொள்வோம். கடைசியில் "அடப்போடா! அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதோ.. இதுல அடுத்த வருஷத்துக்கு போயிட்ட...எதுவாக இருந்தாலும் அனுபவிக்கலாம் மச்சி" என்று எதிர்கால பேச்சுக்கு விடை கொடுத்துவிட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் கடைசிப்பயணம் செல்லும். கடைசி தூரப்பயணத்தில் எங்களை அறியாமல் இடைவெளி வந்துவிடும். அது பேச்சின் கலைப்பா அல்லது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தேவைப்படும் தனிமையா.. அறியாமலே இடைவெளியுடன் பயணம் தொடரும். ஒரு குழந்தைப்போல தனக்குள்ளேதான் கண்ணுக்கு மட்டும் தெரியும் அந்த கற்பனை பிம்பத்துடன் விளையாடுவது போல எங்களுக்குள் இருக்கும் எங்களை சிதைக்காத கற்பனையுடன் மனதுக்குள் பேசிக் கொண்டே கடந்து போகும் கடைதூரம். இதனால் ஒவ்வொருவரும் மனதால் ஒன்றாக சேர்வதற்க்கு சில நிமிடங்கள் பிடிக்கும்.

இங்கே வந்தப்பின்னும் பல பெளர்ணமிகள் பார்த்திருக்கிறேன். கூட்டுக்குள் அடைப்பட்ட ஒரு கிளியை போல, வேலியாக பின்னப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு உள்ளிருந்து. பள்ளிக்கு செல்ல பயப்பட்ட வயதில் அம்மாவின் விரல்பிடித்து செல்வேன். பள்ளியின் வாசலில் எங்கள் இருவரின் விரல்களும் பிரிவை உணர்ந்ததும் அழுகையை முட்டிக் கொண்டு வரும். ஏனோ தெரியவில்லை இப்போது அந்த ஞாபகங்கள் வருகிறது.

65 comments:

ஆயில்யன். said...

எம்மாம் பெரிய பதிவு :)

படிச்சுட்டு வர்றேன் :))

ஆயில்யன். said...

/நான்: ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..
//

உங்க கேரக்டர மாத்திக்கவே மாட்டிக்கிங்களாப்பா??

ஆயில்யன். said...

//ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி" தான்//

//சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு.//

அட நம்ம கேசு:)

ஆயில்யன். said...

//அண்ணாமலையாரை சுற்றி இருக்கும் மற்ற லிங்கங்களை பார்க்கும்போது மனதில் ஒரு சோகம் வந்து அமர்ந்துக்கொள்ளும். //

ஆமாம்ப்பா :((

பிரேம்குமார் said...

மாப்பி, என்ன இது டோட்டல் கொலவெறி பதிவா இருக்கு. எம்மாம்பெரிய பதிவு. படிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சு

அட்டகாசமான படம். அழகான நினைவுகள் மாப்பி

Anonymous said...

இந்த மாசத்துக்கான பதிவு போட்டாச்சா, வாழ்த்துக்கள்

Anonymous said...

\\என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் \\ விளக்கெண்ணெயில்ல ஊத்தி படிக்கணும்னு சொல்வாங்க, இது புதுசா இருக்கு

கீதா சாம்பசிவம் said...

//தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....
//

ஹிஹிஹி, ரிபீட்டேஏஏஏஏஏஏஏஏ,
அது சரி, பால் சாதம்னால் சர்க்கரை, வாழைப்பழம் தான் தொட்டுப்பாங்க, நீங்க என்ன வித்தியாசமா பால் சாதத்திலே உப்புப் போட்டு? திரிஞ்சிடாது? ஊறுகாய் வேறே???? ம்ம்ம்ம்ம் வித்தியாசமா இருக்கே?

கீதா சாம்பசிவம் said...

மீ த பர்ஸ்டு?

Divya said...

சென்ஷி உரையாடல் நகைச்சுவை!!

\\நான்: ம்ம்ம்....ஏதே போகுதுப்பா.....\\

ஏதோ....எழுத்துப்பிழை கோபி!!

Divya said...

\\ நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.\\

பெளர்ணமி நினைவுகள்......மலரும் நினைவுகளை ஏற்படுத்தியது!!

[நீண்ட நாட்களுக்கு பின் பதிவு.....உரையாடல், மலரும் நினைவுகள் னு போட்டு தாக்கியிருக்கிறீங்க கோபி!!]

கயல்விழி முத்துலெட்சுமி said...

என்ன ஒரு சாமர்த்தியம்.. நாலு வரி பாட்டு போட்டு வீட்டுப்பாடமா... கண்மணி டீச்சர் இம்போசிசன் குடுக்க போறாங்க..

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஒருமை வேற தனிமை வேறயாம்.. கொஞ்ச நாள் அனுபவிச்சிக்குங்கப்பா இந்த ஒருமை தனிமை எல்லாம்.. அப்பறம் இதன் அருமை தெரியும்.

Syam said...

ஆபீஸுக்கு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு படிக்கனும் போல இம்மாம் பெரிசா இருக்கு பதிவு... :-)

சுல்தான் said...

பெரிய பதிவு. தனியே உட்கார்நது ரொம்ப யோசிச்சா அழுகைதான் வரும். காசுக்காக இப்படி இருக்கிறோமோ. ஊருக்கே போய் செட்டிலாகி விடுவோம் என்று தோன்றும். (ஊருக்குப் போனா - இருக்க முடியாதது வேறு விடயம்)

நிலவின் 'ஒளி'(வெளிச்சம்) - வேண்டுமென்றே ஒலி(சப்தம்) என்று போட்டீர்களோ?

சென்ஷியிடம் பேசினால் ஐடியா வருமா... இவ்வளவு நாளா தெரியாம போயிடுச்சே.

நிஜமா நல்லவன் said...
This comment has been removed by the author.
சென்ஷி said...

ஏன்டா, டேய் .... உங்களுக்கெல்லாம் பதிவு போட ஐடியா கெடைக்கலன்னா என்கிட்ட மொக்க போடறதத்தான் நெனைச்சுப் போடுவீங்களாடா... :(((

ஏன்பா... பௌர்ணமி நினைவுகளே நல்லாத்தானே இருக்கு... முன்னாடி எதுக்கு திருஷ்டி பொட்டு மாதிரி ஒரு மொக்க :((

சென்ஷி said...

ரொம்ப பெருசா இருக்குது பதிவு....

//Divya said...
சென்ஷி உரையாடல் நகைச்சுவை!!

\\நான்: ம்ம்ம்....ஏதே போகுதுப்பா.....\\

ஏதோ....எழுத்துப்பிழை கோபி!!//

ஹி... ஹி.... பாருடா மாப்பி :))

சென்ஷி said...

//நான் பள்ளி முடிந்து வீடு வரும் எனக்கு வீட்டில் அம்மா இல்லை என்றால் எப்படியும் இவர்களின் ஒருவர் வீட்டில் இருந்தாவது எனக்கு தேவையான சிற்றுண்டிகள் வந்துவிடும்.//

இன்னிவரைக்கும் பழச மறக்காம இருக்கேடா மாப்பி .... :))

நிஜமா நல்லவன் said...

///அவனும் வழக்கமாக கொடுக்குற அல்வாவையே கொடுத்தான்,"ஹாய்டா செல்லம் நீ எப்படி இருக்கே"///

கோபி சென்ஷி சொல்லுற முத வார்த்தைய விட்டுட்டியே?

நிஜமா நல்லவன் said...

///நான்: ம்ம்ம்....ஏதே போகுதுப்பா.....///

மொத்தமா உள்ள போனது எத்தனப்பா?

நிஜமா நல்லவன் said...

///நான்: ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..///


ஏன் இந்த கொல வெறி?

நிஜமா நல்லவன் said...

///சென்ஷி: அடப்பாவி இதுல இப்படி எல்லாம் வேற இருக்கா!!///


ஒண்ணுந்தெரியாத புள்ள!?!?!?

கானா பிரபா said...

தல

பெளர்ணமி நினைவுகள் சிறப்பாக இருந்தது. ஆரம்பத்தில் உரையாடலைக் கொடுத்துப் பின்னர் நனவிடை தோய்தலுக்குப் போன உத்தி வித்தியாசம். திருவண்ணாமலை நினைவுகள் எமக்குப் புதுமை.

ஊரில் இருக்கும் போது இப்படியான சின்னச் சின்னச் சந்தோஷங்கள் கொடுக்கும் சுகமே தனி.

அதிருக்கட்டும் தல, பிகரோட பேசுற வயசில எதுக்கு சென்ஷியோடு பேச்சு வேண்டிக்கிடக்கு. சீக்கிரம் அய்யனார் வழியைப் பின்பற்றவும், சென்ஷிக்கும் இதையே புரட்டிச் சொல்கிறேன் ;-)

நிஜமா நல்லவன் said...

///நான்: பதிவு போட ஏதாவது ஐடியா கொடேன்.///


யோவ் போடுறதே மாசத்துக்கு ஒரு பதிவு. இதுல உனக்கு ஐடியா வேற வேணுமா?

நிஜமா நல்லவன் said...

///சென்ஷி: மச்சி இதுக்கு எல்லாம் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.. பரவாயில்லையா!////

என்ன மிஞ்சிப்போனா ..... சரி எதுக்கு வம்பு நான் ஒண்ணும் சொல்லல!!!

நிஜமா நல்லவன் said...

///நான்: செலவுதானே! அதுபாட்டுக்கு எவ்வளவு ஆனா என்ன?! நீ சொல்லு மச்சி.. உனக்கு நான் தனியா ஸ்பெசலா கவனிக்கிறேன்.///


போன பதிவுக்கு நீ கவனிச்ச கவனிப்புல இருந்தே சென்ஷி இன்னும் தேறல. பாவம்யா. விட்டுடு. வேணாம்:)

நிஜமா நல்லவன் said...

///சென்ஷி: நீ வழக்கமா உள்குத்துவச்சி பேசற மாதிரியே பேசுற....///


முதல்ல உள்குத்து வச்சி பேசுவாங்க. அப்புறம் நிஜமாவே உன்னைய குத்தி ஒரு ஓரமா போட்டுவாங்க. பார்த்து இருந்துக்கப்பா!

சென்ஷி said...

//அவன் இப்ப எல்லாம் நிறைய பதிவுகளில் விவாதம் பண்றான். //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

இந்த கொடுமைக்கெல்லாம் நான் காரணமில்ல மக்களே... இவன் ரொம்ப ஓவரா சங்க ஊதியிருக்கான் எனக்கு :(

நிஜமா நல்லவன் said...

///நான்: டேய்....டேய்...ஆரம்பிச்சிட்டியா. உன்கிட்ட கேட்டா நீ என்னடான்னா உன் பின்னூட்ட சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருக்கே...///


சென்ஷி நீ அந்த புது சரித்திரத்த சொல்லலையா. அதான் பா நீ போட்ட பதிவ நீயே டெலிட் பண்ணிட்டு அப்புறம் திரும்ப போட்டியே. அதே மாதிரி கோபி ய போட சொல்ல வேண்டியது தானே?

நிஜமா நல்லவன் said...

///சென்ஷி: சரி சரி கூல் மச்சி....இன்னிக்கு நேத்தா நாம இப்படி எல்லாம் ரீப்பிட்டே போடுறோம்.///

அடப்பாவிகளா உங்க தொழிலே இது தானா?

நிஜமா நல்லவன் said...

///"வெளங்கிடுவோம்டா"ன்னு சொல்லிட்டு ///


இத வேற சொல்லிக்கனுமாக்கும்!!!

நிஜமா நல்லவன் said...

///நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்.///

புரியுது! புரியுது!!இரு அம்மாகிட்ட சொல்லுறேன்.

நிஜமா நல்லவன் said...

///மிளகாய் எல்லாம் காயவைப்பது... ///


நீ யாருக்கும் மிளகாய் அரைக்கலையே?

நிஜமா நல்லவன் said...

///வந்தா வாடி
வராட்டி போடி" தான். (முத்துக்கா வீட்டு பாடம் செய்துட்டேன்)///

நீ என்னப்பா சொல்ல வர்றே?

நிஜமா நல்லவன் said...

///அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு என்று அம்மாவுக்கு இம்சை கொடுத்து ஓட ஓட அடிவாங்கியதும் அந்த வாசலில் வைத்து தான்.///

இங்க மட்டும் என்னவாம்? நல்ல பதிவு போட்டு இருக்கேன் வாடான்னு சொல்லிட்டு இப்படி இம்சை பதிவு போட்டு படுத்துறியே?

நிஜமா நல்லவன் said...

///வெறும் பக்கத்து வீட்டு ஆளுங்க தானே என்று இல்லாமல் அவங்க வீட்டில் ஒருவன்போல என்னையும் அன்பாக பார்த்த சொந்தங்கள்.///


நான் கூட உன்ன சகபதிவரா மட்டும் பார்க்கலபா( ஓவர் பீலிங் ஆகிடுச்சி)

நிஜமா நல்லவன் said...

///எனக்கும் சாப்பாட்டுக்கும் ரொம்ப தூரம் (எவ்வளவு கிலோமீட்டர்ன்னு எல்லாம் கேட்ககூடாது.. உத்தேசமா கையிலேந்து வாய் வரைக்கும்ன்னு வச்சுக்குங்க).///


பொய் சொல்லாத. இதுல கை எதுக்கு வந்துச்சு. நீ அப்படியே தட்டுல வாய வச்சி தானே சாப்பிடுவ?

நிஜமா நல்லவன் said...

///சரியாக சாப்பிடாமல் அடம்பிடிக்கும் நேரத்தில் அம்மாவின் கடைசி ஆயுதமாக அம்மாவின் கையால் பால் சோறு கிடைக்கும்.///

ஆஹா...

நிஜமா நல்லவன் said...

///நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.///கொஞ்சம் யோசிப்பா!!!

நிஜமா நல்லவன் said...

////இரவுகளில் பயணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. யாருக்குத்தான் பிடிக்காது!அந்த இருள் கலந்த அமைதியை ரசிப்பதில் யாருக்கு வெறுப்பு வந்துவிடும். அந்த இரவின் அமைதியிடம் முழுமனதையும் பறிகொடுத்து ஆழ்ந்து அந்த அமைதியை ரசிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும்.////


படிக்கிறப்பவே மனசுக்கு நிறைவா தோனுதுப்பா!!

நிஜமா நல்லவன் said...

////"அடப்போடா! அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதோ.. இதுல அடுத்த வருஷத்துக்கு போயிட்ட...எதுவாக இருந்தாலும் அனுபவிக்கலாம் மச்சி" என்று எதிர்கால பேச்சுக்கு விடை கொடுத்துவிட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் கடைசிப்பயணம் செல்லும்.////


எல்லோரும் கடைசில இப்படித்தான் யோசிக்குறீங்களா?

நிஜமா நல்லவன் said...

///கடைசி தூரப்பயணத்தில் எங்களை அறியாமல் இடைவெளி வந்துவிடும். அது பேச்சின் கலைப்பா அல்லது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தேவைப்படும் தனிமையா.. அறியாமலே இடைவெளியுடன் பயணம் தொடரும்.///


அது பேச்சின் களைப்பு இல்லபா. அந்த நேரத்தில் மனதிற்கு தேவைப்படும் தனிமை. நிறைய தடவை நான் இப்படி உணர்ந்திருக்கிறேன்!

நிஜமா நல்லவன் said...

////இங்கே வந்தப்பின்னும் பல பெளர்ணமிகள் பார்த்திருக்கிறேன். கூட்டுக்குள் அடைப்பட்ட ஒரு கிளியை போல, வேலியாக பின்னப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு உள்ளிருந்து. பள்ளிக்கு செல்ல பயப்பட்ட வயதில் அம்மாவின் விரல்பிடித்து செல்வேன். பள்ளியின் வாசலில் எங்கள் இருவரின் விரல்களும் பிரிவை உணர்ந்ததும் அழுகையை முட்டிக் கொண்டு வரும். ஏனோ தெரியவில்லை இப்போது அந்த ஞாபகங்கள் வருகிறது.////


கும்மி அடிக்க வந்த என்ன ரொம்ப பீல் பண்ண வச்சிட்டபா:((

ஆயில்யன். said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
ஒருமை வேற தனிமை வேறயாம்.. கொஞ்ச நாள் அனுபவிச்சிக்குங்கப்பா இந்த ஒருமை தனிமை எல்லாம்.. அப்பறம் இதன் அருமை தெரியும்.
//

அக்கா என்னமோ சொல்ல வர்றாங்க ஆனா என்னன்னு தான் புரிய மாட்டிக்குது :))

கோபிநாத் said...

தவறுகள் திருத்திட்டேன்..;)

மிக்க நன்றி - திவ்யா, சுல்தான் மற்றும் தல கானா ;)

சென்ஷி said...

யோவ் நிஜமா நல்லவா,

மாப்பி போடறதே மாசத்துக்கு ஒண்ணு. அதையும் கும்மியடிச்சு காணாமப்போக வைக்கப்பார்க்குற.

மாப்பியோட ரசிகக்கூட்டங்களுக்கு இது தெரிஞ்சதுன்னா மகனே நீ காலி... :))

சென்ஷி said...

//அதிருக்கட்டும் தல, பிகரோட பேசுற வயசில எதுக்கு சென்ஷியோடு பேச்சு வேண்டிக்கிடக்கு. சீக்கிரம் அய்யனார் வழியைப் பின்பற்றவும், சென்ஷிக்கும் இதையே புரட்டிச் சொல்கிறேன் ;-)//

ஹலோ கானா,

என்ன கொடும இது...

நான் நல்லாயிருக்கறது புடிக்கலையா..

மாப்பிக்கு கல்யாணம் செஞ்சுப்பார்க்கணும்னா நல்ல பொண்ணா தேடுப்பா :))

சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
ஒருமை வேற தனிமை வேறயாம்.. கொஞ்ச நாள் அனுபவிச்சிக்குங்கப்பா இந்த ஒருமை தனிமை எல்லாம்.. அப்பறம் இதன் அருமை தெரியும்.
//

டேய் கோபி.... கேட்டுக்கடா..

புத்தர் வாக்கு கண்டிப்பா பலிச்சுடும் :))

சென்ஷி said...

//சென்ஷியிடம் பேசினால் ஐடியா வருமா... இவ்வளவு நாளா தெரியாம போயிடுச்சே.//

அய்யய்யோ... அடுத்த ரவுண்டா :)

கப்பி பய said...

:)

சந்தோஷ் = Santhosh said...

பழைய நினைவுகள் நல்லா இருந்தது கோபி.. அதுவும் நீ கிரிவலம் பத்தி சொன்னது ரொம்ப சரி.. நான் கூட முன்னாடி ரெகுலரா போயிட்டு இருந்தேன்.. இப்ப கூட்டம் ரொம்ப அதிகமாயிடிச்சி..

sathish said...

நினைவுகள் அருமை கோபி!! அதுவும் பௌர்ணமியுடன்... அழகு :))

கோபிநாத் said...

@ ஆயில்யன்
//ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி" தான்//

//சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு.//

அட நம்ம கேசு:)\\\

தம்பி மாதிரியே இருக்கிங்க ;))

@ பிரேம்குமார்
\\மாப்பி, என்ன இது டோட்டல் கொலவெறி பதிவா இருக்கு. எம்மாம்பெரிய பதிவு. படிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சு\\

மாசம் ஒருமுறை தானே தீருது..ஒன்னும் பிரச்சனை இல்லை ;)


\\அட்டகாசமான படம். அழகான நினைவுகள் மாப்பி\\


நன்றி...மாப்பி ;)


@ சின்ன அம்மிணி
\\என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் \\ விளக்கெண்ணெயில்ல ஊத்தி படிக்கணும்னு சொல்வாங்க, இது புதுசா இருக்கு\\

நீங்க சொல்றது ஒழுங்க படிக்கிறவுங்களுக்கு...என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் சுக்கு தான் ;)

@ கீதா சாம்பசிவம்
//தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....
//

ஹிஹிஹி, ரிபீட்டேஏஏஏஏஏஏஏஏ,
அது சரி, பால் சாதம்னால் சர்க்கரை, வாழைப்பழம் தான் தொட்டுப்பாங்க, நீங்க என்ன வித்தியாசமா பால் சாதத்திலே உப்புப் போட்டு? திரிஞ்சிடாது? ஊறுகாய் வேறே???? ம்ம்ம்ம்ம் வித்தியாசமா இருக்கே?\\

தலைவி....எங்க பெரியம்மா வீட்டுல நீங்க சொல்ற மாதிரி சர்க்கரை போடுவாங்க...ஆனா எனக்கு பிடிக்காது...எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க ;))

@ திவ்யா
\\ நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.\\

பெளர்ணமி நினைவுகள்......மலரும் நினைவுகளை ஏற்படுத்தியது!!

[நீண்ட நாட்களுக்கு பின் பதிவு.....உரையாடல், மலரும் நினைவுகள் னு போட்டு தாக்கியிருக்கிறீங்க கோபி!!]\\

நன்றி திவ்யா..;)

@ கயல்விழி முத்துலெட்சுமி
\\என்ன ஒரு சாமர்த்தியம்.. நாலு வரி பாட்டு போட்டு வீட்டுப்பாடமா... கண்மணி டீச்சர் இம்போசிசன் குடுக்க போறாங்க..\\

கண்மணி டீச்சர் இந்த பதிவுக்கு வர மாட்டங்க..;))

\\ஒருமை வேற தனிமை வேறயாம்.. கொஞ்ச நாள் அனுபவிச்சிக்குங்கப்பா இந்த ஒருமை தனிமை எல்லாம்.. அப்பறம் இதன் அருமை தெரியும்.\\

;))))

@ syam
\\ஆபீஸுக்கு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு படிக்கனும் போல இம்மாம் பெரிசா இருக்கு பதிவு... :-)\\


நட்டாமை...இதொல்லாம் ஒவரு குசும்பு ஆமா...;))

கோபிநாத் said...

@ சுல்தான்
\\பெரிய பதிவு. தனியே உட்கார்நது ரொம்ப யோசிச்சா அழுகைதான் வரும். காசுக்காக இப்படி இருக்கிறோமோ. ஊருக்கே போய் செட்டிலாகி விடுவோம் என்று தோன்றும். (ஊருக்குப் போனா - இருக்க முடியாதது வேறு விடயம்)\\


சரியாக சொன்னிங்க..சுல்தான் சார்...;)

\\நிலவின் 'ஒளி'(வெளிச்சம்) - வேண்டுமென்றே ஒலி(சப்தம்) என்று போட்டீர்களோ? \\

கவனிக்கவில்லை சுல்தான்...


\\சென்ஷியிடம் பேசினால் ஐடியா வருமா... இவ்வளவு நாளா தெரியாம போயிடுச்சே.\\


போனை போடுங்க...ஐடியா கொட்டும்...;)

@ சென்ஷி


\\ஏன்டா, டேய் .... உங்களுக்கெல்லாம் பதிவு போட ஐடியா கெடைக்கலன்னா என்கிட்ட மொக்க போடறதத்தான் நெனைச்சுப் போடுவீங்களாடா... :(((

ஏன்பா... பௌர்ணமி நினைவுகளே நல்லாத்தானே இருக்கு... முன்னாடி எதுக்கு திருஷ்டி பொட்டு மாதிரி ஒரு மொக்க :((\\


மாப்பி...மொக்கையை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியல....அப்புறம் உன் பாசமான பின்னூட்டம் அனைத்துக்கும் ரொம்ப நன்னி ;)


@ நிஜமா நல்லவன்

அண்ணே....நீங்க போட்ட அனைத்து பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றிண்ணே ;))


@ கானா பிரபா
\\தல

பெளர்ணமி நினைவுகள் சிறப்பாக இருந்தது. ஆரம்பத்தில் உரையாடலைக் கொடுத்துப் பின்னர் நனவிடை தோய்தலுக்குப் போன உத்தி வித்தியாசம். திருவண்ணாமலை நினைவுகள் எமக்குப் புதுமை.\\

மிக்க நன்றி தல....


\\ஊரில் இருக்கும் போது இப்படியான சின்னச் சின்னச் சந்தோஷங்கள் கொடுக்கும் சுகமே தனி.\\

ஆமாம்...தல ;)

\\அதிருக்கட்டும் தல, பிகரோட பேசுற வயசில எதுக்கு சென்ஷியோடு பேச்சு வேண்டிக்கிடக்கு. சீக்கிரம் அய்யனார் வழியைப் பின்பற்றவும், சென்ஷிக்கும் இதையே புரட்டிச் சொல்கிறேன் ;-)\\


தல....என் அறிவு கண்ணை திறந்திட்டிங்க...மிக்க நன்றி ;)


@ கப்பி பய
\\:)\\
நோட் பண்ணிக்கிட்டேன்..;)

@ சந்தோஷ்


\\பழைய நினைவுகள் நல்லா இருந்தது கோபி.. அதுவும் நீ கிரிவலம் பத்தி சொன்னது ரொம்ப சரி.. நான் கூட முன்னாடி ரெகுலரா போயிட்டு இருந்தேன்.. இப்ப கூட்டம் ரொம்ப அதிகமாயிடிச்சி..\\


இந்த முறை ஊருக்கு வரும் போது போகவேண்டும்..வருகைக்கு நன்றி அண்ணே ;)

@ sathish


\\நினைவுகள் அருமை கோபி!! அதுவும் பௌர்ணமியுடன்... அழகு :)\\

மிக்க நன்றி சதீஷ் ;)

அருட்பெருங்கோ said...

/ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி"/

இந்த கருத்தாழமிக்க பாடலை(?) நானும் போடலாமென நினைத்து கடைசியில் கைவிடப்பட்டது.

பௌர்ணமி நினைவுகள் பௌர்ணமி மாதிரியே இருக்கு மாப்ள!

வாசல்களப்பத்தி நீ சொல்லவும் எனக்கும் கொசுவத்தி சுத்தி ஒரு பதிவுக்கு மேட்டர் கெடச்சுடுச்சு. நன்றி ;)

aanazagan said...

பெரீய்ய்ய்ய்ய்ய பதிவு.பரவாயில்லை. இருவரின் கைவிரல்கள் பிரியும் போது அது அம்மாவாக , காதலியாக , மனைவியாக , குழந்தையாக யாராக இருந்தாலும் சரி. கண்களில் குளம் கட்டும்.

தம்பி said...

எஸ்.ஜே சூர்யா மாதிரிடா நீ.

தங்ஸ் said...

சின்ன வயசுல நிலாச்சோறு 14 நாள் விழா மாதிரி நடக்கும் தைப்பூச சமயத்துல...சுகமான நினைவுகள்..

வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி!

ஸ்ரீ said...

அண்ணாத்த முழு பதிவும் மனதை கொஞ்சம் பிசைந்தாலும்.

"நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்."

இந்த வரிகள் தான் டாப்பு.

கோபிநாத் said...

@ அருட்பெருங்கோ

\\பௌர்ணமி நினைவுகள் பௌர்ணமி மாதிரியே இருக்கு மாப்ள!

வாசல்களப்பத்தி நீ சொல்லவும் எனக்கும் கொசுவத்தி சுத்தி ஒரு பதிவுக்கு மேட்டர் கெடச்சுடுச்சு. நன்றி ;)\\\

சீக்கிரம் போடு மாப்பி...படிக்க காத்துக்கிட்டு இருக்கேன்..நன்றி ;)

@ aanazagan

\\\பெரீய்ய்ய்ய்ய்ய பதிவு.பரவாயில்லை. இருவரின் கைவிரல்கள் பிரியும் போது அது அம்மாவாக , காதலியாக , மனைவியாக , குழந்தையாக யாராக இருந்தாலும் சரி. கண்களில் குளம் கட்டும்.\\

கண்டிப்பாக...! ;
வருகைக்கு மிக்க நன்றி ஆண்ழகன்

@ தம்பி

\\எஸ்.ஜே சூர்யா மாதிரிடா நீ.\\

நான் எஸ்.ஜே சூர்யானா..நீ சிம்புவா ராசா!! ;)

@ தங்ஸ்

\\சின்ன வயசுல நிலாச்சோறு 14 நாள் விழா மாதிரி நடக்கும் தைப்பூச சமயத்துல...சுகமான நினைவுகள்..\\

ஆகா...பதிவாக போடுங்களோன்..;)

\\வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி!\\

நன்றிக்கு மீண்டும் ஒரு நன்றி ;)

@ ஸ்ரீ

\\அண்ணாத்த முழு பதிவும் மனதை கொஞ்சம் பிசைந்தாலும்.

"நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்."

இந்த வரிகள் தான் டாப்பு.\\

மகிழ்ச்சி ஸ்ரீ...வருகைக்கு நன்றி ;)

ஜி said...

:))))

Autographaa?? :))) nadaththunga nadathunga....

கீதா சாம்பசிவம் said...

சரிதான் அப்புறம் ஒண்ணுமே நினைக்கலை போலிருக்கு, நானே நேரம் கிடைச்சாத் தான் வர முடியுது, ம்ம்ம்ம்ம்ம்:((((
அது சரி, நிஜமா நல்லவனுக்கு எவ்வளவு கொடுத்தீங்க?

அமுதன் said...

டேய் மாப்பு! என் புகைப்படம் தான் இந்த பதிவுக்கு inspiration-னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குடா! பதிவும் ரொம்ப நல்லா இருக்குது.

பாச மலர் said...

அடடா கோபி..லேட்டா வந்துட்டேன்..போன மாதப் பதிவு லேட்டாக் கொடுத்தாலும் அசத்தலாக் கொடுத்திருக்கீங்க..கடைசி வரிகள் மிகவும் அருமை..