Tuesday, March 11, 2008

செல்வியின் டைரி

நான் எப்போவாவது மனநிறைவு அடைஞ்சிருக்கேனான்னு யோசிக்கும்போது சட்டுன்னு எதுவும் ஞாபகத்துல வரமாட்டேங்குது. அப்போ இதுவரைக்கும் மனநிறைவே அடைஞ்சது இல்லையா!? இல்ல எது மனநிறைவுன்னு சரியா எனக்கு தெரியலியா!? முதல்ல எதுஎதெல்லாம் மனநிறைவுன்னு முடிவு பண்ணனும். அப்பதான் அது எனக்கு கிடைச்சதா, இன்னும் இல்லையான்னு தெரியும். யோசிச்சு பார்த்தா இதுதான் மனநிறைவுன்னு எந்த வரைமுறையும் இல்லன்னு தோணுது. நேத்து ராத்திரி அப்பா கூட பேசினபோது இதுவரைக்கும் நான் அனுபவிக்காத ஒருவித மன அமைதி வந்துச்சே! அதுகூட மனநிறைவுன்னு சொல்லலாம்.

இவ்வளவு நாள் அவருக்கு தேவையானது எல்லாம் செய்துக்கிட்டு இருக்கேன். அப்பா சந்தோஷமாக இருக்கணும்னுதானே நினைச்சேன். ஆனா அவரோட மனசுல இருக்குற வலியை இறக்கிவைக்க மறந்துட்டேன்னு நேத்து தான் எனக்கு புரிஞ்சது.

சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும். சமீபத்துல கூட ஒரு படத்துல பார்த்தேன்;
little miss sunshine...ன்னு. வலையுலகத்துல கப்பி பய கூட இதை பத்தி விமர்சனம் எழுதியிருப்பாரு. அந்த படத்துல ஒரு தாய் தன்னோட மாமனார் இறந்த துக்கத்துல இருப்பா. அப்போ அந்த தாயோட மகன் அவனோட குட்டி தங்கச்சிக்கிட்ட ஒரு பேப்பரில் எழுதிக்காட்டுவான். போயி அம்மாவை அணைச்சிக்கன்னு. அந்த குட்டிப்பொண்ணு ஆதரவா அணைச்சவுடனே அந்த தாய் துக்கம் தாங்காம ஓன்னு அழுவா. அதே அந்த அதரவான அரவணைப்பு ஒரு சமயத்துல அவ அண்ணனுக்கும் தேவைப்படும். அப்போ அந்த குட்டிப்பொண்ணு தானே புரிஞ்சிக்கிட்டு அண்ணனை ஆதரவா அரவணைப்பா. அவனும் அந்த மன வலியை எல்லாம் கண்ணீரில் இறக்கி வச்சிட்டு அவ தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுப் போவான். அந்த காட்சிகள் மேலும் உணர்த்தியது அரவணைப்பின் தாக்கத்தை.

நேத்து அப்பாவுக்கும் இந்த மாதிரி ஒரு அரவணைப்பு தேவைப்படுச்சி. அதை நான் உணர்ந்து செய்தேன். அப்போ எனக்கு கிடைச்ச மன நிம்மதியை எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு என் அப்பா பேரு தெரியாது இல்ல. அப்பா பேரு சொக்கலிங்கம். 66 வயசு. அவருகூட இந்த மாதிரி நான் பேசியதில்லை. நேத்தைக்கு வரைக்கும். அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க. நேத்து பேசிக்கிட்டு இருக்கும்போது அப்பா அவரோட பழைய கதை எல்லாம் சொன்னாரு.

ச்ச கதையா அது! அவரோட வாழ்க்கை. என்ன ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்திருக்காரு. அதில் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் இருக்கு. அவரு கை எல்லாம் ஆட்டி ஆட்டி முகத்தை எல்லாம் மாத்தி மாத்தி சொன்ன அழகு இருக்கே...எனக்கே நம்ம அப்பாவா இதுன்னு தோணுச்சி. இதுவரைக்கும் இப்படி நான் அப்பா கூட பேசியது இல்லை.

நேத்து ராத்திரி வழக்கம்போல அப்பாவுக்கு மருந்து கொடுக்க அவரோட ரூமுக்கு போனேன்.

"அப்பா! சும்மா படிச்சது போதும்.. இந்த மாத்திரையை சாப்பிட்டு தூங்குங்க."

உடலில் உள்ள மொத்த வலிமையையும் கைகளில் வாங்கி நிமிர்ந்து உட்காந்தார் அப்பா. பார்க்குறதுக்கே பாவமாக இருந்துச்சு. மாத்திரை வாங்கி உற்று பார்த்து "ஏழுமலை ஏழுகடல் தாண்டி ஒரு கிளி வயித்துல உயிர் இருக்குன்னு பாட்டி கதை சொல்லும் போது எல்லாம் நம்பல. ஆனா இந்த மாத்திரைகளை பார்க்கும்போது எல்லாம் அதெல்லாம் நிஜம்ன்னு தோணுதும்மா. இந்த மாத்திரைகள் இல்லன்னா நான் எப்போவோ போய் சேர்ந்திருப்பேன் இல்ல. உனக்கும் பாரமாக இருந்திருக்க மாட்டேன்"

"ஆரம்பிச்சிட்டிங்களா! இதுல எனக்கு என்னப்பா பாரம் வந்துடப்போகுது"

"ம்... சரி பசங்க எல்லாம் தூங்கிட்டாங்களா?"

"ம்... ரெண்டும் பென்சிலுக்கு சண்டை போட்டு ரெண்டு உதை வாங்கி இப்பத்தான் தூங்கிச்சுங்க". கட்டிலில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கைகளை பற்றி கொண்டேன்.

"ஏம்மா குழந்தைகளை அடிக்கிற..! சின்னகுழந்தைங்கதானே.."

"எரிச்சல்படுத்திட்டாங்கப்பா...அதான் ரெண்டு போட்டேன். நானும் சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் அக்காங்களோட சண்டை போடுவேனாப்பா.."

"சண்டை போடுவியாவா!!?...யப்பா.. அந்த மூணு பேருல நீதான் தாதா..உன் சவுண்டுக்கு அவுங்க ரெண்டு பேரும் பயந்தே உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க... ஆனா நீ எதையும் பெருசா கேட்டு அடம்பிடிக்க மாட்டே.. எது கிடைக்குதோ அதையே ரசிச்சு ஏத்துக்குவ.."

"ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன். சரி தூங்குங்கன்னு கைகளை பறித்துக்கொண்டு புறப்பட தயாரானேன். அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்.

"ம்மா செல்வி"ன்னு ஒருவித தவிப்போடு என்னை கூப்பிட்டார்.

"என்னப்பா..தண்ணி வேணுமா?"

"எப்படிம்மா இருக்க?"

இந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டுன்னு நின்னுட்டேன். என்ன சொல்லறதுன்னு தெரியல. அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்துச்சு எனக்கு. "எனக்கு என்னப்பா நல்லா தானே இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் ஆதரவாக கைகளை பற்றினேன்.

"என்னப்பா திடீர்ன்னு கேக்குறிங்க"

"ஒண்ணும் இல்லம்மா. கேட்கணுமுன்னு தோணுச்சி. கேட்டேன்... காலையில எழுந்தேன்னா சமையல், புருஷன், குழந்தைகள், உன் வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்க.. நீ எப்படியிருக்கன்னுகூட கேட்க முடியறதுல்ல...அதான்.."

மனதுக்குள் ஏதே உணர்ந்தவளாய் "நீங்க எப்படிப்பா இருக்கிங்க..?"

அந்த வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர்போல தவிப்பும் மகிழ்ச்சியுடன் மீண்டும் மொத்த வலியை திரட்டி நிமிர்ந்து உட்காந்து "ம்... எனக்கு என்னம்மா குறை, நல்லாயிருக்கேன்ம்மா...இனி சாவு ஒண்ணுதான் பாக்கி.."

...........

"அட சும்மா சொன்னேம்மா... நெருப்புன்னு சொன்ன வாய் சுட்டுடவா போகுது... அப்பா அதுக்குள்ள எல்லாம் போகமாட்டேன். உன் புள்ளைங்க கல்யாணத்தை எல்லாம் பார்த்துட்டுதான் போவேன்.."

அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டபடியே என் செல்ல அப்பா என்று புன்னகைத்தேன்.

"எங்கம்மா கூட இப்படிதான் செய்யும்..."

"எப்படி இப்படியா" என்று மறுபடியும் தலைமுடியை கோதிவிட்டு சாய்ந்து பார்த்தேன்.

"ஆமா... எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அதை உணர்ந்து ஆறுதலாக பேசி இப்படித்தான் செய்யும் எங்கம்மா.. அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு பொய் சொல்லிட்டு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.. ஒரு நாள் கேட்கவே கேட்டுட்டேன்"

"என்னன்னு..."

"எப்படிம்மா உனக்கு மட்டும் தெரியுதுன்னு"

"பாட்டி அதுக்கு என்ன சொன்னாங்க" ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டேன். என் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு 'நான் உன்னை பெத்தவடான்னு' அழுத்தமான ஒரு சிரிப்பை கொடுத்துட்டு போயிட்டாங்க. இன்னும் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கேன்.."

"ம்...."

"அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."

"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"

"ராசாத்தி... இவ எதுக்கு என் வாழ்க்கையில் வந்தா.. எதுக்கு போனா.. எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன இருந்துச்சுன்னு ஒண்ணும் பிடிபடல... இன்னும் கூட என் மனசுக்குள்ள இருக்கா.."

"உங்க காதலியாப்பா அவுங்க!?" அப்போது தான் அப்பாவுக்குதான் தன்னோட பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு நினைச்சாரா என்னன்னு தெரியல. மவுனமாக இருந்துட்டாரு. மனசில் இருப்பதை கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் போது அருகில் இருந்து அதை கேட்க ஆதரவாக ஒரு மனிதன் கிடைத்தால் அது யாராக இருந்தால் என்ன?!

"என்னப்பா...! என்கிட்ட சொல்லக்கூடாதுன்னா வேண்டாம்..."

"ச்சே... இதுல என்னம்மா இருக்கு... அவ பேரு ராசாத்தி. அந்த பேர சொல்லும்போதே முகத்துல ஒரு சிரிப்பு வரும். இந்த வாலிப வயசுல நாம பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கன்னத்துல கைவச்சு 'ம்' கொட்டி ரசிக்க ஒருத்தி கிடைச்சான்னா அதைவிட சொர்க்கம் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு சொர்க்கத்துல என்னை வச்சு ரசிச்சவ ராசாத்தி. என்னையும் அவளையும் வச்சு பல கிசுகிசுக்கள் வந்துச்சி"

"என்ன கிசுகிசுப்பா!!!"...அப்பாவின் ராசாத்தியோடு ஐக்கியமானோன்.

"வேற என்ன காதல்னுதான்.... நான் கூட ஒரு கட்டத்துல அதெல்லாம் உண்மையாக கூடாதுன்னா நினைச்சிருக்கேன்."

"ஆஹா.... அப்பா உங்கள் காதல் கதை கேட்டால் தப்பா... பொல்லாத அப்பா" ன்னு சின்னக்குழந்தை மாதிரி ராகம் போட்டு பாட்டு பாட ஆரம்பிச்சுட்டேன்.

என்னோட குழந்தைதனத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டு தொடர்ந்தார் "அவளும் காதலிச்சா. ஆனா என்னை இல்ல பாலுன்னு இன்னொருத்தனை. ஆனா என்கிட்ட அவளுக்கு இருந்த அன்பு மட்டும் மாறவேயில்ல. அவுங்க காதலில் பிரச்சனை வந்துச்சு. பாலுவால் அவனோட வீட்டுல சம்மதம் வாங்க முடியல. அதை அவகிட்ட எப்படி எல்லாமோ சொல்லிப்பார்த்தான். அவளும் சரி சரின்னு சொல்லிட்டு திடீர்ன்னு ஒருநா என் கண்ணு முன்னாடி தன்னைத்தானே எரிச்சுக்கிட்டா.."

அதிர்ச்சியில் நான் அப்பாவின் கையை மேலும் இறுக பற்றிக்கொண்டேன்.

"ச்ச..! பாவம்ப்பா...!! அப்புறம் என்னப்பா ஆச்சு..?"

"ராசாத்தியின் மரணத்தை மறக்கடித்தவ தாமரை."

"ஐய்ய்ய்யா...அம்மா என்டிரியா..."

ஒருவித வெட்கப்புன்னகையுடன் "ம்ம்ம்ன்னு" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார். தாமரை எங்க அம்மாவோட சாய்ஸ். எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.

என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"

அப்பா, அம்மாவை எந்த அளவுக்கு நேசித்திருக்காரு.. மனதில் பெருமைப்பட்டு கொண்டேன்.

"சுகத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ளாமல் என் கனவுகளையும் தன் கனவுகளாக நினைச்சு என் தோளோடு தோள் நின்னா தாமரை. நான் குழப்பமாக முடிவுகள் சரிவர எடுக்கத் தடுமாறும்போது 'எந்த முடிவுக்கும் நான் கூட இருப்பேன்ங்க. கவலைப்படாமல் செய்யுங்க'ன்னு தைரியத்தை கொடுப்பா. அப்படித்தான் ஒருநா காலையில உங்க பாட்டி முன்னாடி நின்னு காலுல விழுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கினோம். என்னடீன்னு கேட்டதுக்கு பாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு வெட்கத்தோட வாய்க்குள்ளவே ஏதோ சொல்றா.. எனக்கு காதுல விழல. இதுல உங்க பாட்டி வேற இன்னும் நீ சரியான மக்குடா. இன்னும் சின்ன புள்ளையாவே இருன்னு சொல்லி சிரிக்கிறாங்க. எனக்கா டென்சன்.. சொல்லித்தொலைங்களேன்னு கத்திட்டேன். ம்ம்ம்... சின்னப்புள்ளைக்கு புள்ளை பிறக்கப்போகுதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு அப்படியே சந்தோஷத்தில் வாயடைச்சுப்போயி நிக்குறேன். அப்போ உங்க அம்மாவை பார்க்கணுமே. கன்னம் எல்லாம் சிவந்து, அட.. அட..! இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு அந்த முகம்."

"அப்போ அக்கா பிறக்கும் போது சந்தோஷப்பட்டிங்க நான், சின்ன அக்கா பிறக்கும் போது எல்லாம் வருத்தப்பட்டீங்களாப்பா" என்று உள்குத்துக்குள் ஒளித்துவைத்து கேள்வியை கேட்டுட்டேன்.

சட்டுன்னு அப்பாவின் முகம் வாடிப்போச்சு...

"சாரிப்பா சும்மா தான் கேட்டேன்... ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன். சாரிப்பா.."

"ச்சே! இதுக்கு எதுக்கும்மா சாரி... எனக்கு எந்த வருத்தமும் இல்லை... எந்த குழந்தையானாலும் சரி. அது என் குழந்தை. என்னோட ரத்தம்ன்னு முடிவுபண்ணியிருந்தேன். அதான் கடைசியாக நீ வந்து இருந்த கொஞ்ச குறையையும் தீர்த்துவச்சுட்டியே.... உண்மையில் உன்னை நினைச்சா பெருமையா இருக்கும்மா. என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்."

என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.

அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.

அந்த கண்ணீரை எல்லாம் கடந்து என் மனசுக்குள் ஒருவித அமைதி ஏற்பட்டுச்சு.. அப்பாவுக்கு ஏதோ ஒருவகையில உதவி செய்ய திருப்தி... மனசு முழுக்க அமைதி ஏற்பட்டுச்சி..இதுக்குப்பேர் தான் மனநிறைவோ!?

56 comments:

அரை பிளேடு said...

எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள சில நினைவுகள் இருக்கின்றன. பகிர்ந்து கொள்ளப்படும் போது மனம் லேசாகிறது.

Alien said...

நன்றாக இருந்தது.

நன்றி.

பிரேம்குமார் said...

மாப்பி, கலக்கிட்டய்யா....

அதென்னவோ எப்பவும் அப்பாக்களுக்கு மகளிடம் தான் அதிகம் பாசம் இருக்கும் :)

//அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... //

அது தான் அம்மாவின் சிறப்பு.... :)))

பாச மலர் said...

கோபி..கலக்கிட்டீங்க...எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாச் சொல்லிருக்கீங்க..சூப்பர்..

Anonymous said...

Unnmaiyileya ungal kadhai mana niraivai thandhadhu.
Geetha

தம்பி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

srivats said...

/சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும்/

very true and I have felt it so many times.

This reminds of a story.A old man was crying for the death of his wife, a kid next door went and sat on his lap for sometime and came back to its parents. When asked whether she consoled the old man ,the kid replied " I just helped him cry"

This story is like this , simple yet meaningful.

Divya said...

நெகிழ்ச்சியுடன் படித்து முடித்தேன்,

ஆழமான உணர்வை , எவ்வளவு அழகாக உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கிறது!! வாவ்!!

Divya said...

கடைசி பாரா படிக்கும் போது கண்களில் வழிந்த கண்ணீரை ஏனோ தடுக்க தோனவில்லை!

பதிவோடு ஒன்றி போக வைத்தது உங்கள் எழுத்து நடை!

Divya said...

எழுத்தின் செழுமை பதிவுக்கு பதிவு முன்னேறி கொண்டே போகிறது கோபி, வாழ்த்துக்கள்!!!

Divya said...

\\அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."

"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"\\

தொடர்ச்சியாக 'ராசாத்தி' என்ற பெயர் உங்கள் பதிவுகளில்........???

Divya said...

\\ச்சே... இதுல என்னம்மா இருக்கு... அவ பேரு ராசாத்தி. அந்த பேர சொல்லும்போதே முகத்துல ஒரு சிரிப்பு வரும். இந்த வாலிப வயசுல நாம பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கன்னத்துல கைவச்சு 'ம்' கொட்டி ரசிக்க ஒருத்தி கிடைச்சான்னா அதைவிட சொர்க்கம் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு சொர்க்கத்துல என்னை வச்சு ரசிச்சவ ராசாத்தி. என்னையும் அவளையும் வச்சு பல கிசுகிசுக்கள் வந்துச்சி"\\

உரையாடல் வரிகள் அனைத்துமே அருமை,
அதிலும் இந்த பகுதி.......சூப்பர்!!

குசும்பன் said...

தம்பி வர வர உன் பதிவுகளின் கரு, கதை எல்லாம் மிக அருமையாக இருக்கு.

மிகவும் அருமை.

கயல்விழி முத்துலெட்சுமி said...

ம்.... மனநிறைவுக்கு பெரிய தத்துவார்த்தமான கதை..

சந்தோஷ் (aka) Santhosh said...

தம்பி ரொம்ப அழகாவும், அருமையாவும் இருந்தது கதை.. ஒரே ஒரு குறை இவ்வுளவு திறமையை வெச்சிகிட்டு ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை எழுதுறதை மாத்தி அடிக்கடி எழுத பழகு :)).

சந்தோஷ் (aka) Santhosh said...

//தொடர்ச்சியாக 'ராசாத்தி' என்ற பெயர் உங்கள் பதிவுகளில்........???//
தம்பி இந்த ராசாத்தி தான் அந்த பொண்ணா? சரி சரி பிளாக் வாழ்க்கையில பேர் மாத்துறது எல்லாம் சகஜம். அதுக்காக இப்படியா மாட்டிகிற மாதிரி போடுறது.. பாரு இப்ப திவ்யா கண்டு பிடிச்சிடாங்க இப்ப என்ன செய்ய போற?

கானா பிரபா said...

படித்து முடித்தேன், ஒரு பெருமூச்சு வந்தது, உண்மையில் உங்க நடையும் முடித்த விதமும் சிறப்பு.

பெருமையா இருக்கு தல. புரிஞ்சுப்பீங்க தானே.

கண்மணி said...

கோபி நல்லாயிருக்கு.ஆனா இது போல நடைமுறையில செய்ய முடியாம நம்ம வளர்ப்பு சூழல் தடுக்கிறதே.ஒரு வயசுக்கு மேல பெத்தவங்களும் ஏன் கூடப் பிறந்தவங்களும் கூட இது போல பகிர்வதில்லை
ஆனா ஒன்னு நிச்சயம் வயசானவங்களுக்கு இது போன்ற அரவணைப்பு அவசியம்.

சாப்பாடும் மருந்தும் கவனிப்பும் மட்டுமே பாதுகாப்பு என்பது மாறனும்.வயசானவங்களின் உணர்வுகளுக்கு செவி கொடுக்கனும்.
அருமையான கருத்தாக்கம்.நன்றி.

காட்டாறு said...

//அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க//

2 பொண்ணுங்க -- ராசாத்தி, தாமரை. வேறு யாரோ. அம்மாவும், சின்ன பொண்ணு செல்வியும் சேர்த்தியில்ல.

//ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன்.//
சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருப்பது கதைக்கு ஒரு ப்ளஸ்.

//அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்//
இது இன்னுமொரு உதாரணம். ரொம்ப அழகா காவியமா எழுதியிருக்கீங்க.

நெறைய எழுதுங்க கோபி. உங்க கிட்ட திறமை இருக்குது. மேலும் வளர வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றோருடைய குறிப்பாக தாயுடைய அரவணைப்பு மிகவும் மகத்துவமிக்க ஒன்று. மனிதன் ஒருவிதமான ஆற்றாமையில் இருக்கும் போதுதான் அதன் உண்மையான இன்பம் தெரியும். நான் ஏதாவது துன்பத்தில் உழலும் போது எனது தாய் என்னை அரவணைத்து தலையைக் கோதிவிட்டு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று இருக்கும். இதே நிலை தான் எனது தாய்க்கும். இருவருக்கும் நிலைமை புரிந்தாலும் ஏதோ ஒரு இடைவெளி (அ) தயக்கம் கொஞ்சம் தூரமாகவே வைத்திருக்கும். சில நேரங்களில் தாயிடம் ஏதாவது எதிர்த்துப் பேசிவிட்டு சிறிது நேரத்தில் அதை உணர்ந்து தாயின் மடியில் முகம் புதைத்து அழ வேண்டும் போல தோன்றும். ஆனால் அங்கேயும் அதே இடைவெளி... :( . இதை எப்படி போக்குவது என்று தெரியவில்லை. ஆனால் எனது தாய்க்குப் பிறகு அந்த ஏக்கம் எனது மனதில் ஒரு வடுவாக மருகிக்கொண்டு இருக்கும் என்பது மட்டும் உண்மை.
உங்களது இந்த பதிவு மனிதனின் மனதை அப்படியே ஆழ ஊடுருவி படம் பிடிக்கிறது. நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வந்து விட்டது.
வெல்டன் கோபிநாத்!

CVR said...

அழகான கதை!!
கதையோடு கட்டிப்போடும் நடை மற்றும் வர்ணனை!!
உங்கள் எழுத்துத்திறமையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது கோபி!
மேலும் இது போன்று பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)

சென்ஷி said...

டேய் மாப்பி, அடுத்த பதிவுல ராசாத்திய எப்படி கொல்லப்போற...?!

முதல்ல கொலை செஞ்சாச்சு, இதுல தற்கொல செஞ்சுக்க வச்சாச்சு. அடுத்தபதிவுல என்ன விபத்தா..! :))

ஆனாலும் ராசாத்தி மேல உனக்கிருக்கற பாசத்த நினைச்சா எனக்கு கொலவெறி வருதுடா :))

siva gnanamji(#18100882083107547329) said...

கலக்கிட்டீங்க கோபி!
இந்தத்திறமையை அடிக்கடி பதிவுகளில்
காட்டுங்க....

சென்ஷி said...

அப்பாடி! இனிமே இந்த மார்ச் மாசம் நிம்மதியா தூங்கலாம். கோபி அண்ணாத்த பதிவு போட்டுட்டாரு.. :))

சென்ஷி said...

கோபி, பதிவ முழுசா படிக்கறப்ப தனிமையில ஏங்குற நெஞ்சங்களுக்கு பிடித்தவர்களின் தோள்களும் செவிகளும்தான் துணைங்கறது புரியுது.

'ரொம்ப நல்லாயிருக்கு'ன்னு சாதாரணமா ரெண்டு வார்த்தையில சொன்னா சின்னதா தெரியுது. ஆனாலும் வேற எந்த வார்த்தையும் என்கிட்ட இல்லாததால அதயே சொல்லிக்கறேன்.....

Dreamzz said...

//அழகான கதை!!
கதையோடு கட்டிப்போடும் நடை மற்றும் வர்ணனை!!
உங்கள் எழுத்துத்திறமையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது கோபி!
மேலும் இது போன்று பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)//
repeatu :)

கப்பி பய said...

நல்லாருக்கு அண்ணாத்த!!ரசித்துப் படித்தேன்! :)

கீதா சாம்பசிவம் said...

//எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.

என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"//

2 மாசமா எந்தப் பதிவுக்கும் சரியா வர முடியலை, இப்போத் தான் உங்க பதிவுக்கு வரேன் கோபி, உங்க மெயிலிலே குறிப்பிட்டிருந்த் பின்னூட்டம் எந்தப் பதிவுனு தெரியலை, ஆனால் சமீபகாலத்தில் எந்தப் பதிவிலேயும் பின்னூட்டம் இடவில்லை, திறந்த சில பதிவுகள் தவிர.
அருமையா எழுதி இருக்கீங்க, ரொம்பவே இயல்பான நடை, புரிதல் என்பது என்னனு புரிய வச்சதுக்கும் வாழ்த்துகள்.

கோபிநாத் said...

@ அரை பிளேடு
\\எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள சில நினைவுகள் இருக்கின்றன. பகிர்ந்து கொள்ளப்படும் போது மனம் லேசாகிறது.\\

நன்றி தல ;)

@ Alien
\\நன்றாக இருந்தது.
நன்றி.\\

வருகைக்கு மிக்க நன்றி ஏலியன்

@ பிரேம்குமார்
\\மாப்பி, கலக்கிட்டய்யா....

அதென்னவோ எப்பவும் அப்பாக்களுக்கு மகளிடம் தான் அதிகம் பாசம் இருக்கும் :)

நன்றி மாப்பி...ஆமாம் உண்மை தான்...;)

//அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... //

அது தான் அம்மாவின் சிறப்பு.... :)))\\

எல்லா அம்மாவும் இப்படி தானே!!! ;))

@ பாச மலர்
\\கோபி..கலக்கிட்டீங்க...எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாச் சொல்லிருக்கீங்க..சூப்பர்..\\

மிக்க மகிழ்ச்சி அக்கா ;) நன்றி.

@ கீதா
\\Unnmaiyileya ungal kadhai mana niraivai thandhadhu.
Geetha\\

நன்றி கீதா ;)

@ தம்பி
\\அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\

வருகைக்கும் உங்கள் அழுகைக்கும் மிக்க நன்றி டம்பி ;)

@ srivats

/சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும்/

very true and I have felt it so many times.

This reminds of a story.A old man was crying for the death of his wife, a kid next door went and sat on his lap for sometime and came back to its parents. When asked whether she consoled the old man ,the kid replied " I just helped him cry"

This story is like this , simple yet meaningful.\\

அருமையான குட்டி கதை....அழமான உண்மையுடன்...நன்றி .

கோபிநாத் said...

@ Divya

மிக்க நன்றி திவ்யா...உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது..நன்றிகள் பல ;)

\\அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."

"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"\\

தொடர்ச்சியாக 'ராசாத்தி' என்ற பெயர் உங்கள் பதிவுகளில்........???\\

ஆகா...ஏதே கொளுத்தி போடுற மாதிரி இருக்கே..! ! ! ராசாத்தி எனக்கு பிடித்த பெயர் அதான் வேற ஒன்னும் இல்லைங்க ;)

@ குசும்பன்
\\தம்பி வர வர உன் பதிவுகளின் கரு, கதை எல்லாம் மிக அருமையாக இருக்கு.

மிகவும் அருமை.\\

நன்றிண்ணே ;)

@ கயல்விழி முத்துலெட்சுமி
\\ம்.... மனநிறைவுக்கு பெரிய தத்துவார்த்தமான கதை..\\

நன்றி அக்கா ;)

@ சந்தோஷ்

\\தம்பி ரொம்ப அழகாவும், அருமையாவும் இருந்தது கதை.. ஒரே ஒரு குறை இவ்வுளவு திறமையை வெச்சிகிட்டு ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை எழுதுறதை மாத்தி அடிக்கடி எழுத பழகு :)).\\

மிக்க நன்றிண்ணே....உங்க அன்பு கட்டளையை நிறைவேற்ற முயற்சி செய்றேண்ணே ;)

\\தம்பி இந்த ராசாத்தி தான் அந்த பொண்ணா?\\

எந்த பொண்ணா!!...

\\சரி சரி பிளாக் வாழ்க்கையில பேர் மாத்துறது எல்லாம் சகஜம். அதுக்காக இப்படியா மாட்டிகிற மாதிரி போடுறது.. பாரு இப்ப திவ்யா கண்டு பிடிச்சிடாங்க இப்ப என்ன செய்ய போற?\\

என்ன செய்யுறதுன்னு நீங்களே சொல்லுங்க அண்ணே...உங்களுக்கு இந்த மாதிரி எத்தனை நடந்திருக்கு..! ;)))

கோபிநாத் said...

@ கானா பிரபா
\\படித்து முடித்தேன், ஒரு பெருமூச்சு வந்தது, உண்மையில் உங்க நடையும் முடித்த விதமும் சிறப்பு.

பெருமையா இருக்கு தல. புரிஞ்சுப்பீங்க தானே.\\

மிக்க நன்றி தல....புரியுது தல...எல்லாம் உங்களின் ஊக்கமும், ஆதரவும் தான் தல ;)

@ கண்மணி
\\கோபி நல்லாயிருக்கு.ஆனா இது போல நடைமுறையில செய்ய முடியாம நம்ம வளர்ப்பு சூழல் தடுக்கிறதே.ஒரு வயசுக்கு மேல பெத்தவங்களும் ஏன் கூடப் பிறந்தவங்களும் கூட இது போல பகிர்வதில்லை\\

எல்லாம் சூழ்நிலை தான்..

\\ஆனா ஒன்னு நிச்சயம் வயசானவங்களுக்கு இது போன்ற அரவணைப்பு அவசியம்.
சாப்பாடும் மருந்தும் கவனிப்பும் மட்டுமே பாதுகாப்பு என்பது மாறனும்.வயசானவங்களின் உணர்வுகளுக்கு செவி கொடுக்கனும். அருமையான கருத்தாக்கம்.நன்றி.\\

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிக்கா ;)

@ காட்டாறு
//அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க//

2 பொண்ணுங்க -- ராசாத்தி, தாமரை. வேறு யாரோ. அம்மாவும், சின்ன பொண்ணு செல்வியும் சேர்த்தியில்ல.\\

ம்ம்ம்...உங்க கணக்கும் சரிதான்....

//ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன்.//
சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருப்பது கதைக்கு ஒரு ப்ளஸ்.

//அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்//
இது இன்னுமொரு உதாரணம். ரொம்ப அழகா காவியமா எழுதியிருக்கீங்க.
நெறைய எழுதுங்க கோபி. உங்க கிட்ட திறமை இருக்குது. மேலும் வளர வாழ்த்துக்கள்!\\

உங்களின் பாராட்டுக்கும், வருகைக்கும் மிக்க நன்றிக்கா ;)

@ தமிழ் பிரியன்

\\ இதே நிலை தான் எனது தாய்க்கும். இருவருக்கும் நிலைமை புரிந்தாலும் ஏதோ ஒரு இடைவெளி (அ) தயக்கம் கொஞ்சம் தூரமாகவே வைத்திருக்கும். சில நேரங்களில் தாயிடம் ஏதாவது எதிர்த்துப் பேசிவிட்டு சிறிது நேரத்தில் அதை உணர்ந்து தாயின் மடியில் முகம் புதைத்து அழ வேண்டும் போல தோன்றும். ஆனால் அங்கேயும் அதே இடைவெளி... :( . இதை எப்படி போக்குவது என்று தெரியவில்லை. \\

உண்மை....இது போன்ற ஒரு நிலை எனக்கும் பலமுறை வந்திருக்கு.

\\உங்களது இந்த பதிவு மனிதனின் மனதை அப்படியே ஆழ ஊடுருவி படம் பிடிக்கிறது. நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வந்து விட்டது. வெல்டன் கோபிநாத்!\\

வெளிப்படியாக உங்களின் நிலையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தமிழ் பிரியன். ;)

@ CVR

\\அழகான கதை!!
கதையோடு கட்டிப்போடும் நடை மற்றும் வர்ணனை!!
உங்கள் எழுத்துத்திறமையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது கோபி! மேலும் இது போன்று பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)\\

உங்களின் வருகையும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகத்தை தருகிறது. நன்றி சிவி ;)

கோபிநாத் said...

@ சென்ஷி

\\டேய் மாப்பி, அடுத்த பதிவுல ராசாத்திய எப்படி கொல்லப்போற...?!
முதல்ல கொலை செஞ்சாச்சு, இதுல தற்கொல செஞ்சுக்க வச்சாச்சு. அடுத்தபதிவுல என்ன விபத்தா..! :))\\

இப்போதைக்கு.......யோசிச்சிக்கிட்டு இருக்கேன்....! ;)

\\ஆனாலும் ராசாத்தி மேல உனக்கிருக்கற பாசத்த நினைச்சா எனக்கு கொலவெறி வருதுடா :))\\

மாப்பி...இதெல்லாம் ஓவருடா...தப்பு இப்படி எல்லாம் உனக்கு வரக்கூடாது. ;)

\\'ரொம்ப நல்லாயிருக்கு'ன்னு சாதாரணமா ரெண்டு வார்த்தையில சொன்னா சின்னதா தெரியுது. ஆனாலும் வேற எந்த வார்த்தையும் என்கிட்ட இல்லாததால அதயே சொல்லிக்கறேன்.....\\

மாப்பி உன் பின்னூட்டத்தை படிச்சிட்டு என்னால ஒன்னும் சொல்ல முடியல டா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;)

@ siva gnanamji(#18100882083107547329)

வாங்க...வாங்க சிவாஞானம்ஜி சார்....

\\கலக்கிட்டீங்க கோபி!
இந்தத்திறமையை அடிக்கடி பதிவுகளில்
காட்டுங்க....\\

மிக்க நன்றி....கண்டிப்பாக செய்கிறேன்..;)

@ Dreamzz said...
//அழகான கதை!!
கதையோடு கட்டிப்போடும் நடை மற்றும் வர்ணனை!!
உங்கள் எழுத்துத்திறமையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது கோபி! மேலும் இது போன்று பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)//
repeatu :)

ரீப்பிட்டுக்கு நன்றி டிரீம்ஸ் ;)

@ கப்பி பய said...
\\நல்லாருக்கு அண்ணாத்த!!ரசித்துப் படித்தேன்! :)\\

நன்றி செல்லம் ;)

@ கீதா சாம்பசிவம்

//எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.

என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"//

2 மாசமா எந்தப் பதிவுக்கும் சரியா வர முடியலை, இப்போத் தான் உங்க பதிவுக்கு வரேன் கோபி, உங்க மெயிலிலே குறிப்பிட்டிருந்த் பின்னூட்டம் எந்தப் பதிவுனு தெரியலை, ஆனால் சமீபகாலத்தில் எந்தப் பதிவிலேயும் பின்னூட்டம் இடவில்லை, திறந்த சில பதிவுகள் தவிர.
அருமையா எழுதி இருக்கீங்க, ரொம்பவே இயல்பான நடை, புரிதல் என்பது என்னனு புரிய வச்சதுக்கும் வாழ்த்துகள்.\\

தலைவியின் வருகைக்கு மிக்க நன்றி...;)

ஜி said...

தல... கலக்கிட்டீங்க... செமையா இருந்தது கதை.... மென்மேலும் கதைகள் எழுத வாழ்த்துக்கள் :))))

நிஜமா நல்லவன் said...

வார்த்தைகளில் வடிக்க இயலாதொரு நெகிழ்ச்சி.

பினாத்தல் சுரேஷ் said...

முன்பே படிச்சுட்டேன். ஆனா பின்னூட்டம் போட இப்பதான் முடியுது.

அருமையான கதை. நடை, காட்சிப்படுத்தல் ஆகியவற்றில் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறாய் கோபி.

வாழ்த்துக்கள்.

இனியவள் புனிதா said...

அப்பாவின் ஞாபகம் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது...கண்களிலும் தவிர்க்க முடியாத கண்ணீர்...

நன்றி கோபி...

எழில்பாரதி said...

நல்ல பதிவு கோபி.....

அப்படியே நானும் அப்பாவும் பேசுற மாதிரி இருந்தது!!!!!

எல்லா அப்பாக்க‌ளும் ம‌க‌ளின் உருவில் தாயை பார்ப்பதால்தான் அத்தனை பாச‌ம்!!!!!

நெகிழ்ச்சியாய் இருந்த‌து!!!! ப‌டிப்ப‌த‌ற்கு!!!

இராம்/Raam said...

அருமை மாப்பி... :)

Kittu said...

Senti post, unarndhu padichen. reminded me of my dad.

ரசிகன் said...

//அந்த கண்ணீரை எல்லாம் கடந்து என் மனசுக்குள் ஒருவித அமைதி ஏற்பட்டுச்சு.. அப்பாவுக்கு ஏதோ ஒருவகையில உதவி செய்ய திருப்தி... மனசு முழுக்க அமைதி ஏற்பட்டுச்சி..இதுக்குப்பேர் தான் மனநிறைவோ!?//
மாம்ஸ் நெசமாவே,இந்த கதைய படிச்சுட்டு,மனசுல ஒரு மனநிறைவு வருது :)
அருமையா இருக்கு.

ரசிகன் said...

//அப்போ அந்த குட்டிப்பொண்ணு தானே புரிஞ்சிக்கிட்டு அண்ணனை ஆதரவா அரவணைப்பா. அவனும் அந்த மன வலியை எல்லாம் கண்ணீரில் இறக்கி வச்சிட்டு அவ தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுப் போவான். அந்த காட்சிகள் மேலும் உணர்த்தியது அரவணைப்பின் தாக்கத்தை.//

படம் பார்த்த ஒரு உணர்வு,ஏனோ மனதில் நெகிழ்வு. ”கிராஷ் “படம் பார்த்து இப்படித்தான் உணர்ந்தேன்:)
உணர்வுகளை பலி கொடுக்காத வர்ணனை. அருமை:)

ரசிகன் said...

//"ம்மா செல்வி"ன்னு ஒருவித தவிப்போடு என்னை கூப்பிட்டார்.

"என்னப்பா..தண்ணி வேணுமா?"

"எப்படிம்மா இருக்க?"

இந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டுன்னு நின்னுட்டேன். என்ன சொல்லறதுன்னு தெரியல. அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்துச்சு எனக்கு. "எனக்கு என்னப்பா நல்லா தானே இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் ஆதரவாக கைகளை பற்றினேன்.

"என்னப்பா திடீர்ன்னு கேக்குறிங்க"

"ஒண்ணும் இல்லம்மா. கேட்கணுமுன்னு தோணுச்சி. கேட்டேன்... காலையில எழுந்தேன்னா சமையல், புருஷன், குழந்தைகள், உன் வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்க.. நீ எப்படியிருக்கன்னுகூட கேட்க முடியறதுல்ல...அதான்.."

மனதுக்குள் ஏதே உணர்ந்தவளாய் "நீங்க எப்படிப்பா இருக்கிங்க..?"

அந்த வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர்போல தவிப்பும் மகிழ்ச்சியுடன் மீண்டும் மொத்த வலியை திரட்டி நிமிர்ந்து உட்காந்து "ம்... எனக்கு என்னம்மா குறை, நல்லாயிருக்கேன்ம்மா...இனி சாவு ஒண்ணுதான் பாக்//

மாம்ஸ் எங்கயோ போயிட்டிங்க....
தன்னை யாராவது அன்போட எப்படியிருக்கிங்கன்னு கேப்பாங்களான்னு ஏங்கும் வயதானவர்களின் ஏக்கத்தை அழகா வடிச்சிருக்கிங்க... டச்சிங்..:)

ரசிகன் said...

இதைப்போன்ற நல்ல படைப்புக்களை அடிக்கடி வெளியிடுங்க,, வாழ்த்துக்கள்:)

நிவிஷா..... said...

Excellent......very very nice Mr Gopinath:)


natpodu
Nivisha

sathish said...

சில பதிவுகள் மனதின் ஆழத்தை தொடுகின்றன! மிகவும் இரசித்தேன் கோபிநாத்!

கோபிநாத் said...

@ஜி

\\தல... கலக்கிட்டீங்க... செமையா இருந்தது கதை.... மென்மேலும் கதைகள் எழுத வாழ்த்துக்கள் :))))\\

நன்றி ஜி ;)

@ நிஜமா நல்லவன்
\\வார்த்தைகளில் வடிக்க இயலாதொரு நெகிழ்ச்சி.\\

மிக்க நன்றி நல்லவன் ;)

@ பினாத்தல் சுரேஷ்
\\முன்பே படிச்சுட்டேன். ஆனா பின்னூட்டம் போட இப்பதான் முடியுது.

அருமையான கதை. நடை, காட்சிப்படுத்தல் ஆகியவற்றில் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறாய் கோபி.

வாழ்த்துக்கள்.\\

மிக்க நன்றி தல...உங்களின் வாழ்த்து எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது ;)

@ இனியவள் புனிதா
\\அப்பாவின் ஞாபகம் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது...கண்களிலும் தவிர்க்க முடியாத கண்ணீர்...

நன்றி கோபி...\\

வருகைக்கு மிக்க நன்றி புனிதா ;)

@ எழில்பாரதி
\\நல்ல பதிவு கோபி.....

அப்படியே நானும் அப்பாவும் பேசுற மாதிரி இருந்தது!!!!!

எல்லா அப்பாக்க‌ளும் ம‌க‌ளின் உருவில் தாயை பார்ப்பதால்தான் அத்தனை பாச‌ம்!!!!!\\

ஆகா..சரியாக சொன்னிங்க ;))

\\நெகிழ்ச்சியாய் இருந்த‌து!!!! ப‌டிப்ப‌த‌ற்கு!!!\\

மிக்க நன்றி எழில்பாரதி ;)

@ இராம்/Raam
\\அருமை மாப்பி... :)\\

மிக்க நன்றி மாப்பி ;)

@ Kittu

\\Senti post, unarndhu padichen. reminded me of my dad.\\

மிக்க நன்றி தல ;)

@ ரசிகன்
\\படம் பார்த்த ஒரு உணர்வு,ஏனோ மனதில் நெகிழ்வு. ”கிராஷ் “படம் பார்த்து இப்படித்தான் உணர்ந்தேன்:)
உணர்வுகளை பலி கொடுக்காத வர்ணனை. அருமை:)\\

ம்ம்..நானும் பார்த்திருக்கேன் தல..சூப்பர் படம் அது ;)

\\மாம்ஸ் எங்கயோ போயிட்டிங்க....
தன்னை யாராவது அன்போட எப்படியிருக்கிங்கன்னு கேப்பாங்களான்னு ஏங்கும் வயதானவர்களின் ஏக்கத்தை அழகா வடிச்சிருக்கிங்க... டச்சிங்..:)\\

நன்றி தல ;))

\\இதைப்போன்ற நல்ல படைப்புக்களை அடிக்கடி வெளியிடுங்க,, வாழ்த்துக்கள்:)\\

முயற்சிக்கிறேன் தல ;) வருகைகும் உங்கள் உற்சாகத்திற்க்கும் மிக்க நன்றி தல ;)

@ நிவிஷா
\\Excellent......very very nice Mr Gopinath:)

natpodu
Nivisha\\

நன்றி நிவிஷா ;))

@ sathish

\\சில பதிவுகள் மனதின் ஆழத்தை தொடுகின்றன! மிகவும் இரசித்தேன் கோபிநாத்!\\

நன்றி சதிஷ் ;)

Anonymous said...

இப்பத்தான் இந்தக்கதையப்படிச்சேன்.மனிதன் வயதாகும்போது, உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ள ஒரு உறவு மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆகும். நினைக்கவே பயமாக இருக்கிறது. இன்றைக்கு முக்கியமாகத்தோன்றாத உறவுகள் என்னைக்காவது முக்கியம் என்று தோன்றுமோ. உங்கள் கதையைப்படித்ததும் தோன்றிய உணர்வு

ஸ்ரீ said...

அட்டகாசமான கதைக்களம். அழகான நடைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். கண் கொஞ்சம் கலங்க செய்துவிட்டீர். அருமை.

இலவசக்கொத்தனார் said...

நல்லாச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்!!

இலவசக்கொத்தனார் said...

50 அடிச்சாச்சு!!

சத்யா said...

பதிவோடு ஒன்றி போக வைத்தது உங்கள் எழுத்து நடை!

rombave nalla eludhi irukeenga. very touching.

Syam said...

konja naal indha pakkam varalanna udaney mokka poduratha vittutu soober ah elutha aarambichuteenga...:-)

umakumar said...

naan idhai unmaine nenaichutten
arputham

கோபிநாத் said...

@ சின்ன அம்மிணி - நன்றி அக்கா ;)

@ ஸ்ரீ - நன்றி ஸ்ரீ

@ இலவசக்கொத்தனார் - தல 50அடிச்சதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி ;)

@ சத்யா - நன்றி சத்யா ;)

@ Syam - தெய்வமே..எப்படி இருக்கிங்க...நலமா?

@ umakumar - நன்றி உமா ;)

சென்ஷி said...

இது 55 :))

அருட்பெருங்கோ said...

வயசாகிட்டா பகிர்தல் ரொம்ப எதிர்பார்ப்பாங்க போல. தன்கிட்ட இருக்கிறத மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கனும். மத்தவங்களும் தன்கிட்ட எல்லாம் பகிர்ந்துக்கனும் இந்த மாதிரி...

கதை படிச்சு முடிக்குறப்ப நெகிழ்ச்சியா இருந்தது கோபி. வாழ்த்துகள்!