Saturday, July 28, 2007

புலி கொடுத்த சிங்கபொம்மை- வலைபதிவர் சந்திப்பு



மாலை 4.30 மணிக்கு சந்திப்பு என்று அபி அப்பா பதிவு எல்லாம் போட்டு அறிவித்திருந்தார். அறிவிப்பு வந்தவுடன் சித்த"ஆப்பு" குசும்பன் இடம் இருந்து போன் "கோபி நீ கண்டிப்பா வரனும்"...."என்ன சீத்த"ஆப்பு" இப்படி கேட்டுபுட்டிங்க நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பனோ"...ன்னு ஒரு பிட்டை போட்டு வச்சேன். தனியாக சென்று கூட்டத்தில் மாட்டி கொள்லாமல் இருக்க பல கூட்டங்களை கண்ட எங்கள் கவிமட தலைவர் பெனாத்தலாரோடு இணைத்து கொண்டு சந்திப்புக்கு கிளம்பினோம்.பார்க்கை அடைந்தவுடன் எனக்கு அதிர்ச்சி

"சார்... "

"என்னப்பா.."

"நாம சரியா 4.30 மணிக்கு வந்துட்டேம் சார்"

"பெனாத்தலார்னா பஞ்சுவலிட்டின்னு உனக்கு தெரியாதா!!!" ன்னு அவரும் ஒரு பிட்டை போட்டு பார்க்கையே அதிரவைத்தார்

பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.
(நோட் பண்ணுங்கடா டேய் இதெல்லாம் நோட் பண்ணுங்க)

அவருடன் நட்சத்திரம் அய்யனார், சித்த"ஆப்பு" குசும்பன், சென்ஷி, சிறுகதை புயல் தம்பி, லொடுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பெனாத்தலாரிடம் வழக்கம் போல ஆள்மாறாட்ட வேலைகள் நடந்தன. பின்பு 2 நிமிடம் கழித்து உண்மை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. வலைபதிவர் சந்திப்புன்னு வந்துட்ட பிறகு இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு மறுபடியும் ஒரு பிட்டை போட்டார்.

சிறிது நேரத்திரத்திற்கு பிறகு சந்திப்பின் ஸ்பன்சர் சூடான் புலி சூடாக வராமல் கூல்லாக வந்து சேர்ந்தார். அமீரகத்தின் பெண்பதிவர் சகோதரி ஜெசிலா அவர்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட லியோ சுரேஷ், மகேந்திரன் பெ மற்றும் மின்னது மின்னல் மிஸ்சிங். அமீரகத்தின் மற்றொரு பதிவர் சுல்தானும் அனானி தியாகுவும் வந்து சேர்ந்தனர்.

பின்பு வழக்கம் போல் கும்மி தேவையா?....யார் அந்த அனானி? கவிதையின் அடுத்த கட்டம் என்ன? அபி அப்பா ஏன் பதிவுகளை படிப்பதில்லை? அபி அப்பா சீரியசாக எப்போ எழுதுவார் (சிரிக்காதிங்க...உண்மையிலே கேட்டோம்) இப்ப யாருக்கும் யாருக்கும் சண்டை? நீ யார் பக்கம்? பக்கத்துல எங்க நல்ல சட்னி வடை கிடைக்கும்? புலி கொண்டு வந்த பைக்குள்ள என்ன இருக்கு? இப்படி பல விஷயங்கள் விவாதிக்க பட்டு கலைத்து போயி டீ சாப்பிட முடிவு செய்தோம்.

சுட சுட டீ சாப்பிட்டு விட்டு அய்யனாரும் பெனாத்தலாரும் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் பற்றி பேசி கொண்டுயிருந்தார். பெனாத்தலார் பல வருடங்களுக்கு முன்பு படித்த அசோகமித்திரனின் கதையை வரிகளை கூட மறக்கமால் சொல்லிக் கொண்டுயிருந்தார்.

அய்யனாரும் சிறுகதை, நாவல், கவிதை என்று ஒரு எரியாவையும் விட்டு வைக்காமல் போட்டு தாக்கி கொண்டுயிருந்தார்.

சென்ஷி பதிவையும் அதற்கு போட்ட பின்னூட்டத்தையும் ஞாபகத்தில் வைத்து கொண்டு பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நியூசிலாந்திலிருந்து வல்லியம்மா கூறிய வாழ்த்தை அபி அப்பா மறக்காமல் பதிவு செய்தார். (பதிவர்கள் சார்பாக வல்லியம்மாவுக்கு நன்றிகள்) சந்திப்பின் போது மின்னலும், டெல்லியில் இருந்து முத்துலட்சுமி அக்காவும் போன் மூலமும் அனைவரிடமும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனார்.

பெனாத்தலார் கூடிய விரைவில் FLASH (Macromedia Flash) பற்றியை செய்திகளை வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன் அதற்கான வேலைகள் நடந்து கொண்டுயிருக்கிறது என்று கூறினார் (கூடிய விரைவில் FLASH போட்டி ஒன்னு வரும்).

தம்பி சமிபத்தில் எழுதிய சிறுகதைகள் நன்றாக இருப்பதாக அனைத்து பதிவர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தினர்.

Web Page Design பற்றி சொல்லிக் கொடுக்க போவதாக குசும்பன் தெரிவித்தார்.

அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை முன்னிட்டு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைக்கு (ஆசிப் அண்ணாச்சியில்ல) ஒட்டல் சரவண பவனுக்கு சென்று வயிற்று பசியையும் முடித்து கொண்டோம்.


பின்பு சூடான் புலி அனைவருக்கும் நினைவு பரிசாக ஒரு சிங்கபொம்மையை பரிசாக வழங்கினார். பின்பு அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும் அபி அப்பாவுடன் புலி போகாதது மர்மமாகவே உள்ளது.







புலி கொடுத்த சிங்கபொம்மை

இந்த சந்திப்பின் மூலம் வருங்காலத்தின் ரெண்டு பெண் பதிவர்கள் கிடைத்தினர்....லொடுக்கு அவர்களின் குட்டி தேவதையும், சகோதரி ஜெசிலா அவர்களின் குட்டி தேவதையும் தான் வருங்கால பெண்பதிவர்கள். ஜெசிலாவின் மகள் கண்மணி டீச்சரையே கலாய்த்தவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. எங்கள் சந்திப்பை விட அந்த ரெண்டு குழந்தைகளின் நட்பு மிகவும் அழகான ஒன்று, அதனை பற்றியே ஒரு பதிவு போடலாம். கடைசி வரையில் அந்த குழந்தைகளிடமும் குசும்பனின் குசும்புகள் பலிக்கவில்லை என்பதை இங்கே கூறி கொள்ள விரும்புகிறேன்.


வாரத்தின் விடுமுறை நாளை பல புதிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

சந்திப்பில் பங்கு பெற்றோர்

அபி அப்பா

பினாத்தால் சுரேஷ்

லொடுக்கு

ஜெசிலா

சுல்தான்

குசும்பன்

அய்யனார்

சென்ஷி

நாகை சிவா

கதிர்

அனானி நண்பர் தியாகு

இவர்களுடன் நான்.

47 comments:

அபி அப்பா said...

ஓசை செல்லா வலைப்பதிவு மாதிரி சும்மா "நச்"ன்னு இருக்கு கோபி தம்பி பதிவு!

அபி அப்பா said...

ரிப்பீட்டேய்! (இது கோபிக்கு நான் தரும் ஊக்க பின்னூட்டம்!

அபி அப்பா said...

டபுள் ரிப்பீட்டேய்!(இதுவும் ஊக்கு வைக்கத்தான்)

Anonymous said...

எங்க அய்த்தான இன்னும் கொஞ்சம் நல்லா ஜொல்லியிருக்கலாம் கோபி அண்ணே!

CVR said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டிருக்கீங்க!!!
நல்லா இருக்கு பதிவு!!!
சந்திப்பு இனிமையாக நடந்ததில் மகிழ்ச்சி!! :-)
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

லொடுக்கு said...

தல கலக்கல் :)

அய்யனாரை பத்தி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.

லொடுக்கு said...

தல கலக்கல் :)

அய்யனாரை பத்தி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.

கதிர் said...

கோபி. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய பதிவு போட்டுருக்கிறார்.

வழக்கம்போல அபிஅப்பா படிக்காமலே ஊக்கமளித்திருக்கிறார்.

லொடுக்கு said...

//ரிப்பீட்டேய்! //

இதைப் பத்தி பேசுனத யாராச்சும் விரிவா எழுதுங்கப்பா :)

Anonymous said...

யோவ் மின்னல் தீட்டி வச்ச ஆப்பு அப்படியேதான் இருக்கு! வர்ரேண்டி! ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் வக்கிறேன்!

ரவி said...

எச்ச்சூஸ் மீ

இங்க கும்மி அலவ்டா ?

Anonymous said...

hey you

right now i am free.

shall i put some pinnuuttam here ?

I love india.

India will become like Dubai in Year 3030. that time please come back to india.

வல்லிசிம்ஹன் said...

கோபி,
அபி அப்பாகிட்ட நான்


ஸ்விட்சர்லாண்டிலிருந்துதான் பேசினதா சொன்னேன்.


காதுமா:))))))))

ALIF AHAMED said...

கலக்குற கோபி

கானா பிரபா said...

தல

சும்மா நச்சுனு கொடுத்திருக்கீங்க.
சரவணபவனில் சைவச்சாப்பாட்டா? மிலிட்டரி கிடையாதா?

ALIF AHAMED said...

ஸ்விட்சர்லாண்டிலிருந்துதான் பேசினதா சொன்னேன்.


காதுமா:))))))))
//

டோட்டலா டேமெஜ்..:)

ALIF AHAMED said...

சரவணபவனில் சைவச்சாப்பாட்டா? மிலிட்டரி கிடையாதா?
//

சாரி மிஸ்டெக்

போண்டா இருந்ததா..? இப்படி இருக்கனுமோ..:)

அபி அப்பா said...

கோபி! வல்லிம்மா என்ன திட்டலை, உன்னயதான் தம்பி திட்டினாங்க உன்னயதான். ஆமா காதை நல்ல எண்ட் கிட்ட காமிக்கவும்!:-))

Anonymous said...

மஞ்சுளா said...
எங்க அய்த்தான இன்னும் கொஞ்சம் நல்லா ஜொல்லியிருக்கலாம் கோபி அண்ணே!
//

அடி செருப்பால எவடி அவ சக்காளாத்தி

அபி அப்பா said...

சரவணபவனில் சைவ சாப்பாடு தான், மிலிட்டரி கிடையாது, ஆனா போலீஸ் எப்பவாவது வந்து சாப்பிடும்!

அபி அப்பா said...

ரவி! என்ன சின்ன பிள்ள தனமா, அருமையா அசுரன் மாதிரி ஒரு பதிவுல வந்து அமுக தோழர்களை வைத்து சீக்கிரம் 40க்கு மேல கொண்டு போக முடிவு செஞ்சாச்சா, என் கிட்டயும் கருப்பு பெல்ட் இருக்கு:-)))

குசும்பன் said...

கோபி சிங்களுக்கு புலி கொடுத்த சிங்க பொம்மை!!!! என்று டைட்டில் வச்சு இருந்தா இன்னும் சூப்பராக இருந்திருக்கும் கோபி...

நீங்க எதுக்கு உண்மைய சத்தம் போட்டு சொல்லிக்கிட்டு என்று விட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்...

கானா பிரபா said...

//அபி அப்பா said...
சரவணபவனில் சைவ சாப்பாடு தான், மிலிட்டரி கிடையாது, ஆனா போலீஸ் எப்பவாவது வந்து சாப்பிடும்!//


அபிஸ் டாட்

சரவணபவனில் சைவசாப்பாட்டுன்னு தெரியும் ;-)
மிலிட்டரி ஓட்டல் போகவேண்டியது தானே? ஒரு ஆதங்கம் தான்

Jazeela said...

//அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை// யப்பா அறிவு சம்பந்தமா யாராவது ஏதாச்சும் பேசுனீங்களா என்ன? மேல்மாடிய வீட்டுலயே கழட்டி வச்சிட்டு வந்துட்டு அறிவு பசி அடங்குச்சாமே? :-)

MyFriend said...

romba santhoshamaa irukkuppaaa. :-D

Anonymous said...

ellarum singapore vanga,durian pazham vangi thaaren :p

கண்மணி/kanmani said...

கோபி பதிவு நல்லாருக்கு.
ஆமாம் நீயுமா நம்பறே.இந்த ஜெஸிலா என்னையக் குரங்குன்னு சொல்லிட்டு பாவம் சின்ன புள்ளை மேல பழி போடுதுப்பா.

ஆமாம் அபி அப்பா எப்பாத்தான் படிச்சிட்டு பின்னூட்டம் இடுவாராம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி பதிவு சூப்பர்.
எல்லாரையும் பத்தி நல்லா எழுதி இருக்கீங்க.
நிறைய விசயம் பேசி இருக்கீங்களே
மாநாடு வெற்றி தான். :)

Ayyanar Viswanath said...

தன்மான சிங்கம்யா நீ பதிவு போடுன்னவுடனே போட்டுட்டியே கலக்குற கோபி

:)

சென்ஷி said...

//பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.
//

சென்ஷிதான் அதுக்கு காரணம்ங்கறத யார்கிட்டயும் சொல்லிடாத கோபி...
எழுதமாட்டேன் சொல்லிட்டு இப்படித்தான் கலக்குறதா..


கீப் இட் அப்

சித்தாப்பூ தொல்ல அங்கு கொஞ்சம் அதிகம். அதப்பத்தி நான் எழுதனும்னு நினைக்கிறேன். ஆனா டைம்தான் கிடைக்க மாட்டேங்குது.. என்ன செய்ய..


ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

சென்ஷி said...

// கண்மணி said...
கோபி பதிவு நல்லாருக்கு.
ஆமாம் நீயுமா நம்பறே.இந்த ஜெஸிலா என்னையக் குரங்குன்னு சொல்லிட்டு பாவம் சின்ன புள்ளை மேல பழி போடுதுப்பா.

ஆமாம் அபி அப்பா எப்பாத்தான் படிச்சிட்டு பின்னூட்டம் இடுவாராம்? //

இது ஒரு நல்ல காமெடி பின்னூட்டம் :)

சென்ஷி said...

//அந்த குழந்தைகளிடமும் குசும்பனின் குசும்புகள் பலிக்கவில்லை என்பதை இங்கே கூறி கொள்ள விரும்புகிறேன்.//


அபி அப்பா,

வர வர கோபி ரொம்ப ஃபீலிங்ஸ் விட ஆரம்பிச்சுட்டான்.
என்னன்னு கவனிங்க..

காயத்ரி சித்தார்த் said...

//பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.//

நான் நம்ப மாட்டேன்! நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!

Unknown said...

//போண்டா இருந்ததா..? இப்படி இருக்கனுமோ..:)//
'கட்டுடைப்போம்'னு லொடுக்கு பவுலிங் போட, அதை புலி சரியாய் கேட்ச் பிடித்து,
'போண்டாவுடைய போட்டா மட்டுவாது போடுங்கப்பான்னு' அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும்,
போண்டாவை மெனுவில் நீக்கி விட்டார்.

ALIF AHAMED said...

காயத்ரி said...
//பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.//

நான் நம்ப மாட்டேன்! நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!
///

நம்பிதான் ஆகனும்

ஏன்னா நாந்தான் தீபாவெங்கட் பார்க்குல உக்காந்து இருக்காங்கனு மெசேஜ் அனுப்பினேன்..:)

கோபிநாத் said...

வாங்க அபி அப்பா
\அபி அப்பா said...
ஓசை செல்லா வலைப்பதிவு மாதிரி சும்மா "நச்"ன்னு இருக்கு கோபி தம்பி பதிவு!\\

அப்படியா...இதுல எதுவும் உள்குத்து இல்லையே ;-))

கோபிநாத் said...

வாங்க CVR

\\CVR said...
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டிருக்கீங்க!!!
நல்லா இருக்கு பதிவு!!!
சந்திப்பு இனிமையாக நடந்ததில் மகிழ்ச்சி!! :-)
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)\\

வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ;-)

கோபிநாத் said...

வாங்க லொடுக்கு ;-))

\\லொடுக்கு said...
தல கலக்கல் :)

அய்யனாரை பத்தி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.\\

எதுக்கு தல அப்புறம் என்னை தொந்தரவு செய்யாதே போடான்னு சொல்லறதுக்கா

கோபிநாத் said...

வாங்க தம்பி
\\தம்பி said...
கோபி. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய பதிவு போட்டுருக்கிறார்.

வழக்கம்போல அபிஅப்பா படிக்காமலே ஊக்கமளித்திருக்கிறார்.\\

நீங்க படிச்சிங்களா?

வாங்க தல ;-))

\\ செந்தழல் ரவி said...
எச்ச்சூஸ் மீ

இங்க கும்மி அலவ்டா ?\\

இல்லைன்னு சொன்ன நம்பவ போறிங்க ;-))

வாங்க வல்லிம்மா ;-)

\வல்லிசிம்ஹன் said...
கோபி,
அபி அப்பாகிட்ட நான்


ஸ்விட்சர்லாண்டிலிருந்துதான் பேசினதா சொன்னேன்.


காதுமா:))))))))\\

ஆமாம்...மாலை ஆறு மணிக்கு மேல கண்ணும் ;-))))

கோபிநாத் said...

வாங்க மின்னல்
மின்னுது மின்னல் said...
கலக்குற கோபி\\

நிங்களும் வந்திருந்த இன்னும் கலக்கலாக இருந்திருக்கும்.


வாங்க தல ;-)
\\கானா பிரபா said...
தல

சும்மா நச்சுனு கொடுத்திருக்கீங்க. \\
உங்களை விடவா...நன்றி ;-)

\\அபி அப்பா said...
கோபி! வல்லிம்மா என்ன திட்டலை, உன்னயதான் தம்பி திட்டினாங்க உன்னயதான். ஆமா காதை நல்ல எண்ட் கிட்ட காமிக்கவும்!:-))\\

என்ன கொடுமை சார் இது ;-(((

கோபிநாத் said...

வாங்க சித்தஆப்பு ;-)))

\\குசும்பன் said...
கோபி சிங்களுக்கு புலி கொடுத்த சிங்க பொம்மை!!!! என்று டைட்டில் வச்சு இருந்தா இன்னும் சூப்பராக இருந்திருக்கும் கோபி...

நீங்க எதுக்கு உண்மைய சத்தம் போட்டு சொல்லிக்கிட்டு என்று விட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்...\\

நீங்க சொல்லிட்டிங்கல்ல ஆமா....ஆமா...தான்

கோபிநாத் said...

வாங்க ஜெலிக்கா ;-))

\\ெஸிலா said...
//அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை// யப்பா அறிவு சம்பந்தமா யாராவது ஏதாச்சும் பேசுனீங்களா என்ன? மேல்மாடிய வீட்டுலயே கழட்டி வச்சிட்டு வந்துட்டு அறிவு பசி அடங்குச்சாமே? :-)\\

யக்கோவ்....இதை எல்லாம் எதுக்கு சபையில சொல்லிக்கிட்டு ;)


வாங்க தோழி ;-)

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
romba santhoshamaa irukkuppaaa. :-D\\

ஏதே தீயற வாசனை வருது ;-)

வாங்க துர்கா ல ;-)

\\துர்கா|thurgah said...
ellarum singapore vanga,durian pazham vangi thaaren :p\\

முதல்ல அங்க வரத்துக்கு விசா வாங்கி தாங்க ;-)

கோபிநாத் said...

வாங்க கண்மணி அக்கா ;-))

\\கண்மணி said...
கோபி பதிவு நல்லாருக்கு.
ஆமாம் நீயுமா நம்பறே.இந்த ஜெஸிலா என்னையக் குரங்குன்னு சொல்லிட்டு பாவம் சின்ன புள்ளை மேல பழி போடுதுப்பா.\\

இருந்தாலும் இருக்கும்க்கா...யாருக்கு தெரியும் ;-))

\\ஆமாம் அபி அப்பா எப்பாத்தான் படிச்சிட்டு பின்னூட்டம் இடுவாராம்?\\

அடுத்த சந்திப்புல கேட்டு சொல்றேன் ;-)

வாங்க முத்துக்கா ;-))

\\முத்துலெட்சுமி said...
கோபி பதிவு சூப்பர்.
எல்லாரையும் பத்தி நல்லா எழுதி இருக்கீங்க.
நிறைய விசயம் பேசி இருக்கீங்களே
மாநாடு வெற்றி தான். :)\\

அருமையான மாநாடு....ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

கோபிநாத் said...

வாங்க அய்யனார் ;-)

\\அய்யனார் said...
தன்மான சிங்கம்யா நீ பதிவு போடுன்னவுடனே போட்டுட்டியே கலக்குற கோபி
:)\\

அசிங்கம்ன்னு சொல்லமா சிங்கம்ன்னு சொன்னிங்களே...ரொம்ப நன்றி அய்ஸ்

வாங்க சென்ஷி ;-)
\\சென்ஷி said...
//பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.
//

சென்ஷிதான் அதுக்கு காரணம்ங்கறத யார்கிட்டயும் சொல்லிடாத கோபி...
எழுதமாட்டேன் சொல்லிட்டு இப்படித்தான் கலக்குறதா..


கீப் இட் அப்

சித்தாப்பூ தொல்ல அங்கு கொஞ்சம் அதிகம். அதப்பத்தி நான் எழுதனும்னு நினைக்கிறேன். ஆனா டைம்தான் கிடைக்க மாட்டேங்குது.. என்ன செய்ய..


ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி\\

ரொம்ப நன்றி சென் ;-))

கோபிநாத் said...

வாங்க காயத்ரி ;-))
\\\காயத்ரி said...
//பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.//

நான் நம்ப மாட்டேன்! நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!நான் நம்ப மாட்டேன்!\\

என்ன பண்றாது காயத்ரி...சரித்திரத்துல இப்படி ஒன்னு ரெண்டு தப்பு நடக்குறது சகஜம் தான்....நம்பிதான் ஆகானும்.

வாங்க சுல்தான் சார் ;-))

\\சுல்தான் said...
//போண்டா இருந்ததா..? இப்படி இருக்கனுமோ..:)//
'கட்டுடைப்போம்'னு லொடுக்கு பவுலிங் போட, அதை புலி சரியாய் கேட்ச் பிடித்து,
'போண்டாவுடைய போட்டா மட்டுவாது போடுங்கப்பான்னு' அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும்,
போண்டாவை மெனுவில் நீக்கி விட்டார்.\\

ஹிஹிஹி...உண்மை தான்...அபி அப்பாவின் அட்டகாசம் தாங்கமுடியல.....நன்றி சுல்தான் சார் ;-))

Anonymous said...

தூரத்தில் இருக்கும் எமக்கு இது போன்ற பதிவுகள் தான் தேவை...:)

சென்ஷி said...

சிங்க பொம்மைய பிடிச்சிருக்கறது என் கையுங்கோ