Wednesday, August 08, 2007

கூட்டாஞ் சோறு நினைவுகள்


சனிக்கிழமை - 09.08.2006

விடியல் காலையில் 8 மணிக்கு விஜயனின் செல்போன் அடித்தது

விஜயன்: ஹலோ.....

தீபா: ஹலோ.....டேய் எல்லாம் ரெடியா டா நாங்க எல்லாம் இன்னும் 1 மணி நேரத்துல அங்க இருப்போம்

விஜயன்: என்ன எல்லாம் ரெடியா? ....யாரு நீங்க? எதுக்கு இங்க வரபோறிங்க?

தீபா: யாரு நீங்களா????? டேய் லூசு....நான் தீபா பேசுறேன் டா

விஜயன்: ஓ....அப்படியா.....சரி பேசுங்க

தீபா: டேய் வெறுப்பேத்தாத, இன்னும் ஒரு மணிநேரத்துல நானு, அனிதா, மாலதி அங்கஇருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்

விஜயன்: ஏய்....என்ன ரெடியா இருக்கனும்? காலங்காத்தால நீ தான் வெறுப்பேத்துற...கொஞ்சம் நிம்மதியா தூங்க விடுவியா

தீபா: அடப்பாவிங்களா...இன்னுமாடா தூங்குறிங்கன்னு அதிர்ச்சியில் மாலதியிடம் போனை கொடுத்தால்

விஜயன்: ம்....ஆமா.....சரி என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லி தொலை

மாலதி: டேய் கும்பகர்ணங்களா இன்னிக்கு உங்க வீட்டில் தான் கூட்டாஞ் சோறு

விஜயன்: யாரு சொன்னா உனக்கு?

மாலதி: நீயும் புகழும் தானே சொன்னிங்க....இந்த வாரம் எங்க வீட்டில் கூட்டாஞ் சோறு அதுவும் பிரியாணின்னு

விஜயன்: நாங்க எல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க சொன்னதை எல்லாம் நம்பிட்டியா!!!! இரு புகழ்க்கிட்ட பேசு........மச்சி....இந்தா வீட்டில் இருந்து அம்மா பேசுறாங்க

புகழ்: அம்மா எப்படிம்மா இருக்கிங்க.......சொல்லும்மா என்ன விஷயம்

மாலதி: மகனே தூங்குமூஞ்சி.....சீக்கிரம் சமையலுக்கு எல்லாத்தையும் ரெடிப்பண்ணு ராசா

புகழ்: என்னம்மா ஆச்சு உனக்கு? மாலதியிடம் போனை வாங்கிய அனிதா

அனிதா: புகழ்....நான் அனிதா பேசுறேன் பிரியாணி என்னாடா ஆச்சு?

புகழ்: ச்ச...நீயா?

அனிதா: ஏய், நாங்க எல்லாம் ரெடியாகிட்டோம். இன்னும் 1 மணிநேரத்துல அங்க இருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்......போனை துண்டித்துவிட்டு அனைவரும் கிளம்ப ரெடியானார்கள்

புகழும், விஜயனும் தூக்கம் கலைந்து இப்ப என்ன செய்வதுன்னு முழித்துக் கொண்டுயிருந்தனர்.

விஜயன்: மச்சி பிரியாணிக்கு என்னன்ன வேணும்கிறதை எல்லாம் வாங்கிட்டு வா....நான் ரூமை சுத்தம் பண்றேன்

புகழ்: பிரியாணிக்கு என்னென்ன வேணுமுன்னு எனக்கு என்ன டா தெரியும்....

விஜயன்: வீட்டில் இருந்து அம்மா சமையல் குறிப்புகள் எழுதி அனுப்பியிருக்காங்கல்ல..அந்த நோட்டை பாரு அதுல தேவையான பொருட்கள்ன்னு எழுதியிருக்குல்ல அதை மொத்தத்தையும் வாங்கிட்டு வா

புகழ்: சரி மச்சி என்று கூறிவிட்டு புத்தகத்தை தேடி கொண்டே "ஏண்டா நமக்கு இதெல்லாம் தேவையா....போனமா போட்டாதை தின்னமான்னு இருந்திருக்கனும். வாயவச்சிக்கிட்டு சும்மா இல்லாம வாங்கன்னு வேற கூப்பிட்டாச்சு....எப்படி சமாளிக்க போறோமோ"

விஜயன்: மச்சி...இதுக்கே சளிச்சிக்கிட்டா எப்படிடா...போயி வாங்க்கிட்டு வா சீக்கிரம்....இன்னும் 15 நிமிஷத்துல வந்துடுவாளுங்க என்று சொல்லிக் கொண்டுயிருக்கும் போதே....கதவருகில் தீபா, அனிதா, மாலதி மூவரும் "அய்யா....அம்மா....பிரியாணி இருந்த போடுங்க....அய்யா....அம்மா...ராத்திரியில்ருந்து ஒன்னுமே சாப்பிடலை அய்யா"

புகழ்: நாம பிரியாணி செய்ய போறது இந்த ஏரியா பிச்சைக்காரிகளுக்கு கூட தெரிஞ்சி போச்சு போல டா, என்று இருவரும் ஜன்னலின் வழியே எட்டி பார்த்தனர்.

புகழும், விஜயும் கோரசாக "அய்யோ.....வந்துட்டாளுங்கடா ராப்பிச்சை காரிங்க...அலரிஅடித்துக் கொண்டு உடைகளை சரி செய்து....வீட்டை சுத்தம் செய்கிறோம் என்ற நினைப்பில் ஏதோ செய்து கொண்டுயிருந்தார்கள். வெளியில் இருந்து மூவரும் "பிரியாணி போடுற மகராசனுங்களா இன்னுமாடா தூங்கிக்கிட்டு இருக்கிங்க"ன்னு கத்த ஆரம்பித்தனர்.

புகழ் ஓடிபோயி கதவை திறந்தான்.....பின்னாலயே வந்த விஜயனும் கூட சேர்ந்து "வாங்க வாங்க ராப்பிச்சை...ச்சே...பகல் பிச்சை தாய்குலமே...வாங்க"...பணிவுடன் அழைத்தனார்.

தீபா: அய்யாங்க ரெண்டு பேரும் போன வாரம் எங்க வீட்டில் இப்படி தானேடா வந்து பிச்சை எடுத்திங்க

விஜயன்: ம்க்கும் இதெல்லாம் மட்டும் நல்லா ஞாபகத்துல இருக்குமே உனக்கு.....

அனிதா: சரி....சரி என்னென்ன வாங்கிட்டிங்க சீக்கிரம் ஆரம்பிக்கனும்....அப்ப தான் சாயந்திரம் பீச்சிக்கு போகலாம்

புகழ்: வாங்குறதுக்கு தேவையான காசும், பையும் தவிர வேற ஒன்னும் வாங்கல....என்று புகழ் பம்ம

தீபா: அப்பவே போன் பண்ணி சீக்கிரம் வாங்கி வையுங்கடான்னு சொன்னோம்ல

விஜயன்: ஆமா, சொன்னிங்க இப்ப யாரு இல்லன்னா

மாலதி: டேய்......காலையில இருந்து பச்சை தண்ணிக்கூட கூடிக்கல டா....

புகழ்: மாலதி அப்ப ரஸ்னா குடிக்கிறியா ஆனா பச்சையாக இருக்காது பரவாயில்லையா

மாலதி: என்ன நக்கலா....உங்ககூட பேசி பேசி இருக்குற கொஞ்ச எனர்ஜியும் போயிடும் போல இருக்கே எதுவும் தெரியலைன்னா சொல்ல வேண்டியது தானே நாங்களே எல்லாம் வாங்கிவந்துயிருப்போம்ல

விஜயன்: இதெல்லாம் நாங்க சொல்லனுமாக்கும்......இத்தனை நாளா எங்ககூட இருக்கிங்க இதுகூட தெரியாத உங்களுக்கு

அனிதா: சரி....சரி....விடு......புகழ் சீக்கிரம் போயி....எல்லா அயிட்டத்தையும் வாங்கிட்டு வா...அப்புறம் மறக்காம பிரியாணி அரிசி, பச்சடிக்கு தயிரு, கொஞ்சம் தக்காளி, வெல்லரிக்கா, ஜஸ்கிரிம், இப்ப எங்களுக்கு எல்லாத்துக்கும் சூப்பர் டீ...ஓகே

புகழ்: அப்ப இந்த கோழி கறி !!!!

மாலதி: டேய்.......இருக்குற பசிக்கு உன்னை அப்படியே தின்னுடுவேன்.....

தீபா: என்னடா இப்படி கொல்றிங்க கறி இல்லாமையா....சீக்கிரம் வாங்கிட்டு வாங்கப்பா....பீலிஸ்

புகழ்: ஓகே....ஓகே....கூல்....கூல்....நோ டென்சன்....இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு புகழ் கடைக்கு கிளம்ப

விஜயன்: எக்ஸ்குசுமி நாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள வீட்டை இதே போல அழகா வச்சிருங்க அலங்கோலமா எதுவும் பண்ணிடாதிங்க என்று விஜயனும் தன் பங்குக்கு ஒரு பிட்டை போட்டு விட்டு ஒடினான் வந்த மூவரும் வீட்டை சுத்தி பார்த்துக் கொண்டுயிருந்தனர்.

தீபா: ஏய் இங்க பாருங்க டி.....புக்கை எல்லாம் எப்படி போட்டு வச்சிருக்கானுங்கன்னு

மாலதி: புக்கை மட்டுமா.....அங்க பாரு துணியை கூட ஒழுங்க போட்டு வைக்காம இப்படிஅலங்கோலமா இருக்கு இதுல வேற இதுதான் இவுனுங்களுக்கு அழகாம்

அனிதா: ஏய் சும்மா எதுக்கு அவுனுங்களை குத்தம் சொல்லிக்கிட்டு நாம மட்டும் என்ன ஒழுங்கா. பேச்சுலர் வாழ்க்கையின்னா இப்படி தான் இருக்கனும். பாவம்டி அவுனுங்க பார்ட்டைம் வேலைக்கு போயிக்கிட்டு காலேஜிக்கும் வந்துக்கிட்டு.....பாவம்ப்பா

தீபா: சரி....சரி ......ஓவர் பீலிங்கஸ் எல்லாம் வேண்டாம் நாம இன்னிக்கு ஜாலியாக இருக்கனுமூன்னு வந்திருக்கோம்....

அனிதா: ஆமா...அவுனுங்க சுத்தம் செய்யலன்ன என்ன நாம சொய்வோம்......நம்ம புள்ளைங்களுக்கு நாம செய்யாம வேற யாரு செய்ய போறா....என்று ஆளுக்கு ஒரு வேலையாக எடுத்து கொண்டு ரூமை சுத்தம் செய்தனர்....பொருட்கள் வாங்க போன இருவரும் வந்துவிட்டனர்.

தீபா: புகழ் இங்க வா....என்னாது இது என்று கையில் இருந்த சிகரெட் பக்கெட்டை காட்டினால்.

புகழ்: ஒன்னும் தெரியாது போல...ஹைய்யா.....பெட்டி கோல்டு கலருல நல்லாயிருக்கே....இன்னாதுப்பா இது !!!

தீபா: டேய் கிண்டலா....நான் அன்னிக்கே இதை பிடிக்காதிங்கன்னு சொன்னேன்ல

விஜயன்: ஆமா சொன்னே அதான் வில்ஸ்ஸை விட்டுட்டு இப்ப கிங்சுக்கு மாறிட்டோம்...நீ சொல்லி நாங்க கேட்காம இருப்போமா

தீபா: உதை வாங்க போறிங்க ரெண்டு பேரும் இனி இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுடுங்க புரியுதா

புகழ்: ம்ம்...சரி சரி இன்னிக்கு மட்டும் எதுவும் சொல்லாதே.....ப்லிஸ் ஜாலி தான் முக்கியம்...ஓகே

அனிதா: சரி எண்ணெய் எங்கடா இருக்கு.....

புகழ்: இதோ.....விவிடி கோல்டு உங்க கேசத்திற்கு உகந்த எண்ணெய்...விவிடி கோல்டு

விஜயன், தீபா, அனிதா, மாலதி: ஹிஹிஹிஹிஹிஹி.....

அனிதா: அடபாவி சமையல் எண்ணெய் டா.....நாளைக்கு வாக்க பட போற இடத்துல எப்படி தான் பொண்டாட்டிக்கு சமைச்சி போட போறியோ ;-)))

விஜயன்: போதும்.....போதும்....பேச்சை குறைச்சிட்டு சமையலை ஆரம்பிங்க....நாங்க குளிச்சிட்டு வரோம்

மாலதி: ஹைய்....இது நல்ல கதையா இருக்கே....ராசா இது கூட்டாஞ் சோறு எல்லோரும் ஒன்னா ஆளுக்கு ஒரு வேலை செய்யனும்....

புகழ்: சரிப்பா..ஆரம்பிங்க ஒரு 15 நிமிஷத்துல வந்துடுகிறோம்.

சரி போங்கடான்னு சொல்லிவிட்டு எண்ணெயை பாத்திரத்தில் விட்டு....சூடானதும் கடுகு...பச்சை மிளகாய் இன்னும் இத்தியாதி இத்தியாதி எல்லாம் போட்டு....கூடவே கறியையும் போட்டு ஒரு வழியாக கறியை ரெடி செய்து விட்டனர். மற்றொரு புறத்தில் ஒரு குக்கரில் சாதம் ரெடியாகி கொண்டுயிருந்தது. மாலதியும் புகழும் பச்சடிக்கு ரெடி செய்து கொண்டுயிருந்தனர். தீபா பாத்திரங்களை கழுவி இடத்தை சுத்தம் செய்துக் கொண்டுயிருத்தால். அனிதாவும் விஜயனும் பிலாஸ்க்கில் இருந்த டீ யை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து கொண்டுயிருந்தனர்.

புகழ்: வாசனை அப்படியே ஆளை தூக்குதுப்பா...கலக்குற அனிதா

அனிதா: உண்மையாவாடா.....ரொம்ப தேங்கஸ் டா...உனக்கு நாளைக்கு நான் ஜஸ்கீரிம் வாங்கி தறேன்னா

விஜயன்: அடப்பாவி நாம எல்லாம் தானே சேர்ந்து செய்தோம். அது என்ன அனிதா மட்டும் கலக்குறா நாங்களும் தான் கலக்குறோம் என்று விஜயன் தீபாவை பார்த்து ஒரு பிட்டை கொளுத்தி போட்டான். விஜயன் கொளுத்தி போட்டது வினாகலை தீபா புகழை வீட்டை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டுயிருந்தால்.

மாலதி: விடாத தீபா போடு நல்லா போடு அவன...ஒரு குச்சி ஜஸ்க்காக எப்படி எல்லாம் பொய் சொல்லறான் பாரு....விடாத அவனை அடி...நல்லா அடி.

புகழ்: மச்சி வாடா இவ என்னை கொல்லாமா விட மாட்டா போல இருக்கு....நீ என் உயிர் நண்பன் இல்லையா....வா டா மச்சி

விஜயன்: சாரி மச்சி என்ன இருந்தாலும் நீ தீபாவை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்க கூடாதுன்னு எரியும் நெரிப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊத்தினான்

புகழ்: அனிதா நீ யாவது வா.....அய்யோ இதுக்கு மேல நான் எங்க ஓடுவேன்

அனிதா: போதும் போதும் எல்லாரும் வாங்க உப்பு காரம் எல்லாம் சரிய இருக்கான்னு பாருங்க.....சீக்கிரமா வாங்க

புகழ்: ஆஹா....ஆஹா....ஒட்டல் பொன்னுசாமி எல்லாம் இனி நம்மக்கிட்ட தான் பிரியாணி செய்ய கத்துக்கனும்....சூப்பர் அனிதா

தீபா: ம்....நல்லாயிருக்கு

மாலதி: கொஞ்சம் காரம் அதிகம் தான் ஓகே....

விஜயன்: சூப்பர் பிரியாணிப்பா

அனிதா: ஏய் லூசுங்களா.....இன்னும் சாதத்தை இந்த கறியோட சேர்க்கமாலே பிரியாணி சூப்பர்ன்னு சொல்றிங்களா....அய்யோ...கொடுமை

புகழ்: ஒ....அப்ப இது பிரியாணி இல்லையா......

அனிதா: ஆமா....இது வெறும் மசாலா போட்ட கறி மட்டும் தான்....இனிமேல் தான் சாதத்தோட சேர்க்கனுமுன்னு அனிதா புகழ்க்கு விளக்கி கொண்டுயிருக்க அதை எதையும் காதில் வாங்காமல் தீபா, மாலதி, விஜயன் மூவரும் பாத்திரத்தை காலி செய்து கொண்டுயிருத்தனர்.

அய்யோ....இதுக்கு மேல நாம பேசிக்கிட்டு இருந்தோம்.....நம்மக்கு அந்த வெறும் சோறு தான் கொடுப்பாங்க போலன்னு மற்ற இருவரும் தள்ளிக் கொண்டு பாத்திரத்தில் தலையைவிட்டு கறியை கடிக்க தொடங்கினர். ஒரு வழியாக கறியை தனியாக சாப்பிட்டு விட்டு சாதத்திற்கு பச்சடியை போட்டு கூட ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டு முடித்து ஏவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஏப்பமும் விட்டாச்சி.
---------------------------------------------------------------------------------------

வியாழக்கிழமை 09.08.07
----------------------------------------
விஜயன் செல்போன் அழைப்பு மணிகேட்டு பழைய நினைவுகளில் இருந்து எழுந்தான். தீபாக்கிட்ட இருந்து தான் கால்

விஜயன்: சொல்லு தீபா.....

தீபா: டேய் எங்கடா இருக்கே சென்னை வந்திட்டியா.....சரி இரு எல்லோரும் கான்பரன்ஸ் கால்ல இருக்கோம்

விஜயன்: அடங்க மாட்டிங்களா நீங்க........இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்....அதுக்குள்ள எதுக்கு கான்பரன்ஸ்.

தீபா: ஒன்னும் பேசாதே இருடா.... என்று அவனையும் இணைப்பில் இணைத்தாள்

மாலதி, புகழ், அனிதா: ஹலோ...

விஜயன்: ஏய் மக்கா நான் விஜிடா..எல்லாரும் எப்படி இருக்கிங்க

புகழ்: ம்....எங்களுக்கு என்ன நல்லா தான் இருக்கோம் மச்சி....நான் பஸ் டாண்டுக்கு கிளம்பிட்டேன் இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துடவல்ல....

அனிதா: ஏய்..அதெல்லாம் அவன் வந்துடுவான்...அவனுக்கு என்ன உன் ரூம் தெரியாதா என்ன?

மாலதி: ஏய்..அனி அவனுக்கா ரூம் தெரியாது.....பாவம் பசங்க 1 வருஷம் கழிச்சி நேருல பாக்குதுங்கல்ல அதுங்களுக்குல்ல ஆயிரம் மேட்டர் இருக்கும் அப்படியே ஒரு தம் அடிச்சிக்கிட்டு கிசு கிசு எல்லாம் பேசிட்டு ஒன்னா ரூமுக்கு வருவானுங்க....என்னடா புகழ் நான் சொல்லறது சரிதானே

புகழ்: எப்படி மாலதி உன்னால மட்டும் தான் எங்க மனசை புரிஞ்சிக்க முடியுது!!!!

தீபா: நீ இன்னிக்கும் என்க்கிட்ட வாங்க போற.....விஜி ஏதவாது பேசுடா....லைன்ல இருக்கியா இல்லையா

விஜயன்: ம்....இருக்கேன்....ஏய் மக்கா இன்னிக்கு ஆகஸ்டு 9 போன வருஷம் இதே நாள்ல தான் கூட்டாஞ் சோறு செய்தோமே ஞாபகம் இருக்கா....

புகழ்: அதை எப்படிடா மறக்க முடியும்....கடைசிவரைக்கும் முழு பிரியாணியே சாப்பிடல

விஜயன்: இன்னிக்கு முழு பிரியாணி செய்து கலக்கிடுவோமா......

அனிதா, மாலதி, புகழ், தீபா: கலக்கிடுவோம் மச்சிசிசிசிசி ;-)))

36 comments:

அபி அப்பா said...

கோபி நல்லா இருக்குப்பா இந்த பதிவு!கலர் கலரா சூப்பரா இருக்கு!இருப்பா படிச்சுட்டு வந்து கமெண்ட் போடறேன்! எனக்கு ஏற்கனவே ரொம்ப கெட்ட பேர். படிக்காம கமெண்டுறேன்ன்னு!

இம்சை said...

Super : ))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நண்பர்கள் தினம் வந்ததும் நண்பர்களை எல்லாம் தேடுதாக்கும் கோபி தம்பிக்கு? :).......

குசும்பன் said...

என்னப்பா ஆச்சு:(

Ayyanar Viswanath said...

என்னப்பா ஆச்சு:(

ச.பிரேம்குமார் said...

கோபி, ரொம்ப‌ அருமையா இருந்த‌து உங்க‌ ப‌திவு. கல்லூரி கால‌த்துல‌ நாங்க செய்த கூட்டாஞ்சோறு நினைவுக‌ள் வ‌ந்து போயின‌. வாழ்த்துக்க‌ள் :-)

http://premkumarpec.blogspot.com

Anonymous said...

பெண்களும் ஆண்களும் நண்பர்களாக...இனிமை :)

கோபிநாத் said...

@குசும்பன் & அய்யனார்

உங்களுக்கு என்ன ஆச்சு? ;-)

மு.கார்த்திகேயன் said...

இது அட்டென்டன்ஸ் கோபிநாத்.. வந்து படிக்கிறேன்

கப்பி | Kappi said...

ஆட்டோகிராபா..நடக்கட்டும் நடக்கட்டும் :)

இராம்/Raam said...

மாப்பு,

சூப்பரு.... :)

குசும்பன் said...

கோபி மிக்க வருந்துகிறேன்,
நான் போட்ட கமெண்டில் எதோ பிராபிளம், நேர்மையாக சொல்கிறேன்
மிக நீளம்.

மற்றபடி சூப்பர் ஒன்றும் குறை இல்லை.:)

Arunkumar said...

super friendship post thala... nalla nagaichuvaiudan !!

apdiye naanum ennoda friendsum pesikkira maathiri irundadhu :-)

romba rasichen.

காட்டாறு said...

அழகான நினைவுகள்.

CVR said...

பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித்திருந்த பறவைகளே!!!........


மலரும் நினைவுகளா???
நல்லா இருக்கு கோபிண்ணே!! :-)

Santhosh said...

Gopi,
Autograph super... entha ponnu anitha thana ne sonna antha anitha?

கோபிநாத் said...

வாங்க அபி அப்பா

\\அபி அப்பா said..
இருப்பா படிச்சுட்டு வந்து கமெண்ட் போடறேன்! \\

நாங்க இத நம்பனுமாக்கும்..

கோபிநாத் said...

வாங்க இம்சை

\\இம்சை said...
Super : ))\\

நன்றி ;)

கோபிநாத் said...

வாங்க அக்கா

\\முத்துலெட்சுமி said...
நண்பர்கள் தினம் வந்ததும் நண்பர்களை எல்லாம் தேடுதாக்கும் கோபி தம்பிக்கு? :).......\\

ம்...அதுவும் ஒரு காரணம் ;)

கோபிநாத் said...

வாங்க பிரேம்

\\பிரேம்குமார் said...
கோபி, ரொம்ப‌ அருமையா இருந்த‌து உங்க‌ ப‌திவு. கல்லூரி கால‌த்துல‌ நாங்க செய்த கூட்டாஞ்சோறு நினைவுக‌ள் வ‌ந்து போயின‌. வாழ்த்துக்க‌ள் :-)\\

மிக்க நன்றி பிரேம் ;)

கோபிநாத் said...

வாங்க தூயா

\\தூயா [Thooya] said...
பெண்களும் ஆண்களும் நண்பர்களாக...இனிமை :)\\

புரிதலுக்கு மிக்க நன்றி தோழி ;)

கோபிநாத் said...

வாங்க தலைவா
\\மு.கார்த்திகேயன் said...
இது அட்டென்டன்ஸ் கோபிநாத்.. வந்து படிக்கிறேன்\\

நேரம் கிடைக்கும் போது படிங்க தலைவா ;)

வாங்க கப்பி செல்லம்

\\கப்பி பய said...
ஆட்டோகிராபா..நடக்கட்டும் நடக்கட்டும் :)\\

ஹி ஹி ஹி....

கோபிநாத் said...

வா மாப்பி

\\இராம் said...
மாப்பு,

சூப்பரு.... :)\\

ரொம்ப நன்றி மாப்பி ;))



வாங்க அண்ணே

\\குசும்பன் said...
கோபி மிக்க வருந்துகிறேன்,
நான் போட்ட கமெண்டில் எதோ பிராபிளம், நேர்மையாக சொல்கிறேன்
மிக நீளம்.\\

ஆமா அண்ணே உண்மை தான்....முதமுதல்ல எழுதினோன் அதான் அப்படியே போட்டுட்டேன்..

\\மற்றபடி சூப்பர் ஒன்றும் குறை இல்லை\\

நன்றிண்ணே ;)

கோபிநாத் said...

வாங்க அருண்

\\Arunkumar said...
super friendship post thala... nalla nagaichuvaiudan !!

apdiye naanum ennoda friendsum pesikkira maathiri irundadhu :-)

romba rasichen.\\

மிக்க மகிழ்ச்சி அருண்....நன்றி...நன்றி ;)


வாங்க கட்டாறு அக்கா

\\காட்டாறு said...
அழகான நினைவுகள்.\\

நன்றிக்கா ;)

கோபிநாத் said...

வாங்க CVR

\\CVR said...
பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித்திருந்த பறவைகளே!!!........


மலரும் நினைவுகளா???\\

மலரும் நினைவுகள் தான் ஆனா எல்லாமே இல்ல..

\\நல்லா இருக்கு கோபிண்ணே!! :-)\\

நன்றி CVR ;)

வாங்க சந்தோஷ் அண்ணே

\\ சந்தோஷ் said...
Gopi,
Autograph super... entha ponnu anitha thana ne sonna antha anitha?\\

ஆகா...அண்ணே ஏண்ணே இப்படி எல்லாம் கொளுத்தி போடுறிங்க ;-)))

Unknown said...

நல்லா இருக்கு கோபி. நகைச்சுவை நல்லா வரும். ட்ரை பன்னுங்க..

வாழ்த்துக்கள் ..

G3 said...

அவ்வ்.. இப்படி நல்லா சமைக்க தெரிஞ்ச மக்களா நண்பர்களா தேர்ந்தெடுக்கனும்னு எனக்கு தெரியாம போச்சே :P

பதிவு கலக்கல் :)

Belated நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

கதிர் said...

பிரியாணி செய்யணும்னா இத்தன பேர் வேணுமா கோபி!

நல்லா ஜாலியா இருந்துச்சு படிக்க.

கானா பிரபா said...

தல

கலக்கல், அந்த விஜயன் நீங்க தானா ;-)

சென்ஷி said...

//கப்பி பய said...
ஆட்டோகிராபா..நடக்கட்டும் நடக்கட்டும் :)//


REPEATE :))

SENSHE

FROM SHARJAH

கோபிநாத் said...

வாங்க தஞ்சாவூரான் ;-)

\\தஞ்சாவூரான் said...
நல்லா இருக்கு கோபி. நகைச்சுவை நல்லா வரும். ட்ரை பன்னுங்க..\\

கண்டிப்பா முயற்சி செய்றேன்

\\வாழ்த்துக்கள் ..\\

நன்றி ;-)


வாங்க ஜி3 வாங்க ;-)

\\G3 said...
அவ்வ்.. இப்படி நல்லா சமைக்க தெரிஞ்ச மக்களா நண்பர்களா தேர்ந்தெடுக்கனும்னு எனக்கு தெரியாம போச்சே :P\\

ஆஹா..அப்ப உங்களுக்கு சமைக்க தெரியாதா!!!!! ;-)

\\பதிவு கலக்கல் :)\\ - நன்றி

\\Belated நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :\\

உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ;-)

கோபிநாத் said...

வாங்க கதிர்
\\தம்பி said...
பிரியாணி செய்யணும்னா இத்தன பேர் வேணுமா கோபி!

நல்லா ஜாலியா இருந்துச்சு படிக்க.\\

நன்றி கதிர் ;-)))


வாங்க தல ;)

\\கானா பிரபா said...
தல

கலக்கல், அந்த விஜயன் நீங்க தானா ;-)\\

;-))))))....நன்றி தல


வாங்க சென்ஷி
\சென்ஷி said...
//கப்பி பய said...
ஆட்டோகிராபா..நடக்கட்டும் நடக்கட்டும் :)//


REPEATE :))

SENSHE

FROM SHARJAH\\

ரொம்ப நன்றிப்பா ;-))

Anonymous said...

//தம்பி said...

பிரியாணி செய்யணும்னா இத்தன பேர் வேணுமா கோபி!//

ம்ம்ம் ஏன் தம்பி இப்படில்லாம்..கககிகி :P

கோபிநாத் said...

\\தூயா [Thooya] said...
//தம்பி said...

பிரியாணி செய்யணும்னா இத்தன பேர் வேணுமா கோபி!//

ம்ம்ம் ஏன் தம்பி இப்படில்லாம்..கககிகி :P\\

தூயா....இதுல உள்குத்து இருக்குன்னு மட்டும் புரியுது...ஆனா என்ன உள்குத்துன்னு தான் புரியமாட்டேன்கிது ;-)

G.Ragavan said...

:(((((((((((((((((((((((((((((((((((((((

பெங்களூருக்கு வந்த புதுசுல..வந்த புதுசுல...வந்த புதுசுல..இப்பிடித்தான் நாங்க எல்லாரும்...நாங்க எல்லாரும் :((((((((((((((((((( தமிழு வங்காளம்னு கலந்து ஊடு கட்டியிருக்கோம். அப்ப சாப்புடாத பிரியாணியா....மீனா..கோழியா..ஆடா..அடடா! நான் வெச்ச சாம்பாரக் கப்புல வாங்கிக் குடிச்சாங்களே சாமி :((((((( ஆனந்தக் கண்ணீர் வந்துச்சே! அதையெல்லாம் ஞாபகப் படுத்துறீங்களே

சென்ஷி said...

டேய் மாப்பூ... நீ எழுதியிருக்கறதுலேயே இதாண்டா கலக்கல்..

அனுபவிச்சு எழுதியிருக்கே போ

கலக்கு மச்சி