Friday, February 16, 2007

ஒற்றை நிலவாய் நான்

கேரள அரசை போல் அணையை உயர்தாமல் கடுப்பேத்தினாலும் சரி...
ஆந்திராவை போல் குருக்கே பல தடுப்பு அணைகள் கட்டினாலும் சரி...
கர்நாடகாவை போல் தரவேண்டியதை தரமறுத்தாலும் சரி என் பதிவுகளும் என் கும்மியும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை பயபக்த்தியுடன் தெரிவித்துக்க்கொள்கிறேன்...
(லேட்டா பதிவு போடுறதுக்கு என்னென்ன பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு)



எலேய் மேட்டர சொல்லுலே...
(இது நம்ம ரூம்மெட்டு ரொம்ப பாசக்காரபய - குறிப்பு பய கள்ளகுறிச்சி)


அது ஒன்னும் மில்ல ராசா எனக்கு ஒரு 2 நாளா உடம்பு சரியில்ல (தண்ணி ஒத்துக்கல போல இருக்கு) சரி நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல வேற யாருக்காச்சும் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நம்ப துபாய் தம்பிக்கு போன போட்டேன்

"என்னப்பா எப்படியிருக்க? அஞ்சப்பரு,பாவனா எல்லாம் எப்படி இருக்காங்கன்னு கேட்டேன்..."

"அட நீ வேற எனக்கு 2 நாளா சிக்கன் குன்னியா ஒன்னும் முடியலப்பா.."

"என்னய்யா சொல்லற.....பார்த்துய்யா வெளிய பரப்பிவிட்டுடாதே..."

"அட இது "சிக்கன் குன்னியா" இல்லப்பா "சிக்கின சூன்னியா" நேத்து ஒரு இடத்துல சிக்கிக்கிட்டேன் எல்லோரும் சேர்ந்து குனிய வைச்சி மொத்தமா சூன்னியம் வைச்சிட்டானுங்க அவுங்க கிட்ட சிக்கி வைச்சிக்கிட்ட சூன்னியத்துக்கு பேருதான் "சிக்கின சூன்னியா"

அட பாவமே...சரி பார்த்து இருந்துக்கன்னு சொல்லிட்டு நேரா இங்கதான் வாரேன்...

"சரி இப்ப இந்த தமிழ்மணத்துல கும்மியடிக்கிறதை விட்டுட்டியா???"

ச்சச நானா...நெவர்...இம்பாசிபுள்...

"அப்புறம் ஏண்டா பதிவுக்கு இவ்வளவு லேட்டு...."

அது உன்னும்மில்ல ராசா...
நான் பொட்டி தட்டாம கும்மிஅடிக்கறதை எனக்கு மேல இருக்கிறவருக்கு தெரிஞ்சி போச்சி...

"எப்படிலே...கண்டுப்புடிச்சாங்க"

"3 நாளைக்கு முன்னாடி நம்ம மக்கள் பதிவுகளை பார்த்துட்டு இருக்கும் போது பொட்டி முன்னாடி நல்லா கெக்க.....கெக்கான்னு எவனாவது சிரிச்சா எப்படியாப்பட்ட பல்பும் கண்டு புடுச்சிடும்..."

"ம்ம்ம்...."

"எலேய் கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்... "ம்" சொல்லிக்கிட்டுயிருக்க...

"சரி ஆனது ஆயிபோச்சி இனி எப்படி கும்மிஅடிக்க போற..."

யோசிச்சேன் ஒரு ஜடியா கிடைச்சது அந்த ஜடியா என்னன்னா...
முடிஞ்ச வேலை...இன்னும் முடியாத வேலை...இனிமேதான் வரபோற வேலைன்னு எல்லா பைலையும் அப்படியே டேபுலுமேல நல்லா கடைபரப்பி வைச்சிக்க வேண்டியது...கேமராவுல பார்க்க பல்புக்கு பய என்னம்மா ஒழைக்கறான்னு தோனும்.....நம்ம பாட்டுக்கு கும்மியடிக்க வேண்டியது...
எப்படி என் ஐடியா...

த்துதுது.....

"எலேய்....என்னத்துக்கு இப்ப துப்புற???"

"அது ஒன்னும் மில்ல வாயில தூசி....சூப்பருடா...கலக்கல் ஐடியா தான்.."

"டேய் இங்க சூப்பருன்னு சொல்லிட்டு அங்க போயி பல்புகூட சேர்ந்து எனக்கு எதுரா கும்மிஅடிக்க மாட்டியே."

"ச்சீச்சீ.....உனக்கு போயி கும்மிஅடிப்பனாடா.."

"இல்ல... இப்ப எல்லாம் யாரையுமே நம்ப முடியல...ரொம்ப பயமா இருக்குடா"

சரி 2 நாளா சும்மா ரூமுல இருந்ததுனால எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அந்த கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க வேணமா????....

அதான் கவிதை.....இல்ல......இல்ல கவுஜ எழுதிட்டேன்



ஒற்றை நிலவாய் நான்


"நீண்ட வழி எனக்கு முன்னே
எதனை எடுக்க எதனை தவிர்க்க
குழப்பங்களில் கரைகிறது என் காலங்கள்
ஆதரவாய் மடிசாய அன்னையும் அருகில் இல்லை
அரவணைத்து செல்ல தந்தையின் கரங்களும் இல்லை
எதிர்வரும் சமயங்களில் புன்னகைக்கும் சக மனிதனின்
புன்னகையை தவிற"

எலேய்.....எதுக்கு இப்ப கல்லை தூக்குற...

வேணாம்...

வலிக்கும்...

41 comments:

Unknown said...

:-)


[ என்னுடையப் புன்னகை உங்களுக்காக... ]

Anonymous said...

:)நான் கல் எல்லாம் எடுத்து எறிய மாட்டேன்.கவிதை நன்றாகதான் இருக்கின்றது.

Dev Payakkal said...

கோபி என்ன ஆச்சு ? உடம்பு இப்போ எப்படி இருக்கு ? என்னமோ சொல்லுறீங்க போங்க!! ......இன்னும் குணமாகவில்லை என்று நான் நினைக்கிறேன் ....நான் சொல்லுவது எனக்கு !! அதாவது உங்கள் ப்ளோக் இல்லாமல் நான் பைத்தியம் ஆயிடென் ... dev

கதிர் said...

//தண்ணி ஒத்துக்கல போல இருக்கு//

எந்த தண்ணி ராசா?

//சரி நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல வேற யாருக்காச்சும் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நம்ப துபாய் தம்பிக்கு போன போட்டேன்//

எல்லாருக்கும் என்னை இழுத்து வெச்சி காமெடி பண்றதே வ்வேலையா போச்சி

நல்லா இருங்கடே!

Syam said...

// (தண்ணி ஒத்துக்கல போல இருக்கு)//

எந்த தண்ணி...பிராந்தி ஒத்துக்கலனா ரம் அடிங்க அதுவும் ஒத்துக்கலனா வோட்கா அடிங்க...அத விடுபுட்டு தண்ணி ஒத்துக்கலனு சொன்னா என்னாது இது சின்ன புள்ள தனமா..
:-)

Syam said...

கவுஜ சூப்பரு...ஒரே டச்சிங்கா போச்சு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

மு.கார்த்திகேயன் said...

//தண்ணி ஒத்துக்கல போல இருக்கு//

எந்த தண்ணி கோபி?


//சிக்கின சூன்னியா//

இந்தக் கதையை கேட்ட நீங்க வடிவேலுக்கு போட்டியா வருவீங்க போல கோபி..

மு.கார்த்திகேயன் said...

அட கவுஜ கலக்குதப்பா, கோபி

MyFriend said...

me the 1st-uu!!!

MyFriend said...

ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு பதிவு போட்டிருக்கீங்க. அதுவும் சூப்பர் பதிவு.. ;-)

Anonymous said...

குருக்கே?

அபி அப்பா said...

//அது ஒன்னும் மில்ல ராசா எனக்கு ஒரு 2 நாளா உடம்பு சரியில்ல (தண்ணி ஒத்துக்கல போல இருக்கு) சரி நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல வேற யாருக்காச்சும் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நம்ப துபாய் தம்பிக்கு போன போட்டேன்//

கோபி தம்பி, தண்ணி ஒத்துக்கல தண்ணி ஒத்துக்கலன்னு சொல்றியே தவிர எந்த தண்ணின்னு சொல்லமாட்டங்குரியப்பா!!!!

அபி அப்பா said...

கவிதய படிச்சா ரொம்ப பீல் ஆவுர போல இருக்கேப்பா!!! அயுவாத அயுவாத அடுத்த வாரம் லொடுக்கு தம்பியும் வாரன்னு இருக்காரு.. நல்ல குமுறி குமுறி கும்மியடிக்கலாம்.

அபி அப்பா said...

உடம்புக்கு வந்தா மட்டும்தான் அம்மா தேடுது..மத்த நேரம் ஞாபகமே வரம்மாட்டங்குது...

Anonymous said...

அரவனைத்து இல்லை
அரவணைத்து

திருக்குமரன் said...

கவிதை நன்று ;)

Unknown said...

:)

கவித சூப்பர். கலக்கிறீயெப்பு

feelings a poochu..
ingayum appadiye.. flu vanthuduchu..


//இனிமேதான் வரபோற வேலைன்னு"//

இதுக்கும் பைலா. நல்ல இருக்குலே டெக்னீகு.. கலக்கு

Arunkumar said...

//
(தண்ணி ஒத்துக்கல போல இருக்கு)
//
SmirnOff அடிக்கும்போது ரம்மடிச்சா இப்பிடித்தான். நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்குங்க கோபி.


கவிதை சூப்பருங்க. தொட்டுட்டீங்க போங்க

கோபிநாத் said...

வாங்க கவிஞரே...

\\:-)


[ என்னுடையப் புன்னகை உங்களுக்காக... ] \\

நன்றி..வெறும் புன்னகை மட்டும் தானா???

கவுஜ எப்படி இருக்கு ஏதாவது தேறுமா??

கோபிநாத் said...

வாங்க துர்கா...

\\:)நான் கல் எல்லாம் எடுத்து எறிய மாட்டேன்.கவிதை நன்றாகதான் இருக்கின்றது.\\

அப்பாடா
கவிதைன்னு சொல்லிட்டிங்க...
ரொம்ப நன்றிங்க..

கோபிநாத் said...

வாங்க தேவ்...

\\கோபி என்ன ஆச்சு ? உடம்பு இப்போ எப்படி இருக்கு ? என்னமோ சொல்லுறீங்க போங்க!! ......இன்னும் குணமாகவில்லை என்று நான் நினைக்கிறேன் ....நான் சொல்லுவது எனக்கு !! அதாவது உங்கள் ப்ளோக் இல்லாமல் நான் பைத்தியம் ஆயிடென் ... dev \\

இப்ப ஒகே தேவ்...

கொடுத்த காசுக்கு மேல ஒவரா
கூவகூடாது பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க :)))

கோபிநாத் said...

வாங்க தம்பி...

//தண்ணி ஒத்துக்கல போல இருக்கு//

எந்த தண்ணி ராசா?\\

எல்லாம் குடிக்கிற தண்ணித்தான்

//சரி நமக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல வேற யாருக்காச்சும் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நம்ப துபாய் தம்பிக்கு போன போட்டேன்//

எல்லாருக்கும் என்னை இழுத்து வெச்சி காமெடி பண்றதே வ்வேலையா போச்சி

நல்லா இருங்கடே!\\

நல்லா இருக்கா
அப்ப அடிக்கடி காமெடி பண்ணிடவேண்டியது தான்

கோபிநாத் said...

வாங்க நாட்டாமை

// (தண்ணி ஒத்துக்கல போல இருக்கு)//

எந்த தண்ணி...பிராந்தி ஒத்துக்கலனா ரம் அடிங்க அதுவும் ஒத்துக்கலனா வோட்கா அடிங்க...அத விடுபுட்டு தண்ணி ஒத்துக்கலனு சொன்னா என்னாது இது சின்ன புள்ள தனமா..
:-) \\

என்னது பிராந்தி, வோட்காவா
அப்படின்னா என்ன நாட்டாமை...
இந்த தங்க நிறத்துல இருக்குமே அதுவா???

அது கூட coca cola, 7up எல்லாம் கலக்குவாங்களே அதுவா???

\\கவுஜ சூப்பரு...ஒரே டச்சிங்கா போச்சு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-) \\

இப்படி எல்லாம் அழக்கூடாது...
அப்புறம் அடிகடி வரும்

கோபிநாத் said...

வாங்க தலைவா...

//தண்ணி ஒத்துக்கல போல இருக்கு//

எந்த தண்ணி கோபி?\\\

ஆகா நீங்களும் எப்படி தான் ஒன்னும் புரியாத மாதிரி நடிக்கிறீங்கலோ...


//சிக்கின சூன்னியா//

இந்தக் கதையை கேட்ட நீங்க வடிவேலுக்கு போட்டியா வருவீங்க போல கோபி.. \\

அட அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல
இதை சொன்னது ஒரு பிரபளமான வலைபதிவளார்

கோபிநாத் said...

\\அட கவுஜ கலக்குதப்பா, கோபி \\

ரொம்ப நன்றி தலைவா

கோபிநாத் said...

வாங்க தோழி..

\\me the 1st-uu!!! \\\

சாரிங்க...


\\ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு பதிவு போட்டிருக்கீங்க. அதுவும் சூப்பர் பதிவு.. ;-) \\


ரொம்ப நன்றி தோழி...
என்ன செய்யிறது பொட்டி தட்டுறது அதிகம் ஆயுடுச்சி

கோபிநாத் said...

வாங்க அனானி...

\\குருக்கே? \\

என்னது ஒன்னும் புரியலியே????

கோபிநாத் said...

வாங்க அபிஅப்பா

\\கவிதய படிச்சா ரொம்ப பீல் ஆவுர போல இருக்கேப்பா!!! அயுவாத அயுவாத அடுத்த வாரம் லொடுக்கு தம்பியும் வாரன்னு இருக்காரு.. நல்ல குமுறி குமுறி கும்மியடிக்கலாம். \\

ம்ம்ம்...
நான் அவன் இல்லை
வரமாட்டான் ...வரமாட்டான்...(வேலை இருக்கு)

\\உடம்புக்கு வந்தா மட்டும்தான் அம்மா தேடுது..மத்த நேரம் ஞாபகமே வரம்மாட்டங்குது... \\

ஒர் அளவுக்கு உண்மை தான் ஆனாலும் இங்க வந்ததுலயிருந்து அம்மா ஞாபகம் வரும் :((((

கோபிநாத் said...

வாங்க அனானி...

\\அரவனைத்து இல்லை
அரவணைத்து\\\

சரி மாற்றிவிடுகிறேன்...

அந்த "அரவனைத்துக்கு" என்ன பொருள்... சொன்னா நல்லா இருக்கும்

கோபிநாத் said...

வாங்க திருகுமரன்

\\கவிதை நன்று ;) \\

ரொம்ப நன்றி...
வருகைக்கு நன்றி

கோபிநாத் said...

வாங்க மணி...

\\:)

கவித சூப்பர். கலக்கிறீயெப்பு

feelings a poochu..
ingayum appadiye.. flu vanthuduchu..\\

அப்படியா மணி
அப்ப அடிக்கடி feel தான்


//இனிமேதான் வரபோற வேலைன்னு"//

இதுக்கும் பைலா. நல்ல இருக்குலே டெக்னீகு.. கலக்கு \\

அப்படியே நீயும் ட்ரைப்பண்ணிப் பாரு

கோபிநாத் said...

வாங்க அருண்..

//(தண்ணி ஒத்துக்கல போல இருக்கு)
//

SmirnOff அடிக்கும்போது ரம்மடிச்சா இப்பிடித்தான். நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்குங்க கோபி.\\

அனுபவம் பேசது போல..

\\கவிதை சூப்பருங்க. தொட்டுட்டீங்க போங்க\\

இப்படி பின்னூட்டம் போட்டு இப்ப நீங்க தொட்டுட்டீங்க...
நன்றி அருண்

ஜி said...

//நீண்ட வழி எனக்கு முன்னே
எதனை எடுக்க எதனை தவிர்க்க
குழப்பங்களில் கரைகிறது என் காலங்கள்//

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்குதே... நான் கொஞ்சம் மொழிபெயர்க்கட்டா???

இந்தக் காதலர் தினத்தில்
எக்கச்சக்க ப்ரோபோசல் வந்தது
அதில் எதை தேர்ந்தெடுப்பது.. எதை விடுவது என்று தெருயவில்லை...
ஐடியா கேக்கத் தாயும், தந்தையும் அருகில் இல்லை...


இதானே அர்த்தம்???

Unknown said...

//இந்தக் காதலர் தினத்தில்
எக்கச்சக்க ப்ரோபோசல் வந்தது
அதில் எதை தேர்ந்தெடுப்பது.. எதை விடுவது என்று தெருயவில்லை...
ஐடியா கேக்கத் தாயும், தந்தையும் அருகில் இல்லை...

இதானே அர்த்தம்??? ///


இதன் மூலமாய் அறிவது என்னெ வென்றால்

பாம்பின் கால் பாம்பு அறியும்...

நல்ல டிரான்ஸ்லேட்... ஜி..எத்தன சொல்லவே இல்ல..

கோபிநாத் said...

\\இதானே அர்த்தம்??? \\

ம்ம்ம்....ஆனா இது எனக்கு இல்லை நண்பா...


உனக்கு..
உனக்கு.....
உனக்கு......

கோபிநாத் said...

\\இதன் மூலமாய் அறிவது என்னெ வென்றால்

பாம்பின் கால் பாம்பு அறியும்...

நல்ல டிரான்ஸ்லேட்... ஜி..எத்தன சொல்லவே இல்ல.. \\

அட்றாசக்கை..
ஜி சொல்லவே இல்ல...

ஜி said...

//கோபிநாத் said...
அட்றாசக்கை..
ஜி சொல்லவே இல்ல... //

enna Gopi... cycle gapla namma rendu peraiyum pottu thaakkikittu irukaaru calendar Mani.. neenga vera avarukku support panreenga...

vaanga poi avaru blogla kummi adikkalaam :)))))

G.Ragavan said...

எதுத்தாப்புல வர்ரவன் புன்னகையைக் குடுன்னு கேக்காம பொன் நகையைக் குடுன்னு கேட்டான்னா?

Swamy Srinivasan aka Kittu Mama said...

haha build ellaaam joober :-)

kavidhaila thandhayin aravanaippa ??

haha paravaalayae unga thandhai...namakku therinjadhellam sulukku mattum dhaan LOL

thanni oththukalanna water berry compound kudinga..naan chinna vayasula irukappo adhayae dhaan kudichaen :-)

கோபிநாத் said...

வாங்க ராகவன் சார்

\\ G.Ragavan said...
எதுத்தாப்புல வர்ரவன் புன்னகையைக் குடுன்னு கேக்காம பொன் நகையைக் குடுன்னு கேட்டான்னா? \\

அது எப்படி அவன் என்னிடத்தில் கேட்பான்? நான்தான் அவன் புன்னகையில் ஆருதல் அடைகிறேன்.

கோபிநாத் said...

வாங்க கிட்டு மாம்ஸ்

\\ Kittu said...
haha build ellaaam joober :-)

kavidhaila thandhayin aravanaippa ??

haha paravaalayae unga thandhai...namakku therinjadhellam sulukku mattum dhaan LOL\\

மாம்ஸ் கவிதைன்னு சொன்னதற்கு முதலில் நன்றிகள். நமக்கும் அதே சுளுக்குதான்..கவிதையுலும் ஏக்கம் தான் :((

\\thanni oththukalanna water berry compound kudinga..naan chinna vayasula irukappo adhayae dhaan kudichaen :-)\\

சின்ன வயசுலேயேவா...