Sunday, December 31, 2006

என் இனிய பிளாக் மக்களே...


இரவு நேரம்..

மிதமான குளிர்காற்று..

கையில் சூட சூட தேனீர்..

இளையராஜவின் இசை..

யாரும் இல்லா தனிமை...


உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு நானும் இந்த புதுவருடத்தை வரவேற்க போகிறேன். பிறக்க போகும் அந்த புதுக் குழந்தையை வரவேற்பதா இல்லை என் கடமைகள் முடிந்த்து என்று போகும் இந்த முதிர்ந்த தாய்யை பிரிவதா..குழப்பங்களில் கரைகிறது என் நேரங்கள்.

2006ல்
எத்தனை விதமான அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு நிறம்.
சந்தோஷகளையும், பிரச்சனைகளையும் நினைத்து காலங்கள் கடக்கின்றது.
பிரச்சனைகள் எனக்கு பல அனுபவங்களை கற்றுதந்தது. சந்தோஷங்கள் பலவற்றை எனக்கு அறிமுகம் செய்து. அப்படி கிடைத்த அறிமுகம் தான் தமிழ் வலைபதிவு நண்பர்கள்.

எத்தனை அருமையான நண்பர்கள்!

முகம் தெரியாமல் உற்சாகம் கொடுக்கும் நண்பர்கள்!!

எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணியவுடன் நான் அனுகியது
எண்ணங்களை எழுதிகிறேன் திரு. மா. சிவகுமார் அவர்களை தான். எனக்கு மிகுந்த அக்கரையுடனும், கனிவுடனும் வழிகாட்டினர். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகரிகமாகவும், நகைச்சுவையுடனும் எனக்கு உற்சாகத்தை அளித்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் நன்றிகள். இது போல வருகிற வருடமும் எனக்கு உற்சாகம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மனம் புண்பாடும் மாதிரி எங்கவாது எழுதியிருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2007ம் ஆண்டு உங்கள் கனவுகளும், முயற்ச்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

Wednesday, December 27, 2006

ரஜினி...கமல்.... நான்


கமல் மொட்டையுடன்


ரஜினி மொட்டையுடன்


கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோவிலுக்கு போலம்ன்னு முடிவு செய்து சொன்றோம்.

கோவில்ல இரண்டு பேர் பேசிகிட்டங்க

"சிவாஜி" படத்துல தலைவர் (ரஜினி) மொட்டையாம்டா...பேட்டோ பார்த்தேன் கலக்கலயிருக்கு....தலைவர் தலை சும்மா வழு வழுன்னு இருக்கு

அட கமல் கூடதான் மொட்டையாம்டா....

அப்படியா....

ஆனா எனக்கு அந்த தயாரிப்பாளர் மொட்டை தலை தான் ஞாபகத்தும் வந்துச்சி கூடவே இருந்து இந்த மொட்டை விஷயங்களை கேட்டு எனக்கு போட்ட மொட்டை எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருச்சி.

"அது ஓரு மொட்டைக்காலம்"ன்னு படம் கூட எடுக்கலாம்....அப்படி ஒரு வழி வழின்னு வழிச்சுட்டங்க...

ஆடி மாசம் வந்த எல்லத்துக்கும் மாரியம்மன் கோயில்ல கூழ்வுத்துறது தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா எனக்கு மொட்டை தல தான் ஞாபகத்துக்கு வரும். வருஷம் தவறாம "திருத்தணி" முருகன் கோவிலுக்கு போவோம். ஆடி கிருத்திகை காலையில என்னைய தேடி ஒரு கூட்டமே அலையும்.
எங்க இருந்தலும் கண்டுபுடிச்சி அப்படியே நாம்மல தூக்கி வந்து அம்மா முன்னாடி நிறுத்துவனுங்க.

காதுல விழாத மாதிரி...நல்ல தூங்குற மாதிரி நடிக்கிறது..

அம்மா: டேய்ய்ய்ய்...எழுந்துற.....நடிச்சது போதும்....மொட்டை அடிக்க போகணும்

அம்மான்ன சும்மவா கரைட்டா கண்டுப்புடுச்சிரும்...
சரி ஆரம்பிச்சுட்டிங்க இனி நிறுத்த முடியாது ஆரம்பிங்கடன்னு கண்ணமுழிச்சி பார்த்தா

வாட மகனேன்னு அப்பா ரொடியா நிற்பார்...

கோவிலுக்கு கீழ தான் மொட்டை அடிக்கிற இடம்யிருக்கு. கீவ்வுல நின்னு டிக்கெட் எல்லாம் வாங்கி உள்ளே போன ஓரு பெரிய கூட்டமோ நிக்கும்
ஏன் தலைய மொட்டை அடிக்கிறதுக்கு. அதுல ஓரு வல்லவனுக்கு அதிஷ்டம் அடிக்கும். அந்த வல்லவர் அவரேட இடத்துக்கு கூட்டிட்டு போவர்.
அங்க செங்கல்லு, இல்லனா ஒரு கருங்கல்லு, அப்புறம் ஒரு கின்னத்துல தண்ணி, கிழிஞ்சு போன லப்பர் டையர், ஒரு கத்தி, படிகாரம் இதுவெல்லாம் தான் அவரோட ஆயுதங்கள்.

அப்பா அம்மா சொன்னது மாதிரி கரைட்ட சட்டையை கழட்டிடுவரு அப்ப அடிக்கிற குளிருல வாய் அடிக்கும் பருங்க டைப்பு ஜயர்ரு.. லேயரு... எல்லாம் என்கிட்ட பிச்சைவாங்கனும்.

அப்பா.... வலிக்கம வழிக்க செல்லுப்பா...

எல்லாம் அவரு பத்துப்பருடன்னு.....முருகனை கட்டுவரு.

இந்த நேரத்துல அருதலான ஒரே விஷயம் அந்த கின்னத்துல இருக்க தண்ணி தான்
நல்ல சூடுடயிருக்கும். அந்த தண்ணியை எடுத்து தலையில கொஞ்சம் தெளிப்பரு அந்த வல்லவர். குளிருக்கு சும்மா ஜுவ்வ்வ்ன்னு இருக்கும். அந்த தண்ணி அப்படியோ எல்லா முடிகளையும் கடந்து நெத்தியில வரும் அங்கயிருந்து கண்ணுக்கு தாவும் கடைசியில நம்ம கையில வந்து விழும் பருங்க. அப்படியோ என்னமோ எல்லா முடியும் "அய்யோ உன்னவிட்டு போறனேன்னு" கண்ணிர் வடிக்கிற மாதிரியிருக்கும்.

உச்சஞ்தலையில தான் முதா வழி அப்படியே நேரா வழிச்சி வந்து மடிமேல விழும் முடியெல்லாம். நான் அல்லும் பகலுமாய் வளர்த்த ஆசை முடியை 50 பைசா பிளேட வைச்சி ஐந்தோ நிமிடத்துல எல்லத்தையும் வழிச்சுடிவங்க இருக்கிற கொஞ்சத்தையும் அப்பா அந்த வல்லவனிடத்துல செல்லி வழிச்சுடுவரு. இதுல அந்த வல்லவனுக்கு மொட்டைக்கு மேலா கூடுதல காசு வேற.

கடைசியில முருகா இது உனக்கோ சரியான்னு கோட்ட பேனா அவரும் மொட்டையா போட்டு "யாம் இருக்க பயம் ஏன்"ன்னு சொல்லுவரு. இப்படி சொல்லி சொல்லியே ஒவ்வொரு வருஷம தொடர்ந்து பத்தவது படிக்கிற வரைக்கும் மொட்டை போட்டேன் முருகனுக்கு.

கண்ணாடியை பார்த்தல் "ONIDA" விளம்பரத்துல வர அந்த மொட்டை மாதிரியிருக்கும்.

சரிடான்னு schoolலுக்கு போன அங்க வாத்தியாரு "ஏன்டா முருகனுக்கு முடிய மட்டும் தான் கொடுத்திய இல்ல மூளையும் சோர்த்து கொடுத்திட்டியான்னு' கேட்டு நாம்பல கிழிச்சிடுவரு.

ம்ம்ம்ம்.....நடிகன் மொட்டை போட்ட ஊருக்கே கொண்டாட்டம் அதுவோ ரசிகன் போட்ட திண்டாட்டம் இது தண்டா உலகம்..

Saturday, December 16, 2006

ஆண்"பாவம்"- இது ஓரு சின்னகதை

இந்த படத்தை நல்ல பாருங்க என்ன புரியுது? வாழ்க்கையோட முக்கியமான விஷயம் ஓன்னுயிருக்கு










Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................


இது தான் வாழ்க புரியுத.....

Saturday, December 09, 2006

முக்கிய செய்தி

எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மெயில் வந்தது, அதை பார்த்ததும் அதிர்ச்சியாகிடுச்சி. இதோ உங்களுக்கும்

அமொரிக்க அதிபர் புஷ்க்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதோ அந்த அறிய புகைப்படம்

--

----

------

---------

-------------

---------

------

----

--


எனக்கொரு மகன் பிறப்பன் அவன் என்னை போலவே இருப்பான்.

Monday, December 04, 2006

நம்ம ஊரு போல வருமா.....


இது ஏதோ மும்பையோ, சென்னையோ இல்ல

இந்த துபாய் இல்ல துபாய்யீ அது தான் இது, ஏதோ 24 மணி நேரமும் மழை பெய்யவில்லை சில மணி நேரம் தான் பெய்தது அதுக்கோ இப்படி தண்ணி தோங்குது. இன்னும் தமிழ்நாட்டுல பெய்ஞ்ச மாதிரி பெய்ஞ்சது அவ்வளவு தான் இங்க இருக்குற அரபிகள் எல்லாம் நம்ம ஊருக்கு வேலைக்கு வரவோண்டியது தான்

Sharjahவுல மழைய பார்த்த உடனே powerயை புடுங்கிட்டங்க, power இல்லன்னா தண்ணியும் இல்ல...ரொம்பா கஷ்டம்

இது நம்ம ஊரு மக்கள்

பொறுமை..
நாட்டின் குடிமகனின் மகன்..

அறிமுகம்

பெயர் - கு. கோபிநாத்

பிறந்தது - சென்னை

பணிபுரிவது - Sharjah, U.A.E யில்

வாழ்க்கை எப்போதும் எதவாது சொல்லி கொடுத்து கொண்டேயிருகிறது.,
கடந்த 2 மாதமாக தமிழ் வலைபதிவுகளில் வலம் வருகிறேன். எத்தனை அருமையான தமிழ் நண்பர்கள் அருமையாக பதிவுகளை பதிக்கின்றனர். கவிதைகள், கதைகள், விமர்சனங்கள் இன்னும் பல....ஓவ்வொரு பதிவுகளும் அருமையாக பதிவுகள். இவை எல்லாம் பர்க்கும் போது நான் இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது.

வாழ்க்கை என்னும் நாடகத்தில் எல்லோரும் ஓரு நடிகன் தான். அதில் நான் ஓரு சாதராண ரசிகன் வேஷம் போடலமன்னு இருக்கேன். உங்க எல்லோரோட பதிவுகளையும் ரசித்துக் கொண்டு நானும் சில பதிவுகள் போடலமன்னு இருக்கேன்.

இந்த ரசிகனையும் முடிந்தால் ரசியுங்கள்.

உங்கள் உற்சாகத்துடன்
கு. கோபிநாத்

குறிப்பு ; தமிழ் டைப்பிங் புதுசு, பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.