
இரவு நேரம்..
மிதமான குளிர்காற்று..
கையில் சூட சூட தேனீர்..
இளையராஜவின் இசை..
யாரும் இல்லா தனிமை...
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு நானும் இந்த புதுவருடத்தை வரவேற்க போகிறேன். பிறக்க போகும் அந்த புதுக் குழந்தையை வரவேற்பதா இல்லை என் கடமைகள் முடிந்த்து என்று போகும் இந்த முதிர்ந்த தாய்யை பிரிவதா..குழப்பங்களில் கரைகிறது என் நேரங்கள்.
2006ல்
எத்தனை விதமான அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு நிறம்.
சந்தோஷகளையும், பிரச்சனைகளையும் நினைத்து காலங்கள் கடக்கின்றது.
பிரச்சனைகள் எனக்கு பல அனுபவங்களை கற்றுதந்தது. சந்தோஷங்கள் பலவற்றை எனக்கு அறிமுகம் செய்து. அப்படி கிடைத்த அறிமுகம் தான் தமிழ் வலைபதிவு நண்பர்கள்.
எத்தனை அருமையான நண்பர்கள்!
முகம் தெரியாமல் உற்சாகம் கொடுக்கும் நண்பர்கள்!!
எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணியவுடன் நான் அனுகியது
எண்ணங்களை எழுதிகிறேன் திரு. மா. சிவகுமார் அவர்களை தான். எனக்கு மிகுந்த அக்கரையுடனும், கனிவுடனும் வழிகாட்டினர். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகரிகமாகவும், நகைச்சுவையுடனும் எனக்கு உற்சாகத்தை அளித்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் நன்றிகள். இது போல வருகிற வருடமும் எனக்கு உற்சாகம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மனம் புண்பாடும் மாதிரி எங்கவாது எழுதியிருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
2007ம் ஆண்டு உங்கள் கனவுகளும், முயற்ச்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.