Saturday, June 14, 2008

சிவாஜி வாயில ஜிலேபி - தசாவதாரம் அல்வா

சிவாஜி வாயில ஜிலேபி தொடரை எழுத அண்ணன் நிஜமா நல்லவன் அழைத்திருக்கிறார். சிவாஜி வாயில நான் எப்படி ஜிலேபி வைப்பது.. அதுவும் இல்லமால் எந்த சிவாஜி வாயில ஜிலேபி வைப்பது. அப்படியே அவர்களுக்கு ஜிலேபி பிடிக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் ஜிலேபிதான் வைக்க வேண்டுமா.. இந்த லட்டு பால்கோவா எல்லாம் வைத்தால் என்ன போன்ற கேள்விகள் கேட்க தோன்றுகிறது. இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நடிகர் கமலின் தசாவதாரம் திரைக்கு வரும் தேதி தெரிவிக்கப்பட்டது. கூடவே கமல் அல்வா கொடுத்திடுவாரோ என்ற சந்தேகமும் சேர்ந்து கொண்டது. இந்த ஊரில் எந்த திரைஅரங்கில் படம் வருகிறது என்று எல்லாம் தெரிந்து கொண்டு டிக்கெட் புக் செய்யலாம் என்று இணையத்தை அழைத்தால் சாரி எங்ககிட்ட அந்த வசதி எல்லாம் இல்லை என்று வந்தது. சரி போங்கடா நானே வருகிறேன் என்று திரைஅரங்கிற்க்கு சொன்றேன். எப்படியாவது 48 மணிநேரத்திற்குள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஏன் இந்த அளவுக்கு கொலைவெறி என்பது எல்லாம் வேறு விஷயம். திரைஅரங்கத்திற்கு சென்று அங்கே இருந்த சேட்டனிடம் நேரம் நாள் எல்லாம் சொல்லி கார்ட்டை எடுத்து நீட்டினேன். அவரு சாரி நைனா இங்கே துட்டுதான் இந்த கார்டு எல்லாம் லேதுன்னு என்னை தொர‌த்திட்டாரு. அட இது என்னடா கடைசி நேரத்தில் சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டே வெளியில் வந்து அந்த பரந்துவிரிந்த கடைவீதியில் தேடி ஒருவழியாக காசு எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து காசையும் எடுத்து ஆண்டவா 48 மணிநேரத்திற்குள் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்னு புலம்பிக்கொண்டே வந்தேன். நல்லவேளை டிக்கெட் கிட்டியது. ஆகா...ஆகா...ஒரே மகிழ்ச்சி தான். அதற்க்குள் தமிழ்மணத்தில் பதிவு வரும். அதை எல்லாம் படிக்கக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தல பினாத்தலார் பதிவை மட்டும் படித்து வைத்தேன்.



படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது இனியும் வரும்.
சிறிய வயதில் தீபாவளிக்கு 1 மாதம் முன்னே எந்த பட்டாசு வாங்குவது, கடைசி நேரத்தில் வெடிக்காமல் போனால் எதிரிக்கூட்டத்தில் முன் மானம் போகுமே என்று ஒன்றுக்கு பலமுறை வெயிலில் காயவைத்தும் தீபாவளிநாள் அன்று ஒரு 5000 வாலா வெடிச்சரத்தை நடுத்தெருவில் வைத்து மொத்தக்கூட்டமும் காதை பொத்திக்கொண்டு அய்யோ சரம் வெடிக்கறாங்க என்று 10அடி தூரத்தில் அவர்களை நிற்கவைத்துவிட்டு, தீயை கொளுத்தியவுடன் அந்த சரம் வெடிக்காமல் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று போகாமல் சும்மா சர சரன்னு வெடித்து ஊரையே ஒரு நிமிடம் நம்மைபார்க்க வைக்கும் போது மனிதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுபோலத்தான் கலைஞானியின் இந்த தசாவதாரம் படம்.
இத்தனை வருடங்களில் நமக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் தொடங்கியதும் வெடிக்க ஆரம்பிக்கிறது. முடியும்வரையில் வெடி வெடி தான். இத்தனை வருட உழைப்பு ஒன்றும் ஃபிலிம் காட்டுவதற்கு இல்லை என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.


12ம் நூற்றாண்டில் தொடங்கி அமெரிக்க விஞ்ஞானி வழியாக ஒவ்வொரு கமலாக உள்ளே வருகிறார்கள். ரெட்டியாக வரும் கமல் அவரை பார்த்தவுடனே திரைஅரங்கில் சிரிப்பு சத்தம் கேட்க தொடங்கிவிடுகிறது. 10 கமலுக்கும் ஒவ்வொரு இடத்தில் அவர்களின் திறமை காட்ட வைத்திருக்கிறார்கள். எந்த கமலும் வேஸ்டாகவில்லை என்றே எனக்கு தோன்கிறது. ஆனால் பலபேருக்கு தோன்றும் ஒரே சந்தேகம். எதற்காக அந்த 12ம் நூற்றாண்டு காட்சிகள் என்பது தான். படத்திற்கு எங்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் அந்த பாடலும், அந்த சண்டை காட்சிகளும் அற்புதமாக இருக்கிறது. தல கே.ஆர்.எஸ் இந்த படத்தை வைத்து பதிவு போட மேட்டர் இல்லாம‌ல் காட்சிகள் கற்பனை கலந்தது என்று முன்னே சொல்லிவிடுகிறார்கள்.



குறைகள் இல்லாம‌ல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்.

ஒளிபதிவர் ரவிவர்மனின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் விதம் மிக அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. பின்னணி இசைய‌மைத்திருக்கும் தேவி ஸ்ரீபிராத் அவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்.



கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கே.எஸ்.ரவிகுமார் இல்லை என்றால் படம் எப்படி இருந்திருக்குமோ என்ற பயம் வருகிறது. கமல் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவர் போகும் பாதை சரியா தப்பா என்பதை சுட்டிக்காட்ட ஒருவர் தேவை. அந்த தேவையை கே.எஸ்.ரவிக்குமார் மிகச்சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.

திரைக்கதை அமைத்த‌தில் ஒட்டைகள் இருந்தாலும் அதை எல்லாம் அந்த 10 கமல்களை காண்பித்து வாயடைத்துவிடுகிறார்கள். தனது முந்தைய படங்களின் தோல்வியும், சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும். மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம். நம்மவர் எடுத்திருக்கும் படம். அதில் நம்மவரின் உழைப்பை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய படம்.

ஆமா அதுக்கு எதுக்கு தசாவதாரம் அல்வான்னு தலைப்பு வச்சிருக்கான்னு கேட்குறிங்களா...அல்வாவும் ஒரு இனிப்பு தானே....எப்படி நம்ம அல்வா.

Monday, April 28, 2008

பெளர்ணமி நினைவுகள்...




எப்பவும்போல வழக்கமான இடத்தில உட்காந்தே யோசிச்சேனுங்க. அப்படி இருந்தும் வழக்கமாக வர்ற ஐடியா கூட இந்த முறை வரமாட்டேங்குது. இது என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு ஒரே யோசனையில இருக்கும்போதுதான் நம்ம மாப்பி "சென்ஷி" ஞாபகம் வந்துச்சு. சரி..அவனுக்கு ஒரு போனை போட்டு ஐடியா கேட்போம். அவன் இப்ப எல்லாம் நிறைய பதிவுகளில் விவாதம் பண்றான். தமிழ்மணத்தில் அரசியல் எல்லாம் அத்துபடியாச்சேன்னு நினைச்சி அவனுக்கு ஒரு போனை போட்டேன். (மக்களே இப்ப வழக்கமான சென்ஷியே இல்ல அவன்....ம்ம்ம் நம்புங்க)

நானும் போனை போட்டு வழக்கமாக கேட்குறமாதிரியே ஆரம்பிச்சேன்,
"என்ன மாப்பி எப்படி இருக்கே"

அவனும் வழக்கமாக கொடுக்குற அல்வாவையே கொடுத்தான்,"ஹாய்டா செல்லம் நீ எப்படி இருக்கே"

நான்: ம்ம்ம்....ஏதோ போகுதுப்பா.....

சென்ஷி; ஆமா ஏன்டா ரெண்டு நாளா போனே போடுல

நான்: ஆணி அதிகம் மச்சி அதான்.. சரி நான்தான் போடல நீயாவது மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல

சென்ஷி: ம்...உன் ஆபிசுக்கு போனை போட்டு உனக்கு கனெக்ட் பண்ணுறதுக்குள்ள தாவு தீர்ந்து etisalat பில்லு கிழியுது.

நான்: சரி ஆபிசுக்குதான் வேண்டாம். என்னோட செல்லுக்காச்சும் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல

சென்ஷி: மிஸ்டுகால் எதுக்குடா

நான்: ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..

சென்ஷி: அடப்பாவி இதுல இப்படி எல்லாம் வேற இருக்கா!!

நான்: பதிவு போட ஏதாவது ஐடியா கொடேன். உனக்கு இந்த பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், விவாதம், அரசியல் இதெல்லம் அத்துப்படியாச்சே....இப்போ தமிழ்மணத்துல எந்த பதிவுல மவுசு அதிகம் க்ளிக் ஆகுதுன்னு கொஞ்சம் சொல்லேன்.

சென்ஷி: மச்சி இதுக்கு எல்லாம் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.. பரவாயில்லையா!

நான்: செலவுதானே! அதுபாட்டுக்கு எவ்வளவு ஆனா என்ன?! நீ சொல்லு மச்சி.. உனக்கு நான் தனியா ஸ்பெசலா கவனிக்கிறேன்.

சென்ஷி: நீ வழக்கமா உள்குத்துவச்சி பேசற மாதிரியே பேசுற....சரி போன வருஷம் ஒரு பதிவுல எந்த பதிவுன்னு சரியாக ஞாபகம் இல்ல, ஆனா சூப்பர் பதிவு. அதுல வழக்கம்போல செந்தழல் ரவி தான் முதல் பின்னூட்டம். அடுத்த பின்னூட்டம் லக்கின்னு நினைக்கிறேன். நான் தான் மூணாவது பின்னூட்டம். இதுல மேட்டர் என்னன்னா.. செந்தழல் ரவிக்கு போட்ட பின்னூட்டத்துக்கு லக்கி ரீப்பிட்டே போட, நான் டக்குன்னு லக்கி போட்ட ரீப்பிட்டே பின்னூட்டத்துக்கு ரீப்பிட்டே இப்படிக்கு டில்லியில் இருந்து சென்ஷின்னு போட்டேன்....எப்படி மச்சி சூப்பர் இல்ல

நான்: டேய்....டேய்...ஆரம்பிச்சிட்டியா. நான் உன்னை என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே.....நானே ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குதேன்னு உன்கிட்ட கேட்டா நீ என்னடான்னா உன் பின்னூட்ட சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருக்கே...அதுவும் ரீப்பிட்டு. உன் கூட சேர்ந்ததுக்கு தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....

சென்ஷி: சரி சரி கூல் மச்சி....இன்னிக்கு நேத்தா நாம இப்படி எல்லாம் ரீப்பிட்டே போடுறோம்.

"வெளங்கிடுவோம்டா"ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டு நண்பன் ஒருவன் எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டுயிருந்தேன். ஒவ்வொரு புகைப்படங்களிலும் ஒவ்வொரு அழகு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பழைவு நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டுயிருந்தது. நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்.

அவன் அனுப்பியிருந்த புகைப்படங்களில் முழுநிலா கொண்ட புகைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மின்சாரம் இல்லாத இரவுகளில் நிலாவின் ஒளி எங்கள் வாசல் முழுவதும் பரவியிருக்கும். வாசலில் விழும் ஒலியில் கைகளை எல்லாம் அகட்டி திரட்டி விதவிதமாக உருவங்கள் வரவழைத்து நிழலில் விளையாடிக் கொண்யிருப்போம். மிகப்பெரிய வாசல் கொண்ட அந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். எல்லோரும் அந்த வாசலில்தான் துணி துவைப்பது, மிளகாய் எல்லாம் காயவைப்பது... எங்களுக்கு நெட்டி ஆடுவது போன்றவை எல்லாம். என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் கொடுத்தார். கடைசி வரை சுக்கு கரைந்தது தான் மிச்சம். எனக்கு தெரிஞ்சது எல்லாம்...

"ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி" தான். (முத்துக்கா வீட்டு பாடம் செய்துட்டேன்)

பல சுபகாரியங்களை பார்த்திருக்கிறது அந்த வாசல். சில இறுதி பயங்களும் அந்த வாசலில் வைத்து தான் தொடங்கியிருக்கிறது. அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு என்று அம்மாவுக்கு இம்சை கொடுத்து ஓட ஓட அடிவாங்கியதும் அந்த வாசலில் வைத்து தான். ரத்த சொந்தங்களாக இல்லாமல் பழகியபழக்கத்தில் வந்த சொந்தங்களும் கிடைத்ததும் அந்த வாசலில்தான். வெறும் பக்கத்து வீட்டு ஆளுங்க தானே என்று இல்லாமல் அவங்க வீட்டில் ஒருவன்போல என்னையும் அன்பாக பார்த்த சொந்தங்கள். நான் பள்ளி முடிந்து வீடு வரும் எனக்கு வீட்டில் அம்மா இல்லை என்றால் எப்படியும் இவர்களின் ஒருவர் வீட்டில் இருந்தாவது எனக்கு தேவையான சிற்றுண்டிகள் வந்துவிடும்.

எனக்கும் சாப்பாட்டுக்கும் ரொம்ப தூரம் (எவ்வளவு கிலோமீட்டர்ன்னு எல்லாம் கேட்ககூடாது.. உத்தேசமா கையிலேந்து வாய் வரைக்கும்ன்னு வச்சுக்குங்க). ஆனா இந்த சிற்றுண்டிகள் எல்லாம் தின்னுக்கிட்டே இருப்பேன். சரியாக சாப்பிடாமல் அடம்பிடிக்கும் நேரத்தில் அம்மாவின் கடைசி ஆயுதமாக அம்மாவின் கையால் பால் சோறு கிடைக்கும். நன்றாக காய்ச்சிய பாலை அம்மா மெதுவாக ஊதி ஊதி அந்த ஏடுகளை எல்லாம் தள்ளித்தெளிந்த பாலை ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்றாக பிசைந்து எலுமிச்சை ஊறுகாய் தொட்டு ஊட்டுவாங்க. அந்த வாசல் முழுக்க ஓடி ஓடி ஒவ்வொரு வாயாக வாங்கி வழிச்சி தின்பேன். நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.



சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு. இரவுகளில் பயணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. யாருக்குத்தான் பிடிக்காது!அந்த இருள் கலந்த அமைதியை ரசிப்பதில் யாருக்கு வெறுப்பு வந்துவிடும். அந்த இரவின் அமைதியிடம் முழுமனதையும் பறிகொடுத்து ஆழ்ந்து அந்த அமைதியை ரசிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும். கிரிவலம் செல்லும் போதும் இரவு பயணங்கள் தான். அதுவும் அந்த இரவுகளில் மலையை சுற்றி நண்பர்களுடன் நடைப்பயணம் செய்வது ஒரு சுற்றுலா போல இருக்கும். வெளியில் இருந்து கொண்டே அண்ணாமலையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தோம். சிறுவர்கள், பெரியவர்கள், பக்திமான்கள் என்று மக்கள் கூட்டம். உணர்ந்து பலபேர்.. உணராமல் விளையாட்டுக்கு சிலபேர் என்று அவரவர் கையில் ஆயிரம் ஆயிரம் சுமைகளுடன் அந்த அண்ணாமலையாரிடம் இறக்கி வைக்க நேரம் பார்த்து நடையில் வேகத்தை கூட்டியும் குறைத்தும் கொண்டு நடந்துக் கொண்டுயிருப்பார்கள்.

அண்ணாமலையாரை சுற்றி இருக்கும் மற்ற லிங்கங்களை பார்க்கும்போது மனதில் ஒரு சோகம் வந்து அமர்ந்துக்கொள்ளும். யாரும் சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டது போல களையிழந்து இருக்கும். சிவன் கோவில்கள் எல்லாம் இப்படி கலை இல்லாமல் வர்ணங்கள் இல்லாமல் ஒருவித பாழடைந்தது போல இருக்கிறது என்று தோன்றும். பயணம் தொடங்கும்போது பழைய நினைவுகளுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்துக்கொண்டே வருவோம். சிறிது நேரம் கடந்தவுடன் அந்த பேச்சு அப்படியே எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வர வேண்டும். யார் யார் எல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று கற்பனைகளுடன் பேசி கொள்வோம். கடைசியில் "அடப்போடா! அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதோ.. இதுல அடுத்த வருஷத்துக்கு போயிட்ட...எதுவாக இருந்தாலும் அனுபவிக்கலாம் மச்சி" என்று எதிர்கால பேச்சுக்கு விடை கொடுத்துவிட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் கடைசிப்பயணம் செல்லும். கடைசி தூரப்பயணத்தில் எங்களை அறியாமல் இடைவெளி வந்துவிடும். அது பேச்சின் கலைப்பா அல்லது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தேவைப்படும் தனிமையா.. அறியாமலே இடைவெளியுடன் பயணம் தொடரும். ஒரு குழந்தைப்போல தனக்குள்ளேதான் கண்ணுக்கு மட்டும் தெரியும் அந்த கற்பனை பிம்பத்துடன் விளையாடுவது போல எங்களுக்குள் இருக்கும் எங்களை சிதைக்காத கற்பனையுடன் மனதுக்குள் பேசிக் கொண்டே கடந்து போகும் கடைதூரம். இதனால் ஒவ்வொருவரும் மனதால் ஒன்றாக சேர்வதற்க்கு சில நிமிடங்கள் பிடிக்கும்.

இங்கே வந்தப்பின்னும் பல பெளர்ணமிகள் பார்த்திருக்கிறேன். கூட்டுக்குள் அடைப்பட்ட ஒரு கிளியை போல, வேலியாக பின்னப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு உள்ளிருந்து. பள்ளிக்கு செல்ல பயப்பட்ட வயதில் அம்மாவின் விரல்பிடித்து செல்வேன். பள்ளியின் வாசலில் எங்கள் இருவரின் விரல்களும் பிரிவை உணர்ந்ததும் அழுகையை முட்டிக் கொண்டு வரும். ஏனோ தெரியவில்லை இப்போது அந்த ஞாபகங்கள் வருகிறது.

Tuesday, March 11, 2008

செல்வியின் டைரி





நான் எப்போவாவது மனநிறைவு அடைஞ்சிருக்கேனான்னு யோசிக்கும்போது சட்டுன்னு எதுவும் ஞாபகத்துல வரமாட்டேங்குது. அப்போ இதுவரைக்கும் மனநிறைவே அடைஞ்சது இல்லையா!? இல்ல எது மனநிறைவுன்னு சரியா எனக்கு தெரியலியா!? முதல்ல எதுஎதெல்லாம் மனநிறைவுன்னு முடிவு பண்ணனும். அப்பதான் அது எனக்கு கிடைச்சதா, இன்னும் இல்லையான்னு தெரியும். யோசிச்சு பார்த்தா இதுதான் மனநிறைவுன்னு எந்த வரைமுறையும் இல்லன்னு தோணுது. நேத்து ராத்திரி அப்பா கூட பேசினபோது இதுவரைக்கும் நான் அனுபவிக்காத ஒருவித மன அமைதி வந்துச்சே! அதுகூட மனநிறைவுன்னு சொல்லலாம்.

இவ்வளவு நாள் அவருக்கு தேவையானது எல்லாம் செய்துக்கிட்டு இருக்கேன். அப்பா சந்தோஷமாக இருக்கணும்னுதானே நினைச்சேன். ஆனா அவரோட மனசுல இருக்குற வலியை இறக்கிவைக்க மறந்துட்டேன்னு நேத்து தான் எனக்கு புரிஞ்சது.

சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும். சமீபத்துல கூட ஒரு படத்துல பார்த்தேன்;
little miss sunshine...ன்னு. வலையுலகத்துல கப்பி பய கூட இதை பத்தி விமர்சனம் எழுதியிருப்பாரு. அந்த படத்துல ஒரு தாய் தன்னோட மாமனார் இறந்த துக்கத்துல இருப்பா. அப்போ அந்த தாயோட மகன் அவனோட குட்டி தங்கச்சிக்கிட்ட ஒரு பேப்பரில் எழுதிக்காட்டுவான். போயி அம்மாவை அணைச்சிக்கன்னு. அந்த குட்டிப்பொண்ணு ஆதரவா அணைச்சவுடனே அந்த தாய் துக்கம் தாங்காம ஓன்னு அழுவா. அதே அந்த அதரவான அரவணைப்பு ஒரு சமயத்துல அவ அண்ணனுக்கும் தேவைப்படும். அப்போ அந்த குட்டிப்பொண்ணு தானே புரிஞ்சிக்கிட்டு அண்ணனை ஆதரவா அரவணைப்பா. அவனும் அந்த மன வலியை எல்லாம் கண்ணீரில் இறக்கி வச்சிட்டு அவ தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுப் போவான். அந்த காட்சிகள் மேலும் உணர்த்தியது அரவணைப்பின் தாக்கத்தை.

நேத்து அப்பாவுக்கும் இந்த மாதிரி ஒரு அரவணைப்பு தேவைப்படுச்சி. அதை நான் உணர்ந்து செய்தேன். அப்போ எனக்கு கிடைச்ச மன நிம்மதியை எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு என் அப்பா பேரு தெரியாது இல்ல. அப்பா பேரு சொக்கலிங்கம். 66 வயசு. அவருகூட இந்த மாதிரி நான் பேசியதில்லை. நேத்தைக்கு வரைக்கும். அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க. நேத்து பேசிக்கிட்டு இருக்கும்போது அப்பா அவரோட பழைய கதை எல்லாம் சொன்னாரு.

ச்ச கதையா அது! அவரோட வாழ்க்கை. என்ன ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்திருக்காரு. அதில் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் இருக்கு. அவரு கை எல்லாம் ஆட்டி ஆட்டி முகத்தை எல்லாம் மாத்தி மாத்தி சொன்ன அழகு இருக்கே...எனக்கே நம்ம அப்பாவா இதுன்னு தோணுச்சி. இதுவரைக்கும் இப்படி நான் அப்பா கூட பேசியது இல்லை.

நேத்து ராத்திரி வழக்கம்போல அப்பாவுக்கு மருந்து கொடுக்க அவரோட ரூமுக்கு போனேன்.

"அப்பா! சும்மா படிச்சது போதும்.. இந்த மாத்திரையை சாப்பிட்டு தூங்குங்க."

உடலில் உள்ள மொத்த வலிமையையும் கைகளில் வாங்கி நிமிர்ந்து உட்காந்தார் அப்பா. பார்க்குறதுக்கே பாவமாக இருந்துச்சு. மாத்திரை வாங்கி உற்று பார்த்து "ஏழுமலை ஏழுகடல் தாண்டி ஒரு கிளி வயித்துல உயிர் இருக்குன்னு பாட்டி கதை சொல்லும் போது எல்லாம் நம்பல. ஆனா இந்த மாத்திரைகளை பார்க்கும்போது எல்லாம் அதெல்லாம் நிஜம்ன்னு தோணுதும்மா. இந்த மாத்திரைகள் இல்லன்னா நான் எப்போவோ போய் சேர்ந்திருப்பேன் இல்ல. உனக்கும் பாரமாக இருந்திருக்க மாட்டேன்"

"ஆரம்பிச்சிட்டிங்களா! இதுல எனக்கு என்னப்பா பாரம் வந்துடப்போகுது"

"ம்... சரி பசங்க எல்லாம் தூங்கிட்டாங்களா?"

"ம்... ரெண்டும் பென்சிலுக்கு சண்டை போட்டு ரெண்டு உதை வாங்கி இப்பத்தான் தூங்கிச்சுங்க". கட்டிலில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கைகளை பற்றி கொண்டேன்.

"ஏம்மா குழந்தைகளை அடிக்கிற..! சின்னகுழந்தைங்கதானே.."

"எரிச்சல்படுத்திட்டாங்கப்பா...அதான் ரெண்டு போட்டேன். நானும் சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் அக்காங்களோட சண்டை போடுவேனாப்பா.."

"சண்டை போடுவியாவா!!?...யப்பா.. அந்த மூணு பேருல நீதான் தாதா..உன் சவுண்டுக்கு அவுங்க ரெண்டு பேரும் பயந்தே உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க... ஆனா நீ எதையும் பெருசா கேட்டு அடம்பிடிக்க மாட்டே.. எது கிடைக்குதோ அதையே ரசிச்சு ஏத்துக்குவ.."

"ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன். சரி தூங்குங்கன்னு கைகளை பறித்துக்கொண்டு புறப்பட தயாரானேன். அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்.

"ம்மா செல்வி"ன்னு ஒருவித தவிப்போடு என்னை கூப்பிட்டார்.

"என்னப்பா..தண்ணி வேணுமா?"

"எப்படிம்மா இருக்க?"

இந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டுன்னு நின்னுட்டேன். என்ன சொல்லறதுன்னு தெரியல. அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்துச்சு எனக்கு. "எனக்கு என்னப்பா நல்லா தானே இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் ஆதரவாக கைகளை பற்றினேன்.

"என்னப்பா திடீர்ன்னு கேக்குறிங்க"

"ஒண்ணும் இல்லம்மா. கேட்கணுமுன்னு தோணுச்சி. கேட்டேன்... காலையில எழுந்தேன்னா சமையல், புருஷன், குழந்தைகள், உன் வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்க.. நீ எப்படியிருக்கன்னுகூட கேட்க முடியறதுல்ல...அதான்.."

மனதுக்குள் ஏதே உணர்ந்தவளாய் "நீங்க எப்படிப்பா இருக்கிங்க..?"

அந்த வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர்போல தவிப்பும் மகிழ்ச்சியுடன் மீண்டும் மொத்த வலியை திரட்டி நிமிர்ந்து உட்காந்து "ம்... எனக்கு என்னம்மா குறை, நல்லாயிருக்கேன்ம்மா...இனி சாவு ஒண்ணுதான் பாக்கி.."

...........

"அட சும்மா சொன்னேம்மா... நெருப்புன்னு சொன்ன வாய் சுட்டுடவா போகுது... அப்பா அதுக்குள்ள எல்லாம் போகமாட்டேன். உன் புள்ளைங்க கல்யாணத்தை எல்லாம் பார்த்துட்டுதான் போவேன்.."

அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டபடியே என் செல்ல அப்பா என்று புன்னகைத்தேன்.

"எங்கம்மா கூட இப்படிதான் செய்யும்..."

"எப்படி இப்படியா" என்று மறுபடியும் தலைமுடியை கோதிவிட்டு சாய்ந்து பார்த்தேன்.

"ஆமா... எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அதை உணர்ந்து ஆறுதலாக பேசி இப்படித்தான் செய்யும் எங்கம்மா.. அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு பொய் சொல்லிட்டு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.. ஒரு நாள் கேட்கவே கேட்டுட்டேன்"

"என்னன்னு..."

"எப்படிம்மா உனக்கு மட்டும் தெரியுதுன்னு"

"பாட்டி அதுக்கு என்ன சொன்னாங்க" ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டேன். என் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு 'நான் உன்னை பெத்தவடான்னு' அழுத்தமான ஒரு சிரிப்பை கொடுத்துட்டு போயிட்டாங்க. இன்னும் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கேன்.."

"ம்...."

"அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."

"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"

"ராசாத்தி... இவ எதுக்கு என் வாழ்க்கையில் வந்தா.. எதுக்கு போனா.. எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன இருந்துச்சுன்னு ஒண்ணும் பிடிபடல... இன்னும் கூட என் மனசுக்குள்ள இருக்கா.."

"உங்க காதலியாப்பா அவுங்க!?" அப்போது தான் அப்பாவுக்குதான் தன்னோட பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு நினைச்சாரா என்னன்னு தெரியல. மவுனமாக இருந்துட்டாரு. மனசில் இருப்பதை கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் போது அருகில் இருந்து அதை கேட்க ஆதரவாக ஒரு மனிதன் கிடைத்தால் அது யாராக இருந்தால் என்ன?!

"என்னப்பா...! என்கிட்ட சொல்லக்கூடாதுன்னா வேண்டாம்..."

"ச்சே... இதுல என்னம்மா இருக்கு... அவ பேரு ராசாத்தி. அந்த பேர சொல்லும்போதே முகத்துல ஒரு சிரிப்பு வரும். இந்த வாலிப வயசுல நாம பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கன்னத்துல கைவச்சு 'ம்' கொட்டி ரசிக்க ஒருத்தி கிடைச்சான்னா அதைவிட சொர்க்கம் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு சொர்க்கத்துல என்னை வச்சு ரசிச்சவ ராசாத்தி. என்னையும் அவளையும் வச்சு பல கிசுகிசுக்கள் வந்துச்சி"

"என்ன கிசுகிசுப்பா!!!"...அப்பாவின் ராசாத்தியோடு ஐக்கியமானோன்.

"வேற என்ன காதல்னுதான்.... நான் கூட ஒரு கட்டத்துல அதெல்லாம் உண்மையாக கூடாதுன்னா நினைச்சிருக்கேன்."

"ஆஹா.... அப்பா உங்கள் காதல் கதை கேட்டால் தப்பா... பொல்லாத அப்பா" ன்னு சின்னக்குழந்தை மாதிரி ராகம் போட்டு பாட்டு பாட ஆரம்பிச்சுட்டேன்.

என்னோட குழந்தைதனத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டு தொடர்ந்தார் "அவளும் காதலிச்சா. ஆனா என்னை இல்ல பாலுன்னு இன்னொருத்தனை. ஆனா என்கிட்ட அவளுக்கு இருந்த அன்பு மட்டும் மாறவேயில்ல. அவுங்க காதலில் பிரச்சனை வந்துச்சு. பாலுவால் அவனோட வீட்டுல சம்மதம் வாங்க முடியல. அதை அவகிட்ட எப்படி எல்லாமோ சொல்லிப்பார்த்தான். அவளும் சரி சரின்னு சொல்லிட்டு திடீர்ன்னு ஒருநா என் கண்ணு முன்னாடி தன்னைத்தானே எரிச்சுக்கிட்டா.."

அதிர்ச்சியில் நான் அப்பாவின் கையை மேலும் இறுக பற்றிக்கொண்டேன்.

"ச்ச..! பாவம்ப்பா...!! அப்புறம் என்னப்பா ஆச்சு..?"

"ராசாத்தியின் மரணத்தை மறக்கடித்தவ தாமரை."

"ஐய்ய்ய்யா...அம்மா என்டிரியா..."

ஒருவித வெட்கப்புன்னகையுடன் "ம்ம்ம்ன்னு" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார். தாமரை எங்க அம்மாவோட சாய்ஸ். எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.

என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"

அப்பா, அம்மாவை எந்த அளவுக்கு நேசித்திருக்காரு.. மனதில் பெருமைப்பட்டு கொண்டேன்.

"சுகத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ளாமல் என் கனவுகளையும் தன் கனவுகளாக நினைச்சு என் தோளோடு தோள் நின்னா தாமரை. நான் குழப்பமாக முடிவுகள் சரிவர எடுக்கத் தடுமாறும்போது 'எந்த முடிவுக்கும் நான் கூட இருப்பேன்ங்க. கவலைப்படாமல் செய்யுங்க'ன்னு தைரியத்தை கொடுப்பா. அப்படித்தான் ஒருநா காலையில உங்க பாட்டி முன்னாடி நின்னு காலுல விழுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கினோம். என்னடீன்னு கேட்டதுக்கு பாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு வெட்கத்தோட வாய்க்குள்ளவே ஏதோ சொல்றா.. எனக்கு காதுல விழல. இதுல உங்க பாட்டி வேற இன்னும் நீ சரியான மக்குடா. இன்னும் சின்ன புள்ளையாவே இருன்னு சொல்லி சிரிக்கிறாங்க. எனக்கா டென்சன்.. சொல்லித்தொலைங்களேன்னு கத்திட்டேன். ம்ம்ம்... சின்னப்புள்ளைக்கு புள்ளை பிறக்கப்போகுதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு அப்படியே சந்தோஷத்தில் வாயடைச்சுப்போயி நிக்குறேன். அப்போ உங்க அம்மாவை பார்க்கணுமே. கன்னம் எல்லாம் சிவந்து, அட.. அட..! இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு அந்த முகம்."

"அப்போ அக்கா பிறக்கும் போது சந்தோஷப்பட்டிங்க நான், சின்ன அக்கா பிறக்கும் போது எல்லாம் வருத்தப்பட்டீங்களாப்பா" என்று உள்குத்துக்குள் ஒளித்துவைத்து கேள்வியை கேட்டுட்டேன்.

சட்டுன்னு அப்பாவின் முகம் வாடிப்போச்சு...

"சாரிப்பா சும்மா தான் கேட்டேன்... ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன். சாரிப்பா.."

"ச்சே! இதுக்கு எதுக்கும்மா சாரி... எனக்கு எந்த வருத்தமும் இல்லை... எந்த குழந்தையானாலும் சரி. அது என் குழந்தை. என்னோட ரத்தம்ன்னு முடிவுபண்ணியிருந்தேன். அதான் கடைசியாக நீ வந்து இருந்த கொஞ்ச குறையையும் தீர்த்துவச்சுட்டியே.... உண்மையில் உன்னை நினைச்சா பெருமையா இருக்கும்மா. என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்."

என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.

அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.

அந்த கண்ணீரை எல்லாம் கடந்து என் மனசுக்குள் ஒருவித அமைதி ஏற்பட்டுச்சு.. அப்பாவுக்கு ஏதோ ஒருவகையில உதவி செய்ய திருப்தி... மனசு முழுக்க அமைதி ஏற்பட்டுச்சி..இதுக்குப்பேர் தான் மனநிறைவோ!?

Monday, February 11, 2008

ராசாத்தி...






நீண்ட பயணம் முடியப்போகும் நேரம் வெகு அருகில் வந்துவிட்டது. அடுத்து நிகழப்போகும் அந்த அற்புத‌த்தை நான் எப்படி சொல்வது... நான் என் ராசாத்திகிட்ட போகப்போறேன்... அவகிட்ட போயி அந்த அழுத்தமான ஈரமான முத்தத்தை வாங்கப்போறேன். இந்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னாடி நான் இருந்த ஒன்றறை வருஷ வாழ்க்கை முடியப்போகுது.

அதோ அந்த வெட்டவெளியில் அமைதியாக தெரியுது பாருங்க நிலா வெளிச்சம், அதுபோல அழகாக இருந்திச்சு என் வாழ்க்கை. நான் என்னோட மனைவி, என் ராசாத்தின்னு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் பொறுக்காது போல இந்த கடவுளுக்கெல்லாம். வயித்தெறிச்சல் புடிச்ச சாமிங்க. ரெண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் இருளாக முடிஞ்சு போச்சு.

நான் இந்த சாமிங்ககிட்ட வேண்டிக்கிட்டது எல்லாம் என் ராசாத்தி நல்லாயிருக்கணும். எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும், அவளுக்கு எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தான். அதனாலதான் என்னவோ எந்த குறையும் இல்லாம நானே பார்த்துக்கிறேன்னு அந்த சாமியே என் ராசாத்தியை என்கிட்ட இருந்து வாங்கிட்டார்.

இதே வானத்தில் இருந்து வர்ற‌ முதல் மழைத்துளி என் செல்லுக்கு முன்னாடிதான் வந்து விழுது. மழைன்னா ராசாத்திக்கு ரொம்பப்பிடிக்கும். அந்த மழைத்துளிகளை கையில் ஏந்திக்கிட்டு என் முகத்தில அடிச்சி அடிச்சி அவ சிரிப்பா பாருங்க.. இன்னைக்கு முழுக்க பார்த்துக்கிட்டு இருக்கலாம். அவளோட ஒவ்வொரு அசைவையும் என் மனசுக்குள்ள பதிவு பண்ணி வச்சிருக்கேன்.

எதைப்பார்த்தாலும் அவள் ஞாபகம்தான்... எப்போதும் அவளோட நான் இருந்த அந்த மகிழ்ச்சியான நினைவுகள்தான் வருது. அதான் ஒரேய‌டியா அவகிட்டயே போயிடலாமுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இந்த சட்டம், நீதிமன்றம் எல்லாம் எனக்கு தூக்குதண்டனை கொடுத்தப்ப‌ கூட 'அட போங்கடா! நான் எப்பவோ இந்த முடிவை எடுத்துட்டேன். இதை ஊர் கூடி சொல்லறதுக்கு இத்தனை காலமா'ன்னு தோணுச்சு.

ஒரு மழைநாள்ல‌தான் பிறந்தா என் ராசாத்தி... விடியற்காலை 1.30 மணி இருக்கும். என் மனைவி பிரசவ வலியில துடிக்கிறதை பார்க்க தைரியம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு மெல்லிய பனித்துளியை வெள்ளை துண்டுல‌ சுத்தி என்னோட அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. சந்தோஷத்தோட உச்சத்திற்க்கு போகும்போது வார்த்தைகள் செத்துப்போயிடுதுன்னு சொல்லுவாங்க. என் ராசாத்தியை என் கையில் வாங்குறப்ப‌ நான் அப்படிதான் இருந்தேன். அவளை முதன்முதலில் என் கையில் கொடுத்தப்போ எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை இப்ப நினைச்சாலும் உடம்பு எல்லாம் சிலிர்க்குது.

"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .

உடம்பு எல்லாம் செக்கச்செவேலுன்னு இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு என் ராசாத்தி என்கிட்ட ஏதோ சொல்றா... உனக்கு அப்பான்னு ஒரு பதவி கொடுத்திருக்கேன்னு சொல்றா மாதிரி இருக்கு. ச்சீசீ...! குழந்தை எல்லாம் அப்படி சொல்லுமா..

ஆனா அதுதானே உண்மை.. என்னை அப்பான்னு கூப்பிட ஒரு குரல். நடக்குறதுல, பேசுறதுல , கோவத்துல எல்லாம் உன்னைப்போல இருக்குடான்னு ஊரே சொல்றதுக்கு ஒருத்தி வந்துட்டா. என் மூச்சுகாத்து அவள் மேல‌ பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே.. அதற்கு எத உதாரணமா சொல்ற‌துன்னு தெரியல.. அப்படி ஒரு அழகு. அப்படியே மெல்லமெல்ல நாலாபக்கமும் கண்ண சுத்திட்டு எங்க என் அப்பான்னு ஆசையா அவ பார்க்குறா.!

என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால‌ கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.

மழலை குரலில் அவ 'ம்மான்னும் 'த்தைன்னும் சொல்லும் போது எப்படா அப்பான்னு சொல்வான்னு தவங்கிடந்திருக்கேன். வேலை முடிச்சுட்டு ராத்திரி எவ்வளவு நேரம் ஆனாலும் என் குரல் கேட்டவுடனே ஓடி வந்து அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டே கழுத்தோட கட்டி பிடிச்சிப்பா. நடுராத்திரி தூங்காம இருந்தவளை தூங்க வைக்குறதுக்கு தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுல‌யும் தட்டி என்னை தூங்க வைப்பா என் ராசாத்தி. அந்த பால்வாசமும், பொக்கை வாய் சிரிப்புக்காவும் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம். எனக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் இருந்திச்சு. யாரு எது கொடுத்தாலும் ஒரு அனுமதி பார்வை என்கிட்ட வந்துட்டு போகும். உனக்கு அம்மா புடிக்குமா இல்ல அப்பா புடிக்குமான்னு கேட்டா டக்குன்னு அப்பான்னு சொல்லுவா. பொண்ணுக்கு ஆணைதானே பிடிக்கும்ன்னு கூட சொல்லாம். இருந்தாலும் எனக்கு அது புதுசாக இருந்துச்சு. "பொம்பளப்புள்ளை மேல இவ்வளவு பாசம் வைக்காதேடா. இன்னொரு இடத்துக்கு போற பொண்ணு அப்புறம் ரொம்ப கஷ்டமாகிடும்ன்னு"அம்மா சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியல.

வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்‌ட தோத்து போறதுல‌தான். நான் என் ராசாத்திக்கிட்ட நிறைய தோத்துருக்கேன். கண்ணாமூச்சு ஆடும்போது என்ன கண்டுபிடிச்சிட்டு அப்பா நீ அவுட்டு...நான்தான் ஜெயிச்சேன்னு அவ சந்தோஷத்தில் கைக்கொட்டி சிரிக்கும்போது அந்த தோல்வியிலும் பலஆயிரம் சந்தோஷம் கொடுத்தவ என் ராசாத்தி.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவளோட 6வது பிறந்தநாள் அன்னைக்கு....

"எழுந்திருச்சிட்டாளா?"

"இல்லை இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா... இன்னிக்கு லீவுதானே.. அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்"

"தூங்கட்டும்...... ராத்திரி ஏதாவது கேட்டாளா?"

"ம். கேட்டுச்சு.. அப்பா எனக்கு என்ன வாங்கி வருவாருன்னு..."

"நீ என்ன சொன்ன!"

"காலையில பாருன்னு சொல்லிட்டேன் .....உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு தூங்கிட்டா"

"லூசு! சொல்லியிருக்க வேண்டியாது தானே..."

"அதுக்கு என்ன அவசரம்.. காலையில தான் தெரிஞ்சிக்கட்டுமே"

"போடி...! குழந்தை பாவம்..! ஏக்கத்துலயே தூங்கியிருக்கும்" சொல்லிட்டு அவளுக்கு பிடிச்ச சாக்லேட், புதுத்துணி எல்லாம் எடுத்துக்கிட்டு அவ காதுகிட்ட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்ன்னு சொன்னவுடன் அப்பான்னு கட்டிப் பிடிச்சிக்கிட்டு எனக்கு என்ன வாங்கி வந்திருக்கிங்கன்னு கேட்டா... நானும் அவளோட கண்ணை பொத்தி வெளியில் கூட்டிவந்து அவ ஆசை ஆசையாக கேட்ட சைக்கிளை காட்டினேன்.

முகம் முழுக்க ஆச்சரியத்தில் அப்படியே துள்ளி குதிச்சு ஏய்ய்ய்ன்னு கத்தி என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தா. அதுதான் நான் அவக்கிட்ட இருந்து வாங்கின கடைசி முத்தம்.

நான் இதை ஓட்டப்போறேன்னு வெளியில் எடுத்துக்கிட்டு போனா... இரும்மா கோவிலுக்கு போயிட்டு வந்து ஓட்டலாமுன்னு சொன்னேன். இல்ல இப்பவே போகணுமுன்னு போனா. போனவ‌ போனவதான்... திரும்பி வரவேயில்ல. எங்க தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில என் வீட்டு பின்னாடி ஒரு கோணிப்பையில உடம்பு முழுக்க ரத்தத்தோட சிதைஞ்சு போயிருந்தா என் ராசாத்தி.

ஊரே வந்துருந்துச்சு என் ராசாத்தியை பார்க்க. யார்யாரோ என்னன்னமோ சொன்னாங்க. அந்த வாரத்துல‌ எல்லா பேப்பரிலும், டிவி செய்தியிலும் என் ராசாத்தி பத்தித்தான் பேச்சு.

சைக்கோவின் காம வெறி செயலுக்கு குழந்தை பலின்னு போட்டாங்க. அந்த சைக்கோவை பிடிச்சாங்க. அவனும் ரொம்ப ஈசியாக வெளியில் வந்துட்டான்.
என் கண்ணு முன்னாடியே அவன் சுத்திக்கிட்டு இருந்தான். என்னால முடியல. அணு அணுவாக நான் ரசித்த ராசாத்தியை இப்படி ரத்தத்தில் மிதக்க விட்டுட்டு அவன் இப்படி சுத்திக்கிட்டு இருக்குறதை பார்க்க முடியல. அவன் ரத்த‌த்தில் மிதக்க விட்டதில் என்னோட ராசாத்தியும் ஒண்ணுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அவனுக்கு இன்னொரு வெறி பிடிக்கிறதுக்குள்ள அந்த நாயை நானே கொல்லணுமுன்னு முடிவு பண்ணினேன். அவனைத்தேடி போயி பிடிச்சேன். "ஏண்டா நாயே! உனக்கு காமத்த இறக்க என்னோட ராசாத்திதான் கிடைச்சாலான்னு அவனை கண்டந்துண்டமா என் ராசாத்தியை ரத்தத்தில மிதக்க விட்டா மாதிரி மிதக்க விட்டேன். என் மனசு நிறைஞ்சுருந்தது. என் ராசாத்தி அப்பா நீ ஜெயிச்சிட்டன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு.

இதோ.. இன்னிக்கு எனக்கு தூக்கு.! என் ராசாத்திகிட்ட‌ முத்தம் வாங்கப்போற பொன்னான நாள். அதே ஜெயிலர் வர்றார். கூடவே டாக்டரும் வராங்க. பார்ப்போம்.

Thursday, January 24, 2008

எனக்குப்பிடித்த என்னோட பதிவு...

கடந்த வருடத்தில் நான் எழுதியதில் எனக்குப்பிடித்த பதிவு ஒன்றை சொல்ல வேண்டும் என்று வல்லிம்மாவும், சகோதரி முத்துலெட்சுமியும் அழைத்திருக்கிறார்கள். 100, 200 பதிவு போட்ட பெரியப்பெரிய‌ பதிவர்களே தனக்கு பிடித்த பதிவை சுலபமாக கொடுத்து விட்டார்கள். ஆனால் மொத்தமே 37 பதிவுகள் மட்டுமே போட்ட என்னால் அவ்வளவு சுலபமாக போடமுடியவில்லை... டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராக தெரியலன்னு நீங்க சொல்லறது காதுல விழுது.. என்ன செய்யுறது! எல்லாம் ஒரு விளம்பரம் தான்.


போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 27.

அதில் எனக்கு பிடித்த பதிவு அழகுகள் ஆறு தொடருக்காக அய்யனார் அழைத்து எழுதியதுதான் எனக்கு பிடித்த பதிவு அய்யனாருக்காக ஆறு அழகுகள்

ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.







அந்த பதிவில் என் அம்மா எனக்கு கொடுத்த முத்தத்தைப்பற்றி சொல்லியிருப்பேன். இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது. எனக்கும் என் அம்மாவுக்கும் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிக்கிட்டே போகலாம்.(எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும்) அம்மாவைப்பற்றி அதிகம் யோசித்தால் அழுகைதான் வருது. என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!

அந்த ப‌திவ அடிச்சு முடிச்ச‌துமே என்னோட‌ பிலிப்பைனி நண்ப‌ன் கேட்டான். என்ன‌ செய்ய‌றேன்னு.. நான் இந்த பதிவுல எழுதியிருந்த அம்மா விஷயத்த பத்தி அவன்கிட்ட சொன்னதுமே அவ‌ன் க‌ண்ணு க‌ல‌ங்கிடுச்சு.." you are very lucky man". இதுக்கு போயி ஏன்டா அழ‌றேன்னு நான் கேட்ட‌துக்கு "I am also miss my mother"ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.


என் பதிவுகளை என்னை மீண்டும் படிக்க வைத்த வல்லிம்மாவுக்கும், முத்துலெட்சுமி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வந்து பார்த்து மார்க் போடுங்கள்.

அடுத்த நான் அழைக்கும் மூவர் - கவிஞர்கள்

அழகுகள் ஆறுக்கு அழைத்த அய்யனார்

கவிதாயினி காயத்ரி

கவிஞர் வேதா

எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)

Monday, January 14, 2008

மொக்கை போட்டோம்ல

"நான் என்ன சொன்னேன்! நீ என்ன செய்துக்கிட்டு இருக்க..? "

"ஏன்! எப்பவும் நீ சொல்லறதைத்தான் செய்யணுமா..! "

"அதுக்குத்தானேகூட இருக்கே...!"

"நான் சொன்னது என்ன ஆச்சு..? "

"எல்லாம் நீ சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன். "

"அதை செய்யுறதுக்கு இவ்வளவு நாளா?"

"நீ ஒழுங்கா சொல்லியிருக்கணும். "

"போன முறையும் இப்படித்தான் சொன்னே! இந்த முறை தெள்ளத்தெளிவாக சொன்னேன். அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ற..?"

"என் மேலயே குத்தம் சொல்லு... ஏன் இப்படி எல்லாம் ஆச்சுன்னு யோசிக்காதே..! "

"ஆமா.. ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் காரணம் இருக்கும். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது என்னால... எனக்கு தேவை ரிசல்ட்.. "

"ஆமா... அந்த விஷயம் என்ன ஆச்சு...? "

"எந்த விஷயம்....? "

'அதாண்டா அந்த விஷயம்...! நேத்துக்கூட சொல்லிக்கிட்டு இருந்தியே.. "

"நேத்து நான் பல்லு விளக்குறதுக்கு முன்னாடிலேந்து படுத்து தூங்கற வரைக்கும் நிறைய‌ விஷயத்தை பேசினோம்... அதுல எந்த அந்த விஷயம்..? "

"டேய் எனக்கு கொலைவெறி உண்டாக்காதே..."

"டேய் உனக்கு இனிமேதான் கொலைவெறி வரும்.. இப்போ எனக்கு இருக்குற வெறிக்கு கொலையே பண்ணிடுவேன். தெளிவா சொல்லுடா. "

"எப்பாரு தெளிவு.. தெளிவு ஏன்டா கொஞ்சம் சூசகமாக சொன்னா புரியாதா!"

"யாரு நீ! சூசகமா........! கிழிஞ்சது. அன்னிக்கு சொன்னியே சூசகமா ஒரு விஷயத்தை எல்லார் முன்னாடியும்..!! அதுல இருந்தே தெரியல உன் சூசக திறமையை பத்தி..!!! "

"என்னிக்கு? எப்போ..!? "

"அதாண்டா அன்னிக்கு.... எல்லார் முன்னாடியும். "

"டேய் என்கிட்டயே போட்டு வாங்குறியா....அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்லுடா.. இல்லைன்னா மண்டையே வெடிச்சிடும். "

"முதல்ல நீ தெளிவா எந்த அந்த விஷயமுன்னு சொல்லு. அப்புறம் நான் அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்றேன். "

"டேய் என்னால முடியலடா! எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலைடா. "

"நான் வேணுமுன்னா உன் காலுல விழுந்து கேட்டுக்கிறேன். எந்த அந்த விஷயமுன்னு தெளிவாக சொல்லி தொலைடா வெண்ணெய். "

"ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "

"நீ எங்க இருந்து ஒழுங்கா செய்யப்போற...எல்லாம் என் HEAD LETTER "

"தோடா..! இவரோட HEAD LETTERலாமுல்ல.... எல்லாம் என்னோட HEAD LETடேற் மாமு. உன்னோட மல்லுக்கட்ட வேண்டியிருக்கு... "

ஏன்டாப்பா சொல்லமாட்டே.... இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ..

"ஆமா சொன்னா மட்டும் உட்காந்து கேட்டுட்டுதான் சார் மறுவேலை பார்ப்பாரு.. "

"ஏன் நீ சொன்னதை எல்லாம் நான் கேக்க‌லியா.... அப்படி நான் கேட்காம வேற யாருடா கேட்டுட்டாங்க? "

"ஏன் எங்களுக்கு எல்லாம் வேற ஆளுங்க இல்லையா? "

"காமெடி கீமெடி பண்ணலியே.....! "

"உனக்கு வயித்தெரிச்சல்டா..! யாருக்கு எனக்கு.....!? டேய் வெளியில சொல்லிடாதே சிரிப்பாங்க.!"

"நாலு பேரு சிரிச்சா நல்லது தானே...! "

"ஆமா இவரு அப்படி நாலு பேருக்கு நல்லது செய்ய‌றதுக்குகாக தான் பிறவி எடுத்திருக்காரு."

"உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா என் வேலையை மறந்துடுவேன். ஆளை விடுடா சாமி டேய்!"

"சீக்கிரம் முடிப்பியா மாட்டியா? "

"எல்லாம் முடிஞ்சிடுச்சிடா.. "

"சீக்கிரம் கொடுடா.. அதை வேற பதிவுல ஏத்தி தமிழ்மணத்துல இணைக்கனும்."

"இந்தா! வந்துடுச்சான்னு பாரு மெயில்..? "

வலையுலக தலைவி கீதா, பாசக்கார அக்கா கண்மணி மற்றும் வலையுலக அறிவுஜிவி கப்பி பய அவர்களின் அழைப்பு ஏற்று மொக்கை பதிவு போட்டாச்சி. என்ன தலைவி மொக்கையை மொக்கையாக போட்டுயிருக்கேனா!? அப்புறம் இன்னும் மூணு பேரை கூப்பிட வேண்டுமாம்

1. என்னை போலவே மாதம் ஒரு பதிவு எழுதும் சின்ன அம்மிணி அக்கா

2. ஜி3 புகழ் ஜி3 காயத்ரி

3. நட்பு கவிஞர் பிரேம் குமார்

யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)

Tuesday, January 01, 2008

வாழ்த்துக்கள்...



அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

Wednesday, December 19, 2007

குட்டி இந்தியன்...


நேத்து நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பியிருந்தாரு. அந்த மெயிலில் வந்த வீடியோவை பார்த்துட்டு அசந்துட்டேன். அசந்தவுடனே சும்மா இருக்க முடியாம உடனே ஊர் உலகத்துக்கு எல்லாம் சொல்லிட்டேன். அதை பதிவாக போட்டு இந்த மாசத்து கணக்கை முடிச்சுடுலாமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம அண்ணாத்த சந்தோஷ் அதையும் போட்டுடாரு. இருந்தாலும் நம்ம மனசுல கேட்கல..! அதான் நானும் போட்டுட்டேன்

சில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது. பாருங்கள் வீடியோவை.....






இந்த பதிவு போடுறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த வீடியோ வச்சி நம்ம தமிழ்மணத்தின் கவிஞர்களை கவிதை எழுத சொல்ல‌லாமுன்னு ஒரு ஐடியா. உடனே கவிதை எழுதுனா என்ன பரிசு தருவிங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது. பரிசு எல்லாம் கொடுத்து நம்ம கவிஞர்களை ஒரு சிறு ச‌ட்டத்துக்குள்ள (எத்தனை நாளைக்குத்தான் வட்ட்ம் போடுறது) அடைக்க விரும்பவில்லை.

இந்த ஜடியாவை சொன்னவுடன் நம்ம பதிவர் கவிஞர் சென்ஷி உடனே ஒரு கவிதை எழுதி அனுப்பிட்டாரு. படிங்க.. இல்லேன்னா பாருங்கள்!


மாப்பி... கவிதைய எழுதி அனுப்பியிருக்கேன்.. உனக்கு புடிச்ச வரியை மாத்திரம் எடுத்துக்க. புல்லா போடணும்னாலும் போட்டுக்க.. அப்பால அது என்னது கவிஞர் சென்ஷியா.. ஏன் கூட நல்லவரு வல்லவரு பெரியவரு அதயும் சேத்துக்க வேண்டியதுதானே! :))

கவிதை :

சூரிய வட்டம் மிஞ்சும் மின்மினி கூட்டங்களே..
உங்கள் சட்டங்கள் இனி உலகை ஆளட்டும்..!

இந்த விதைகள் இப்போது முளைத்து நிற்கின்றன‌
என்றும் அறுவடைக்கு ஆளனுப்பாதீர்கள்.

உன் ஒரு கையோசையின் சப்தம்
உலகத்தின் எதிரொலி!
பலமாய் ஒலிக்கிறது செவிடன் காதில் சங்கொலி!!

நாளைய பாரதம் நீயென கூறுவார்..
ஜாதிப்போர் உலகத்தில் உன்போல்
சாதிப்போர் இருப்பதனால்
நான் என் பாரதத்தை இன்றே கொடுக்கிறேன்!

கால‌ வரலாற்றில் கசப்புச்சுவ‌டுக‌ள்
காற்றின் துணை கொண்டு ப‌ற்றியெறிய‌ட்டும்.
க‌ட‌ல் வான‌ம் ம‌ண் தூற‌ல்
அதை புதைத்து வைக்க‌ட்டும்.

வல்லரசு கூட்டம் முன்னே
உன் சிரிப்பை காட்டினாய்.
நான் நல்லரசு காண்பேனென்று
நல்லுறுதி ஊட்டினாய்!!

ஊர் ஊராய் கோயில் கட்டி
ஜனம் சாமி தேடுது.
என் கண்முன்னே நல்லதொரு
கடவுள் நிக்குது..!!


சீக்கிரம் கவிஞர்களே கவிதை எழுதி உங்க பதிவில் போடுங்கள்!

எப்படியே இந்த மாசத்துக்கு தேத்தியாச்சி....!!

Saturday, November 17, 2007

இசையின் ராஜா...இளையராஜா


பண்ணைபுரத்து இசை, வெள்ளிக்கிழமை மாலையில் இசை கச்சேரி நடத்த ஷார்ஜா வந்திருந்தது., 87 இசை கலைஞர்கள், SPB, சித்ரா, மனோ, ஸ்ரேயா கோஷல், சாதனாசர்கம், மஞ்சரி, மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, பவதாரணின்னு அருமையான பின்னனி பாடகர்களுடன் அழகான பாடல்களை கூடவே கொண்டு வந்திருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குஷ்பு, ஜெயராமும் வந்திருந்தார்கள் (கொஞ்சம் ஓவராகவே தொகுத்து அருத்துட்டாங்க)

ஜனனி ஜனனி என்று தன் வழக்கமான பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார் இசைஞானி. "எனக்கு நீங்க தரும் பரிசு அமைதியாக இருந்து இந்த நிகழ்ச்சியை ரசிக்க போறிங்க அது தான் நீங்கள் எனக்கு தரும் பரிசுன்னு" எடுத்தவுடனே அன்பு கட்டளை போட்டுட்டார். சொர்கமே என்றாலும் என்ற பாடலில் உள்ள வரிகளை மாற்றி அதற்க்கு பதிலாக கோகினூறு வைரம், அம்மா கையால சாப்பாடு, சாப்டுவேர் இன்ஜீனியர்கள், கோவில் மணி யோசை, பூக்கள்ன்னு இந்தியாவின் பெருமைகளை எல்லாம் சேர்த்து பாடி அந்த அரங்கத்தையே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த பாடலை பாடி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறதுக்கு ஏன்க்கிட்ட என்ன இருக்கு இந்த பாட்டை தவிரன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க கைத்தட்டலில் அரங்கமே குலுங்குச்சி.

சீனியர்ஸ் ஜீனியஸ் தான்னு பாலு சாரும், சித்ரா, மனோ அவர்களும் எந்த சேதாரமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். ராஜபார்வை படத்துக்கு முதல் டியூன் அந்தி மழை பொழிகிறதுன்னு போட்டாராம் ராஜா. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் கமலும், இயக்குனரும் இன்னும் வேற மாதிரி டியூன் வேண்டும் என்று சொல்ல மொத்தம் 30 டியூன் போட்டாராம். கடைசியில எல்லா டியூனையும் கேட்டுட்டு முதலில் போட்ட டியூனே ஓகேன்னு சொல்ல அது தான் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலாக வந்தது என்று பாலு சொன்னார். ஆனால் அந்த 30 டியூனில் ராஜாவுக்கு பிடித்த டியூன் வேறான்று அந்த டியூன் வேறொரு படத்தில் உபயோகப்படுத்தி அதற்க்கு பாலு சாருக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது.

சில பாடல்கள் டியூன் போடும் போது அதில் மற்றொரு பாடலின் ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி திரு. பர்மன் அவர்கள் இசை அமைத்த பாடலின் ஈர்ப்பினால் வந்த பாடல் தான் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் அந்த இந்தி பாடலையும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாலு அவர்கள் அழகாக பாடி காண்பித்தார். மவுனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் இந்தியில் ஸ்ரேயா கோஷலும் தமிழில் பாலு அவர்களும் பாடினார்கள். இந்த பாடல் பாடும் போது இடையில் ஒலியில் பிரச்சனை வர டக் என்று நிறுத்தி விட்டு அந்த பிரச்சனையை சரி செய்த பிறகே அந்த பாடல் மொத்தமாக பாடினார்கள். இது போல் மற்றொரு பாடலிலும் இசை குழுவினர் சரியாக இசை அமைக்காத தால் அந்த இடத்திலேயே அதை சரி செய்து மீண்டும் பாடினார்கள்.





திடிரென்னு மேடையில் தோன்றிய கார்த்திக் ராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் ராஜாவை கலாய்சி (கொஞ்சம் ஒவராகவே) எடுத்துட்டாங்க. யுவன் "என் பாட்டை பாடுங்கன்னு" சொல்ல ராஜாவும் உடனே அறியாத வயசு புரியாத மனசுன்னு பாடி முடிக்க. "இது இல்ல என் பாட்டுன்னு சொல்ல..நம்ம பாட்டு பாடுங்கன்னு சொல்ல டேய் இப்ப எதுக்கு இங்க வந்து நீ கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு" ராஜா கிண்டலுக்கு சொல்ல "இல்ல நீங்க பாடினால் தான் நாங்க போவோம்ன்னு" யுவனும், கார்த்திக்கும் அடம் பிடிக்க அப்படி என்ன பாட்டுய்யா பாட சொல்றான்னு நமக்கும் ஆர்வத்தை கிண்டி விட கடைசியாக மூன்று ராஜாக்களும் சேர்ந்து ராஜா ராஜாதி ராஜனிந்த இந்த ராஜான்னு பாட ரசிகர்களின் மனதில் மூன்று ராஜாக்களும் ராஜியம் செய்தார்கள். அதில் வரிகள் மாற்றி இந்த காலத்துக்கு பாப், ராக், ஜாஸ் தான் பிடிக்கும்ன்னு யுவன் சொல்ல வேண்டா சாமி அதெல்லாம் எனக்கு வராதுன்னு ராஜா ஒரே கும்புடு போட மொத்தத்தில் மூன்று ராஜாக்களும் கலக்கிட்டாங்க.

வந்திருந்த சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும் ரெண்டு மலையாள பாடல்கள் பாடினார்கள்.

பாலு சாரிடம் குஷ்பு ஒரு பாடல் கேட்க நான் அந்த பாட்டு பாடினால் "நீ ஆடவேண்டும் என்று சொல்ல அய்யோ இங்கையா ராஜா சார் அடி பின்னிடுவாருன்னு சொல்ல உடனே பாலு சார் ராஜாவை பார்த்து நீ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்திடுன்னு சொல்ல". அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா.



வழக்கமாக பாலு சார் ராஜாவை புகழ்ந்து சொல்லிட்டு போக வழக்கமாக ராஜா சார் அதெல்லாம் இல்லன்னு சொல்ல "இல்ல அதெல்லாம் உண்மை தான்னு மேடைக்கு பின்னாடி இருந்து பாலு சார் குரல் கொடுக்க". நீ இங்க வா முதல்லன்னு தன் அருகில் நிற்க வைத்து 24 மணிநேரமும் இசையாகவே வாழ்ந்த உலகத்தில் இசை மேதைகளில் பெயர்களை எல்லாம் சொல்லி இவர்களின் முன்னால் நான் எல்லாம் தூசுன்னு ராஜா சொல்ல. "அந்த மேதைகளின் வரிசையில் இந்த தூசுக்கு தான் உட்காரும் தகுதியிருக்கிறதுன்னு ஒரே போடக போட்டார் பாலு சார்."

ஜெயராம் அவர்கள் கமல், ரஜினி, ஜோசுதாஸ் போல மிமிக்கிரி செய்து காண்பித்து மக்களை கலகலப்பாக்கி கொண்டுயிருந்தார்.

மனோவும், சித்ரா அவர்களும் மதுரை மரிக்கொழுந்து வாசம்ன்னு பாடல் பாட அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர வைத்தனர். ஓ பிரியா பிரியா என்ற பாடலை கேட்கும் போது இன்றைய இசை அமைப்பாளர்கள் மனோவின் குரலை தவரவிட்டுவிட்டார்கள் என்ற ஒரு ஏக்கம் வர வழைத்தது.

எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் இந்த மேடையிலும் ரசிகர்ளின் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார்.

சங்கீத ஜாதி முல்லை பாடல் பாடும் போது எப்படிப்பா இந்த ஆளு இவ்வளவு வருஷம் கழிச்சும் அதே மாதிரி, ஏற்ற இறக்கத்துடன் பாடுறாருன்னு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார் பாலு சார்.

பவதாரணி, ஸ்ரேயா கோஷல், திப்பு, மஞ்சரி இவர்கள் எல்லாம் இன்னும் பயிற்சி தேவை என்று சொல்ல வைத்தார்கள். நடுவில் நடுவில் இசையோடு பாடாமல் பாடல் வரிகளை மறந்து மறந்து முழித்தார்கள். அதிலும் திப்பு செய்த தப்பை ராஜா மீண்டும் திருத்தி எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதே இடத்தில் இருந்து மீண்டும் அவரை பாட வைத்தார்.

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ என்ற பாடலை பாடும் போது தந்தைக்கு மகன் தப்பாம பிறந்திருக்கான்யான்னு சொல்ல வைத்தார் விஜய் ஜேசுதாஸ்.

ராசாத்தி உன்னை காணதா நெஞ்சுன்னு பாடலை ஜெயசந்திரன் இல்லாத குறையை மது பாலகிருஷ்ணன் அழகாக நிறைவேற்றினார்.

அம்மாக்கள் பாட நிறைய தாலாட்டு போட்டு வச்சுட்டாரு ராஜா, அப்பாக்கள் பாட ஒரு சில தாலாட்டு தான் போட்டுயிருக்காரு அதுல ஒன்னு தான் தெண்பாண்டி சீமையிலே அந்த பாடலை ராஜா எந்த வித வாத்திய ஒலியும் இல்லமால் மிக அற்புதமாக பாடினார். அவரே விரும்பி பாடினாரா இல்ல குளிரில் நடுங்கும் தன் ரசிகர்களை தாலாட்ட நினைத்து பாடினாரோ என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

இசைக்குழவினர் அனைவரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். ஒரு சில இடங்களில் தவறு நடந்தது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் மேடையில் இசை அமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதிலும் தவறு நடந்த இடத்தில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து வாசிக்க சொல்லும் போது எந்தவித பிசக்கும் இல்லாமல் மிக சரியாக வாசித்தார்கள். புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)



இவரு தான் அருள்மொழி



நிகழ்ச்சி முடியும் நிலையில் பெரும் பாலான மக்கள் அரங்கத்தில் இருந்தனர். ஜெயராம் ஒன்னு சொன்னாரு நானும் இதே ஷார்ஜா அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கேன் 10 மணி மேல அந்த கடைசியில யாரும் இருக்க மாட்டாங்க சார். இப்போ மணி 11 ஆகுது இன்னும் இவ்வளவு பேரு இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் நீங்க தான் சார். உண்மையிலும் உண்மை அது இளையராஜா என்ற ஒரு பெயருக்கு உள்ள சக்தியை நிறுப்பித்து கண்பித்தது கூட்டம்.

நிகழ்ச்சியல் இடம் பெற்ற பாடல்கள்

இது சங்கீதா திரு நாளே - பவதாரணி - இதில் பாடல் வரிகள் மாற்றி பாடினார்கள்

இளைய நிலா பொழிகிறதே - பாலு சார்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா

மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி

காற்றில் எந்தன் கீதம் - ஸ்ரேயா கோஷல் (ஜானகி அம்மா குரலில் கேட்ட பாடல் இந்த அம்மணி எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார்)

பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனாசர்கம்

சென்பகமே சென்பகமே - மனோ

நான் தேடும் செவந்தி பூவிது - ராஜா, மஞ்சரி

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாலு சார் - சித்ரா

மாசி மாசம் ஆளான பொண்ணு - விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், மஞ்சரி

இளங் காத்து வீசுதே - திப்பு, ஸ்ரேயா கோஷ்ல்

நின்னு கோரி வரனும் - சித்ரா

சொர்கமே என்றாலும் - ராஜா, சதனாசர்கம் - இதில் வரிகள் மாற்றி பாடினார்கள் அட்டகாசமாக இருந்துச்சி

அந்தி மழை பொழிகிறது - பாலு சார், சித்ரா

என்ன சொல்லி பாடுவதோ - சதனாசர்கம் - செந்தில் (இசை குழுவில் ஒருவர்)

மதுர மரிக்கொழுந்து வாசம் - மனோ - சித்ரா

மன்றம் வந்த தென்றலுக்கு - பாலு சார் - ஸ்ரேயா கோஷ்ல்

அடி ஆத்தாடி - ராஜா - சித்ரா

சுந்தரி கண்ணால் ஒரு சோதி - பாலு சார், சித்ரா (இசை குழுவினார் அட்டகாசமாக வாசித்த பாடல் இது)

மாங்குயிலே பூங்குயிலே - பாலு சார், சித்ரா

ஆகாய வெண்ணிலாவே - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி

ஒ பிரியா பிரியா - மனோ, சித்ரா

அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பாலு சார்

தென்றல் வந்து தீண்டும் போது - ராஜா, சித்ரா

சங்கீத ஜாதி முல்லை - பாலு சார்

அறியாத வயசு - ராஜா

ஒ இந்த காதல் நெஞ்சசை சுடுக்கிறதே - யுவன்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - ராஜா, கார்த்திக், யுவன் - வரிகள் மாற்றி பாடிய பாடல்

தெண்பாண்டி சீமையிலே - ராஜா

எந்து பரஞ்சாலும் நீ எந்தன் - சித்ரா - மலையாளம்

ஒரு சிரிகண்டால் மொழிகண்டால் அது மதி - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி - மலையாளம்

ராக்கம்மா கையை தட்டு - பாலு சார் - இந்த பாடல் ஏன்தான் மேடையில் பாடினார்களோன்னு இருந்துச்சி ஒரே அருதல் பாலு சார் குரல்

சில பாடல்கள் மறந்து போயிடுச்சிங்க மக்களே

எல்லாம் முடிஞ்சி ஒரு பெரிய நன்றியை சொல்லிட்டு கிளம்பும் போது நேரம் 12.30. நல்ல குளிர், மனசு நிறைஞ்சி இருந்தது, ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறி விட்ட ஒரு திருப்தி.



மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவுகள்

பினாத்தல்கள் - எப்பவும் நீ ராஜா

குசும்பன் - அமீரகத்தில் இளையராஜா

Tuesday, November 13, 2007

அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு....










இனி யாரைப்பற்றி எப்படி என்ன எழுதுவது என்ற யோசனையில் அபி அப்பா தன் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.


"அபி பாப்பாவுல ஆரம்பிச்சு தமிழ்மணத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்க அத்தனை பேர பத்தியும் மொக்க போட்டாச்சு.. அதுவுமில்லாம தங்கியிருக்கற இடத்துல இருந்த பூங்காவுலேந்து தமிழ்மணம் பாக்காத அனானி வழியா ஆல் இன் ஆல் அழகுராஜா வரைக்கும் புராணம் கொடுத்தாச்சு. இன்னிக்கு பேசாம ரூம்ல தங்கியிருக்கற மூட்டப்பூச்சிய பத்தி எழுதிட வேண்டியதுதான்."


என்று தனக்குத்தானே பேசியபடியே மெத்தையின் மேல் ஓட முயன்ற மூட்டைப்பூச்சியை நசுக்கி கொன்றுவிட்டு இதுக்கும் சேர்த்து பதிவுல மன்னிப்பு கேட்டுக்கலாம் என்று சுய சமாதானம் சொல்லிக்கொண்டார்.இந்த சமயத்தில் முகமூடி அணிந்த இரு உருவங்கள் அபி அப்பாவை தூக்கிச்செல்ல, "கொலை... கொலை என்று கதற ஆரம்பித்தார்.

முகமூடி அணிந்த ஒரு உருவம், "இந்த சமயத்துல தமிழ்ல இப்படி கத்தறது தப்பு. இதுக்கு நீங்க 'அய்யோ கடத்துறாங்க' அப்படின்னு கத்தலாம். இல்ல தூக்கிட்டு போறானுங்களேன்னு கத்தலாம். அதுவுமில்லேன்னா யாருக்கும் தெரியாம உங்களை தூக்கிட்டு போறதால இதை திருட்டுன்னு கூட சொல்லலாம். மனித திருட்டைப்பத்தி போஸ்னோலோவேக்கியா டைரக்டர் எடுத்த அந்த இருட்டு படத்துல இப்படி கூட நடந்தது. அப்ப அவன் என்ன சொல்லியிருப்பான்னு நான் இப்ப உணர்றேன். அன்னைக்கு எனக்கு அது உளறலா தெரிஞ்சதுக்கு காரணம் கண்டிப்பா மது மட்டும் இல்லைன்னு நான் சொல்றத கேட்டு எத்தன பேரு என்னை கெட்டவன்னு நினைப்பாங்கன்னு தெரியல... இருந்தாலும்...."

அபி அப்பா - "பேசறது சுத்தமா புரியல... அப்போ இது அய்யனார்தான்."

மற்றொரு உருவம், "ஹைய்யா...! அபி அப்பா உன்னை கண்டுபிடிச்சுட்டாரு... நீ அவுட்டு"

அபி அப்பா அதிர்ச்சியாகி, "அட ஆண்டவா! இது குசும்பனாச்சே... என்ன கொடும சரவணன் இது" அதற்குள் இடம் வந்துவிட, அபி அப்பாவை இறக்குகின்றனர் அய்யனாரும், குசும்பனும்.
அபி அப்பா அந்த இடத்தை ஏறிட்டு பார்க்க தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. இவருக்காக ஏற்கனவே அங்கு தருமி சார், தம்பி, கோபி, சென்ஷி, மின்னல், குட்டி பிசாசு, கண்மணி டீச்சர், டாக்டர் டெல்பின், மங்கை, மை பிரண்டு, காயத்ரி மற்றும் இம்சை அரசி...

அபி அப்பா - "அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே.."

குசும்பன் - "இல்லியே... உங்க கண்ண தொறந்து வச்சுதானே கொண்டு வந்தோம். இன்ஃபாக்ட் நாங்க முகமூடி போட்டுக்கிட்டு வந்ததால எனக்குத்தான் இப்ப லைட்டப் பாத்தா லைட்டா கண்ணு வலிக்குது"

கண்மணி டீச்சர் பெருமிதமாக, "சபாஷ் அய்யனார் & குசும்பா.... சொன்னா மாதிரியே கரெக்டா கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க"

அபி அப்பா, "கூட்டிக்கிட்டு வரல டீச்சர். தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க" மனதிற்குள், 'எல்லோரும் தனித்தனியா வந்தாலே நம்மளை போட்டு வாங்குவாங்க. இத்தன பேரும் இங்க ஒண்ணா சேர்ந்திருக்காங்க. அதுலயும் நம்மள தூக்கிட்டு வந்து... ம்ஹூம்.... இது கண்டிப்பா நம்ம நல்லதுக்கா தெரியல". அதற்குள் கண்மணி அக்கா வாழ்க என்று மைபிரண்டு கோஷம் எழுப்ப துவங்க, இந்த சமயத்தில் இதற்கு சேர்ந்து கோஷம் போடுவதா வேண்டாமா என்று இம்சை அரசியும், காயத்ரியும் குழம்பினர்.

இந்த கோஷம் கேட்டு சென்ஷி, கோபியிடமும் மின்னலிடமும் மங்கை அக்கா வாழ்க என்று கோஷம் போட சொல்லி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தான்.

இந்த வம்பளப்பை கண்ட டெல்பின் மேடம், "நாம இங்க வந்திருக்கறது வாழ்க கோஷம் போட இல்ல. நமக்கு இப்ப அத விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. தம்பி நான் உன்கிட்ட சொன்ன விஷயம் என்னாச்சு?"

தம்பி - "பாவனா படம் போட்ட டிசர்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தேன். அது இது வரைக்கும் என் கையில் வந்து சேரல. ரோட்டுல ஒட்டி வச்சிருந்த ஷ்ரேயா போஸ்டர 18 பேரு நின்னு உத்துப்பாத்துட்டு போனாங்க."

டெல்பின் - "தம்பி..!"

தம்பி - "இதனாலதான்... இதனாலதான்.. பாவனா என் முன்னாடி வந்து என்னை தம்பின்னு கூப்பிட்டா என் நிலைமை என்ன ஆகுறது... அதனால நான் இன்னிலேந்து மச்சான்னு பேர மாத்திக்கப்போறேன். நீங்க சொன்ன வேலையையும் செஞ்சுட்டேன்."

டெல்பின் - "அத மட்டும் தனியா சொல்ல மாட்டியா...!? கூட பாவனாவ வேற இழுத்துக்கறே"

குட்டி பிசாசு - "ஆஹா! மச்சான் கதிர்... மச்சான் கதிர்... சும்மா பேர சொன்னாலே கிக்கு ஏறுதுல்ல.."

மங்கை - "என்னோட அடுத்த படத்துல பாவனா ஹீரோயினா நடிச்சா கதிர்தான் ஹீரோன்னு நான் முடிவு பண்ணிட்டேன்"

அபி அப்பா இந்த மேட்டரை அவசரமாக நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே புகுந்த கண்மணி அக்கா, "என்ன இப்படி எல்லோரும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க. அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க.. ம்.. கோபி என்னப்பா நீயும் இப்படியே நிக்குற!?"

கோபி சற்று விழித்துவிட்டு, "ஸாரி டீச்சர்" என்று சொல்லி சடாரென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கண்மணி - "ஏம்ப்பா என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க.. உங்க அலும்பு தாங்க முடியலையே"

கலங்கிய கண்களுடன் அருகில் வரும் இம்சை அரசியைப்பார்த்து, "எனக்கு உன்னைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கும்மா. என் மனசு கஷ்டப்படுதுன்னு நீ கண்கலங்குறே பார்த்தியா.. அதான் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம்"

இம்சை அரசி - "இல்ல டீச்சர், காயத்ரி விரலால என் கண்ண குத்திட்டா..!"

பேச்சினிடையே புகுந்த மின்னல், "நடுவிரல், கட்ட விரல், சுண்டு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல் தெரியும்.. அது என்ன புதுசா காயத்ரி விரல்?"
டெல்பின், மங்கை, கண்மணி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி,

டெல்பின் - "இவங்களை அடக்கணும்னா அது ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும்"

மங்கை - "இந்த சீன் நிறைய படத்துல வந்திருக்கே... இத மறுபடி வச்சா நல்லாருக்காது.. இப்பவெல்லாம் இந்த மாதிரி சீனுக்கு வடிவேலுவும், விவேக்கும்தான் எண்ட்ரி ஆகுறாங்க. வேற ஏதாவது சீன் இருந்தா சொல்லுங்க"

கண்மணி - "எனக்கு புரிஞ்சிடுச்சு.. அதாவது நான் புரிந்து கொண்டேன்" என்றபடி சற்றுத்தள்ளி நடக்கும் களேபரங்களில் ஈடுபடாமல் தன் செல்போனில் விடாமல் பேசியபடி இருந்த முத்துலட்சுமியின் கையில் போனை பிடுங்கி விட்டு மைக்கை கொடுத்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்றிவிட்டார். போனில் பேசிக்கொண்டிருந்த ஞாபகத்தில் முத்துலட்சுமி மைக் முன், "சரி... நான் அப்புறமா பேசறேன்.. பை" என்று சொல்ல கூட்டத்தில் பயங்கர கைதட்டல் தொடங்கியது.

சென்ஷி சத்தமாக - "இரண்டு விநாடிகளில் மேடைப்பேச்சை முடித்து புதிய சாதனை படைத்தார் - எங்கள் அக்கா முத்துலட்சுமி"

கண்மணி மனதிற்குள், "இதுக்கு நானே தேவல போல..."

கண்மணி அக்கா மேடை ஏறி முத்துலட்சுமியின் காதில் ரகசியமாய் கூற, சட்டென பிரகாசமானது முத்துலட்சுமியின் முகம், "எனவே இங்கு சேர்ந்திருக்கும் பாசக்கார குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நமது பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், தன் பாச மகளின் பெயரால் பதிவெழுதுபவரும், அடுத்த மகனின் பெயரில் புதுப்பதிவு ஆரம்பிக்க நினைப்பவரும், நகைச்சுவையை அளவில்லாமல் கொடுத்துவிட்டு இப்போது மொக்கை போடுபவரும், யார் மேலும் கோபம் கொள்ளாதவரும், யாராவது திட்டினாலும் ரமண மொழியை மனதில் கொண்டு அதை பணிவோடு ஏற்றுக் கொள்பவரும், தீபா வெங்கட் பெயரை அடிக்கடி ஜொள்ளுபவரும், சிறந்த மனிதரும், இந்தியக் குடிமகனும், தமிழனும், மாயவரத்துக்காரருமாகிய நமது அபி அப்பா சுமார் 40 வருடங்களுக்கு முன் இதே தினத்தில்தான் பிறந்தார் என்பது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி.. அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது செல்ல மகள், அன்பு மகன் மற்றும் அவரது தங்கம்மாவோடு பாசக்கார குடும்பத்து உறுப்பினர்களாகிய நாமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் மீது யாரும் கோபம் இருந்தாலும், கோபத்தை இன்று மட்டும் யாரும் அவரிடம் காட்ட வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன். அவர் உயரத்திற்கு கேக்கை வாங்கினால் அதை வெட்ட அவர் மிகவும் சிரமப்படுவார் என்று தோன்றியதால் அவர் கத்தியால் வெட்ட முடிந்த கேக்கை மட்டும் வாங்கி வைத்துள்ளோம். சிரமப்படாது கேக்கை வெட்டி அனைவருக்கும் பங்கு போட்டு கொடுக்க வருமாறு அபி அப்பாவை அன்போடு வரவேற்கிறோம்"

கோபி - " இந்தாங்க்கா சோடா"

அபி அப்பா கண்கலங்கி மேடையேறி கண்மணி டீச்சர் அருகில் வர, "உங்களுக்கு என்னாச்சுங்க.. உங்க கண்ணையும் யாராச்சும் குத்திட்டாங்களா?"

டெல்பின் - "சேச்சே... இதுக்கு பேரு ஆனந்த கண்ணீரும்மா"

மங்கை - "ஓ அப்படியா..! அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல கேக்க கட் பண்ணுங்க"

அபி அப்பா - "என்னங்க இதுல இவ்வளவு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கீங்க... எனக்கு அத்தனை வயசாகலை"

மங்கை - "உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. யாரு மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்படியே எல்லாத்தையும் வச்சிட்டோம். நீங்க எல்லாத்தையும் பத்த வச்சு, ஊதி அணைச்சுட்டு கேக்க வெட்டுங்க போதும்"

இது ஆகற விஷயமில்லை என்ற முடிவுக்கு வரும் அபி அப்பா, "மங்கை அக்கா.... செண்ட்டிமெண்ட்டா பார்த்தா எரியற விளக்க அணைச்சிட்டு பர்த்டே கொண்டாடனா அது அவ்ளோ நல்லதா படல. அதனால நம்ம குடும்பத்துல எல்லோரும் எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தத நான் பத்திரமா எரிக்காம வச்சுக்கறேன்"

அய்யனார் - "என்ன வேணாலும் செய்ங்க.. முதல்ல கேக்க வெட்டுங்க"
அபி அப்பா கேக்கை வெட்ட துவங்க, கோரஸாய் குடும்பத்தினரின் குரல்.......



"அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

நவம்பர் 13ந்தேதி இன்னைக்கு..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்...."




சிறப்பு துளிகள்:

விழாவில் அபி அப்பாவை வாழ்த்தி மற்றவர் உதித்த வார்த்தை முத்துக்கள்

டாக்டர் டெல்பின்:- என்னைக்கும் நல்லாயிருக்கணும்

இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்

காயத்ரி:- அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் அழுகாச்சி கவிதை எழுதப் போவதில்லை

மை ஃபிரண்ட் ; மீ த பர்ஸ்ட்டு பல்லாண்டு வாழ்க ....வாழ்த்துக்கள்

தம்பி:- எங்கள் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு விருந்தினராக பாவனாவை வரவழைக்காதது யார் சதின்னு எனக்கு தெரியல

அய்யனார்:- எவ்வளவோ சொல்லணும்னு தோணுது. இப்ப நான் என்ன சொல்றதுன்னு எனக்கே புரியாததால நான் வாழ்த்த மட்டும் சொல்லிக்கறேன் (பயங்கர கைதட்டல்)

மின்னல் ; இங்க ஒர்ஜினலா சொல்லனுமா அனானி எல்லாம் கிடையாதா சரி ஓகே பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா

குட்டி பிசாசு ; அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நான் பதிவு எழுத போகிறேன். வாழ்த்துக்கள் அண்ணே

குசும்பன் ; ன்றேகக்லில்சொ ம்டுட்ம தத்ழ்வா லதாதயாரிபு.....

அபி அப்பா ; யோவ் என்னையா சொல்லற திட்டுறது கூட புரியுர மாதிரி திட்டுய்யா...

குசும்பன் ; அய்யனார் சொன்னதை அப்படியே திருப்பி படியுங்கள்

மை ஃபிரண்ட் ; யப்பா சாமி ......பதிவுக்கு தான் எதிர் பதிவுன்னா வாழ்த்துலையுமா ! ! !

கண்மணி:- அவரது பிறந்தநாள் பரிசாக ஒரு புது டெம்ப்ளேட்டை அவருக்கு பரிசாக அளிக்கின்றேன்

கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)

சென்ஷி:- //கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)// டபுள் ரிப்பீட்டே :))))

முத்துலட்சுமி: நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பேச ஆரம்பிச்சு அண்ணனோட அடுத்த பிறந்தநாள் வந்துடுச்சுன்னு யாரும் சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயத்துல நான் இப்ப பேச்ச நிறுத்திக்கறேன்

மங்கை:- சென்ஷி, கோபி ரிப்பிட்டே போடுறத இன்னியோட நிறுத்திக்குங்க... அவ்வளவுதான் சொல்வேன்

கோபி & சென்ஷி ; அதுக்கும் ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

எழுதி ஆடியது ; கோபி & சென்ஷி