
பாறைப்பட்டியில் இருந்து தொடங்கி ராஜஸ்தான் சென்று மறுபடியும் பாறைப்பட்டியிலேயே முடியுது படம். மழைன்னா கருப்பா சிவப்பான்னு கேட்குற வானம் பார்த்த ஊர் பாறைப்பட்டி. கூத்துக்கட்டி பிழைப்பவர் பிரஷாந்த் (கதிர்) அதில் வரும் பணத்தை வைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் உதவுகிறார். குடிக்க கூட நீர் இல்லாத அந்த கிராமத்தை விட்டு பல குடும்பங்கள் பக்கத்து கிராமங்களுக்கு செல்கின்றனார். இந்த நிலையில் ஊர் மக்கள் அனைவரையும் சேர்த்து கிணறு வெட்ட முயற்சி செய்கிறார். கிணறு வெட்டுபவரின் மகள் பூஜா (மறிக்கொழுந்து). கிணறு வெட்ட வெட்ட வெறும் கள்ளும், மண்னும்தான் வருகிறது. திடீரென்று ஏற்படும் விபத்தில் மறிக்கொழுந்துவின் தந்தை (கிணறு வெட்டுபவர்) இறந்து விடுகிறார் அதனால் கிணறு வெட்டும் முயற்ச்சியும் நின்றுபோகிறது.
ஊர் மக்கள் அனைவரும் பிழைப்புகாக ராஜஸ்தான் போகிறார்கள். அங்கு அவர்கள் அனைவரும் கொத்தடிமையாக்கப்படுகிறார்கள். மொழி புரியாத ஊர், பலத்த பாதுகப்புகள் நிறைந்த பகுதி, குழந்தைக்கு கூட பால் தர மறுக்கின்ற காவலர்கள் என்று அடுக்கடுக்கான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட இடத்தை விட்டு ஊர் மக்கள் அனைவரையும் மீண்டும் தன் சொந்த ஊருக்கே கூட்டி செல்கிறார் என்பதுதான் தகப்பன் சாமியின் கதை.

பிரஷாந்த் ஒரு பொறுப்புள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். முழுநேரமும் காதலியின் காதலில் விழுந்து விடமால் கிராமத்து முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார், அந்தவகையில் இந்த படம் அவருக்கு வித்தியாசமான படம் தான். நடிப்பு, சண்டை மற்றும் பாடல்கள் காட்சிகளில் வழக்கம் போல் நன்றாகவே செய்த்திருக்கிறார்.
வறண்டகிராமத்தையும், வறண்டு போன பாலைவனத்தையும் அப்படியே நம் கண்களுக்கு முன் கொண்டுவந்து நிருத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். நம் முகத்திலும் வியர்வை துளிகள் எட்டிபார்க்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் பாடல் காட்சி கிராமத்து மக்களுக்கு உண்மையிலேயே விருந்து.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துயிருக்கிறது. சில பாடல்கள் படத்தின் காட்சிகளை விளக்குகின்றது. பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடலின் வரிகளை சிதைக்காத இசை கருவிகளும், குரல்களும் தந்தற்கு ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பாரட்டுக்கள்.
கதை, திரைகதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்தையுத் செய்திருக்கிறார்
ஷிவ ஷண்முகன். பல இடங்களில் வசனங்களும், பாடல் வரிகளும் படத்தின் சூழ்நிலையை விளக்குமாறு செய்திருக்கிறார். சொந்த நாட்டிலேயே கொத்தடிமை வாழ்க்கையின் கொடுமைகளை காட்சிகளை காணும் போது இதயம் கனக்கிறது.

பாலைவனத்தில் ஒட்டக பந்தயத்தில் ஒட்டகத்தை வேகமாக ஒடவைக்க குழந்தையின் அழுகையை பயன்படுத்துவது. அதற்காக அந்த குழந்தையை சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். வறண்ட கிராமத்தில் காட்டிய கதையின் வேகம் பாலைவனத்தில் இல்லை என்று தோன்றவைக்கிறது. பணத்தைவிட மனிதனும், மண்ணும் தான் முக்கியம் என்று கூறியிருக்கிற ஷிவ ஷண்முகத்தை உண்மையிலேயே பாரட்ட வேண்டும்.
வறண்ட பூமியும், கொடுமைகளும் நிறைந்த மக்களைப் பற்றிய சினிமா என்பாதால் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து இது ஒரு மாறுபட்ட படம் தான். மசால கலவைகள் அற்ற படம் என்பதால் வசூல் பட்டியலில் இடம் பிடிக்க முடியாதப் படம்.

இந்த படத்தில் நமீதாவும் (காட்டமல்) நடித்திருக்கிறார் இதனால் கூட இந்த படம் ஒரு மறுபட்ட படம் என்று கூறலாம்.