Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Tuesday, June 02, 2026

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)


தன்னோட 83 வயதில் விடாமுயற்சியுடன்....
அர்ப்பணிப்புடனும்,
நேர்மையுடனும்
தான்னோட ரசிகனுக்கு இசையின் 
புதிய அனுப்பவங்களை கொடுத்து கொண்டிருக்கும்

 இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்

சிம்பொனி நாயகன் 
இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 83வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!


நன்றி : புகைப்படம் Pannaipuram Official

இசை தெய்வம் மாரி செல்வராஜ்யுடன்
மஞ்சணத்தி

Monday, June 02, 2025

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

  

"எனக்கும் AIக்கும் தான் போட்டியே"

 என்று தன்னோட 82 வயதில் விடாமுயற்சியுடன்....அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் தான்னோட ரசிகனுக்கு இசையின் புதிய அனுப்பவங்களை கொடுத்து கொண்டிருக்கும் .......

  இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்

சிம்பொனி நாயகன் 
இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 82வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

நன்றி : புகைப்படம் திரு. மு.உதயா

சமீபத்தில் இசை தெய்வம் அளித்த போட்டிகளின் சில...
https://www.youtube.com/watch?v=P7XhG8omPWw&list=LL&index=16


https://www.youtube.com/watch?v=I5ydr9ULagU&list=LL&index=14


https://www.youtube.com/watch?v=sPV2vDUaT90&list=LL&index=15




Sunday, June 02, 2024

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

 

மற்றவர்களை கவனிப்பது 
என்னோட வேலை இல்லை!

என்னுடைய வேலையை கவனிக்கிறது என்னுடைய வேலை.
.......
என்று தன்னோட ரசிகர்களுக்கு இந்த வயதிலும் செய்யும் தொழிலுக்கு எப்படி நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்று நினைவு கூறும் வரிகள் தான் மேல சொல்லப்பட்டிருப்பது.

  இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்



இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 81வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

சமீபத்தில் இசை தெய்வம் தான் முடித்த சிம்பொனி பற்றி....

புகைப்படம் நன்றி : www.villart.in



Friday, June 02, 2023

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)


காத்தில் வரும் புழுதியப்போல் 
நம்மத் தூத்துகிற ஊரு இது.. 
துக்கத்தில துவண்டிருந்தா 
அது தூக்கிவிட நெனைக்காது.. 
முன்னேறிப்போக முட்டுக்கட்ட ஏது 
பின் திரும்பிப் பாக்காதே..

உந்துணைக்கு நாந்தான்.. 
எந்துணைக்கு நீதான் 
என்றும் இது மாறாதே..
என்று தன்னோட ரசிகர்களை நினைவு கூறும் வரிகளிளும்  இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்

இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 80வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

சமீபத்தில் இசை தெய்வத்திடம் கிடைத்த பாடல் காணொளி பார்த்து புரிந்து மகிழுங்கள்.....
பாடலாசிரியர்: திரு. சுகா
உன்னோடு நடந்தா பாடல் வரிகள்

https://youtu.be/-wG_wCQFjY4

பாடலாசிரியர்: திரு. இசைஞானி இளையராஜா
வழி நெடுக காட்டு மல்லி பாடல் வரிகள்

https://youtu.be/n6NkluQDUbU
புகைப்படம் நன்றி : 



Thursday, June 02, 2022

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)



"நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்".....


என்று தன்னோட ரசிகர்களை நினைவு கூறும் வரிகளிளும்  இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்




இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 79வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

சமீபத்தில் இசை தெய்வத்தின் இசை ரசிகளின் பேட்டிகளின் காணொளி பார்த்து புரிந்து மகிழுங்கள்....

நன்றி
Youtube Channel : Mercury




Wednesday, June 02, 2021

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

 

"பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே...."

என்று தன்னோட இசை மூலமாக தான் ரசிகர்களுடன் இணைந்து  உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்


இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 78வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

மேலே குறிப்பிட்ட பாடலை திரு. ஹரிகரனுடன் இணைந்து தான் ரசிகர்களை பார்த்து பாடும் இசை தெய்வம்


புகைப்படம் நன்றி : திரு. Kabilansoundharajan 
Photos வீடியோ Youtube 

Tuesday, June 02, 2020

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)


"என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயேநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது".....என்று தன்னோட ரசிகர்களை நினைவு கூறும் வரிகளிளும்  இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்


இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 77வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

சமீபத்தில் இசை தெய்வத்திடம் கிடைத்த பாடல் காணொளி பார்த்து புரிந்து மகிழுங்கள்.....

படம்; சைக்கோ
இயக்கம்; திரு. மிஷ்கின்
புகைப்படம் நன்றி : திரு. Andrew RS (@ir_bakthan) வீடியோ Youtube 

Sunday, June 02, 2019

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

தனியானால் என்ன?  துணை இங்கே; நான் பாடும் பாட்டுண்டு என்று....தான் இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்



இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 76வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

சமீபத்தில் இசை தெய்வத்திடம்..."உங்கள பொறுத்தவரைக்கும் இளையாராஜாவை இதுதான் Define பண்ணுதுன்னு ஒருவார்த்தை சொல்லமுடிந்தால் அது என்னவாக இருக்கும்" அதற்கு இசை தெய்வம் கொடுத்த பதில் இந்த காணொளி பார்த்து புரிந்து மகிழுங்கள்.....

https://www.youtube.com/watch?v=7vgNPLi-_yc
புகைப்படம் நன்றி : இணையம்


Saturday, June 02, 2018

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்து, 1000 திரைபடங்களை கடந்து, பத்ம விபூஷண் விருதும் பெற்று, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்


இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 75வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
புகைப்படம் நன்றி  ; www.villart.in 

Friday, June 02, 2017

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்து, 1000 திரைபடங்களை கடந்து அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்

இசை தெய்வம் 
"இசைஞானி இளையராஜா" 
அவர்களின் 74வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
நன்றி; படம் ; MR. JOSEPH RAJA

Thursday, June 02, 2016

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்து அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்


இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 73வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!

இசை தெய்வம் "1000" விழாவில்
விஜய் டிவியில் நடந்த இசை தெய்வத்தின் பாராட்டு விழா சில தொகுப்புகளுடன் 
http://www.hotstar.com/tv/ilaiyaraaja-aayiram/7361

Tuesday, June 02, 2015

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)


இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 72வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!


இசை தெய்வத்தின் இசையில் ஷாமிதப் பிண்ணனி இசை தொகுப்பு
நன்றி ; youtube
https://www.youtube.com/watch?v=V0DCHyTvvJk


Monday, June 02, 2014

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)


இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் 

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 71வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!





இசை தெய்வம் நடத்திய நிகழ்ச்சிகளின் மொத்த தொகுப்பு

https://www.youtube.com/playlist?list=PLv_gMOB_8Qj3VhUo3VWmBgRs1TM12bLGx

Sunday, June 02, 2013

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)


இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் 

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 70வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!




இசை தெய்வம் பற்றிய சிறிய தொகுப்பு

https://www.youtube.com/watch?v=1TVqWLH-nx4


Saturday, June 02, 2012

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

How to name it 2012 இசை நிகழ்ச்சியில் (நன்றி இசைஞானி பக்தர்கள்)...."மைக்கைப் பிடித்த அனில், அனைவருக்கும் வணக்கம் சொல்லி கேட்ட முதல் கேள்வி.. “இங்கு எத்தனை பேர் ராஜா பக்தர்கள்?” அந்தக் கேள்விக்கு பதிலாக அரங்கத்தில் நடந்ததென்ன என்று விவரிக்கத் தேவையில்லை. தொடர்ந்து அனில், ‘பக்தர்களிடம் அதிகம் பேசவேண்டியதில்லை.  நான் பேசுவதை விட (Piano’வைக் காட்டி) இது பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று கூறி Piano’வில் அமர்ந்து ‘தென்பாண்டிச் சீமையிலே’ Prelude’ஐ துவக்கியதும் கூட்டத்தில் இருந்து விசில் பறந்தது. தொடர்ந்து அவர் Piano’வில் ‘மௌன ராகம்’ BGM’ஐ இசைக்க விசில்கள் வேகமெடுத்தன."....இதுபோல் எங்கேனும் இசை தெய்வத்தின் இசையை பற்றி ஏதோ ஒரு பக்தன் சொல்லிக்கொண்டு தான் இருப்பான்/இருப்போம்/இருப்பேன்....

இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் 

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 69வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!


நீ படைத்த பல தாலாட்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த (எனக்கான) தாலாட்டு...ஆலோலம் பாடி


மகள் நேயா என்ற பதிவில் வசுமித்ரா அவர்கள் இசை தெய்வத்தை பற்றி எழுதிய கவிதை

பேரரசனின் ஒற்றை வயலின்......

Tuesday, January 03, 2012

என்றென்றும் ராஜா - ஆசிர்வதிக்கப்பட்டவன்


என்றென்றும் ராஜா - மீண்டும் இசை தெய்வம் 6 வருடங்கள் கழித்து 28 டிசம்பர் புதன் அன்று சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கில், சரியாக மேடையில், தெய்வத்தின் தரிசனத்துக்கு 20 நிமிடம் முன்னால் ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைத்தது; யார் செய்த புண்ணியமோ! பிரார்த்தனையோ தெரியவில்லை. பின்னால் நண்பர்கள் வருகிறார்களா இல்லையா என்பதை எல்லாம் மறந்து நான் படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டேயிருந்தேன்.... அந்த ஓட்டத்திற்க்கும் பதட்டத்திற்கும் கூட நம் தெய்வம் எந்த படத்திலெனும்ம் பின்னணி போட்டு வைத்திருப்பார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது நம்ம ஹாய் செல்லம் - பிரகாஷ் ராஜ் ;-) கூடுதல் போனஸ் - சும்மா பின்னிடுச்சில்ல ;-)


இசை தெய்வத்தைப் பற்றி ஒரு வீடியோ முடிந்தவுடன்.. கதவுகள் திறந்தவுடன்... அரங்கத்தில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களின் உணர்ச்சி வெள்ளத்தில்,  கைத்தட்டலில் அரங்கமே குலுங்க... ஒரே ஜெப மொழியாக இசை தெய்வத்தை அழைக்க... அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் இசை தெய்வம் ஒரு வெள்ளை தீபம் நடந்து வருவது போல வந்து அனைவரையும் வணங்கியது.. ஆசிர்வதித்தது.... வந்திருந்த 7000+++ ரசிகர்களில் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன். 

"என் நண்பனே!!! இங்கே வா.." என அழைத்தவுடன், அவருடைய நண்பன் ஆர்மோனியப் பெட்டி மேடைக்கு கொண்டுவரப்பட்டது. "நீங்க எல்லாம் உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க. ஆனால் நான் நின்னுக்கிட்டு இருக்கேன். நான் இங்கே நிற்பது போல உங்க மனசிலும் எப்போதும் என்னோட இசை நிற்கிறது. அதுவே எனக்கு போதும்" என்று சொல்லிவிட்டு நேரடியாகவே ’ஜனனி ஜனனி’யில் அனைவரையும் உருக்கிவிட்டார். அதில் ஒரு சிறப்பு உண்டு - அதை சின்னத்திரையில் காண்க ! (இந்த மாதிரி நிறைய சின்னத்திரையில் காண்க வரும்.)

"அம்மாக்கள்தான் தாலாட்டு பாடுவாங்க.... ஆனால் நம்ம ராஜா சார் பல அம்மாக்களுக்கே தாலாட்டு பாடியிருக்கிறார் அதனால் முதல்ல அம்மா பாட்டு" என்று பிரகாஷ் சொல்ல. படம் மன்னன் - பாடல் - அம்மா என்று அழைக்காத... திரைப்படத்தில் பாடியவரே பாடினார் ! ஆனால் 100% சரியாக பாடினாரா என்பது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தப் பாடலும் அம்மாப்பாடல்தான் - விட்டால் முழு நிகழ்விலும் அம்மாப்பாடல்களே பாடியிருக்கலாம் அத்தனைப் பாடல்கள் இருக்கிறது! இருந்தாலும் பாலு சாருக்கும் ஒரு அம்மா பாட்டு - படம் - தூங்காதே தம்பி தூங்காதே - பாடல் - நானாக நானில்லை - திரைப்படத்தில் பாடியவரே பாடினர் - இசைத்தாயிடம் வரம் பெற்ற குழந்தைகளில் இவரும் ஒருவர்! என்ன குரல்!! 100+++% அப்படி ஒரு சுத்தம்!!!

"சிம்ஃபொனி என்றால் என்ன சார்" அப்படின்னு பிரகாஷ் கேட்க.... அதை சொல்வதை விட செய்துவிடுகிறேன் என்று ஒரு சிறு சிம்ஃபொனி இசை வாசிக்கப்பட்டது. இசை தெய்வம் அந்த இசைப் பற்றி இப்படிச் சொன்னார்.

"சிம்ஃபொனி என்பது ஒரே நேரத்தில் 5 கவிஞர்கள் கவிதை சொல்வது போல" என்று சொல்லிவிட்டு அந்த இசையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வாசிக்கச் சொல்லி மீண்டும் தனித்தனியாக வாசித்த இசைகள் அனைத்தும் ஒன்றாக இணையும் போது எப்படி வருகிறது என்று இசைத்து காட்டினார்கள். மிகவும் அற்புதமான ஒன்று ! இந்த இசை இசைத்து கொண்டு இருக்கும் போது தெய்வம் மைக்கை கையில் எடுத்தது ஏதோ பேசப் போகிறார் என்று நினைத்தோம்...ஆனால் அவர் குரலில் மென்மையாக ”இதயம்ம்ம்ம்ம்ம் போகுதே.....” என்று பாட ஆரம்பித்தார்.....அனைத்து ரசிகர்களின் இதயமும் அவர் பின்னால் போய்க்கொண்டு இருந்தது. இந்த பாடலுக்கு இப்படி ஒரு சிம்ஃபொனி இசையை கொடுத்து அசத்திவிட்டார்.


பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போது ’ஆகா ஏதோ பேச போறாரா’ன்னு நினைத்தோம்.. ஆனால் அவரோ ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று ராஜாவைப் பார்த்துப் பாட ஆரம்பித்தார். என்ன ஒரு குரல் அது....மனுஷன் எங்கும் பிசகாமல் அப்படி பாடி முடித்தார். நன்றி சார் ;-)

’பருவமே...’ பாடலில் வரும் ஷூ ஒசை எப்படி கொண்டு வந்தார்கள் என்பதை இசை தெய்வம் சொன்னார். அந்த ஷூ இசை எப்படி வாசித்தார்கள் என்பதை சின்னத்திரையில் காண்க !

இசை தெய்வம் முதலில் எழுதிய பாடல் - அவருக்கு அவரே எழுதிய பாடல் போன்ற ஒரு பாடல் - எனக்கு என்றென்றும் பிடித்தப் பாடல் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடல் - தெய்வத்தின் குரலில் அதுவும் நேரடியாகக் கேட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

இசைஞானி நிகழ்ச்சி நடக்கிறது, இந்த நேரம் பார்த்து இந்தாளு ஊரில் இல்லையேவென வருத்தப்பட்ட நெஞ்சங்களுக்கு இடையே திடீரென்று திரையில் தோன்றியது அந்த உருவம். இசை தெய்வத்தின் பலகோடி ரசிகர்களின் குரலாக ஒளி, ஒலியுடன் திரையில் தோன்றியது. ஒளியும் ஒலியும் அவர் பார்த்துக்கொள்ள அதற்கு உயிரை இங்கோ நாங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தோம். மேடையில் பேசிய கலைஞன், விஐபி, சகஞானி நம்ம கலைஞானி மட்டுமே.

படம் ஹேராம் என்றதும் அதிர்ந்தது அரங்கம் - அந்த பாடல் பாடிக்கொண்டு இருக்கும்போதே நடுவில் நின்று கொண்டு இருந்த இசைஞானியை காணவில்லை எங்கே என்று தேடினால் அவர் அவரோட வேலையை செய்ய போயிட்டார். அவர் என்ன செய்தாலும் நமக்கு அது விருந்து தான்...... ’நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ பாடலில் வரும் அந்த பியனோ இசைக்கு மேடையில் இசைஞானியே பியனோ வாசித்தார். ரசிகர்களின் உற்சாகத்தைச் சொல்ல வார்த்தை இல்லை! பாடகர் ஹரிஹரன் சிறு சொதப்பல்கள் செய்தார்.

என் இனிய பொன் நிலவே - அந்த வெள்ளை நிலவு கூட வானத்தில் இருந்து இறங்கி வந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அந்த அளவுக்கு பின்னி எடுத்துடார் ஜேசுதாஸ்!

என் இனிய பொன் நிலவில் அசத்தியவர் பூவே செம்பூவே’வில் சின்ன இடத்தில் இசை முடியும் முன்பாகவே பாடிவிட்டார். விடுவோமா நாங்க.... உடனே கொடுத்தும்ல்ல குரலை..... அவ்வளவுதான் டக்கென்று ஜேசுதாஸ் கையைப் பிடித்த இசைஞானி இருங்கண்ணே’வென்று சொல்ல மீண்டும் இசை வாசிக்கப்பட்டது.. ஆனால் மீண்டும் ஜேசுசார் அதே தவறை செய்தார்..... ரசிகனே இவ்வளவு துல்லியமாகக் கவனிக்கும்பொழுது விடுவாரா நம் படைப்பாளி.... மீண்டும் வாசிக்கச் சொன்னார்.. வாசித்தார்கள்.. மீண்டும் பிழை.... அப்பொழுதுதான் ஜேசுசாருக்கு தான் செய்த தவறு புரிந்தது. அம்முறையில் சரியாக பாடியும் முடித்தார்.

ஆனால் மேடையை விட்டு ஜேசுசார் நகரவில்லை. "தவறு என்னோடதா இல்லை அவர்களோடதா (ஆர்கெஸ்ட்ரா)” என்றார். "உங்களோடதுதான்" என்றதும் ”அப்படின்னா எனக்காக மீண்டும் வாசிங்க.. நான் பாடிடறேன்” என்றார். மீண்டும் அதே ஆர்ப்பரிக்கும் இசையுடன் மிக மிக மிக சரியாக வாசித்தனர் ஆர்கெஸ்ட்ராவினர். மிக அற்புதமாக பாடி முடித்தார் ஜேசுசார். முடித்தவுடன் "சரியாக வரும் வரை எத்தனை டேக் வேணும்ன்னாலும் போவோம் நாங்க” என்றார். இதன் மூலமாய் மூன்று முறை அந்தப் பின்னணி இசையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது! - உண்மையில் மனதாற வாசித்தவர்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும். வரம் பெற்றவர்கள்! என்ன ஒரு துல்லியம்! நிறுத்து என்றால் நிறுத்தினார்கள்.. வாசி என்றால் மிக மிக மிக சரியாக விட்ட இடத்தில் இருந்து அவர்கள் செய்து காட்டிய மாயம் இருக்கிறதே யப்பா....!! என்ன செய்வது வாத்தியார் அப்படி! வரம் பெற்றவர்கள் இசைக்கலைஞர்கள் மாத்திரமில்லை.. அந்த இசைக்கருவிகளும்தான்.. வயலின் இருக்கிறதே.... விடுங்க.. பாருங்க... ! தயவு செய்து  ஜெயா டிவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்ப வேண்டும்.

’ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்தப் பாடல் மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

’நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’யில் சரியாகப் பாடாத ஹரி, ’என்மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே’ பாடலில் 200% மிக அற்புதமாகப் பாடினார்.

’மடை திறந்து... தாவும் நதியலை’ - ஆர்கெஸ்ட்ராவும் + பாலு சாரும் கூட்டணியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சினார்கள்! ரசிகர்களை எவ்வளவு உற்சாகத்துக்கு கொண்டு போக முடியுமோ அந்த அளவுக்கு கொண்டுபோனது இந்தப் பாடல். சினிமா வசனம் போல, ”சும்மாவே ஆடுவோம்.. இதுல கால்ல சலங்கையும் கட்டிவிட்டது” இந்தப் பாடல். அதுவும் அதில் வரும் வரிகள்.... சொல்லவா வேண்டும் ஒவ்வொரு ராஜா ரசிகனும் கொண்டாடிய பாடல்.

இந்தியில் இருந்து வந்த பால்கி, இசை தெய்வத்தோட பின்னணி இசை பற்றி ஒரு தொகுப்புடன் சொன்னார். சின்னத்திரையில் போடும் போது கண்டிப்பாக பாருங்கள். ஏன் பின்னணி இசைக்கு இசைஞானி தான் சரி என்று உருகி உருகி பேசுகிறார்கள் என்பது இதுவரை புரியாதவர்களுக்குக் கூட புரிந்தாலும் புரியலாம்.

அழகர்சாமியின் குதிரை படத்தின் பின்னணி இசை வாசிக்கப்பட்டது.

"சார் இப்போ உங்க செல்லம்" என்றவுடன் - இசைஞானி "இளையராஜாவோட இளையராஜாவா" என்று செல்லமாக அழைத்தவுடன், ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ஆகா இந்த குட்டி சாத்தான் ஏதாச்சும் சித்து வேற செய்யுமோவென பயமும் வந்தது. நல்லவேளையாக பாடிய 2 பாடல்களும் எந்த வித சொதப்பலும் இல்லாமல் பாடினார்.

ஏதோ மேகம் ஏதோ தாகம் - இளம் பாடகர் கார்த்திக் மிக அற்புதமாக பாடினார். அதே போல ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இளம் காற்று வீசுதே பாடினார்.


ஜேசுதாஸ் + பாலு சார் இருவரும் அதுவும் கூடவே இசைஞானி இப்படி ஒரு கூட்டணி இருக்கும் போது அந்த பாடல் பாடாமல் இருப்பார்களா! காட்டுக்குயிலு - இருவரும் மிக மிக அற்புதமான பாடினார்கள். ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம்.

கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் பதிவின் போது நடந்த சம்பவங்களை ஜேசுசாரும் இசைஞானியும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பூங்காற்று புதிதானது, கேளடி கண்மணி பாடகன் சங்கதி, யார் தூரிகை என்ற பாடல்களில் சிலவரிகள் பாடினார்கள். வாசித்த அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்தோம். கூடவே கிட்டார் இசைக்கலைஞர் (சரியாக அவர் பெயர் நினைவில்லை) பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் இசைஞானி நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக புத்தாண்டை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் என்றொன்றும் "தமிழனின் புத்தாண்டு பாடல்" பாடினார்கள். சும்மாவே பாலு சார் அசத்துவார். இந்தப் பாடலுக்கு சொல்லவா வேண்டும். மனுஷன் அணு அணுவாக பாடி பின்னிட்டார்.

என் சோகம் என்னோடு தான் என்ற வரிகளுக்கு முழு அர்த்தமாக நின்றார் இசைஞானி. எந்த ஒரு நிலையிலும் ஒரு சின்ன அசைவிலும் கூட தன் மனத்தில் உள்ள வலியையோ இல்லை வருத்தத்தையோ ஒரு துளி கூட காட்டிக்கொள்ளாமல். எங்கிருந்தோ எப்படி எல்லாமோ பல வலிகளை கடந்து சுமந்து வந்திருக்கும் ரசிகனுக்கு என்ன தேவையோ அவன் எதை எதிர்பார்த்து வந்திருப்பான் என்பதை உணர்ந்து அதை முழு தரத்துடன் கொடுப்பதில் என்றென்றும் ராஜா எங்கள் இசை தெய்வம் என்பதை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியே !

வந்திருந்த அனைத்து ரசிகர்களையும் பார்த்து ”சரி பார்ப்போம் வருகிறேன்" என்று கையை அசைத்து அந்த வெள்ளை தீபம் நகர்கிறது. மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று அந்த அமைதியையும் பாதுகாப்பையும், கதகதப்பையும் கிடைக்கப்பெற்ற எந்த மனுஷனாவது போதும் என்று சொல்லிவிட்டு விலகுவானா! அப்படியொரு சூழ்நிலையில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களை நகர்த்தினார் இசை தெய்வம். அங்கு வந்திருந்த பல ஆயிரம் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு இசை தெய்வத்தின் இசை இரவு மட்டுமே ! மற்றபடி என்றென்றும் இசை தெய்வத்தின் ரசிகர்களின் வாழ்க்கையில் எல்லா இரவுகளும் இசைஞானியுடன் தான் !

நிகழ்ச்சியை நடத்திய இயக்குனர் சுபாஸ்ரீ தணிகாசலம் தனது Facebookயில் இப்படி சொல்லியிருக்கிறார்

"oru aindhadi vaamanan netru isaiyaal ulagai alandhaar!! avar pidiththa kudaiyil oru kambiyaai naan... 45 days of practice, 5 hours of ecstasy ...15 years of media and music reality shows has culminated to the best moment of my life. i have to re post my previous message as i am speechless "MUSIC IS MY RELIGION and ILAYARAJA IS GOD"

பாடல்கள் தொகுப்பு

1) ஜனனி ஜனனி - இசைஞானி
2) அம்மா என்றழைக்காத - ஜேசுதாஸ்
3) நானாக நான் இல்லை தாயே - பாலு
4) இதயம் போகுதே - சிம்ஃபொனி ஸ்பெசல்
5) பருவமே - சித்ரா - பாலு
6) இதயம் ஒரு கோவில் - இசை தெய்வம்
7) நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி - ஹரிஹரன்
8) என் இனிய பொன் நிலவே - ஜேசுதாஸ்
9) கண்மணியே காதல் கற்பனை என்பது - பாலு
10) ஆயிரம் மலர்களே மலருங்கள்
11) புத்தம் புது காலை - சித்ரா
12) சின்னக்கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளி கிருஷ்ணா
13) விழியிலே மலர்ந்தது - பாலு
14) பூவே செம்பூவே - ஜேசுதாஸ்
15) ஒரு ஜீவன் அழைத்தது - இசைஞானி, சித்ரா
16) ஏதோ மேகம் ஏதோ தாகம் - கார்த்திக்
17) மடை திறந்து - பாலு
18) ஒரு ராகம் பாடலோடு - ஜேசுதாஸ்
19) சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் - ஹரிசரண்
20) நான் தேடும் செவ்வந்தி பூவிது
21) கும் சும் கும் - பா படம் - பவதாரணி
22) ஆயிரம் தாமரை மொட்டுக்களே - பாலு
23) பூங்கதவே தாழ் திறவாய் - தீபன் சக்கரவத்தி - உமா ரமணன்
24) சுந்தரி கண்ணால் ஒரு செய்தி - பாலு, சித்ரா
25) இளங்காத்து வீசுதே - ஸ்ரீராம் பார்த்தசாரதி
26) என்மனவானில் சிறகை விரிக்கும் - ஹரிகரன்
27) ராஜா கைய வச்ச - யுவன்
28) நினைவோ ஒரு பறவை - யுவன்
29) இது ஒரு நிலாக்காலம் - ரீட்டா
30) வச்ச பார்வை தப்பாதடி - ஜேசுதாஸ்
31) காட்டு குயிலு - ஜேசுதாஸ், பாலு
32) கண்ணன் ஒரு கைக்குழந்தை - ஜேசுதாஸ்
33) இளமை இதே இதே - பாலு


எல்லாவற்றையும் வார்த்தையில் பகிர்ந்து விட்டால் உணர்வதற்க்கு !? என்னால் வார்த்தையில் பகிந்துக்கொள்ள முடிந்ததை பகிர்ந்து இருக்கிறேன். பொங்கல் அன்று மீதியை அனைவரும் முடிந்தால் உணருங்கள் ! 

Thursday, June 02, 2011

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

சமீபத்தில் தல வந்தியத்தேவன் அவர்கள் பதிவில் இசை தெய்வத்தை பற்றி ஒரு பக்தன் இப்படி கூறிப்பிட்டுயிருக்கிறார்
"கடவுள் மனிதர்களை படைத்தான்,
மனிதன் இசையைப் படைத்தான்,
இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)"
இன்றும், என்றும், இசை என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கும் வரையில் இதுபோல் எங்கேனும் ஒரு பக்தன் இசை தெய்வத்தை பற்றி சொல்லிக்கொண்டு தான் இருப்பான்/இருப்போம்/இருப்பேன்....

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 68வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும்வணங்குகிறேன்.!

இம்புட்டு தூரம்....அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்தவுங்களுக்கும் வாழ்த்து சொல்ல வரவுங்களுக்கும் இதோ நம்ம இசை தெய்வத்தோட அவரோட குரலில் பாடிய சில அருமையான பாடல்கள்;)

ஜனனி ஜனனி
ஆலோலம் பாடி
பூம்பாறையில் பொட்டு வச்ச
மெட்டி ஒலி காற்றோடு

தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசு
குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி

ஸ்பெசல் ;- தெண்பாண்டி சீமையிலே
சரியாக 3.30 முதல் 4.50 வரை எந்தவித இசை ஒலியும் இல்லமால் தெய்வத்தின் குரல் மட்டுமே ஒலிக்கும்.

Wednesday, June 02, 2010

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)





இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அதுவும் என்றும் எப்போதும் "ராஜா"வாக இடம் பிடித்திருக்கும்

நம்ம "இசைஞானி இளையராஜா" அவர்களின் 67வது பிறந்த நாள் இன்று.

வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!



இம்புட்டு தூரம்....அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்தவுங்களுக்கும் வாழ்த்து சொல்ல வரவுங்களுக்கும் இதோ நம்ம இசை தெய்வத்தோட சூப்பர் பாடல்கள்;)





ராஜாவின் பிறந்த நாள் அன்று தான் இந்த பாடல் கவிஞர் வாலி அவர்களால் எழுதியது என்று ஒரு செய்தி உண்டு.


Tuesday, January 26, 2010

பத்மபூஷன் இசைஞானி இளையராஜா

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான

பத்மபூஷன் விருது இசைஞானி இளையாராஜாவுக்கு

தேர்வு செய்யப்பட்டுள்ளது.



அளவில்லா மகிழ்ச்சியுடன்

இசை தெய்வத்தை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ;)


பத்மபூஷன் விருது

உலக இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்

அவர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசைபுயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)