Thursday, November 01, 2007

குளிரும் குழந்தைகளும்...



என்ன மக்களே எல்லாம் எப்படி இருக்கிங்க நல்லா தான் இருப்பிங்க இதுல என்ன சந்தேகம் கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! எல்லாம் தீபாவளிக்கு ரெடியாகிட்டு இருப்பிங்க. இங்க வெயில் கொஞ்ச கொஞ்சமாக குறைஞ்சி குளிர் பின்னி பெடலேடுக்க ஆரம்பிச்சிடுச்சி போன வாரத்துல நைட்டு வேலை முடிச்சிட்டு இது ஒரு பொன் காலை பொழுதுன்னு பாட்டு பாடிக்கிட்டே வெளிய வந்தா சும்மா நரம்புல ஊசி போடுற மாதிரி
குளிரு, கூட இருந்த மச்சி "டேய் இங்க தானே ஒரு பாலம் இருந்திச்சி எங்கடா அது அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா. டேய் நல்லா பாரு டா அது அங்க தான் இருக்கு" பாலம் மறைக்கும் அளவுக்கு பனி. குளிருக்கு விரல்கள் இல்லாமலே பல் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. சரி இந்த இதமான குளிருக்கு டீ குடிச்சிட்டு கிளம்பலாமுன்னு டீயை நானே போட்டு அதை நானே குடிச்சிட்டு (நானே போட்ட டீங்க நல்லாயிருந்திச்சி....வேற வழி)
அந்த குளிர்ந்த சுத்தமான காற்றை மூச்சை நல்லா இழுத்துவிட்டு புல் எனர்ஜீயை ஏத்திக்கிட்டு ரூமுக்கு போவதற்க்கு வண்டியில ஏறி ஜன்னல் சீட்டை பிடிச்சி உட்கார்ந்துட்டு எல்லோரும் வந்ததற்க்கு பிறகு ஸ்டார்ட் த மீயூஸிக்குன்னு வண்டி கிளம்புச்சி.

வண்டி பாலத்து மேல ஏறி யூடன் எடுத்து திரும்பும் போது பக்கத்துல ஒரு வண்டி.
அந்த வண்டிய முழுக்க சந்தோசமும் சிரிப்பும், பெருசா எந்த ஒரு கவலைகள் எதுவும் இல்லாத டாக்டர்ஸ், இன்ஜீனியர்ஸ், வியாபாரிகள் காந்தங்கள், ஒன்னு ரெண்டு நடிகர் நடிகைகள் கூட இருந்தாங்க. என்ன இவுங்க எல்லாம் இந்த நிலைக்கு வருவதற்க்கு இன்னும் 15, 18 வருஷம் ஆகும். அந்த வண்டி முழூக்க குழந்தைகள் ஒன்னு ஒன்னும் என்னமா இருக்குதுங்க அழகு அழகுன்னா அழகு அம்புட்டு அழகு. ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு அழகு அவுங்களை பார்த்தவுடன் அவுங்க சிரிப்பும் மகிழ்ச்சியும் நமக்கும் தொத்திக்கிச்சி. வண்டியில சேட்டை பண்ணிக்கிட்டே வருறாங்க அவுங்களை பார்த்து ஹாய்ன்னு கை காட்டினால் பதிலுக்கு அவுங்களும் ஹாய்ன்னு கையை காட்றாங்க. இதை எல்லாம் நம்ம மச்சிகளையும் பார்க்க சொல்லமுன்னு நினைச்சி திரும்பி பார்த்த அவனவன் ஜன்னல் முன்னாடி நின்னுக்கிட்டு வித்தை காட்டிக்கிட்டு இருக்கானுங்க அடப்பாவிகளா ஆரம்பிச்சிட்டிங்களா நான் தான் லேட்டான்னு நானும் ஜோதியில ஐக்கியமாகிட்டேன்.

அதுல ஒன்னு காலங்காத்தால எழுப்பி ஏண்டா என்னை இம்சை பண்ணி இந்த மூட்டையும் கொடுத்திங்கன்னு தூங்கிக்கிட்டு வருது அந்நேரம் பார்த்து இன்னொன்னு தொப்புன்னு வந்து அது மேல விழுது அது முடியை இது பிடிக்க இது சட்டையை அது பிடிக்க அட அட என்னமா சண்டை போடுதுங்க! சண்டையிலும் ஒரு அழகு இருக்குன்னா அது இந்த சண்டை தான். இதை பார்த்த மச்சி ஒருத்தன் அந்த முடியை பிடிக்குற பெண்ணு தான் ஜெயிக்குது என்ன பெட்டுன்னு கேட்குறான். ஜன்னல் முன்னாடி நாலு நின்னுக்கிட்டு சிரிச்சிக்கிட்டே வருதுங்க எதுக்கு சிரிக்குதுங்கன்னு எங்க யாருக்கும் தெரியுல. அதுல ஒன்னு வெட்கப்பட்டு சிரிக்கும் போது அப்படியே ஒடிபோயி தூக்கிக்கலாம் போல இருக்கு. இதுல ரெண்டு எங்களை பார்த்து ஏதோ கமெண்டு அடிச்சி வேற சிரிக்குதுங்க என்னாத்த பெருசா சொல்லியிருக்க போவுதுங்க என்ன இவுங்க எல்லாம் லூசா இப்படி நம்மளை பார்த்து சிரிச்சிக்கிட்டே வரானுங்கன்னு சொல்லியிருக்கும். கடைசி சீட்டுல ஒருத்தன் அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான் அவன் பேசுறதை எதிரில் உள்ளவன் கேட்குறானா இல்லையான்னு கூட தெரியமா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான்.

அந்த வண்டி தான் அவுங்க உலகம் அங்க யாரும் எதுவும் சொல்ல முடியாது கேட்கவும் முடியாது வாழ்க்கையின் அந்த நிமிஷத்தை அவுங்க இஷ்டம் போல அனுப்பவிச்சிக்கிட்டு வராங்க. அந்த வண்டியை விட்டு இறங்கியதும் இதே போல சந்தோசம் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இதை எல்லாம் பார்த்து பொறாமை படுவதா இல்ல இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி அவுங்களும் இந்த இயந்திர உலகத்துல இயந்திரமாக போறதை நினைச்சி வருத்தப்படுவதான்னு தெரியல. குழந்தைகள் தெய்வங்கள்ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க நாள் முழுக்க இயந்திரங்களோடு இயந்திரமாக இருந்திட்டு சில நிமிஷங்கள் எங்களுக்குள் இருத்த கவலைகளை மறக்க செய்து சிரிக்க வச்ச அந்த குழந்தைகள் எல்லாம் உண்மையிலே தெய்வங்கள் தான்.

ஒரு சிக்கனலில் எங்க ஊழியரை இறக்கி விடுவதற்க்காக எங்க வண்டி நின்னுடுச்சி அந்த நேரத்துல குழந்தைகள் வந்த வண்டி எங்களை கடந்து போயிடுச்சி குழந்தைகள் எல்லாம் சிரிச்சிக்கிட்டு டாட்டா காட்டிக்கிட்டு போயிட்டாங்க. "விரும்பாண்டி" படத்துல கமல் ஒரு வசனம் சொல்லுவாரு "சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு" அப்படி தான் இருந்திச்சி அந்த குழந்தைகள் எங்களுக்கு கொடுத்த சந்தோசம்.






கண்டிப்பா நீங்களும் சிரிப்பிங்க


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



டிஸ்கி: அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல

37 comments:

ஆயில்யன் said...

//சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு//

வெவ்வேறு சமயங்களில் தெரிஞ்சுக்கிட்டேத்தான் இருக்கு!

//அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல//
அப்ப..! உண்மையாவே அ.அ படிக்கமாட்டார முழுசா
அடப்பாவி மக்கா..!!
நாமதான் கடைசி வரி எழுதியது அபி அப்பா வரைக்கும் படிக்கிறோமா???

Ayyanar Viswanath said...

செம க்யூட் யா குழந்தை :)

Anonymous said...

\சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு" \\
அது என்னமோ 100% சரி. எதுவுமே இருக்கும் போது அதோட அருமை நமக்கு தெரியறதில்லை. ஹீம்.
இந்தக்குழந்தையை வேற ஏதோ பதிவுல பாத்துருக்கனே. கொள்ளை அழகுன்னு சொல்வென்.

Baby Pavan said...

எனக்கு லைட்டா ஜுரம், இப்ப தான் டாக்டர் கிட்ட போய் கன்சல்ட் பண்ணிட்டு வந்தென்.

Baby Pavan said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

டிஸ்கி: அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல

நான் படிச்சிட்டென் மீ டூ ரிப்பிட்டெய்...

கதிர் said...

கோபி உனக்குள்ள இவ்வளவு திறமைகளா? அப்படியே மலைச்சு போயிட்டேம்பா மலைச்சி போயிட்டேன். அப்படியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருடா என் வென்று.

அந்த குழந்த யாரு?
//செம க்யூட் யா குழந்தை :)//
டிப்பீட்டே!!!!

நாகை சிவா said...

பாப்பா கொள்ள அழகு :)

நாகை சிவா said...

அண்ணனே.. பதிவை மறுக்கா படிச்சேன்.. இப்ப தான் தெளிவா தெரியுது...

புள்ள பெத்துக்கனும் என்று ஆசைப்படுறீங்க...

வீட்ல சொல்லிடலாம்... சீக்கிரமே முடிச்சிடலாம்.

நாகை சிவா said...

என்ன பெனாத்தல் சுரேஷ் பதிவ படிச்சும் ஆசைப்படுறீங்க... விதி யாரை விடுது...

முடிச்சிடலாம் விடுங்க..

MyFriend said...

இப்போல்லாம் டான்னு ஒன்னாம் தேதியானதும் சம்பளம் வருதான்னு கூடா பார்க்கிறதுல்ல. அண்ணன் இந்த மாத பதிவு போட்டுட்டாரான்னுதான் பார்க்க தோணுது.. ;-)

MyFriend said...

//அந்த வண்டிய முழுக்க சந்தோசமும் சிரிப்பும், பெருசா எந்த ஒரு கவலைகள் எதுவும் இல்லாத டாக்டர்ஸ், இன்ஜீனியார்ஸ், வியபாரிகள் காந்தங்கள், ஒன்னு ரெண்டு நடிகர் நடிகைகள் கூட இருந்தாங்க. என்ன இவுங்க எல்லாம் இந்த நிலைக்கு வருவதற்க்கு இன்னும் 15, 18 வருஷம் ஆகும். //

எல்லாரும் என்னைப்போல குட்டி குழந்தைகள்தானே? ;-)

MyFriend said...

அண்ணா, சூப்பர் போஸ்ட்ண்ணா.. ஒன்னு எழுதுனாலும் அது முத்து..

ஆனா, எப்போதோ வர போற தீபாவளிக்கு இப்பவே போஸ்ட் போடுறது கொஞ்சம் ஓவர்தான். ;-)

வித்யா கலைவாணி said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
எல்லாரும் என்னைப்போல குட்டி குழந்தைகள்தானே? ;-)///
என்னக்கா இதெல்லாம் சின்ன பிள்ளை மாதிரி. ஆனாலும் கோபியோட இந்த பதிவு நல்லா தான் இருக்கு. ஆனாலும் சின்ன வயதிலே அந்த குழந்தைகள் பனியில் பள்ளி போக நிற்கும் போது பரிதாபமா இருக்கும்.

G3 said...

Kozhandhai sema cuteeeeeeeeeeeeeeeeeeee :))

Neenga avlo perusa ezhudhina postellam onnumae illaennu andha 6sec video motha creditayum thattitu poyiruchu :)

இராம்/Raam said...

//நாகை சிவா said...

அண்ணனே.. பதிவை மறுக்கா படிச்சேன்.. இப்ப தான் தெளிவா தெரியுது...

புள்ள பெத்துக்கனும் என்று ஆசைப்படுறீங்க...

வீட்ல சொல்லிடலாம்... சீக்கிரமே முடிச்சிடலாம்.//

ரீப்பிட்டே......

கானா பிரபா said...

தல

பதிவு படிச்சிட்டேன், அல்லாருக்கும் இந்த வயசில வர்ரது தான் உங்களுக்கும் வந்திருக்கு. சீக்கிரம் பேசி முடிச்சிடலாம்.

பாப்பா கொள்ளை அழகு, ராம நாராயணன் பார்த்தா அஞ்சு அம்மன் படத்துல தெய்வக் குழந்தையா நடிக்க வச்சிடுவாரு.

உங்களுக்கும் வரப்போகிற வூட்டம்மாவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

சாலிசம்பர் said...

ஒரு பூ மலர்வதைப் போன்று மலரும் குழந்தையின் முகம்.

அடடடடடடடடா.

ஜி said...

//தம்பி said...
கோபி உனக்குள்ள இவ்வளவு திறமைகளா? அப்படியே மலைச்சு போயிட்டேம்பா மலைச்சி போயிட்டேன். அப்படியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருடா என் வென்று.
//

Repeatu Gopi kku ithu varaikkum repeat podala.. so ippa pottukiren... :)))

குசும்பன் said...

கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! ////

காலில் தான் ஆணிவரும் உங்களுக்கு கையில் ஆணியா டெல்பின் டாக்டருக்கிட்ட கேளுங்க என்ன செய்யலாம் என்று!!!

குசும்பன் said...

ரொம்ப அருமையா இருக்கு, சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது அப்பா போல மீசை வெச்சுக்க ஆசை, பெரியவனானதும் சின்ன பிள்ளையாகனும் என்ற ஆசை!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் குழந்தைங்க பாவம்தான் ..என் குழந்தைங்க அப்படி அடுத்த வருஷம் காலைகிளம்பி போகனும்ங்கற போது
நான் கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன்..அதுக்குமுன்னாடி எழுந்து நான் கிளப்பனுமேன்னு .. :)

குழந்தைமனசோட எழுதி இருக்கறதப்பாத்து நாகைசிவா கல்யாண ஆசைன்னு சொல்றது முறையா தகுமா??

கோபிநாத் said...

@ வாங்க நட்சத்திரம் ;)
\\//அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல//
அப்ப..! உண்மையாவே அ.அ படிக்கமாட்டார முழுசா
அடப்பாவி மக்கா..!!
நாமதான் கடைசி வரி எழுதியது அபி அப்பா வரைக்கும் படிக்கிறோமா?\\

என்ன ஆயில்யன் ஒரே ஊர்ல இருந்துக்கிட்டு அவரை பத்தி இது கூட தெரியல ! ;)

@ அய்யனார்
\\செம க்யூட் யா குழந்தை :)\\

அதனால தானே பதிவுல போட்டேன்..;)

@ சின்ன அம்மணி
\\\சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு" \\
அது என்னமோ 100% சரி. எதுவுமே இருக்கும் போது அதோட அருமை நமக்கு தெரியறதில்லை. ஹீம்.
இந்தக்குழந்தையை வேற ஏதோ பதிவுல பாத்துருக்கனே. கொள்ளை அழகுன்னு சொல்வென்.\\

ஆமாக்கா நானும் வேற ஒரு இடத்தில் இருந்து தான் எடுத்தேன்..;))

கோபிநாத் said...

@ மாஸ்டர் பவன் ;)
\\எனக்கு லைட்டா ஜுரம், இப்ப தான் டாக்டர் கிட்ட போய் கன்சல்ட் பண்ணிட்டு வந்தென்.\\

இப்ப எப்படி இருக்குப்பா?

\\அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

டிஸ்கி: அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல

நான் படிச்சிட்டென் மீ டூ ரிப்பிட்டெய்...\\

நீங்க படிச்சிட்டிங்க என்பதை நானும் நம்பிட்டேன்...;)))

@ தம்பி
\\கோபி உனக்குள்ள இவ்வளவு திறமைகளா? அப்படியே மலைச்சு போயிட்டேம்பா மலைச்சி போயிட்டேன். அப்படியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருடா என் வென்று.\\

எல திட்டுறியா இல்ல பாராட்டுறியான்னு ஒன்னும் புரியல...எதுக்கும் பார்க்குறேன்.

@ நாகை சிவா
\\அண்ணனே.. பதிவை மறுக்கா படிச்சேன்.. இப்ப தான் தெளிவா தெரியுது...

புள்ள பெத்துக்கனும் என்று ஆசைப்படுறீங்க...\\

சகா நீயே இப்படி சொல்லமா!?...கல்யாணத்தை பத்தியே இன்னும் ஒன்னும் தோணல அதுக்குள்ள புள்ள பெத்துக்குறதுக்கு போயிட்டியே சகா.

\\வீட்ல சொல்லிடலாம்... சீக்கிரமே முடிச்சிடலாம்.\\

நீங்க தான் மூத்தவர் உங்க வீட்டுல முதல்ல சொல்லுவோம்...;))

\\என்ன பெனாத்தல் சுரேஷ் பதிவ படிச்சும் ஆசைப்படுறீங்க... விதி யாரை விடுது...\\

நாம எந்த பாடத்தை ஒழுங்க படிச்சிருக்கோம்...;))

கோபிநாத் said...

@ மை ஃபிரண்ட்
\\இப்போல்லாம் டான்னு ஒன்னாம் தேதியானதும் சம்பளம் வருதான்னு கூடா பார்க்கிறதுல்ல. அண்ணன் இந்த மாத பதிவு போட்டுட்டாரான்னுதான் பார்க்க தோணுது.. ;-)\\

அப்ப உனக்கு முதல் தேதி தான் சம்பளமா!..
கொடுத்துவச்சவுங்க ;(

\\எல்லாரும் என்னைப்போல குட்டி குழந்தைகள்தானே? ;-)\\

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவருன்னு தெரியல..;)

\\அண்ணா, சூப்பர் போஸ்ட்ண்ணா.. ஒன்னு எழுதுனாலும் அது முத்து..\\

நன்றி ;)

ஆனா, எப்போதோ வர போற தீபாவளிக்கு இப்பவே போஸ்ட் போடுறது கொஞ்சம் ஓவர்தான். ;-)\\

இந்த மாசம் தானே தீபாவளி..கூட்டி கழிச்சி பாரும்மா எல்லாம் சரியாதான் வரும் ;))

@ வித்யா கலைவாணி
\\///.:: மை ஃபிரண்ட் ::. said...
எல்லாரும் என்னைப்போல குட்டி குழந்தைகள்தானே? ;-)///
என்னக்கா இதெல்லாம் சின்ன பிள்ளை மாதிரி. ஆனாலும் கோபியோட இந்த பதிவு நல்லா தான் இருக்கு. ஆனாலும் சின்ன வயதிலே அந்த குழந்தைகள் பனியில் பள்ளி போக நிற்கும் போது பரிதாபமா இருக்கும்.\\

ம்ம்ம்...சரியா சொன்னிங்க...அந்த ஸ்வட்டர் எல்லாம் போட்டுக்கிட்டு, புத்தக மூட்டை, சாப்பாடு மூட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு நிக்கும் போது ரொம்ப பாவமாக இருக்கும் ;(

@ delphine
\\nice post! i enjoyed reading it!!\\

மிக்க நன்றிம்மா ;)

கோபிநாத் said...

@ ஜி3
\\Kozhandhai sema cuteeeeeeeeeeeeeeeeeeee :))

Neenga avlo perusa ezhudhina postellam onnumae illaennu andha 6sec video motha creditayum thattitu poyiruchu :)\\

குழந்தை தானே சாப்பிட்டு போகட்டும் ;))

@ கப்பி
:)

;))

@ ராயல் ராம்
//நாகை சிவா said...

அண்ணனே.. பதிவை மறுக்கா படிச்சேன்.. இப்ப தான் தெளிவா தெரியுது...

புள்ள பெத்துக்கனும் என்று ஆசைப்படுறீங்க...

வீட்ல சொல்லிடலாம்... சீக்கிரமே முடிச்சிடலாம்.//

ரீப்பிட்டே......\\

மாப்பி சிவாக்கு போட்டுயிருக்க பதிலை பாரு ;)

கோபிநாத் said...

@ கானா பிரபா
\\தல

பதிவு படிச்சிட்டேன், அல்லாருக்கும் இந்த வயசில வர்ரது தான் உங்களுக்கும் வந்திருக்கு. சீக்கிரம் பேசி முடிச்சிடலாம்.

பாப்பா கொள்ளை அழகு, ராம நாராயணன் பார்த்தா அஞ்சு அம்மன் படத்துல தெய்வக் குழந்தையா நடிக்க வச்சிடுவாரு.

உங்களுக்கும் வரப்போகிற வூட்டம்மாவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.\\

தல ஒவ்வொரு முறை வரும் போதும் இப்படி கொளுத்தி போடுறிங்களே இது நியாமா !? ;)

@ ஜாலிஜம்பர்.
\\ஒரு பூ மலர்வதைப் போன்று மலரும் குழந்தையின் முகம்.

அடடடடடடடடா.\\
ஆஹா..அழகாக சொல்லிட்டிங்க..வருகைக்கு நன்றி ;)

@ ஜி

//தம்பி said...
கோபி உனக்குள்ள இவ்வளவு திறமைகளா? அப்படியே மலைச்சு போயிட்டேம்பா மலைச்சி போயிட்டேன். அப்படியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருடா என் வென்று.
//

Repeatu Gopi kku ithu varaikkum repeat podala.. so ippa pottukiren... :)))\\

நீயுமா !?

கோபிநாத் said...

@ குசும்பன்
\\குசும்பன் said...
கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! ////

காலில் தான் ஆணிவரும் உங்களுக்கு கையில் ஆணியா டெல்பின் டாக்டருக்கிட்ட கேளுங்க என்ன செய்யலாம் என்று!!!\\

அண்ணே எப்படிண்ணே இப்படி எல்லாம் குசும்பா போசுறிங்க...வயசானா இப்படி தானோ !?

\\ரொம்ப அருமையா இருக்கு, சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது அப்பா போல மீசை வெச்சுக்க ஆசை, பெரியவனானதும் சின்ன பிள்ளையாகனும் என்ற ஆசை!!!\\

நீங்க பெரியவரா இல்ல சின்னவரா?

@ முத்துலெட்சுமி

\\கோபிநாத் குழந்தைங்க பாவம்தான் ..என் குழந்தைங்க அப்படி அடுத்த வருஷம் காலைகிளம்பி போகனும்ங்கற போது
நான் கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன்..அதுக்குமுன்னாடி எழுந்து நான் கிளப்பனுமேன்னு .. :)\\

அதானே பார்த்தேன்...ம்ம்ம் இருங்க அவுங்க ரெண்டு பேருக்கிட்டையும் சொல்றேன்..;)

\\குழந்தைமனசோட எழுதி இருக்கறதப்பாத்து நாகைசிவா கல்யாண ஆசைன்னு சொல்றது முறையா தகுமா??\\

நல்லா கேட்டிங்க போங்க...அக்கான்னா இப்படி தான் இருக்கனும்....;))

மங்களூர் சிவா said...

//
நாகை சிவா said...
அண்ணனே.. பதிவை மறுக்கா படிச்சேன்.. இப்ப தான் தெளிவா தெரியுது...

புள்ள பெத்துக்கனும் என்று ஆசைப்படுறீங்க...

வீட்ல சொல்லிடலாம்... சீக்கிரமே முடிச்சிடலாம்.

//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

//
//
குசும்பன் said...
கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! ////

காலில் தான் ஆணிவரும் உங்களுக்கு கையில் ஆணியா டெல்பின் டாக்டருக்கிட்ட கேளுங்க என்ன செய்யலாம் என்று!!!

///
:-))))))))))

Divya said...

So cute...adorable kid!!


\\எந்த ஒரு கவலைகள் எதுவும் இல்லாத டாக்டர்ஸ், இன்ஜீனியார்ஸ், வியபாரிகள் காந்தங்கள், ஒன்னு ரெண்டு நடிகர் நடிகைகள் கூட இருந்தாங்க. என்ன இவுங்க எல்லாம் இந்த நிலைக்கு வருவதற்க்கு இன்னும் 15, 18 வருஷம் ஆகும். அந்த வண்டி முழூக்க குழந்தைகள் ஒன்னு ஒன்னும் என்னமா இருக்குதுங்க அழகு அழகுன்னா அழகு அம்புட்டு அழகு.\\

கவலையில்லா குழந்தைப் பருவத்தை அழகாக கூறியுள்ளீர்கள்!!

காயத்ரி சித்தார்த் said...

நல்லாருக்குங்க கோபி.. பதிவு, குழந்தை, + டிஸ்கியும்!!

//சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு"//

'ஜி3' பண்ணினாலும் 'நச்' னு பண்ணிருக்கீங்க!


//காலில் தான் ஆணிவரும் உங்களுக்கு கையில் ஆணியா டெல்பின் டாக்டருக்கிட்ட கேளுங்க என்ன செய்யலாம் என்று!!!//

இப்டியெல்லாம் யோசிக்க குசும்பரால மட்டும் தான் முடியும் போல!

கதிர் said...

**********************
இன்ஜீனியார்ஸ்- யர்ஸ்
வியபாரிகள் - வியாபாரிகள்
ஜொயிக்குது - ஜெயிக்குது. :)
வறாங்க - வராங்க
கேள்வி குறி - கேள்விக்குறி
படுவாதா - படுவதா
போறாதை - போறதை
*******************
இதெல்லாத்தையும் சரி பண்ணு. எல்லாரும் உன்ன அபிஅப்பா அஸிஸ்டெண்ட் சொல்ற மாதிரிதான் நீயும் பதிவெழுதற. :)

Unknown said...

பேருந்தில் பயணிக்கும்போது பார்த்த குழந்தையைதான் கேமராவில் பிடித்து விட்டீர்களோவென்று நினைத்தேன்.

அழகான குழந்தை. அது சோகம் அல்லது தூக்கத்திலிருந்து சிரிப்புக்கு மாறுவது ஒரு அழகான பூ மலர்வதைப்போலத்தான் இருக்கிறது.

கோபிநாத் said...

@ மங்களூர் சிவா
//நாகை சிவா said...
அண்ணனே.. பதிவை மறுக்கா படிச்சேன்.. இப்ப தான் தெளிவா தெரியுது...

புள்ள பெத்துக்கனும் என்று ஆசைப்படுறீங்க...

வீட்ல சொல்லிடலாம்... சீக்கிரமே முடிச்சிடலாம்.

//
ரிப்பீட்டேய்\\

எங்களுக்கே ரீப்பீட்டா ! ;)) வருகைக்கு நன்றி சிவா ;)

@ திவ்யா
\\கவலையில்லா குழந்தைப் பருவத்தை அழகாக கூறியுள்ளீர்கள்!!\\

நன்றி திவ்யா ;-))

@ கவிதாயினி காயத்ரி
\\காயத்ரி said...
நல்லாருக்குங்க கோபி.. பதிவு, குழந்தை, + டிஸ்கியும்!!\\

நன்றி ;)

//சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு"//

'ஜி3' பண்ணினாலும் 'நச்' னு பண்ணிருக்கீங்க!\\

ஆஹா...ஒரே வரியில ரெண்டு பதிவர்களை சொல்லிட்டிங்க ;)

//காலில் தான் ஆணிவரும் உங்களுக்கு கையில் ஆணியா டெல்பின் டாக்டருக்கிட்ட கேளுங்க என்ன செய்யலாம் என்று!!!//

இப்டியெல்லாம் யோசிக்க குசும்பரால மட்டும் தான் முடியும் போல!\\

நம்ம அண்ணே பிறந்ததே அதுக்கு தானே ;)

கோபிநாத் said...

@தம்பி
\\இதெல்லாத்தையும் சரி பண்ணு. எல்லாரும் உன்ன அபிஅப்பா அஸிஸ்டெண்ட் சொல்ற மாதிரிதான் நீயும் பதிவெழுதற. :)\\

ரொம்ப நன்றி தம்பி...எல்லாத்தையும் சரி பண்ணிட்டேன் ;))

@ சுல்தான்

\\சுல்தான் said...
பேருந்தில் பயணிக்கும்போது பார்த்த குழந்தையைதான் கேமராவில் பிடித்து விட்டீர்களோவென்று நினைத்தேன்.

அழகான குழந்தை. அது சோகம் அல்லது தூக்கத்திலிருந்து சிரிப்புக்கு மாறுவது ஒரு அழகான பூ மலர்வதைப்போலத்தான் இருக்கிறது.\\

ரொம்ப உன்னிப்பாக கவனிச்சிருக்கிங்க...
வருகைக்கு நன்றி சுல்தான் ;))

ILA (a) இளா said...

மொக்கை மாதிரி ஆரம்பிச்சாலும் கடைசியில மனச கலங்கடிச்சியேப்பா..

கோபிநாத் said...

வாங்க இளா அண்ணா :)

\\ILA(a)இளா said...
மொக்கை மாதிரி ஆரம்பிச்சாலும் கடைசியில மனச கலங்கடிச்சியேப்பா..\\

நன்றிண்ணே :)