"ம்ம்ம்....போவுது மாமு...அப்புறம் ஏதாவது விஷேஷம் இருக்கா??"
"ஒன்னும் இல்லடா....சரி புதுப்படம் ஏதாவது பார்த்தியா எந்த படம் நல்லாயிருக்கு."
"ம்ம்ம்......நேத்து ஒரு படம் பார்த்தேன்...நம்ம ஜீவா தான் ஹீரோ.....படம் பேரு "பொறி"

"அப்படியா...சரி எப்படி இருக்கு படம்....கொஞ்சம் சொல்லேன்"
"ஆஹா.....இப்படியே கதைக் கேட்டு...கேட்டே...காலத்தை ஒட்டிடு"
"அட சொல்லு மச்சி....நமக்கும் டைம்பாஸ் ஆகனும்முல்ல..."
"நாகேஷ் ஒரு ரிட்டைடு வாத்தியாரு அவரு பையன் தான் ஜுவா. ஜுவா புத்தகக்கடை வச்சிருக்காரு. அவரோட நண்பன் நம்ம கருணாஸ். ஒரு டிவி சேனல்ல வேலை பார்க்குற பொண்ணு பூஜா. வழக்கம் போல ரெண்டு பேத்துக்கும் முதல்ல மோதல்...அப்புறம் காதல்...அப்புறம் கல்யாணம்...அவ்வளவு தான்."
"டேய்.....என்னடா ஐந்தே நிமிஷத்துல முழுபடத்தையும் முடிச்சிட்ட."
"இருடா....இப்படிதான் முதல் பாதி கொஞ்சம் கூட சுவாரஸ்சயம் இல்லாம கடுப்பா போகுதுன்னு சொல்லவந்தேன்..."
அப்ப ரெண்டாவது பாதி???
"இதுக்கு தாண்டா இந்த குறைமாசத்துல பொறந்தவனுக்கெல்லாம் கதை சொல்லுறது இல்ல...பொறுமையா இருடா டுபுக்கு..."
"சரி...சரி...சந்துல ரிக்சா ஓட்டிட்ட...சொல்லு..."
"நம்ம நாகேஷ் ரிட்டைடு பணத்துல புள்ளைக்கு சொந்தமா ஒரு கடை வாங்கி தறாரு. ஜுவாவும் சந்தோஷமா கடை திறக்குறதுக்கு எல்லாம் வேலையும் செய்றாரு....திடிரென்று நம்ம டைரக்டர் சீமான் (தம்பி படத்தை எடுத்தாறுயில்ல அவரு தான்) வந்து இது என் இடம்ன்னு சொல்லறாரு, விசாரிச்சு பார்த்ததுல நாகேசை ஏமாற்றி சீமானுக்கு சொந்தமான இடத்தை வித்துருக்காங்க. இந்த பிரச்சனையைதான் அப்பாவுக்கு தெரியாம மறுபடியும் அந்த இடத்துலேயே கடையை எப்படி திறக்குறாறு என்பது தான் மீதிபடம்."
"இடத்தோட சொந்தகாரனுக்கு தெரியாம எப்படிடா விக்கமுடியும்??."
"அதான் மாமு படமே....காசுக்கு ஆசைப்பட்டு புரோக்கர்களும்,
அரசு அதிகாரிகளும், ரியல்எஸ்டேட் முதலாளிகளும் எப்படி எல்லாம் மக்களை ஏமாத்துறானுங்க என்பதைதான் டைரக்டர் சுப்ரமணியம் சிவா படமா எடுத்துறுக்காரு."
"ஜுவாவுடைய ஒவ்வொரு படமும், கதையும் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு இல்ல? பையன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு....மத்த விஷயங்கள் எல்லாம் எப்படிடா...."
"நடிப்புல எல்லோரும் நல்லாதாம்பா செஞ்சிருக்காங்க....இசை நம்ம தினா பரவால்லன்னு சொல்லலாம்..."மன்மதராசா" பாட்டு போலவே கடைசியா ஒரு பாட்டு அதே மாதிரி டான்சுவேற தாங்கமுடியல...
அப்புறம் ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம் அருமையா செய்திருக்காரு.
வசனங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்கு அதுவும் ஜுவா நீதிமன்றத்துல பேசுறது அருமை
டைரக்டர் இன்னும் கொஞ்சம் அந்த தில்லு முல்லுக்களையும் காட்டியிருக்கலாம். நாகேஷ் அவர்களுக்கும், ஜுவாவுக்கும் உள்ள தந்தை, மகன் உறவை அருமையாவும் அழகாகவும் காட்டியிருக்கிறார். இன்னிக்கு இருக்குற ஒரு ஆழமான பிரச்சனையைதான் டைரக்டர் சொல்லியிருக்காறு. வில்லனை பழிவாங்குறது எல்லாம் நம்ம வடிவேலு சொல்லற மாதிரி "சின்னப்புள்ள தனமா" இருக்கு. வீடு வாங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்றாரு."
"ம்ம்ம்....அப்ப பார்க்லாம்ன்னு சொல்றியா??"
"அப்ப நீ பார்ப்பியா??? பார்கலாம் மாமு....சும்மா டைம்பாசுக்கு"