Thursday, June 02, 2011

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

சமீபத்தில் தல வந்தியத்தேவன் அவர்கள் பதிவில் இசை தெய்வத்தை பற்றி ஒரு பக்தன் இப்படி கூறிப்பிட்டுயிருக்கிறார்
"கடவுள் மனிதர்களை படைத்தான்,
மனிதன் இசையைப் படைத்தான்,
இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)"
இன்றும், என்றும், இசை என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கும் வரையில் இதுபோல் எங்கேனும் ஒரு பக்தன் இசை தெய்வத்தை பற்றி சொல்லிக்கொண்டு தான் இருப்பான்/இருப்போம்/இருப்பேன்....

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 68வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும்வணங்குகிறேன்.!

இம்புட்டு தூரம்....அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்தவுங்களுக்கும் வாழ்த்து சொல்ல வரவுங்களுக்கும் இதோ நம்ம இசை தெய்வத்தோட அவரோட குரலில் பாடிய சில அருமையான பாடல்கள்;)

ஜனனி ஜனனி
ஆலோலம் பாடி
பூம்பாறையில் பொட்டு வச்ச
மெட்டி ஒலி காற்றோடு

தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசு
குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி

ஸ்பெசல் ;- தெண்பாண்டி சீமையிலே
சரியாக 3.30 முதல் 4.50 வரை எந்தவித இசை ஒலியும் இல்லமால் தெய்வத்தின் குரல் மட்டுமே ஒலிக்கும்.

22 comments:

கோபிநாத் said...

இசை தெய்வத்துக்கு என்னோட மனமார்ந்த வணக்கங்கள் !

G3 said...

மாசத்துக்கு ஒரு பதிவு போய் இப்போ வருஷத்துக்கு ஒரு பதிவா???!!!

இசை தெய்வத்துக்கு என்னோட வணக்கங்கள் :))))

ஆயில்யன் said...

இசைராஜா பிறந்த நாளில் அவரை வணங்கி அவர் தம் இசையோடு மகிழ்ந்து வாழ்வோம்!

கானா பிரபா said...

இசைராஜா பிறந்த நாளில் அவரை வணங்கி அவர் தம் இசையோடு மகிழ்ந்து வாழ்வோம்!

// repeatu

கானா பிரபா said...

kalakkal post thala

geethappriyan said...

இசை தெய்வத்துக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,வணக்கங்கள்.ஸ்பெஷல் தென்பாண்டி சீமையிலேவுக்கு நன்றிய்யா

சுசி said...

என்னுடைய வணக்கங்களும் இசை தெய்வத்துக்கு..

//இருப்பான்/இருப்போம்/இருப்பேன்....//

நானும் :)))))

இசைஞானி பற்றி அடிக்கடி எழுதுங்க கோப்ஸ்..

MANO நாஞ்சில் மனோ said...

இசை உலகத்தை ரெண்டாக பிரிக்கலாம் அதாவது இளையராஜாவுக்கு முன்பு இளையராஜாவுக்கு பின்பு என்று....

MANO நாஞ்சில் மனோ said...

இசை ராஜனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....

Unknown said...

தல சூப்பரு.. உங்ககிட்ட கேக்கலாம்.

தல, //வனமெல்லாம் செண்பகப்பூ... வானெல்லாம் குங்குமப்பூ....// இந்தப்பாட்டோட கர்னாட்டிக் வெர்ஷன் ஒண்ணு இருக்குமே கிடைச்சா லிங்க் அனுப்புங்க கோபி, புண்ணியமாப்போகும்....:-)

கோபிநாத் said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ;)

@ முரளி - தல இப்போது தான் இப்படி ஒன்றை கேள்விப்படுகிறேன்...கண்டிப்பாக கிடைக்கும் உடனே பார்சல் ;))

thamizhparavai said...

//தல இப்போது தான் இப்படி ஒன்றை கேள்விப்படுகிறேன்.//

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?

thamizhparavai said...

ராசாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
தனியா நான் வேறென்ன சொல்லப் போறேன் மாப்பி.:)
இசையால் இணைவோம்...!

ஷஹன்ஷா said...

ராஜாவின் இசை ராஜகம்பீர இசை...

என் வாழ்த்துகளும் என்றும் அவருக்கு..

கவிநயா said...

உங்களோட நானும் சேர்ந்துக்கறேன், கோபி. என்றென்றும் நிலைக்கும் இனிமையான பாடல்களை இங்கே தந்தமைக்கு நன்றிகள்.

நானானி said...

இசை தெய்வத்துக்கு என் வாழ்த்துக்கள்.
(எனக்கு வாழ்த்த வயதிருக்கு.)

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

மாலதி said...

இசை தெய்வத்துக்கு என்னோட வணக்கங்கள் :))))

சிவகுமாரன் said...

தொகுப்புக்கு நன்றி

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Unknown said...

ஆஹா தல அசத்திட்டீங்க்! என்னால் போகமுடியவில்லை. தவிர்க்கவே முடியாத காரணம். சின்னத்திரையில் பார்த்து பிரமிக்க வேண்டியதுதான்.

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

இன்றைய வலைச்சரத்தில் - “கொன்றைப்பூ - வாழ்த்துச்சரம்” என்ற தலைப்பில் - உங்களுடைய இந்த பதிவினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.....

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_04.html

வலைச்சரத்துக்கு வரவேற்கிறேன்.

நட்புடன்

வெங்கட்