Wednesday, September 17, 2008

எல்லாம் முடிஞ்சிடுச்சி....
சோம்பேறிக்கு தோலோட வாழைப்பழமுன்னு சொல்லுவாங்க. அந்த தோலோட இருக்குற பழத்தைக்கூட யாராவது எடுத்து கொடுத்தா நல்லாயிருக்குமுன்னு நினைக்கிறவன்நான். வர வர ரொம்ப சோம்பேறித்தனம்.இந்த சோம்பேறித்தனத்தை வச்சிக்கிட்டே ஊருக்கு போனேன். 35 நாள் நானும் என்ஜாய். என்னை வச்சி சிலபேர் என்ஜாய்ன்னு ஒருவழியாக எல்லா என்ஜாய்யும் முடிச்சிக்கிட்டு வந்தாச்சி.

சென்னையில் பேனர்கள் இல்லை. நல்லதுதான் ஆன்னு வாய பொளந்துக்கிட்டு பேனர்பார்த்தவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் (வேற யாரு நான் தான்!). ஆனா சென்னைரயில்களில் ஜோடி நம்பர் ஒன்னுன்னு ஒரு ஒரு ஜோடிக்கும் பேனர். ஆனா எல்லா ஜோடியும் முறைச்சிக்கிட்டு நிக்குது. என்னென்னு தெரியல

----------------- *

சத்யம் படத்தை சத்திய சோதனையுடன் கஷ்டப்பட்டு பார்த்துட்டு வந்தேன்.மறுநாள் நண்பன் ஒருவன் போன்.

"மச்சி! நைட்டு ப்ளான் ஒகே தானே"ன்னுகேட்டான்.

நானும் "ஆமாண்டா, எல்லாம் ரெடி"ன்னு சொல்லிட்டேன்.

"நீ எப்ப வர"ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன் "நீ காலையில என்ன பண்ணுற"ன்னு கேட்டான்.

"பெருசா ஒன்னும் இல்லைடா சொல்லு, என்ன விஷயம்?"

"அப்படின்னா ஒண்ணு செய். காலையில 11.30 மணிக்கு சத்யம் தியேட்டருக்கு வந்துடு. படம் பார்த்துட்டு அப்படியே நேரா போயிடுவோம். என்ன ஓகே வா?"

கரும்பு தின்ன கூலியா! "ரைட்டுமச்சி! நான் ரெடி.. ஆமா, என்ன படம் அதை சொல்லு டா....?!"

"ச்ச அது சஸ்பென்ஸ்..."சரின்னு காலையில 11.30 சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னுக்கிட்டு இருக்கேன் வந்தான்..."நேரா வாடா போவோம்ன்னு சொல்லி படிக்கட்டு கிட்ட வந்துட்டான்.

"டேய் இப்பவாச்சும் சொல்லுடா என்ன படமுன்னு கேட்டேன்."

"அதெல்லாம்முடியாது பெயர் போடும் போது உனக்கே தெரியும் வாடா.

"டேய் இதெல்லாம் ஓவரு அதெல்லாம் முடியாது ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலை. இல்ல நான் இப்படியே எஸ்கேப்பு."

"மச்சி சத்யம் தியேட்டரில் சத்யம் படம் சூப்பர்ல மச்சி."

"போடா லூசு அந்த தெலுங்கு படமா...அய்யே அந்த கொடுமையை தான் நேத்துதான் பார்த்துட்டு வந்தேன்.....திரும்பவுமா.ஆனா ஒன்னு முதல் முறை
பார்த்ததுக்கும் போதை விட்டு ரெண்டாவது முறை பார்த்ததுக்கும் கொஞ்சம்
வித்தியாசம் இருந்திச்சி.படம் முழுக்க சிரிச்சிக்கிட்டேஇருந்தேன். எல்லாம் கூட வந்த ஒரு கும்பல் அடிச்ச கமெண்ட்ஸ்.

தாம்தூம்
தலைவலி வந்தது தான் மிச்சம். அதுவும் இரவு காட்சிக்கு சென்றுசரியான பல்பு வாங்கினேன்.

ஜெயம் கொண்டான்
முக்கியமாக அந்த வில்லனுக்காகத்தான் படத்திற்கு
சென்றேன். படம் தொடங்கி 20 நிமிஷம் காலியான உடன் தியேட்டருக்குள்சென்றோம். நான் ஏன்டா போவோமான்னு கேட்டேன். கூட வந்த மாப்பி தான் படத்தைஏற்கனவே பார்த்துட்டேன்டா வா. நான் என்ன ஆச்சுன்னு சொல்றேன்னு சொன்னான்.அவனை நம்பி உள்ளே போன மச்சி நானும் இந்த இடத்தில் இருந்துதான்டா படத்தை
பார்த்தேன்னனு டயலாக்கு விட்டான். "மகனே நீ எல்லாம்.....ன்னு
நொந்துக்கிட்டு மீதி படத்தை பார்த்தேன். மெகா சீரியல் பார்த்த மாதிரிஇருந்துச்சி. கடைசியில பேசுற நாலு வசனம் தவிர.

A Wednesday
இந்திப்படம்இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் தியேட்டருக்கு உள்ளே போன பிறகு தான் அதுஇந்தி படமுன்னே தெரிஞ்சது. அதுக்கு யார் காரணம் எல்லாம் கேட்காதிங்க.சத்தியமாக நான் இல்லை. ஆனா 2.30 மணிநேரம் போனதே தெரியல ஒரே நாள்ல நடக்கிறகதை. தீவிரவாதிகளால பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த தீவிரவாதிகளை போலீஸ்
உதவியுடன் கொலை செய்கிறார். நல்லா எடுத்திருக்காங்க. சில வசனங்கள்
புரிஞ்சது. அப்போ மீதி வசனம் எல்லாம் புரியலியான்னு எல்லாம்கேட்கக்கூடாது. பக்கத்துல உட்காந்தவுங்களுக்கு எனக்கு இந்தி தெரியாதுன்னு சந்தேகம் கொஞ்சம் கூட வரல அந்த அளவுக்கு நம்ம நடிப்பு.

சரோஜா
ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான். அது இங்கீலிபிசு கதையோ என்னாமோ. ஆனா வெங்கட் பிரபு கலக்கிட்டாரு. தியேட்டர்உள்ளே போகும் போதே பிரண்ட்சிப் பாண்ட் கொடுத்தாங்க. தோஸ்து படாதோஸ்துன்னு.படம் முழுக்க காமெடி தான். அதுவும் பயபுள்ளைங்க கூட ரொம்பநாள் கழிச்சி பார்த்த கலக்கல் படம். செம என்ஜாய்!
----------------- *

விரல் இடுக்குளில் டிக்கெட்டை வச்சிக்கிட்டு தோல் பையில இருந்து சில்லறைஎல்லாம் எடுத்து கொடுத்திக்கிட்டு இருந்த கண்டக்டர்கள் எல்லாம் இப்போ இல்ல. ஒரு ரெண்டு மூணு அமுத்து! டக்குன்னு ஒரு பிட்டு பேப்பர் வருது.அப்படியே கிழிச்சி கொடுத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. நல்ல முறைதான். ஆனா என்ன! அடுத்த முறை பார்க்கும் போது அந்த குட்டி இயந்திரம்இருக்கும். இந்த கண்டக்டர்கள் இருப்பாங்களான்னு தெரியல.

----------------- *

டிவி சீரியல் எல்லாம் பார்க்குற கொடுமையை ஒரு ரெண்டு நாள் அனுபவிச்சேன். அதில் இந்த அரசி சீரியலில் வரும் லியாஸ் அலிகான் பேசுற விதமேஅப்படித்தானா.. இல்ல இந்த சீரியலுக்காக இப்படி பேசுறாரான்னு ஒரே சந்தேகம். என்ன சி சே எப்படி இருக்கிங்க.. சி சேன்னு அவரு பேசுற விதம்அய்யோ சாமி இயந்திர மனிதன் பேசுற மாதிரியே இருக்கு. இன்னும் விஜய் டிவியில ஏதாவது ஒரு போட்டி வச்சி அதுக்கு ஊரையே கூட்டி வச்சிகும்மியடிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆற்காடு வீராசாமி அவர்களின் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் எந்த வித சீரியல் கொடுமையும் இல்லாமல் தூங்க முடிஞ்சது.

----------------- *

இந்த முறை கோவில் குளம் என்று செல்ல வேண்டியதாக இருந்துச்சி. மயிலை கோவிலில் ஆர்ம்பித்த பயணம் எங்க வூட்டு பக்கத்துல இருக்குற விநாயகர் கோவில்ல வந்து முடிந்தது. திருத்தணி முருகனுக்கு மொட்டையும் போட்டாச்சு.மொட்டை போடும் போது ஏர்போர்ட்டில் ஏதாவது பிரச்சனை வருமோன்னு ஒரு சின்ன பயம். மொட்டை போட்ட புண்ணியத்துல தலையில் இருந்த வெட்டு காயங்கள்தெரிந்தது. ஒவ்வொரு வெட்டு காயத்தையும் தொட்டு பார்க்கும் போது அம்மா நினைவுகள் வந்து சென்றது. அதிக பட்சம் எல்லாம் அம்மாக்கிட்ட வாங்கியவெட்டு தான்.. அந்த அளவுக்கு அம்மாவை இம்சை படுத்தியிருக்கேன்.

இந்த முறைதிருப்பதி தரிசனம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் கோவிலில் கொடும்!பிரசாதம் கொஞ்சம் கூட நல்லவேயில்ல.சக்கரைப் பொங்கல்ன்னு ஒன்னு கடனுக்குன்னு தந்தாங்க அதில் இனிப்பே இல்ல பெருமாள் என்னைக்குஇவுங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பாரோ. அதே போல வேலூரில் உள்ள பொற்கோவில் மிகப்பிரமாண்டமாக இருந்துச்சி. எல்லாரும் ரொம்ப அழகாக செய்திருக்காங்க.அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா எனக்கு என்னமோ அந்தகோவிலுக்குப் போகவே பிடிக்கல. அதனால வெளியிலேயே நின்னுட்டேன்.இப்படியாக ஒரு வழியாக 35 நாள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டேன்.

37 comments:

குசும்பன் said...

தம்பி ராயல் ராம் உன் நம்பரை கேட்டார் அவருக்கு போன் செஞ்சியா இல்லையா????

குசும்பன் said...

//அதுவும் பயபுள்ளைங்க கூட ரொம்பநாள் கழிச்சி //

பய ஓக்கே எத்தனை புள்ளைங்க???? தம்பி???

(நன்றி கடன்:))) சொன்னதை செய்ததுக்காக)

துளசி கோபால் said...

விவரம் பத்தாது:-)

ஸ்ரீமதி said...

Me the first?????

ஸ்ரீமதி said...

//ஆனா எல்லா ஜோடியும் முறைச்சிக்கிட்டு நிக்குது. என்னென்னு தெரியல//

:)))))

ஸ்ரீமதி said...

//தலைவலி வந்தது தான் மிச்சம்//

ம்ம்ம்ம்ம்ம்ம்...!! :((

ஸ்ரீமதி said...

//சில வசனங்கள்
புரிஞ்சது. அப்போ மீதி வசனம் எல்லாம் புரியலியான்னு எல்லாம்கேட்கக்கூடாது.//

அப்பப் புரிஞ்சிடிச்சா?? ;))

ஸ்ரீமதி said...

//பக்கத்துல உட்காந்தவுங்களுக்கு எனக்கு இந்தி தெரியாதுன்னு சந்தேகம் கொஞ்சம் கூட வரல அந்த அளவுக்கு நம்ம நடிப்பு.//

படத்துல வந்தவங்கள விட நல்லா நடிச்சீங்களா?? ;))

ஸ்ரீமதி said...

//ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான். அது இங்கீலிபிசு கதையோ என்னாமோ. ஆனா வெங்கட் பிரபு கலக்கிட்டாரு. //

100% true..!! :))

கானா பிரபா said...

//"எல்லாம் முடிஞ்சிடுச்சி...."//
oh really?? sollave illa thala ;)

பின்னூட்டம் பெரியசாமி.. said...

//அடுத்த முறை பார்க்கும் போது அந்த குட்டி இயந்திரம்இருக்கும். இந்த கண்டக்டர்கள் இருப்பாங்களான்னு தெரியல.///

வரப் போகும் அபாயம் தெரியாமல் நடத்துனர்களும் மகிழ்வாக இருப்பார்களே..
:(

தம்பி said...

//என்னை வச்சி சிலபேர் என்ஜாய்ன்னு //

உன்ன வெச்சா? என்ன சொல்ற மேன்?

சென்ஷி said...

வெல்கம் பேக் மாப்பி :))

சென்ஷி said...

//ஆனா ஒன்னு முதல் முறை
பார்த்ததுக்கும் போதை விட்டு ரெண்டாவது முறை பார்த்ததுக்கும் கொஞ்சம்
வித்தியாசம் இருந்திச்சி.//

அப்ப தண்ணியடிச்சுட்டு அந்த படம் பார்க்கலாம்ன்னு சொல்றியா :)

சென்ஷி said...

போட்டோ உன்னோட சின்ன வயசுல எடுத்ததா மச்சி.. ரொம்ப அழகா இருக்கே :)

G3 said...

:))))))))

ஆயில்யன் said...

ஹய்ய் அண்ணா வந்துட்டாக! :))


அப்பாலிக்கா வர்றேன் நொம்ப பிசியாக்கும் நானு!:))

சுல்தான் said...

வருக வருக.
//ஆற்காடு வீராசாமி அவர்களின் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் எந்த வித சீரியல் கொடுமையும் இல்லாமல் தூங்க முடிஞ்சது.//
வீட்டில் இன்வெர்டரா, ஜெனரேட்டரா? என்ன வச்சிருக்கீங்க. நல்லா வேலை செய்கிறது போல் தெரிகிறதே.

கப்பி | Kappi said...

ஒரு பத்து பதிவா போட வேண்டியதை ஒரே பதிவா போட்டு எல்லாம் முடிஞ்சிடுச்சி :))

கப்பி | Kappi said...

//நாள் நானும் என்ஜாய்.//

என்ஜாயா..அப்படிலாம் சொல்லக்கூடாது..கெட்டவார்த்தைண்ணே (வசூல்ராஜா சொல்லிக்கீறாரே பார்த்ததில்ல)


//ஆனா எல்லா ஜோடியும் முறைச்சிக்கிட்டு நிக்குது/

இஷ்டைலாமா

//கடைசியில பேசுற நாலு வசனம் தவிர//

அடடா..அதை கேட்காம விட்டுட்டனே..அப்படி என்னன்னே பேசுவாங்க??

கப்பி | Kappi said...

//அதுக்கு யார் காரணம் எல்லாம் கேட்காதிங்க//

ஆமா..என்கிட்டயும் கேட்காதீங்க..நானும் சொல்லமாட்டேன் :))//டிவி சீரியல் எல்லாம் பார்க்குற கொடுமையை //

சரோஜால செமயா நக்கலடிச்சுட்டாங்கல்லே


//மொட்டையும் போட்டாச்சு./

இனிமேல் கோபிநாத் வாக்கர் வாணாம்..மொட்டை சேகர்..இல்ல வெட்டு குமாருன்னு பேர மாத்தி வச்சுக்கலாம்ண்ணே..அதான் டிரெண்டு//சக்கரைப் பொங்கல்ன்னு ஒன்னு கடனுக்குன்னு /

கடனுக்கா? அப்ப அடுத்த முறை போறப்போ சக்கரைப் பொங்கலை திருப்பி தரணுமா??

திருப்பதில லட்டுதானே தருவாங்க?? ராஜசேகர ரெட்டி வந்து மாத்திட்டாரா??

கப்பி | Kappi said...

//அதனால வெளியிலேயே நின்னுட்டேன்.
//

செருப்பை யாராவது களவாண்டுட போறாங்கன்னுதானே நின்னுட்டீங்க..உண்மைய செப்பண்டி!


//இப்படியாக ஒரு வழியாக 35 நாள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டேன்/

இப்படியாக நானும் ஒரு வழியாக 35 நிமிடம் எல்லாத்தையும் படிச்சிட்டு வந்துட்டேன் :))

CVR said...

இதெல்லாம் சரி...
வந்த வேலை முடிஞ்சதா?? :P

ஸ்ரீ said...

//சரோஜா
ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான்.//

Bad taste maapi unakku Grrrrrrrrrrrr

Anonymous said...

கானா பிரபா said...
//"எல்லாம் முடிஞ்சிடுச்சி...."//
oh really?? sollave illa thala ;)
//


repitte


vetikuntu
murukesan

ILA said...

படமெல்லாம் நெறைய (மட்டும்) பார்த்திருப்பீங்க போலிருக்கு :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மொட்டைபாஸ் பத்து பதிவ ஒரு பதிவா போட்டாச்சா...? :)

காலையில் என்ன பண்றேன்னு கேட்டா
காலையில் ன்னு ஒரு வேளை இருப்பதே எனக்குத்தெரியாதுன்னு பதில் சொல்லி இருக்கனும்..ஒரு நாளை க்கு இருப்பதே 12 மணி நேரம் தான்.. மதியம் 2 மணி லேர்ந்து ராத்திரி 2 மணி வரை.. அதுல நாலு படம்.. :)

கோபிநாத் said...

@ குசும்பன்
//அதுவும் பயபுள்ளைங்க கூட ரொம்பநாள் கழிச்சி //

பய ஓக்கே எத்தனை புள்ளைங்க???? தம்பி???\\

எனக்கே தெரியலண்ணே ;)

@ துளசி கோபால்
\\விவரம் பத்தாது:-)\\\

;-)))வருகைக்கு நன்றி டீச்சர்.

@ ஸ்ரீமதி

பின்னூட்டம் எல்லாம் கலக்குறிங்க...நன்றி ஸ்ரீமதி ;))

@ கானா பிரபா

//"எல்லாம் முடிஞ்சிடுச்சி...."//
oh really?? sollave illa thala ;)\\

அதான் எல்லா படத்தை பத்தியும் சொல்லிட்டேன் தல ;)

@ பின்னூட்டம் பெரியசாமி
\\வரப் போகும் அபாயம் தெரியாமல் நடத்துனர்களும் மகிழ்வாக இருப்பார்களே..:(\\

ஆமாங்க பெரியசாமி...வருகைக்கு நன்றி ;)

@ தம்பி
\\உன்ன வெச்சா? என்ன சொல்ற மேன்?\\

;-))

@ சென்ஷி
\\அப்ப தண்ணியடிச்சுட்டு அந்த படம் பார்க்கலாம்ன்னு சொல்றியா :)\\

நான் சொன்ன நீ கேட்டுபியா மாப்பி ;)

@ G3
\\:))))))))\\\

;-))

கோபிநாத் said...

@ ஆயில்யன்
\\ஹய்ய் அண்ணா வந்துட்டாக! :))

அப்பாலிக்கா வர்றேன் நொம்ப பிசியாக்கும் நானு!:))\\

ம்ம்ம்...தெரியுமே!!

@ சுல்தான்

வருக வருக.
//ஆற்காடு வீராசாமி அவர்களின் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் எந்த வித சீரியல் கொடுமையும் இல்லாமல் தூங்க முடிஞ்சது.//
வீட்டில் இன்வெர்டரா, ஜெனரேட்டரா? என்ன வச்சிருக்கீங்க. நல்லா வேலை செய்கிறது போல் தெரிகிறதே.\\\

அதெல்லாம் இல்ல சுல்தான் சார்...வருகைக்கு நன்றி ;)

@ கப்பி | Kappi said...
\\ஒரு பத்து பதிவா போட வேண்டியதை ஒரே பதிவா போட்டு எல்லாம் முடிஞ்சிடுச்சி :))\\

அதான் பதிவின் முதலிலேயே சொல்லிட்டேனே செல்லம் ;)

@ CVR

\\இதெல்லாம் சரி...
வந்த வேலை முடிஞ்சதா?? :P\\

சிவி..இன்னும் நீ இதை விடலியா!!!! ;)

@ ஸ்ரீ
//சரோஜா
ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான்.//

Bad taste maapi unakku Grrrrrrrrrrrr\\

அந்த படத்துக்கு என்னைய்யா குறைச்சல்!! ;)

@ Anonymous

\\vetikuntu
murukesan\\

நன்றி முருகேசன் ;)

@ ILA
\\படமெல்லாம் நெறைய (மட்டும்) பார்த்திருப்பீங்க போலிருக்கு :)\\\

வாங்க அண்ணாச்சி..
வேற வழி ;))

@ முத்துலெட்சுமி-கயல்விழி

\\மொட்டைபாஸ் பத்து பதிவ ஒரு பதிவா போட்டாச்சா...? :)\\\

அக்கா!!!!!!!!!! ;)

\\காலையில் என்ன பண்றேன்னு கேட்டா காலையில் ன்னு ஒரு வேளை இருப்பதே எனக்குத்தெரியாதுன்னு பதில் சொல்லி இருக்கனும்..ஒரு நாளை க்கு இருப்பதே 12 மணி நேரம் தான்.. மதியம் 2 மணி லேர்ந்து ராத்திரி 2 மணி வரை.. அதுல நாலு படம்.. :)\\

;)))

நிஜமா நல்லவன் said...

நீயெல்லாம் ஒரு.....இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை கோபி அண்ணே...:)

ஜி said...

அண்ணே!!! ஊருக்கு போனியளே.... அண்ணி யாராவது பாத்துட்டு வந்தியளா?? அதப் பத்திச் சொல்லாம சும்மா படம் பாத்ததப் பத்தி மொக்கையப் போட்டுட்டு இருக்கிய....

ஜி said...

//கானா பிரபா said...

//"எல்லாம் முடிஞ்சிடுச்சி...."//
oh really?? sollave illa thala ;)//

ஓ!! அதுக்கு இதான் அர்த்தமா?? அப்ப ஓகே!!

Anonymous said...

:)

மங்களூர் சிவா said...

விவரம் பத்தாது:-)

மங்களூர் சிவா said...

//"எல்லாம் முடிஞ்சிடுச்சி...."//
oh really?? sollave illa thala ;)

Divya said...

Title of the post partha........etho GOOD news ku trailer mathry thonuthu?????

anyways........HEARTY CONGRATS Gopi:))

பிரேம்குமார் said...

35 நாள் கதையையும் ஒரே பதிவுல சொல்லிட்டீயே மாப்பி, கலக்கல் :)

சே, உன்னை மொட்டை மண்டையோட பாக்குற பாக்கியம் கிடைக்காம போயிடுச்சே