நேத்து நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பியிருந்தாரு. அந்த மெயிலில் வந்த வீடியோவை பார்த்துட்டு அசந்துட்டேன். அசந்தவுடனே சும்மா இருக்க முடியாம உடனே ஊர் உலகத்துக்கு எல்லாம் சொல்லிட்டேன். அதை பதிவாக போட்டு இந்த மாசத்து கணக்கை முடிச்சுடுலாமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம அண்ணாத்த சந்தோஷ் அதையும் போட்டுடாரு. இருந்தாலும் நம்ம மனசுல கேட்கல..! அதான் நானும் போட்டுட்டேன்
சில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது. பாருங்கள் வீடியோவை.....
இந்த பதிவு போடுறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த வீடியோ வச்சி நம்ம தமிழ்மணத்தின் கவிஞர்களை கவிதை எழுத சொல்லலாமுன்னு ஒரு ஐடியா. உடனே கவிதை எழுதுனா என்ன பரிசு தருவிங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது. பரிசு எல்லாம் கொடுத்து நம்ம கவிஞர்களை ஒரு சிறு சட்டத்துக்குள்ள (எத்தனை நாளைக்குத்தான் வட்ட்ம் போடுறது) அடைக்க விரும்பவில்லை.
இந்த ஜடியாவை சொன்னவுடன் நம்ம பதிவர் கவிஞர் சென்ஷி உடனே ஒரு கவிதை எழுதி அனுப்பிட்டாரு. படிங்க.. இல்லேன்னா பாருங்கள்!
மாப்பி... கவிதைய எழுதி அனுப்பியிருக்கேன்.. உனக்கு புடிச்ச வரியை மாத்திரம் எடுத்துக்க. புல்லா போடணும்னாலும் போட்டுக்க.. அப்பால அது என்னது கவிஞர் சென்ஷியா.. ஏன் கூட நல்லவரு வல்லவரு பெரியவரு அதயும் சேத்துக்க வேண்டியதுதானே! :))
கவிதை :
சூரிய வட்டம் மிஞ்சும் மின்மினி கூட்டங்களே..
உங்கள் சட்டங்கள் இனி உலகை ஆளட்டும்..!
இந்த விதைகள் இப்போது முளைத்து நிற்கின்றன
என்றும் அறுவடைக்கு ஆளனுப்பாதீர்கள்.
உன் ஒரு கையோசையின் சப்தம்
உலகத்தின் எதிரொலி!
பலமாய் ஒலிக்கிறது செவிடன் காதில் சங்கொலி!!
நாளைய பாரதம் நீயென கூறுவார்..
ஜாதிப்போர் உலகத்தில் உன்போல்
சாதிப்போர் இருப்பதனால்
நான் என் பாரதத்தை இன்றே கொடுக்கிறேன்!
கால வரலாற்றில் கசப்புச்சுவடுகள்
காற்றின் துணை கொண்டு பற்றியெறியட்டும்.
கடல் வானம் மண் தூறல்
அதை புதைத்து வைக்கட்டும்.
வல்லரசு கூட்டம் முன்னே
உன் சிரிப்பை காட்டினாய்.
நான் நல்லரசு காண்பேனென்று
நல்லுறுதி ஊட்டினாய்!!
ஊர் ஊராய் கோயில் கட்டி
ஜனம் சாமி தேடுது.
என் கண்முன்னே நல்லதொரு
கடவுள் நிக்குது..!!
சீக்கிரம் கவிஞர்களே கவிதை எழுதி உங்க பதிவில் போடுங்கள்!
எப்படியே இந்த மாசத்துக்கு தேத்தியாச்சி....!!