Saturday, June 02, 2012

இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)

How to name it 2012 இசை நிகழ்ச்சியில் (நன்றி இசைஞானி பக்தர்கள்)...."மைக்கைப் பிடித்த அனில், அனைவருக்கும் வணக்கம் சொல்லி கேட்ட முதல் கேள்வி.. “இங்கு எத்தனை பேர் ராஜா பக்தர்கள்?” அந்தக் கேள்விக்கு பதிலாக அரங்கத்தில் நடந்ததென்ன என்று விவரிக்கத் தேவையில்லை. தொடர்ந்து அனில், ‘பக்தர்களிடம் அதிகம் பேசவேண்டியதில்லை.  நான் பேசுவதை விட (Piano’வைக் காட்டி) இது பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று கூறி Piano’வில் அமர்ந்து ‘தென்பாண்டிச் சீமையிலே’ Prelude’ஐ துவக்கியதும் கூட்டத்தில் இருந்து விசில் பறந்தது. தொடர்ந்து அவர் Piano’வில் ‘மௌன ராகம்’ BGM’ஐ இசைக்க விசில்கள் வேகமெடுத்தன."....இதுபோல் எங்கேனும் இசை தெய்வத்தின் இசையை பற்றி ஏதோ ஒரு பக்தன் சொல்லிக்கொண்டு தான் இருப்பான்/இருப்போம்/இருப்பேன்....

இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் 

இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 69வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!


நீ படைத்த பல தாலாட்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த (எனக்கான) தாலாட்டு...ஆலோலம் பாடி


மகள் நேயா என்ற பதிவில் வசுமித்ரா அவர்கள் இசை தெய்வத்தை பற்றி எழுதிய கவிதை

பேரரசனின் ஒற்றை வயலின்......